Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஜெனிவா பட்டிமன்றம்...! (ஆர்-ராம்) முள்ளிவாய்க்கால் பேரவலத்துடனான முடிவு தமிழர்களின் உரிமைகளை பெற்றெடுப்பதற்கானதொரு ‘பெரு’ வாயிலை அகலமாக திறந்து விட்டிருந்தது. இலங்கையில் அன்று ஆட்சியில் அமர்ந்திருந்த ராஜபக்ஷ தரப்பின் சீனா தழுவிய பிரதிபலிப்புக்களால், அயல்நாடான இந்தியா மற்றும் சர்வதேசத்திற்கு தமது நலன்கள் சார்ந்த அச்சங்களும் ஐயங்களும் வெகுவாக வலுத்திருந்தன. இந்த தருணத்தில் தான் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான தமிழர்களின் நீதிக்கோரிக்கை இந்திய, சர்வதேச தரப்புக்களை முழுமையாக மையப்படுத்திச் சென்றது. தமிழர்கள் விடயத்தினைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தினை தமது ‘பிடிக்குள்’ வைத்திருக்கும் மூலோபய தளமாக ஜெனிவை அத்தரப்புக்கள் மாற்றியமைத்துக்கொண்டன. அதன…

  2. அரசியல் கைதிகளின் விடுதலையில் மனிதாபிமானம் காட்டப்படுமா? நிருபா குணசேகரலிங்கம்:- அரசியல் கைதிகளின் விடுதலை இன்று வரையில் நடைபெறவில்லை. அவர்கள் தொடர்பில் அரசாங்கம் மனிதாபிமானத்தினை வெளிப்படுத்தவில்லை. சிறைகளுக்கு உள்ளிருந்து விடுதலைக்காக ஏங்கும் அரசியல் கைதிகள் விடயத்தில் சிறைகளுக்கு வெளியே காணப்படவேண்டிய காத்திரமான அழுத்தங்களுக்கும் பற்றாக்குறையே நிலவுகின்றன. அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கோரிக்கைகளும் போராட்டங்களும் பல காலமாக நடைபெற்றே வருகின்றன. சிறைகளுக்கு உள்ளிருந்து அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக தம்மை வருத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கு நியா…

  3. மஹிந்தவின் பிரதமர் கனவை கண்டுகொள்ளாத ரணில் புருஜோத்தமன் தங்கமயில் மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்கப்போகிறார் எனும் தகவல், அண்மைக்காலமாக அடிக்கடி பரவி வருகின்றது. கடந்த வாரத்தில், பதவி ஏற்பதற்காக அவர் தன்னுடைய வீட்டிலிருந்து, ஜனாதிபதி செயலகம் நோக்கி புறப்பட்டுவிட்டார் என்பது வரையில் வதந்தி பரவியது. இந்த வதந்தி பரவிக் கொண்டிருந்த போது, அவர் மாத்தறையில் ஒரு குடும்ப நிகழ்வில் பங்குபற்றிக் கொண்டிருந்தார். ஆனால், மஹிந்த மீண்டும் பிரதமராக பதவி ஏற்கப்போகிறார் என்ற தகவல்கள் அடிக்கடி வெளியாவதன் பின்னால், வதந்தியைப் பரப்புவர்களைக் காட்டிலும், மஹிந்த வாதிகளே அதிகம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த தேர்தல் வெற்றிக…

  4. அரசியல் தீக்குளிப்பு – பி.மாணிக்கவாசகம் தோற்றவர் வெல்வர். வென்றவர் தோற்பர். இது தேர்தல் நியதி. தேர்தல் நீதியும்கூட. இதனை உள்ளுராட்சித் தேர்தல் முகத்தில் அடித்தாற் போல நாட்டின் அரசியல்வாதிகளுக்கு உணர்த்தியிருக்கின்றது. பெண்களுக்கு 25 வீத இட ஒதுக்கீடு, தொகுதி மற்றும் விகிதாசாரம் கலந்த கலப்பு முறையைக் கொண்டது, முதன் முறையாக அரசியல் ரீதியான அந்தஸ்தைப்பெற்றது போன்ற பல சிறப்புக்களைக் கொண்ட இந்தத் தேர்தல், எதிர்பாராத பெறுபேறுகளைத் தந்து, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றது. அதையும்கூட இந்த் தேர்தலின் ஒரு சிறப்பு என்று கொண்டால், அது தவறாக இருக்க முடியாது. ஒரே நாளில் நாடளாவிய ரீதியில் முதன…

