அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுராவின் மனச்சாட்சியும் May 21, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) ஆரம்பிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமையுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைந்தன. காலஞ்சென்ற என். சண்முகதாசன் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சீனச்சார்பு) வாலிபர் இயக்கத்தின் ஒரு முக்கிய தலைவராக விளங்கிய ரோஹண விஜேவீர முரண்பாடுகள் காரணமாக கட்சியில் இருந்து விலகி 1965 மே 14 ஆம் திகதி ஜே.வி.பி. யை தாபித்தார். அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரு தடவைகள் ஆயுதக்கிளர்ச்சிகளை முன்னெடுத்து இரத்தக் களரிகளை கடந்து வந்த ஜே.வி.பி. ஜனநாயக அரசியலில் பிரவேசித்த பிறகு அதன் ஐந்தாவது தலைவரான அநுரா குமார திசாநாயக்கவின் தலைமையில் தேசிய மக்கள் சக்தி என்ற …
-
- 2 replies
- 274 views
-
-
தமிழர் பிரச்சினை; கைவிடுகிறதா இந்தியா? கே. சஞ்சயன் / 2020 பெப்ரவரி 14 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறுகிய கால இடைவெளிக்குள், இரண்டாவது தடவையாக தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் கௌரவமான, நீதியான, சமத்துவமான தீர்வு ஒன்றை வழங்க வேண்டும் என்பதை இலங்கைத் தலைவர்களிடம் வலியுறுத்தியிருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, முதல் முறையாக இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்த நரேந்திர மோடி, கடந்த வாரம் இந்தியாவுக்குச் சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமும் அதனையே கூறியிருக்கிறார். இரண்டு நாடுகளினதும் பிரதமர்கள் சந்தித்துப் பேசிய பின்னர், கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே, தமிழ் …
-
- 2 replies
- 868 views
-
-
14 JUL, 2025 | 03:59 PM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கையில் முக்கியமான அரசியல் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட முதல் சம்பவம் 1959 செப்டெம்பரில் இடம்பெற்றது. பதவியில் இருந்த பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, தல்துவ சோமராம தேரோ என்ற பௌத்த பிக்குவினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது நாடு அதிர்ச்சியில் உறைந்தது. அதையடுத்து வந்த வருடங்களில் இனப்பிளவின் இருமருங்கிலும் மேலும் பல அரசியல் படுகொலைகள் இடம்பெற்றதை காணக்கூடியதாக இருந்தது. தமிழீழ விடுதலை புலிகள் உட்பட பல்வேறு தமிழப் போராளிக் குழுக்களினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசியல் வன்முறை, ஜனதா விமுக்தி பெரமுனவின் ( ஜே.வி.பி.) வன்முறை மற்றும் அரசினாலும் அதன் அமைப்புக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட எதிர் வன்முறைகளில் பல வருடங்களாக பெர…
-
-
- 2 replies
- 438 views
- 1 follower
-
-
மக்களுக்கு புரியாத ‘மாபியா’ அரசியல் -விரான்ஸ்கி நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தமிழ் பிரதேசங்களில் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. பரவுகின்ற கொரோனா வைரஸிலும் பார்க்க, படுவேகமாகத் தங்களின் அரசியல் கருத்துகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்துவிடவேண்டுமென்று, கட்சிப் பிரமுகர்கள் மின்னல் வேகத்தில் செயற்பட்ட வண்ணம் உள்ளனர். முக்கியமாக, இம்முறை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான சக்தியாக, தமிழ்க் கூட்டமைப்பின் மாற்றுச் சக்தியாகத் தங்களை முன்நிறுத்தியுள்ள விக்னேஸ்வரன் தலைமையிலான அணியினர், எப்படியாவது மக்களின் மனங்களில் புதிய விதைகளைத் தூவி, கூட்டமைப்பினருக்கான விசுவாச மரங்களை அடியோடு தோண்டியெறிந்துவிட வேண்டும் என்று படாதபாடுபடுகிறார்கள். முக்க…
