அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
"நிதானம்" "நிதானம் இழந்த அரசியல் தலைவர்களே நிம்மதி கொடுக்கா கொள்கை எதற்கு ? நித்தமும் உங்களுக்குள் பிளவு வேறு நியாமான ஒற்றுமை குலைந்தது எனோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 406 views
-
-
இலங்கை : கடந்த ஐந்து ஆண்டுகளில் கிழக்கு மாகாண சபை - ஓர் பார்வை இலங்கையில் கிழக்கு மாகாண சபையின் 5 ஆண்டு பதவிக்காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வந்த நிலையில் சபை உறுப்பினர்களில் ஓருவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரண்டு ஆண்டுகளை சிறையிலே கழித்துள்ளார். விளம்பரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலே கைதாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் என்ற அடையாளத்தை பெற்றுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன், 2015-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி…
-
- 3 replies
- 406 views
-
-
தமிழ்க் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்று கூறி நழுவிச் செல்லும் இந்தியா –பதின்மூன்றை நடைமுறைப்படுத்தத் தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்று கூறி மிக இலகுவாக இந்தியா தட்டிக் கழித்துத் தமக்கு ஏற்ற முறையில் இந்தியத் தூதரகம் மேற்கொள்ளும் நகர்வுகள் பற்றியும் பதின்மூன்று தொடர்பாக ஜனாதிபதி ரணில் ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி நிகழ்த்திய விசேட உரையை மேற்கோள் காண்பித்து அதிகாரங்கள் இல்லை என்பது குறித்தும் சிறிய விளக்கத்தை இக் கட்டுரை தருகிறது- அ.நிக்ஸன்- பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழ்த்தேசியக் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை. ஏனெனில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத…
-
- 0 replies
- 406 views
-
-
விக்னேஸ்வரனின் (பதவி) நாட்கள் எண்ணப்படுகின்றன! நல்லூர் கந்தசாமி கோயிலில் கொடியேற்றம். அடுத்த 27 நாளும் திருவிழா. இருபத்து நான்காம் நாள் தேர்த் திருவிழா. அதற்கு முந்திய நாள் சப்பரத் திருவிழா. தேருக்கு அடுத்த நாள் தீர்த்தம். திருவிழாக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். குறிப்பாக தெற்கு வீதியில் முருகனுக்குத் தீபாதூபம் காட்டும் போது நெரிசல் அதிகமாகும். பக்தர்கள் முண்டி அடிப்பார்கள். வினை தீர்க்கும் வேலனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்ற முழக்கம் வானைப் பிளக்கும். இந்தச் சூழ்நிலையை உள்ளூர் அயலூர் திருடர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள். பெண்களது கழுத்தில் உள்ள தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடுவார்கள். ஓடும்போது கைகளைக் கும்பிடுவத…
-
- 0 replies
- 406 views
-
-
மறக்கப்படுகிறதா தமிழ்த் தேசியம்? என்.கே. அஷோக்பரன் Twitter @nkashokbharan ராஜபக்ஷ எனும் ‘கோலியாத்’தை, காலம், சாபம், அவர்கள் செய்த பாவம் என்று எல்லாம் சேர்ந்து வீழ்த்திக் கொண்டிருக்கின்றன என்று சொல்வது பொருத்தமற்றதல்ல! இலங்கை அரசியலில், அசைக்க முடியாத சக்திகள் தாம் என்பதை, ராஜபக்ஷர்கள் 2019-2020 தேர்தல்களில் நிரூபித்து, இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ராஜபக்ஷர்கள், தமது 2015ஆம் ஆண்டு தோல்விக்குப் பிறகு, திட்டமிட்டு, இனவாத உரத்தைக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கி, இன-மத தேசியவாதத்தை முன்னிறுத்திப் பெற்ற பெரும் தேர்தல் வெற்றி, இன்று தவிடுபொடியாகிய நிலையில் நிற்கிறது. 2020 பொதுத் தேர்தலில் ராஜபக்ஷர்கள…
-
- 0 replies
- 406 views
-
-
