Jump to content

தமிழர் பொதுவேட்பாளர் ஒரு பம்மாத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பொதுவேட்பாளர் ஒரு பம்மாத்து

தமிழர் பொதுவேட்பாளர்  ஒரு பம்மாத்து

— கருணாகரன் —

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தரப்பிலிருந்து தமிழ்ப்பொதுவேட்பாளராக ஒருவரை நிறுத்துவதற்கான ஒரு தரப்பினரின் “தவறான முயற்சி” தடுமாற்றத்துக்குள்ளாகியுள்ளது. 

மேதினத்துக்கு முதல்நாள் (30.04.2024) வவுனியாவில் பொதுவேட்பாளரைப் பற்றி இந்தத் தரப்பு ஒரு கலந்துரையாடலை வலு உற்சாகமாகச் செய்திருந்தது. “தமிழ்ச்சிவில் சமூகத்தினர்(?)” என்ற பேரிலும் அரசியல் ஆய்வாளர்கள், ஊடகத்துறையினர் என்று தம்மைக் கருதிக் கொள்வோரும் இதில் இணைந்துள்ளனர். மேலும்  சில மதகுருக்களும் இணைக்கப்பட்டிருந்தனர். இதற்குப்  பின்புலமாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் அச்சு மற்றும் தொலைக்காட்சி  ஊடக நிறுவனமொன்று செயற்பட்டு வருகிறது. அதுவே “மக்கள் மன்றம்” என்ற பெயருடைய ஒரு திடீர் அமைப்பை கடந்த மாதம் இதற்காகத் தோற்றியது. “தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் காலத்தின்தேவை” என்றே இதற்கு நியாயம் சொல்லப்பட்டது. 

இந்தக் கலந்துரையாடலில் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. 

1. தமிழ் மக்கள்  ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது.

2. ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து, அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது.

3.அதற்கு அமைய ஒரு தமிழ் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது. 

4.அதற்காக சிவில் சமூகமும் தமிழ் தேசிய கட்சிகளும்  இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது.

5.தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்கால கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவது. 

இதைப்படிக்கும் வாசகர்கள் சிரிக்க வேண்டாம். இதில் என்ன உண்டு? எந்தப் புதிய உள்ளடக்களும் இல்லையே. இதைத்தான் இந்தத் தரப்புகள் காலாகாலமாகச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றனவே என்று கோபித்துக் கொள்ளவும் வேண்டாம். 

ஏனென்றால் இவர்களால் இப்படித்தான் சிந்திக்க முடியும். இதற்கு மேல் புதிதாகச் சிந்திக்கக் கூடிய – யதார்த்தத்தை உணரக் கூடிய, காலமாற்றம், சூழல் மாற்றம், சமூக மாற்றம் பற்றிய அறிதிறன் ஆற்றல் இவர்களிடம் இல்லை. என்பதால் பழகிய தடத்திலேயே சுழன்று கொண்டிருப்பார்கள். ஆகவே இவர்களைக் கோபித்து எதுவும் ஆகப்போவதில்லை. ஆனால், இவர்களுடைய இவ்வாறான தவறான சிந்தனை மிக ஆபத்தான விளைவுகளை மக்களுக்கு உண்டாக்கக் கூடியது. கடந்த காலத்திலும் இதுவே நிகழ்ந்தது. வரலாறு அதை நிரூபித்திருக்கிறது. அதைப் பின்னர் பார்ப்போம். 

இந்தப் பொதுவேட்பாளர் பற்றிய (முசுப்பாத்திக்) கலந்துரையாடல்  நடந்து மறுநாள், கிளிநொச்சியில் நடந்த “தமிழ்த்தேசிய மேதினக் கூட்டத்தில்” கலந்து கொண்ட மனோ கணேசன், தாம் இந்தத் தீர்மானத்துக்கு வெளியே நிற்பதாகப் பகிரங்கமாகவே அறிவித்தார். மட்டுமல்ல, “வடக்குக் கிழக்கிற்கு வெளியே உள்ள தமிழர்களை இந்தப் பொதுவேட்பாளர் விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டாம். அந்தச் சூழலே வேறு” என்றும் சொன்னார். 

ஆக மனோகணேசனும் இந்தப் பொதுவேட்பாளர் என்ற “பகிடி” விவகாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதிலே இன்னொரு வேடிக்கையும் உண்டு. தமிழ்ப்பொது  வேட்பாளருக்கு மனோ கணேசனின் பெயரைக் கடந்த வாரம் சிலர் பரிந்துரைத்திருந்தனர். ஆனால் மனோ கணேசனோ, பொதுவேட்பாளர் விடயத்தில் தாம் சம்மந்தப்படவே போவதில்லை என்று முகத்திலடித்துச் சொல்லி, அதிலிருந்து வெளியேறி விட்டார். 

மனோ கணேசனுக்கு இதில் பங்கெடுப்பது சிக்கலானது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அவர் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும்  பிரதான வேட்பாளர்களில் ஒருவரான சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் கட்சியில் பங்கெடுக்கிறார். அப்படியிருக்கும்போது சஜித்துக்கு மாறாக அவரால் சிந்திக்க முடியாது. மட்டுமல்ல, 13 ஆவது திருத்தத்துக்கு சஜித் ஆதரவளிக்கிறார் என்ற சேதியையும் கிளிநொச்சியில் வைத்துச் சொல்லியிருக்கிறார் மனோ. 

ஆகவே மறைமுகமாக பொதுவேட்பாளர் விடயம் பயனற்றது என்பதையும் தமிழர்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கலாம் என்பதையும் ஒரே மேடையில் வைத்துச் சொல்லாமற் சொல்லியுள்ளார் மனோ கணேசன். மனோவின் சிறப்பும் கவனிக்கத் தக்க அம்சமும் இதுதான். அவர் எப்போதும் துணிச்சலோடு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு தலைவர். 

“மனோ கணேசன் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் பிரச்சினையைப் பற்றித் தீர்மானிக்கும் ஆளல்ல. அவருடைய கருத்துப் பொருட்படுத்தத் தேவையற்றது” எனச் சில சிங்கங்கள் கர்ஜிக்கலாம். இன்று இலங்கைத்தீவில் பரவலாக அறியப்பட்ட தீர்மானச் சக்தியுடைய தமிழ்த்தலைவர்களில் மனோ கணேசன் முக்கியமானவர். அவரைப் பல சந்தர்ப்பங்களிலும் வடக்குக் கிழக்கு அரசியலில் தமிழ்த் தலைவர்களும் சேர்த்தே பயணித்திருக்கின்றனர். வடக்கில் தேர்தல் மேடைகள் தொடக்கம் முக்கியமான அரசியற் கலந்துரையாடல்கள், கட்டமைப்பு உருவாக்கங்கள், தீர்மானங்கள் எல்லாவற்றிலும் இணைத்தே வந்திருக்கின்றனர். அப்படித்தான் கிளிநொச்சி மேதினக் கூட்டத்திலும் மனோவின் பங்கேற்பு நடந்தது. என்பதால் மனோவை விட்டு யோசிக்க முடியாது. அவரைச் சுண்டித் தள்ளி விடமுடியாது.

இதில் கவனிக்க வேண்டிய கேள்வி ஒன்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் மனோ கணேசனைக் கலந்து கொள்ள வைத்து, அவர் மூலமாகச் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறாரா? என்பதுவே அது. 

இதை விட, இந்தத் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயம், மிகப் பலவீனமாக உள்ளது என்பதற்கு சில காரணங்களைப்பார்க்கலாம்.

1.     பொதுவேட்பாளர் என்பது தனியே வடக்குக் கிழக்குத் தமிழ்மக்களை மட்டும் மையப்படுத்திச் சிந்திப்பதாகும். குறைந்த பட்சம் இலங்கைத் தீவில் இன ஒடுக்குமுறையைச் சந்திக்கும் மலையக மக்களையும் முஸ்லிம்களையும் கூட இதில் உள்ளடக்க முடியாதிருப்பது, தமிழர்கள் மேலும் தனிமைப்பட்டுச் சுருங்கிச் செல்வதையே காட்டுகிறது. குறுகிய சிந்தனைக்கு இதுவே சரியெனப்படும். ஆனால், அரசியல் ராசதந்திர முதிர்வுக்கு இது பொருத்தமானதல்ல. குறிப்பாக வெளியுலகம் இதைக்குறித்துச் சிந்திக்கும்போது அல்லது கவனிக்கும்போது “தமிழ்பேசும் மக்களாகக் கூடச் சேர்ந்து ஓரணியில் நிற்க முடியாத அளவுக்குத்தான் இலங்கையில் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் சமூகங்கள் உள்ளனவா?” என்ற கேள்வியை நிச்சயமாக எழுப்பும். 

2.     மட்டுமல்ல, ஜனாதிபதித்தேர்தலை கஜேந்திரகுமார் அணி நிராகரிக்கிறது. தமிழ் மக்கள் இதில் பங்கேற்கத் தேவையில்லை என்கிறார் கஜேந்திரகுமார். ஆகவே அவர்களுடைய கணிசமான வாக்காளர்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கப்போவதில்லை. அத்துடன், ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மற்றும் அங்கயன் ராமநாதன், வியாழேந்திரன் போன்ற தரப்புகள் பொது வேட்பாளரை ஏற்கப்போவதில்லை. மட்டுமல்ல, வடக்குக் கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கும் தமிழர்களும் உண்டு. (மஸ்தான் போன்றவர்களுக்குப் பெரும்பாலான தமிழ் வாக்குகளே கிடைக்கின்றன). அவர்களுடைய வாக்குகளும் பொ. வே க்குக் கிடையாது. இதை விடச் சமத்துவக் கட்சி, மாக்ஸிஸ, லெனினிஸ ஜனநாயகக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி போன்றவற்றின் நிலைப்பாடு என்ன என்று இன்னும் தெளிவாகவில்லை. கிழக்குத் தமிழர் ஒன்றியம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அந்தக் கட்சியைப் பிரதிநிதிப்படுத்துவோரின் கட்டுரைகளும் உரைகளும் சொல்கின்றன. தமிழரசுக் கட்சிக்குள்ளும் ஆதரவு – எதிர்ப்பு என்ற இரட்டை நிலைப்பாடே உண்டு. இதை விட ஏற்கனவே சிறிலங்கா, சுதந்திரக் கட்சி, ஐ.தே.க, ஜே.வி.பி போன்றவற்றுக்கான வாக்குகளும் உண்டு. அவையும் இந்தப் பொ.வே விளையாட்டில் பங்கேற்காது. ஆகவே பொ.வே. பெறுகின்ற வாக்குகள் தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டை எந்தளவில் பிரதிபலிக்கும்?