-
- 0 replies
- 363 views
-
-
கொரோனா வைரஸ்: இலாபமா? மனிதாபிமானமா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 மார்ச் 19 இன்றைய தவிர்க்க இயலாத பேசுபொருள், கொரோனா வைரஸ் ஆகும். மனிதகுலத்தின் பெரும்பகுதி, வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டத்தில், தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த நேரத்திலும் ஒரு கூட்டம், அச்சத்தை விதைத்து, அதில் இலாபம் பார்க்கிறது. இன்னொரு கூட்டம், இதை எப்படிக் காசாக்கலாம் என்று யோசிக்கிறது. மனித மனம் எவ்வளவு விந்தையானது? இன்று எம்முன் உள்ள கேள்வி, எமக்கு வேண்டியது இலாபமா, மனிதாபிமானமா என்பதேயாகும். இந்தப் பத்தியை இரண்டு நிகழ்வுகளுடன் தொடங்க விரும்புகிறேன்: 1. ஒரு பிரபல விளையாட்டு வீரர், தனது சொந்த ஹோட்டல்களை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான நோ…
-
- 1 reply
- 850 views
-
-
வடக்கில் கணவனை இழந்த பெண்களின் துயரக் கதைகள் கோப்புப் படம் முல்லைத்தீவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நந்திக்கடல் சூரியக் கதிரின் வெப்பத்தால் சூடாகி இருந்த வேளையில் நாங்கள் செல்வராஜியின் வீட்டிற்குச் சென்றோம். அவரது சிறிய வீட்டின் சுவர்களின் ஊடாக, அவரது கடந்த காலத் துன்பகரமான வாழ்வின் கரிய நிழல்களைக் காண முடிந்தது. ‘போர் உச்சக்கட்டத்தை அடைந்த தருணத்தில், எனது கணவரும் எனது மூன்று பிள்ளைகளும் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர். நான் தற்போது எஞ்சிய எனது மூன்று பிள்ளைகளுடன் வாழ்கின்றேன். ஆனால் நாம் எமது அன்றாட வாழ்வைக் கழிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகிறோம்’ என செல்வராஜி தெரிவித்தார். முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் வாழ்ந்து வரும் 47 வயதான செ…
-
- 1 reply
- 1k views
-
-
[size=5]பனிப்போர்க் கால 13வது திருத்தச் சட்டமும், பின்-பனிப்போர் கால இந்தியாவும் - யதீந்திரா[/size] இன்றைய அர்த்தத்தில் இலங்கை அரசியலின் விவாத மையம், 13வது திருத்தச் சட்டத்தில் தரித்து நிற்கிறது. தெற்கில், அரசியல்வாதிகளையும் தாண்டி புத்திஜீவிகள், அரசியல் அவதானிகள் என்போர் மத்தியிலும் இது ஒரு முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விவாதம் இலங்கை அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகின்ற விவாதமாகும். 1987ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாணசபை முறைமை ஒன்றுதான், சுதந்திர இலங்கையில் இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப் பரவலாக்கல் (Decentralization) முறைமை ஆகும். அதனையும் கூட நீக்க அனுமதிப்பதா? என்பதுதான் …
-
- 0 replies
- 706 views
-
-
வேடிக்கை பார்ப்பதன் விபரிதங்கள் இலங்கை, இன்று மெதுமெதுவாக இராணுவ ரீதியிலான ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸை ஒழித்தல் என்ற போர்வையும் ‘ஒழுக்கமான சமூகமொன்றை உருவாக்குதல்’ என்ற கருத்துருவாக்கம் நிலைபெற்ற நிலைமையும் சிங்கள, பௌத்த பெருந்தேசிய அகங்காரத்தின் அப்பட்டமான வெளிப்பாடும் அதைச் சாத்தியமாக்கியுள்ளன. இதில், இலங்கையர்கள் கவனிக்க வேண்டிய விடயமொன்று உண்டு. இது இருபுறமும் கூரான கத்தி போன்றது. இன்று இந்த அடக்குமுறையை நோக்கிய நகர்வுக்கு, தேசியவாதத்தின் பேரால் ஆதரவளிக்கும் பலர், இந்த ஆபத்தை உணரவில்லை. அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டு வரப்படுகின்ற போது, இன்னாரைத் தண்டிக்கவும் இன்னென்ன வகையான குற்றங்களைத் தடுக்கவும் என்றுதான் சொல்லப்படுகிறது. இதன…
-
- 0 replies
- 601 views
-
-
-
