அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
மீண்டும் அயல் நாடுகளுடனான உறவில் அரசியல் நாடகங்களா? கடந்த சில மாதங்களில் பெறப்பட்ட சமிக்ஞைகள், தரவுகளின் அடிப்படையில் இந்தியா குறித்த புதிய பார்வையை ஏற்கனவே ஒருசில ஆய்வாளர்கள் குறிப்பிட்டு காட்டி உள்ளனர். அவை மோடி அவர்களின் சொந்த அரசியல் நம்பிக்கைகளின் அடிப்படையிலும், எதிர்கால நோக்கு அறிக்கைகளையும் மையமாக கொண்டு பார்க்கப்பட்டவையே. ‘புதினப்பலகை’க்காக *லோகன் பரமசாமி. பல்வேறு மேலைத்தேய வெளியுறவு கொள்கை ஆய்வாளர்களால் இந்திய பிரதமர் மோடி அவர்களின் வெளியுறவு கொள்கையின் இலகு மொழியாக்கம் குறித்த முயற்சிகள் அவர் பதவிக்க வந்த காலம் தொட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறன. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்களால் வகுக்கப்பட்டு காலாவதியாகிப்போன நிலையிலும் விடாப்பிடியாக இந்திய த…
-
- 0 replies
- 670 views
-
-
சீனாவைத் துரத்தும் கடன் பொறி குற்றச்சாட்டு -ஹரிகரன் இப்போதெல்லாம் சீனா கடன் பொறி என்ற சொல்லைக் கேட்டாலே பதறிப் போகிறது. அந்தச் சொல்லைக் கூறியவரை நோக்கி வசைபாடவும் ஆரம்பித்து விடுகிறது. இதற்கு, சீனா கூறுவது போன்று மேற்குலக ஊடகங்கள் மாத்திரம் காரணம் அல்ல. இலங்கையும் கூட இந்த நிலைக்கு காரணம் தான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா தன்வசப்படுத்தியதை அடுத்தே, சர்வதேச அளவில் சீனாவுக்கு எதிராக- இந்தக் கடன் பொறி குற்றச்சாட்டு அலை வீசத் தொடங்கியிருக்கிறது. BRI எனப்படும், சீனாவின் கனவுத் திட்டமான- பட்டுப்பாதை திட்டத்தை செயற்படுத்த கடன்களை கொட்டிக் கொடுத்து நாடுகளை வளைத்துப் போடுகிறது சீனா. சீ…
-
- 0 replies
- 1.4k views
-
-
மேற்குலகையும் இந்தியாவையும் கையாளும் தந்திரம் ச.பா. நிர்மானுசன் படம் | US Department of State, Fllickr Photo ஐம்பது நாளை கடந்துள்ள சிறீலங்காவின் புதிய அரசு தமிழர்கள் தொடர்பாக கட்டுக்குள் வைத்திருக்கும் உபாயத்தையும், சர்வதேச சமூகத்தை நோக்கி வளைத்துப் போடும் உபாயத்தையும் கைக்கொள்கிறது. தம்வசம் வைத்திருக்கும் உபாயத்தின் அங்கமாக தற்போது இரு நகர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பாடுகள் முடுக்கி விட்டுள்ளது. இலங்கைத் தீவுக்கு வரும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை வளைத்துப் போடும் முகமாக, சீனாவின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் போர்ட் சிற்ரி திட்டத்தை இடைநிறுத்துவதற்கு சிறீலங்காவின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அத்துடன், இந்தியா பயன்படுத்துகின்ற தம…
-
- 0 replies
- 329 views
-
-
26 FEB, 2024 | 11:09 AM பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் 30 வருடங்களுக்கும் அதிகமான சிறைத்தண்டனையை ஆர்க்டிக் பிராந்தியத்தின் தொலைதூர சிறையில் அனுபவித்துக் கொண்டிருந்த அலெக்சி நவால்னியின் மரணம் விளாடிமிர் புட்டின் கட்டியெழுப்பிய அரசில் எதிர்ப்பியக்கத்தினதும் மாறுபட்ட கருத்துக்களினதும் இன்றைய அந்தஸ்தை அதிர்ச்சிக்குரிய வகையில் நினைவூட்டுவதாக இருக்கிறது. பல வருடங்களாக கிரெம்ளினின் முக்கியமான எதிர்ப்பாளராக நவால்னி விளங்கி வந்திருக்கிறார். 2020ஆம் ஆண்டில் அவருக்கு நஞ்சூட்டிக் கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியொன்றில் உயிர்தப்பிய அவர் சிகிச்சைக்காக ஜேர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டார். 'சுதந்திரத்துக்காக போராடுவதற்காக' திரும்பிவந்த அவர் மீண்டும…