3.     பொதுவேட்பாளரை நிறுத்தித்தான் “தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும்” என்றால் இதை விட வேறு பலவீனமான நிலை இல்லை எனலாம். வேறு வழிகள், வேறு முறைகள் ஏதுமில்லாத கையறு நிலையிலா தமிழ் மக்கள் உள்ளனர். சரி பிழைகளுக்கு அப்பால்  1977 லிருந்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாகவே தமது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தி வந்துள்ளனர். அதற்கு முன் என்றும் சொல்லலாம். இன்னும் தமிழரசுக் கட்சியும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் முன்னிலைப் பாத்திரத்தை வகிக்கின்றன என்றால் அதனுடைய அர்த்தம் என்ன? அல்லது, புலம்பெயர் தேசங்களில் இன்னும் பெருவாரியான தமிழ் மக்கள் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர்? தமக்கு விடுதலை வேண்டும் என்றுதானே! அதற்குச் சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவை எனத்தானே! அப்படியிருக்கும்போது பொது வேட்பாளரை நிறுத்தித்தான் தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டை வெளியுலகத்துக்குப் புதிதாகக் காண்பிப்பது என்றால், இதை விட வேடிக்கை என்ன? தேசமாகத் திரள்வது, சமூகமாகச் சிந்திப்பது என்பதெல்லாம் குறித்த மக்களோடு இணைந்து நின்று களப்பணிகளைச் சிந்திப்பதன் மூலமே சாத்தியமாகும்  என்று சிந்திக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டமும் கட்சிகளுக்கிடையில் உள்ள இணக்கப்பாடுகளும் முதலில் உருவாக்கப்படுவது அவசியம். அதைச் செய்வதற்கு இந்தச் சிவில் அமைப்புகளால் முடியவில்லை. ஏன் மதகுருக்களினாலும் முடியவில்லை. பதிலாக ஒவ்வொருவரும் எடுப்பார் கைப்பிள்ளைகளாகி விட்டனர். யாரோ, எங்கோ, எப்படியோ எடுக்கின்ற தீர்மானங்களுக்கு இங்கே காவடி ஆடுவோராக மாறியுள்ளனர். 

4.     தம்மால் வேறு விதமாகச் சிந்திக்க இயலவில்லை என்பதை மறைப்பதற்காகவே “ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக (பொது வேட்பாளர் விடயத்தை) கையாள்வதும் பொருத்தமான எதிர்கால கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவதும்” இதனுடைய நோக்கமென்று சொல்கிறார்கள். 

இது எவ்வளவு பம்மாத்து? மாறாக தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதாக இருந்தால், அதனுடைய (வெற்றியளிக்கக் கூடிய) எதிர்கால அரசியல் என்ன? அதை ஆய்வு ரீதியாக – விஞ்ஞானபூர்வமாக – முன்னெடுப்பதற்கான கட்டமைப்பு எப்படியாக இருக்க வேண்டும்? அதற்கான ஒருங்கிணைந்த வேலைத்திட்டம்? முன்னெடுப்பு எப்படி என ஆய்வுக்குட்படுத்தி உருவாக்க வேண்டும். முக்கியமாக விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான அரசியலை முன்னெடுக்க வேண்டும். தமிழரசுக் கட்சியின் எதிர்ப்பு அரசியலின் உச்சமே விடுதலைப் புலிகளின் அரசியலாகும். அது பெரும் சேதங்களுடன் முடிவுக்கு வந்து விட்டது. இனியும் அதைத் தொடர முடியாது. இவையெல்லாம் தந்த படிப்பினைகளிலிருந்து நாம் புதிய அரசியலை – சமாதானத்துக்கான – தீர்வுக்கான அரசியலைத் தொடர வேண்டும். அது நீண்டது. கடினமானது. உச்சமான பொறுமையைக் கோருவது. போரைப்போல விறுவிறுப்பற்றது. ஆனால், அதைத்தான் நாம் தொடர வேண்டும். கால நிர்ப்பந்தம், வரலாற்று நிர்ப்பந்தம் அதுவே. 

அதைச் செய்ய முடியாமலிருக்கும் தமது தவறையும் பலவீனத்தையுமே இந்த பொ.வே என்ற அவசர நடவடிக்கை காட்டுகிறது. அதாவது இவர்கள் யாரும் நடைமுறையில் களப்பணி செய்யத் தயாரில்லாதவர்கள். உண்மையையும் யதார்த்தத்தையும் எதிர்கொள்வதற்கான துணிவற்றவர்கள் என்பதால் “தமிழ் மக்கள் பேரவை”யைப்போல இப்பொழுது பொ.வே என்ற பலூனை ஊதிப்பெருப்பிக்கப் பார்க்கிறார்கள்.  ஒரு ஆறு மாதம் இவர்களால் தாக்குப் பிடிப்பது கடினம். பிறகு இதெல்லாம் காற்றுப்போகக் கைவிடப்படும் ஒன்றாகி விடும். 

ஆனால், இதையிட்டெல்லாம் இவர்கள் ஒரு போதும் பொறுப்புக் கூறுவதும் இல்லை, திருத்தம் செய்வதும் இல்லை. 

இப்படிப் பல விடயங்கள் உண்டு. உண்மையில் செய்ய வேண்டியது இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு நீண்டகால அடிப்படையில் வகுக்கப்பட வேண்டிய அரசியலும் வேலைத்திட்டமுமே. கடந்த காலப் படிப்பினைகளின் அடிப்படையில், புதிய சூழலுக்குரிய (போருக்குப் பிந்திய) அரசியலைப் பகுத்து அதை முன்னெடுக்க வேண்டும். அதையே சர்வதேச சமூகமும் வலியுறுத்தி வருகிறது. சமாதானத்துக்கான – தீர்வுக்கான வழிமுறைகளைக் கண்டறியுங்கள், அதில் ஈடுபடுங்கள் என. அதாவது மிக நிதானமாக முன்னெடுக்கப்பட வேண்டிய தீர்வுக்கான அரசியலை. நிச்சயமாக பகை வளர்ப்பு அரசியலை அல்ல.

ஆனால், இங்கே நடந்து கொண்டிருப்பது, போருக்கு முந்திய, போர்க்காலத்தைய பகை வளர்ப்பு என்ற தோற்றுப்போன, தோல்வியைத் தரக்கூடிய அரசியலையே. 

இது மிக ஆபத்தான எதிர்விளைவுகளையே தரக் கூடியது. எப்போதும் விளைவுகளை அறுவடை செய்கின்றவர்கள், தலையில் சுமக்கின்றவர்கள் மக்களே தவிர, இந்தப் பிரமுகர்கள் அல்ல. ஆயர்கள், அரசியற் கட்சிகளின் தலைவர்கள், ஆய்வாளர்கள் என்று தம்மைக் கருதுவோர், ஊடக முதலாளிகள் எவருக்கும் எந்த முட்டாள் தீர்மானங்களாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கடந்த காலத்தில் கூட இவர்களுக்கு எந்தச் சேதாரங்களும் ஏற்பட்டதில்லை. 30 ஆண்டுகாலப்போரை ஆதரித்த இவர்களின் உடலில் ஒரு சிறு கீறல் விழுந்ததில்லை. என்பதால்தான் இன்றும் போர்வீரர்களாக வெறிகொண்டு நிற்க இவர்களால் முடிகிறது. 

எனவேதான் தமிழ் அரசியல் எனவும் தமிழ்த்தேசிய அரசியல் என்றும் சொல்லப்படும் ஈழத்தமிழர்களுடைய அரசியலானது, பெரும்பாலும் சிறுவர்களுடைய மணல் விளையாட்டைப்போன்றே உள்ளது எனக் கூறவேண்டியுள்ளது. கற்பனை அதிகம். முயற்சிகளும் அதிகம். நல்விளைவுகள் எதுவுமில்லாதவை. சிறுபிள்ளை மணல் விளையாட்டில் பிள்ளைகளுடைய மகிழ்ச்சியாவது இருக்கும். வெளியே பாதிப்பிருக்காது. இங்கே முன்னெடுக்கப்படும் தமிழ் அரசியலில் எதிர்விளைவுகளே அதிகம். குருதியும் கண்ணீருமே அதனுடைய விளைவு மொழி.

இதைப்பொருட்படுத்தாமல் சாதாரண மக்களுடைய வாழ்க்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர் ஒரு தரப்பினர். இது வன்மையான கண்டத்துக்குரியது என்று சொல்ல வேண்டியுள்ளது. 

