அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
தேசியக்கொடி கற்பிதமும் உண்மையும் இலங்கையின் தேசியக் கொடி பற்றிய சர்ச்சை சமகால அரசியல் அரங்கில் மேலோங்கிவிட்டிருப்பதை இந்த நாட்களில் கவனித்திருப்பீர்கள். இந்த போக்கின் பின்னால் உள்ளார்ந்திருக்கும் அரசியல் நலன்கள், பேரினவாதிகளின் பாசிச நலன்கள், அவர்களின் நீண்டகால குறுங்கால தந்திரோபாயங்கள், அவர்களின் திசைவழி என்பன குறித்து அலட்சியப்படுத்திவிட முடியாது. தேசியக் கொடி என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் அவ்வளவு அக்கறைக்குரிய ஒன்றாக இல்லாமல் போய் நெடுங்காலம் ஆகிவிட்டாலும் கூட அரசியல் தளத்தில் தேசியக்கொடியை சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிரான ஒரு வடிவமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை அலட்சியப்படுத்திவிட முடியாது. மேலும் சிங்கள பௌத்த பேரினவாதம் என்பது நிருவனமயப்பட்டது என…
-
- 0 replies
- 586 views
-
-
என்ன இப்படித் தலைப்பு எண்டு பாக்கிறியளா? சீலன் பற்றியும் எவ்வாறு ஆரம்பகாலகட்டங்களில் அரசியல் தெளிவற்று குழப்பகரமான நிலைப்பாடுகளோடு இருந்தவர்களால இயக்கம் குழப்பட்டது என்பதைப் பற்றியும் அவற்றை சீலன் எவ்வாறு எதிர் கொண்டான் என்பது பற்றியும் கூறி இருகிறார்.இதனைப் பார்க்கும் போது யாழ்க்களத்தில் சிலரது குழப்பகரமான தெளிவற்ற கருதாடல்கள் தான் நாபகத்தில வந்தது. நீங்களும் பாத்துவிட்டு உங்களது கருத்துக்களை எழுதுங்கள் நானும் எனது கருத்துக்களை எழுதுகிறேன்,முதலில உந்த வீடியோவை இணயத்தில இணைத்த வன்னியனுக்கு நன்றிகள். http://pooraayam.blogspot.com/ //இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியும் முதலாவது தாக்குல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்தவருமான லெப்.சீலன் அவர்களின்…
-
- 1 reply
- 1.3k views
-
-
தேசியத்தின் பெயரால் .. பதுக்கப்பட்ட சொத்துக்களும் பதுக்(ங்) கியவர்களும் தேசியத்தின் பெயரால் .. பதுக்கப்பட்ட சொத்துக்களும் பதுக்(ங்) கியவர்களும் தமிழீழ விடுதலைக்காக சேகரிக்கப்பட்ட பொது மக்களின் பணம் மீண்டும் விவாதப் பொருளாக மாறியிருக்கின்றது. தேசியத்தின் பெயரால் சேகரிக்கப்பட்ட பெருந்தொகைப் பணத்திற்கு என்ன நடந்தது என்ற விவாதம் 2009 முதல் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றது. சில வாரங்களுக்கு முன்னர் ரொரன்ரோவில் நடைபெற்ற நாடு கடந்த அரசாங்கத்தின் நிகழ்வின் போது உலகத் தமிழர் அமைப்பின் முன்னாள் தலைவர் ரெஜி அவர்கள் ஊடகவியலாளர் கிருபா கிரிசனுக்கு வழங்கிய நேர்காணலின் போது முக்கியமான சில கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்…
-
- 0 replies
- 1.3k views
-
-
தேசியத்தின் பெயரில் யாழில் கூடும் சில சுயநலவாதிகள் -புருஜோத்தமன் தங்கமயில் மக்களை முட்டாள்களாக்கி, அவர்களின் தலையில் மிளகாய் அரைப்பது என்பது, உலகம் பூராகவும் ஆட்சியாளர்களினதும் அரசியல்வாதிகளினதும் நிலைப்பாடுகளில் ஒன்றாக இருக்கின்றது. அதிலும், தேர்தல்களை இலக்கு வைத்து இயங்கும் அரசியல்வாதிகள், எவ்வளவுதான் தரம் தாழ்ந்த, ‘தகிடு தத்தங்களுக்கும்’ தயாராக இருக்கிறார்கள். இதற்கு அண்மைய உதாரணமாக, தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவைக் குறிப்பிடலாம். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், ஆரோக்கியமான எண்ணங்களையும் அதை நோக்கிய செயற்பாடுகளையும் வரவேற்பதற்கு, மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், அதற்கான வெளியை, அதிக சந்தர்ப்பங்களில் இல்லாமல் செய்வது, குறுகிய சுயநல நோ…
