அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
முள்ளிவாய்க்கால் போன்ற பல துயர சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில், தமிழர்களுக்கு விடுதலை வேண்டும் என குரல் கொடுக்கும் உலகெங்கிலும் உள்ள தமிழ் அமைப்பினைச் சார்ந்தவர்கள் நமது IBC தொலைக்காட்சி தளத்தில் ஒரே மேடையில் இணைந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்த நிகழ்வே நேருக்கு நேர்.
-
- 0 replies
- 683 views
-
-
கொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் என்.கே. அஷோக்பரன் / 2020 ஜூன் 23 ராஜபக்ஷர்களின் இன்றைய அரசியல் என்பது, மிகத் தௌிவான சிங்கள-பௌத்த இனத் தேசியவாதத்தை, பெருந்திரள்வாத (populism) வாகனத்தில் ஏற்றிக்கொண்டுள்ள பெரும்பான்மையினத் தேசிய பெருந்திரள்வாத அரசியலாகும். ஏதோவோர் அடிப்படையில், தம்மை ஒரு மக்களாக அடையாளங்காணும் மனிதக் கூட்டமொன்றைத் தம்மில் வேறுபட்ட ‘மற்றையவர்களுக்கு’ எதிராக நிறுத்தும் சித்தாந்தமே, பெருந்திரள்வாதமாகும். பெருந்திரள்வாதத்தை வரையறுக்க முயலும் அல்பெடட்ஸியும் மக்டொன்னெலும், பெருந்திரள்வாதச் சிந்தாந்தம் என்பது, ஒன்றுபட்ட தன்மைகளையுடைய ஒரு மக்கள் கூட்டத்தை, அந்த இறைமையுள்ள மக்கள் கூட்டத்தின் அதிகாரங்கள், விழுமியங்கள், சௌபாக்…
-
- 0 replies
- 411 views
-
-
பலஸ்தீனம்: இஸ்ரேலின் நிலப்பறிப்பும் அமெரிக்கத் தீர்வுத் திட்டமும் August 8, 2020 ரூபன் சிவராஜா கொரோனா நெருக்கடி முழு உலகையும் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டிருக்கின்ற நிலையிலும் ஆக்கிரமிப்பு சக்திகள் நெகிழ்வுப் போக்கிற்குரிய அணுகுமுறை மாற்றங்களுக்குத் தயாரில்லை. பலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை (West Bank) நிலங்களைப் பலவந்தமாக தனதாக்கிக் கொள்ளும் இஸ்ரேலின் சமகால முனைப்பு அதனையே வெளிப்படுத்துகின்றது. ஐ.ந-வும், ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்கா தவிர்த்த உலக நாடுகள் பலவும் இஸ்ரேலின் இந்த முனைப்பினைச் சட்ட விரோதமெனக் கண்டிக்கின்றன. இருப்பினும் இஸ்ரேலின் கடும்போக்கிற்கு அமெரிக்கா வழமை போல முண்டுகொடுக்கின்றது. வழமை போல என்பதற்கு மேலாக டிரம்ப் நிர்வாகம் பிரத்…
-
- 0 replies
- 818 views
-
-
கேள்விக்குள்ளாகும் அரசியல் நேர்மை "போரில் பங்கேற்ற படையினர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடாது என்பதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடாக உள்ளது. அதனால் தான், போரில் ஈடுபட்ட கடற்படைத் தளபதிகளை விசாரணைக்காக அழைக்கப்பட்டதை நான் விரும்பவில்லை என்று அவர் வெளிப்படையாக கூறி யிருக்கிறார். இதிலிருந்தே, படையினரை எந்த சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தக் கூடாது என்பதே அவரது மனோநிலையாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். " பாதுகாப்பு அமைச்சில் கடந்தவாரம் நடந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்திய உரை, அவரது அரசியல் நேர்மைக்குப் பலத்த சவாலையும், சர்…
-
- 0 replies
- 331 views
-
-
அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்களின் இன்றைய நிலைப்பாடு என்ன? எந்தவொரு தேசியப் பிரச்சினை தொடர்பிலும் நிலைப்பாடொன்றை எடுப்பதற்கான சகல உரிமைகளும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்கு இருக்கிறது. தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு விவகாரத்திலும் தீர்மானத்தை எடுப்பதற்கான விசேட பொறுப்பையும் உரிமையையும் கூட அவர்கள் கொண்டிருக்கிறார்கள். மாறுகின்ற நிலைவரங்களுக்கும் பின்புலங்களுக்கும் ஏற்ற முறையில் தங்களது நிலைப்பாட்டை மாற்றுவதற்கு அல்லது திருத்தம் செய்வதற்கும் அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், எந்தவொரு பிரச்சினையிலும் தங்களது புத…
-
- 0 replies
- 413 views
-
-
ட்ராம்பின் வெற்றி , யுத்தக் குற்றச் செயல்கள் விசாரணை வார்த்தைகளுக்கு வரையறுக்குமா? சுனந்த தேசப்பிரிய இணைய தளமொன்றுக்கு எழுதிய பத்தியயொன்றின் தமிழக்கம் தமிழில் குளோபல் தமிழ் செய்திகள் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ராம்ப் வெற்றியீட்டியமைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல்வாதியான ராஜித சேனாரட்ன மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். (அரச தலைவர்கள் மரபு ரீதியாக வாழ்த்துவது வேறும் விடயம்) இனி அமெரிக்கா ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாது என ராஜித சேனாரட்ன மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். இதேவிதமான கருத்தை இலங்கையின் மற்றுமொரு அரசியல்வாதி வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ட்ராம்ப் முன்வைத்த காரணிகள் மு…
-
- 1 reply
- 455 views
-
-
ஐக்கிய இராச்சியமும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்பமிட்ட வணிக இணக்கப்பாடு: இதன் உள்ளடக்கம் என்ன? – தமிழில் ஜெயந்திரன் 112 Views இருபத்தேழு நாடுகளைக் கொண்டதும் பிரித்தானியாவின் மிகப்பெரிய வணிகக் கூட்டாகவும் விளங்குகின்ற ஐரோப்பிய ஒன்றியக் கட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்னதாக பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரு தரப்புகளையும் சார்ந்த பிரதிநிதிகள் இறுதியாக ஒரு வணிக ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டிருக்கிறார்கள். இவ்வாறாக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்த காலத்துடன் ஒப்பிடும் போது, வணிகச் செயற்பாடுகள் உரிய…
-
- 0 replies
- 936 views
-
-
எமது தலையில் துப்பாக்கியைவைத்து , சமரசம் செய்யுமாறு சொல்வதால் எதுவும் செய்ய முடியாது,எதுவும்நடக்காது ” – வெளிவிவகார செயலாளர் அட்மிரல் .ஜயநாத் கொலம்பகே கூறுகிறார். மீரா ஸ்ரீநி வாசன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்இலங்கை தொடர்பான தீர்மானம் விரைவில் வாக்களிப்புக்கு விடப்படவுள்ளநிலையில் இந்தியாவின் “சாதகமான ” ஆதரவைத் தேடும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர், “இந்தியா எங்களை கைவிட முடியாது” என்று கூறியுள்ளார். “உங்கள் வெளியுறவுஅமைச்சர் கூறியது போலஉலகம் ஒரு குடும்பம் என்றால், நாங்கள் உடனடி அடுத்த குடும்பம், இல்லையா” என்று அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே , பேரவையில் அண்மையில் ஆற்றியஉரையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் …