எட்டாக்கனியாக மாறும் பாதிக்கப்பட்டோருக்கான நீதி ரொபட் அன்டனி பொறுப்புக்கூறல் பொறி முறை என்பது மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் மிக இலகுவில் தீப்பற் றிக்கொள்ளக் கூடிய விவகாரமான ஒரு விடயம் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த விடயத்தை மிகவும் கவனமாகவும் பொறுப் புடனுமே அனைத்து தரப்பினரும் அணுக வேண்டும். இந்த விடயம் தீப்பற்றிக்கொண்டால் அரசாங்கத்தின் இருப் புக்கே பாதகத்தை ஏற்ப டுத்தும் என்பதை புரிந் துகொண்டே இந்த விட யத்தை நாங்கள் அணுகவேண்டும் "தம்பி.. அரசியலமைப்பு வரைபைக்காட்டி பொறுப்புக்கூறல் செயற்பாட்டை இல்லாமல் செய்யும் செயற்பாட்டையே முன்னெடுக்கிறாங்கள், போற…
-
- 0 replies
- 307 views
-
-
நாங்கள் ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்களுக்கு கெடுதலையே செய்து கொண்டிருக்கிறோம். தமிழ் அரசியல் வார இதழான துக்ளக்கின் ஆசிரியரான சோ ராமசாமி,அவர்கள் தமிழ் நாட்டில் மிகவும் புகழ் வாய்ந்த அரசியல் ஆய்வாளராவார். ஷோபா வாரியாருக்கு அவர் வழங்கியுள்ள இந்த பிரத்தியேக நேர்காணலில் அவர் ஸ்ரீலங்காத் தமிழர்கள் விடயம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திராவிட முன்னேற்ற கழகம் வெளியேறியது, மற்றும் அடுத்து வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான அவரது எண்ணங்கள் என்பனவற்றை வெளிப்படுத்துகிறார். திராவிட முன்னேற்ற கழகம்(திமுக) ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து(யு.பி.ஏ) வெளியேறப்போவதாக அச்சுறுத்தல் விடுத்தபோது, அவர்கள் மற்றுமொரு நாடகத்தை அரங்கேற்றுவதாகத்தான் பலரும் எண்ணினார்கள். ஆனால் இறுதியாக அவர…
-
- 3 replies
- 942 views
-
-
மக்கள் எழுச்சிக்குப் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்
-
- 0 replies
- 309 views
-
-
நினைவாக மாறிய ஒரு நினைவுச்சின்னம் நிலாந்தன் யாழ்.பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டமைக்கு எதிரான போராட்டம் என்பது முதலாவதாக பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிரானது. அதைவிட ஆழமான பொருளில் அது பல்கலைக்கழகத்தின் சுயாதீனம் குறித்த கேள்விகளை எழுப்புவது. அதையும் விட ஆழமான பொருளில் அது நினைவு கூர்தலுக்கான தமிழ் மக்களின் உரிமைகளோடு சம்பந்தப்பட்டது. முதலாவதாக துணைவேந்தர்.அவர் ஒரு கருவி. எந்த வாயால் போராடும் தரப்புக்களை ஆர்வக்கோளாறுகள் என்று சொன்னாரோ அதே வாயால் தேவாரம் பாடியபடி அடிக்கல் நாட்டுகிறார். நீளக் காற்சட்டையை உயர்த்தி மடித்துவிட்டு சுலோகங்களை உச்சரித்தபடி நீர்நிறைந்த குழிக…
-
- 0 replies
- 529 views
-
-
இறுதிப்போரின் போது சரணடைந்தவர்களை கொன்றுவிட்டதாக கோட்டாபய சொன்னார் – அம்பலப்படுத்துகின்றார் ஸ்டீபன் ரப் 7 Views “கடந்த காலங்களில் பொறுப்புக்கூறலிற்கு என்ன நடந்தது என ஆராய்வதற்காக ஆணைக் குழுவொன்றை சிறீலங்கா அரசாங்கம் நியமித்துள்ளதாக அறிகின்றோம். இது கதவை மூடுவதற்கான இன்னொரு முயற்சி. நீதியை தடுப்பதற்கான இன்னொரு முயற்சி” என அமெரிக்காவின் யுத்த குற்ற விவகாரங்களிற்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளார் உலகத் தமிழர் பேரவை, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான நிலையம், இலங்கையில் நீதி மற்றும் சமாதானத்துக்கான பரப்புரை, கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகியன இணைந்து முன்னெடுத்த இணையவழி கருத்தரங்கில் கருத்து தெரிவிக்கையில் …
-
- 0 replies
- 513 views
-
-
