Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்? - நிலாந்தன். adminFebruary 9, 2025 தையிட்டி விகாரை ஒரு தனியார் காணியில் கட்டப்படுறது என்பதனால் அது சட்டவிரோதமானது என்று கூறி அதனை ஒரு சட்ட விவகாரமாக மட்டும் குறுக்குவது தமிழ் மக்களுக்குப் பொருத்தமானது அல்ல. அது சட்டப் பிரச்சினை மட்டுமல்ல, அதைவிட ஆழமான பொருளில் அது ஓர் அரசியல் விவகாரம். இன ஒடுக்குமுறையின் ஆகப் பிந்திய வெளிப்பாடுகளில் ஒன்று. அது ஓர் ஆக்கிரமிப்பு. ஒரு மரபுரிமைப் போர். இலங்கைத் தீவின் சட்டங்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிராக வளைக்கப்படும் என்பதற்கு அது ஒரு சான்று. 2009க்கு பின்னரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என்பதற்கு அது ஒரு சான்று. சம்பந்தப்பட்ட சில தமிழர்களின் காணி உரிமை பற்றிய ஒரு …

  2. தையிட்டி விகாரைதான் கடைசியா? - நிலாந்தன்! adminMay 28, 2023 தையிட்டி விகாரை திறக்கப்பட்டுவிட்டது. நிலத்தைக் கைப்பற்றி வைத்திருக்கும் ஒரு தரப்பு இதுபோன்ற விடயங்களைச் செய்யமுடியும். அந்த விகாரை விவகாரத்தை நொதிக்கச் செய்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான். அதேசமயம் அந்த விவகாரமானது தமிழரசியலின் இயலாமையை நிரூபிக்கும் ஆகப் பிந்திய எடுத்துக்காட்டுகளில் ஒன்று. அந்த விகாரை ஒரு விவகாரமாக மாறிய பின் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்திருந்தார். அதன்போது அஸ்திரிய பீடாதிபதி அவரிடம் கையளித்த எழுத்து மூல ஆவணம் ஒன்றின் மொழிபெயர்ப்பு தமிழில் ஊடகங்களில் வெளிவந்தது. அதி,அஸ்கிரிய பீடாதிபதி முக்கியமான சில விடயங்களை அழுத்திக் கேட்டிருக்கிறா…

  3. தையிட்டி விகாரைப் போராட்டமும் வடக்கின் அரசியற் களமும் February 16, 2025 — கருணாகரன் — தையிட்டியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் திஸ்ஸ ராஜமகா விகாரையை அகற்றக் கோரி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். தொடக்கத்தில் – இரண்டு ஆண்டுகளுக்கு முன் – கஜேந்திரகுமாருக்கு நெருக்கமான பத்து இருபது பேருடன், சிறிய வட்டத்திலிருந்த போராட்டம் இப்பொழுது ஈ.பி.டி.பியினர் உட்படப் பல்வேறு தரப்பினர் கலந்து கொள்கின்ற அளவுக்குச் சற்றுப் பெரிய வட்டமொன்றாக விரிந்துள்ளது. ஆனாலும் இந்தப் போராட்டம் வெற்றியளிக்குமா? இது புதிய அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்குமா? இந்தப் போராட்டத்தைத் தேசிய மக்கள் சக்தி எப்படிக் கையாளப்போகிறது? வடக்கில் தே…

  4. தையிட்டி; மயிலிட்டி; கச்சதீவு ; செம்மணி - நிலாந்தன் “நாங்கள் கேட்டது சர்வதேச விசாரணையை. அனுர தருவது சர்வதேச விளையாட்டு மைதானத்தை”. என்று முகநூலில் ஒரு பதிவு காணப்பட்டது. தமிழ் மக்கள் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் அரசாங்கமோ “இதோ உங்களுக்கு விளையாட்டு மைதானம்; இதோ உங்களுக்கு மயிலிட்டித் துறைமுகம்; இதோ உங்களுக்கு வட்டுவாகல் பாலம்” என்றிவ்வாறாக அபிவிருத்தித் திட்டங்களை முன்வைக்கின்றது. அனுர அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டு இந்த மாதத்தோடு ஒராண்டு முடிகிறது. பதவியேற்ற ஓராண்டு காலப் பகுதிக்குள் வடக்கிற்கு அதிக தடவைகள் வருகை தந்த ஒரே ஜனாதிபதியாக அவர் காணப்படுகிறார். கடந்த கிழமை அவர் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களையும் தொடக்கி …

