Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சூடும்-ருசியும்: மட்டக்களப்பில் ‘போனஸ் ‘ மும்முனைப் போட்டி….? November 8, 2024 — அழகு குணசீலன் — இலங்கை பாராளுமன்ற தேர்தல் களம், சமூக வேறுபாடுகளைக்கடந்து பாரம்பரிய கட்சிகள், புதிய கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள், கடந்த தேர்தலில் வென்றவர்கள், தோற்றவர்கள், போடுகாய்கள், வாக்கு சேகரிப்போர், வாக்குப்பிரிப்போர், பழையவர்கள், புதியவர்கள் என பல்வேறுபட்ட 8888 வேட்பாளர்களால் நிரம்பி வழிகின்றது. இதற்கு மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் எப்படி விலக்காக இருக்கமுடியும்? இங்கும் அதே நிலைதான். பல தடவைகள் தோல்வி அடைந்த, அடுப்பங்கரையில் சூடுகண்ட பூனைகளும், அடுப்பங்கரையில் சட்டி, பானைகளில் கிடந்த எச்சசொச்சத்தில் ருசி கண்ட பூனைகளும் களத்தில் நிற்கின்றன. இவற்றில…

  2. சுமந்திரன் கண்ட பகல் கனவு! November 7, 2024 — அழகு குணசீலன் — பொதுத்தேர்தல் களநிலவரங்களின்படி ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு பாராளுமன்றத்தில் எதிரணியின் ஆதரவு தேவைப்படும் என்பது வெளிச்சமாகிறது. இதற்கு சிங்கள, சோனக தரப்பில் இருந்து ஆதரவைப்பெறுவதற்கு அவர் முன்னுரிமை வழங்கவில்லை. மாறாக தமிழ்தரப்பின் தமிழ்த்தேசிய, இணக்க அரசியல் பலவீனத்தை பயன்படுத்தி ஆதரவைப் பெறுவது இலகுவானது என்று கருதி இருக்கக்கூடும். அதேவேளை ஒரு தரப்பில் மட்டும் தங்கியிருக்காமல் இரண்டு தரப்புக்களுக்கும் நம்பிக்கையை கொடுத்து வீடு இல்லையென்றால் வீணை என்ற நிலையில் தான் அநுரவின் நகர்வுகள் அமைந்திருக்கின்றன. தன்னை வந்து சந்தித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் சுமந்திரனுடன…

    • 1 reply
    • 443 views
  3. இலங்கையின் நெருக்கடிகளுக்கு ஒரு மார்க்சிய மாற்று October 29, 2024 பிரசாத் இலங்கையின் நெருக்கடிகளுக்கு ஒரு மார்க்சிய மாற்று www.socialistworld.net வெளியாகிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு வரலாற்றில் முதல் முறையாக ‘இடதுசாரி’ பின்னணியை கொண்ட கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகி இருக்கிறார். அனுர குமார திஸ்ஸநாயக்காவை ஒரு இடதுசாரி தலைவராக சர்வதேச ஊடகங்கள் சித்தரித்த போதிலும் அதில் உண்மையில்லை. அவர் பதவிக்கு வந்த ஆரம்ப வாரங்களில் இருந்து அவரது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்ட எதார்த்தத்தையே வெளிப்படுத்துகின்றது. ஒரு காலத்தில் பேச்சளவில் இடதுசாரிய ஆதரவாக இருந்த ஜனதா விமுக்தி பெரமுனாவின் (JVP) ஜெனரஞ்சக முன்னணியான தேசிய மக்கள் சக்தி (NPP) இலங்கையின் ஜ…

  4. பொதுத் தேர்தல் களம் – 2024 November 8, 2024 — சின்னத்தம்பி குருபரன் — நிறுவனமயப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழர் அரசியல் வரலாறு பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1878 இல் படித்த இலங்கையருக்கான பிரதிநிதித்துவம் சேர்.பொன்னம்பலம் இராமநாதனுக்கு வழங்கப்பட்டதில் இருந்து ஆரம்பமாகிறது. படித்த இலங்கையர் ஒருவரைத் தமிழர் சார்பாகத் தெரிவு செய்வதற்கான தெரிவுப் போட்டி 1878 இல் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவப் பிரகாச வித்தியாசாலை மண்டபத்தில் வை.விசுவநாதபிள்ளை தலைமையில் நடைபெற்றது. அதில் இராமநாதனும் பிரபல சட்டத்தரணி பிறிட்டோவும் போட்டியிட்டனர். தெரிவுக்கான விவாதம் நீடித்துக் கொண்டு போகவே ஆறுமுக நாவலர் தலையிட்டுச் சுமுகமாகத் தீர்த்து வைத்ததனால் பொன்னம்பலம் இராமநாதன் தெரி…