-
- 0 replies
- 352 views
-
-
இளைஞர்களைப் புறக்கணிக்கும் தமிழ்க் கட்சிகள் -புருஜோத்தமன் தங்கமயில் தாயக அரசியலில் ஆர்வம் காட்டிவரும் புலம்பெயர் தேசங்களிலுள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள், புலமையாளர்கள் சிலருக்கு இடையிலான இணையவழி உரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது. அதன்போது, ‘தமிழ்த் தேசிய கட்சிகள், இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவரத் தயங்குவது ஏன்? குறைந்த பட்சம், அரசியல் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளைக்கூட இளைஞர்களை இணைத்துக் கொண்டு கட்சிகள் நடத்துவதற்குப் பின்நிற்பது ஏன்?’ என்ற தொனியிலான கேள்விகள் முன்வைக்கப்பட்டு, உரையாடப்பட்டன. குறித்த உரையாடலில், தாயகத்திலிருந்து பங்குகொண்ட ஒருவராக, இதற்கான பதில்களை நான் வழங்க வேண்டியிருந்தது. உண்மையிலேயே, தமிழ்த் தேசிய கட்சிகள் இளைஞர்களை அரசியலுக்க…
-
- 0 replies
- 512 views
-
-
இந்தியாவின் துயரம் -பா.உதயன் வைத்திய சாலைகள் நிரம்பி வழிகின்றன நாளுக்கு நாள் பெரும் தொற்று அதிகரிக்கிறது .சுவாசிக்க வளி இன்றிஒக்சியன் பற்றாக்குறையால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். எரிப்பதற்காகவும் புதைப்பதற்காகவும்மனித சடலங்கள் அடிக்கி வைக்கப்படுகின்றன. இந்தியா பெரும் துயரோடு பயணிக்கிறது. வழமை போலவேமக்கள் எந்தப் பொறுப்பும் இன்றி சாலைகளில் கூடுகிறார்கள். இந்திய மக்கள் சுகாதார துறை பெரும் சிக்கலைஎதிர் நோக்கியுள்ளது. என்ன செய்து கொண்டிருக்கிறது இந்திய அரசு. பல நாடுகள் ஓரளவேனும் இந்த பெருநோயில் இருந்து கட்டுப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையிலே இந்தியாவுக்கு ஏன் திடீரென இவ்வளவுசடுதியான அதிகரிப்பு.ஏன் இவ்வளவு துன்பம். சமூக,குடும்ப,அரசியல்,சமய, கலாச்…
-
- 4 replies
- 812 views
-
-
' உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக......' என்று அடைத்தகுரலில், திரைப்படம் ஒன்றிக்கு விளம்பரம் செய்யப்படுவதைப் பார்த்திருக்கிறோம். இப்போது நாம் பார்க்கப்போவது திரைப்பட விளம்பரமல்ல. சீனாவின் ஆட்சியாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் சிந்தனைச் சிற்பிகள், இந்துசமுத்திரப்பிராந்தியம் குறித்து முதன்முறையாக வெளியிட்டுள்ள நீலப் புத்தகம் (Blue Book)பற்றிப் பார்க்கப்போகிறோம். இந்தப் பிராந்தியத்தில்தான் நம் தேசமும் இருப்பதால், சீனா நமது பிராந்தியம் குறித்து என்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்பது பற்றி அறிவதற்கு, நாம் அக்கறைப்படுவதில் தப்பேதுமில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவு எம்முள் விதைத்துவிட்டுச் சென்ற பெருவலி, எம்மினத்தை அழிக்க உதவியோர், எமது நிலத்திலும், ஆகாயத்திலும், கடல் பரப…
-
- 0 replies
- 473 views
-
-
