அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9224 topics in this forum
-
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஒரு பொதுவான தமிழ் நம்பிக்கை. ஆனால், ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை கடந்த நான்காண்டுகளாக தை பிறந்தும் வழி பிறக்கவில்லை. இவ்வாண்டிலாவது வழி பிறக்குமா? அல்லது நாளை மற்றொரு நாளே என்ற கவிதை வரியைப் போல இந்த ஆண்டும் மற்றொரு ஆண்டாக மாறிவிடுமா? முன்னைய நான்கு ஆண்டுகளோடும் ஒப்பிடுகையில், இவ்வாண்டு வேறுபட்டதாக அமையக்கூடும் என்று யாராவது நம்புவார்களாயிருந்தால் அவர்கள் தமிழர்களின் அரசியலோடு சம்பந்தப்பட்ட இரண்டு முக்கிய நிகழ்வுகளைக் கருதியே அவ்வாறு கூற முடியும். வரும் ஜெனிவாக் கூட்டத் தொடரும் அதன் பின் வரப்போகும் இந்தியப் பொதுத் தேர்தலுமே அந்த இரு முக்கிய நிகழ்வுகளாகும். இவையிரண்டும் இந்த ஆண்டைத் திருப்பங்களுக்குரிய ஆண்டாக மாற்றுமா? முதலில் ஜெனி…
-
- 4 replies
- 866 views
-
-
திருமலையில் குறைவடையும் தமிழ் பிரதிநித்துவம் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 13 உள்ளூராட்சி சபைகளில் 1980 ஆம் ஆண்டுக்குப் பின் 10 க்கு மேற்பட்ட உள்ளூராட்சி சபைகளில் தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாது ஆக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள மூன்று உள்ளூராட்சி சபைகள் கூட, தமிழ் மக்களுடைய கைகளிலிருந்து பறிபோகும் அபாயத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. புதிய உள்ளூராட்சி சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் வட்டாரப் பிரிப்புகள், எல்லை நிர்ணயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என, பொது மக்கள் தமது விசனத்தை தெரிவித்துவருவதுடன், புத்திஜீவிகள் விமர்சித்தும் வருகின்றனர். 11 பிரதேச செயலாள…
-
- 1 reply
- 1.1k views
-
-
ராஜபக்ஷக்களின் ஐந்து கவசங்கள் 17 Sep, 2022 | 12:33 PM சி.அ.யோதிலிங்கம் ஜெனிவா திருவிழா உச்சக் கட்டத்தைஅடையத்தொடங்கியுள்ளது. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையின் சாராம்சம் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்கா தலைமையில் 6 நாடுகள் இணைந்துகொண்டு வரவுள்ள புதிய பிரேரணையின் வரைபு கடந்த 13ஆம் திகதி பகிரங்கப்படுத்தப்பட்டது. இந்த மாதம் 27ஆம் திகதி இப்பிரேரணை விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட இருக்கின்றது. எப்போதும் கடைசி நேரத்தில் இந்தியா திருத்தங்களை செய்ய முன்வருவதால் இந்திய திருத்தங்களுடன் தான் புதிய பிரேரணை வெளிவருவதற்கு வாய்புகள் இருக்கின்றன. …
-
- 2 replies
- 348 views
- 1 follower
-
-
சிறிலங்காவில் அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கான முக்கியமான கேந்திர நிலையமாக திருகோணமலை விளங்குகிறது என்று சிலோன் ருடே ஆங்கில நாளிதழில், உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார். இதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் கார்வண்ணன். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடம் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். சீன அரசாங்கத்துடன் இணைந்த நிறுவனம் ஒன்று திருகோணமலையில், விமானப் பராமரிப்பு திட்டம் ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி அளித்திருந்தால், அதுபற்றித் தெரியப்படுத்துமாறு அவர் கோரியிருந்தார். அந்த திட்டம், இந்திய - சிறிலங்கா உடன்பாட்டை மீறுகின்ற ஒன்று என்றும், அது இந்தியாவுக்குப் ப…
-
- 0 replies
- 788 views
-
-
இந்திய தேர்தல் ஆணையம் புதிதாக ஆரம்பிக்க பட்ட கட்சியினை மாநில கட்சியாக அங்கிகாரம் செய்ய சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி குறிபிட்ட விழுக்காடு ஒட்டுகளும். சட்டமன்றத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ள ஒரு புதிய கட்சியினை தேர்தல்ஆணையம் அங்கிகாரம் அளித்து ஒரு சின்னத்தை அந்த கட்சிக்கு அளிக்கிறது. இவ் நிபந்தனையினை நிறைவேற்ற பாமக , மாதிமுக போன்ற கட்சிகள் பல தேர்தல்களில் முயன்று, மேற்படி நிபந்தனை நிறைவு செய்ய இயலாமல்,கடைசியில் திமுக அல்லது அதிமுக போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மேற்படி நிபந்தனையினை நிறைவு செய்து அங்கிகாரம் பெற்றன. தற்போது, நடிகர் விஜயகாந்த் கட்சி அதிக விழுக்காடு ஓட்டு பெற்றும் , சட்டமன்றத்தில் இரண்டு உறுப்பினர் இல…