  5. முற்றுகைக்குள் திருகோணமலை இலங்கையில் தமிழர் தாயகத்தை இலக்குவைத்த நிலஅபகரிப்புகள் ஓக்லாண்ட் நிறுவகம் - தமிழில் ரஜீபன் சிங்கள அரசாங்கம் வடக்குகிழக்கில் உள்ள சிறுபான்மை தமிழ் முஸ்லீம் மக்களின் தாயகத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை தொடர்ந்தும் விஸ்தரிக்கின்றது. 15 வருடங்களிற்கு முன்னர் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த போதிலும், இந்த பகுதிகள் பெருமளவிற்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகின்றன. இந்த நோக்கத்துடன் சிங்கள அரசாங்கம், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மாவட்டத்தில் நில அபகரிப்பை தீவிரப்படுத்துகின்றது. அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்களவர்களை குட…

  6. கலாநிதி ஜெகான் பெரேரா நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஊழலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. அந்த கட்சி மீது மக்களுக்கு பெரும் கவர்ச்சி ஏற்படுவதற்கும் அதுவே பிரதான காரணமாகவும் இருந்தது. உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை தலைவிரித்தாடும் ஊழல் 1970 களின் பிற்பகுதியில் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்துறையையும் தனியார்துறையையும் தழுவியதாக வழமைானதாக்கப்பட்டுவிட்டது. பாரிய அபிவிருத்தி திட்டங்களும் வெளிநாட்டு உதவிகளும் அதிகாரப் பதவிநிலைகளில் இருந்தவர்கள் ஊழலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்கின. 2022 பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவாக மக்க…

  7. Published By: DIGITAL DESK 7 01 OCT, 2024 | 10:47 AM பாகம் 1 டி.பி.எஸ். ஜெயராஜ் அமெரிக்க பத்திரிகையாளர் எட்கார் சினோவின் ' சீன வானில் சிவப்பு நட்சத்திரம் ' (Red Star over China ) என்ற நூல்தான் கட்டுரைக்கு இந்த தலைப்பை வைப்பதற்கு தூண்டுதல் அளித்தது. சீனக் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங்குடனும் செஞ்சேனையுடனும் தனது ஊடாட்டம் பற்றிய உயிர்களையுடைய விபரிப்பாக அமைந்த அந்த முதலில் 1937 ஆம் ஆண்டில் பிரசுரமானது. மாவோ என்று அறியப்பட்ட மாவோ சேதுங்கைப் பற்றி அந்த நேரத்தில் மேற்குலகில் பெரிதாகத் தெரியாது. பல வருடங்கள் கழித்து மாவோவின் தலைமையில் கம்யூனிஸ்டுகள் சீனாவில் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது ' சீன வானில் சிவப்பு நட்சத்திர…

  8. ஆட்சிசெய்யும் ஆற்றலை நிரூபிக்க அநுராவுக்கு அவகாசம் தேவை November 5, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — தங்களது தவறான ஆட்சிமுறையினதும் பொருளாதார முகாமைத்துவத்தினதும் விளைவாக தோன்றிய முன்னென்றுமில்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் கிளர்ச்சிக்கு முகங்கொடுக்க முடியாமல் ராஜபக்சாக்கள் இரு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் தன்னந்தனியான உறுப்பினராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆட்சிப்பொறுப்பைக் கையளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது வழமையான அரசியல் போக்கில் இருந்து ஒரு விலகலாகும். அவ்வாறு அடிக்கடி நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், இலங்கையின் பொருளாதார நெருக்கடி அண்மைய எதிர்காலத்…