சிறீலங்காவை அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்குப் பாரப்படுத்த வேண்டும். 14 Views இருபத்தொன்பதுக்கு மேற்பட்ட கைக்குழந்தைகள் உட்படத் தங்கள் குடும்பங்களில் இருந்து சிறீலங்காவால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 18000இற்கு மேற்பட்டவர்களுடைய நீதிக்காக, அவர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் இம்மாதம் 18ஆம் திகதியுடன் 1400 நாட்களை கடந்து தாங்கள் சாகும்வரை நீதிக்காகப் போராடுவோம் எனப் போராடி வருகின்றனர். ஆனால் சிறீலங்காவோ இதுவரை எந்தப் பொறுப்புக் கூறலையும் சொல்லவுமில்லை, நிலைமாற்று நீதியை அவர்கள் பெறுவதற்கான எந்த வழிமுறைகளையும் தோற்றுவிக்கவுமில்லை. தங்களுக்கு நீதி கிடைக்காத துயரநிலையிலேயே 83 தாய்தந்தையர் காலமான துயர வரலாற்றையும் இப்போராட்டம் பதி…
-
- 0 replies
- 399 views
-
-
இரண்டேநாளில் வெளுத்தது பசிலின் சாயம். - புகழேந்தி தங்கராஜ் நாலுபேருக்குத் தெரிகிறமாதிரி ஏதாவதொரு துறையில் பிரபலமாகிவிட்டால், தன் சமூகத்தைத் திரும்பிக்கூட பார்க்கமாட்டான் தமிழன். ‘உங்களுக்கு இருக்கிற பாப்புலாரிட்டிக்கு அரசியல் பற்றியெல்லாம் நீங்கள் பேசலாமா’ என்று வேப்பிலை அடித்தே ஊமையாக்கி விடுவார்கள், சுற்றியிருக்கிற பூசாரிகள். இந்தப் பொதுவான விதிக்கு, விதிவிலக்கு மாயா. இசை உலகில் தமிழனின் ஒருமுகம் ஏ.ஆர். ரஹ்மான் என்றால், இன்னொரு முகம் – எம்.ஐ.ஏ. என்கிற பெயரில் பாப் இசை உலகை அதிரவைக்கும் மாயா. ஈழச் சகோதரியான இந்த இளம் பாடகி, ‘எங்கள் மண்ணில் நடந்தது போர் அல்ல… அது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை’ என்பதை உலக அரங்கில் உரத்த குரலில் பதிவு செய்து வருபவர். எதிர்த்துக் கு…
-
- 0 replies
- 1.5k views
-
-
‘அச்சுறுத்தல்களுக்குள்ளாகும் கிழக்கின் கரையோரப் பிரதேசங்கள்’ – மட்டு.நகரான் June 18, 2021 வடகிழக்கு தமிழர்களைப் பொறுத்த வரையில், இலங்கையில் தொடர்ச்சியான அழிவுகளையும், இன்னல்களையும் எதிர்கொண்ட சமூகமாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. இழப்புகளையும், வேதனைகளையும், மீளமுடியாத துன்பங்களையும் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்படுகின்றனர். தமிழ் மக்களின் வாழ்க்கையில் இயற்கையும், செயற்கையான செயற்பாடுகளும் மாறிமாறி ஏற்படுத்தும் துன்பங்களை பேரினவாத அரசுகள் தங்களுக்குச் சார்பாக மாற்றிக் கொள்ளும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிழக்கு மாகாணம் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புப் பிரதேச…
-
- 0 replies
- 431 views
-
-
பொன்சேகாவுக்கு மீண்டும் இராணுவ பொறுப்பா? நாட்டில் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி நடத்திச் செல்லும் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அரசாங்கத்தின் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப் போவதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கருத்தை அடுத்து அது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அமைச்சர் ராஜித தெரிவித்த கருத்தை அரசாங்கத்தின் ஏனைய சில அமைச்சர்களே மறுத்துள்ளனர். அதேவேளை, அமைச்சர் சரத் பொன்சேகாவும் அதனை மறுக்காமல் அதற்கு நெருங்கிய ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மீண்டும் இராணுவத் தளபதி…
-
- 0 replies
- 418 views
-
-
போட்டி அரசியல் மலையக அரசியல் தொழிற்சங்க நிலைமைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருவது தெரிந்த விடயமாகும். இவ்விரு சாராரினதும் மக்கள் நலன்கருதிய செயற்பாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்படுகின்றன. உச்சகட்ட சேவைகளை இவர்கள் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் இருந்தும் பின் நிற்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் மலையகத்தில் நிலவும் போட்டி அரசியல் கலாசாரமானது மலையக மக்கள் பல்வேறு உரிமைகளையும் பெற்றுக்கொள்ள தடைக்கல்லாக இருப்பதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். மலையகமும் அரசியலும் அரசியல் என்பது ஒரு சாக்கடை எ…