  5. இலங்கையைப் பொறுத்த வரையில் தேசிய ரீதியிலான எந்தவொரு தேர்தலிலும் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் எப்போதும் ஆட்சியை தீர்மானிப்பதாகவே இருந்திருக்கிறது. அதை உணர்ந்த பிரதான அரசியல் கட்சிகளும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவைக் கவர்வதில் அதாவது சிறுபான்மை மக்களின் வாக்குகளை கவர்வதற்காக தன்னால் முடிந்த சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது இதுவரையான தேர்தல்களில் வழமையாகவே இருந்திருக்கின்றன. அதற்கு பல்வேறு தேர்தல் உறுதிமொழிகள் கருவிகளாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்கு சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை திருப்திப்படுத்தினால் போதுமானது என்பதே இலங்கையில் இதுவரை இருந்துவந்த அரசியல் சமன்பாடாகவும் இருந்து வந்திருக்கிறது. ஆனால்…

  6. அநுர குமாரவுக்கான வாக்குகள் யாரைத் தோற்கடிக்கப் போகின்றன? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஓகஸ்ட் 21 புதன்கிழமை, மு.ப. 10:59 Comments - 0 மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான “தேசிய மக்கள் சக்தி”யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, காலி முகத்திடல் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருக்க ஒரு நாயகனைப் போல, அநுர குமார மேடையேறினார். கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, அரசியலுக்கு வந்த ஒருவராகத் தன்னை அடையாளப்படுத்திப் பேசிய அவர், “புதிய பாதையைத் தெரிவு செய்வதற்கு நாட்டு மக்கள் முன்வர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில், மூன்றாவது அணி வேட்பாளர்களாக …

    • 2 replies
    • 527 views
  7. வன்னியிலும் வாகரையிலும் வாடும் மக்களுக்கு ஆதரவளிப்பது யார்? Co மாவை சேனாதிராஜா தலைமையில், தமிழரசுக்கட்சியின் அணியொன்று கனடாவுக்குப் பயணமாகியுள்ளது. இந்த அணியில், நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, வட மாகாணசபை உறுப்பினர் ஆனோல்ட், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான துரைராஜசிங்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கனடாவில் உள்ள தமிழரசுக் கட்சி அனுதாபிகள், அபிமானிகள், ஆதரவாளர்கள் போன்றவர்களை, இந்த அணியினர் சந்திக்கச் செல்வதாகவே, அதன் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கப்பால், அங்குள்ள த…

  8. தகவல் அறியும் உரிமைச்சட்டம் காணாமல் போனோரைக் கண்டுபிடிக்குமா? - அதிரதன் சட்டம் அமுலுக்கு வந்திருக்கிறது. ஆனால் அது தொடர்பான அடிப்படையான விடயங்கள்கூட இதுவரையில் அரசாங்க அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்று மட்டக்களப்பில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த மூன்றாம் திகதி சட்டம் அமுலுக்கு வந்தவுடன் மட்டக்களப்பில் காணாமல் போனோர்களின் உறவினர்கள், கிழக்குப்பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காரியாலயம், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காரியாலயம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயம், சிறைச்சாலைகள், மாவட்டச் செலயகம் என்பவற்றுக்குச் சென்று, தங்களது விண்ணப்பங்களைக் கையளித்திருந்…

  9. எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம். - நிலாந்தன் 28 ஜூலை 2013 அண்மையில் யாழ்ப்பாணத்தில் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் யாழ். முகாமையாளர் அவையின் சந்திப்பு ஒன்று நடந்தது. இதில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். ''நாங்கள் அபிவிருத்திக்கோ இணக்கப்பாட்டுக்கோ எதிரானவர்களில்லை. மாகாணசபைத் தேர்தலில் நாங்கள் வெற்றியடையும்போது அபிவிருத்தியை ஆரம்பிப்போம். மக்களுடைய தேவைகளை நாங்கள் மனதில் கொண்டிருக்கிறோம். பலரும் நினைக்கிறார்கள், நாங்கள் நெகடிவ் திங்கிங் உடையவர்கள் என்று. உண்மையில் நாங்கள் அப்படிச்சிந்திக்கவில்லை. பொஸிடிவ் திங்கிங்கில்தான் நாங்கள் பயணிக்க விரும்புகிறோம். நாங்கள் அபிவிருத்தியை எதிர்க்கவில்லை. இப்போது…