போர்க் குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டால் சிறிலங்காவில் இராணுவச் சதி ஒன்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்பது அமெரிக்காவிற்கு நன்கு தெரியும். இந்தியாவும் இதையொத்த எண்ணப்பாட்டையே கொண்டுள்ளது. இவ்வாறு சிலோன் ருடே ஆங்கில நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பாக, சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் ஜி ஷியான்லியாங் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சிறிலங்காவின் உள்விவகாரங்களில் வெளிச்சக்திகள் தலையீடு செய்வதை சீனா எதிர்ப்பதாக தூதுவர் ஜி ஷியான்லியா…
-
- 0 replies
- 406 views
-
-
முத்தரப்புக்கும் நிர்ப்பந்தம் -செல்வரட்னம் சிறிதரன் இலங்கை அரசியல் களத்தில் மூன்று சக்திகள் மும்முனையில் மோதல்களில் ஈடுபடுகின்ற ஒரு சூழல் உருவாகியிருக்கின்றது. இந்த மோதல்கள் மென்போக்கிலா அல்லது கடும் போக்கிலா அமைந்திருக்கும் என்பதை உடனடியாகக் கூற முடியவில்லை. ஆயினும் மூன்று சக்திகளும் தனித்துவம் மிக்க நிலையான அரசியல் இருப்பு, தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம், திணிக்கப்பட்ட பொறுப்புணர்வு ஆகிய மூன்று தளங்களில் நேருக்கு நேர் சந்திக்கத் தயாராகி வருகின்றன. இந்தச் சந்திப்பில் ஏதாவது ஒரு சக்திதான் வெற்றிபெறப் போகின்றதா, இரண்டு சக்திகள் இணைந்து வெற்றிபெறப் போகின்றனவா அல்லது மூன்று சக்திகளுமே இணைந்து ஐக்கி…
-
- 0 replies
- 406 views
-
-
விடிவே கிடைக்காதா ? ரொபட் அன்டனி ஐ.நா.செயற்குழுவின் முக்கிய பரிந்துரைகள் *பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டத்தர ணிகள் மற்றும் விசாரணையாளர்களைக் கொண்டு முன்னெடுக்கப்படவேண்டும். * எக்காரணம் கொண்டும் இந்த விசாரணை செயற்பாட்டில் இராணுவப்படையினர் பங்களிப்பு செய்யவோ தலையிடவோ முடியாது. *உடனடியாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச தரத்திற்குட்பட்ட சட்ட மொன்றை அறிமுகப்படுத்த வேண்டும். *பாதிக்கப்பட்டோரின் சங்கங்கள், சிவில் சமூக நிறுவனங்களுடன் இணைந்து உண்மையை கண்டறியும் நிறுவனத்தை உருவாக்கவேண்டும். * ஹெபியஸ்…
-
- 0 replies
- 406 views
-
-
வட்டத்துக்கு வெளியே வர முடியாத பூச்சியங்கள் காரை துர்க்கா / 2019 மார்ச் 26 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:27 Comments - 0 வடக்கு மாகாணத்திலுள்ள அரசாங்கத் திணைக்களம் ஒன்றின் பணிப்பாளருடன் உரையாடும் வாய்ப்பு, கடந்த வாரம் கிட்டியது. அவர், பாரியதொரு மனித வளத்துடன் தொழிற்படும் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆவார். மனித வளங்களை முகாமை செய்தல், அவர்களை வழிப்படுத்தல் என்பது மிகவும் சவாலான விடயம். வழமையாக, இவ்வாறான வேலைகளைக் கண்காணிக்கவே நேரம் போதுமானதாக இல்லை. அவர்களது முறைப்பாடுகள், அதற்கான தீர்வுகள் என அதனுடனேயே, பெரும் பெறுமதியான நேரத்தை நாளாந்தம் செலவிட வேண்டி ஏற்படுகின்றது. இப்படியிருக்கையில், நாம் எவ்வாறு புதிதாகச் சிந்திக்க முடியும், மாற்றி யோசிக்க முடியும், எவ்…
-
- 0 replies
- 406 views
-
-
ரணில்: கடைசி ஆளா? நாடாளுமன்றத்தில் தனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே ஒரு உறுப்பினர், அதுவும் தேர்தலில் தோற்றதால்,தேசியப் பட்டியல்மூலம் உள்ளே வந்தவர்,நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இது ஆசியாவின் அதிசயம் மட்டுமல்ல உலகத்தின் அதிசயமும்தான். தாமரை மொட்டுக்குத் தலைமை தாங்கும் யானைக்கும், யானைக்குத் தலைமை தாங்கும் தாமரை மொட்டுக்கும் இடையிலான போட்டியில் யானை ஜெயித்திருக்கிறது. எனவே அது எல்லா விதத்திலும் தாமரை மொட்டுக்குக் கிடைத்த வெற்றிதான். ரகசிய வாக்கெடுப்பு என்பது திருடர்களுக்கு வசதியானது.”அரகலய”போராட்டக்காரர்கள் கூறுவதுபோல, திருடர்களே வெற்றியைத் தீர்மானித்திருக்கிறார்கள். ரணிலை முன்னிறுத்தியதன்மூலம் ராஜபக்சக்…
-
- 0 replies
- 406 views
-
-
சிறிலங்காவின் யாப்பு மாற்றம்: தமிழருக்கு பயன் தருமா?
