அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
நினைவு கூர்தல் – 2020 நிலாந்தன் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு மேலாக இதே தலைப்பில் நினைவுகூர்தல் தொடர்பாக எழுதிவருகிறேன். ஆனால் தாயகத்தில் நினைவு கூர்தல் தொடர்பில் கடந்த 11 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெரிய திருப்திகரமான மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டிருப்பதாக தெரியவில்லை. நினைவுகூர்தலை அதன் கோட்பாட்டு அர்த்தத்தில் அதன் ஆழமான பொருளில் விளங்கி முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த 11 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு வளர்ச்சியை அடைந்திருப்பதாக தெரியவில்லை. முதலாவதாக நினைவுகூர்தல் என்றால் என்ன ? அது தனிய கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்வது மட்டும் அல்ல. கொல்லப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெறுவதற்கான ஒரு போராட்டத்திலிருந்து பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியே ந…
-
- 0 replies
- 472 views
-
-
கூட்டம் கூட்டமாக கண்டிய நடனமாடித்திரிகிறது யாழ்ப்பாணச்சமூகம் ஒரு பெரும் பண்பாட்டுச் சிதைப்பை அமைதியாக செய்து முடித்திருக்கும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம். ஈழத்தமிழர்களின் இன இருப்பு வழிபாட்டிடங்கள் பண்பாடு என பலதளங்களிலும் ஒரு பெரும் அழிவுச்சுட்டியை ஶ்ரீலங்காவின் அரசும் அதன் கட்டமைப்புகளான தொல்லியல் திணைக்களம் வன வளத்திணைக்களம் என ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு ஈழத்தமிழர்கள் மீதும் அவர்களின் மரபு பண்பாட்டுக்கூறுகள் மீதும் திணித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தானும் முந்தியிருக்கிறது யாழ்ப்பாண மாவட்ட செயலகம். கடந்த 01.02.2026 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு உலகக் கிண்ணம் எடுத்துவரப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட உலக்கிண்ணத்திற்கு யாழ் மாவட்ட செயலகத்தால் அமோகமான வர…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
சமூக இடைவெளியும் சமூகங்களின் இடைவெளியும் காரை துர்க்கா / 2020 ஜூன் 09 எங்கள் வாழ் நாளில், காலத்துக்குக் காலம், புதிது புதிதாகப் பெயர்கள் வருகின்றனளூ உதடுகளில் வாழ்கின்றனளூ மறைந்து விடுகின்றன. அந்தவகையில், தற்போதைய கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில், 'சமூக இடைவெளி' என்ற சொல், அடிக்கடி எல்லோராலும் பயன்படுத்தப்படுகின்ற பிரபல்யமான சொல்லாகப் பரிணமிக்கின்றது. அதாவது, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எம்மையும் எம்மைச் சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்கும் பொருட்டு, தனிநபர்கள் தங்களுக்கிடையே பேணிக்கொள்ள வேண்டிய இடைவெளியே (தூரம்) 'சமூக இடைவெளி' ஆகும். ஆனாலும், எங்கள் சமூகத்தில், 'சமூக இடைவெளி' பிரமாணத்துக்கு ஏற்றவாறு பேணப்படுகின்றதா என்பது, முற்றிலும் கேள்விக்குரியதாகவே காணப்…
-
- 0 replies
- 418 views
-
-
