அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9267 topics in this forum
-
தேர்தல் முடிந்தது: இனிச் செய்ய வேண்டியது என்ன - எம். ஏ. நுஃமான் யாரும் எதிர்பாராத வகையில் மூன்றில் இரண்டுக்கு அதிகமான பெரும்பான்மை பெற்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தைக் கைப்பற்றி இருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தைத் தவிர இலங்கையின் 21 தேர்தல் மாவட்டங்களிலும் அது வெற்றி பெற்றிருக்கின்றது, வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில், அது பெற்ற வெற்றி வரலாற்று முக்கியத்துவம் உடையது. பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற வேறுபாடு இன்றி; சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் என்ற வேறுபாடு இன்றி, எல்லா மக்களும் இதன் வெற்றியில் பங்களிப்புச் செய்துள்ளனர். அண்மைக்கால இலங்கை அரசியல் வரலாற்றில் இது ஒரு பாரிய மாற்றம் என்பதில் ஐயமில்லை. இந்த மாற்றம் இரண்டு ஆண்டுகளுக்…
-
- 0 replies
- 339 views
-
-
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் அதனுடன் இணைந்து செயற்படும் ஊழலில் ஈடுபட்ட திமிங்கிலங்களை பிடிக்கவேண்டும் என தெரிவித்துள்ள மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து இந்திய சீன உறவுகளில் சமநிலையை பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அல்ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஊழலில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக உரிய ஆதாரங்கள் இல்லாதபோது அவர்களிற்கு எதிரான சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கும் ஆபத்து குறித்தும் எச்சரித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கேள்வி:- இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி நெருக்கடிகளிற்கு ஜனாதிபதி…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
மட்டக்களப்பின் தேர்தல் முடிவுகளில் கற்றுக் கொண்ட பாடம் என்ன? November 20, 2024 — கலாநிதி சு.சிவரெத்தினம் — நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் என்பார்கள், பொருளாதார நெருக்கடியும், வரிசைக்(queue) காலமும் இடம்பெற்றதும் நன்மையாகத்தான் முடிந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் பாரம்பரியமாக ஆட்சி செய்து வந்த உயர்வர்க்க ஆட்சியாளர்கள் தூக்கியெறியப்பட்டு சாதாரண உழைக்கும் வர்க்கத்திலிருந்து பல கஸ்ரங்களை அனுபவித்த ஒருவர் ஜனாதிபதியானதும். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுநிதியையும் அதிகாரத்தையும் எவ்வாறு துஸ்பிரயோகம் செய்திருக்கின்றார்கள் என்பதை புதிய ஜனாதிபதியும் அவருடைய அரசும் வெளிக்காட்டியதும் மக்களை முன்னைய ஆட்சியாளர்கள் மீது…
-
- 0 replies
- 324 views
-
-
2024 பாரளுமன்ற தேர்தல் முடிவுகள்; தேசிய மக்கள் கட்சியும் தமிழ் மக்களும் ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் எமது பாடசலை காலங்களில், இளைஞர்கள் யுவதிகள் ஒருவரை ஒருவர் காதலிப்பதும், பின்னர் பிரிவில் முடிந்ததும், அதிகமாக தமது காதல் கடிதங்களில் எழுதும் சினிமாப்படல் என்பது, 1962ம் ஆண்டில் வெளியான “நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில்” வெளியான ஓர் பாடல். இப்பாடலை விரும்பியவர்கள் முழுதாக கேட்டால் இன்னும் பல சிந்தனைகளுடன் இன்றைய தமிழ் அரசியலில், விசேடமாக கடந்த வெள்ளிக்கிழமை 15ம் திகதி வெளியான இலங்கையின் பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளுடன் ஒப்பீடு செய்து பார்க்க முடியும். தமிழ் வைத்தியம் என சொல்லப்படும், ஆயுள்வேத வைத்தியத்தின் மருந்துகள் மிகவும் கசப்பும் கைப்பும் நிறைந்தவை. இந்த அடிப்பட…
-
- 0 replies
- 246 views
-
-
புதிய நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம்! Veeragathy Thanabalasingham on November 18, 2024 Photo, GETTY IMAGES நாடாளுமன்ற தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரமாண்டமான வெற்றியைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி 1977 ஜூலை பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்தின் 168 ஆசனங்களில் 144 ஆசனங்களைக் கைப்பற்றி ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்த பிறகு முதற்தடவையாக அதேபோன்ற ஒரு பிரமாண்டமான பெரும்பான்மையுடன் இந்தத் தடவை தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்திருக்க…