-
- 0 replies
- 801 views
-
-
தேசியத்தை பலப்படுத்த தவறிய தேசியப் பட்டியல் விவகாரம் August 14, 2020 தயாளன் தேசியப் பட்டியல் உறுப்பினர் என்ற விடயம் குறிப்பிட்ட இனங்களின், தேசியத்தின் நலன் என்பதை விட சொந்தக் கட்சிகளின் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் மருந்தாகவே உள்ளது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் சரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக இருந்தாலும் சரி. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தலைமைக்குக் குழி பறிக்கும் வாய்ப்பாகக் கருதுகின்றனர் சுமந்திரனும் சீறிதரனும். சுமந்திரன் கட்சியின் தலைமை மிகமோசமாகத் தோற்றுவிட்டது அதனை அகற்றியே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தலைகீழாக உள்ளார். சிறீதரன் கட்சிக்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதே எனக் கண்ணீர் வடிக்க…
-
- 0 replies
- 712 views
-
-
தேசியபட்டியல் அடிபிடிகள் என்.கே. அஷோக்பரன் / 2020 ஓகஸ்ட் 17 பௌத்தத்தில், ‘மோஹ’ (மாயை), ‘லோப’ (பேராசை), ‘தோஷ’ (வெறுப்பு) என, மூன்று விசங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. இவையே ‘தன்ஹா’” எனப்படும் அடங்கா ஆசையின் வேர்கள் என்று குறிப்பிடப்படுவதோடு, இவை துன்பத்தை விளைவிக்கும் முக்கிய காரணிகள் என்றும் பௌத்தம் போதிக்கிறது. பற்று, பேராசை ஆகியவற்றைப் பற்றிக் கூறும் பௌத்தம், “தீங்கு விளைவிக்கும் பற்றுகள், காட்டு மிருகங்களைப் போன்றவை; ஏனெனில், அவை தங்கள் சொந்த நலன்களுக்காக மட்டுமே செயற்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த இயலாது” என்கிறது. உலகப் பற்றுகளைத் துறத்தல் பற்றிப் போதித்த கௌதம புத்தரின் வழிநிற்பதாக உரைக்கும் பௌத்த துறவிகள் முதல், பௌத்தத்தின் காவலர்க…
-
- 0 replies
- 488 views
-
-
தேசியப் பட்டியலும் கதைகளும் ஜீன்ஸ் திரைப்படத்தில் ‘அதிசயங்கள்’ பற்றி ஒரு பாடலுள்ளது. தனக்கு அதிசயமாகப் பட்டவற்றையெல்லாம் கவிஞர் வைரமுத்து அந்தப்பாடலில் பதிவு செய்திருப்பார். ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம், வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம், துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்’ என்று, அந்தப் பாடல் நீண்டு செல்லும். வைரமுத்து எழுதிய பிறகுதான், தாம் கவனிக்கத் தவறிய அதிசயங்களை நினைத்துப் பலர் ஆச்சரியப்பட்டனர். ஆனால், இந்த அதிசயங்கள் போல், நமது அரசியலரங்கில் நடந்திருக்கிறது. அது - அட்டாளைச்சேனைக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, முஸ்லிம் காங்க…
-
- 0 replies
- 458 views
-
-
தேசியப் பட்டியல் எம்.பி. நியமனமும் தமிழரசின் உட்கட்சி ஜனநாயகமும் August 13, 2020 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த ஒரே ஒரு தேசியப்பட்டியல் எம்.பி. பதவிக்கு அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிக்குள் பெரும் பூகம்பத்தை இது ஏற்படுத்தியிருக்கின்றது. தன்னிச்சையாக எவ்வாறு இவ்வாறான ஒரு நியமனத்தை தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் வழங்க முடியும்? என பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கொதித்துப்போயிருக்கின்றார்கள். கலையரசனுக்கு நியமனம் வழங்கப்பட்டமை சரியா? தவறா? என்பதைவிட, அது வழங்கப்படுவதற்குக் கையாளப்பட்ட முறை ஜனநாயக ரீதியானதா என்பதுதான் இப்போது எழும் முக்கியமான கேள்வி. பங்காளிக் கட்சித் தலைவர்கள் கொதித்துப்…