-
- 0 replies
- 406 views
-
-
ஐ.நாவின் அறிக்கை பிற்போடப்பட்டமை தமிழருக்கு பின்னடைவா? ச.பா. நிர்மானுசன் படம் | Jera, Colombomirror சிறீலங்காவில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து சர்வதேச ஆதரவு அலை மீண்டும் சிறீலங்காவை நோக்கி திரும்பியுள்ளது. தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான கோரிக்கைகள் இதனால் மீண்டும் பின்தள்ளப்படுகின்றன. இதன் ஒரு உச்சக்கட்டமே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இருபத்தெட்டாவது கூட்டத் தொடரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் பணியகத்தின் “21 பெப்ரவரி 2002 தொடக்கம் 15 நவம்பர் 2011 வரை இலங்கைத் தீவில் நிகழ்ந்த மிக மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய குற்றங்கள்” தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டெம்ப…
-
- 0 replies
- 406 views
-
-
அமெரிக்கா பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-03#page-6
-
- 1 reply
- 406 views
-
-
புதிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு முன்னாலுள்ள சவாலும்.! இலங்கையின் புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பில் செயல்வடிவம் எடுக்க ஆரம்பித்து ளள்ளது.உள்நாட்டில் மிகத் தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பொதுஜன பெரமுன அரசாங்கம் அமைச்சுக்களையும் இராஜாங்க அமைச்சுக்களையும் தெளிவான திட்டமிடலுடன் தெரிவு செய்துள்ளதுடன் அதிக அதிப்தியின்றிய ஆட்சிக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இது உறுதியான அரசாங்கத்தினை ஏற்படுத்துவதுடன் அதன் கடடமைப்பு விருத்திக்கான அணுகுமுறைகளையும் அதிகார அமைப்புக்கான செல்நெறிகளையும் உருவாக்கும உத்திகளை கொண்டதாக விளங்கும். வடக்கு கிழக்கப் பொறுத்து தனித்துவமான கொள்கை வகுப்பொன்றுக்கான முனைப்பு புதிய அரசாங்கத்தால் ஆரம்பி…
-
- 0 replies
- 406 views
-
-
Published By: DIGITAL DESK 7 03 SEP, 2024 | 03:02 PM தொகுப்பு: ஆர்.ராம் உலகளாவிய ரீதியில் பல்வேறு சமஷ்டி முறைமைகள் காணப்படுகின்றன. அவை நாடுகளின் மேம்பட்ட நிலைமைகளுக்கு அவசியமானவையாக உள்ளன. அந்தவகையில் எதியோப்பியாவலும் சமஷ்டி முறைமை உள்வாங்கப்பட்டது. ஆனால் அதன் விளைவுகள் எவ்வாறு அமைந்திருந்தன. அதற்கான காரணங்கள் என்னவாக உள்ளன என்பது பற்றிப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும். ஆபிரிக்கப் பிராந்தியத்தில் இரண்டாவது மிகப் பெரும் சனத்தொகையாக 120மில்லியன் மக்களைக் கொண்ட தேசம் தான் எதியோப்பியா. 1936-1941 வரையான இத்தாலிய கட்டுப்பாடு, 1941-1952 பிரித்தானிய கட்டுப்பாடு ஆகிய இரண்டு காலகட்டங்களைத் தவிரவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீண்டதொர…
-
- 0 replies
- 406 views
- 1 follower
-
-
உதட்டில் ஐக்கியம்; மனதில் குரோதம் -இலட்சுமணன் தமிழ்த் தேசிய அரசியல் சூழ்நிலையானது, மிகவும் மோசமானதொரு வரலாற்றுச் சிக்கலுக்குள் சிக்குண்டு போயுள்ளது. தமிழ்த் தேசியத்தின் அரசியல் விடுதலை தொடர்பாக, கடந்த 22 ஆண்டுகளாக அஹிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தி, தனது உரிமையை நிலைநிறுத்தப் போராடி இருக்கிறது தமிழினம். இத்தகைய போராட்டச் சூழலில், எண்ணங்களில் தோன்றாததும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாத, ‘சுயநல அபிலாசைகள்’ தமிழ் அரசியலில் இன்று முனைப்புப் பெற்றுள்ளன. தமிழரின் அரசியல் விடுதலை தொடர்பாக, பல்வேறு துயர்நிறைந்த அனுபவங்களை, வரலாற்று ரீதியாக அனுபவித்த இனத்துக்குச் சாபக்கேடானதோர் அரசியல் சூழல் தோற்றம் பெற்றுள்ளது. இந்…