 

https://arangamnews.com/?p=10695

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 2020   எதிரிக்கு தன் இனத்தைக் காட்டிக் கொடுப்பது மட்டும் துரோகமல்ல;இனத்தின் வரலாற்றை சில தனிநபர்களினதோ, ஊர்களினதோ, எதிரியின் தேவைக்கேற்றவாறோ, அரசியல்வாதிகளின் நோக்கத்திற்காகவோ மாற்றியோ ; திரித்தோ வெளியிடுவதும் மகா துரோகமே. அடுத்த சந்ததியினரைத் தவறாக வழிநடத்தும் முயற்சி இது. இத்தகைய புல்லுருவிகளைச் சரியாக அடையாளம் காணாவிட்டால் வரலாற்றைத் தொலைத்தவர்களாகி விடுவோம். இந்த வரலாற்றுப் புரட்டு இணையத்தின் துணையுடன் புலம்பெயர் தேசங்களிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றது. பொதுத் தேர்தலொன்றுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தருணத்தில் கற்பனைகளை வரலாறாக்கும் முயற்சியும் நடைபெறுகிறது. இன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்பது இரவலாக அல்லது கடனாகப் பெற்ற பெயரே. உண்மையான ரெலோவின் தலைவரின் பெயர் தம்பித்துரை முத்துக்குமாரசாமி. இவர்  , திருநெல்வேலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் தற்போது இவர் உயிருடன்தான் புலம்பெயர் தேசமொன்றில் வாழ்கிறார் . ஆயுதப் போராட்டம் என்றால் அதன் வரலாறு கிழக்கு மாகாணத்தில் இருந்தே வெளிப்பட்டது. 1958 இல் குடியேற்றவாசிகளான சிங்களவர்களுக்குச் சார்பாக தமிழர் மீது தாக்குதல் நடத்த இராணுவத்தினர் வந்தனர். இவர்களை ஷொட்கன் துப்பாக்கியால் சுட்டு விரட்டியதுடன் அவர்கள் வந்த ஜீப்பையும் எரித்தனர் துறைநீலாவனை இன உணர்வாளர்கள். இவ்வாறு விரட்டியேரில் ஒருவரான கனகசூரியம் என்பவரும் அவரது துணைவியாரும் பின்னர் கல்முனை பட்டின சபையாக விளங்கியபோது அதன் உறுப்பினர்களாக விளங்கினர். இவர்களது மகன்தான் அம்பாறை மாவட்டத் தளபதியாக விளங்கிய மேஜர் அன்ரனி. எம்.ஜீ.ஆரை மட்டந்தட்ட கருணாநிதி பயன்படுத்துவது அவர் மலையாளி என்று. அதனால்தான் பாதிக்கப்படும் தமிழர் தொடர்பாக எம்.ஜீ.ஆர். அக்கறை காட்டுவதில்லை என்ற சாரப்படப் பேசி வந்தார். பொறுமை இழந்த எம்.ஜீ.ஆர். ஒரு கட்டத்தில் ‘குட்டிமணியை இலங்கை அரசிடம் ஒப்படைத்தவர்தானே கருணாநிதி”, என்றார். இந்தப் பீரங்கித் தாக்குதலில் நிலைகுலைந்து விட்டார் கருணாநிதி. எப்படியோ ஓடித் திரிந்து குட்டிமணி குழுவில் எஞ்சியோரில் சிறீசபாரத்தினத்தைத் தொடர்பு கொண்டனர் தி.மு.கவினர். ‘குட்டிமணி தீவிரவாதி என்ற விடயம் கருணாநிதிக்குத் தெரியாது. வேறு வழக்கு விடயமாகக் கைதாகியிருந்தவர் என்ற அடிப்படையில்தான் இலங்கையிடம் அவரை ஒப்படைத்தார் அப்போதைய முதல்வர்” என்று ஓர் அறிக்கை விடுத்தார். அப்போதுதான் தன்னை செயலதிபர் எனப் பிரகடனப்படுத்திக் கொண்ட சிறீசபாரத்தினம். அந்த அறிக்கையில்தான் தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயர் வெளியுலகுக்குத் தெரிந்தது. இந்த அறிக்கைக்கு முன்னதாக பந்தண்ணா என்றழைக்கப்படும் ராசப்பிள்ளையே இதனை வழிநடத்தி வந்தார். இதற்கு முன்னதாக இக்குழு இயங்கிய விதம் குறித்து ஐயர் தனது புத்தகத்தின்33,34 ஆம் பக்கங்களில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘குட்டிமணி, தங்கத்துரை போன்றோர் இந்தியாவிலிருந்து திரும்பி வருகிறார்கள். அவர்களது தொடர்புகளும் எமக்கு மறுபடி கிடைக்கிறது. அவர்கள் எமக்கு வெளியில் தாமே திட்டமிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அவையெல்லாம் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் அவர்களுடைய நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் நோக்கோடு அவர்களில் இருவருக்கு துப்பாக்கி சுடக் கற்றுக் கொடுப்பது என்ற முடிவுக்கு வருகிறோம். இந்த முடிவின் அடிப்படையில் எமது புளியங்குளம் முகாமில் தங்கதுரை மற்றும் ராசப்பிள்ளை ஆகியோருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்குகிறோம். இவர்கள் புதிய புலிகள் அமைப்பில் இல்லாதிருந்தாலும் நட்பு சக்தி என்ற அடிப்படையில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகின்றது. அவர்கள் அப்போது ரெலோ (TELO) என்ற அமைப்பை உருவாக்காவிட்டாலும் தனியான ஒரு குழுவாகச் செயற்பட்டனர். பிரபாகரனோ அல்லது புதிய புலிகள் அமைப்பில் இருந்த எவருமே அவர்களை எம்முடன் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் வேறுபட்டவர்களாக இருப்பதையே நாம் அனைவரும் விரும்பினோம். தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் பிரதானமாக கடத்தல் தொழிலையும், வன்முறை எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பகுதி நேரமாகவும் மேற்கொள்கின்றனர். இதனடிப்படையில் அவர்களை உள்வாங்காமல் நட்பு சக்தி என்ற அடிப்படையில் அவர்களுக்கு உதவிகள் வழங்கினோம்.” இதே பெருந்தன்மை குட்டிமணி அண்ணா, தங்கண்ணா ஆகியோரிடமும் இருந்தது. தம்மால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு உரிமை கோரி இலச்சினையுடனான அறிக்கையை ஊடகங்களுக்கு (வீரகேசரி உட்பட) வெளியிட்டனர் புலிகள். இதில் மொத்தம் 11 பேரின் மீதான நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் ஆறாவது பெயரான தங்கராசா (முன்னாள் எம்.பி. அருளம்பலத்தின் செயலாளர்) மீதான நடவடிக்கையை குட்டிமணி குழுவினரே மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு ஒரு அறிக்கையை தாங்கள் வெளியிடப் போவதாகவும் எனவே தங்கராஜாவின் சம்பவம் குறித்து என்ன செய்வது என குட்டிமணி, தங்கத்துரையிடம் கேட்டபோது,’ நாங்கள் உங்களைப் போல கட்டுப்பாடாக இருப்பது சிரமம். எங்களின் தொழிலுடன் (கடத்தல்) உணர்வு ரீதியாக செய்யக்கூடியவற்றையே செய்யப் போகிறோம். எனவே அதனையும் புலிகளின் பேரிலேயே உரிமை கோருங்கள்”, எனக் குறிப்பிட்டதாக ஒரு சந்திப்பில் இளங்குமரன் தெரிவித்தார். இதனையே ஐயரும் தனது நூலில், ‘தங்கராஜா கொலை முயற்சி புலிகளால் மேற்கொள்ளப்படவில்லை. அப்போது ஒரு குழுவாக சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட குட்டிமணி, தங்கதுரை சார்ந்த குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அப்போதும் இந்தியா – இலங்கைக்கு இடையிலான கடத்தல் வியாபரத்தை மேற்கொண்டிருந்தனர். அக்குழுவினர் தமது நடவடிக்கைகளையும் புலிகள் பெயரிலேயே உரிமை கோருமாறு ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையிலேயே தங்கராசாவின் பெயரும் எமது பிரசுரத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டது.” (பக். 117) எனக் குறிப்பிடுகிறார். http://www.ilakku.org/wp-content/uploads/2020/02/WhatsApp-Image-2020-02-22-at-08.57.07.jpeg   புலிகள் – குட்டிமணி குழு ஒன்றாக இணைந்து செயற்பட்ட காலத்தில் வெளியிடப்பட்ட’துரோகத்துக்குப் பரிசு” (சுந்தரம் மீதான சாவொறுப்புக் காரணங்கள்)நாடு கடத்தப்பட்ட நிலையில் தமிழீழ அரசு (கிருஷ்ணா வைகுந்தவாசனின் 1982 தைப்பொங்கலன்று தமிழீழப் பிரகடனத்துக்கு எதிரான நிலைப்பாடு) என்ற தலைப்பிலான பிரசுரங்களும் புலிகளின் இலச்சினையுடனேயே வெளியிடப்பட்டன. சில விரும்பத்தகாத நிகழ்வுகளின் விளைவால் இனி தனித்தனியாக இயங்குவோம் எனப் பிரபாகரன் முடிவெடுத்தபோது இரு பகுதியினரும் இணைந்து மேற்கொண்ட நீர்வேலி மக்கள் வங்கி வாகனத் தொடரணியை மறித்துக் கையகப்படுத்திய பணத்தின் மீதியையும், வாங்கிய ஆயுதங்களையும் இவர்களிடம் ஒப்படைத்தார். இம்முடிவுக்கு ஆட்சேபனை தெரிவித்த சீலனிடம்,’எனக்கு உங்கள் மீது நம்பிக்கை உள்ளது. இதைப் போல பல விடயங்களை உங்களால் செய்ய முடியும். குட்டிமணி அண்ணா, தங்கண்ணா இல்லாத நிலையில் அவர்களால் இது போன்ற ஒன்றைச் செய்வது சாத்தியமற்றது”, எனக் கூறினார். ஏற்கெனவே தங்கண்ணா, குட்டிமணி அண்ணா முதலானோரை தற்கொலைத் தாக்குதல் மூலமேனும் விடுவிப்போம் என்று தான் சொன்ன கருத்துத் தொடர்பாக மௌனமாக இருந்தவர்களிடம் ‘நாங்கள் தனித்தனியாகச் செயற்பட்டாலும் இவர்களின் விடுதலை தொடர்பாக நீங்கள் ஏதாவது முயற்சி மேற்கொண்டால் எமது உச்சக்கட்டப் பங்களிப்பை வழங்குவோம்”, எனத் தெரிவித்திருந்தார் பிரபாகரன். இதெல்லாம் நடந்தது இந்தியாவில். அப்போது செல்வம் இலங்கையில் இருந்தார். (அன்று அக்குழுவில் இருந்தவர்களில் இவர் மட்டுமே நாட்டில் எஞ்சியிருக்கிறார்.) 