Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. "விடியலுக்கு காத்திருக்கிறேன்" இலங்கைக்கு 1948 ஆண்டு பெப்ரவரி மாதம், நாலாம் திகதி சுதந்திரம் கிடைத்ததாக நான் வரலாற்றில் படித்துள்ளேன். அன்று இலங்கை வாழ் தமிழர்கள் தமக்கு விடியல் கிடைக்கும் என்று அதை மகிழ்வாக, பெரும்பான்மையான சிங்களமக்களுடன் சேர்ந்து வரவேற்றனர். ஆனால், எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால், 1956 ஆம் ஆண்டு கொண்டு வந்த சிங்களம் மட்டும் என்ற சட்டம் [ Sinhala Only Act] அவர்களின் விடியலை, இனக்கலவரத்துடன் சுக்கு நூறாக்கியது. அதை தொடர்ந்து தரப்படுத்தல் வந்து, மேலும் பல இனக்கலவரங்கள், யாழ் நூலக எரிப்பு என தமிழர்கள் எதிர்பார்த்த விடியல் இன்றுவரை ஏற்படவில்லை! சொல்லளவில் பிரித்தானியா அரசிடம் இருந்து சு…

  2. "பணம்" "பணம் விளையாடும் அரசியல் இங்கே படித்தவர் கூட விலை போவார்! படுக்கை அறைக்கும் கதவு திறப்பார் பகட்டு வாழ்வில் எதுவும் நடக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................... "பேதங்கள் ஒழிப்போம்" "தாழ்வு மனப்பான்மையை தள்ளி வைத்து வாழ்வு சிறக்க திமிரோடு நின்றால் ஆழ் கடலிலும் தரை காண்பாய்!" "மதம், சாதி வேறுபாடு தாண்டி இதயசுத்தியுடன் மனிதம் நாம் வளர்த்து வாதங்கள் விட்டு பேதங்கள் ஒழிப்போம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................ "அறியாமை விலகட்டும்" …

  3. "தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது?" தமிழர் அல்லாத நண்பர்களிடம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு கேள்வி: "தமிழர்களின் குரல் முக்கியமான விடயங்களில் கூட ஒரு சேர ஒலிப்பதில்லையே ஏன்?" என்னையும் கூட நீண்ட காலமாக அரிக்கிற கேள்வி இது. தமிழர்களாகிய நாம் பெற்றிருக்கும் வளங்கள் - குறிப்பாக - அறிவுசார் வளங்கள், பல துறைகளில் நம்மவர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் - பிரமிப்பானவை; உலகின் எந்த ஓர் இனத்துக்கும் சவால் விடக் கூடியவை. அப்படியிருந்தும், ஏன் சக்திமிக்க ஓரினமாக நாம் உருவெடுக்க முடியவில்லை? தமிழர்களாகிய நாம், குறிப்பாக கொஞ்சம் யோசிக்கக் கூடியவர்கள், படித்தவர்கள், ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ், ஒரு பொது …

  4. படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் அனுரகுமார திஸநாயகே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றொரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே ஆகியோருக்கிடையே நிலவும் மும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்? இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் வ…

  5. தேர்தல் வாக்குறுதிகளைப் பார்க்கிலும் வரலாறே முக்கியம் எம்.எஸ்.எம்.ஐயூப் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் (கடந்த 22 ஆம் திகதி காலஞ்சென்ற டொக்டர் ஐ.எம். இல்யாசைத் தவிர) போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்களில் பெரும்பாலானோர் இது வரை ஒரு பிரசார கூட்டமேனும் நடத்தவில்லை எனத் தெரிய வந்துள்ளது. தெற்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட சர்வஜன கட்சியின் வேட்பாளர் திலித் ஜயவீர ஆகியோரும் வடக்கில் தமிழ் பொது வேட்பாளர் பி.அரியநேத்…