-
- 0 replies
- 352 views
- 1 follower
-
-
ஆகஸ்ட் மாதம் பிறந்து விட்டது. ஜனாதிபதித் தேர்தலை விட தேசியக் கட்சிகளின் வேட்பாளர்கள் யார் என்பதை அறியும் பரபரப்பில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபலங்களை அதே கட்சியை சேர்ந்தவர்களே விமர்சித்து வரும் போக்கும் அதிகரித்துள்ளது. இதில் வேட்பாளர்களின் கல்வித்தகுதி பற்றியும் அண்மையில் காரசாரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் சஜித் பிரேமதாஸவின் கல்வித்தகுதி பற்றி அக்கட்சியின் ரவி கருணாநாயக்க விமர்சனங்களை முன்வைத்திருந்தார். ஐக்கிய தேசியக் கட்சி சிறந்த கல்வித்தகைமை கொண்டவர்களையே வேட்பாளராக நியமிக்கவுள்ளது என்றும் சஜித் பிரேமதாஸ இலங்கையி…
-
- 0 replies
- 532 views
-
-
தனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்? நிலாந்தன் August 18, 2019 சில வாரங்களுக்கு முன்பு டான் டிவியின் அதிபர் குகநாதன் முகநூலில் பின்வருமாறு ஒரு குறிப்பை எழுதி இருந்தார்……… ‘சிங்கள மக்கள் தெரிவு செய்யப் போகும் அடுத்த ஜனாதிபதி! சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் யாரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று பலரும் எழுதி வருகின்றனர்.ஒரு சின்னக் கணக்கு. பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்-15,992,096. வாக்களிப்பவர்கள் அதிகபட்சம் 80 வீதம்-12,793,676. வெற்றிபெறத் தேவையானது-6,396,839. தனிச்சிங்கள் வாக்காளர்கள்-11,302,393. அவர்களில் வாக்களிப்பவர்கள் 80 வீதம்-9,041,914. இந்த வாக்குகளில் 70.74 வீதம்-6,396,839. ஆக சிங்கள மக்க…
-
- 0 replies
- 605 views
-
-
இந்தோ- பசுபிக் பிராந்தியப் பூகோள அரசியல் போட்டிக்கு மத்தியில் டில்லிக்கு என்ன சொல்ல வேண்டும்? தீர்மானிக்க வேண்டிய தமிழ் தரப்பு அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்தே இந்தியாவுக்குச் செல்ல வேண்டும்? இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியாவுக்குச் சென்று பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திக்கவுள்ளனர். கடந்த மே மாதம் இரண்டாவது தடவையாகவும் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திரமோடி சில நாட்களிலேயே இலங்கைக்குப் பயணம் செய்திருந்தார். அப்போது கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்திருந்த மோடி புதுடில்ல…
-
- 0 replies
- 655 views
-
-