-
- 0 replies
- 1.5k views
-
-
வேற்றுமையால் தீமையே விளையும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எழுதிய ‘நீதியரசர் பேசுகிறார்’ எனும் நூலின் வெளியீட்டு விழா இம்மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்ந்தது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பின்வருமாறு கூறியிருக்கிறார். நான் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப்பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தபோது அவர் மஹிந்த ராஜபக் ஷவுடன் பேசுமாறு கூறினார். அதன்படி நாம் மஹிந்தவைக் கண்டதும் மஹிந்த என்னைப்பார்த்து எனது தோல்விக்கு நீரே காரணம் என்றார். உடனே நான் அதற்கு…
-
- 0 replies
- 375 views
-
-
மறைமுக நிகழ்ச்சி நிரல் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களாகும்;. இதன் காரணமாகவே வடக்கும் ,கிழக்கும் தமிழர்களின் தாயக மண் என்று உரிமை கொள்ளப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே, வடக்கும் ,கிழக்கும் இணைந்த தாயக பிரதேசத்தில் சமஷ்டி முறையிலான தன்னாட்சி உரிமைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்பது ஒருபுறமிருக்க, அந்த பிரதேசங்களில் தமிழ் மக்களின் இருப்பே கேள்விக்குறிக்கு ஆளாகும் வகையில் நிலைமைகள் மோசமடைந்து செல்வதையே காண முடிகின்றது. வரலாற்று வாழ்விடங்களில் தமது ஆட்சி உரிமையை நிலை நிறுத்தி கொள்வதற்கான தமிழ் மக்களின் கோரிக்கை…
-
- 0 replies
- 1k views
-
-
ஆட்சிமுறை சர்வதேச நாணய நிதியத்தின் ‘ராடருக்குள்’ வரும் முதல் ஆசிய நாடாக இலங்கை Veeragathy Thanabalasingham on March 27, 2023 Photo, The New York Times இலங்கை அரசாங்கம் கடந்த செப்டெம்பரில் சர்வதேச நாணய நிதியத்துடன் கண்ட உடன்பாட்டுக்கு அதன் நிறைவேற்று சபை ஏழு மாதங்களுக்கு பிறகு கடந்தவாரம் (மார்ச் 20) அங்கீகாரம் வழங்கியதையடுத்து விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதியாக (Extended Fund Facility) 300 கோடி அமெரிக்க டொலர்கள் கடனுதவி கிடைத்திருக்கிறது. நான்கு வருட காலத்தில் எட்டு தவணைகளில் வழங்கப்படவிருக்கும் இந்த கடனுதவியின் முதல் தவணைக் கொடுப்பனவு 30 கோடி 30 இலட்சம் டொலர்கள் உடனடியாகவே கடந்த வாரம் கிடைத்தது. இதில் 12 கோடி 10 இலட்…
-
- 0 replies
- 878 views
-
-
இலங்கையில் அதிகாரப் பரவலாக்கலும் பார்த்தசாரதியின் பங்களிப்பும் இலங்கை அரசியலிலும் இனங்களுக்கிடையிலான உறவுகளிலும் ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இனவாத வன்செயல்களுக்கு ( கறுப்பு ஜூலை) பிறகு 35 வருடங்கள் கடந்தோடிவிட்டதை முன்னிட்டு கடந்த மாதம் கட்டுரைகளை எழுதிய அரசியல் ஆய்வாளர்கள், விமர்சகர்களில் அனேகமாக சகலருமே ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் அனுசரணையுடன் நாடு பூராவும் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அந்த மிலேச்சத்தனமான வன்செயல்களே இலங்கையின் இனமுரண்பாட்டுப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிடவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது என்பதையும் இறுதியில் 1987 ஜூலை 29 இந்திய --இலங்கை சமாதான உடன்படி…
-
- 0 replies
- 437 views
-
-
தமிழீழ விடுதலை புலிகள், மே 2009ம் ஆண்டு வரை, தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகளாக விளங்கியவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிறிலங்கா அரசிடம் கூலி பெற்ற சிலர் கடந்த சில வருடங்களாக இவ்வியக்கத்தை சின்னபின்னமாக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலை புலிகளை வெற்றி கொண்டது யார் என்பதை ஆராயும் பொழுது, தேர்தல் பிரச்சார மேடைகளில், மைத்திரிபால சிறிசேனவின் சார்பணியினரான – சந்திரிக்க குமாரதுங்க, தளபதி சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர போன்றோர் தமது நடவடிக்கைகளினாலே தமிழீழ விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டார்களென வீரம் பேசுகின்றனர். மறுபுறம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தானும் தனது சகோதரருமான பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரே வெற்றி கொண்டத…