  5. தையிட்டி: அனுரவின் தீர்வு என்ன? நிலாந்தன். யாழ் நகரத்தில் நோ லிமிட் திறக்கப்படுகையில் தையிட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் நிலப் பறிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிராகப் போராடிக் கொண்டிருந்தார்கள்.இந்த இரண்டு நிகழ்வுகளிலும் எங்கே சனக்கூட்டம் அதிகம் என்று கேட்டு முகநூலில் பதிவுகள் பகிரப்பட்டன. நோ லிமிட் திறப்பு விழாவில் ஒப்பீட்டளவில் அதிக தொகை நின்றது என்பதே உண்மை. காலையிலிருந்து இரவு வரையிலும் அங்கே பறை மேளம் முழங்கிக் கொண்டிருந்தது. மக்கள் வெள்ளம் அலை மோதியது.அந்தப் பகுதியில் போக்குவரத்து செய்வது கடினமாக இருந்தது. ஆனால் அதற்காக நோ லிமிட்டுக்கு போனவர்கள் எல்லாருமே தையிட்டி போராட்டத்துக்கு ஆதரவில்லை அல்லது எதிரானவர்கள் என்று முடிவெடுக்க தேவையில்லை. ஒரு மக்கள்…

  6. தையிட்டியில் தனித்து நின்று போராடுவது! நிலாந்தன்! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வருகிறது. ஏனைய கட்சிகளை விட இந்த விவகாரத்தை அதிகம் கொதி நிலையில் வைத்திருப்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான். ஆனால் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராக அக்கட்சி அண்மை காலங்களில் முன்னெடுக்கும் போராட்டங்கள் போதிய அளவுக்கு மக்கள் மயப்படாதவை. அது அனேகமாக கட்சி பிரமுகர்களின் போராட்டம்தான். எனினும் அந்த ஒரு கட்சிதான் களத்தில் தனித்து நிற்கின்றது. சில சமயங்களில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் தனித்து நிற்கின்றார். அவர் ஒரு மக்கள் பிரதிநிதி. இருபதாயிரத்துக்கும் குறையாத மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு மக்கள் பிரதிநிதி தன…

  7. தொகுதி நிர்ணயத்தில் முஸ்லிம்கள் வாய்ப்பை தவறவிடுவார்களா? நடைமுறை வாழ்க்கையின் எல்லா விடயங்களிலும் ‘எல்லைகள்’ மிக முக்கியமானவையாக இருக்கின்றன. நமது செயற்பாட்டின் வீச்சையும் வரம்பெல்லையையும் தீர்மானிப்பவையாக, பொதுவாக எல்லைகள் இருப்பதுண்டு. அதுவும் ஆட்சியதிகாரத்தின் எல்லை என்பது, உலக மக்களின் சமூக, அரசியல், பொருளாதார விடயங்களில் மிகவும் செல்வாக்குச் செலுத்துவதாகக் காணப்படுகின்றது. இப்போது, நமது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தொகுதி நிர்ணயத்துக்கும், சிறுபான்மை மக்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள், சமூக, அரசியல், பொருளாதார விடயங்களில் முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டியிருக்கின்றது. மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட …

  8. இலங்கையில் தொகுதி வாரி தேர்தலும் இன உறவும் - வ.ஐ.ச.ஜெயபாலன் . தொகுதிவாரி தேர்தல் அடிப்படையில் மட்டுமே மாகாணசபை தேர்தலை நடத்த முடியும் என்கிற நீதி மன்ற தீர்ப்பு வந்துள்ளது. இனி எதிர்காலத் தேர்தல்களில் தொகுதி வாரி முறைமையே முன்னிலை பெறும் என்பதில் சந்தேகமில்லை. புதிய சூழ; . புதிய முறை வடக்கில் தமிழரைப் பாதிக்காது. கிழக்கில் தமிழரையும் முஸ்லிம்களையும் ஓரளவு பாதிக்கலாம். அம்பாறை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் தமிழரும் முஸ்லிம்களுக்கும் புரிந்துணர்வு ஏற்பாடுகள் இல்லாவிட்டால் பாதிப்புகள் ஏற்படும். புதிய முறை தென் இலங்கை முஸ்லிம்களையும் மலையக தமிழரையும் வடமாகாண முஸ்லிம்களையும் அதிகம் பாதிக்கும். . பழைய தேர்தல் முறைமையில் திருகோண மலையிலு…