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் உருவானது. தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கும் புதிய அரசியலமைப்பு உருவாக்கமே தமிழீழ விடுதலைப் போராட்டம் உருவாகக் காரணமானது. தரப்படுத்தல் சட்டம் மாணவர்களுக்கு பாதகமாகக் கொண்டு வரப்பட்டபோது இந்தக் கருத்து வலுவானது. வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்தில் ‘எண்ணிக்கை தெரியாத குற்றம்”, என்றொரு வசனத்தை சிவாஜி பேசுவார். அதுதான் செல்வத்தின் நிலையும். 1969 இல் ரெலோ உருவானதாக சொல்கிறார். பொதுவாழ்வில் ஈடுபடுவது என்பது சில வரைமுறைகளுக்கு உட்பட்டது. இதன் அடுத்த கட்டம் தமிழீழக் கோரிக்கை முன்வைத்த பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறியது. வரலாற்றைத் தவறாகப் பதியக்கூடாது. ஒரு சட்டவிரோத கடத்தல் தொழில் செய்பவர்களுக்கும் பொலிஸ_க்கும் இடையே முரண்பாடு ஏதாவது ஏற்பட்டிருக்கலாம். அதனை விடுதலைப் போராட்ட நடவடிக்கை என நிறுவ முற்படுவது வரலாற்றுத் தவறு. அடுத்த தேர்தலிலும் தனது எம்.பி. பதவியை உறுதிப்படுத்தவே 50 வருடக் கதை விடுகிறார் செல்வம். அப்போது இவருக்கு என்ன வயதாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். எதிர்வரும் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ரிஷாட் பதியுதீன், சாள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன் போன்றோர் தெரிவாவது உறுதியாகி விட்டது. ஏற்கனவே கட்சியில் முதலாவது எம்.பியாகத் தெரிவு செய்யப்பட்ட செல்வம் அந்த நிலையை இழந்து விட்டார். எம்.பி. பதவியையேனும் தக்கவைக்கவே இந்த வரலாற்றுப் புரட்டு. மீண்டும் வலியுறுத்துகிறோம். தமிழரின் எதிர்ப்பு ஆயுத முனையில் முதலில் புரிய வைக்கப்பட்டது துறைநீலாவணையில். பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டமாக ஆயுதவழியில் ஆரம்பித்தது 1972 இல். அது சரி மாவைக்குமா வரலாறு தெரியாது? காசி ஆனந்தனின் ‘அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்” என்ற பாடல் ஒலிக்கும்போது யார் யாருக்கு பிரபாகரன் சுட்டுக் காட்டினார் என்று சுட்டிக் காட்ட வேண்டுமா? ஐயரின் நூலில் 56 ஆம் பக்கத்தில் ‘சேனாதிராசா, காசி ஆனந்தன், பிரபாகரன் மூவரும் கலைஞர் கருணாநிதியை மெரீனா பீச்சில் சந்திக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறிருக்கும்போது ரெலோவின் பொன்விழகுறித்த அழைப்பு விடுக்கும்போது வரலாற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் மௌனமாக இருந்தது ஏன்? சுதுமலை முற்றுகையின்போது கிட்டு உட்பட புலிகளுக்கு இழப்பு நேராமல் முற்றுகையை முறியடித்தது தானே என்று (இச்சமரில் மேஜர் அல்பேட் வீரச்சாவு) கதை விட்ட ஜனா இப்போதும் 50 வருடக் கதை சொல்கிறார். உண்மை இப்படி இருக்கப் புதிய வரலாற்றுப் புனை கதைகளைக் கூற செல்வம், ஜனா, போன்றோர் முற்படுகின்றனர்.வரலாற்றை மறந்தவர்களுக்கு வரலாற்றில் இடமில்லாமல் போகலாம். வல்வெட்டித்துறைக்கெனத் தனியான வரலாறு உண்டு. பெருமைக்குரிய விடயங்களில் தலையானது பிரபாகரன் பிறந்த மண் என்பது. அன்னபூரணி என்ற பாய்மரக் கப்பலினை அமெரிக்காவுக்கும் வல்வெட்டித்துறைக்கும் இடையே ஓட்டிச் சென்ற கடலோடிகளைக் கொண்டது. இராட்சதப் புகைக்கூண்டுகளை இலங்கை மண்ணுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் இந்தக் கடலோடிகள், பர்மாவுக்கான வணிகப் பயணத்தின்போது பறந்து சென்ற புகைக்கூண்டு ஒன்று இந்தப் பாய் மரக் கப்பலுக்கு அகே வந்தபோது அதனை எட்டிப் பிடித்து அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து இலங்கை மண்ணில் இதனை உருவாக்கினர். பட்டத் திருவிழா வல்வையின் தனித்துவம், யாழ்ப்பாணக் கச்சேரிக்கு முன்னால் நடைபெற்ற சாத்வீகப் போராட்டங்களில் முன்னணியில் நின்ற இராசலட்சுமி என்ற துணிச்சல்காரி பிறந்த மண். புலிக்குப் பிறந்தது பூனையாகாது எனக் களமுனையில் நிரூபித்தவர் இவரது மகன் கிட்டு என்ற சதாசிவம் கிருஷ்ணகுமார். முன்னுக்குப் போ என்ற வார்த்தையை விட எனக்குப் பின்னே வா என்றே போராளிகளை வழிநடத்திய தளபதி இவர். போராளிகள் மட்டுமல்ல பொதுமக்களும் இவரது படை நடத்தும் ஆற்றலையும் துணிச்சலையும் வான் வழியாக சுதுமலையில் களமிறங்கிய சிறப்புப் பயிற்சி பெற்ற படையினரின் முற்றுகையை முறியடித்த விதத்தை நேரடியாகக் கண்டு வியப்புற்றனர். இதன் பின்னர் சுதுமலை முகாமை விட்டுப் புலிகள் விலகத் தீர்மானித்தபோது, ‘போராளிகளே உங்களது ஆற்றலை, அர்ப்பணிப்பை, வீரத்தை நேரடியாகப் பார்த்தோம். தயவு செய்து எங்கள் ஊரை விட்டுப் போய்விடாதீர்கள்”, எனத் துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். இத்தகைய வரலாறு தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் உதித்த 36 இயக்கங்களுள் வேறு எவற்றுக்கும் இல்லை. அத்தகைய தளபதி தனது சாவின் போதும் சரித்திரம் படைத்தான். இத்தகைய பெருமைகள் கொண்ட வல்வெட்டித்துறையின் சாதனைப் பட்டியல் மிக நீண்டது. உபசரிப்பிலும் இந்த மக்கள் தனித்துவமானவர்கள். போராளிகளோ மற்ற எவரோ சாப்பாட்டுக்காகக் காத்திருக்கையில் பார்சலிலோ, கிண்ணத்திலோ கறி வரும். இங்கோ தூக்கு வாளியில் கொண்டு வந்து தமது அன்பை வெளிப்படுத்துவர். இத்தகைய ஊருக்குப் பலம் சேர்க்கிறோம் என்றெண்ணி கற்பனைகளை வரலாறாக்கவோ, அதற்குத் துணை போகவோ தேவையில்லை. இன்று ச.ச.முத்து என்பவர் மூத்தபோராளி என்ற பெயரில் புலம்பெயர் நாடுகளிலும் இந்தியாவிலும் சக்கைப் போடுபோட்டு வருகிறார். 1980 இற்குப் பின் இயக்கத்துடன் தொடர்பு வைத்த – இணைந்து கொண்ட எவருக்குமே இந்த முகம் பரிச்சயமற்றது. தான் மட்டுமே தலைவர் மீது விசுவாசம் கொண்டவராக நடிக்கும் நடிப்புக்கு சிவாஜி, கமல் போன்றோரெல்லாம் பிச்சை வாங்க வேண்டும். ‘ஒரு விளக்குக் கொழுத்த ஆசைப்படுகிறார்கள்”, என்று தலைவரின் இழப்பை ஒத்துக்கொள்வோரைச் சாடுகிறார். 1979 இல் சுமார் இரு வார காலம் வீரவாகு என்ற பெயரில் விபத்தாக இயக்கத்தில் இணைந்து கொண்டவர்தான் இந்த ச.ச.முத்து. இவர் குறித்து ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள்” என்ற தலைப்பில் கணேசன் (ஐயர்) எழுதிய நூலில் பின்வருமாறு காணப்படுகின்றது. சில நாட்களின் பின்னர் மாணவனாகக் கற்றுக் கொண்டிருந்த சிறுவனான வீரவாகு இயக்கத்தில் இணைந்து தலைமறைவாக வாழ்வதாக அவரது குடும்பத்தினர் அறிந்து கொள்கின்றனர். இது தெரிய வரவே குமரப்பா, மாத்தையா போன்றோரூடாகப் புலிகளைத் தொடர்பு கொள்ளும் அவரது குடும்பத்தினர் வீரவாகுவை வீட்டுக்கு அனுப்பி விடுமாறு கோருகின்றனர். வீரவாகும் வீட்டுக்குச் செல்ல விரும்பியதால் பிரபாகரன் அவரை அனுப்பி வைக்கிறார். வீட்டுக்குச் சென்ற அவர் பொலிஸில் சரணடைந்து விடுகிறார்.”இத்தகைய வரலாற்றைக் கொண்ட ச.ச.முத்து பிரான்ஸில் இருந்து வெளிவரும் ஈழமுரசு ஆசிரியர் குழுமத்தில் இடம்பெற்றுள்ளார். எங்கள் மண்ணின் வரலாற்றை நா.யோகேந்திரநாதன், சாந்திநேசக்கரம் போன்றோர் தத்ரூபமாக எழுதினாலும் இவர்கள் என்றும் போராளிகளாக இருந்ததில்லை. போராளி என்று பொதுவெளியில் சொல்லிக் கொண்டதுமில்லை. அவ்வாறு மற்றவர்கள் அறிவிக்கவும் அனுமதித்ததில்லை. 