  9. நடராஜ ஜனகன் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 12 நாட்களே இருக்கும் நிலையில், ஆளும் கட்சியில் எதிர்பார்ப்புகளையும் எதிரணியின் விமர்சனங்களையும் மேற்படி தேர்தல் முடிவுகள் தீர்மானம் செலுத்தும் பிரதான காரணியாக அமையப்போகிறது. நடந்து முடிந்துள்ள எம்பிலிப்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு அரசாங்கத்திற்கு பெரிய அளவில் சாதகமான கருத்துக்கணிப்பை வழங்கவில்லை. 48 விகிதத்திற்கும் குறைவான வாக்குகளையே அரசாங்கம் மேற்படி தேர்தலில் பெற்றிருக்கிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் 58 விகிதமான மக்கள் புதிய ஜனாதிபதிக்கு எதிராகவே தமது வாக்குகளை பதிவு செய்திருக்கும் நிலையில் எம்பிலிபிட்டிய தேர்தல் முடிவும் நம்பிக்கை தரும் முடிவாக அமையவில்லை. அரசாங்க ஊழியர்களு…

  10. ச. வி. கிருபாகரன் பிரான்ஸ் “பழைய குருடி கதவை திறவடி” என்ற பழமொழியை யாவரும் அறிந்திருப்பீர்களென நம்புகிறேன். நாங்கள் யாவரும் நினைப்பதற்கு மாறானதே இந்த பழமொழியின் பொருள். ஆனால், நாங்கள் யாவரும் நினைக்கும் பொருளின் அடிப்படையில் பார்ப்போமானால், வடக்கு , கிழக்கில் மட்டுமல்ல, வேறு பிரதேசங்கள் உட்பட நடந்தேறிய “காணாமல் ஆக்கப்பட்டோர்” என்ற விடயம் மிகவும் பரிதாபத்திற்குரியது. இப்படியாக சொல்வதற்கு யதார்த்தமான காரணங்கள் பல உண்டு. பிரான்ஸ் “தமிழர் மனித உரிமைகள் மையம் – TCHR என்பது யாரால்? எதற்காக? 1990ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பது ஒரு புறமிருக்க, இவ் அமைப்பு அன்றிலிருந்து மேற்கொண்ட செயற்பாடுகளினால், இலங்கைக்கு எவ்வளவு தொல்லைகள் ஏற்பட்டது என்பதை, ஐ.நா.மனித உர…

  11. மாற்றத்துக்கான தேர்தல்: நேர்நிலையும் எதிர்நிலையும் November 4, 2024 — கருணாகரன் — ஜனநாயக அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்பையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி, தங்களுடைய ஆட்சிப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதை மக்கள் எப்போதும் சரியாகத்தான் செய்கிறார்களா? பல சந்தர்ப்பங்களிலும் இல்லை. அல்லது குறைவு என்றே சொல்ல வேண்டும். சரியான முறையில் (பொருத்தமான) நற்கொள்கை, சிறந்த செயலாற்றல், நற்பண்பு, பொறுப்புக்கூறும் கடப்பாடு போன்றவற்றைக் கொண்ட தரப்பைத் தெரிவு செய்திருந்தால் – தவறான தரப்பை நிராகரித்திருந்தால் நாடும் சமூகமும் (மக்களும்) பல முன்னேற்றங்களை எட்டியிருக்கும். இப்போதுள்ள பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி போன்றவற்றில் சிக…

  12. Larry Elliott- guardian தமிழில் ரஜீபன் 1992 இல் அமெரிக்கா உலகில் அதிகாரத்தின் உச்சியில் காணப்பட்ட நாட்களில் கம்யுனிசம் தோற்கடிக்கப்பட்டது. பேர்ளின் சுவர் இடிக்கப்பட்டது. சோவியத்யூனியன் வீழ்ச்சியடைந்தது, திறந்தபொருளாதாரம் குறித்த அதிர்ச்சி வைத்தியத்திற்கான ஆய்வுகூடமாக பயன்படுத்தப்பட்டது. சீன பொருளாதாரம் தாரளமயப்படுத்தப்பட்டமை அமெரிக்காவின் பல்தேசிய நிறுவனங்கள் உற்பத்தியை வேலைகளை வெளியில் கொடுப்பதற்கான (அவுட்சோர்ஸ்) செய்வதற்கான வாய்ப்பை வழங்கியது. அமெரிக்காவின் ஆதிக்கத்தின் கீழான பூகோளமயமாக்கலின் யுகம்பிறந்தது. இரண்டு லிபரல் தாராளமயமாக்கவாதிகள் ஜோர்ஜ் எச்டபில்யூபுஷ் பில் கிளின்டன் ஆகிய இருவரும் ஜனாதிபதி பதவிக்காக போட…

