அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9224 topics in this forum
-
சிறிலங்காவை எதற்காக அரவணைக்க வேண்டும்? – ஒரு அமெரிக்கப் பார்வை Feb 06, 2015 | 7:47 by நித்தியபாரதி in கட்டுரைகள் அமெரிக்க-சிறிலங்கா உறவுகளை மீளவும் நிறுவுவதற்கான திட்டங்கள் எதனையும் அமெரிக்கா முன்னெடுக்காது விட்டால், 21 மில்லியன் மக்களைக் கொண்ட கேந்திர முக்கியத்துவம் மிக்க இலங்கைத் தீவுடன் நெருக்கமான உறவைப் பேணுவதற்கான வாய்ப்பை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டியேற்படும். இவ்வாறு The Wall Street Journal இதழில், மூத்த ஆய்வாளர் லிசா கேட்டிஸ் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க இராஜாங்க மற்றும் பாதுகாப்புத் திணைக்கள முன்னாள் உயர் அதிகாரிகளான ரிச்சர்ட் ஆர்மிரேஜ் மற்றும் காரா பியூ ஆகியோருடன் இணைந்து லிசா கேட்டிஸ் எழுதியுள்ள இந்தக் கட்டு…
-
- 0 replies
- 336 views
-
-
இனி அரசியல் கைதிகளின் விடுதலைக்காக - வ.ஐ.ச.ஜெயபாலன் Congratulations TNA for saving the constitution by unconditional voting. Now TNA has to save the Tamil political prisoners by conditional voting. . I appeal to my JVP comrades and the other progressive Sinhalese comrades in the Sri Lankan parliament to support the TNA's efforts for the release of the Tamil political prisoners. இதுவரை நடந்தது நன்றாகவே நடந்துள்ளது. இலங்கை குறைந்த பட்ச ஜனநாயகம் அரசியல்சாசனம் காப்பாற்றபட்டிருக்கு. இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பு இல்லாமல் சாத்தியபட்டிருக்காது. இதற்காக தமிழர் தலைவர் சம்பந்தனை வாழ்த்துகிறேன்.இனி மறு தேர்தலை தடுக்க தனது அ…
-
- 0 replies
- 760 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலும், மைத்திரி கிளப்பிய சர்ச்சைகளும் – நிலாந்தன். கோத்தாபய ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அது அவருடைய குடும்பத்துக்குள்ளேயே போதிய வரவேற்பைப் பெறவில்லை என்று தெரிகிறது. அவர் தன் நிலைப்பாட்டில் மாறவில்லை என்பதை அந்தப் புத்தகம் நிரூபிப்பதாக அதை வாசித்தவர்கள் கூறுகிறார்கள். அதைவிட முக்கியமாக 2022 ஆம் ஆண்டில் தற்காப்பு நிலையில் காணப்பட்ட அவர் இப்பொழுது தன்னை நியாயப்படுத்தும் ஒரு வளர்ச்சிக்கு வந்துவிட்டார் என்பதுதான் அந்த நூலில் உள்ள செய்தி. அதாவது ராஜபக்சக்கள் தற்காப்பு நிலையில் இருந்து வலிந்து தாக்கும் ஒரு நிலையை நோக்கி முன்னேறி வருகிறார்கள் என்று பொருள். அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பஸில் தெரிவித்த கருத்துக்களும் அதைத்தான்…
-
- 0 replies
- 363 views
-
-
தமிழர் பொதுவேட்பாளர் ஒரு பம்மாத்து May 3, 2024 — கருணாகரன் — ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தரப்பிலிருந்து தமிழ்ப்பொதுவேட்பாளராக ஒருவரை நிறுத்துவதற்கான ஒரு தரப்பினரின் “தவறான முயற்சி” தடுமாற்றத்துக்குள்ளாகியுள்ளது. மேதினத்துக்கு முதல்நாள் (30.04.2024) வவுனியாவில் பொதுவேட்பாளரைப் பற்றி இந்தத் தரப்பு ஒரு கலந்துரையாடலை வலு உற்சாகமாகச் செய்திருந்தது. “தமிழ்ச்சிவில் சமூகத்தினர்(?)” என்ற பேரிலும் அரசியல் ஆய்வாளர்கள், ஊடகத்துறையினர் என்று தம்மைக் கருதிக் கொள்வோரும் இதில் இணைந்துள்ளனர். மேலும் சில மதகுருக்களும் இணைக்கப்பட்டிருந்தனர். இதற்குப் பின்புலமாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடக நிறுவனமொன்று செயற்பட்டு வருகிறது. அதுவே “ம…