-
- 0 replies
- 406 views
-
-
13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை – அலி சப்ரி! பொங்கல் விழாவுக்கு யாழ்ப்பாணத்துக்கு வந்த ரணில் விக்ரமசிங்க நல்லூர் துர்கா மணிமண்டபத்தில் ஆற்றிய உரையில் 13வது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாக தெரிவித்திருந்தார்.அவர் அவ்வாறு கூறிய சில நாட்களின் பின் கொழும்புக்கு வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதனை இந்தியாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக வலியுறுத்தி கூறினார்.கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இந்தியாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக அதுதான் காணப்படுகிறது. இந்திய இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்பட்டது 13ஆவது திருத்தம். இந்திய இலங்கை உடன்படிக்கையில் கையெழுத்திட்டது இந்தியாவ…
-
- 0 replies
- 406 views
-
-
ஒரு அரசியல் கட்சி எப்படி இருக்க வேண்டும்?
-
- 0 replies
- 406 views
-
-
தலைவர்களை இழந்த தமிழ்த்தேசிய அரசியல்! February 9, 2025 — கருணாகரன் — தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பதாகக் கூறும் கட்சிகள் பதினைந்துக்கு மேல் உண்டு. ஆனாலும் தமிழ்த்தேசிய அரசியல் அரங்கிலே ஒரு வலிமையான – அடையாளம் காட்டக் கூடிய – தலைவர் என எவருமே இல்லை. என்பதால்தான் தமிழ்த்தேசிய அரசியற் சக்திகளை ஒருங்கிணைக்கவும் முடியவில்லை. அதனைக் கோட்பாட்டு ரீதியாக வளர்த்தெடுக்கவும் முடியவில்லை. நடைமுறை ரீதியான பிரச்சினைகளுக்கு அதனால் முகம் கொடுக்கவும் முடியவில்லை. அதைப் பலமடையச் செய்யவும் முடியவில்லை. உள்நாட்டில் தமிழ்ச் சூழலிலும் சரி, இலங்கைக்குள்ளும் சரி, இலங்கைக்கு வெளியே சர்வதேச சமூகத்தோடும் சரி, புலம்பெயர்ந்த தமிழர்களிடத்திலேயும் சரி அதனால் சரியான முறையி…
-
- 1 reply
- 406 views
-
-
13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது- மோடி முன்னிலையில் நேரடியாகவே மறுத்தாரா கோட்டாபய தெரியாதது போன்று அமைதிகாக்கும் இந்திய ஊடகங்கள்பதிப்பு: 2019 டிச. 02 23:15 புலம்: யாழ்ப்பாணம், ஈழம் புதுப்பிப்பு: டிச. 03 15:03 1 2 3 நிருபர் திருத்தியது ஆசிரியர் திருத்தியது உறுதிப்படுத்தப்படக்கூடியது …
-
- 0 replies
- 406 views
-
-
இந்தியாவும் கோட்டாவும் தமிழர்களும் என்.கே. அஷோக்பரன் / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:23 இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற மறுதினமே, இந்திய வௌியுறவுத் துறை அமைச்சர் சுப்ரமண்யம் ஜெய்ஷங்கர் இலங்கை விரைந்து, ஜனாதிபதி கோட்டாபயவை நேரில் சந்தித்து வாழ்த்தியதுடன், இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு, அழைப்பையும் விடுத்திருந்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்று, சரியாக 11 நாள்களில், ஜனாதிபதி கோட்டாபய, தன்னுடைய முதலாவது உத்தியோகபூர்வ சர்வதேச விஜயமாக, புதுடெல்லி சென்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். இந்திய விஜயத்தின் விளைவாக, இந்தியா, இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க…
-
- 0 replies
- 406 views
-
-