  13. உண்மையான சமத்துவம் எது- பா.உதயன் ரோமானியா ஒரே இரவில் கட்டப்படவில்லை Rome was not built in a day, அதே போல் மாற்றம் என்பது ஒரே இரவில் செய்யப்பட முடியாதது. இவை பழையன கழிந்து கடந்து போக பல ஆண்டுகளாகலாம் அத்தோடு மிகவும் சவால் நிறைந்தது. பெரும்பான்மை சமூகம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளின் இருந்து ஏனைய தேசிய இனப் பிரசினையை எப்படி கையாளப் போகிறது புதிய அரசு என்பதனை இணைக்கும் புள்ளியில் தான் இதன் மாற்றத்திற்கான வெற்றி உள்ளது என்ற யதார்த்த உண்மையை முதலில் உணர வேண்டும். இந்த சவால்களை எதிர் கொள்ள அரசு மாத்திரம் பலமாக இருந்தால் மட்டும் போதாது எதிர் கட்சி ஒன்றும் பலமாக இருக்க வேண்டும். இதுவே ஜனநாயகத்துக்குமான பண்புமாகும். ஈழத் தமிழர் பிரச்சினையை நாம் சரியாக கையாளுவதற்கு எமக்கும் பல…

  14. விருந்தகங்களில் வேட்பாளர்கள் தேங்காய் கியூவில் வாக்காளர்கள்? – நிலாந்தன். மருத்துவர் அர்ஜுனா மான் கட்சியின் பெண் வேட்பாளரோடு நாகரீகமின்றி நடந்து கொண்டது ஒரு விருந்தகத்தில் ஆகும். அது தொடர்பாக ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட பெண் வேட்பாளராகிய மிதிலைச்செல்வி அந்த விருந்தகத்துக்கு தானும் உணவருந்தச் செல்வதுண்டு என்று கூறுகிறார். தனக்குத் தெரிந்தவர்களையும் அங்கு விருந்துண்ண அழைத்துச் செல்வதுண்டு என்றும் கூறுகிறார். சம்பவம் நடந்த போது அந்த விருந்தகத்தில் நிறையப் பேர் தெரிந்த ஆட்கள் இருந்ததாகவும், அவர்களில் அனேகர் ஏதாவது ஒரு கட்சியோடு தொடர்புடைய ஆட்கள்தான் என்றும் கூறுகிறார். அதாவது அவர் ஊடகச் சந்திப்பில் தெரிவித்த தகவல்களின்படி அர்ச்சுனாவும் உட…

  15. அதிகாரப் பகிர்வும் தோழர் அநுரவும் ஒஸ்ரின் பெர்னாண்டோ (முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்) ஏறக்குறைய பத்து மாதங்களுக்கு முன்னர், அதிகாரப் பகிர்வு தொடர்பில் நான் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அநுரகுமார திஸாநாயக்கவுடன் உத்தியோகப்பற்றற்ற முறையில் கலந்துரையாடினேன். அப்போது அதிகாரப் பகிர்வு தொடர்பாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றி கணிப்பிடப்பட்ட அவரது குறைந்தளவில் முன்னுரிமை கொடுக்கும் அணுகுமுறையின் விளைவுகள், வடக்கு மற்றும் கிழக்கில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்தன. அங்கு அவருக்கு மக்கள் ஆதரவு குறைந்ததற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். தற்போது அவர் 2 கோடி 0 இலட்சம் இலங்கையர்களின் ஜனாதிபதியாக இருப்பதால் வடக்கு மற்றும் கிழக்கின் ஜனாதிபதி த…