  6. ‘தமிழர்களின் மூளை மட்டும்தான் தங்கக்கட்டி’ September 16, 2024 — கருணாகரன் — தமிழ்த்தேசியம் என்பதை தமிழ் இனவாதமாகச் சுருக்கி, அதைக் கறுப்பு – வெள்ளையாக்கி, துருவ நிலைப்படுத்துவதற்கே தமிழ்த்தேசியத் தரப்பினால் தொடர்ந்தும் முயற்சிக்கப்படுகிறது. அதாவது கதாநாயகன் – வில்லன் என்ற மிகப் பழைய Formula வில். இதற்குச் சற்றுச் சூடேற்றுவதற்கு இடையில் துரோகி என்ற பாத்திரத்தையும் உருவாக்கி விடுகின்றனர். இந்தப் பழைய – உக்கிப்போன Formula வினுடைய புதிய வெளிப்பாடே (New version) தமிழ்ப்பொது வேட்பாளராகும். இதனை உறுதிப்படுத்தி மகிழ்ந்து கொண்டாடும் விதமாக தமிழ்ப்பொது வேட்பாளரை நியமித்த பொதுச்சபையைச் சேர்ந்தவர்களே தமது பத்தியில் எழுதியிருக்கிறார்கள். …

  7. (புருஜோத்தமன் தங்கமயில்) “...தாயகத்தில் இனியும் சம்பந்தன் காலத்து அரசியலை அனுமதிக்க முடியாது. முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னர் தாயக அரசியல் – சமூக செயற்பாடுகளில் புலம்பெயர் தரப்புக்கள் ஆளுமை செலுத்த விரும்பின; அதாவது, முடிவுகளை எடுக்கும் தரப்புக்களாக இருக்க நினைத்தன. ஆனால், சம்பந்தனும் சுமந்திரனும் அதற்கு பெரும் தடையாக இருந்தனர். அவர்களின் நிலைப்பாடுகளை தாண்டி தாயகத்தில் எதுவும் செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனால், சம்பந்தனின் மறைவுக்குப் பின்னர், தாயகத்திலுள்ள அரசியல்வாதிகளை இலகுவாக கையாள முடிகின்றது. அவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கமாக பிரிந்து நிற்கிறார்கள். இப்போது, தாயக அரசியலை சுமந்திரன் ‘ஆதரவு – எதிர்’ அரசியலாக மாற்றுவதன் மூலம், இலகுவாக பிரித்தாளும் …

  8. தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்! நிலாந்தன். தேர்தல் கண்காணிப்பாளர்கள் தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருக்கிறார்கள். அந்த அலுவலகம் ஏனைய வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்களைப் போல பகட்டாக, அட்டகாசமாக இருக்கவில்லை. அங்கே பிரம்மாண்டமான போஸ்டர்கள், பதாகைகள் எவையும் இருக்கவில்லை. பொது வேட்பாளரின் ஒரே ஒரு சுவரொட்டி மட்டும் இருந்தது. அதுவும் வீட்டுக்குள்ளே ஒரு குளிரூட்டியில் ஒட்டப்பட்டிருந்தது. அந்தச் சுவரொட்டி யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஒட்டப்படுகின்ற எல்லாச் சுவரொட்டிகளை விடவும் எளிமையானது. சிறியது... கவர்ச்சி குறைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தம்மைச் சந்தித்த மக்கள் அமைப்பினரிடம்…

      • Thanks
      • Haha
      • Like
    • 12 replies
    • 910 views
  9. தமிழ் மக்கள் தங்களைத் திரட்டாமல் உலக சமூகத்தைத் திரட்ட முடியாது -நிலாந்தன் பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை முதலில் முன்வைத்த மு.திருநாவுக்கரசு தமிழகத்தில் தங்கியிருப்பதனால், அவர் இந்தியாவின் ஆள் என்ற சந்தேகம். அதனால், பொது வேட்பாளரை இந்தியாவின் ப்ரொஜக்ட் என்று சந்தேகித்தார்கள். அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை தொடர்ந்து வளர்த்துச் சென்றபடியால் அதுவும் இந்தியாவின் வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம். இம்முறை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே சுரேஷ் பிரேமச்சந்திரன் அந்த விடயத்தை கையில் எடுத்தார். அதனால் அது இந்தியாவினுடைய வேலையாகத்தான் இருக்கலாம் என்ற சந்தேகத்தை முன்வைத்தவர்கள் மேலும் உஷாரானார்கள். அதன்பின் யாழ்ப்பாணத்த…