    • 0 replies
    • 438 views
  9. தொக்கி நிற்கும் மாகாண சபை தேர்தல்கள் என்.கே. அஷோக்பரன் / 2019 செப்டெம்பர் 09 திங்கட்கிழமை, பி.ப. 05:09Comments - 0 ஊவா மாகாண சபையைத் தவிர்ந்த ஏனைய எட்டு மாகாண சபைகளும், அரசமைப்பின் 154E உறுப்புரைப்படி, அவற்றின் ஐந்து வருடகாலப் பதவிக்காலம் நிறைவடைந்ததன் நிமித்தமாகக் கலைந்துள்ளன. ஊவா மாகாண சபையின் பதவிக்காலமும், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவுக்கு வருகிறது. மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தின் பத்தாம் சரத்து மற்றும் அரசமைப்பின் 154E உறுப்புரை ஆகியனவற்றின்படி, மாகாண சபையொன்றின் பதவிக்காலம் நிறைவடைந்து, அந்த மாகாணசபை கலைந்த நாளிலிருந்து, நான்கு வார காலத்துக்குள், குறித்த மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவித்தலை, தேர்தல் ஆணைக்குழு விடுக்க வேண்டும் என்கின்றது.…

  10. தொங்கு நிலை மகிந்தரும் தாங்கு நிலைத் தமிழரும் விடுதலைப்புலிகள் புரட்டாதி 2006 - க.வே.பாலகுமாரன் - தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கிய பரிமாணமாக பரிணாம அரசியல் போக்கின் விளைவாக அரங்கேறிய போர் நிறுத்த ூ அமைதிப்பேச்சுக் காலகட்டம் தனது வேலையை முடுக்கிவிட்டுள்ளது. இதன் உரிய உச்ச விளைவுகளுக்கு எம் மக்கள் இப்போது நிலையின் காவலர்களான மேற்குலகிற்கோ தமது நீண்டகால நட்பு நாடொன்றினை எவ் விதம் கையாள்வதென்கிற இக்கட்டு. இந்தியா விற்கோ எதிர்பாராத அதிர்ச்சி: இப் பிராந்தியத் தில் தனது உண்மை நண்பன் யார் என்பதை மீளாய்வு செய்யும் நெருக்கடிநிலை. இவ்வாறா நிலை நோக்கி நகர்வதைத் தடுக்கும் வேளை இது. முதலில் சருவதேசத்தின் கதையை நோக்கலாம். கடந்த ஓகஸ்ட்ம…

  11. தொடங்கும் தேர்தல் நாடகங்கள் புதிய ஆண்டு, புதிய நம்பிக்கைகள் என்று நாம் பேசத் தொடங்கினாலும், யதார்த்தம் நம் முகங்களில் ஆழ அறையும் போது, அச்சமும் கோபமுமே மிஞ்சுகின்றன. இப்போது, எம் சமூகத்தின் பிரதான பேசுபொருள்களாக இருப்பவை, எவை என்பதை நோக்கின், மூன்று விடயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவியலும். முதலாவது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்கள்; இரண்டாவது ஜெனீவாவின் பேராலும் அமெரிக்காவின் பேராலும் கட்டமைக்கப்படுகின்ற நம்பிக்கைகள்; மூன்றாவது, தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டும் பாடுவது தொடர்பானது. இவை மூன்றும், ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. இன்று இலங்கையில், சிங்கள பௌத்த தேசியவாதம் மேலோங்கியுள்ளது. ஆட்சி அதிகாரத்தின் அனைத்துத…

  12. தொடரும் அக்கறையற்ற போக்கு பி. மாணிக்­க­வா­சகம் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்­குற்றச் செயற்­பா­டுகள் தொடர்பில் பொறுப்புக்கூறு­வ­தற்­கான கடப்­பாட்டை ஏற்­றுள்ள அர­சாங்கம் அவற்றை உரிய முறையில் நிறை­வேற்­ற­வில்லை என்று பர­வ­லாகக் குறை கூறப்­ப­டு­கின்­றது. சாதா­ரண குறை கூறு­த­லாக இல்­லாமல், அழுத்­த­மான குற்­றச்­சாட்­டா­கவே அந்த அதி­ருப்தி முன்­வைக்­கப்­பட்­டி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. பொறுப்புக்கூறும் விட­யத்தில் முக்­கி­ய­மாக பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்க வேண்டும் என்ற கடப்­பாட்டை நிறை­வேற்­று­கின்ற பொறுப்பை அர­சாங்கம் கிடப்பில் போட்­டுள்­ளது என்­பது முக்­கி­ய­மா­னது. இந்தச் சட்­டத்தை இல்­லாமற் செய்­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு…