-
- 0 replies
- 566 views
-
-
தேசியப் பொங்கல் விழா? அரசுத்தலைவர் மைத்திரி கடந்த மாதம் வலி வடக்கில் அமைந்திருக்கும் கோணப்புலம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்தி;ற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன் போது அவர் இடம்பெயர்ந்த மக்களின் தற்காலிகக் குடியிருப்புகளுக்குள் சென்று அவர்களோடு அருகிருந்து உரையாடியும் உள்ளார். அவருடைய வருகையின் பின் அந்த முகாமில் உள்ள சிறுவர்கள் அவரை ‘மைத்திரி மாமா’ என்று அழைப்பதாக இடம்பெயர்ந்தோர் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு செயற்பாட்டாளர் சொன்னார். மைத்திரி விஜயம் செய்த அந்த வீட்டின் குடும்பத் தலைவி அவருடைய வருகை பற்றிக் கூறும்போது அதை ஏதோ கடவுளின் வருகை போல வர்ணித்ததாகவும் மேற்படி செயற்பாட்டாளர் சொன்னார். அவர் இந்த வழியால்தான் வந்தார். இங்கேதான்…
-
- 1 reply
- 813 views
-
-
தேசியப்பட்டியல்: ஓர் அதிர்ஷ்ட இலாபச் சீட்டு - முகம்மது தம்பி மரைக்கார் அரசியலின் அகராதி விசித்திரமானது; பொது வெளியில் நாம் கண்டு, கேட்டு, கற்றறிந்த சொற்களுக்கு, அங்கு அர்த்தம் வேறாகும். கழுத்தறுப்பு, துரோகம் போன்றவற்றுக்கு அரசியல் அகராதியில் ‘ராஜ தந்திரம்’ என்று பெயராகும். வாக்கு மாறுதல், பொய் என்று அங்கு எதுவுமில்லை. அவற்றினை ‘சாமர்த்தியம்’ என்றுதான் அரசியல் அகராதி விவரிக்கிறது. சாதாரண குடிமகனின் வலிகளுக்கும்,கண்ணீருக்கும் அரசியல் அகராதியில் அர்த்தங்கள் எவையுமில்லை. பொதுத் தேர்தல் நடந்து 16 மாதங்கள் கடந்து விட்டன. முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, யாரை நியமிப்பது என்கிற விவகாரத்துக…
-
- 0 replies
- 363 views
-
-
ரூபன் சிவராஜா ‘பொருண்மை தெரிதலுஞ் சொன்மை தெரிதலுஞ் சொல்லி னாகும் என்மனார் புலவர்’ (தொல். 158) ‘மொழி’ இரண்டு அடிப்படைக் கூறுகளின் வழிநின்று செயல்படக்கூடியது என்று வரையறை செய்கிறது தொல்காப்பியம். ஒன்று சொன்மை (சொல்) மற்றையது பொருண்மை (பொருள்). ஒலி, சொல், வாக்கிய அமைப்பு முறைகளை ஆதாரமாகக் கொண்டு சொன்மை வெளிப்படும். பொருண்மை என்பது, சொல்லின் பொருளைக் குறிக்கும் தன்மையைச் சுட்டுகிறது. அதேபோல் சொற்கள் அனைத்துமே பொருளைக் குறிக்கும் தன்மையும் - உணர்த்தும் தன்மையும் வாய்ந்தவை என்பதை, ‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’ (தொல். 157) என்கிறது தொல்காப்பியம். சொல்லுக்கும் பொருளுக்குமான தொடர்பு தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தில் நுணுக்கமாகவும் விரிவாகவும் விளக…
-
- 1 reply
- 277 views
- 1 follower
-
-