    • 2 replies
    • 527 views
  10. பேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா? நிலாந்தன் December 16, 2018 கடந்த நொவெம்பர் மாதம் பதினொராம் திகதி யாழ்ப்பாணம் டேவிற் வீதியில் உள்ள கலைக்கோட்ட மண்டபத்தில் ஒரு சிறப்புக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் சிவில் சமூக அமையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களும் தமிழ் மக்களும் என்ற தலைப்பின் கீழ் கருத்துக்கள் பகிரப்பட்டன. தமிழ் மக்களுக்கு இப்போதுள்ள சாத்தியமான வழியாகத் தெரிவது பிரதிநிதித்துவ ஜனநாயக வழிமுறைதான். இந்த வழிமுறையில் தமிழ் மக்கள் தமது பேரத்தை உச்சமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பேர அரசியலை முன்னெடுக்கவல்ல தமிழ்ப் பிரதிநிதிகள்; ஆகக் கூடிய பட்சம் திரட்டப்பட்டு ஒரு கொத்தாகச…

  11. வடமாகாணசபைத் தேர்தல் யாருடைய நலனுக்காக – வேல்ஸ் இல் இருந்து அருஷ் வடமாகாண சபைக்கான தேர்தல் மற்றும் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான சர்ச்சைகளே தற்போது சிறீலங்காவில் பேசப்படும் முக்கிய விடயம். அதிலும் வடமாகாண சபைத் தேர்தலின் மூலம் தமிழீழம் உருவாக்கப்பட்டுவிடும் என்ற கருத்தை விதைப்பதில் தென்னிலங்கை இனவாத அரசியல் சக்திகள் முனைப்பாக செயற்பட்டுவருகின்றன. ஏற்கனவே தமிழ் மக்களால் 1987 ஆம் ஆண்டே நிராகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தை தேர்தலின் முன்னர் முற்றுமுழுதாக செயற்திறனற்றதாக மாற்ற வேண்டும் என தென்னிலங்கை அரசியல்வாதிகள் கூச்சலிடுகின்றனர். வடமாகாணசபைக்கான தேர்தலை நடாத்துவோம், 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என பிரச்சாரம் மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசு …

  12. வை எல் எஸ் ஹமீட் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டதையிட்டு சில தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்புக்கொடி தூக்கியிருப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் அரசியலமைப்புச் சட்டப்படியே நியமிக்கப்படுகின்றார்கள். இங்கு இராஜாங்க அமைச்சருக்கும் பிரதியமைச்சருக்கும் ஒரு பிரதான வேறுபாடு இருக்கின்றது. அதாவது இராஜங்க அமைச்சருக்கு ஐனாதிபதி ஏதாவது விடயதானங்களை நேரடியாக வழங்கலாம். ஆனால் பிரதியமைச்சருக்கு அவ்வாறு வழங்கமுடியாது. இருவகை அமைச்சர்களுக்கும் கபினட் அமைச்சர் பொறுப்புக்களை வர்த்தமானி மூலம் வழங்கலாம…

    • 0 replies
    • 527 views
  13.  மதங்களின் பெயரால் பிணந்தின்னிகள்... கனகலிங்கம் கோபிகிருஷ்ணா முஸ்லிம்களின் புனித மாதமான ரமழானின் முடிவில், ஈகைத் திருநாள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றுள்ள சில தாக்குதல்கள், ஒரு விதமான அச்சத்தையும் வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கின்றன. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற பணயக்கைதிகள் விவகாரம் அதில் முதலாவதுƒ ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் அடுத்ததுƒ சவூதி அரேபியாவிலும் இந்தோனேஷியாவிலும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள் மூன்றாவது. டாக்காவில், இராஜதந்திரிகள் உள்ளிட்டோர் உணவருந்தும் இடத்துக்…

  14. பாடசாலைகளில் போதைப்பொருள்: யாருடைய தவறு? தமிழ்ப் பகுதிகளில் குறிப்பாக வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும், மிகக்குறிப்பாக பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அண்மைக்கால புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் சமூகவலைத்தளங்களில் பிரசுரிக்கப்படும் கருத்துக்களை கூர்ந்து கவனித்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது.என்னவெனில், பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களைத் தண்டிக்க முடியாதிருப்பதன் விளைவுதான் இது போன்ற சீரழிவுகள் என்ற தொனிப்பட பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்கள், சட்டவாளர்கள், மருத்துவர்கள், பொறி…