-
- 4 replies
- 552 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியப் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைவதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கடந்த நாடாளுமன்றத்தில் 13 ஆசனங்கள். இந்த முறை ஒன்பது ஆசனங்கள். மருத்துவர் அர்ஜுனாவின் அரசியல் நிலைப்பாடுகள் ஸ்திரமானவை அல்ல. எனினும் அவரையும் இணைத்துக் கொண்டால் பத்து ஆசனங்கள். தமிழ்த் தேசியத் தரப்புக்குக் கிடைக்காத ஆசனங்கள் தமிழ்த் தேசிய பரப்புக்கு வெளியே போயிருக்கின்றன. வடக்கில் மொத்தம் ஐந்து என்பிபி வேட்பாளர்களும் கிழக்கில் இரண்டு என்பிபி தமிழ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இருவரும் வடக்கிலிருந்தும், பிள்ளையான் கிழக்கில் இருந்தும் சென்றார்கள். மூன்று வேறு கட்சிகளைச் சேர்ந்த மூன்று தமிழ் பிரதிநிதிகள். இப்பொழுது …
-
- 0 replies
- 456 views
-
-
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தமிழ் மக்களிடமிருந்து வடக்கு மாகாணம் பறிபோயுள்ள நிலையில் கடந்த தேர்தலில் பறி போயிருந்த கிழக்கு மாகாணம் தமிழ் மக்களினால் மீண்டும் கைப்பற்றப்படுள்ளது கடந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி. ) 1 ஆசனத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1 ஆசனத்தையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 1 ஆசனத்தையும் என 7 ஆசனங்களையும் கைப்பற்றி வடக்கு மாகாணத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. அதே நேரம் வன்னிமாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 1ஆசனத்தையும் ஶ…
-
-
- 7 replies
- 846 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ், இலங்கை நடந்து முடிந்த இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டிருக்கிறது. இனி ராஜபக்ஸக்களின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கும்? நான்கு ஆண்டுகளில் தலைகீழாக மாறிய இலங்கையின் அரசியல் 2019ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிய போது மக்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்தார்கள். 2015ல் நடந்த தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புடன் ஜனாதிபதியாக்கப்பட்ட மைத்திரி பால சிறிசேன, இவர்களது எதிர்பார்ப்பை பூர்த்திசெய்திருக்கவில்லை. மேலும், 2019 ஏப்ரலி…
-
- 0 replies
- 451 views
- 1 follower
-
-
திசை காட்டுமா திசை காட்டி ? நிலாந்தன். அனுரா எளிமையானவர்தான். சாதாரண சனங்கள் தொட்டுக் கதைக்கக்கூடிய ஒரு ஜனாதிபதியும்தான். அவர் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக கடந்த வாரம் பாசையூருக்கு வந்த பொழுது பாதுகாப்பு கெடுபிடிகள் இருக்கவில்லை. சீருடை அணிந்த படையினரின் பிரசன்னம் மிகக்குறைவாகவே இருந்தது. பதிலாக மாறுவேடத்தில் உலாவும் புலனாய்வுத் துறையினர் அதிகமாகக் காணப்பட்டார்கள். அனுர ஒரு காரில் வந்து இறங்கினார். அவர் அங்கிருந்த பௌத்த பிக்குகளின் காலில் விழுந்தார். ஏனைய மதகுருமார்களின் காலில் விழவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் அவரை வரவேற்ற முதிய அருட் சகோதரி ஒருவர் அவருடைய இரண்டு கன்னங்களையும் தடவி ஆசீர்வதித்தார். அவ்வாறெல்லாம் தொட்டுப் பழகக்கூடிய அளவுக்கு அ…
-
- 0 replies
- 295 views
-
-
நாடாளுமன்றத் தேர்தல் 2024 : தமிழ்க்கட்சிகள் விளங்கிக்கொள்ள வேண்டிய எளிமையான பேருண்மைகள் - நிலாந்தன் தமிழ்த் தேசியப் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைவதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கடந்த நாடாளுமன்றத்தில் 13 ஆசனங்கள். இந்த முறை ஒன்பது ஆசனங்கள். மருத்துவர் அர்ஜுனாவின் அரசியல் நிலைப்பாடுகள் ஸ்திரமானவை அல்ல. எனினும் அவரையும் இணைத்துக் கொண்டால் பத்து ஆசனங்கள். தமிழ்த் தேசியத் தரப்புக்குக் கிடைக்காத ஆசனங்கள் தமிழ்த் தேசிய பரப்புக்கு வெளியே போயிருக்கின்றன. வடக்கில் மொத்தம் ஐந்து என்பிபி வேட்பாளர்களும் கிழக்கில் இரண்டு என் பி பி தமிழ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இருவரும் வடக்கிலிருந்தும்…