பிரித்தானியாவின் வட அயர்லாந்து மீதான சட்ட அதிகார எல்லையை முடிவுக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்த சின் பெயின் (Sinn Fein), ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரித்தானிய வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்ததையடுத்து, ஐக்கிய அயர்லாந்து உருவாக்கத்துக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் அங்கமாகவே, குறித்த வாக்களிப்பு முடிவு தொடர்பான செய்திகள் வெளிவந்து குறுகிய நேரத்துக்குள்ளேயே, வட அயர்லாந்தின் ஜனநாயக திடசங்கற்பத்தை ஆங்கில வாக்குகள் தடம்புரள வைத்துள்ளன. இது, ஐக்கிய அயர்லாந்தின் தேவையை மீளவும் கோடிட்டு காட்டுகிறது என சின் பையினின் தலைமைத்துவம் தெரியப்படுத்தியுள்ளது. வட அயர்லாந்தின் 56% மக்கள் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றித்திற்குள் தொடர…
-
- 0 replies
- 579 views
-
-
கொவிட்-19: அதிகரிக்கும் தொற்று சொல்வது என்ன? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜூலை 02 முடிந்தது என்று நம்புவதற்கு தான், எல்லோருக்கும் விருப்பம். ஆட்சியாளர்களும் இவ்வாறே இதை, மக்களும் நம்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், யாதார்த்தம் என்னவோ வேறுபட்டதாக இருந்து விடுகிறது. ‘முடிந்தது’ என்றும் ‘ஒழித்து விட்டோம்’ என்றும், பெருமைப் பேச்சுகள் ஒருபுறம் பேசப்பட்டாலும், இன்னொருபுறம் அழிவு மெதுமெதுவாக முன்னகர்ந்து, ஒரு பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை, நாம் கண்முன்னால் காண்கின்றோம். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நாமும் இல்லை. அதை வெளிப்படையாக, மக்களுக்குச் சொல்லும் மனநிலையில், அரசாங்கங்களும் இல்லை. உயிர்களுக்கும் இலாபத்துக…
-
- 0 replies
- 591 views
-
-
13 ஒழிக்கப்படுமா.? வெறுமையாகுமா.? எதிர்பார்த்தபடி – சொல்லியபடி 19 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்கும் திட்டம் நிறைவுக்கு வருகின்றது. வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 20 ஆவது திருத்தத்திற்கு இனி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறவேண்டியது மட்டுமே மீதமுள்ளது. 150 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள ராஜபக்ச அரசாங்கத்திற்கு இது ஒன்றும் கடினமான வேலையல்ல. 20 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்ததும் புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதே கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் திட்டம். இதற்கு அவர்கள் முன்வைக்கும் கோஷம் அது ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ என்பதுதான். அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் என்பது மேலோட்டமாகப் பார்த்தால் சரியானதாக – நன்மையானதாக – அனைத்து மக்களுக்கும் பொதுவானதாகத் தோன்றல…
-
- 0 replies
- 536 views
-
-
மாவீரர் தினமும் வடக்கும் கிழக்கும் அடக்குமுறைகளும் ஆதிக்க கெடுபிடிகளும் எங்கு இறுகிப் போகின்றதோ அங்கெல்லாம் முரண்பாடுகளும் மோதல்களும் புரட்சி உணர்வுகளும் வெடித்து வெளிக்கிளம்புகின்றன என்பதற்கு வடக்கில் இம்முறை அமைதியாகவும் அடக்கமாகவும் நினைவு கொள்ளப்பட்ட மாவீரர் தினம் சிறந்த உதாரணமாகும். ஆயிரம் ஆயிரம் அக்கினிப்பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக துருவ தாரகைகளாக எமது விடுதலை வானை அழகுபடுத்திய, இனத்தின் இருப்புக்காக இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அணி திரளுங்கள் என வடக்கின் பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரன் மாவீரர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்றில் அ…
-
- 0 replies
- 433 views
-
-