  15. முதலாவதாக, பாரளுமன்றம் என்றால் என்ன என்பதை யாவரும் அறிந்திருக்க வேண்டும். பிரஞ்சுமொழியில் பார்ல்(parler)பேசு, கதை, போன்ற அர்தமுள்ள சொல்லிருந்து (parliement) பாரளுமன்றம் என்றசொல், 11ம் நூற்றாண்டில் பிரான்ஸில் உருவனது இதனை தொடர்ந்து ஆங்கில நோமன் பிரெஞ்சு காலப் பகுதியான 14ம் நூற்றாண்டில், (parliament) பாரளுமன்றம் என்றசொல் ஆங்கிலத்தில் பிரித்தானியாவில் பாவனைக்கு வந்துள்ளது. இவ்வேளையில் பாரளுமன்றத்தின் நடப்புக்களை கடமைகளை நாம் உலகளாவிய ரீதியில் ஆராய்வோமானால் - பாரளுமன்றத்திற்கு தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள, அவர்களது நாட்டு மக்களின் பாதுகாப்பு பொதுநலன்களை மனதில்கொண்டு, விவாதங்கள் பேச்சுவார்த்தைகளை அடிப்படையில் சட்டங்களை வகுப்பதுடன், ஆண்டுதோறும் நாட்டிற்குரிய வரவுசெலவுவிற்…

  16. அனுர செய்யக்கூடிய மாற்றம்? - நிலாந்தன் இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு நசுக்கப்பட்ட ஒரமைப்பு, இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட ஓரமைப்பு, அதன் தலைவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இன்றி என்கவுண்டரில் கொல்லப்பட்டவர். அப்படிப்பட்ட ஓரமைப்பின் தலைவர் இப்பொழுது நாட்டின் அரசுத் தலைவராக வந்திருக்கிறார். ஆயுதப் போராட்டத்தில் தொடங்கி அரசுத் தலைவர் பதவி வரையிலுமான இந்த வளர்ச்சியை ஏற்கனவே ஓர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களாகிய தமிழ் மக்கள் ஆர்வத்தோடு பார்க்க வேண்டும். அதன் பொருள் அனுரவின் மாற்றம் என்ற கோஷத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ, அல்லது இனப்பிரச்சினைக்கான அவருடைய தீர்வை நம்ப வேண்டும் என்பதோ அல்ல. ஆயுதப் போராட்டத்தில் தொடங்கி அரசுத் தலைவர் வரையிலு…

  17. ஐந்து கட்சிகளின் கூட்டு: அடுத்தது என்ன ? நிலாந்தன்… October 19, 2019 ஜனாதிபதித் தேர்தலில் முழு அளவிலான தமிழ் பேரத்தை பிரயோகிப்பது என்றால் ஒரே தெரிவு ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர்தான். ஆனால் அதற்கு எந்த ஒரு தமிழ்க் கட்சியும் தயாராக இருக்கவில்லை. அப்படி ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று சிந்தித்த சுயாதீனக் குழுவும் மிகவும் பிந்தி விட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் அதைவிட பிந்தி விட்டார்கள். சுயாதீன குழு கட்சித் தலைவர்களை சந்தித்தபோது அவர்கள் என்ன சொன்னார்கள்? ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு காலம் பிந்தி விட்டது என்றுதானே சொன்னார்கள்? அப்படி என்றால் அதை குறித்து முதலில் சிந்தித்திருக்க வேண்டியது யார்? சில ஆயர்களும் சில சாமியார்க…

  18. இலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்கள் – இரண்டாம் பாகம் ? - யதீந்திரா இலங்கையின் அரசியல் கடிகாரம் மீளவும் பழைய காலத்தை நோக்கித் திரும்பக் கூடிய நிலைமை காணப்படுகின்றது. ஜ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் மீதான மனித உரிமைகள் விவகாரம் மீளவும் கூட்டான விவாதங்களை ஏற்படுத்தலாம். இதற்கான காரணம் மிகவும் தெளிவானது. அதாவது, மீளவும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் ராஜபக்சக்களின் அரசாங்கமானது, ஜ.நா மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துப் போகும் முடிவை நிராகரித்திருக்கின்றது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் வார்தையில் கூறுவதனால், முன்னைய அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்த மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை இறந்துவிட்டது. அதனை இனி உயிர்ப்பிக்க முடியாது. உண்மையிலேயே அந…

  19. நம்பிக்கைத் துரோக வரலாற்றின் நூற்றாண்டு நினைவு – 1921 2021 - என்.சரவணன் இவ்வாண்டு தமிழ் மக்கள் சிங்கள தலைமைகளால் முதற் தடவையாக ஏமாற்றப்பட்டு நூறு ஆண்டுகளை எட்டியிருக்கிறது. 1921 ஆம் ஆண்டு சேர் பொன் அருணாச்சலம் இலங்கை தேசிய காங்கிரஸ் செய்த துரோகத்தினால் அதிலிருந்து வெளியேறினார். இனப்பாரபட்சத்தையும், நம்பவைத்து கழுத்தறுக்கும் போக்கையும், நம்பிக்கைத் துரோகத்தையும் முதற்தடவை அடையாளப்படுத்திய நிகழ்வு இது தான். பெரும்பாலும் தமிழ் மக்களின் போராட்டத்துக்கான அவசியங்கள் உருவான காலமாக 1956 க்குப் பிந்திய காலத்தைப் பார்க்கும் போக்கே நம்மில் நீடித்து வந்திருக்கிறது. சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு இரண்டு நூற்றாண்டுக்கும் கூடிய வயதென நிரூபிக்க முடியும். அதேவேளை இலங்கைக்கான …