  13. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-31#page-2 தொடரும் இழுபறி தமிழ் மக்­க­ளு­டைய நீண்­ட­காலப் போராட்­டங்கள், கோரிக்­கைகள், தீர்க்­கப்­பட்டு நாட்டில் நல்­லி­ணக்­கமும் சமா­தா­னமும் அமை­தியும் கொண்டு வரப்­பட வேண்­டு­மாயின் முறை­யான அதி­கா­ரப்­ப­கிர்வு செய்­யப்­ப­ட­வேண்டும். அத்­த­கைய அதி­கா­ரப்­ப­கிர்வை ஒற்­றை­யாட்­சியை வலி­மைப்­ப­டுத்­தி­யி­ருக்கும் பழைய அர­சியல் சாச­னத்தின் மூலம் தீர்வு காண­மு­டி­யாது என்ற யதார்த்த நிலை உண­ரப்­பட்­ட­த­னா­லேயே சமஷ்டி வரை­வி­லான ஆட்­சி­மு­றை­யொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற உண்­மை­நிலை உண­ரப்­பட்­டது. நாளை பிறக்கப் போகும் புது­வ­ரு­டத்தில் முன்­ன…

  14. தொடரும் ஏமாற்றம் -செல்வரட்னம் சிறிதரன் நல்லாட்சிக்கான அரசாங்கம் என்றும் தேசிய அரசாங்கம் என்றும் சிறப்பாகக் குறிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிகள் இணைந்த கூட்டு அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை சிதைந்து கொண்டிருக்கின்றது. அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் படிப்படியாகக் குறைந்து செல்வது கவலைக்குரிய விடயமாகும். நல்லாட்சி அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்திற்கும், ஐக்கியத்திற்கும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது, குறிப்பாக த…

  15. தொடரும் ஒரு தமிழ் பலவீனம் குறித்து… யதீந்திரா செல்ஹெய்மின் கூற்றுக்களும் அதனையடியொற்றி மேலெழுந்திருக்கும் வாதங்களும் – சில குறிப்புக்கள். 1 சில வாரங்களுக்கு முன்னர், இலங்கையின் சமாதான ஏற்பாட்டாளரும் நோர்வேயின் முன்னாள் அமைச்சருமான எரிக் செல்ஹேய்ம், யுத்தத்தின் தீர்மானகரமான இறுதிக்கட்டத்தில் தாம் மேற்கொண்ட முயற்சியொன்று குறித்து பகிரங்கமாக பேசியிருந்தார். பி.பி.சியின் தமிழ் மற்றும் சிங்கள சேவைகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இந்த தகவல்களை தெரிவித்திருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பு நிர்மூலமாகப்பட்ட பின்புலத்தில் ஆங்காங்கே கசிந்த சில தகவல்கள் இப்போது சந்தேகத்திற்கிடமற்ற வகையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. செல்ஹெய்ம் அப்படியென்ன புதிய தகவல்க…

    • 3 replies
    • 10.3k views
  16. பல வேறுபட்ட முகங்களுடன் செயற்பட்ட கே.பி. தனது லீலைகளைச் சிங்கள அரசுக்குச் சார்பாகத் தற்போது செய்து வருகிறார்.கனடாவில் வாழ்ந்துவந்த சுரேஷ் மாணிக்கவாசகத்தை கனேடியக் காவல்துறையினர் கைது செய்து நாடு கடத்த நடவடிக்கைகளை எடுத்தபோது ‘பெரிய மீன்’பிடிபட்டுவிட்டதாகத் தம்பட்டம் அடித்த சிங்களம், விடுதலைப் புலிகளுக்கு ஆயுத முகவராகச் செயற்பட்டவருக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு நிகழ்வுகளை நடத்துவதுடன்,சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் பாதுகாப்பு வழங்கும் நிலையில் கே.பி. இருக்கிறார் என்றால் இவர் எந்தளவு விசுவாசமாக மகிந்தவுக்கு இருக்கிறார் என்பதை ஒரு குழந்தையினாலேயே இலகுவாகவே அறிய முடியும். சுதந்திரப் பறவையாகப் பறக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் கே.பியைப் பேட்டியெடுக்க டி.பி.எஸ்.…