தமிழ் மக்களும் ஜே.வி.பி.யும் வீ.தனபாலசிங்கம் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரான ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி. ) வின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கடந்தவாரம் ' கேசரி ' க்கு வழங்கிய நேர்காணலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய தெரிவு குறித்து தெரிவித்திருக்கும் கருத்து விரிவான விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஏனைய தேர்தல்களில் தமிழ் அரசியல் கட்சிகளை ஆதரிக்கலாம்.ஆனால், ஜனாதிபதி தேர்தல் என்று வரும்போது தமிழ் மக்கள் தென்னிலங்கை கட்சியொன்றை ஆதரிப்பதென்றால், தென்னிலங்கை கட்சியொன்றை அவர்கள் நம்புவதென்றால் ஜே.வி.பி.யே ஒரே தெரிவாக இருக்கமுடியும் என்று கூற…
-
- 0 replies
- 495 views
-
-
லோ.தீபாகரன்)அன்று தொடக்கம் இன்றுவரை இலங்கையின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருப்பவர்கள் மலையக தமிழர்களே இவர்கள் இல்லை என்றால் இலங்கை அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டு பட்டியலில் இருந்து விலகிச் சென்றிருக்கும் என கூறலாம் இவர்களின் கடின உழைப்பு போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரியதாகும் 1820 - 1840 காலப்பகுதியில் இந்தியாவின் தென்மாநிலத்தில் சாதிக்கொடுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடியது. பலர் பட்டினியால் செத்து மடிந்தனர். இச்சூழலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள் அங்கு வாழ்ந்த அப்பாவி மக்களை கூலித்தொழிலாளர்களாக கண்டிக்கு (இலங்கைக்கு) அழைத்துவந்தனர். தோட்டத் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டவர்கள். மிகக் குறைந்த கூலி வாங்கிக் கொண்டு ரப்பர் தேயிலை காப்பித் தோட…
-
- 0 replies
- 660 views
-
-
இருண்ட யுகம் மீளத் திரும்புகிறதா? கே. சஞ்சயன் / 2020 மே 23 கொரோனா வைரஸ் தொற்றுச் சூழலையும் அதைத் தடுப்பதற்காகக் கையாளப்படும் தனிமைப்படுத்தல் சட்டத்தையும், இராணுவ, பொலிஸ் அதிகாரங்களைவலுப்படுத்திக் கொள்வதற்காக, அரசாங்கம் பயன்படுத்துவதாகப் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுப்பதில், படைத்தரப்பும் பொலிஸாரும் காட்டிய ஆர்வம், வடக்கில் கொந்தளிப்பை ஏற்பத்தியது. கூடவே, அவர்கள் சட்டரீதியாகச் செயற்படுகிறார்களா என்ற விவாதத்தையும் கிளப்பி விட்டிருக்கிறது. தனிமைப்படுத்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம், யாருடைய கையில் இருக்கிறது; அதை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், யாருக்கு இருக்…
-
- 0 replies
- 688 views
-
-
கொழும்புத் தலைமைகளால் வடகிழக்கு மக்கள் ஆளப்படுகிறார்களா.? கொழும்புத் தலைமைகளால் வடக்கு கிழக்கு மக்கள் ஆளப்படுகின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. தென்னிலங்கையின் பிடியிலிருந்து கொழும்பின் பிடியிலிருந்து சிங்களத் தலைமைகளின் பிடியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என நினைக்கும் வடகிழக்கு ஈழத்தமிழ் மக்கள், கொழும்பு தமிழ் தலைமைகளால் ஆளப்படுகின்ற ஒரு சூழலுக்குள் செல்லுவது சரிதானா? கொழும்புத் தமிழ் தலைமைகள் தமிழர்களுக்கு எவ்வாறான நன்மைகளைச் செய்து உள்ளார்கள்? அவர்களால் வரலாற்றில் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை குறித்து ஆராய வேண்டிய ஒரு அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பை தனது சொந்த இடமாகக…
-
- 0 replies
- 357 views
-
-
-