2016 மாவீரர் நாளன்று பிரான்ஸில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக வெளிவந்த குறிப்பில் ஈழமுரசு ஆசிரியர் குழுமத்தைச் சேர்ந்தவரும் – சமர்களப் போராளியும் – பெருந் தளபதிகளின் நண்பரும் – தேசியத் தலைவருடன் ஆரம்ப காலத்திலிருந்து செயற்பட்டவரும் – வரலாற்று ஆய்வாளருமான ச.ச. முத்து அவர்கள் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களினதும் மாவீரர்களினதும் ஒப்பற்ற தியாகங்களை நினவு கூர்ந்ததுடன் வரலாறுகள் பதிவு செய்யப்பட்டு நூல் வடிவில் ஆவணமாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்” எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐயரின் குறிப்பை வாசித்தபின் சமர்க்களப் போராளி என்று குறிப்பிடுவது எவ்வளவு பெரிய வரலாற்றுப் புரளி என்பது புலனாகிறது. யாழ்ப்பாணத்தில் கிட்டுவிடம் ஒரு பத்திரிகையாளர், இயக்கத்தில் வல்வெட்டித்துறையின் முக்கியத்துவம் பற்றிக் கேட்டார். அதற்குக் கிட்டு, ‘புலிகள் ஒரு தலைமறைவு இயக்கம். இதற்கு இரகசியம் பேணப்பட வேண்டும். அதனைத் தலைவர் ஆரம்பிக்கும்போது தனது பாடசாலை சகாக்கள், நண்பர்கள் போல நம்பிக்கைக்குரியவர்களை இணைத்துத்தான் ஆரம்பிக்க வேண்டியிருந்தது. அந்த வகையில்தான் மாத்தையா, குமரப்பா, ரகு, பண்டிதர், சங்கர் போன்றோர் படிப்படியாக அவருடன் இணைந்து கொண்டோம். இன்று அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பொறுப்பில் உருவாகி வருகின்றனர். உதாரணத்திற்கு மன்னாரில் விக்ரர், இனி மட்டக்களப்பு, திருமலை போன்ற இடங்களைச் சேர்ந்தோர் பொறுப்பெடுப்பர். வன்னியிலும் மாத்தையா இனங்காணப்பட்டவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பார்.” எனக் கூறினார். இதுதான் யதார்த்தம். கிட்டு குறிப்பிட்டவாறே வரலாறும் நடந்தது. இந்த விடயத்தில் இரு முக்கிய விடயங்களைக் குறிப்பிட வேண்டும். 1983 ஏப்ரல் 07 அன்று கந்தர்மடம் வாக்குச் சாவடியில் நிகழ்ந்த தாக்குதலில் முதன்முறையாக ரி-56 ஆயுதம் கைப்பற்றப்பட்டது. கொக்குவிலில் புலிகள் இருந்த அறையொன்றுக்குள் இது கொண்டுவரப்பட்டது. பொன்னம்மான் அதனை தலைக்கு மேலே தூக்கி வைத்துக் கொண்டு சில நிமிடம் நடனமாடினார். அடுத்தடுத்த நாட்களில் இன்னொரு தாக்குதலை விரைவாக நடத்த வேண்டும் என தலைவரிடம் வலியுறுத்தினர் சில போராளிகள், ‘நான் இயக்கத்தை ஆரம்பித்த பின்னர் இந்தப் போராட்டத்தில் எத்தனையோ பேர் வந்து போய்விட்டார்கள். எனக்கு மிஞ்சி இருப்பது இந்த 30 பேரும்தான். ஆகவே அவசரப்படாமல் நிதானமாக நாங்கள் காலடி எடுத்து வைக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டார். வந்து போனவர்களின் முகங்களில் எது எது அவரது ஞாபகத்துக்கு வந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. 1983 இல் நிகழ்ந்த இன்னொரு நிகழ்வு பற்றியும் குறிப்பிட வேண்டும். பல்வேறு தொடர்புகள் மூலம் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் படகு மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள் அங்குள்ள லொட்ஜ்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதில் இரு இளைஞர்களுக்கிடையே சிறு முரண்பாடு. அதில் ஒருவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். அவர் மற்றவரிடம், ‘றெயினிங் முடிச்சு வல்வெட்டித்துறைக்குள்ளாலதானை போவாய். அப்ப பார்த்துக் கொள்ளுறன்”, என்றார் மற்றவரிடம். இந்த விடயம் தலைவருக்குத் தெரிய வந்ததும் ‘அவரை அடுத்த வண்டியிலேயே (படகு) ஊருக்கு அனுப்பி வையுங்கள். இவ்வாறான சிந்தனையுள்ளவர்கள் இயக்கத்துக்குச் சரிவர மாட்டார்கள்”, என உத்தரவிட்டார். இவ்வாறு சொன்ன இளைஞனுக்கு 18 அல்லது 19 வயதுதான் இருக்கலாம், அவன் செய்த தவறுக்காக மட்டுமல்ல ; இயக்கத்தில் இனி எவருக்குமே இந்த மாதிரிச் சிந்தனைகள் வரக்கூடாது என்பதற்காகவே இந்நடவடிக்கையை அவர் மேற்கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் ’30 பேர் கொண்ட இயக்கமாக இருந்த புலிகள் இயக்கம் சீலன், ஆனந்த், செல்லக்கிளி அம்மான், என மூவரை இழந்து நிற்கிறது. இந்திய அரசு 200 பேருக்கு பயிற்சி வழங்க முன் வந்துள்ளது. ஆனால், 250 பேரளவில் இப்போது வந்துவிட்டார்கள். திடீரெனப் பருத்து விட்டோம். இனித்தான் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துவதில் சவாலை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கும். எல்லோரும் ஒரே காலகட்டத்தவர் என்றவகையில் இந்தச் சவால் சாமானியமானதல்ல” என்று பண்டிதரும் குறிப்பிட்டிருந்தார். மூன்றாவது விடயம் புலேந்திரன் – குமரப்பா தொடர்பானது. 1983 என்றொரு எல்லையை (திருநெல்வேலித் தாக்குதல்) தலைவர் கணிப்பிட்டிருந்தார். உண்மையில் குமரப்பா இயக்கத்தில் பிரிவு ஏற்படுவதற்கு முன்னரே அங்கம் வகித்திருந்தார். (அதிலும், புலேந்திரன் இயக்கத்துக்கு வருவதற்கு முன்னரே.) இருவருமே மாவட்டத் தளபதிகளாக விளங்கியவர்கள். எனினும் இயக்கத்தில் பிரிவு ஏற்பட்டபோது குமரப்பா, காந்தன், சாள்ஸ் போன்றோர் விலகியிருந்தனர். இவர்கள் திருநெல்வேலித் தாக்குதலுக்குப் பின்னர் மீண்டும் இணைந்து கொண்டனர். செல்லக்கிளி அம்மான், யோகன் பாதர் போன்றோர் திருநெல்வேலித் தாக்குதலுக்கு முன்பாகவே மீண்டும் இணைந்து கொண்டனர். புலேந்திரன் மத்தியகுழு உறுப்பினர் என்று அறிவிக்கப்பட்டாலும் குமரப்பாவுக்கு இந்த நிலை வழங்கப்படவில்லை. ஒட்டுமொத்த இனத்தின் தலைவனாகத்தான் பிரபாகரன் நடந்து கொண்டார். தான் வகுத்த விதியை அவர் மீறவில்லை. இந்த விடயத்தைத் தேவர் அண்ணா போன்றோர் புரிந்து கொள்ளாமல் ச.ச. முத்து தொடர்பான விடயங்களில் நெகிழ்ச்சிப் போக்கினால் வரலாற்றைத் திரிக்க முயல்வது கவலைக்குரியது. தேங்காய், மாங்காய் வியாபாரிகள் என்ற சாக்கில் வீடெடுத்தார்கள் அப்பையா அண்ணன், சீலன் என்று கதை விடுவதும் ச.ச.முத்துவின் அழகான கற்பனை. திருநெல்வேலி தாக்குதலுக்கு முன்பாக தலைவர் சொன்னதாகவே சில விடயங்களைக் குறிப்பிட்டு தான் அந்தக் காலத்தில் இருந்ததாக நிறுவ முயல்வதும் மோசடியானது. இவற்றுக்கெல்லாம் 800 – 900 என்று Like வேறு. வரலாறு எவ்வாறு திரிக்கப்பட்டு பரவலாக்கப்படுகின்றது என்று தெரிந்தும் ஊரவன் என்ற ஒன்றுக்காக மோசடிக்கு துணைபோவது சரியானதல்ல. தேசத்தின் பாலம்”, என்ற அமைப்பு போராட்டத்தின் பங்காளர்களாக விளங்கிய மற்றும் யுத்தத்தால் பாதிப்புற்ற மக்களுக்குப் பல்வேறு வகையில் உதவி வருகிறது. குறிப்பாக மூதூர் மற்றும் வாகரைப் பகுதிகளில் கல்வியைத் தொடரச் சிரமப்படும் பொருளாதார நெருக்கடியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன், விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மட்டக்களப்பு நகர் போன்ற இடங்களிலிருந்து பயிற்சியாளர்களை வரவழைத்தல், தேவையான குடும்பங்களுக்கு குழாய்க் கிணறு அமைத்தல் போன்ற பல்வேறு வழிகளில் உதவி வருகிறது. இதனை ஒருங்கிணைத்துச் செயற்படுத்துபவர் முன்னாள் போராளியான லூக்காஸ் அம்மான். அரசியற்துறைப் பொறுப்பாளராக விளங்கிய பா.நடேசனின் சகோதரர் இவர். தான் பிறந்த வல்வை மண்ணுக்கும் உதவத் தவறுவதில்லை இவர். 2002 இல் தலைவரைச் சந்தித்தபோது போராட்டத்திலிருந்து விலகிய உங்களைப் போன்றோர் பொருளாதார ரீதியில் நலிவுற்றோருக்கு இம்மாதிரி உதவலாமே என அறிவுறுத்தியதுடன் உதவி தேவைப்படுவோர் பட்டியலையும் இவரிடம் வழங்கியுள்ளார். வரலாற்றைத் திரிபுபடுத்துபவர்கள் லூக்காஸ் அம்மானைப் பின்பற்றி உருப்படியாக பணியாற்றுவதுதானே வல்வை மண்ணுக்குப் பெருமை சேர்க்கும். நன்றி – ஈழநாடு   https://www.ilakku.org/வரலாற்றை-திரிபுபடுத்துவ/
    • ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன் - திருமலை)   விடுதலைப் புலிகளால் 1987 இல் இடைக்கால நிர்வாக சபைக்குப் பெயரிடப்பட்டிருந்தோரில் இவரும் ஒருவர். பிரேமதாஸ அரசுடனான சமாதானப் பேச்சு வார்த்தைகளிலும் பங்குகொண்டவர்.இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கும் சமயத்தில் திருமலை மாவட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி மற்றும் அரசியற்றுறைப் பொறுப்பாளராக இருந்த இவர் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மோசமாகக் காயமடைந்தார். 13.06.1990 அன்று தம்பலகாமத்துக்கும் பாலம் போட்டாறுக்கும் இடையிலுள்ள ஜெயபுரம் என்னுமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. சந்திரிகா அரசுடனான பேச்சுவார்த்தைக் காலத்தில் மாவட்ட மட்டத்தில் திருமலையில் நிகழ்ந்த படையினருடனான சந்திப்பில் கலந்துகொண்டார். குச்சவெளிப் பகுதியில் 1995 ஜனவரியில் நிகழ்ந்த இச்சந்திப்பில் படையினர் தரப்பில் பின்னாளில் வட மாகாண ஆளுநராக இருந்த அப்போதைய பிரிகேடியர் சந்திரசிறி மற்றும் பிரிகேடியர் ஓம்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளராகவும் விளங்கியவர். 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் திருமலையில் இழக்கப்பட்டதைத் தொடர்ந்து இவரை மீண்டும் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமித்தார் தலைவர். இழக்கப்பட்ட தமிழரின் பிரதிநிதித்துவத்தை மீளப்பெறும் வகையில் வாக்களிப்பின் அவசியத்தை திருமலை மக்களுக்கு உணர்த்துவதே இவருக்கிடப்பட்ட முக்கிய பணி. இதனால் 2001 இல் இரா.சம்பந்தனை வரவழைத்து கட்டைபறிச்சானில் சந்தித்தார் இவர். அரசியல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. 2000 ஆம் ஆண்டு தேர்தலில் 14,000 வாக்குகள் பெற்ற தமிழரின் கட்சி 2001 இல் 59,000 வாக்குகள் பெற்று மீண்டும் பிரதிநிதித்துவம் பெற்றது. 35,000 வாக்குகளைப் பெற்ற சம்பந்தன் ஐயா மீண்டும் பாராளுமன்றம் சென்றார். தேசியப் பட்டியல் உறுப்பினரான மு.சிவசிதம்பரத்தின் மறைவைத் தொடர்ந்து 2001 தேர்தலில் 28,000 வாக்குகள் பெற்றிருந்த துரைரெட்ணசிங்கம் மாஸ்டருக்கு இப்பதவியை வழங்குமாறு இவர் விடுத்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இறுதியாகத் தலைமைச் செயலகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார். இறம்பைக்குளம், பூசா, கொழும்பு 2 ஆம் மாடி என சிறிதுகால தடுப்பின் பின் விடுதலையானார். முத்துக்குமார் மனோகர் (பசீர்காக்கா - யாழ்ப்பாணம்)   இறுதிப் போரில் இவரது மகள் சங்கீதா (அறிவிழி) 26.04.2009 அன்று வீரச்சாவெய்தியிருந்தார். முன்னதாக இவரது மகன் சங்கர் எறிகணைத் தாக்குதலில் பலியாகியிருந்தார். (07.04.2009) இவரது சிற்றன்னை திருமதி மோட்சானந்தம் முத்துக்குமார் 10.02.2009 அன்று எறிகணைத் தாக்குதலில் பலியாகியிருந்தார். சகோதரி முறையான கோமளா, அவரது கணவர் இராசையா தனபாலசிங்கம், மகன் பாஸ்கர் (இரு பிள்ளைகளின் தந்தை) ஆகியோர் 31.03.2009 அன்று எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். விடுதலை புலிகள் அமைப்பில் பொட்டுஅம்மானை இணைத்தவர்.1986 முதல் ஊடகவியலாளராகவும் இனங்காணப்பட்டிருந்தார். ஈழமுரசில் அரசியற் தொடரான 'குத்துக்கரணங்கள்' மாவீரரின் புகழை போராளிகளின் எண்ணத்தில் எடுத்தியம்பிய 'ஒரு போராளியின் நாட் குறிப்பிலிருந்து' என்ற தலைப்புகளில் எழுதியவர். 1990 இல் மட்டக்களப்புக்கு நடந்துபோனபோது அவதானித்து, உணர்ந்த விடயங்களை 'உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்' மற்றும் 'சிறைப்படாத சிந்தனைகள்' தொடர், மாவீரர் புகழை எடுத்தியம்பும் 'விழுதுகள்' ஆனையிறவு மீட்பு உட்பட ஓயாத அலைகள் - 3 சமர்க்களம் தொடர்பான விடயங்களை நேரில் கண்டு விபரிக்கும் தொடர் 'மீண்டும் யாழ். மண்ணில் கால் பதித்த எம் தடங்கள்' என்பனவற்றை ஈழநாதத்தில் எழுதியவர். இறுதிப் போரின் பின்னர் பூசா முதல் யாழ்ப்பாணம் வரை சுமார் 10 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு மேல் நீதிமன்றங்களில் மொத்தம் நான்கு வழக்குகள் இவருக்கெதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சுமார் ஐந்து ஆண்டுகள் தடுப்பின் பின் விடுதலையானவர். https://www.pathivu.com/2018/05/blog-post_288.html -----------------------------------------------------------------------------------------------------------     யோகன் எ பாதர் (பாலிப்போடி சின்னத்துரை) தந்தை செல்வா முதற்கொண்டு முள்ளிவாய்க்கால் வரை பயணித்த வரலாறு பாசி என்று தமிழ் இளைஞர் பேரவை காலத்திலும் பின்னர் யோகன் பாதர் என ஆயுதப்போராட்டத்திலும் அழைக்கப்பட்ட பாலிப்போடி சின்னத்துரைக்கு உண்டு. தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த காலத்தில் காசி ஆனந்தன் அண்ணாவின் சகோதரன் சிவஜெயம் (பின்னாளில் மேஜர் சந்திரன்) கிராமம் கிராமமாக துவிச்சக்கர வண்டிகளில் சென்று தமிழ்த் தேசியத்துக்காக கடுமையாக உழைத்தவர். இவர் வடக்கிலும் சகல மாவட்டங்களுக்கும் காசி ஆனந்தன் அண்ணாவுடன் சேர்ந்து விடுதலைப் பணியாற்றியவர். தந்தை செல்வா மட்டுமல்லாது அவருக்கும் அடுத்த நிலையிலிருந்த அமிர்தலிங்கம் போன்றோருடனும் பழகியவர். மாவையும் இவருடைய பங்கை நிராகரிக்க மாட்டார். மட்டக்களப்பிலிருந்து (ஏன் கிழக்கு மாகாணத்தில் என்று கூடச் சொல்லலாம்) புலிகளில் இணைந்து கொண்ட முதற் போராளி இவர்தான். கருணா உட்பட அன்றைய போராளிகளை இயக்கத்துக்குள் உள்வாங்கியவர். இவர் போட்ட அடித்தளத்திலேயே வடக்கிலிருந்து சென்ற போராளிகளும் இணைந்து போராட்டத்தை வளர்க்க முடிந்தது.  https://thamilkural.net/thesathinkural/views/71024/
    • தோல்வியில் முடிவடைந்த முதலாம் கட்டத் திம்பு பேச்சுவார்த்தைகள்    இணைந்த அறிக்கை வெளியிடப்படுமுன்னர் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். தமிழர் தரப்பினர் முன்வைத்த வாதத்தில், தமது தொடர்ச்சியான ஆட்சேபணைகளுக்குப் பின்னர் அரசதரப்பு செய்வதாக உறுதிதந்த ஊரடங்கு உத்தரவை நீக்குதல், அரசியற் கைதிகளை விடுவித்தல் ஆகிய எந்தவிடயங்களையும் அரசு செய்யவில்லை என்று கூறினர். பதிலுக்கு தமிழர் தரப்பு மீது குற்றஞ்சுமத்திய அரசுதரப்பு, தமிழர் தரப்பால் இழைக்கப்பட்டதாகக் கூறி 73 யுத்தநிறுத்த மீறல்ச் சம்பவங்களைப் பட்டியலிட்டனர்.  அங்கு பேசிய இலங்கை அரச தரப்பின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் ஹெக்டர் ஜ‌யவர்த்தன, தான் முன்வைத்த தீர்வு யோசனையினை தமிழர் தரப்பு படித்து, சாதகமான பதிலுடன் அடுத்த கட்டப் பேச்சுக்களுக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களை ஆவணி 12 ஆம் திகதி நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. இந்தியாவும், இலங்கையரசும் முதலாம் கட்டப் பேச்சுக்கள் குறித்து மிகுந்த திருப்தி வெளியிட்டிருந்தன. ஆனால், தமிழ்ப் போராளி அமைப்புக்களைப் பொறுத்தவரை பேச்சுக்கள் கடுமையான அதிருப்தியைத் தோற்றுவித்திருந்தன. ஜெயவர்த்தன விரித்த வலையில் இந்தியா விழுந்துவிட்டது என்கிற பிரபாகரனின் நம்பிக்கை மென்மேலும் உறுதியடைந்தது. ஆகவே, ஆயுதப் போராட்டத்தினைத் தொடர்ந்து நடத்துவதென்று தீர்மானித்த அவர், தனது போராளிகளை அதற்கான தீவிர பயிற்சிகளில் ஈடுபடுத்தலானார். ஒரு பிராந்திய வல்லரசு எனும் நிலையிலிருந்து தமிழர்களின் பிரச்சினையில் மத்தியஸ்த்தம் வகிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தினால் பேச்சுவார்த்தைகள் குறித்து இந்தியா பெருமகிழ்ச்சி அடைந்திருந்தது. தமிழ்ப் போராளி அமைப்புக்களை இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்துவந்ததே இந்தியாவைப் பொறுத்தவரை பெரு வெற்றியாகக் கருதப்பட்டது. சமாதானப் பேச்சுக்களின் தரகர் எனும் நிலையிலிருந்து, பேச்சுக்களில் தீவிரத்துடன் பங்குகொண்ட இன்னொரு தரப்பு என்கிற நிலைக்கு தன்னை உயர்த்தியது குறித்தும் இந்தியா மகிழ்வடைந்திருந்தது. இதனால் இந்தியா சர்வதேச மட்டத்தில் நற்பெயரைச் சம்பாதிக்கத் தொடங்கியது. குறிப்பாக இந்தியாவின் புதிய பிரதமர் ரஜீவ் காந்திக்குப் பாராட்டுதல்கள் வந்து குவியத் தொடங்கின. தென்னாசியாவின் அமைதிக்காக இந்தியா எடுத்துவரும் செயற்பாடுகளை அமெரிக்காவும், இங்கிலாந்தும் வெகுவாகப் புகழ்ந்திருந்தன.    