தேசியமென்னும் வெற்றுக் கூடு – அன்றும் இன்றும் ? - யதீந்திரா அரசியலில் ஒரு கூற்றுண்டு. அதாவது, பேருந்தை தவறவிடுதல். வாய்ப்புக்கள் கிடைக்கின்ற போது, அதனை கெட்டியாக பற்றிக்கொள்ள வேண்டுமென்பதுதான் இந்தக் கூற்றின் பொருளாகும். தமிழில் இதனை காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளுதல் எனலாம். ஒரு மேற்குலக நாடொன்றின், தூதுவருடனான கலந்துரையாடலொன்றின் போது, இதனை நான் குறிப்பிட்டேன், அவர் திரும்பக் கூறினார், நீங்கள் பேருந்தை தவறவிட்டது மட்டுமல்ல, பேருந்திலிருந்து பாய்ந்துமிருக்கின்றீர்கள். திபெத் ஆண்மீகத் தலைவர் தலைலாமா கூறுவார். அதிஸ்ட தேவதை எப்போதாவதுதான் கதவை தட்டுவார். அவர் கதவை தட்டும்போது தாமதிக்காமல் கைகை பிடித்து, உள்ளுக்குள் இழுத…
-
- 0 replies
- 768 views
-
-
சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு வார்த்தை சமஷ்டி எனலாம். அதுபோலவே தமிழர்கள் மத்தியில் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத ஒரு வார்த்தை தேசியம் எனலாம். ஈழத் தமிழர்கள் மத்தியில் இரண்டு கட்சிகளின் பெயர்களில் தேசியம் என்ற வார்த்தை உண்டு. இப்பொழுது மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போதும் தேசியம் என்ற வார்த்தை அடிக்கடி பிரயோகிக்கப்படுகின்றது. இதில் கூட்டமைப்பில் உள்ள தீவிரமானவர்கள் போலத் தோன்றுபவர்களும் தேசியம் பற்றிக் கதைக்கிறார்கள். மிதமானவர்கள் போலத் தோன்றுபவர்களும் தேசியம் கதைக்கின்றார்கள்.குறிப்பாக இணையத் தளப் பிரசாரங்களில் ''தேசியம் வெல்ல வாக்களிப்போம்' என்றெல்லாம் சுலோகங்கள் வருகின்றன. சில மாதங்களிற்கு முன்பு எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நினை…
-
- 25 replies
- 1.9k views
-
-
தேசியம் எனப்படுவது பல்வகைமைகளின் திரட்சி: March 10, 2019 மன்னார்ச் சம்பவத்தை – தமிழ் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவது – நிலாந்தன்… 2009 மே மாதத்தை உடனடுத்து வந்த காலகட்டத்தில் குரலற்ற தமிழ் மக்களின் சன்னமான ஒரு குரலாகத் திகழ்ந்தவர் முன்னால் மன்னார் ஆயரான வண. ராயப்பு யோசப். அக்காலகட்டத்தில் வேறு எந்த மதத் தலைவரும் துணிந்து பேசாத விடயங்ககைள அவர் பேசினார். தமிழ் மக்களின் நவீன அரசியலில் அவரைப் போல வேறெந்த மதத்தலைவரும் தீவிரமாகக் குரல் கொடுத்ததில்லை. 2009ற்குப் பின்னர் ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டிய சில ஆளுமைகளில் ஒருவராக ஆயர் ராயப்பு ஜோசப் காணப்பட்டார். இப்போதிருக்கும் திருகோணமலை மறை மாவட்ட ஆயரும் பாதிக்க…
-
- 0 replies
- 587 views
-
-
தேசியம் என்றால் என்ன என்று கேட்கும் ஒரு தேர்தல் களம்? நிலாந்தன். adminNovember 10, 2024 பிபிசி தமிழ்ச்சேவை கடந்த 7 ஆம் தேதி ஒரு கட்டுரையைப் பிரசுரித்திருந்தது. அக்கட்டுரை வன்னி தேர்தல் தொகுதியில் உள்ள உள்ள அரசியல்வாதிகளையும் பொது மக்களையும் நேர்கண்டு எழுதப்பட்டுள்ளது. அதில் தேசியம், சமஸ்டி, 13 ஆவது திருத்தம் போன்ற வார்த்தைகளின் அர்த்தம் அனேகமானவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதில் நேர்காணப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் அதுதொடர்பாக முழுமையான விளக்கம் இருக்கவில்லை. அதுபோலவே சுமந்திரனின் பிரச்சாரக் காணொளி ஒன்றில் அவர் தேசியம் என்றால் என்ன என்று கேட்கிறார். அந்த வார்த்தையை பயன்படுத்தும் பலருக்கு அதன் அர்த்தம் தெரியாது என்ற பொருள்பட கருத்துரைக்கிறார்.மேலும் அவர…
-
- 0 replies
- 361 views
-
-