-
- 2 replies
- 451 views
- 1 follower
-
-
பிராந்திய அரசியலின் முடிவும் தேசிய அரசியலின் தொடக்கமும் November 17, 2024 — கருணாகரன் — மட்டக்களப்பு மாவட்டத்தைத் தவிர, நாடு முழுவதும் தேசிய மக்கள் சக்தியே (NPP) வெற்றியடைந்துள்ளது. மட்டக்களப்பிலும் இரண்டாவது இடத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) யே நிற்கிறது. சுதந்திரத்துக்குப் பின்னான இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு தேசியக் கட்சி, நாடு முழுவதிலும் வெற்றியீட்டியது இந்தத் தடவைதான். இதற்கு முன்னான தேர்தல்களில் ஐ.தே.கவோ, பொதுஜன பெரமுனவோ சு.கவோ பெரும்பான்மையை அல்லது அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றாலும், அதில் வடக்குக் கிழக்குப் பிராந்தியங்கள் விலகியே இருந்தன. அல்லது வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களை அவற்றினால் வெற்றி கொள்ள முடியவில்லை. …
-
- 0 replies
- 394 views
-
-
பட மூலாதாரம்,ANURA KUMARA DISSANAYAKE எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக இலங்கையில் வரலாறு காணாத அரசியல் வெற்றியைப் பதிவு செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, தனது ஆட்சியின்போது எவ்வாறான சவால்களை எதிர்நோக்கப் போகின்றது? இலங்கை, பல்லின சமூகம் வாழும் நாடு என்ற நிலையில், இந்த ஆட்சியைத் தீர்மானிப்பதில் என்றும் இல்லாதவாறு அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாக்களித்து தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை உறுதிப்படுத்தியுள்ளனர். இலங்கையில் நாடாளுமன்ற முறைமை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக இலங்கை அரசாங்க சபை (இலங்கை அரசு சபை) காணப்பட்டது. ஆங்கிலேயர்கள் இலங்கையை ஆட்சி…
-
- 0 replies
- 339 views
- 1 follower
-
-
இலங்கையின் 10வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி, வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. நேரடி வாக்களிப்பின் மூலம் 141 ஆசனங்களையும், தேசிய பட்டியல் மூலம் 18 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே கைப்பற்றிய தேசிய மக்கள் சக்திக்கு இது மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் பல்வேறு விஷயங்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார். முழு விவரங்கள் காணொளியில்... - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூ…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…! November 15, 2024 — அழகு குணசீலன் — தமிழ்த்தேசிய அரசியல் வடக்கில் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ், வன்னி மாவட்டங்களில் தமிழரசு(2), காங்கிரஸ் (1), ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு(1), இணைந்து நான்கு ஆசனங்களை பெற்றுள்ளன. கிழக்கில். இதற்கு மாறாக மக்கள் பெரும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். தமிழரசு மட்டும் தனித்து ஐந்து ஆசனங்கள். இந்த முடிவு தமிழ்த்தேசிய அரசியலின் காப்பாளர்கள் யார்? என்ற கேள்வியை எழுப்புகிறது. வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், வன்னி தேர்தல் மாவட்ட முடிவுகளை பாருங்கள். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பழம்பெரும் தமிழரசுக்கட்சி வரலாற்றில் முதல் தடவையாக தென்னிலங்கை கட்சி ஒன்…
-
-
- 26 replies
- 1.4k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக இலங்கையில் மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய கட்சியொன்று தமிழர் பகுதிகளில் அதிகாரத்தைக் கைப்பற்றிய முதலாவது சந்தர்ப்பமாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் அமைந்துள்ளது. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் தமிழ் அரசியல் கட்சிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள தருணமாக இது கருதப்படுகிறது. குறிப்பாக மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் தவிர்த்து, ஏனைய தமிழர் தேர்தல் மாவட்டங்கள் அனைத்திலும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் மீதான தமிழ் மக்களின் விரக்தியும் அதிருப்தியும்…