-
- 0 replies
- 436 views
-
-
இரண்டரை வருடங்களில் எதனையும் தீர்க்கவில்லையே http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-17#page-3
-
- 0 replies
- 288 views
-
-
இனியும் தொடர வேண்டுமா கூட்டமைப்பு? வடக்கு முதலமைச் சர் விக்னேஸ்வரனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை கூட்டமைப்பின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்துவிட்டது. இதற்குக் கூட்ட மைப்பில் அங்கம் வகிப்பவர்களே காரணமாகி விட்டனர். இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல். எப் ஆகிய நான்கு கட்சிகள் கூட்டமைப்பாக இணைந்து செயற்பட்டு வருகின்றன. இதில் இலங்கைத் தமிழ் அர சுக் கட்சி பிரதான பாகத்தை வகிக்க, ஏனைய மூன்று கட்சிகளும் அடுத்த நிலையில் உள்ளன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த இரா.சம்பந்தனும், மாவை. சேனாதிராசாவும் கூட்ட …
-
- 4 replies
- 745 views
-
-
-
அனுராதபுரம் அரசியல் கைதிகளின் அடுத்த கட்டம் சிக்கல்கள் நிறைந்த ஒரு விடயமாகியிருக்கின்றது. இந்த சிக்கல்களில் இருந்து விடுபட்டு, எவ்வாறு அவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்பது தெளிவற்றதாகவே காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினைக்கு யார் தீர்வு காணப் போகின்றார்கள்? யாரிடம் இருந்து தீர்வைப் பெறுவது என்பது போன்ற கேள்விகள் இப்போது எழுந்திருக்கின்றன. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இராசதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று அரசியல் கைதிகளும், எட்டு வருடங்களாகச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு எதிரான வழக்குகள் கடந்த நான்கு வருடங்களான வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கா…
-
- 0 replies
- 773 views
-
-
கீழைத்தேய நவீன புரட்சியின் அடையாளமாக இலங்கை சிவலிங்கம் சிவகுமாரன் ஜுலை மாதமானது இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு மறக்க முடியாத பல வரலாற்று வடுக்களை விட்டுச்சென்ற மாதமாகும். 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆடிக் கலவரங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்ட அதே வேளை, கோடிக்கணக்கான அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன. பல வீடுகள் வர்த்தக ஸ்தாபனங்கள் எரியூட்டப்பட்டு சாம்பராகின. பல தமிழர்கள் தமது மண்ணை விட்டு தமிழகத்துக்கு நிரந்தரமாக சென்று விட்டனர். ஆனால் இதற்குக் காரணமாக இருந்த பேரினவாத சிந்தனைகள் கொண்ட அரசியல் தலைவர்களுக்கும் சிங்கள வன்முறையாளர்களுக்கும் இந்த ஜுலை மாதம் பதிலடிகளை கொடுத்திருக்கின்றது என்றால் மிகையாகாது. …
-
- 0 replies
- 607 views
-
-
ராஜபக்ஷவினரை காப்பாற்றும் முயற்சி By VISHNU 16 SEP, 2022 | 09:45 PM என்.கண்ணன் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம், சமர்ப்பித்திருந்த விரிவான அறிக்கையில், பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான பரிந்துரைகளுக்கு இலங்கை அரசாங்கம் கடுமையான பதிலடியைக் கொடுத்திருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் பணியகத்தின் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் பதிலை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டிருந்தார். பேரவையில் அவர் உரையாற்றிய போது, இரண்டு முக்கியமான விடயங்களை முன்வைத்தார். ஒன்று, மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-