தேசியம், ஐக்கியம், தமிழர் பலம் -இலட்சுமணன் தேர்தல் எனும் வசந்த காலம், அரசியல் வானில் உதயமாகத் தொடங்கியதன் வெளிப்பாடுகளாகத் தமிழ் அரசியல்வாதிகளின் கருத்துகள், விவாதங்கள், அறிக்கைகள் மெல்லமெல்ல மேலௌத் தொடங்கியுள்ளன. ‘வேதாளம், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது போல்’ தமிழர்களின் உரிமை, தமிழர்களுக்கு இடையேயான ஐக்கியம், தமிழர் பலம் எனப் பல்வேறு கோசங்கள், அரசியல்வாதிகளால் வெளிப்படுத்தப்படுகின்றன. அரிதாரம் பூசிய அரசியல் நடிகர்களின் கூத்துகளையும் பம்மாத்துகளையும் வரலாற்றுச் சாதனைகளாகவும் தமிழ் மக்களின் வரலாறாகவும் பார்க்கும் காலமாகவே தற்போதைய நிலைமைகள் அமைந்துள்ளன. சுதந்திரத்துக்குப் பின்னர் இருந்த அரசியல் வீச்சும், போராட்ட குணமும் தமிழ் அரசியல் தலைமை…
-
- 0 replies
- 820 views
-
-
தேசியவாத எழுச்சியின் பின்னாலுள்ள செய்தி - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலகம் முழுவதிலும், தேசியவாதத்தைக் கக்கும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சி, அச்சம் கொள்ள வைக்கிறது; இந்த அச்சத்தை, பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலிலும் பார்க்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறான வாக்கியங்களை, அண்மைக்கால அரசியல் அலசல்களில் கண்டிருக்க முடியும். இந்த அச்சமொன்றும், பொய்யானதோ அல்லது தவறானதோ கிடையாது. இது, தற்போது நடந்து கொண்டிருக்கும் யதார்த்தத்தையே வெளிக்காட்டுகிறது. இந்த யதார்த்தத்தை வெளிப்படுத்தும் கண்ணாடியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த, பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது சுற்று வாக்களிப்பு அமைந்தது. இதில், கடும்போக்கு வலதுசாரித்துவத…
-
- 1 reply
- 752 views
-
-
வியூகம் இதழில் வந்த தேசியவாதம் தொடர்பான நீண்ட கட்டுரையொன்று வாசிக்கக் கிடைத்தது. யாழ் கள உறவுகளுடன் பகிர்ந்து கொள்கின்றேன். குறிப்பு: கட்டுரை இணையத்தில் காணப்படவில்லை. தேசியவாதம் குறித்த சில கருத்துக்கள்.... தேசபக்தன். இந்த குறிப்பானது நாவலன் அவர்கள் ~இனியொரு| என்ற இணையத்தளத்தில் எழுதிய "ஈழத் தமிழ் பேசும் மக்கள் தனித்தேசிய இனம்?" என்ற கட்டுரை குறித்தே எழுதப்படுகிறது. இந்த கட்டுரையானது உலகமயமாதல, தேசங்களின் தோற்றம், தேசங்களை வரையறை செய்வது தொடர்பான பிரச்சனைகள், ஈழத் தமிழர் தொடர்பான சிக்கல்கள் ...... இப்படி பல விடயங்களைப் பேசிச் செல்கிறது. எனது அபிப்பிராயத்தில இந்த கருத்தாக்கங்கள் எல்லாம் முறையாக, கோர்க்கப்பட்டு ஒரு முழுமையான வாதத்தை முன்வைக்கத் தவற…
-
- 22 replies
- 11.1k views
-
-
-
- 1 reply
- 756 views
-
-
தேயிலை தேசத்து ராணி குடிக்க மறந்த தேநீர் குவளை ஒருபுறமிருக்க, கூட்டிய வாசல் பாதியில் நின்றிருக்க, அணிய மறந்த செருப்பும் கதவோரம் காத்திருக்க, பாவம்...! அணிய மறந்தாளோ? அல்லது, அடுத்த பொங்கல் வரை வேண்டுமே என்று அணிய மறுத்தாளோ? என் தேயிலை தேசத்து ராணி..... பெருந்தோட்ட பகுதி பெண்களின் பிம்பம் நிழலாடுகிறது இவ்வரிகளில்.'பெண்' என்பவள் எப்போதுமே போற்றப்பட வேண்டியவள்தான். பிறப்பின் மகத்துவத்தை உணர்த்த அவள் ஏற்க வேண்டிய பாத்திரங்களோ ஏராளம். தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அரசியல் அரங்கில் பெண்களின் அங்கத்துவம் பற்றி பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலத்தில் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செ…
-
- 0 replies
- 560 views
-
-