விக்னேஸ்வரனின் கணக்கு? நிலாந்தன்… உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் கடந்த வியாழக்கிழமை தமிழ்மக்கள் பேரவை கூடியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான வீதியோர போராட்டங்கள் ஓராண்டை பூர்த்தி செய்திருக்கும் ஒரு காலச் சூழலில் பேரவை கூடியிருக்கிறது.உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முன் பேரவையில் பங்காளிகளாக காணப்பட்ட இரண்டு கட்சிகளையும் ஒருங்கிணைத்து அவற்றிற்கு தலைமை தாங்க கூடிய தகுதியும் பொறுப்பும் பேரவைக்கே இருந்தது. ஆனால் பேரவை அதை செய்யவில்லை.அதனால் அவ்விரு கட்சிகளும் தனித்தனியாக இருவேறு கூட்டுக்களைஅமைத்தன. இதனால் தமிழ் வாக்குகள் சிதறின.தனது பங்காளி கட்சிகளுக்கு உரிய நேரத்தில் உரிய வழிகாட்டலை செய்யத் தவறிய காரணத்தால் பேரவையான…
-
- 0 replies
- 405 views
-
-
உள்ளூராட்சி தேர்தலும் பிரியப் போகும் கூட்டுக் கட்சிகளும் தமிழ் தேசிய இனத்தின் ஆயுத ரீதியான உரிமைப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்ட பின்னரும் கடந்த மஹிந்த அரசாங்கம் வெற்றிவாதத்தில் திளைத்திருந்ததுடன், தமிழ் தேசிய இனத்தை தொடர்ந்தும் அடக்கி ஆள்வதில் கவனம் செலுத்தியிருந்தது. இதன் விளைவாக தமிழ் தேசிய இனத்தின் பெருவாரியான ஆதரவுடன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்றாண்டுகள் நெருங்கும் நிலையில் நல்லாட்சி எனக் கூறப்படும் மைத்திரி, - ரணில், அரசாங்கம் கடும் நெருக்கடிகளை உள் நாட்டில் எதிர்நோக்கி வருகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக இருந்த அழுத்தங்களை தமிழ் தேசிய இனத்தின் தலைமைகளின் உதவியு…
-
- 0 replies
- 405 views
-
-
‘கோட்டா ஜனாதிபதி; சஜித் பிரதமர்’ கனவு பலிக்குமா? முகம்மது தம்பி மரைக்கார் / 2020 ஜனவரி 14 பொதுத் தேர்தல் ஒன்றுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், “அடுத்த நாடாளுமன்றில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியை அமைப்போம்” என்று, அதன் பங்காளிக் கட்சிகளின் சிறுபான்மைத் தலைவர்கள், அடிக்கடி சூழுரைத்து வருகின்றனர். “நாடாளுமன்றத் தேர்தலின் பிறகு, கோட்டா ஜனாதிபதி; சஜித் பிரதமர்” என்று, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இந்த நிலையில்தான், ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதான பங்காளிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள், தலைத்துவப் பதவிகான ‘பாகப் பிரிவினை’ சூடு பிடித்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்காக, ரணில்…
-
- 0 replies
- 405 views
-
-
நீதித்துறையின் ‘சுயாதீனமும்’ யாழ். பல்கலைக்கழகத்தின் பக்கச்சார்பற்ற ‘நடுநிலையும்’ Photo, TAMIL GUARDIAN ஜெர்மன், ப்ரைபேர்க் பல்கலைக்கழகப் பீடாதிபதியும் தத்துவவாதியுமான ஹைடகர் நவம்பர் 1933 இல், தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி மாணவர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். லீக் ஒப் நேசனிலிருந்து ஜெர்மனி வெளியேறுவதற்கு, ஹிட்லருக்கு ஆதரவாக அனைத்து மாணவரும் வாக்களிக்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தார். எமது தனிப்பெரும் தலைவர் இந்த வேட்கையை ஒட்டுமொத்த மக்களின் விழிப்புணர்வாக்கி மக்களை ஒருங்கிணைத்துள்ளார். எனவே, வாக்குச் சாவடிக்குப் போய் வாக்களிப்பதிலிருந்து எவரும் தவறக்கூடாதென்றார் அவர். இது பரிந்துரையல்ல; அதிகாரத்தைப் பயன்படுத்திய உத்தரவு. ஒரு பல்க…
-
- 0 replies
- 405 views
-