-
- 0 replies
- 436 views
-
-
கன்னியா: அடிபணியவைத்து அபகரிக்கப்படுகிறதா? Editorial / 2019 ஜூலை 18 வியாழக்கிழமை, மு.ப. 06:29 Comments - 0 -இலட்சுமணன் திருகோணமலை, கன்னியாவில் பிள்ளையார் கோவிலை ஆக்கிரமிக்க முற்படும் பௌத்த பேரினவாதத்துக்கு எதிராகத் தமிழர்கள் பெருந்திரளாக நேற்று முன்தினம் (16) அணிதிரண்டிருந்தனர். பாதுகாப்புத் தொகுதியினரின் பல்வேறு கெடுபிடிகள், சூழ்ச்சிகள் மற்றும் நீதிமன்றத் தடை உத்தரவுக்கு மத்தியில், இனமத வேறுபாடுகள் கடந்து, தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டிருந்தமை புறமொதுக்கி விடக்கூடிய செய்தி அல்ல! இலங்கையின் பிரபல சுற்றுலாத் தலமாகக் காணப்படும் கன்னியா வெந்நீரூற்றுத் தலம், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குள் இருப்பதுடன், பட்டினமும் சூழலும் நகர சபையே…
-
- 0 replies
- 1.1k views
-
-
ரணிலின் ஒப்பரேசன் II நிர்மானுசன் பாலசுந்தரம் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் சிறிலங்காவின் பிரதமராக நான்காவது தடவையாக பதவியேற்று எதிர்வரும் சனவரி 8ம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியடைகிறது. டிசம்பர் 2001ல் ரணில் மூன்றாவது தடவையாக பதவியேற்ற பின், தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்காக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மிக நுட்பமான முறைகளில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். சர்வதேச பாதுகாப்பு வலை திட்டத்தின் ஊடாக புலிகளை உலகளாவிய ரீதியில் பலவீனப்படுத்திய ரணில், கருணா என அழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களை தனது வலையில் சிக்கவைத்ததனூடாக புலிகளை உள்நாட்டில் பலவீனப்படுத்தினார். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா நீக்கப்பட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
அண்மையில் இந்தக் காணொளி கண்ணில் பட்டது. 2015 இல் ஐக்கியநாடுகள் சபையினால் இலங்கைதொடர்பாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றிய கலந்துரையாடல் ஒன்று இந்திய ஆங்கிலமொழித் தொலைக்காட்சியொன்றில் நடந்தது. இதில் இந்தியாவின் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி பார்த்தசாரதி, தில்லி பேராசிரொயர் சகாதேவன், பத்திரிக்கையாளர் சாஸ்த்திரி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அடங்கலாக அனைவரும் போர்க்குற்அங்கள் தொடர்பாக பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும் என்ற கருத்தில் வாதிட, பார்த்தசாரதி மட்டும் இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படும் வகையில் தாம் எதையும் செய்யக்கூடாதென்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறான். இவன்போன்ற தமிழர்மேல் காழ்ப்புணர்வுகொண்ட பிராமணியர்களால் நாம் இவ்வளவுகால…
-
- 0 replies
- 795 views
-
-
விமான நிலையமா மீள்குடியேற்றமா முன்னுரிமைக்குரியது? நிருபா குணசேகரலிங்கம்:- 14 பெப்ரவரி 2016 பலாலி விமான நிலையத்தை தரம் உயர்த்துவதற்காக வடக்கில் உள்ள பிரதான ஆழ்கடல் மீன்பிடித்துறைமுகமான மயிலிட்டி பகுதியை சுவிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் மக்களின் கடும் எதிர்ப்பினைச் சந்தித்து நிற்கின்றது. இராணுவ நடவடிக்கைகள் மூலம் கடந்த 26 வருடங்களுக்கு முன்னதாக தமது வாழ்விடங்களை விட்டு வலிகாமம் வடக்கு மக்கள் முற்று முழுதாக வெளியேற்றப்பட்டனர். இவ்வாறாக வெளியேற்றப்பட்ட மக்கள் தம்மை தமது நிலங்களில் அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றனர். இப் போராட்டங்களில் எல்லாம் ஏனைய பிரதேசங்களைப் போல மீள்…
