அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9224 topics in this forum
-
ஜெனிவாப் பிரகடனம் தமிழ் அரசியலுக்கு புதிய வழியைத் திறக்குமா? ஜெனிவாப் போரின் முதலாம் கட்டம் ஒருவாறு முடிவடைந்து விட்டது. அமெரிக்கா இவ்வளவு கரிசனையுடன் ஜெனிவாக் களத்தில் செயற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அரசுடன் தொடர்புடைய பெரிய தலைகள் எல்லாம் களத்தில் நின்றன. 100 வரையான இராஜதந்திரிகள் களத்தில் இறக்கப்பட்டனர். இறுதி நேரத்தில் வெளிவிவகார அமைச்சர் ஹில்லறி கிளின்ரனே களத்தில் நின்றார். நிஜமான சீன- அமெரிக்க இராஜதந்திரப் போர் போலவே களம் தோற்றம் பெற்றது. ஆய்வாளர்கள் சீன- அமெரிக்கப் போரின் தொடக்கப் புள்ளி என இதனை வர்ணிக்கின்றனர். சீனாவின் ஆதரவு இலங்கைக்கு கிடைத்திருக்காவிட்டால் இலங்கை மேலும் தோற்றிருக்கும். 15 வாக்குகளை அது ஒருபோதும் பெற்றிருக்காது. ஆசிய…
-
- 1 reply
- 727 views
-
-
தொக்கி நிற்கும் மாகாண சபை தேர்தல்கள் என்.கே. அஷோக்பரன் / 2019 செப்டெம்பர் 09 திங்கட்கிழமை, பி.ப. 05:09Comments - 0 ஊவா மாகாண சபையைத் தவிர்ந்த ஏனைய எட்டு மாகாண சபைகளும், அரசமைப்பின் 154E உறுப்புரைப்படி, அவற்றின் ஐந்து வருடகாலப் பதவிக்காலம் நிறைவடைந்ததன் நிமித்தமாகக் கலைந்துள்ளன. ஊவா மாகாண சபையின் பதவிக்காலமும், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவுக்கு வருகிறது. மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தின் பத்தாம் சரத்து மற்றும் அரசமைப்பின் 154E உறுப்புரை ஆகியனவற்றின்படி, மாகாண சபையொன்றின் பதவிக்காலம் நிறைவடைந்து, அந்த மாகாணசபை கலைந்த நாளிலிருந்து, நான்கு வார காலத்துக்குள், குறித்த மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவித்தலை, தேர்தல் ஆணைக்குழு விடுக்க வேண்டும் என்கின்றது.…
-
- 0 replies
- 521 views
-
-
அப்பட்டமான சாட்சியம் – பி.மாணிக்கவாசகம் September 25, 2019 முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் கொலம்பே மேதாலங்காதேரருடைய சடலம் பலாத்காரமாக எரியூட்டப்பட்டதன் மூலம் நீதித்துறையின் முகத்தில் கரிபூசப்பட்டிருக்கின்றது. நீதிமன்றத்தின் உத்தரவைப் புறக்கணித்து, அதற்கு முரணான வகையில் ஓர் இந்து ஆலய தீர்த்தக்கரையில் பௌத்த பிக்கு ஒருவருடைய சடலம் இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளது. பேரின மத அகங்காரத்துடன் மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான பௌத்த மதத் திணிப்பையே இது வெளிப்படுத்தி உள்ளது. சிங்கள பௌத்த தேசியத்தை முழு மூச்சாகக் கொண்டுள்ள பௌத்த மதச் சண்டித்தனம் இந்தச் சம்பவத்தில் மிகக் கோரமாக தலை நிமிர்த்தி இருக்கின்றது. சிங்…
-
- 0 replies
- 704 views
-
-
இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை - அரசுகள் தலையிடாக் கொள்கை லக்ஸ்மன் இழுவைப் படகுகள் மூலம் இழுத்தெடுக்கப்படுவது மீன்கள் மாத்திரமல்ல, எதிர்கால தலைமுறையையும், எதிர்கால வாழ்க்கையையுமாகும். இவ்வாறு அழிக்கப்படுமானால், இன்னும் 15, 20 வருடங்களுக்குப் பிறகு எங்களது கடலில் எதுவுமே இல்லாது போவதுடன், கடல் பாலைவனமாக மாறுகின்ற நிலை ஏற்படும். இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் இந்நாட்டில் உள்ள ஐம்பதாயிரம் மீனவ குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வட மாகாண கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இழுவைப் படகுகள் என்பது இந்தியாவிலும் தடை செய்யப்பட்டிருக்கின்ற காரணத்தினால், இந்தியாவில் இருக்கின்ற மீனவர்கள் கூட இதற்கு வன்மையா…