போர்க்காலத்தில் வன்னியில் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமற் போனதாக மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை வெளியிட்ட ஆவணம் நவநீதம் பிள்ளையிடம் இருக்கிறது என்பதை கோதபாய ராஜபக்ச மறந்துவிடக் கூடாது. அநேகமான இதிகாச - புராண நாடகங்களிலும் திரைப்படங்களிலும் ஒரு காட்சி தவறாது இடம்பெறும். அங்கு அரசனாக வருபவர் முதல் காட்சியில் வரும்போது, பல அடைமொழிகளுடன் அவர் வரவேற்கப்படுவார். ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட, வீராதிவீர வீரமார்த்தாண்ட, சூராதிசூர சூரமார்த்தாண்ட மாமன்னர் வருகிறார்..வருகிறார்..என்ற வாயிலோன் முழக்கமிட, மன்னர் அங்கு எழுந்தருளுவார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களின் இலங்கைப் பயணமும் இவ்வாறுதான் அமைந்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் …
-
- 1 reply
- 943 views
-
-
-ரவூப் ஹக்கீம்- மைனஸ் 13- –தமிழ்- முஸ்லிம் மக்களைப் பிரித்துக் கையாண்டதன் மூலம், கடந்த மூப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிங்கள ஆட்சியாளர்கள் நன்மைகளைப் பெற்றிருந்தனர். முஸ்லிம்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கிக் கொண்டே முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடத்திய துணிவை மறந்துவிட முடியாது. வடக்குக் கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் உடன்பாடு இல்லை. எனினும் அது பற்றிப் பேசலாம் என்பதற்கான காரணங்களைப் பேராசிரியர் அமீர் அலி முன்வைக்கிறார்— -அ.நிக்ஸன்- தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றுசேர வேண்டிய காலமிது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார். 13 ஆவது திருத்தச் சட்…
-
- 0 replies
- 408 views
-
-
வடமாகாண சபையில் தொடரும் இழுபறிநிலை http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-23#page-18
-
- 1 reply
- 513 views
-
-
கோட்டாபய கூட்டமைப்பைப் பேச அழைக்கிறார்? நிலாந்தன். March 20, 2022 கடந்த புதன்கிழமை கோட்டாபய கூட்டமைப்பைச் சந்திக்க நேரம் ஒதுங்கியிருந்தார். எனினும் அன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. அது 25ஆம் இடம்பெறலாம் என்று தெரிகிறது. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோ கலந்து கொள்ளப்போவதிவில்லை என்று அறிவித்திருந்தது. அதற்கு டெலோ ஒரு விளக்கக் கடிதத்தை ஏற்கனவே அனுப்பியிருந்தது. பதவியேற்றதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கோத்தாபய கூட்டமைப்போடு பேசப்போவதாக இடைக்கிடை கூறி வருகிறார். ஆனால் இன்றுவரையிலும் பேச்சுவார்த்தைகள் நடக்கவில்லை. இம்முறை பேச்சுவார்…
-
- 0 replies
- 307 views
-
-
மீண்டும் சந்திரிகா அல்லது மைத்திரி தலைவராகலாம் என்கிறார்களே?
-
- 4 replies
- 807 views
- 1 follower
-
-
இது, அந்தக் கோரச் சம்பவத்தின் இன்னொரு முகம்! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட அந்த நாளில் அவருடன் 15 அப்பாவி உயிர்களும் பலியாகின. ''தூக்குமேடைக்குப் போனவர்களைக் காப்பாற்றத் துடிக்கும் தலைவர்கள், அந்த சம்பவத்தில் இறந்துபோன தமிழர்களின் குடும்பங்களுக்காகக் குரல் கொடுத்தார்களா?'' எனக் கொந்தளிக்கிறார்கள் பலியானவர்களின் குடும்பத்தினர். ஸ்ரீபெரும்புதூர் பிரசாரத்தின்போது ராஜீவ் அருகில் இருந்த காங்கிரஸ் பிரமுகர் லீக் முனுசாமி, எஸ்.பி-யான முகமது இக்பால், டெல்லியில் இருந்து பாதுகாப்புக்காக வந்த குப்தா, இன்ஸ்பெக்டர் ராஜகுரு, இன்ஸ்பெக்டர் எட்வர்டு ஜோசப், சப் இன்ஸ்பெக்டர் எத்திராஜூ, கான்ஸ்டபிள் முருகன், கான்ஸ்டபிள் தர்மன், பெண் கான்ஸ்டபிள் சந்திரா, கமாண்…