-
- 0 replies
- 538 views
-
-
இனக்கலப்பு நல்லிணக்கத்திற்கான உத்தியா? நிருபா குணசேகரலிங்கம்:- 28 பெப்ரவரி 2016 இனக் கலப்புத் திருமணங்கள் நல்லிணக்கத்திற்கான வழிமுறை என வடக்கிற்கான புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அவர், தனது பதவியேற்பின் பின் ஆற்றிய கன்னிப் பேச்சு ஒன்றில் இவ்வாறு தெரிவித்திருக்கின்றமை பலரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இது தமிழ் மக்களிடத்தில் ஓருவகை சலனத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இவ் உரைக்கான பதிலளிப்புக்கள்; அரசியல் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் கிளம்பியிருந்ததனை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறானதோர் சூழ்நிலையில் இன நல்லிணக்கமும் கலப்புத் திருமணமும் என்ற சிந்தனை ஓர் அரசியல் தீர்வை எதிர்பார்த்து பயணிக்கும் இலங்…
-
- 0 replies
- 517 views
-
-
செம்மணியின் பின்னணியில் ஐநா கூட்டத் தொடர் – நிலாந்தன். ஐநாவின் அறுபதாவது கூட்டத்தொடர் இம்மாதம் எட்டாம் தேதி அதாவது நாளை ஆரம்பமாகிறது. இக்கூட்டத் தொடரில் அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்வதற்கு இடமில்லை.ஏனென்றால் ஈழத் தமிழர்களின் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் ஐநா அதிசயங்களும் அற்புதங்களும் நிகழ்வதற்குரிய ஒரு களம் அல்ல.போராடும் மக்கள் மத்தியில்தான் அதிசயங்களும் அற்புதங்களும் நிகழும். எனினும், எல்லாவிதமான வரையறைகளோடும், தமிழ் மக்களுக்கு என்று கடந்த 16 ஆண்டுகளாக திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஒரே அனைத்துலக அரங்கு மனித உரிமைகள் பேரவைதான். அந்த மனித உரிமைகள் பேரவைக்குள் காலை ஊன்றிக் கொண்டுதான் தமிழ் மக்கள் அடுத்த கட்டத்திற்கு பாயலாம். ஐநாவுக்கு கூட்டுக் கடிதம் எழுதும் ஒரு சந்திப்…
-
- 0 replies
- 120 views
-
-
உடைந்த வாக்குறுதிகளும் மையப்படுத்தப்பட்ட அதிகாரமும்: மாகாண சபை விவகாரத்தில் NPPயின் தவிர்ப்பு October 31, 2025 — ராஜ் சிவநாதன் — சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பெயரில் வெளியான ஒரு பதிவு பலரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரியதாக இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்ட சில கருத்துகள் உண்மையை பிரதிபலித்தன. அவர் வடக்கில் மீண்டும் ஒரு போர் தேவையில்லை என்றும், மாகாண சபை (PC) அமைப்பு தமிழர்கள் தாமே விரும்பிய ஒன்றாகும் என்றும் கூறியதாக தெரிகிறது. மேலும், அந்த அமைப்பில் குறைகள் இருந்தால் அவை திருத்தப்பட வேண்டும் என்றும், தேவையான முன்னேற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. தனது ஜனாதிபதி தேர்தல் பிரசார…
-
- 0 replies
- 129 views
-
-
-
- 0 replies
- 395 views
- 1 follower
-
-