-
- 0 replies
- 337 views
- 1 follower
-
-
"ஒப்பில்லாத சமுதாயம் உலகத்திற்கொரு புதமை" தமிழ் மக்களின் அழிவுக்கும் பிரச்சினைகளுக்கும் பிரதாமான காரணமாக இருந்தது ஒற்றுமையின்மையே! அதை உணராமல், இன்னும் தொடர்ந்த ஒற்றுமை அற்ற தமிழ் தலைமைக்கு இது ஒரு பாடமாகட்டும்!! ஆனால் இனியாவது திருந்துவார்களா ?? இன்று சமதர்ம சமுதாயம் மலர்வதற்கும் மக்களின் ஒருங்கிணைப்பும் மனங்களின் ஒருமைப்பாடும் இன்றியமையாத தேவைகள். நாடு நன்னாடாகவும் வளத்தில் பொன்னாடாகவும் திகழ்வதற்கு முழுமுதற்காரணமாக விளங்குபவர்கள் அந்நாட்டு மக்களே ஆவர் இதைத் தான் ஔவையார் "நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே" என்றாள். மலைநாட்டவர், கடல்பகுதியினர், மருதநிலத்தவர், …
-
- 0 replies
- 1.5k views
-
-
மரியோ அருள்தாஸ் இலங்கையின் அரசியல் உயரடுக்கிற்கு வெளியே முதன்முறையாக ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டமை என்பது இலங்கையின் “அரசியல் பூகம்பம்” என அழைக்கப்படுகின்றது. அனுர குமார திசாநாயக்கவின் தெரிவு என்பது, ஆளும் உயரடுக்கிற்கு வெளிப்படையான வருத்தம் மற்றும் சவாலாக இருந்த போதிலும், இலங்கை அரசின் சில உட்பொதிந்த, கட்டமைப்புசார் பிரச்சினைகளைப் பேணுவதற்கு உறுதியளிப்பதாகவே இருக்கின்றது. எனினும், வடக்கு-கிழக்கின் வாக்களிப்பு பாங்கானது திசாநாயக்கவின் கட்சி மீதான தமிழ் மக்களின் சந்தேகத்தினை வெளிப்படையாக தெரிவிக்கின்றது. ஏனெனில், அவர்கள் சமகி ஜன பலவேகயவின் சஜித் பிரேமதாச மற்றும் சிவில் சமூகத்தினால் ஆதரிக்கப்பட்ட வேட்பாளரான அரியநேத்திரன் பாக்கியசெல்வம் ஆகியோருக்…
-
- 0 replies
- 333 views
- 1 follower
-
-
கலாநிதி ஜெகான் பெரேரா பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்டக்கூடிய சாத்தியத்துக்கு மத்தியில் இலங்கை கடுமையாக பதிக்கப்படக்கூடிய நிலையிலேயே தொடர்ந்தும் இருக்கிறது என்பது எல்லோரையும் போன்று அரசாங்கத்துக்கும் தெரியும். கத்தி முனையில் நாடு இருக்கிறது என்று சர்வதேச நாணய நிதியம் கூறியிருக்கும் நிலையில் தேசிய நிபுணர்களும் சர்வதேச நிபுணர்களும் இதை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இத்தகைய ஒரு நிலவரத்தின் ஊடாக நாட்டைக் கொண்டு செல்வதில் அரசாங்கம் மிகவும் கவனமாக எடுத்த நடவடிக்கைகளில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டத்தை ஏற்றுக்கொண்ட அதன் செயலும் அடங்கும். அந்த உதவித் திட்டத்தை பிரதான எதிர்க்கட்சி எதிர்த்தபோதிலும், முன்னைய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி அதைப் ப…
-
- 0 replies
- 341 views
- 1 follower
-
-
ரூபன் சிவராஜா ‘பொருண்மை தெரிதலுஞ் சொன்மை தெரிதலுஞ் சொல்லி னாகும் என்மனார் புலவர்’ (தொல். 158) ‘மொழி’ இரண்டு அடிப்படைக் கூறுகளின் வழிநின்று செயல்படக்கூடியது என்று வரையறை செய்கிறது தொல்காப்பியம். ஒன்று சொன்மை (சொல்) மற்றையது பொருண்மை (பொருள்). ஒலி, சொல், வாக்கிய அமைப்பு முறைகளை ஆதாரமாகக் கொண்டு சொன்மை வெளிப்படும். பொருண்மை என்பது, சொல்லின் பொருளைக் குறிக்கும் தன்மையைச் சுட்டுகிறது. அதேபோல் சொற்கள் அனைத்துமே பொருளைக் குறிக்கும் தன்மையும் - உணர்த்தும் தன்மையும் வாய்ந்தவை என்பதை, ‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’ (தொல். 157) என்கிறது தொல்காப்பியம். சொல்லுக்கும் பொருளுக்குமான தொடர்பு தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தில் நுணுக்கமாகவும் விரிவாகவும் விளக…
-
- 1 reply
- 282 views
- 1 follower
-
-