  16. பாதை திறப்பில் பதுங்கிய அனுரவும் முந்திக்கொண்ட சுமந்திரனும் | இரா மயூதரன்

  17. தமிழ் மக்கள் மத்தியில் அனுர அலை தணியத்தொடங்கி விட்டதா? நிலாந்தன். மிகக் குறுகிய காலத்துக்குள் தமிழ் பகுதிகளில் அனுர அலை தணியத் தொடங்கி விட்டதா? அண்மை வாரங்களில் இடம்பெற்று வரும் சில விடயங்கள் தமிழ் மக்களில் ஒரு பகுதியினரின் மத்தியில் ஜேவிபிக்கு இருந்த கவர்ச்சியைக் குறைக்கத் தொடங்கிவிட்டன. முதலாவதாக, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய ரில்வின் சில்வா இனப்பிரச்சினை தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்கள். இரண்டாவது, பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான நிலைப்பாடு. மூன்றாவது,முட்டை விலை ஏறி இறங்குவது;தேங்காய் விலை அதிகரித்திருப்பது. நாலாவது,தமிழ்ப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் ஜேவிபி வேட்பாளர்களுக்கு வெகுசனக் கவர்ச்சி குறைவு என்பது. தென்னிலங்கை அர…

  18. அறுகம்குடாவின் பொன்நிற மணல்கள் பொதுவாக ஆபத்தற்றவை விடுமுறையில் இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகள் நீச்சலிற்காகவும் கடல் சாகச விளையாட்டுகளிற்காகவும் கடற்கரையோரத்தில் ஓய்வாக நேரத்தை செலவிடுவதற்காகவும் அங்கு செல்வார்கள். ஆனால் கடந்தவாரம் அறுகம்குடாவின் மெதுவான தாளத்திற்கு ஒரு அதிர்ச்சியேற்பட்டது. இலங்கைக்கான அமெரிக்க தூதரகமும், அதன் பின்னர் இலங்கை பொலிஸாரும், இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவையும் அந்த பகுதியில் பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக எசசரிக்கைகளை வெளியிட்டனர். இந்த தாக்குதலின் இலக்காக இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளே காணப்பட்டனர் என அதிகாரிகள் கருதினர். இதன் காரணமாக அவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு வேண்டுகோளை வ…

  19. எழுதியவர் - ஷிரான் இளன்பெருமா ஒக்டோபர் 22 முதல் 24 வரை 16வது பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்றது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பிரதான குழு உறுப்பினர்களுடன், இந்த ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை முறையாக சேர்க்கப்பட்டன. உச்சிமாநாட்டின் போது, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், நைஜீரியா, உகாண்டா, கியூபா மற்றும் பொலிவியா உட்பட மேலும் 13 நாடுகள் பங்குதாரர் உறுப்பினர்களாக ஆகின. இந்த ஆண்டு, பிரிக்ஸில் அங்கத்துவம் பெற விண்ணப்பித்த உலகளாவிய தெற்கில் இருந்தான வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைகிறது. கசான் உச்சிமாநாட்டிற்கு சென்ற இலங்கை தூ…

  20. (புருஜோத்தமன் தங்கமயில்) வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள், தென் இலங்கைக் கட்சிகள் மற்றும் அவற்றின் உதிரிக் கட்சிகளிடம் சென்றுவிடுமோ என்கிற அச்சம், தமிழ்த் தேசிய அரசியலைப் பற்றிக் கொண்டிருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தென் இலங்கையின் பாரம்பரியக் கட்சிகளின் வேட்பாளர்களைத் தோற்கடித்து, தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றிருக்கின்றார். அதனை ‘புதிய புரட்சி மாற்றம்’ என்று அடையாளப்படுத்துகிறார்கள். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும், அந்த வெற்றியின் நீட்சியை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பிலேயே ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஒருசில நாட்களிலேயே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கான அறிவிப்பை அநுர வெளியிட்டார்…