பேச்சுவார்த்தைகள் முறிவடையாது, யுத்தநிறுத்தம் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படுவது குறித்து இலங்கையரசாங்கம் மிகுந்த திருப்தியடைந்தது. தனது இராணுவத்தைக் கட்டியெழுப்பும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பது குறித்து திருப்தியடைந்த அரசாங்கம், மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரையான பகுதிகளில் முன்னரங்க இடைப்பகுதியினை (Buffer Zone) உருவாக்கி போராளிகளை வடக்கிற்குள் மட்டுப்படுத்தும்  காரியங்களில் முழுமூச்சுடன் ஈடுபடத் தொடங்கியது. நாடு திரும்பிய ஹெக்டர் ஜெயவர்த்தன,  பேச்சுவார்த்தைகள் குறித்த விடயங்களை மந்திரிசபையில் பகிர்ந்துகொண்டார். அமைச்சர்கள் முன்னிலையில் பேசிய ஹெக்டர், போராளிகள் தொடர்ந்தும் பேச்சுக்களில் ஈடுபட இணங்கியிருப்பது சாதகமான நிலைமை என்று கூறினார். மேலும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் முன்வைக்கப்படும் தீர்வொன்றினைப் பரிசீலினைக்கு ஏற்றுக்கொள்ள போராளிகள் இணங்கியிருப்பதும் முக்கியமான திருப்பம் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், ஹெக்டர் பேச்சுவார்த்தைகள் குறித்துக் கொண்டிருந்த நம்பிக்கைகள் அவரது சகோதரரான ஜெயவர்த்தனவிற்கு உவப்பானதாக இருக்கவில்லை. ஏனென்றால், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை இராணுவப் பலத்தின் மூலம் நசுக்கிவிடுவதே அவரது ஒரே எண்ணமாக இருந்தது. ஆகவே, தனது அரசாங்கம் நேர்மையான, சமாதானத்தை நேசிக்கின்ற அரசு என்றும், ஆனால் தமிழர்களோ  விட்டுக்கொடுப்பற்ற, பிடிவாதமான, உறுதியாக‌ முடிவெடுக்கும் திராணியற்ற தரப்பு என்றும் அரச ஊடகங்களினூடாக கடுமையான பிரச்சாரத்தில் இறங்கினார். பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரப் பிரிவின் தலைவருடன் பேசிய ஜெயார், இந்தியா மீதும் பிரச்சாரத்தினை முன்னெடுக்க உத்தரவிட்டதுடன், பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் பாத்திரத்தைக் கேள்விகேட்டதுடன், இந்தியாவை, போராளிகளைக் கட்டுப்படுத்தி, வழிக்குக் கொண்டுவரும் திராணியற்ற "பிராந்திய வல்லரசு" என்று எள்ளிநகையாடும் பிரச்சாரத்திலும் ஈடுபடலானார். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ரொமேஷ் பண்டாரி இலங்கைத் தமிழரின் பிரச்சினை தொடர்பாக ஆளமான அறிவைக் கொண்டிருக்கவில்லை என்பதுடன் தமிழரின் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும் என்கிற உண்மையான அக்கறையும் அவருக்கு இருக்கவில்லை. புதிய பிரதமரான ரஜீவ் காந்திக்கு சர்வதேசத்திலிருந்து வந்துகொண்டிருக்கும் மழையில் தனக்கும் சிறுதுளி கிடைக்கவேண்டும் என்பதும், ரஜீவ் காந்தியின் பார்வையில் தான் தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்பதையும் தவிர ரொமேஷ் பண்டாரிக்கு வேறு சிந்தனைகள் இருக்கவில்லை. ஆகவே, இதனை நன்கு தெரிந்துவைத்திருந்த ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும், பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழர்களுக்கு மிகச் சொற்பமான சலுகைகளைத் தருவதன் மூலம் யுத்தநிறுத்தகாலத்தை நீட்டிக்கவும், தமது இராணுவத்தைக் கட்டியெழுப்பவும் திடசங்கற்பம் பூண்டிருந்தனர். ஆனால், அவர்கள் தமது திட்டத்தில் ஒரு மனிதர் குறித்து கவனமெடுக்க முற்றாகத் தவறியிருந்தனர். அந்த மனிதர்தான் பிரபாகரன். ஆனால், ஜெயவர்த்தனவின் இராணுவ பலத்தினைக் கொண்டு தமிழரின் விடுதலை யாகத்தை முற்றாக அணைத்துவிடலாம் எனும் திட்டத்திற்குச் சவாலாக இருக்கப்போகும் ஒரே மனிதர் பிரபாகரன் தான் என்பதை லலித் அதுலத் முதலி நன்றாக‌ அடையாளம் கண்டிருந்தார். 1984 ஆம் ஆண்டு கார்த்திகை 24 அம் திகதி அவரது பிறந்தநாளுக்கு கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த அவரது வீட்டிற்குச் சென்றிருந்தவேளை அவர் என்னிடம் ஒரு விடயத்தைக் கூறினார். "சபா, உங்களுக்குத் தெரியுமா? பிரபாகரனுக்கும் இன்றைக்குத்தான் பிறந்தநாள். நாம் ஒருவரருக்கொருவர் எதிராகப் போர் புரிகிறோம், ஆனால் எம்மில் எவர் வெல்லப்போகிறோம் என்று எமக்குத் தெரியாது" என்று கூறியிருந்தார்.  லலித் அதுலத் முதலி குறித்த இன்னும் இரு விடயங்களை நான் பகிர்ந்துகொள்கிறேன். 1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணத்து மக்களை பிரபாகரனிடத்திலிருந்து அந்நியப்படுத்தும் உளவியற்போரினை லலித் அதுலத் முதலி ஆரம்பித்தார். அதன்படி, யாழ்ப்பாணத்தில் பதுங்கியிருந்து செயற்பட்டு வரும் பயங்கரவாதிகளை இராணுவத்தினர் தேடியழிப்பதை ஏதுவாக்குவதற்காக , அப்பகுதிகளிலிருந்து தமிழர்கள் அனைவரும் சிறிதுகாலத்திற்கு வெளியேறவேண்டும் என்று அறிவித்திருந்தார்.  யாழ்ப்பாணத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறி, ஏனைய இடங்களில் தமது நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ தங்குவதன் மூலம் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் அரசுடன் நிற்பதாகவும், பயங்கரவதிகளிடமிருந்து தம்மை அந்நியப்படுத்தியிருப்பதாகவும் காட்டமுடியும் என்றும் அவர் கூறியிருந்தார். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஏனென்றால், எனது தந்தையார் யாழ்ப்பாணத்திலிருந்த எமது பூர்வீக வீட்டில் வாழ்ந்துவந்தார். எனது சகோதரியும் அவரது நான்கு குழந்தைகளும் அவ்வீட்டிலேயே வசித்து வந்தனர். எனது மாமியார், மைத்துனி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் அவ்வீட்டிலேயே வாழ்ந்துவந்தனர். லலித் அதுலத் முதலியை நான் பின்னாட்களில் சந்தித்தபோது, அவரது அறிவித்தலினால் எனது தந்தையார்ர், மாமியார் போன்ற முதியவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துப் பேசினேன். எனக்குப் பதிலளித்த லலித், "பிரபாகரனை சாதாரண‌ தமிழ்ப்பொதுமக்கள் வெறுக்க வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்கிறேன்" என்று அவர் கூறினார். நான் எனது தந்தையாருடன் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டபோது, "நடக்கிறது நடக்கட்டும், நாங்கள் இங்கேயே பொடியங்களுடன் இருக்கப்போகிறோம்" என்று கூறினார். எந்தத் தமிழ் மக்களைப் பிரபாகரனிடமிருந்து அந்நியப்படுத்திவிடலாம் என்கிற எதிர்பார்ப்புடன் லலித் அதுலத் முதலி தனது அறிவித்தலினை மேற்கொண்டாரோ, அந்த அறிவிப்பு அதற்கு நேர்மறையான விளைவினை ஏற்படுத்தியிருந்தது. பிரபாகரனை மக்கள் இன்னும் அதிகமாக நேசிக்கும் நிலையினை அது உருவாக்கியிருந்தது. "அவங்கள் ஆருக்காகப் போராடுறாங்கள்? எங்கட உரிமைகளுக்காகத்தானே போராடுறாங்கள்? அவங்களை விட்டுட்டு எங்களால போக ஏலாது" என்று எனது தந்தை தீர்க்கமாகக் கூறினார்.  