-
- 0 replies
- 1.4k views
-
-
13 படும்பாடு August 4, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு 45 வருடங்களுக்கும் அதிகமான காலமாக நடைமுறையில் இருந்துவருகிறது. இதுவரையில் அதற்கு 21 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. பதவியில் இருந்த ஜனாதிபதிகள் தங்களது அரசியல் நலன்களுக்கு வசதியான முறையில் கொண்டுவந்த திருத்தங்களே — அடிப்படையில் ஜனநாயக விரோதமான ஏற்பாடுகளைக்கொண்ட திருத்தங்களே அவற்றில் அதிகமானவை எனலாம். ஆனால், அத்தகைய ஜனநாயக விரோத திருத்தங்களையும் விட மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதை நோக்கமாகக் கொண்ட — ஜனநாயக பரிமாணத்தைக் கொண்ட 13 வது திருத்தமே மிகவும் நீண்டகாலமாக கடுமையான அரசியல் சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. 1…
-
- 0 replies
- 786 views
-
-
ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு : ஸ்கொட்லாந்து, வடஅயர்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளின் சுயாட்சி முறைகள் – பகுதி 1 கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons) கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள் (constitutional princ…
-
- 3 replies
- 714 views
-
-
இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள புதிய அரசு, ராஜபக்ச சகோதரர்களின் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் விசாரணகளையும் வழக்குகளையும் தொடுத்து வருகின்றது. ராஜபக்ச சகோதரர்கள் தமது ஆட்சிக் காலம் முழுவதும் ஈழ மக்களுக்கு எதிராக பல்வேறு அநீதிகளை இழைத்தமை குறித்து யாரும் எதுவும் பேசவில்லை. ராஜபக்ச சகோதரர்கள் தங்கள் குடும்ப சர்வாதிகார ஆட்சியில் செயத மாபெரும் குற்றம் ஈழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றமே. ஈழ மக்கள் ஒன்றரை லட்சம் பேரை படுகொலை செய்து மிகக்கொடிய போர்க்குற்றங்களை அரங்கேற்றிய ராஜபக்சக்களை விசாரிக்க சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கு மாத்திரம் இலங்கையின் புதிய ஆட்சியாளர் தயங்குவது ஏன்? முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக…
-
- 0 replies
- 331 views
-
-
திருகோணமலையை வசப்படுத்திய மோடி! மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில், இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்ட ,திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் விவகாரத்துக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தின் போது ,திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை, இந்தியாவின் ஐ.ஓ.சி (இந்தியன் ஒயில் நிறுவனம்) ஊடாக புனரமைப்பதற்கு இரு நாடுகளும் இணைந்து உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. 13 ஆண்டுகளுக்கு முன்னர், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கமைய.திருகோணமலை எண்ணெய்க் குதங்களின் மீதான கட்டுப்பாட்டை இந்தியா தன்வசம் எடுத்துக் கொண்டிருந்தாலும், மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அந்த உடன்பாடு …
-
- 0 replies
- 296 views
-
-
இந்தியா - பாகிஸ்தான்: போரின் மொழி சொல்லும் கதைகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 மார்ச் 07 வியாழக்கிழமை, பி.ப. 05:43Comments - 0 போரை விரும்புகிறவர்கள் போரில் பங்கேற்பதில்லை; போரில் மரிப்பதில்லை; அவர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே. போரின் மொழியை, அவர்களே உரைக்கிறார்கள்; ஊடகங்களில் கூவுகிறார்கள்; அவர்களே, போரை விற்கவும் செய்கிறார்கள். முன்பு, போர்களுக்காக ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இப்போது, உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களை விற்பதற்காகப் போர்கள் உருவாக்கப்படுகின்றன. போர், மிகப் பெரியதொரு வியாபாரம். அது, மரண ஓலங்களையோ, இழந்த அவயவங்களையோ, அநாதைகளையோ அறியாது. அதையே தொடர்ந்தும் சிலர் உரைக்கிறார்கள்; தேசபக்தியின் பெயரால், தேசியத்தின் பெயரால் அ…