-
- 0 replies
- 209 views
-
-
19 APR, 2025 | 01:12 PM மன்னாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கு முன்னர் 'பத்து தடவைகளுக்கு மேல்' சிந்தித்தே தீர்மானிக்கப்படும் எனக் கூறியிருந்தார். வெசாக் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்குகளைப் பெறுவதற்காக, நிதியமைச்சர் பதவியை வகிக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பிரச்சார மேடைகளில் மீண்டும் மீண்டும் வெளியிடும் கருத்துகள் கடுமையான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. ஆளும் கட்சி அதிகாரத்தைப் பெறும் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எந்தப் பொறுப்பும் இல்லாமல் மத்திய அரசு நிதியளிக்கும் எ…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
‘ஆடு’ நனைகிறதென்று ‘அமெரிக்கா’ அழுததாம்... ‘கேட்கிறவன் கேனயனாய் இருந்தால்....’ என்று தொடங்குகிற பழமொழி ஒன்றுண்டு. சில நாள்களாகவே அது, என் மனதில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை இராணுவத் தளபதிக்கு, அமெரிக்கா பயணத் தடை விதித்திருக்கிறது. இது, இரண்டு வகையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. ஒருபுறம், உள்நாட்டில் அமெரிக்காவுக்கு எதிரான மனோநிலை தீவிரமடைந்துள்ளது. இது, எதிர்வரும் பொதுத்தேர்தலில், ஆளும் கூட்டணி எதிர்பார்த்திருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நோக்கி, அவர்களை நகர்த்தும். மறுபுறம், தமிழ்த் தரப்புகள் அமெரிக்கா, இன்னமும் தமிழர்கள் பக்கம் நிற்கிறது என்ற ‘புருடா’வை, இன்னொரு முறை எந்தவொரு வெட்கமும் இல்லாமல் சொல்வதற்கும் வழ…
-
- 2 replies
- 1.2k views
-
-
கறுப்பு ஜூலையை விடவும் பெரிய வெட்கக்கேடு! July 23, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இனவன்செயல்களுக்கு பிறகு சரியாக 42 வருடங்கள் உருண்டோடி விட்டன. ஒரு வாரத்துக்கு மேலாக தலை விரித்தாடிய வன்செயல்களின் கொடூரம், அதனால் நேர்ந்த உயிரிழப்புகள், சொத்து அழிவுகளுக்கு அப்பால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட வேதனை அதிர்ச்சியும் உளவியல் தாக்கமும் கணிப்பிடமுடியாதவை. 1983 ஜூலை 22 வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணக் குடாநாட்டில் திருநெல்வேலியில் விடுதலை புலிகள் நடத்திய கெரில்லாத் தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் பலியான சம்பவம் அன்றைய ஜெயவர்தன அரசாங்கத்திற்குள் ஆதிக்கம் செலுத்திய சிங்கள இனவாதச் சக்திக…
-
- 1 reply
- 258 views
- 1 follower
-
-