-
- 3 replies
- 4.1k views
-
-
ஆற்றைக் கடப்பதற்கான தேர்தல் கூட்டு ‘ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி உறவு’ என்று சொல்வார்கள். இது அரசியலுக்கு மிகப் பொருத்தமானதாக அமைவதுண்டு. அந்தவகையில், இப்போது தேர்தல் ஒன்று நடைபெறப் போகின்றது என்ற அனுமானத்தில், எல்லாக் கட்சிகளும் ‘தேர்தல் கூட்டு’ பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும், இவ்வாறான கூட்டுகள்,தேர்தல் என்ற ஆற்றைக் கடந்து போவதற்கு மட்டுமான, பரஸ்பரம் இருதரப்புகளுக்கும் இலாபமளிக்கும் உறவாகவே, அமைவது வழக்கம். ‘நல்லாட்சி’ என்ற மதிப்புமிக்க பொதுப் பெயரில், மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டரசாங்கம் அழைக்கப்பட்டாலும், இனிவரும் தேர்தல்களில், மைத…
-
- 0 replies
- 446 views
-
-
தமிழ் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுமா ஐ.நா…? நரேன்- ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனிதவுரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை தொடர்பான ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரின் அறிக்கை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே இலங்கை அரசாங்கம் ஐ.நா சபையையும், சர்வதேச நாடுகளையும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நன்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே கடந்த 2015 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி எடுக்கப்பட்ட எச்.ஆர்.சி 30- 1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கால அவகாசம் பெற்றிருந்தது. அந்த கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் இலங்கை அரசாங்கம் குறிப்பி…
-
- 0 replies
- 325 views
-
-
கொள்கையற்ற கூட்டுக்கள் உள்ளூராட்சித் தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ். போன்றன இணைந்த ஒரு கூட்டணி உருவாகும் என்று பரவலான எதிர்பார்ப்பு ஒன்று காணப்பட்டது. ஆனால் திடீரென, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜனநாயக தமிழரசுக் கட்சி, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி, ஈரோஸ் உள்ளிட்ட சில கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறான பா…
-
- 0 replies
- 377 views
-
-
ஒற்றுமை ஓங்கியதால் ‘ஒப்பாரி ஓலம்’ உலக வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், பல நாடுகள் தங்களது சுதந்திரத்தைப் பல தியாகங்கள், இழப்புகளுக்கு மத்தியிலேயே பெற்றுள்ன. அதிர்ஷ்டவசமாக இலங்கை அஹிம்ஷை வழியில் தனது சுதந்திரத்தைப் பெற்றது. ஆனாலும், துரதிர்ஷ்டமாக பல்லின மக்கள் வாழும் நாட்டில், பன்முகக் கலாசாரத் தன்மை பறிபோய்விட்டது. நாட்டின் ஓரினம், பிறிதோர் இனத்தைப் பல வழிகளிலும் அடக்கி ஒடுக்கி, கடை நிலைக்குக் கொண்டு சென்றது. இன உரிமைப் போருக்கு, உலகிலுள்ள எல்லா அரசாங்கங்கள் போலவே, பயங்கரவாதம் என்று பெயர்சூட்டப்பட்டது. போர் தொடுத்தது; வெற்றி கண்டது. ஈற்றில், மிகப்பெரிய மனித அவலங்களுடன் முள்ளிவாய்க்காலில் மௌனம் கண்டது. …