சிறப்புக் கட்டுரை: நாத்திகமும், அரசியலும் மின்னம்பலம் ராஜன் குறை அரசியல் கட்சித் தலைவர்கள் இறை நம்பிக்கையுடன் இருக்கலாமா? அவர்களுக்குத் தனிப்பட்ட நம்பிக்கை இல்லாவிட்டாலும் பிறர் நம்பிக்கையை முன்னிட்டு பண்டிகை தினங்களில் வாழ்த்து சொல்வது, வழிபாட்டு செயல்பாடுகளில் பங்கேற்பது ஆகியவற்றை செய்யலாமா? தனிப்பட்ட முறையில் ஒருவர் கோயிலுக்குச் செல்வதும், ஒரு கோயில் கட்டும் பணியை ஒரு பாலம் கட்டுவது போல, அணைகளைக் கட்டுவது போல ஒரு நாட்டின் பிரதமர் தொடங்கி வைப்பதும் ஒன்றா? அரசுக்கும், மத அமைப்புகளுக்கும் இருக்க வேண்டிய இடைவெளி என்ன? இது போன்ற கேள்விகளை கவனமாக நாம் பரிசீலிக்க கற்க வேண்டும். சிலர் முற்போக்கு சிந்தனை என்பது கடவுள் மறுப்புடன் பிணைக்கப்பட்டது என நம…
-
- 0 replies
- 484 views
-
-
ஆவா குழு விவகாரம் தொடர்பிலான சர்ச்சை யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் வன்முறைகளில் ஈடுபட்டுவரும் ஆவா குழு தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சை நிலவி வருகின்றது. இந்தக் குழுவை யார் உருவாக்கினார்கள். அதன் நோக்கம் என்ன, அதன் பின்னணி என்ன என்ற விடயங்களில் தொடர்ந்தும் முரண்பாடான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. வடக்கில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஆவா குழுவானது கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய ஒரு சில மேஜர்தர அதிகாரிகளினால் உருவாக்கப்பட்டதாகும். இதன் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய …
-
- 0 replies
- 338 views
-
-
ஆளுங்கட்சியும், வடநாட்டுக் கட்சிகளும் தமிழினத்திற்கு எதிராக ஒரே நிலையில்... த.தே.பொ.க. / வெள்ளி, 22 மார்ச் 2013 11:24 நாட்டு மக்களுக்கு உறுதியளித்தவாறு ஒரு மெல்லிய திருத்தத்தைக் கூட சேர்க்க முனையாமல் எற்கெனவே தான் நீர்த்துப்போகச் செய்த அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் வாக்களித்தது. இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கையை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்ற போதிலும் அந்த மன்றத்தில் கூட இலங்கையில் நடந்தது தமிழினப்படுகொலை என்றோ, இப்போதைய தேவை 2008-2009 இறுதிகட்ட போரின் போது நடைபெற்ற மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள் மீது தற் சார்பான பன்னாட்டுப் புலன் விசாரணை என்றோ ஒரு தீர்மானம் நிறை…
-
- 0 replies
- 602 views
-
-
மரணங்களை நினைவுகூரல்: அரசியலும் அபத்தமும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் மூன்று தசாப்தகால யுத்தத்தில் இழக்கப்பட்ட உயிர்கள் ஒவ்வொன்றும் மதிப்பிற்குரியவை. அவ்வுயிர்களை நினைவுகூருவதற்கான உரிமையை, யாரும் ஒருவருக்கும் தரவும் முடியாது; மறுக்கவும் முடியாது. தனது தந்தையை, சகோதரனை, சகோதரியை, பிள்ளையை நினைவுகூர அன்புக்குரியவர்களுக்கு உரிமையுண்டு. அது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால், இந்த நினைவுகூரலை மய்யப்படுத்தி நடக்கும் அரசியலும் அதன் அபத்தமும், விரிவாகவும் விமர்சன ரீதியாகவும் பேசப்பட வேண்டியது. மிகுந்த உணர்வுபூர்வமான இந்த நினைவுகூரல்கள், இப்போது மே 18ஆகவும் மாவீரர் தினமாகவும் சுருங்கியுள்ளன. ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் வழித்தடத்தில், இழக்கப…