  10. தெற்கின் அரசியற்களமும் வடக்கின் அரசியல் முகமும் September 15, 2024 — கருணாகரன் — சிங்களத் தரப்பிலிருந்து இந்தத் தடவை இனவாதத்தை முன்னிறுத்தி ஜனாதிபதித் தேர்தற்பரப்புரைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதற்காக தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களெல்லாம் இனவாதத்தைத் துறந்து விட்டார்கள், கடந்து விட்டார்கள் என்றில்லை. அதற்கான சூழல் இல்லை என்பதே முக்கியமான காரணமாகும். அரசியல் வரலாறு என்பதே அப்படித்தான். எப்போதும் ஒரே மாதிரி இருப்பதுமில்லை. எல்லாம் கனிந்துதான் நிகழ்வது என்றுமில்லை. சூழ்நிலைகளே பல சந்தர்ப்பங்களிலும் மாற்றங்களை நிகழ்த்துவன. அப்படியானதொரு நிர்ப்பந்தச் சூழல் சிங்களத்தரப்புக்கு இப்பொழுது உருவாகியுள்ளது. ஏனென்றால் வழமையை விட இந்தத் தேர…

  11. 11 SEP, 2024 | 04:48 PM கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவுக்கு தமது ஆதரவை தெரிவித்தபோது, மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் அந்த முடிவு தவறானதென நான் நேரடியாகவே சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்கான நியாயபூர்வமான ஆதாரங்களையும் நான் அவருக்கு சொல்லியிருந்தேன். அதிலே மிக பிரதான விடயமாக நான் கூறியிருந்த காரியம் ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுகிறபோது ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரோடு இணைந்து செய்துவந்த கருமங்களில் சிலவற்றை உடனடியாக செய்து முடிக்க இயலும் என்பதாகும். ஏனெனில், ரணில் தனக்கு ஆதரவு தருபவர்களின் கோரிக…

  12. நடைமுறை அரசியல் மிகக் கடினமான பாடங்களை கற்றுத் தந்திருக்கின்றது. பலம் வாய்ந்த சக்தியை அழிக்க மென்மையான இராஜதந்திரத்தை ஒரு கூரிய ஆயுதமாக பயன்படுத்தும் வித்தை அரசியலில் உண்டு. முள்ளிவாய்க்காலின் பின் இத்தகைய ஒரு தந்திரத்தை எதிரி மிகச் சாதுரியமாக அரங்கேற்றி வருகின்றார். இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பின்தள்ள காலனிய ஆதிக்க எஜமான் ஒரு இலகுவான தந்திரத்தை பிரயோகித்தார். அதே தந்திரத்தைத்தான் இப்பொழுது தமிழ் மண்ணில் சிங்கள பேரினவாத சக்திகள் அரங்கேற்றி வருகின்றன. சுதந்திரத்திற்கு முன் பிரித்தானியாவை விடவும் சுமாராக 21 மடங்கு பெரிய நிலப்பரப்பை கொண்ட இந்தியாவை 7,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள பிரித்தானியாவால் இலகுவாக கட்டுப்படுத்தவும் ஆளவும் முடியாது. …

  13. அன்று ஒரு நாள் அந்த ஈழத்தின் தந்தை செல்வா சொன்னார் ஆண்டவன் தான் தமிழனை காப்பாற்ற வேண்டும் என்று. ஆண்டன் கூட கை விட்டு அனைத்தும் இழந்த தமிழனாய் குந்தி இருக்கக் கூட ஒரு முழ நிலம் கூட இல்லாமல் அடிமை ஆகிப் போன வரலாறாய் தொடர்கிறது துன்பம் இன்று வரை. எப்பொழுது ஒரு சிறுபான்மை தேசிய இனம் தனது போராட்டத்தின் சம பலத்தை இழக்கிறதோ (Balance of power) அன்றில் இருந்தே அதன் பேரம் பேசும் பலத்தையும் (Bargaining power) இழந்து பெரும்பான்மை இனத்தின் ஆக்கிரமிப்போடு அடிமையாகி விடுகிறது. அதன் பூர்வீக பிரதேசங்கள் யாவும் அரச ஒடுக்கு முறைக்கி உள்ளாகி அந்த மக்கள் அடிமைகளாக இரண்டாம் தர பிரஜைகளாக ஒடுக்கப்படுவர். ஈழ தமிழர்களின் போராட்டம் முள்ளிவாய்க்காலின் பின் இப்படிதான் ஆக்கப்பட்டிருக்கிறது. வெற்றி க…