தேயிலைச் சாயம்’: பேசப்படாத மறுபக்கம் பா.நிரோஸ் மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை சிறந்த முறையில் முன்னேற்றுவதற்காகவும் கொள்கை ரீதியான கலந்துரையாடலை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் ‘தேயிலைச் சாயம்’ என்கிறப் புகைப்படக் கண்காட்சி, கொழும்பு லயனல் வென்ட் கலையகத்தில், கடந்த வாரத்தின் இறுதியில் நடைபெற்றது. மலையக மக்களின் வாழ்வியலை, புகைப்படங்களின் வாயிலாக சர்வதேசத்துக்கு உணர்த்திய மிகச் சிறந்த ஓர் ஆவணப்படமாக இந்தக் கண்காட்சி அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினூடாக, ஊவா சக்தி நிறுவனவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்புகைப்படக் கண்காட்சி, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களிலும் நடைபெற்றிருந்தது. ஓகஸ்ட் …
-
- 0 replies
- 657 views
-
-
தேரர்கள் முன்னிலையில் கை கட்டி நிற்கும் சட்டம், ஒழுங்கு! நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை கண்டித்தும், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென்றும், முழு முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதிகள் போன்று சித்திரித்துக் கொண்டிருக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும், முஸ்லிம்களின் மீது மற்றுமொரு வன்முறை கட்டவிழ்த்து விடக் கூடாதென்பதற்காகவுமே முஸ்லிம் அமைச்சர்கள் தங்களின் பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளார்கள். முஸ்லிம் அமைச்சர்களின் இந்த முடிவு ஆளும், எதிர்த் தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா சிங…
-
- 0 replies
- 533 views
-
-
தேரும் தேசியமும் - நிலாந்தன் தென்மராட்சியில் வரணியில் ஒரு கோயிலில் கனரக வாகனத்தின் உதவியோடு தேர் இழுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் போதியளவு ஆட்கள் இல்லாத காரணத்தால், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டியிருந்ததாகவும், அவ்வாறு வேறு சமூகங்களுக்கு, அதாவது சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க விரும்பாத ரீதியில் நிர்வாகம் தேரை இழுப்பதற்கு கனரக வாகனத்தைப் பயன்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இச் சம்பவம் இணையப் பரப்பில் குறிப்பாக முகநூலில் கடும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே அண்மையில் சிவசேனா என்ற ஓர் அமைப்பு பசு வதை தொடர்பாக சர்ச்சையைக் கிளப்பிய அதே தென்மராட்ச…
-
- 0 replies
- 814 views
-
-
-
- 0 replies
- 647 views
- 1 follower
-
-
இலங்கைத் தேசியம் என்ற நீரோட்டத்தில் தமிழ் மக்களும் இணைந்து விட வேண்டும் என்பது இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உள்ளார்ந்த எதிர்ப்பார்ப்பாகும். அதற்கான இடத்தை இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி விட்டது என்ற நம்பிக்கையும்; உண்டு. 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டதால் மஹிந்த ராஜபக்ச வெற்றியடைந்தார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிதத்தால் மஹிந்த தோல்வியடைந்தார். -அ.நிக்ஸன்- 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டதால் மஹிந்த ராஜபக்ச வெற்றியடைந்தார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிதத்தால் மஹிந்த ராஜபக்ச தோல்…
-
- 0 replies
- 477 views
-