-
- 0 replies
- 503 views
-
-
இந்திய வெளி விவகார அமைச்சின் இலங்கைப் பயணமும் தேசிய நல்லிணக்கமும்-பா.உதயன் External Affairs Minister conveyed to President Rajapaksa, India’s expectation that the Sri Lankan government will take forward the process of national reconciliation to arrive at a solution that meets the aspirations of the Tamil community for equality, justice, peace and dignity”. இலங்கையின் அரசியல் அதிகார மாற்றத்தின் பின் முதல் முதலாக இந்திய வெளி விவகார அமைச்சர் இலங்கைக்கு விஷயம் செய்திருக்கிறார்.ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் ஈழ தமிழருக்கான தேசிய நல்லிணக்கம் சம்மந்தமாக பேசி இருக்கிறார்.ஈழத் தமிழர்கள் சம உரிமையுடனும் சமத்துவமாகவும் கண்ணியமாகவும் வாழ வழி ஏற்பட வேண்டும் என இலங்கை அரசிட…
-
- 0 replies
- 368 views
-
-
-
- 0 replies
- 877 views
-
-
இது போர்க்களமல்ல; அரசியற் களமே! September 29, 2025 — கருணாகரன் — மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மாகாணசபைகளுக்கு மேலான (13+) அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் இதுவரையிலும் வலியுறுத்திக் கொண்டிருந்தன தமிழ்த்தேசியக் கட்சிகள். இதற்காக இலங்கை அரசை மட்டுமல்ல, இந்திய அரசையும் கோரிக் கொண்டிருந்தன. இந்தக் கோரிக்கையோடு கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரலாயத்துக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள துணைத்தூதரகத்துக்கும் பல தடவை சென்று முறையிட்டும் பேசியும் வந்திருக்கிறார்கள். 23.09.2025 அன்று கூட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் இதற்காக இந்தியத் தூதரைச் சந்தித்திருக்கின்றனர். ஆனால், மாகாண சபைகளுக்கான தேர்தல…
-
- 0 replies
- 111 views
-
-
மனிதாபிமானத்தின் தராசில் இனவழிப்பும் இனச் சுத்திகரிப்பும்: எது கனமானது? Photo, THE ECONOMIST இனவழிப்பு (Genocide) – இன சுத்திகரிப்பு (Ethnic Cleansing) இரு வார்த்தைகளில் உள்ள நுண்ணரசியல் குறித்து விளங்கிக்கொள்ள வேண்டியதொரு புள்ளியில் இன்று நாம் இருப்பதாகத் தோன்றுகின்றது. ஓர் இன, மத அல்லது சமூகக்குழுவை முழுமையாக அழித்துவிடும் நோக்கத்துடன் திட்டமிட்டு செய்யப்படும் கொலைகள் இனவழிப்பு எனப்படுகின்றது. இது பல்வேறு முறைகளில் முன்னெடுக்கப்படலாம். கொலைகள், பாலியல் வன்முறைகள், மொழி மற்றும் கலாசார ஒழிப்புக்கள் இதனுள் உள்ளடங்கும். இது சர்வதேச சட்டத்தின் கீழ் (1948 UN Genocide Convention) தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதொரு குற்றமாகும். இதன் ஒரே நோக்கு குறிப்பிட்ட குழுமத்தினை அழிப்பது மட…
-
- 0 replies
- 128 views
-
-
புயல் ஓய்ந்த பின் சந்தித்த காட்சிகள் – நிலாந்தன். நாடு புயலில் சிக்கிச் சின்னாபின்னமாகி அதிலிருந்து முழுமையாக மீண்டெழாத கடந்த வாரம், யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு (டி.ரி.என்.ஏக்கும்) இடையே ஒரு சந்திப்பு இடம் பெற்றிருக்கிறது. புயலின் அழிவுகளில் இருந்து மக்கள் முழுமையாக மீண்டு எழவில்லை. சிதைந்த வீதிகள் பல இப்பொழுதும் திருத்தப்படவில்லை. உடைந்து தொங்கும் பாலங்கள் பல இப்பொழுதும் முழுமையாகக் கட்டப்படவில்லை.நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்கள் முழுமையாக வீடு திரும்பவில்லை. சேறு படிந்த நகரங்களையும் வீதிகளையும் கட்டிடங்களையும் முழுமையாகத் துப்பரவாக்கி முடியவில்லை. இப்படிப்பட்டதோர் பின்னணியில் மேற்படி கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு யாழ்…
-
-
- 2 replies
- 271 views
-
-