ஈழத்தமிழர் மனிதஉரிமைகள் குறித்த சிறப்பான அணுகுமுறை தேவை 12 Views இம்மாதம் 9ஆம் திகதி அனைத்துலக மன்றத்தின் ‘இனஅழிப்பால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்ணியத்துடன் நினைவு கூரும் அனைத்துலக நாளாக’ இக்குற்றச் செயல் இடம்பெறாது முன்கூட்டியே தடுப்பதை வலியுறுத்தும் நோக்கில் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மறுநாள் 10ஆம் திகதி உலகின் முக்கியமான நாள், ‘அனைத்துலக மனித உரிமைகள் தினம்.’. ஆயினும் இந்த அனைத்துலக மரபுசாசனங்களுக்கோ அல்லது அனைத்துலக சட்டங்களுக்கோ, முறைமைகளுக்கோ சிறிதளவேனும் மதிப்பளிக்காது ஈழத்தமிழர்களைச் சிறீலங்கா இனஅழிப்புச் செய்து, இன்று இனத்துடைப்புச் செய்து வருவது உலகறிந்த உண்மை. சிறீலங்கா தனது ஈழத்தமிழின அழிப்பின…
-
- 0 replies
- 473 views
-
-
http://tamilworldtoday.com/archives/4860 http://tamilworldtoday.com/home பூகோள அரசியல் சூட்சுமங்களுடன் பின்னிப்பிணைந்த இலங்கைத் தீவுக்காக 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற கால அடையாள வர்ணிப்பு அப்படியே சற்று மாற்றிப்போட்டால், 'விக்கிலீக்ஸ்' முதல் கேர்ணல் ஹரிகரன் வரையான புள்ளிகள் பழைய புகுதல் தொடர்பான விடயதானங்களை வழங்குவது புரிகிறது! 87 இல் உருவாக்கப்பட்ட இந்தோ-ஶ்ரீலங்கா ஒப்பந்தத்தின் பின்னணியில் புலிகளுக்கு இந்தியா நிதியுதவி செய்ததாகக் கூறும் விக்கிலீக்சின் செய்தி மற்றும் புலிகளுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி அளித்த அளித்த விடயம் குறித்து கோத்தாபயவே விசாரணை நடாத்தலாம் என்ற ஹரிகரனின் எள்ளல் செய்தி வரை சில விடயங்கள் புலப்படுத்தப்படுகின்றன. அதாவது 2009 இற்க…
-
- 0 replies
- 536 views
-
-
நினைவுத்தூபி அழிப்பு: அறத்தின் மீதான ஆக்கிரமிப்பு -புருஜோத்தமன் தங்கமயில் போர் வெற்றி வாதத்துக்கு எதிராக முளைக்கும் சிறிய புல்லைக்கூட, விட்டு வைத்துவிடக் கூடாது என்பது ராஜபக்ஷர்களின் ஒரே நிலைப்பாடு. அதுபோல, பௌத்த சிங்கள மேலாதிக்க மனநிலையைக் கேள்விக்கு உள்ளாக்கும் எந்தவோர் அம்சத்தையும், நாட்டின் எந்தப் பாகத்திலும் அனுமதித்துவிடக் கூடாது என்பது, தென் இலங்கையின் குறிக்கோள். அப்படியான நிலையில், இறுதிப் போர் கொடூரங்களை நினைவுறுத்திக் கொண்டு நிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி(கள்), தென் இலங்கையின் கண்ணில் விழுந்த பெரிய துரு(க்கள்). அந்தத் துருக்களை அகற்றிவிட வேண்டும் என்பதற்காக சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளையும், தென் இலங்கையும் அதன் ஆட்சியாள…
-
- 0 replies
- 758 views
-
-
அ.தி.மு.க அரசியல்: பிரதமர் நரேந்திர மோடி விரும்பும் ராஜீவ் வழிமுறை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளை; இன்னொரு புறம், திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா; மூன்றாவது பக்கம், திராவிடக் கட்சிகள் தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்த, பொன் விழா ஆகும். ஆனால், இந்த விழாக்களை எல்லாம், இப்போது அ.தி.மு.கவுக்குள் நடந்து கொண்டிருக்கும் ‘பேட்டிப் போர்’ மற்றும் ‘அறிக்கைப் போர்’ ஆகியன மிஞ்சி விட்டன. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை, ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாடிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, இது எதிர்பாராத சோதனை. ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்கொண்டு வந்த எடப்பாட…
-
- 0 replies
- 482 views
-
-