-
- 0 replies
- 695 views
-
-
-
- 0 replies
- 492 views
-
-
அவமானகரமான பெருந்தோல்வி (Fiasco) என்பது ஒரு கடுமையான சொல்லாக இருக்கக்கூடும். ஆனால், ஊடகவியலாளரைக் கடற்படை நடத்திய முறையைப் பார்க்கும்போது அது பொருத்தமான சொல்லாகவே இருக்கிறது எனலாம். இந்தப் பெருந்தோல்வி காரணமாக அதை விடவும் பெரிய பிரச்சினை அல்லது பெரிய தோல்வி சிறிது காலத்துக்கு மங்கலாகிப்போயிருக்கிறது. இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியின் தற்போதைய கட்டத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனக்கம்பனியொன்றுக்கு (China Merchants Ports Holding Company) 99 வருடங்களுக்கு வெறுமனே 112 கோடி அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு விடுவதென்பது நீண்டகால நோக்கில் நாட்டுக்குப் பாரிய விளைவுகளைக் கொண்டுவரும். இந்தப் பேரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அக்கறையற்ற முறையில், மேலோட்டமான முறைய…
-
- 0 replies
- 506 views
-
-
அரசியல் விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன் ஆயுதம் ஏந்தி விட்டோம்!!!
-
- 0 replies
- 792 views
-
-
-க. அகரன் சிய இனமொன்று மற்றுமொரு தேசிய இனத்தால் அடக்கப்படுகின்றபோது, அது, இன முறுகலாக வெளிப்பட்டு, பாரதூரமான விளைவுகளை அந்தத் தேசத்தில் விளைவிக்கும். அந்தவகையில், உலகில் பல்வேறு நாடுகளில் இனக்குழுமங்களுக்கு இடையிலான முறுகல் நிலை, யுத்தமாக மாறிய வரலாறுகள் பலவுண்டு. http://static2.tamilmirror.lk/assets/uploads/image_9bbb284860.jpg இதற்கு இலங்கை மாத்திரம் விதிவிலக்கல்ல. சுதந்திரத்தின் பின்னரான காலத்தில் இருந்து, தமிழ், சிங்களம் ஆகிய இரு தேசிய இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் சிங்களப் பெரும்பான்மையினரின் விட்டுக்கொடுப்பற்ற ஏகாதிபத்திய மன நிலையும், ஆயுதப்போராட்டத்தில் நிறைவுற்றிருந்தது. ஆயுதப்போராட்டம் மௌனித்ததன் பின்னரான காலச் சூழலில், அகிம்சை வழியிலான …
-
- 0 replies
- 468 views
-
-
பொருட்டாகுமா போராட்டங்கள் -ஆர்.ராம்- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பிலான தனது மீளாய்வு அறிக்கையை உத்தியோக பூர்வமாக சமர்ப்பித்து விட்டார். அதிகாரவரம்பின் அதியுச்ச எல்லைக்குச் சென்றுள்ள அவர் இலங்கையில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகளை வெளிப்படுத்தி ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் 47 உறுப்பு நாடுகளிடத்திலும் கையேந்தி நிற்கின்றார். ஆனால் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் ‘தேச நன்மை, தேசிய நன்மை’ என்ற வட்டத்துக்குள்ளேயே நின்று கொண்டு சுழன்று கொண்டிருக்கின்றன. இதற்கு முன்னுரிமை அளித்து தான் அவற்றின் தீர்மானங்களும், செயற்பாடுகளும் காணப்படுகின்றன…
-
- 0 replies
- 465 views
-
-