  21. பல்கலைக்கழக மாணவர்களின் பொறுப்புக் கூறலும் அரசியற் கடப்பாடும் October 29, 2024 — கருணாகரன் — “தமிழரின் வாக்குகள், தமிழ்த்தரப்புகளுக்கே அளிக்கப்பட வேண்டும். மாறாகத் தென்னிலங்கைத் தரப்புகளுக்கு அளிக்கக் கூடாது‘ என்று திருவாய் மலர்ந்திருளியிருக்கின்றனர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இப்படியொரு அறிவிப்பை விடக் கூடுமென்றால் நாங்கள் மட்டுமென்ன குறைந்தவர்களா, என்று கிளம்பிய கிழக்குப் பல்கலைக்கழகத்தின் (மட்டக்களப்பு) கலைத்துறை மாணவர்கள், இதே தொனியில் இன்னொரு அறிவிப்பை விட்டுள்ளனர். இந்த அறிவிப்போடு இரண்டு தரப்பினரும் தங்களுடைய தேசியக் கடமையையும் இனப் பொறுப்பையும் நிறைவேற்றிக் கொண்டனர். இன…

  22. முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது ஈழத் தமிழரின் அரசியலில், தமிழரின் தாயக இருப்பியலில், தமிழ்த்தேசியம் என்னும் கருத்தியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இத்தகைய ஒரு தாக்கம் ஏற்படும் என தமிழ் அரசறிவியலாளர்கள் குறிப்பிட்டு அதனைக் கையாண்டு வெற்றி கொள்ளக் கூடிய உபாயங்களை தெரிவித்திருந்தும் கூட அரசியல்வாதிகள் எனப்படுவோர் அதனை சாட்டை செய்யாது , இதனை ஒரு கருத்தியலாக ஏற்க மறுத்ததன் விளைவுகள் 2024 பொதுத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்களினதும் அவர்களுடைய செயற்பாடுகளும் எதிர்காலத்தில் தமிழ் தேசியத்தை கட்டமைக்க முடியுமா? என்ற ஐயப்பாட்டை தோற்றுவித்திருக்கிறது. மக்கள் சேவைகள் ஏதேனிலும் ஈடுபட்டார்களா.. அந்த அளவிற்கு தமிழர் தாயக பரப்பெங்கும் தமிழ்த் தேசிய…

      • Like
    • 4 replies
    • 672 views
  23. இலங்கை- கண்ணால் காண்பதும் பொய் – இரா. முருகவேள் அக்டோபர் 2024 - Uyirmmai Media · அரசியல் இலங்கை சிவந்தது. மார்க்சீயவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டனர். இலங்கை ஒரு மார்க்சீய சார்பு கொண்ட ஜனாதிபதியைத் தேர்தெடுத்துள்ளது. புதிய ஜனாதிபதி சே குவேராவால் உத்வேகமூட்டப்பட்டவர் என்றெல்லாம் இந்திய, பன்னாட்டு ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு செய்தி வெளியிட்டன. ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட இடதுசாரி அமைப்பு தேர்தலில் நின்று வெற்றி கண்டது சிறப்பானது என்று இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட் ) தோழர்கள் கொண்டாடினர். இவையெல்லாம் முழுவதும் பொய் என்று சொல்லிவிட முடியாது. ஜேவிபி ஒரு சோஷலிச இலங்கையை உருவாக்கத்தான் தோற்றுவிக்கப்பட்டது. இலங்கை இடதுசாரிகள் போதுமான அளவுக்கு…

  24. அண்மையில் அறுகம் குடா பகு­தியில் இஸ்ரேலிய சுற்­றுலா பய­ணிகள் மற்றும் அவர்­க­ளது தலங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­படும் அச்­சு­றுத்தல் உள்ள­தாக உளவுத்தக­வல் ஒன்று கிடைக்கப்பெற்­றது. இந்நிலையில், அறுகம் குடா உள்ளிட்ட பல உல்லாச பயணிகளுக்கான விடுதிகளுக்கும் கூட தற்போது பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வெளிநாட்டு நாணயங்கள் மூலம் கிடைக்கப்பெறும் வருமானமானது பெருமளவு உல்லாச பயணிகளின் வருகையிலேயே தங்கியிருக்கின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில சுற்றுலா தளங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையால் டொலரின் வருமானம் பாதிப்புக்குள்ளாகுமா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறிருக்கையில், அரசாங்கத்திலுள்ள அதிகாரிகளுக்கு குறித்த அச்சுறுத்தல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.