இருவேறு வெளியுறவு அணுகுமுறைகள்? நிலாந்தன். தமிழ் கட்சிகள் இந்தியாவை நோக்கி தயாரித்த ஆவணம் இனிமேல்தான் இந்திய தூதரகத்திடம் கையளிக்கப்படும் என்று தெரிகிறது. அது கையளிக்கப்படுவது என்பது ஒரு சம்பிரதாயபூர்வ நிகழ்வு. இங்கு அதைவிட முக்கியமானது என்னவெனில் பெரும்பாலான தமிழ் கட்சிகள் ஒன்றுகூடி இந்தியாவை தமிழ் மக்களுக்கு ஆதரவாக தலையிட வேண்டும் என்று கேட்டிருப்பது தான். இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியே நிற்கிறது. அக்கட்சியானது கூட்டுக் கோரிக்கை முன் வைக்கப் பட வேண்டும் என்பதனை எதிர்க்கிறதா? அல்லது அக்கோரிக்கையாக 13 ஆவது திருத்தம் முன்வைக்கப்படுவதை எதிர்க்கிறதா ? என்பதனை உத்தியோகபூர்வமாக தெளிவுபடுத்த வேண்டும். அதாவது இந்தியாவுடன் என்கேஜ் பண்ண வேண்டும் என்ற வெளியுற…
-
- 0 replies
- 654 views
-
-
ஈழத்தமிழ் நோக்கு நிலையிலிருந்து இந்தியாவை அணுகுவது! - நிலாந்தன். February 13, 2022 கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் “நாங்களும் இந்தியாவின் தலையீட்டைக் கோரித்தான் நிற்கிறோம்” என்று கூறுகிறார். அவருடைய கட்சி கிட்டு பூங்காவில் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட பிரகடனத்திலும் இந்தியா ஒரு நட்பு சக்தி என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தியத் தலையீட்டைக் கேட்பது என்று முடிவெடுத்தால் ஆறு கட்சிகளின் கூட்டு அழைத்தபோது அதில் இணைந்து கூட்டுக்கோரிக்கையின் வடிவத்தை மாற்றியிருந்திருக்கலாந்தானே? மேலும், 13க்கு எதிராக அக்கட்சி மக்கள் மத்தியில் தெரிவிக்கும் கருத்துக்…
-
- 0 replies
- 398 views
-
-
இலங்கையின், பொருளாதாரத்தினைப் பிடித்துள்ள... சீனாவின் பொறி? தவறான பொருளாதார திட்டமிடல் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் தோல்வியடைந்துள்ளது. இதனால் சீனாவின் மூலோபாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த இலங்கைத் தீவு நாடு கடன்களின் பொறியில் சிக்கியுள்ளது. கொரோனா தொற்றுநோய் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போரின் அதிர்ச்சிகளுக்குப் பிறகு, சீனாவின் கடன் இராஜதந்திரம் இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களை அதிகரித்து நெருக்கடியை அதிகப்படுத்தியது. ஏற்கனவே, இலங்கை அந்நியச் செலாவணி நெருக்கடியில் சிக்கிய நிலையில், தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க 10 ஆண்டுகளுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சலுகைக் கடன்களை வழங்க சீனா முன்வந்தது. இத்தொகையுடன் சீனக் கடன்கள் 6.5 ப…
-
- 0 replies
- 403 views
-
-
அகதிகளாகும் இலங்கையர்! காத்திருக்கும் ஆபத்து
-
- 0 replies
- 365 views
-
-
சிறுபான்மைகளுக்குள் பகைமை பெரும்பான்மையின் ஆளுமை 1946 ஆம் ஆண்டு செர் ஐவர் ஜெனிங்ஸ் இயற்றிய சோல்பரி யாப்பில் ஒரு ஷரத்து இவ்வாறு இடம்பெற்றிருந்திருக்க வேண்டும். அதாவது சிறுபான்மைகளின் பூரண சம்மதமும் அவர்களின் அடிப்படை உரிமைகளின் உள்ளடக்கமும் பல்லின நீதியரசர்களின் அங்கீகாரமுமின்றி யாப்பை மாற்ற முடியாது. என்று அமைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், சிறுபான்மைக் காப்பீட்டுச் சட்டமான 29 ஆம் ஷரத்து நிலைத்து இருந்திருக்கும். எனினும், பாராளுமன்றத்தால் யாப்பை இரத்தாக்க முடியாது என்று மட்டுமே ஐவர் ஜெனிங்ஸ் குறிப்பிட்டிருந்தார். அதனால் தான் 1972 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு வெளியே …
-
- 0 replies
- 549 views
-
-