  14. இதுவரை காலமும் முகம் தெரியாமல் பலரையும் பேட்டி கண்ட நெறியாளர தமிழரசு இந்த காணொளியில் நேரடியாகவே பேட்டி காண்கிறார். இந்தக் காணொளி 1000 ஆவது காணொளி என்று குறிப்பிடுகிறார். வாழ்த்துக்கள்.

  15. சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் என்பது பல நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகள் இறங்கி விளையாடுகின்ற ஒரு களம் என்பது யாவரும் அறிந்த உண்மை. எந்த வேட்பாளர்களை களமிறக்குவது, எப்படியான தேர்தல் வியூகங்களை வகுப்பது என்று, பல நாடுகளின் தூதரகங்களே இறங்கி நின்று காரியமாற்றுகின்ற ஒரு செயற்கை ஜனநாயக நடைமுறைதான் சிறிலங்காவின் இந்த ஜனாதிபதித் தேர்தல். சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்காவின், இந்தியாவின், சீனாவின் ஆதவுபெற்ற வேட்பாளர்கள் என்ற அடையாளத்துடன் பலர் களமிறக்கப்பட்டிருக்கின்ற நிலையில், தமிழ் பொது கட்டமைப்புக்களால் களமிறக்கப்பட்டுள்ள ஒரு தமிழ் பொதுவேட்பாளருக்கான ஆதரவு என்பது ஆச்சரியமானமுறையில் பலமடங்கு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

  16. யார் அந்த JVP யினர் ? அவர்களது பிரதான கொள்கை என்ன ? கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ஜே.வி.பி பற்றி எவரும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இந்த தேர்தலில் அனைத்து தரப்பினரும் விமர்சிக்கின்ற நிலைக்கு இவர்களின் வளர்ச்சி உள்ளதனை எவராலும் மறுக்க முடியாது. குறிப்பாக ஜே.வி.பி யினர் இந்த நாட்டை நாசமாக்கிய வன்முறையாளர்கள், கொலைகாரர்கள், குழப்பக்காரர்கள் என்றெல்லாம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. தேர்தல் காலம் என்பதனால் இது அரசியலுக்காக கூறப்பட்டாலும், இன்றை இளைய தலைமுறையினருக்கு உண்மையான வரலாறுகளை எத்திவைப்பது எமது கடமையாகும். அவ்வாறு உண்மைகளை கூறுகின்றபோது இந்த கட்டுரை எழுதுகின்றவரையும் ஜே.வி.பியை சேர்ந்தவர் என்று கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனெனில் கருத்த…

  17. இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கக்கூடாது?(கேள்வி, பதில் வடிவில்) August 28, 2024 — வி.சிவலிங்கம் — கேள்வி: இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இத் தேர்தல் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது? பதில்: மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை வரலாற்றோடு அணுகுவது அவசியம். இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை 1978 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது குடியரசு யாப்பின் ஆரம்பமாகும். இதன் பிரகாரம் குடியரசின் முதலாவது ஜனாதிபதியாக ஐ தே கட்சியின் சார்பில் ஜே ஆர். ஜெயவர்த்தன பதவியைப் பெற்றார். அவரது பதவிக் காலம் என்பது இலங்கையின் அரசியலை முழுமையாக மாற்றிய காலமாகும். 1948ம் ஆண்டு கிடைத்த சுதந்திரத…

  18. தேர்தலை தனக்கும் அநுராவுக்கும் இடையிலான போட்டியாக காண்பிக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் September 10, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் இரு வாரங்களே இருக்கின்றன. 38 பேர் போட்டியிடுகின்ற போதிலும், அவர்களில் பலரை பொதுவெளியில் காணவில்லை. பிரதான வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் பிரசாரங்களை நாடுபூராவும் மும்முரமாக முன்னெடுத்திருக்கிறார்கள். பிரதான வேட்பாளர்களாக விளங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவும் தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுத்து அபிவிருத்திப்…