  17. [size=4]தமிழீழ விடுதலைப் போரை முறியடிக்க சிங்கள ஆட்சியாளர்கள் கையாண்ட அதே முறைமையூடான நகர்வுகள் புலம்பெயர் தேசங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன.[/size] [size=4]விடுதலைப் புலிகளை முறியடிப்பதற்கான அனைத்துலக அனுகூலங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்ட சிங்கள ஆட்சியாளர்கள், விடுதலைப் புலிகளை சமாதானப் பொறிக்குள் சிக்கவைத்துப் பிளவு படுத்தியது - மிக அற்புதமான, கட்டுக்கோப்பான, தியாகங்களின் உச்சத்தைத் தொட்ட விடுதலைப் புலிகளின் உள்ளேயே பல விச ஜந்துக்களை ஊடுருவ வைத்து விட்டது.[/size] [size=4]முள்ளிவாய்க்காலின் இறுதிக் கணங்கள் வரை விடுதலைப் புலிகளின் அத்தனை நகர்வுகளும் உள்ளே ஊடுருவிய ஈனத் தமிழர்களால் சிங்கள ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டு, தமிழின அழிப்பு முழுமைப்படு…

  18. தொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்.. May 27, 2019 உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களின் பின்னர், மூன்று வாரங்கள் கடந்த நிலையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், நாட்டில் நிலவுகின்ற ஒரு மோசமான வன்முறைப் போக்கை வெளிப்படுத்தியிருக்கின்றது. அது நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்ற ஆட்சி முறை என்பவற்றை உள்ளடக்கிய இறைமையுள்ள அரசாங்கத்தையும் மீறிய ஒரு கும்பலாட்சி – குண்டர்களின் ஆட்சி நாட்டில் நிலவுவதையே அடையாளப்படுத்தி உள்ளது. யுத்த வெற்றிவாத அரசியல் மனோநிலை சார்ந்த எதேச்சதிகார ஆட்சிக்கு 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு நாட்டில் நல்லாட்ச…

  19. சந்தேகங்கள் நிலவும் வரை நல்லிணக்கம் ஏற்பட வழியில்லை. அதனால் நல்லிணக்கம், நல்லுறவுக்கு நிலவும் சந்தேகங்கள் களையப்பட வேண்டும். தமிழ்பேசும் மக்களான தமிழர் மற்றும் முஸ்லிம்கள் மத்தியிலே இணக்கத்திற்கு தடையாயிருப்பது ஒருசாரார் மீது மறுசாரார் கொண்டுள்ள சந்தேகமே. ஒருசாராரது உரிமைகளை மறுசாரார் பறித்து விடுவார்களோ, தடுத்து விடுவார்களோ, ஏமாற்றி விடுவார்களோ, நம்பிக்கைத்துரோகம் செய்து விடுவார்களோ என்ற சந்தேகமே இன்று உறவுக்குத் தடையாயிருக்கின்றது. கடந்த கால நிகழ்வுகள் இவ்வாறான சந்தேகங்களுக்கு வலுச்சேர்க்கின்றன. இவ்வாறான சந்தேகங்கள் நிலவிவருவது வரலாற்று நிகழ்வுகளைத் தெளிவாக அறியாமையே என்பது கண்டறியப்படுகின்றது. இனங்களுக்கிடையே நல்லுறவு ஏற்பட்டால் நாட்டில், சமூகத்தில் நல்லுறவு மட்ட…

  20. தொடரும் தவறுகள்! போராட்டம் நடத்­து வ­தற்­கான ஜன­நா­யக வெளியை ஏற்­ப­டுத்­தி­யி ருந்தால் மட்டும் போதாது, எதற்­காகப் போராட்­டங்கள் நடத்­தப்­ப­டு­கின்­றன என் பதைக் கண்­ட­றிந்து அந்தப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண வேண்­டி­யது ஆட்­சி­யா­ளர்­களின் பொறுப்­பாகும் வடக்கில் காணி உரி­மைக­ளுக்­கான போராட்­டங்­களும், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் அர­சாங்­கத்தை பொறுப்பு கூறச் செய்­வ­தற்­கா­கவும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள போராட்­டங்­களும் மேலும் மேலும் விரி­வ­டைந்து செல்லத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. ஆயினும் அர­சாங்கம் எந்­த­வொரு பிரச்­சி­னைக்கும் தீர்வு காண்­ப­திலோ அல்­லது பிரச்­சி­னைக்கு முடிவு காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ…