மூன்று விடயங்கள் தமிழ் மக்களை உறுத்திக்கொண்டிருக்கின்றன. நிலைத்து நிற்கக் கூடிய நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்குமா......, எப்போது கிடைக்கும்? யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும், கொலைகளுக்கும், ஆட்களை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கும், சிறைச்சாலைகளில் அநியாயமாக வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் அனுபவிக்கின்ற வேதனைகளுக்கும் உண்மையான நீதி கிடைக்குமா? காணி அபகரிப்புக்கும், பௌத்த மேலாதிக்க ஊடுருவலுக்கும் முடிவேற்படுமா......, எந்த வகையில் யார் அந்த முடிவை ஏற்படுத்துவது?.....என்று, இந்த விடயங்கள் இன்று எரியும் பிரச்சினையாக தமிழ் மக்கள் மனங்களில் …
-
- 0 replies
- 409 views
-
-
உண்மையிலிருந்து வெகுதொலைவில் ஜனாதிபதி்; நாட்டில் நல்லிணக்கம் எவ்விதம் சாத்தியமாகும்? இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சம உரிமைகளுடனும், ஐக்கியத்துடனும் வாழ்வதாகவும், தாம் நாட்டைப் பிரிக்கும் சதிகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என்ற ஜனாதிபதியின் கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.அவரது கருத்து தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும், உண்மையிலிருந்து வெகு தொலைவில் நிற்பதாகவும்மே உணரமுடிகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாம் இப்போது அந்நிய சக்திகளின் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது,இதிலிருந்து…
-
- 0 replies
- 541 views
-
-
வடகிழக்கில் பௌத்த விகாரைகள், புத்தர்சிலைகள், இராணுவத்திற்கு இணையானவை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- கடந்த சில நாட்களின் முன்னர், ஈழத்தில் மத முரண்பாடுகளைத் தூண்டும் சில நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்கில் பெத்த விகாரைகளை அமைத்து தங்கியுள்ள சில பிக்குகளே வன்முறையை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இலங்கைத் தீவில் இரத்தம் சிந்துவதற்குக் காரணமாக இருந்த பேரினவாத மதவாத மேலாதிக்க வன்முறைவெறி, அழிவற்று, பலமாகவும் சட்டப் பாதுகாப்போடும் வன்முறைப் பசியோடும் இருக்கிறது என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அண்மையில் மட்டக்களப்பு நகரில் மத – இனக் கலவரம் ஒன்று ஏற்பட…
-
- 0 replies
- 389 views
-
-
காலத்தின் குரலும் கழுத்து நெரிக்கும் கரங்களும் பா.செயப்பிரகாசம் ஞாயிறு, 05 மே 2013 விடுதலைப் புலிகள் இறுதி வான் தாக்குதலை நடத்திய நாள் பிப்ரவரி 29, 2009 . தாக்குதல் நடத்தப் பயன்பட்டவை இரு மென் ரக விமானங்கள்; வீசிய இரு குண்டுகளின் எடை 56 கிலோ; அதற்கு மேல் அந்த விமானங்களால் எடுத்துச் செல்ல முடியாது. மக்கள் பெருமளவு கூடும் இடங்களில் வீசினாலும் மூன்று பேருக்கு மேல் உயிரிழப்பு நிகழாது. "இராணுவ நெருக்குதல் அதிகமாகிவிட்டது; இனி அவைகளை அங்கு வைத்திருக்க முடியாது" என்று கருதி, விமானங்ளை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக தாக்குதலைத் திட்டமிட்டார்கள். பிப்ரவரி 29- நள்ளிரவு. வீதிகளில் மக்கள் நடமாட்டமோ, அலுவலகங்களில் பணியாற்றுபவர்களோ இல்லாத நேரம். கொழும்பின் கொம்பனித் தெ…
-
- 0 replies
- 551 views
-
-