அண்மையில் (கடந்த 2ம் திகதி) அவசர சந்திப்புக்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பை வரும்படி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அழைத்திருந்தமை குறித்த செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள்...ஆனால் திகதிப்பிரச்சினைகாரணமாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு இந்த சந்திப்பில் கலந்துகொள்ளமுடியாதென்றும் வேறொரு திகதியில் சந்திப்பை வைக்குமாறு கேட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன..அவைகுறித்த இரண்டு செய்திகளையும் கீழே இணைத்துள்ளேன்... பேச்சுக்கு வருமாறு மகிந்த ராசபக்ச விடுத்திருக்கும் அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு செல்ல வேண்டுமா அல்லது அதனை நிராகரிக்க வேண்டுமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு செல்வதில் உள்ள சாதக பாதகமான விடயங்கள் என்பவை சம்பந்தமான உங்கள் எண்ணங்கள்,கருத்து…
-
- 28 replies
- 2.4k views
-
-
கிழக்கு வெளுக்குமா..? July 20, 2020 இலங்கையில் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்ற ஒரு கருத்து தமிழர்களிடையே இருக்கிறது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் கலைஞருமான மு.கருணாநிதி யும் இதனையே சொல்லி தனது பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள காரணம் தேடிக்கொண்டார். ஏன் உலகெங்கும் வாழும் தமிழிரிடையே கூட இந்த ஒற்றுமை இல்லை என்ற ஒரு கருத்து உண்டு. உலகில் எந்தவொரு இனமும் எல்லோரும் எதிர்பார்க்கும் இந்த ஒற்றுமையை அடையவில்லை என்பது ஒருபுறமிருக்க, இலங்கையில் தமிழர்களிடையே ஒற்றுமையை அரசியலில் மாத்திரம் எதிர்பார்ப்போர், மொழியைப் போல ஏனைய கலை, கலாசார, பண்பாட்டு இலக்கிய தளங்களில் ஒற்றுமையாக இணைந்து செயல்படுகின்றனரா அல்லது அதற்கான முயற்சிகளை எடுக்கின்றார்களா எனும் கேள்வியை முன்வை…
-
- 0 replies
- 368 views
-
-
திட்டமிட்ட செயற்பாடுகளை நிறுத்தி மாணவர் கொலைக்கு நீதி வழங்கவேண்டும் யாழ். பல்கலைக்கழக மாணவர் இருவரின் படுகொலையினை கண்டித்து வடக்கில் நேற்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதனைவிட வடக்கு உட்பட நாடு முழுவதிலும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது நண்பர்களின் படுகொலைக்கு நீதி வழங்கக்கோரி பெரும் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையை கண்டித்தும் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்தி நீதி வழங்குமாறு வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் நேற்று முன்தினம் யாழ்ப்பாண செயலகத்தை முடக்கி பெரும் போராட்டத்தை நடத்தியிருக்கின்றது. கொட்டும் மழைக்கு மத்தியில…
-
- 0 replies
- 242 views
-
-
பல்கலைக்கழக மாணவர் கொலையும் தமிழர் தலைமையின் பொறுப்பும் - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இரு பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலையே இன்றைய நிலையில் இலங்கை அரசியலின் பேசுபொருளாக இருக்கிறது. அப்படுகொலை இடம்பெறும் வரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 'எழுக தமிழ்' நிகழ்வே அரசியல் அரங்கின் பேசுபொருளாக இருந்தது. இப்போது சடுதியாக ஒரு பதட்டநிலை தோன்றியிருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் தெற்கிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இது ஒரு நல்ல விடயம் என்பதில் சந்தேகமில்லை இந்த கொலைகளுக்கு கண்டனம் தெரிவிப்பது போன்றே தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட படுகொலைகள், யுத்தக் குற்றங்கள் தொடர…
-
- 0 replies
- 436 views
-
-
சர்வதேசத்தில் உள்ள தடைகள் உடைக்கப்படவேண்டும்- நா.விஸ்ணுகாந்தன் வேண்டுகோள் சர்வதேசத்தில் இருக்கின்ற அத்தனை நாடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைகளை நீக்கி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவேண்டும் என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் நா.விஸ்ணுகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த வேண்கோளை விடுத்துள்ளார். தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வும் கிடைக்கவேண்டுமானால் சர்வதேச ரீதியாக இருக்கும் தடை நீக்கப்படவேண்டும் எனவும் வரவு செலவுத் திட்டம் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். …
-
- 0 replies
- 489 views
-