-
- 0 replies
- 398 views
-
-
இழுத்தடிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பில் பிரதான கட்சிகளுக்கும் சிறுபான்மை கட்சிகளுக்குமிடையே ஏற்பட்டுக்கொண்டிருக்கும் முரண்பாடான கருத்துக்கள் மாகாண சபைகளுக்கான தேர்தலை காலவரையறையின்றி நீட்டிச் செல்லும் போக்கையே காட்டி நிற்கிறது. பிரதான கட்சிகள் தேர்தல் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பதில் அக்கறை காட்டுவதைவிட தேர்தலை எப்படி ஒத்திவைக்கலாம் என்பதிலேயே கரிசனை காட்டுகின்றன. இதேநேரம் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளாமல் ஏதாவது காரணங்களை காட்டி ஒத்திவைக்கப்பார்க்கிறது அரசாங்கமென கூட்டு…
-
- 0 replies
- 734 views
-
-
-கே.சஞ்சயன் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தாலும், அதனை பயன்படுத்திக்கொள்ளும் எண்ணம் இரண்டு பிரதான தரப்பினிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களிடமிருந்து தம்மை அந்நியப்படும் கொள்கைகளை, ஆளும் கட்சியும் எதிரணியும் கடைப்பிடிக்க முனைவதாலேயே இந்தச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்று, தமிழ் மக்களின் வாக்குகளை கவரும் எண்ணம் இரண்டு பிரதான தரப்புக்களிடமும் இருந்தது. ஆனால், இப்போது பிரசார வியூகம், சிங்களத் தேசியவாத வாக்குகளை மையப்படுத்தியதாக மாறத் தொடங்கியுள்ளது. தமிழர்களின் வாக்குகள், வெற்றிக்கு முக்கியத்துவமானவையாக இருந்தாலும், அதனை பெற…
-
- 0 replies
- 809 views
-
-
வேரோடு களைதல் காலத்தின் தேவை! -நஜீப் பின் கபூர்- நாட்டு நடப்புகளைப் பார்க்கின்ற போது ஆரோக்கியமான வாழ்வுக்கான அறிகுறிகள் ஏதுவுமே நமது கண்ணுக்கெட்டிய தூரத்தில் கண்டு கொள்ள முடியவில்லை. எனவே நெருக்கடிகள், மோதல்கள், வன்முறைகள், வறுமை துயரங்கள் என்பன கடலலைபோல தொடர்ந்து ஓயாது அடித்துக் கொண்டிருப்பதும் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அதிகாரத்தில் இருப்போரின் அட்டகாசங்கள், அடக்கப்படுகின்ற மக்களின் போராட்டங்கள், இயல்பு வாழ்க்கை சீரழிக்கப்பட்டதால் தெருவுக்குக் கொண்டு வந்து விடப்பட்டிருக்கின்ற பொது மக்கள், உள்நாட்டில் வாழ்வு சூனியமான நிலையில் தமது குடும்பங்களை காப்பாற்ற வெளி நாடுகளுக்கு ஓடுகின்ற உழைப்பாளிகள் படை, வல்லுநர்களுக்கு கொடுக்கப்படுகின்ற தொந்தரவுகள் காரணமாக அவர்கள் நா…
-
- 0 replies
- 628 views
- 1 follower
-
-
கேரளப் பெரு வெள்ளம்: தமிழக - கேரள உறவில் மீண்டும் தைத்த முள் எம். காசிநாதன் / வரலாறு காணாத கன மழை, கேரள மாநிலத்தை நிலைகுலைய வைத்து விட்டது. ‘டிசெம்பர் பெருவெள்ளம்’ 2015இல் சென்னை மாநகரையும் புறநகர் சென்னையையும் திணறடித்தது போல், ‘ஓகஸ்ட் பெருவெள்ளம்’ அலை அலையான பாதிப்புகளை, கேரள மாநில மக்களுக்கு ஏற்படுத்தி விட்டது. சேதங்கள் குவியல் குவியல்களாகக் கிடக்கின்றன; மண்சரிவுகள் மலைகள் போல் குவிந்து கிடக்கின்றன. கட்டடங்கள் அப்படியே, பாய்ந்தோடும் வெள்ளத்தில் நகருவதைப் பார்க்க முடிந்தது. வெள்ளமும் வேதனையும் இணைபிரியாமல் தாக்குதல் நடத்தி, கேரள மக்கள், ஓணம் பண்டிகையை, நிம்மதியா…
-
- 0 replies
- 750 views
-