பின்னர் 1985 ஆம் ஆண்டு தை முதலாம் திகதி, ஆயிரம் மீட்டர்கள் கொண்ட, மக்கள் செல்லமுடியாத பாதுகாப்பு வலயங்களை லலித் அறிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் இராணுவ முகாம்களில் இருந்து ஆயிரம் மீட்டர்கள் வட்டத்திற்குள் இருக்கும் மக்கள் உடனடியாக வெளியேறிவிட வேண்டும். அப்படி வெளியேறாத பட்சத்தில் உங்களுக்கு நடக்கவிருக்கும் அழிவுகளுக்கு நீங்களே பொறுப்பு என்று வானொலியூடாக‌ அறிவித்தார். ஆனால், மக்கள் அவரது அறிவித்தலை கண்டுகொள்ளவில்லை. ஆகவே, தனது விமானப்படையூடாக தமிழில் அச்சிடப்பட்ட அறிவித்தல்களை பொதுமக்கள் வாழிடங்கள் மீது அவர் கொட்டினார். அதனையும் மக்கள் உதாசீனம் செய்தனர்.ஒருவாரத்தின் பின்னர் மீண்டும் தமிழில் அச்சிடப்பட்ட எச்சரிக்கைகள் வானிலிருந்து அவரது விமானப்படையினரால் கொட்டப்பட்டன. அவ்வாறு அச்சிடப்பட்ட எச்சரிக்கை ஒன்றினை பிரச்சாரப்படுத்துவதற்காக டெயிலி நியூஸ் காரியாலயத்தின் ஆசிரியரான மணிக் டி சில்வாவுக்கும் லலித் அனுப்பி வைத்தார். அது தமிழில் அச்சிடப்பட்டிருந்தமையினால், என்னிடம் தந்து, "லலித் அனுப்பியிருக்கிறார், அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது?" என்று என்னைப்பார்த்துக் கேட்டார் மணிக். அதனைப் படித்துவிட்டு நான் சிரித்துக்கொண்டேன். "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று என்னிடம் வினவினால் மணிக். "அதில் ஒரு பிழை இருக்கிறது" என்று நான் பதிலளித்தேன். "என்ன பிழை?" என்று மீண்டும் அவர் கேட்டார். "இந்தத் துண்டுப்பிரசுரத்தின் அடியில் பிரபாகரன் ஒப்பமிட்டிருக்கிறார். ஆனால் தனது பெயரை பிரபாகரம் என்று தவறுதலாக எழுதியிருக்கிறார் என்பதனால்ச் சிரித்தேன்" என்று பதிலளித்தேன். "சிங்களவர்கள் மட்டுமே இவ்வாறான தவறுகளை புரியமுடியும். ஒரு தமிழரோ, முஸ்லீமோ "ன்" என்கிற எழுத்திற்குப் பதிலாக "ம்" என்கிற எழுத்தினைப் பாவிக்கும் தவற்றினை ஒருபோதும் செய்யப்போவதில்லை" என்று அவருக்கு விளங்கப்படுத்தினேன். உணர்ந்துகொண்ட சில்வாவும், அத்துண்டுப்பிரசுரத்தில் இருந்த தவற்றினை வெளியே கூற விரும்பவில்லை.  தமிழில் எழுதப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தின் செய்தி இதுதான், அரசாங்கம் தனது இராணுவ முகாம்களைச் சுற்றி ஆயிரம் மீட்டர்கள் சூனியப் பகுதியை உருவாக்குவதாக அறிவித்திருப்பதுடன், இப்பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லுமாறும் அறிவித்திருக்கிறது.  ஆனால், அப்படி எவரும் வெளியேறக்கூடாது என்று உங்கள் அனைவரையும் நான் எச்சரிக்கிறேன். அப்படி யாராவது வெளியேறுவார்களாயின், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  இப்படிக்குப் "பிரபாகரம்" 1984 ஆம் ஆண்டு பங்குனியில் தேசிய பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற காலத்திலிருந்து லலித் அதுலத் முதலி பிரபகாரனை தனது முதலாவது எதிரியாகவே கருதிச் செயற்பட்டுவந்தார் என்பதைக் காட்டவும், பிரபாகரன் குறித்த அவரது கணிப்புச் சரியானது என்பதைக் காட்டவுமே இச்சம்பவங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.   பிரபாகரனுடன் அன்டன் பாலசிங்கம் - 80 களின் நடுப்பகுயில்  தன‌து நோக்கமான இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்குதல், வடக்குக் கிழக்கில் அரச கட்டுப்பாட்டிலிருந்து தமிழர் பிரதேசங்களை விடுவித்தல் ஆகியவற்றுக்கு யுத்தநிறுத்தமும், பேச்சுக்களும் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதனால் அவைகுறித்து பிரபாகரன் அதிகம் மகிழ்வடையவில்லை. ஜெயவர்த்தன தமிழர்களுக்கான தீர்வினை இராணுவத்தைக் கொண்டே வழங்குவார் என்பதனைச் சரியாகக் கணித்திருந்த பிரபாகரன், இராணுவத்தை எதிர்கொள்ள தனது போராளிகளை ஆயத்தப்படுத்திவந்தார். ஜெயவர்த்தனவின் உண்மையான நோக்கத்தினை நேர்த்தியாகக் கணித்திருந்தார் பிரபாகரன். பின்னாட்களில் அதுகுறித்து இந்தியாவிலிருந்து வெளிவரும் சில பத்திரிக்கைகளுக்கும் அவர் பேட்டியளித்திருந்தார்.  கல்கத்தாவிலிருந்து வெளிவரும் "சண்டே" எனும் இதழுக்கு புரட்டாதி 5 ஆம் திகதி வழங்கிய நேர்காணலில் பிரபாகரன் இவ்வாறு கூறியிருந்தார்.  "பேச்சுவார்த்தை ஒரு நாடகம். இந்தப் போர்வையினைப் பயன்படுத்தி எமது மக்கள் மீது இலங்கை இராணுவம் இன்றுவரை அட்டூழியங்களை நடத்தி வருகிறது. எமது மக்கள் மீதான படுகொலைகள் தற்போதும் அரங்கேற்றப்பட்டு வருவதுடன், தமது வாழ்விடங்களில் இருந்தும் அவர்கள் துரத்தப்பட்டு வருகிறார்கள். இது உண்மையான யுத்தநிறுத்தமாக இருந்தால் எனது தளபதிகள் இதுகுறித்து மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளுக்கு அமைவாக நாம் எமது நடவடிக்கைகளை முற்றாக நிறுத்தி வைத்திருக்கிறோம். ஆனால், எமது மக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை இலங்கை இராணுவம் நடத்திவருவதால், பதில் நடவடிக்கைகளில் நாம் இறங்கவேண்டியதாகியிருக்கிறது. ஆனால், இந்தச் சூழ்நிலையினைக் கவனமாகக் கையாளவேண்டிய தேவையினை நான் அறிவேன். இந்த யுத்தநிறுத்தம் கூட ஒரு சூழ்ச்சிதான் என்பதை எனது தளபதிகள் நன்கு அறிந்தே உள்ளனர். அவர்களை நான் கவனமாக வழிநடத்தவேண்டும். யுத்த நிறுத்தத்தினைப் போர்வையாகப் பாவித்து அரசாங்கம் தமிழின அழிப்பினை கச்சிதமாக அரங்கேற்றி வருகிறது". வீக் எனும் பத்திரிகைக்கு 1986 ஆம் ஆண்டு பங்குனியில் வழங்கிய செவ்வியில் பிரபாகரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்,  "யுத்த நிறுத்தம் என்கிற போர்வையில் ஜெயவர்த்தன பாரிய இராணுவமயமாக்கல்த் திட்டத்தினை முடுக்கிவிட்டிருக்கிறார். இராணுவ இயந்திரத்தைக் கட்டியெழுப்ப தனது வரவுசெலவுத் திட்டத்தில் பாரிய தொகையினை அரசு ஒதுக்கியிருக்கிறது. கடுமையான அழிவுகளை ஏற்படுத்தும் பல கனரக ஆயுதங்களைத் தொடர்ச்சியாக அரசு தருவித்து வருகிறது. தனது இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பினை அரசு சட்டமாக்கியிருக்கிறது. மொத்தச் சிங்களத் தேசமும் போரிற்கான தயார்ப்படுத்தல்களில் இறங்கியிருக்கிறது. தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தீவிரவாதத்திற்கெதிரான பயிற்சிகளுக்காக வெளிநாட்டுக் கூலிப்படையினர் வரவழைக்கப்பட்டிருப்பதோடு, பாக்கிஸ்த்தான் அரசும் நேரடியாகவே இலங்கை இராணுவத்திற்கு உதவி வருகிறது. இவ்வாறான இராணுவமயமாக்கலில் ஜெயவர்த்தன இறங்கியிருப்பதானது, அவர் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்குப் பதிலாக, தனது இராணுவத்தின் மூலம் அவர்களை அழிக்கவே கங்கணம் கட்டியிருக்கிறார் என்பதையே காட்டுகிறது".    யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுக்கள் குறித்து பிரபாகரன் அதிருப்தி கொண்டிருந்தபோதும், திம்புப் பேச்சுவார்த்தையினூடாக அவருக்கு சில அனுகூலங்களும் கிடைத்திருந்தன. தமிழர் தரப்பில் மிகப்பெரும் சக்தியாக அவர் உருவெடுத்திருந்ததுடன், அவருக்கான அந்த ஸ்த்தானத்தினை வழங்குவதற்கு இந்தியாவும் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.  திம்புப் பேச்சுவார்த்தைகளின் முதலாம் கட்டம் தோல்வியில் முடிவடைந்த 1985 ஆம் ஆண்டு ஆடி 13 ஆம் நாள் நான் எனது வீட்டில் இருந்தேன். செய்தி ஆசிரியர் ஆரன் என்னைத் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு மறுநாள் கொழும்பு கோட்டைப் பகுதியில் அமைந்திருந்த இந்திய உயர்ஸ்த்தானிகராலயத்தில் நடக்கவிருக்கும் பத்திரிக்கையாளர் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.        
    • வினா: யாராவது உங்களிடம் வந்து நீங்கள் எப்படியான நிலமையில் உள்ளபோது/என்ன செய்துகொண்டு உள்ளபோது உங்களிடம்  நிதி/பொருள் உதவி கேட்டால் அல்லது பொருட்களை/சேவையை உங்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்தால் நீங்கள் செம கடுப்பாகுவீர்கள்? கொடுக்க மாட்டீர்கள்? •••••••  ♻️    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.