உள்ளூராட்சித் தேர்தல் ‘பலப்பரீட்சை’ - 2018 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் நடக்கப்போகும், உள்ளூராட்சித் தேர்தலை எல்லா கட்சிகளுமே ஒரு பலப்பரீட்சையாகத் தான் பார்க்கின்றன. வடக்கு, கிழக்கில் மாத்திரமன்றி தெற்கிலும் கூட அதேநிலைதான். இந்த உள்ளூராட்சித் தேர்தல் பல்வேறு கட்சிகளுக்கும் கூட்டணிகளுக்கும் பலத்த சோதனையையும் கூட ஏற்படுத்தியிருக்கிறது. நேரடித் தெரிவு மற்றும் விகிதாசாரத் தெரிவு முறை என்பன, இணைந்த கலப்பு முறையில் நடைபெறும் முதலாவது தேர்தல். புதிய தேர்தல் முறையின் சாதக பாதகங்களை அனுபவபூர்வமாக அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் இதன் மூலம்தான் கிடைக்கப் போகிறது. …
-
- 0 replies
- 316 views
-
-
பல பிற்போக்கித்தனங்களின் - அடிப்படைவாதத்தின் சாம்பாறாக இருக்கும் இச்சிந்தனை எப்போதும் தகதகவென்றிருக்கிறது. ராஜபக்ச குடும்பத்தினர் அந்தத் தகவொளியில் பிரகாசித்தனர். எனவேதான் மீளமீள அவர்தம் வருகைக்காக சிங்கள மக்கள் தவமியற்றினர். தூக்கி வைத்து கொண்டாடிய சிங்கள மக்கள் இப்படியொரு தவமியற்றலின் பின்னணியில்தான் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவரான கோட்டபாய ராஜபக்ச 'அமெரிக்கன்' என்கிற அடையாளத்தையே தூக்கியெறிந்து விட்டு இலங்கை வந்தார். தாய் நாட்டுக்காக பெற்ற சுகங்கள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு வந்த கோட்டபாயவை சிங்கள மக்கள் தம் தோள்களில் வைத்துக் கொண்டாடினர். அந்த மகாவீரனின் உருவத்தைக் காகிதத்தில் வரைந்து வைத்தால் அழிந்துவிடும் என்பதற்காகத் தம்…
-
- 0 replies
- 680 views
-
-
தமிழர்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான் – நிலாந்தன்.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓரு பதிலை மிகச் சாதாரணமாக வாராந்தக் கேள்வி பதில் ஒன்றிற்கூடாக ஏன் விக்னேஸ்வரன் சொன்னார்? அவரிடமிருந்து அந்த பதிலை வரவழைப்பதற்காக பலரும் பல மாதங்களாக முயன்று வந்தார்கள். ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டுமென்று இதய சுத்தியோடு உழைத்த பலரும் அவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். 2009ற்குப் பின்னரான தமிழ் அரசியலை பொருத்தமான ஒரு தடத்தில் ஏற்ற வேண்டுமென்று முயற்சித்த பலரும் அவரிடமிருந்து அந்த பதிலை எதிர்பார்த்தார்கள். இப்படிப்பட்ட தரப்புக்களுக்கெல்லாம் ரஜனிகாந்தைப் போல பதில் கூறிய விக்னேஸ்வரன் அவருடைய மாணவரும் இப்பொழ…
-
- 0 replies
- 427 views
-
-
நில மீட்புக்கான மக்கள் போராட்டங்கள் - அடைவுகளும் நிலைமைகளும் கிரிசாந்த் முதலில், ஒரு வெற்றி பெற்ற போராட்டத்தின் கதையிலிருந்து தொடங்குவோம், ஒரு ஜனநாயகப் போராட்டத்தின் எல்லா வசீகரங்களுடனும் நிகழ்ந்து முடிந்திருக்கின்ற "பிலக்குடியிருப்பு" மக்களின் போராட்டத்தை உங்களில் பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள். ஒரு மாசி மாத ஆரம்பத்தில் தொடங்கி பங்குனி பிறப்பதற்குள், அரசை அழுத்தத்திற்குள்ளாக்கியும், வெகுசனத்தையும் குறிப்பாக இளைஞர்களையும் தெற்கு மக்களையும் கூட தனது போராட்டத்தின் நியாயத்தினை உணர்வுபூர்வமாகவும் தர்க்க பூர்வமாகவும் நிறுவி தங்களது காணிகளுக்குள் உள் நுழைந்த மக்களின் கதை அது. பனி கொட்டும் மாசியின் இருளிலும் கொதிக்கும் அதன் பகலில் தார் வீதியிலும் …
-
- 0 replies
- 649 views
-
-