ஐ.நா தீர்மானத்தின் உத்தேச வரைபு பொறுத்து தமிழ்க் கட்சிகளை ஏன் ஒன்றிணைக்க முடியவில்லை? - நிலாந்தன் கடந்த ஜனவரி மாதம் மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்து ஒரு பொதுக்கடிதத்தை தயாரித்து ஐநாவுக்கு அனுப்பிவைத்தன. அதில் கூட்டமைப்பு எதுவித எதிர்ப்புமின்றி பங்குபற்றியது. அக்கட்சியின் பேச்சாளர் மூன்று சந்திப்புகளிலும் மிகவும் “கூலாக” இருந்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். விக்னேஸ்வரனின் கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் பல்வேறு விடயங்களில் ஆளுக்காள் மோதிக்கொண்ட பொழுது கூட்டமைப்பு ஒரு அப்பாவி போல தான் எல்லாவற்றுக்கும் தயார் என்பது போல ஒரு தோற்றத்தை காட்டிக்கொண்டு அமைதியாக காணப்பட்டது. இனப்படுகொலை என்பதை அந்தக் கடிதத்தில் இணைப்பதற்கும் …
-
- 0 replies
- 428 views
-
-
உக்ரேன்: மையம்கொள்ளும் புதிய போர்க்களம் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ போர்க்களங்கள் உருவாகிய காலம் கடந்து வெகுநாட்களாகி விட்டன. இப்போது போர்க்களங்கள் உருவாக்கப்படுகின்றன. போரின் வடிவங்கள் மாறியுள்ளது போல, போர்க்களங்களின் தன்மையும் உருவமும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. இப்போது போர்க்களங்கள் வலிந்து உருவாக்கப்படுவது அதன் சிறப்பம்பம். அமைதி வழியில் அடைய இயலாததை, அடாவடித்தனத்தின் வழியில் அடைவதற்கான திறவுகோலாக போர்க்களங்கள் பயன்படுகின்றன. உக்ரேனின் கிழக்குப் பகுதியில் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ள மோதலும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள உலகளாவிய கவனமும் அமெரிக்க - ரஷ்ய மோதலினை இன்னொரு கட்டத்துக்கு அழைத்துச் செல்லும…
-
- 0 replies
- 578 views
-
-
பொதுமன்னிப்பு..? | அரசியல் + விடுதலை
-
- 0 replies
- 457 views
-
-
புதுடில்லிக்கான அமெரிக்க நிதியுதவியும் ஈழத்தமிழர்களும் –வடக்குக் கிழக்கில் சீன ஆதிக்கம் அதிகரித்து வருவதாகக் கூறி சீனாவுடன் பகைமையைச் சம்பாதிகக் கூடாதென்பதையே புவிசார் அரசியல் சூழல் கற்பிக்கின்றது. ஆகவே இந்தோ- பசுபிக் விவகாரம் அமெரிக்க- சீன மோதலாகவே மாறியுள்ளது. சீன இந்திய முரண்பாடு வெறுமனே எல்லைப் பிரச்சினை மாத்திரமே- -அ.நிக்ஸன்- சீன- ரஷிய நட்புறவு ஒப்பந்தம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு கடந்தவாரம் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவுடன் தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ள வர்த்தகச் செயற்பாடுகள் மற்றும் இராணுவ உதவிகள் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குளோபல் ரைம்ஸ் என்ற சீன ஆங்கில ஊடகம்…
-
- 0 replies
- 375 views
-
-
விக்னேஸ்வரனின் வெற்றி சுயநிர்ணைய உரிமைக் கோரிக்கையின் தோல்வி : சபா நாவலன் வடமாகாண தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் படு தோல்வியடைந்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியடைந்திருக்கிறது. சர்வதேச சமூகம் என்று அழைக்கப்படுகின்ற உலகின் அதி பயங்கர அதிகார வர்க்கத்தின் கூட்டு எதை விரும்புகிறதோ அதை இலங்கையில் செயற்படுத்துவதற்காக தெரிவுசெய்யப்பட்ட அடிமைகள் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழரசுக் கட்சியால் தலைமை தாங்கப்படும் அதன் அரசியலும் என்பதை அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். தமிழரசுக் கட்சியின் மேட்டுக்குடி ஏகாதிபத்தியங்கள் சார்ந்த அரசியலுக்கும் இலங்கை அரசின் அரசியலுக்கும் அடிப்படையில் எந்த முரண்பாடும் கிடையாது. ‘சிங்களவனின் தோலில் செருப்புத…
-
- 0 replies
- 610 views
-
-