நோக்கம் திசை மாறாமல் இருக்கட்டும் லக்ஸ்மன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80ஆவது அமர்வில் கடந்த 25ஆம் திகதி உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை உலகத் தலைவர்களுக்கு ஒப்புவித்ததாகவே நோக்க முடிகிறது. இலங்கையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.போதைப்பொருள் பிரச்சினையும், ஊழல், பொருளாதாரப் பிரச்சினைகளே இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை. அதற்காக அனைத்து நாடுகளும் ஒத்துழையுங்கள், ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுபோன்ற தொனியில் தன்னுடைய உரையினை நிகழ்த்திவிட்டு, ஜப்பானுக்குப் பயணமாகியிருக்கிறார். அங்கு ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறுகின்ற ‘எக்ஸ்போ 2025’ கண்காட்சியில் பங்கேற்றார். ஜப்பான் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். ஜனாத…
-
- 0 replies
- 144 views
-
-
நாற்பதாவது ஆண்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம்: எமக்கான காலங்களை நாமே உருவாக்குவோம் நிர்மானுசன் பாலசுந்தரம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிறப்பு சுதந்திரமும் இறைமையுமுடைய தமிழீழத் தனியரசே தமிழர் தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்தி பாதுகாக்கும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது ஆண்டில் காலடி பதித்துள்ளது. தமிழர்களின் தனித்துவ அடையாளங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், ஒற்றையாட்சியை மையப்படுத்திய சிறிலங்காவின் 1972ம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டமை, 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்' தோற்றத்திற்கும் அதன் வழிவந்த தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கோரிக்கைகளுக்கும் வித்திட்டது. 197…
-
- 1 reply
- 508 views
-
-
பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை காரணிகள் October 22, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — திருகோணமலை கடற்கரையில் 2006 ஜனவரி 2 ஆம் திகதி விசேட அதிரடிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களில் ஒருவரான ரஜிஹரின் தந்தையார் வைத்தியக் கலாநிதி காசிப்பிள்ளை மனோகரன் செப்டெம்பர் பிற்பகுதியில் லண்டனில் காலமானார். மகனின் கொலைக்கு நீதி கோரி தனது இறுதிமூச்சு வரை போராடிய அவரையும் இதுவரையில் நீதி மறுக்கப்பட்ட சகலரையும் நினைவுகூருவதற்கு ‘மக்கள் செயல்’ என்ற அமைப்பு அக்டோபர் 6 ஆம் திகதி ‘கானல் நீதி’ என்ற தொனிப் பொருளில் யாழ்நகரில் தந்தை செல்வா கலையரங்கில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்வில் உரையா…
-
-
- 1 reply
- 188 views
-
-
ஈழத் தமிழ் லொபியின் தோல்வி? - யதீந்திரா யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் கழிந்துவிட்டது. இந்தக் காலகட்ட தமிழர் அரசியலை எடுத்து நோக்கினால், பாரபட்சமில்லாமல் அனைத்து தமிழ்த்தேசிய தரப்பினரும் சர்வதேச சமூகம் தொடர்பிலேயே தமது கரிசனையை வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். ‘சர்வதேச சமூகம் எங்களை கைவிடாது’ – என்பதுதான் அனைவரதும் சுலோகமாக இருந்தது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் – கூட்டமைப்பின் கொள்கையை விமர்சித்து வேறு வழியில் சென்றவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. அதே போன்று ஜரோப்பிய மைய தமிழ் புலம்பெயர் அமைப்புக்களான நாடுகடந்த அரசாங்கத்திற்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கும் கனடிய தமிழ் காங்கிரஸ் (CTC) மற்றும் USTAG போன்ற தாராளவாத புலம்பெயர் அமைப்புக்களுக்கும் இடையி…