  20. விலகுமா கூட்டமைப்பு? - கே.சஞ்சயன் மிகவும் பரபரப்புமிக்க ஒரு சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் புகைச்சல்களும் குழப்பங்களும் இருப்பது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறானதொரு நிலை இல்லாத சூழல் இருந்தால்தான், அது ஆச்சரியப்பட வேண்டிய விடயம். அத்தகைய குழப்பங்களையும் தாண்டி, சில ஆக்கபூர்வமான விடயங்களில் முடிவுகளை எடுக்க வேண்டிய ஒரு தருணத்தில்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. குறிப்பாக, அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான தெளிவானதும் தீர்க்கமானதுமான முடிவுகளை எ…

  21. தமிழர் தேசிய உணர்வுடன் கிழக்கில் ஓரணிக்கான வாய்ப்பு? - இலட்சுமணண் ‘அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்’ என்பதுபோல், கிழக்கு மாகாணத் தமிழர்கள், தங்களைத் தற்காத்துத் தங்கள் எதிர்கால இருப்பைப் பாதுகாத்துப் பேணுவதற்குரிய அரசியல் பொறிமுறைக்கான அடித்தளத்தை, இட்டுக் கொள்வது சாத்தியமா என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்வோம். எவ்வாறிருந்தாலும், வடக்கில் தமிழர் ஒருவரே முதலமைச்சராக வருவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இருந்தாலும், அங்கு தற்போதைய முதலமைச்சரை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்துவதா, அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதா, இல்லாவிட்டால் புதியவர் ஒருவரைக் கொண்டு வருவதா என்கிற போட்டி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், கிழக்கின் நிலைப்பாட்டைப் பொற…

  22. ஜனாதிபதி தேர்தலும் தமிழர் அரசியலும் June 24, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஏற்கெனவே குழம்பிப்போயிருந்த இலங்கை தமிழர் அரசியல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடு்க்கவேண்டும் என்பது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் நிலவுகின்ற முரண்பாடுகள் காரணமாக மேலும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட்டு செயற்படுவதில் நாட்டம் காட்டும் என்றோ அல்லது போரின் முடிவுக்கு பின்னரான இன்றைய காலப்பகுதியில் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் உட்பட தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு ஒன்றிணைந்த நிலைப்பாடுகளுக்கு வரும் என்றோ எதிர்பார்ப…

  23. வில்பத்து விவகாரம்: சர்ச்சையே அரசாங்கத்துக்கு சாதகம் வில்பத்து பிரதேசத்தில் வில்பத்து தேசிய வனத்துக்கு வடக்கே நான்கு பிரதேசங்களை வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் கொண்டு வருவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அதிகாரிகளும் எவ்வளவு அவசரப்பட்டார்கள் என்றால், ஜனாதிபதியின் அண்மைய ரஷ்ய விஜயத்தின் போது, மொஸ்கோ நகரத்தில் வைத்துத்தான் அதற்குரிய வர்த்தமானிஅறிவித்தலில் கையொப்பமிட்டார். ஜனாதிபதி நாடு திரும்பும் வரையாவது அதற்காக அவர்களுக்கு பொறுத்திருக்க முடியவில்லை. இந்த வர்த்தமானியைக் கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதிக்கும் அதிகாரிகளுக்கும் இவ்வளவு அவசரம் இருந்தது ஏன்? ஜனாதிபதி ரஷ்யாவில் குடியேறப் போகவில்லையே? அவர் நாடு திரும்பும் வரை காத்திருக்க ஏன் முடிய…

  24. தொலைந்து வரும் அதிகாரக் கனவு - கே.சஞ்சயன் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வரும் நோக்கில், அவருக்கு ஆதரவான கூட்டு எதிரணியினர் கடந்த மாதம் 27ஆம் திகதி நுகேகொடையில் பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர். இந்தப் பேரணியில், உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்துக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இரண்டு எச்சரிக்கைகளை விடுத்திருந்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது அவர் அரசாங்கத்துக்கு விடுத்த எச்சரிக்கை. இலங்கையில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலங்கள் எவற்றைக் கொள்வனவு செய்தாலும் அவை அரசுடமையாக்கப்படும் என்பது அவர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விடுத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.