  21. தொடரும் நில, கலாச்சார ஆக்கிரமிப்புகள்: புற்றுநோய் உடல் முழுக்கப் பரவ தொடங்கிவிட்டதா? முத்துக்குமார் வடமாகாணசபை செயற்படத்தொடங்கி 7 மாதங்களாகின்றன. முதலமைச்சர் விக்னேஸ்வரன் இப்போதுதான் முதன்முதலாக நெருக்கடிகள் நிறைந்த முல்லைத்தீவு மாவட்டத்திற்குச் சென்றிருக்கின்றார். வடமாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்களான ரவிகரனும், ஜெகநாதனும் அழைத்ததன் பேரிலேயே அங்கு சென்றதாகக் கூறியிருக்கின்றார். அவர்கள் அழைத்திருக்காவிட்டால் இந்தப்பயணமும் இடம்பெற்றிருக்காது. கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்றவர்களோ அல்லது அதில் இணைந்துள்ள கட்சிகளின் தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோரோ செல்லவில்லை. அவர்களுக்கு அழை…

  22. தொடரும் மீறல்கள் – பி.மாணிக்கவாசகம்… April 7, 2019 சட்டங்கள் பொதுவானவை. எவராக இருந்தாலும், அவர்களின் சமூக அந்தஸ்து, சாதி, சமயம், பதவி நிலை என்பவற்றைக் கவனத்திற்கொள்ளாமல் நீதியாகச் செயற்படுத்துவதற்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. சட்டங்களின் மூலம் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. அரச நிர்வாகமும், சமூகச் செயற்பாடுகளும், வேலைத் திட்டங்களும் நேர்த்தியான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கும் சட்டங்கள் உறுதுணை புரிகின்றன. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பதிலும், எவரும் தனது நிலைமைகள், அந்தஸ்தை மீறி மற்றவர்களுக்கு மேலானவர்கள் என்ற நிலைப்பாட்டை எடுத்து தற்குறியாகச் செயற்படுவதையும் சட்டங்கள் தடுக்கின்றன. அதேநேரம் அதனால் ஏற்…

  23. அரசே எங்கள் மகள் காணாமல் போனது எவ்வாறு... பதில் கூறு அரசே.... பதில் கூறு.., வெள்ளை வேனும் அரசுதான்.. கடத்தியதும் அரசுதான்... காணாமல் போவதும் அரசாலே.. கடத்திச் செல்வதும் அரசாலே.., குற்றம் செய்திருந்தால் கோட்டுக்கு கொண்டு வா.., எங்கள் பிள்ளைகளை மீண்டும் எங்களிடம் தா... தடுத்து வைத்திருப்போரின் பட்டியலை வெளியிடு, எனது அப்பா எங்கே? அவரை பார்ப்பதற்கு அனுமதி தா.., அனுமதி தா..., எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தந்துவிடு... இருக்கும் இடத்தைச் சொல்லிவிடு...,எங்கள் வாழ்க்கை இன்னும் தெருவில் தானா!!! இனியாவது எங்களை நிம்மதியாக வாழவிடு .. இந்தப் புலம்பல்கள் எல்லாம் எதற்காகவென்று நினைக்கின்றீர்களா.... வோறொன்றும் இல்லை. காணாமல் போன உறவுகளின் உள்ளக் குமுறல்களே இவை. …

    • 0 replies
    • 902 views
  24. தொடரும் விரிசல்! ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைத்த ஆட்சி, எதிர்பார்த்­ததைப் போன்று நாட்டின் முன்­னேற்­றத்­திற்கு வழிகாட்­ட­வில்லை. நாட்டை முன்­னேற்­ற­க­ர­மான வழியில் வழி­ந­டத்திச் செல்­லவும் இல்லை. மாறாக பொரு­ளா­தாரம் நலி­வ­டைந்­தி­ருக்­கின்­றது. முக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­ப­ட­வில்லை. ஆட்­சியில் குழப்­பங்­களும், ஆட்­சி­யா­ளர்­க­ளி­டையே அர­சியல் பனிப்போர் பகை­மை­­யுமே ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஆட்சி முறையை இல்­லாமல் செய்­வதன் மூலம் தனி­ந­பரின் ஆட்சி அதி­கார ஆதிக்­கத்­திற்கு முடிவு கட்டப் போவ­தாக 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் அர­சியல் கொள்கை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.