-
- 0 replies
- 454 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடரில் நடைபெறுவது என்ன? விளக்குகின்றார் கிருபாகரன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இலங்கை விவகாரமும் இந்தக் கூட்டத் தொடரில் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்தும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருடகால அவகாசம் அடுத்த மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வரும் போது என்ன நடைபெறும் என்பதையிட்டும் பிரான்ஸிலிருந்து செயற்படும் தமிழ் மனித உரிமைகள் இயக்கத்தின் தலைவர் சா.வி.கிருபாகரன் தினக்குரல் இணையத்துக்கு விளக்குகின்றார். கடந்த சுமார் மூன்று தசாப்த காலமாக ஜெனீவாவிலிருந்து கிருபாகரன் செயற்பட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. http://thina…
-
- 0 replies
- 324 views
-
-
வடக்கைக் குழப்பும் நிகழ்ச்சி நிரல் வடக்கில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் முயற்சிகள், சாண் ஏறினால் முழம் சறுக்குகின்ற கதையாகவே நீண்டு செல்கின்றன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தையடுத்து, பெரிதும் நம்பிக்கையோடு இருந்த தமிழ் மக்களுக்கு ஏமாற்றங்களும் இழப்புகளும் தான் மிஞ்சி நிற்கின்றன. அரசியல்த் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு, படைக்குறைப்பு, மீள்குடியேற்றம், காணாமற்போனோர் பிரச்சினைக்குத் தீர்வு, போர்க்குற்ற விசாரணை என்று தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் எதிர்பார்த்த விடயங்கள் ஏராளம். ஆனால், ஆட்சிமாற்றத்துக்குப் பிந்திய காலகட்டம் தமிழ் மக்களின் நம்பிக்கைகளை ஒவ்வொன்றாகச…
-
- 0 replies
- 440 views
-
-
சொதப்பலான, சிதம்பலான ஒரு வெளியுறவுப் பொறிமுறைக்குள், தொடர்ந்தும் குதிரை விடுமா தமிழ்த்தேசம்? நிலாந்தன்… October 17, 2020 தமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை… கஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் 13ஆவதுதிருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று கூறியிருக்கிறார். இந்தியா தொடர்பான அக்கட்சியின் வெளியுறவுக் கொள்கையாக இதை எடுத்துக் கொள்ளலாமா? அதாவது இந்திய இலங்கை உடன்படிக்கை எனப்படுவது இந்தியா அதன் பிராந்திய நலன் நோக்கு நிலையிலிருந்து இலங்கையோடு செய்து கொண்ட ஓர் உடன்படிக்கை. எனவே இப்பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக தாங்கள் இயங்கப்போவதில்…
-
- 0 replies
- 345 views
-
-
ஜோ பைடன் - சிங்களப் பத்திரிகைகளின் கற்பனை- அற்பசொற்ப ஆதரவையும் இழக்கப்போகும் ஈழத்தமிழர்கள் —இந்திய- இலங்கை அரசுகளைக் கடந்து ஈழத்தமிழர் விவகாரத்தில் தலையிட்டு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதொரு அவசியம் அமெரிக்காவுக்கு இல்லவேயில்லை. அமெரிக்கா தலையிடக் கூடிய முறையில், பூகோள அரசியல் நிலமைகளை அவதானித்துக் காய்களை நகர்த்தும் அரசியல் ஈடுபாடுகள் எதிலும் தமிழ்த் தேசியக் கட்சிகள் கவனம் செலுத்திய வரலாறுகளும் இல்லை—- -அ.நிக்ஸன்- அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமெரிக்கர்களையும் ஆசிய நாட்டவர்களையும் முக்கியமான பதவிகளுக்கு நியமிப்பதாகச் சிங்கள – ஆங்கில பத்திரிகைகள், மிகைப்படுத்திச் செய்திகளையும் செய்திக் கட…