ஏமாற்றப்படுகிறதா கூட்டமைப்பு கடந்த 60 வருடகாலமாக புரையோடிப்போயிருக்கும் தேசிய பிரச்சினையைத் தீர்க்க முடியாமையை இட்டு நாம் வெட்கமடையவேண்டும். எனக்கு ஆறுவயதாக இருக்கும்போது தேசியபிரச்சினை ஆரம்பித்தது. இன்று எனக்கு 66 வயதாகிவிட்டது. இன்னும் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. காரணம் நாட்டின் நலனை விடுத்து கட்சியின் நலனுக்காக நாம் செயற்பட்டிருக்கின்றோம் – அமைச்சர் ராஜித தமிழ் தேசியக்கூட்டமைப்பு தானும் ஏமாற்றமடைந்துள்ள துடன் தமிழ் மக்களையும் ஏமாற்றியுள்ளது. எனவே கூட்ட மைப்பானது இதற்குப் பின்னரும் அரசாங்கம் தீர்வுத்திட் டத்தை முன்வைக்கும் என நம்பி ஆதரவு வ…
-
- 0 replies
- 528 views
-
-
‘ஒரு கடிதமும் ஆறு கட்சிகளும்’ -நிலாந்தன்- கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்லூர் சட்டநாதர் தெருவில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் ஒரு கருத்தரங்கு நடந்தது. இந்தியாவுக்கு கூட்டுக் கோரிக்கையை அனுப்பிய ஆறு கட்சிகளும் இணைந்து அக்கருத்தை ஒழுங்குபடுத்தியிருந்தன.ஆறு கட்சிகளின் சார்பாகவும் ஈபிஆர்எல்எப் அமைப்பு அக்கருத்தரங்கை முன்னின்று ஒழுங்குபடுத்தியதாக தெரிகிறது.ஒன்பதரை மணிக்கு என்று அறிவிக்கப்பட்ட கருத்தரங்கு பத்தரைக்குத்தான் தொடங்கியது. அந்த மண்டபம் ஆகக்கூடியது 400 அல்லது 500 ஆட்களைத்தான் கொள்ளக்கூடியது. அதிகளவு தொகை மக்களைத் திரட்டுவது என்று ஏற்பாட்டாளர்கள் யோசித்திருக்கவில்லை என்றே தெரிகிறது. அவ்வாறு யோசித்து இருந்திருந்தால் கருத்தரங்கை வீரசிங்கம் மண்டபத்தில் ஒழு…
-
- 0 replies
- 321 views
-
-
இன்றைய நெருக்கடி: கல்லுளிமங்கன்களுடன் காலம் கழித்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கடந்த பல வாரங்களாக எழுதிவந்த ‘ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை’ தொடரைத் தற்காலிகமாக நிறுத்தி, சமகால நெருக்கடிகளின் பல்பரிமாணம் தொடர்பாக, இப்பந்தி அலசுகிறது. கடந்த ஒருவார காலத்துக்குள், இலங்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவை வரவேற்கப்பட வேண்டிய மாற்றங்கள். இலங்கையின் இன்றைய நெருக்கடியை, வெறுமனே ஒரு பொருளாதாரப் பிரச்சினையாகப் பார்ப்பது, முழுமையான ஒரு பார்வையாகாது. இது, நான்கு நெருக்கடிகளின் கூட்டு விளைவு. முதலாவது, அரசியல் நெருக்கடி; இரண்டாவது, ஆட்சியியல் - நிர்வாக நெருக்கடி; மூன்றாவது, பொருளாதார நெருக்கடி; நான்காவது, சமூக நெருக்கடி. ஓன்றோடொன்று பின்னிப்பிணைந்த இந்த நெருக்கடி…
-
- 0 replies
- 264 views
-
-
தடைகளை தாண்டுமா ’21’? | அகிலன் June 1, 2022 அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் அமைச்சரவையில் கடந்த திங்கட்கிழமை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அதற்குத் தேவையான நகர்வுகளை முன்னெடுப்பதற்கும் அமைச்சரவை பிரதமருக்கு அனுமதி வழங்கியிருக்கின்றது. வெள்ளிக்கிழமை இதனை அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முன்வைத்து அவர்களுடைய ஆலோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டிருந்தார். அமைச்சரவையின் அங்கீகாரம் இதற்குக் கிடைத்திருந்தாலும், அது தாண்டிச்செல்ல வேண்டிய தடைகள் பல உள்ளன. குறிப்பாக பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைத் தம்வசம் வைத்துள்ள பொதுஜன பெரமுன இதனை ஆதரிக்குமா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. காரணம் 21 ஆவது திருத்தம…
-
- 0 replies
- 259 views
-