எனது கடந்த வாரக் கட்டுரை, �மகிந்த முன்னாலுள்ள தெரிவு � 13ஐ திருத்துவதா? ஒழிப்பதா?� என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது. ஆனால், பத்திரிகையின் முதல் பக்கச் செய்தித் தலைப்பு, 'சர்வஜன வாக்கெடுப்புக்கு மகிந்த அரசு தயாராகின்றது' என்று இடம்பெற்றிருந்தது. அதன் பக்கத்தலைப்பாக, '13ஐ இரத்துச் செய்யுமாறு நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல்' என்று பதிவாகியிருந்தது. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று முரணாகவும், வேறுபட்டதாகவும் இருப்பதை அவதானிக்கலாம். உண்மைதான்! 13வது திருத்தச் சட்டத்தை என்ன செய்வதென்று தெரியாமல் மகிந்த அரசு தடுமாறுவதன் வெளிப்பாடே இந்தச் செய்திகளும், அதன் தலைப்புகளும். அறிவித்தபடி தேர்தல் நடத்தவில்லையானால், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு ஆபத்தாக முட…
-
- 0 replies
- 609 views
-
-
Body Language எனப்படும் உடல் மொழி. இந்தத் தலைப்பை... எழுத தூண்டியது. மேலே... உள்ள படம் தான். இந்தியப் பிரதமர் மோடியும், ஸ்ரீலங்காவின் எதிர்க் கட்சித் தலைவருமான சம்பந்தன் சந்திப்பு. இதில்.... நான் அவதானித்த, உடல் மொழிகளை பட் டியலிடுகின்றேன். 1) ஒருவர் இரு கையையும் , குறுக்கே கட்டி வைத்திருந்தால்... (இடைவெளி வேண்டும், தூர நில்) 2) இருவர் பேசும் போது... தண்ணிப் போத்திலை, தூக்கினால்.... (பிச்சை எடுக்க, வழியில்லாமல்.. அரசியலுக்கு வந்திருக்கிறம் எண்டு அர்த்தம்.) 3) மோடியின் கால்கள்... ஓட்டிய படி சாதாரணமாக இருக்கின்றது. 4) சம்பந்தனின் கால்களில், விரிசல் உள்ளதை.... உன்னிப்பாக அவதானித்தால், கண்டு கொள்ள முடியும். இதில் கன …
-
- 0 replies
- 389 views
-
-
வடக்கு மாகாணத்தில் காணிகளை மக்களுக்கு மீளவழங்குவதற்கான பொறுப்பு யாரிடம்? [ செவ்வாய்க்கிழமை, 08 ஒக்ரோபர் 2013, 07:23 GMT ] [ நித்தியபாரதி ] வடக்கு மாகாணத்தின் பொது நிர்வாகத்தை சிறிலங்கா அரசாங்கம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. இங்குள்ள பெரும்பாலான நிலங்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன. இவ்வாறு The Sunday Leader ஊடகத்தில் அதன் பத்தி எழுத்தாளர் என்.சத்தியமூர்த்தி* குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. வடக்கு மாகாண சபையை நிர்வகிப்பதற்கு முதன் முதலாக தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மாகாண சபைக்கு கூடுதல் அதிகாரத்தைத் தருமாறு கோரமுடியாத நிலையில் தனது ஆட்சியை அமைக்க வேண்டியுள்ளது. மாக…
-
- 0 replies
- 605 views
-
-
‘ஒரு நாடு ஒரு சட்டம்’ : இப்போது ஏன்? November 2, 2021 — வி. சிவலிங்கம் — ராணுவ ஆட்சியை முழுமையாக்கும் சூழ்ச்சியா? சிங்கள பௌத்த தீவிரவாதியின் செயலணி தலைமை உணர்த்துவது என்ன? இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியொன்றினை உருவாக்கும் மறைமுக நோக்கில் தற்போது ‘ஒரு நாடு ஒரு சட்டம்’என்பதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிவதற்காக ‘பொதுபல சேன’ என்ற இனவாத அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 13 உறுப்பினர்களைக் கொண்ட இக் குழுவில் தமிழர்கள் எவரும் இடம் பெறவில்லை. இனவாதியான தேரர் தலைமையில் இயங்கப் போகும் இக் குழுவில் தமிழர்கள் யாராவது செயற்பட விரும்புவார்களா? என்பது ஆரம்ப நியமனங்களிலேயே புலப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 589 views
-