எதிர்க்கட்சி அரசியல் பண்பாடு sudumanalNovember 13, 2023 கீழைத்தேய பண்பாட்டு கட்டமைவுள் உணர்வுசார் அல்லது உணர்ச்சி சார் வெளிப்பாடுகள் தூக்கலாகவே தெரிவதுண்டு. அது மனிதப் பெறுமதி கொண்ட பண்பாற்றலாகும். அதேநேரம் இது அரசியல் தளத்தில் உணர்ச்சிவாத அரசியலுக்கு (emotional politic) சாதகமானதாக அமைந்து, அறிவை பின்னுக்குத் தள்ளுகிற செயற்பாட்டை நிகழ்த்துகிறது. இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் மக்களும் 70 களிலிருந்து இதற்குள் அகப்பட்டு சுழன்றிருக்கிறார்கள். அது இப்போதும் தொடர்கிறது. எமது அறிவை மீறி இன்றைய என்பிபி அலையினுள் எமது உணர்ச்சிவாத அரசியல் மூழ்கிப் போயிருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது. இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. பருண்மையாக இங்கு சிங்கள மக்கள், வடக்க கிழக்க…
-
- 0 replies
- 365 views
-
-
இந்த கட்டுரை ஒருவருடத்துக்கு முன் வந்தது காலத்தின் தேவை கருதி இங்கு இணைக்கபடுகிறது . ‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடரானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்தத் தொடரானது, இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து த…
-
- 2 replies
- 768 views
-
-
BY AMAL JAYASINGHE AFP-JIJI இலங்கையின் புதிய இடதுசாரி ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தனது கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகரிக்க முயல்கின்ற தருணத்தில் அவர் எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு கிடைத்துள்ளது. தனது கதாநாயர்களாக சேகுவேராவையும் கார்ல்மார்க்சினையும் கருதும் அனுரகுமார திசநாயக்கவிற்கு நாட்டின் மிகவும் செல்வாக்குள்ள தனியார் வர்த்தக அமைப்பின் ஆதரவு கிடைத்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியால் சீற்றமடைந்த மக்களின் ஆதரவை ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசநாயக்க பெற்றார். இலங்கை வர்த்தக சம்மேளனம் இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக தான் முன்வைத்து…
-
- 0 replies
- 311 views
- 1 follower
-
-
தமிழ் மக்களுக்கு உறுதியான பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் ஆபத்து! Veeragathy Thanabalasingham on November 12, 2024 Photo, Economy Next நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு நாட்களே இருக்கின்றன. முன்னைய நாடாளுமன்ற தேர்தல்களை விடவும் இந்தத் தடவை இலங்கையின் அரசியல் கோலங்கள் பெருமளவுக்கு மாறியிருக்கும் சூழ்நிலையில் தேர்தல் நடைபெறுகிறது. பாரம்பரியமான பிரதான அரசியல் கட்சிகளில் எந்த ஒன்றுமே தங்களை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்கவில்லை. பலம்பொருந்திய எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் செயற்படுவதற்கே வாக்களிக்குமாறு அவற்றின் தலைவர்கள் கேட்கிறார்கள். அதேவேளை, முதன்முதலாக ஆட்சியதிகாரத்துக்கு வந்திரு…
-
- 0 replies
- 250 views
-
-
தேசிய மக்கள் சக்தி போன்ற சக்திகளை தமிழ் இளைஞர்கள் நாடிச்செல்லும் காரணம் என்ன? – மட்டு.நகரான் November 12, 2024 இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் திருவிழா வடக்கு கிழக்கிலும் இடம்பெற்றுவருகின்றது. தமிழர்களின் உரிமைப்போராட்டம் திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்ட நிலையில் இலங்கையின் பாராளுமன்ற தேர்தலின் மூலம் தமிழர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்போம் என்ற வகையில் தொடர்ச்சியான பிரசாரங்கள் வடகிழக்கில் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நாட்டில் தமிழர்கள் பௌத்த பேரின வாதத்தினால் நசுக்கப்பட்டபோது அதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் வெடித்த நிலையில் தொடர்ச்சியாக தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பும் நிலைமைகள் காரணமாக இந்த நாட்டில் தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்படவேண்…
-
- 0 replies
- 310 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? இதற்கு முன் அப்படி நடந்திருக்கிறதா? இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14-ஆம் தேதியன்று நடக்கவிருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாகியிருக்கும் நிலையில், இந்த நாடாளுமன்றத் தேர்தல் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்…
-
-
- 1 reply
- 282 views
- 1 follower
-