-
- 1 reply
- 906 views
-
-
இலங்கையில் முதலாவது ஆயுதப் போராட்டம்: 50 ஆண்டுகள் பூர்த்தியாகும் ஜே.வி.பி கிளர்ச்சி -எம்.எஸ்.எம். ஐயூப் இலங்கையில், தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி, அரசுக்கு எதிராகப் போராடும் முன்னரே, தெற்கில் சிங்கள இளைஞர்கள், அரச எதிர்ப்புக் கிளர்ச்சியில் முதலில் ஈடுபட்டனர். வடக்கில், முதலாவது அரச எதிர்ப்பு வேட்டு, 1975ஆம் ஆண்டே தீர்க்கப்பட்டது. அதன் போது, யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டார். தெற்கில் ஆயுதப் பேராட்டம், 1971ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அந்த ஆயுதப் போராட்டத்துக்கு, நேற்று முன்தினம் (05) ஐம்பது ஆண்டுகள் பூர்த்தியாகியது. மக்கள் விடுதலை முன்னணியே அந்தக் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியது. அது, வடக்கு - கிழக்கில் இடம்பெற்றதைப் போல…
-
- 0 replies
- 719 views
-
-
தமிழகத் தலைமைகளின் அத்துமீறல் ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு எப்போதும் துணை நின்று வந்தது தமிழ்நாடு. நெருக்கடியான காலகட்டங்களில் கூட, தமக்கான தனிப்பட்ட பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல், தமிழக மக்களும், பல அரசியல் தலைவர்களும் ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்தனர், உதவிகளைச் செய்தனர், போராட்டங்களை நடத்தினர். இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்- அவர்களைக் காப்பாற்றக் கோரி, சர்வதேசத்தையும், இந்திய மத்திய அரசையும் தலையிட்டு, போரை நிறுத்தக் கோரி தமிழகத்தில் உள்ள பல உறவுகள் உயிரைக் கூடக் கொடுத்திருக்கிறார்கள். அந்தளவுக்கு ஈழத் தமிழர்களுக்கும்,…
-
- 0 replies
- 530 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் சீனா மீதான தடையும் கொழும்பு போட்சிற்றிச் சட்டமும் –சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அதிகளவு அக்கறையை வெளிப்படுத்தியது போன்று. சீனாவின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கின்ற இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை மறுக்கப்படுகின்றமை இந்த நாடுகளுக்குத் தெரியாதா?– -அ.நிக்ஸன்- 2004 ஆம் ஆண்டு பாக்கிஸ்…
-
- 1 reply
- 327 views
-
-
வடபுலத்தின் சிலைகளும் வரலாறுகளும் வரலாறும் இலக்கியமும் வெவ்வேறு நோக்கம் கொண்டவை. உள்ளதை உணர்ச்சிக் கலப்பின்றி கூறமுயல்வது வரலாறு. உணர்ச்சியும் கற்பனையும் கலந்து அமைவது இலக்கியம். எனது பண்டாரவன்னியன் நாடகம் இலக்கியமேயன்றி, வரலாறு அல்ல. இதை விமர்சகர்கள் மனதில் கொள்ள வேண்டும். முல்லைமணி வே.சுப்பிரமணியம் 2015 ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக முத்தெழில் சஞ்சிகைக்கான ஆசிச்செய்தி. இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் மகாத்மா காந்தி, விவேகானந்தர், சேக்கிழார், கம்பர், திருவள்ளுவர் மற்றும் ஆலயங்களில் சமயக் குரவர்களின் சிலைகள் ஆகியன நிறுவப்பட்டுள்ளன. இவற்றிற்கெல்லாம் முறையான ஆதாரங்களுடன் வர…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 929 views
-
-
பிரிட்டனில் விரைவில் மீண்டும் பொதுத்தேர்தல் வருமா? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-06-18#page-7
-