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் முன் பேரினவாதம் தொடர்பாக: சபா நாவலன் இலங்கையில் இரண்டு சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சிகள் மீண்டும் எதிரெதிராக ஆட்சியைக் கையகப்படுத்த மோதிக்கொள்கின்றன. தமிழ்ப் பேசும் மக்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறையே பிரதான முரண்பாடாகியுள்ள இலங்கையில் அதுகுறித்துப் பேசுவதற்குக் கூட எந்தக் கட்சிகளும் தயாராகவில்லை. இந்த நிலையில் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் மக்கள் யுத்தப் பாதையில் பயணிக்க வேண்டும். தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு புதிய போராட்டத்தை நோக்கி மக்களை அணிதிரட்டும் மூலோபாயத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த அரசியல் தலைமைகள் முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வேளையில் இலங்கையின் பேரினவாதப் பின்புலம் தொடர்பான கட்டுரையைப் பதிவிடுகி…
-
- 0 replies
- 632 views
-
-
பதினான்காவது மே பதினெட்டு – நிலாந்தன்! May 14, 2023 எதற்காக தமிழ் மக்கள் உயிர்களை, உறுப்புகளை, சொத்துக்களை கல்வியை இன்னபிறவற்றைத் தியாகம் செய்தார்களோ, எதற்காக லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்களோ, காணாமல் ஆக்கப்பட்டார்களோ,அதற்குரிய நீதி தமிழ்மக்களுக்கு கிடைக்க வேண்டும். எந்தப் போராட்டத்தின் பெயரால் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டார்களோ, அந்தப் போராட்டத்தின் பலன் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும். எனவே நினைவுகூர்தல் எனப்படுவது தமிழ்மக்கள் போராடியதன் பலனை பெறுவதற்கான ஓர் அரசியல் செயற்பாடுதான். நீதிக்கான தமிழ்மக்களின் போராட்டத்தில் அதுவும் ஒரு பகுதிதான். நவீன தமிழ் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்,ஒரு குறிப…
-
- 0 replies
- 567 views
-
-
ரணிலின் பதவி நீக்கப்பட்டதா, இரத்தாகி விட்டதா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 ஒக்டோபர் 31 புதன்கிழமை, மு.ப. 01:07 Comments - 0 அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலிருந்து விலகிய மைத்திரிபால சிறிசேன, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, ஜனாதிபதியாக சத்தியப் பிரமானம் செய்து கொண்ட அடுத்த கணமே, அப்போது நாடாளுமன்றத்தில் வெறும் 47 எம்.பிக்களின் ஆதரவைப் பெற்றிருந்த ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமித்தார். அப்போது, அது சட்டவிரோதமானது என்றும் நாகரிகமற்ற செயலென்றும், மஹிந்த ஆதரவாளர்களான அரசியல்வாதிகளும் பொதுமக்களும் கூறினர். ஏனெனில், ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டுமானால், நாடாளுமன்றத்…
-
- 0 replies
- 506 views
-
-
குமார் பொன்னம்பலம் பற்றி தமிழர் மனித உரிமைகள் மையம் இவ்வாறு கூறுகிறது. அவர் இலங்கையின் பிரபலகுற்றவியல் வழக்கறிஞர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக வாதடியவர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் தகவல்களின் படி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட 98வீதமான வழக்குகளில் எதிரிகளுக்காக தோன்றி வாதடியவர். கிருஷாந்தி கொலை வழக்கு மற்றும் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட 18 பொதுமக்களின் படுகொலை வழக்கு உட்பட ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் வழக்குகளில் தோன்றி வாதாடியவர். மனித உரிமைகளை மீறிவந்த சிறீலங்கா அரசாங்கத்திற்கு அவரின் செயல்கள் சவாலாக இருந்தது. அரசு தலைவராக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்காவின…
-
- 0 replies
- 1.1k views
-
-
காசாவில் அமெரிக்கா வகுக்கும் திட்டம் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
-
- 0 replies
- 361 views
-