  19. Published By: DIGITAL DESK 7 09 SEP, 2024 | 09:22 AM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் கட்சி என்று கருதப்படும் இலங்கை தமிழரசு கட்சி 2024 செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ( சமகி ஜன சந்தானய ) தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. செப்டெம்பர் முதலாம் திகதி வவுனியாவில் கூடிய அதன் ' மத்திய செயற்குழு ' அதற்கான தீர்மானத்தை எடுத்தது. தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிடும் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரிப்பதில்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அவர் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர். சிறுபான்மைச்…

  20. தமிழரசுக் கட்சியின் முடிவா? எம்.ஏ.சுமந்திரனின் முடிவா? – அகிலன் September 9, 2024 ஜனாதிபதி தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதற்கு தமிழரசுக் கட்சி எடுத்துள்ள முடிவு கட்சியின் முடிவா அல்லது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவா என்ற கேள்வி எழுப்பப் படுகின்றது. இந்த முடிவு அரசியலில் கடுமையான வாதப் பிரதி வாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. வவுனியாவில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழுவின் விசேட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் பின்னணியில் இருந்து செயற்பட்டவா் சுமந்திரன் என்பதில் சந்தேகம் இல்லை. என்ன அடிப்படையில், எதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு இன்று வரையில் தமிழரசு கட்சியின் சார்பில் யாருமே த…

  21. ‘பொதுச்சபை’ நகர்வை ‘சிவில் சமூக அமையம்’ தரும் படிப்பினைகளின் கண்கொண்டு நோக்குதல் [TamilNet, Friday, 30 August 2024, 09:08 GMT] இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களாயிருந்த எம். கே. நாராயணன் (2005-2010), சீவ்சங்கர் மேனன் (2010-2014) இருவரின் கட்டளையேற்றுத் தடம்புரண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவரான காலஞ்சென்ற இரா. சம்பந்தனின் மூலோபாய அச்சுத் தவறிய அரசியலின் விளைவாக 2010 ஆம் ஆண்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோன்றியது. மறுபுறம், தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூக முன்னெடுப்புகளாக ‘தமிழ் சிவில் சமூக அமையம்’, ‘தமிழ் மக்கள் பேரவை’ என்பவை 2013-2014 காலகட்டத்தில் தோன்றின. நாளடைவில், கட்சி அரசியல் உள்ளிட்ட பல காரணிகளால் அந்தச் சமூக முன்னெடுப்புகள் தேக்க…

  22. மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் தொலைத்த தேர்தல் அரசியலைத் திருத்த இயலுமா? [TamilNet, Sunday, 18 August 2024, 11:27 GMT] இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், இது தொடர்பாக ஈழத்தமிழர் தேசம் கடைப்பிடிக்கவேண்டிய அரசியல் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியை முன்வைத்து, தேர்தல் அரசியல் தொடர்பான எண்ணங்களும் முடிவுகளும் மூன்று முனைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று முனைகளும் ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்கான கொள்கை சார் அரசியலில் இருந்து ஏற்கனவே வழுவியுள்ளன அல்லது அவ்வாறு வழுவுவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளன. மேலெழுந்தவாரியாக ஊடக அறிக்கைகளையும் உடன்படிக்கைகளையும் படிக்கும்போது ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்கான அடிப்படைகளைச் சரியாகக் கையாண்டிருப்பது போன…

  23. சிறந்த பொருளாதாரக் கொள்கை யாருடையது? ச.சேகர் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இன்னமும் இரண்டு வாரங்களுக்கு குறைவான நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் முக்கிய போட்டியாளர்கள் கடந்த வாரம் தமது பொருளாதாரக் கொள்கைகளை வெளியிட்டிருந்தனர். இதுவரை காலமும் நடைபெற்ற தேர்தல்களில் பொருளாதாரக் கொள்கை என்பது காகிதங்கள் சிலவற்றுக்குள் அடங்கியிருக்கும் பொருளாக மாத்திரமே அமைந்திருந்ததுடன், வாக்காளர்கள் மத்தியில் அவை தொடர்பில் பெரிதும் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனாலும், இம்முறை, நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, எதிர்வரும் காலங்களில் இன்னும் சவால்களுக்கு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.