- 0 replies
- 245 views
-
-
ஏறும் விலை; சரியும் பொருளாதாரம்; திணறும் மக்கள்: அமைதி காக்கும் எதிர்க்கட்சி என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan “தன் மே தவஸ்வல காஸ் அதி நே காம உயன்னத்த காஸ் வளின் ஹொந்தட்ட தியனவனே காஸ் காஸ் நா மேக தமய் மே ஆண்டுவே பரிகம” (இப்ப இந்த நாள்களில காஸ் கிடைக்குது என்ன காஸில் தானே சமையல் நல்லா இருக்குது தானே காஸ் காஸ் இல்லை இதுதான் இந்த அரசாங்கத்தின் இயலாத்தன்மை). “ஹபய் இதின் றட இல்லுவா, வெனஸ துன்னா, வெனஸ தமய் மே பேன்னே அத காஸ் டிகத் நதிவெலா தியனவா காஸ் டிக சபயன்ன பரி ஆண்டுவக் மே தென பொறொந்துவ சபயய்த நா” (ஆனால், நாட்டைக் கேட்டார்கள்; மாற்றத்தைக் கொடுத்தோம்; மாற்றம் தான் இப்ப நல்லாத் தெரியுது இன்று காஸ் கூட இல்லாமல் இருக்குது காஸ் வழங்க இயலாத அரசாங்…
-
- 0 replies
- 435 views
-
-
காணாமல் போனோர் குறித்த அலுவலகம் நீதியை தருமா? ரொபட் அன்டனி சீயாராலியோன் என்ற நாட்டில் இவ்வாறானதொரு பொறிமுறை முன்னெடுக்கப்பட்டு ஏழு வருடங்களாக விசாரணை நடத்தப்பட்டது. 200 மில்லியன் டொலர் செலவழிக்கப்பட்டு 24 பேரே பொறுப்புக்கூறவேண்டியவர்களாக கண்டுபிடிக்கப்பட்டனர். அதேபோன்று கம்போடியாவிலும் இதுபோன்றதொரு பொறிமுறை முன்னெடுக்கப்பட்டு பல வருடங்களாக செயற்பட்டு 200 மில்லியன் டொலர் செலவழித்து ஐந்துபேரை மட்டுமே பொறுப்புக்கூறவேண்டியவர்களாக கண்டுபிடித்தனர் - கலாநிதி ஜெகான் பெரேரா ஏதாவது ஒரு பொறிமுறையை முன்னெடுத்து இந்த காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வுகாணப்…
-
- 0 replies
- 553 views
-
-
ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? February 28, 2022 — வி. சிவலிங்கம் — ஐரோப்பாவில் மூன்றாம் உலகப் போருக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுகின்றன. ரஷ்யாவின் கொல்லைப்புறத்தை நோக்கி நேட்டோ படைகள் நகர்வதாக ரஷ்யாவும், ஐரோப்பாவின் கொல்லைப்புறத்தை நோக்கி ரஷ்யா நகர்வதாகவும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் ஆரம்பமாகியுள்ளன. போர் ஆரம்பித்துள்ள இவ் வேளையில் நாம் சில கேள்விகளோடு இக் கட்டுரையை ஆரம்பிக்கலாம். – இப் போரின் தாற்பரியங்கள் என்ன? – நேட்டோ நாடுகளின் சதி வலைக்குள் உக்ரெய்ன் வீழ்ந்துள்ளதா? – உக்ரெயின் வலதுசாரி தேசியவாதிகளினதும், நாக்ஸிஸ தரப்பினரதும் இலக்கு என்ன? – இப்…
-
- 18 replies
- 1.3k views
-
-
‘இப்போது யார் சாதி பார்க்கிறார்கள்?’ இலங்கையின் வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காணப்படும் சாதியின் தாக்கம் தொடர்பான கலந்துரையாடல்கள் அதிகரித்திருக்கின்றன. இந்தக் கலந்துரையாடல்கள் ஆரம்பித்த புள்ளியென்பது, எந்தளவுக்கு ஆரோக்கியமானது என்பது கேள்விக்குரியதாக இருந்தாலும், முக்கியமான முடிவுகளைக் கொண்டுவரக்கூடிய கலந்துரையாடலாக இது மாற வேண்டுமென்பதே, அநேகமானோரின் அவாவாக இருக்கிறது. அருளினியன் என்ற எழுத்தாளர் எழுதிய “கேரள டயரீஸ்” என்ற புத்தகம், யாழ்ப்பாணத்தில் அண்மையில் வெளியிடப்பட முயலப்பட்டபோது, சர்ச்சைகள் எழுந்திருந்தன. இந்தியாவின் சஞ்சிகையொன்றில் அவர் எழுதிய ஆக்கம் சம்பந்தமாகவே சர்ச்சை காணப்பட்டது. ஆனால், அந்தச் சர்ச்சையையும் தாண்டி, அவரது தற்போதைய நூல், …
-
- 7 replies
- 1.3k views
-