Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. வடக்கு களத்தில் அதிகரிக்கும் குழப்பம் -கபில் கொரோனா பீதிக்கு மத்தியில் தமிழ் அரசியல் கட்சிகள் பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இந்த முறை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நேரமோ- தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நேரமோ- அல்லது எல்லா வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்த நேரமோ- தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்திலேயே பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையில் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். கொரோனா தொற்று பீதி மீண்டும் ஏற்பட்டுள்ளதால், தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படுமா - இல்லையா என்று தெரியாமல் வேட்பாளர்கள் திணறுகிறார்கள். பெருமளவு காசைக் கொட்டி பிரசாரம் செய்யும் அவர்கள், இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் ஒருமுறை…

  2. அஷ்ரபும் வடக்கு - கிழக்கு இணைப்பும் ‘எழுக தமிழ்’ பேரணியின் மூலமாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாட்டில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பாக மற்றொரு சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றார். ‘‘வடக்கு, கிழக்கு இணைப்புக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் காலம்சென்ற எம்.எச்.எம். அஷ்ரப், சம்மதத்தைத் தெரிவித்து இருந்தார்” என்ற சுமந்திரனின் கூற்றே, இந்தச் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டருக்கு எதிராக, வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில்,…

    • 1 reply
    • 419 views
  3. ராஜபக்ஷக்கள் இந்தியாவுக்கும் உலகத்துக்கும் அளித்திருந்த உறுதிமொழிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்; சுமந்திரன் நேர்காணல் போருக்குப் பின்னரான தசாப்தத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்களை பிரதானமாக பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஆகஸ்ட் பொதுத் தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. பாராளுமன்றத்தில் ஆறு இடங்களை இழந்திருக்கிறது. பாராளுமன்றில் கூட்டமைப்பின் இருப்பு பலவீனமடைந்து, ராஜபக்ஷக்கள் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அதுவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ள நிலையில், அரசியல் தீர்வுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்டகால கோரிக்கைக்கான வாய்ப்புகள் என்ன? கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யுமான…

  4. எதற்காக இந்த முஸ்லிம் தனியார் சட்டச் சர்ச்சை? இலங்கைக்கு 2010 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள இலங்கையில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையை உயர்த்தும் வகையில் அச்சட்டத்தைத் திருத்த வேண்டும் என அமைச்சர் சாகல ரத்னாயக்க கூறியதாகச் சில ஊடகங்கள் கூறியிருக்கின்றன. முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையை உயர்த்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டுமா, இல்லையா? என்பது வேறு விடயம். ஆனால், வரிச் சலுகையைப் பெறுவதற்காக இந்தச் சட்டத்தையோ அல்லது நாட்டில் மற்றொரு சட்டத்தையோ திருத்த வேண்டும் எ…

  5. புதிய அரசியல் யாப்பு தொடர்பான முதலாவது இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கின்ற நிலையில், அது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் முன்ரைவிடவும் அதிகரித்திருக்கின்றன. அடுத்த மாதம் 10ஆம் திகதி வெளிவரவுள்ள இரண்டாவது இடைக்கால அறிக்கையுடன் புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கான இடம் என்ன என்பதும் தெட்டத் தெளிவாகிவிடும். கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சித்தார்த்தன் தலைமை வகித்த உப குழுவின் அறிக்கை ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றது. இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே அடுத்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கையில் இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற ஒற்றையாட்சி முறைமை தொடர்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது: “மாகாண சபைகளின் வினைத்திறனான செயற்பாட்டிற்க…

  6. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னுடைய ‘தனித்த’ அரசியல் பயணத்தை ஆரம்பித்து சுமார் ஏழு வருடங்களாகின்றன. ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையோடு கொள்கை ரீதியாக முரண்பட்டுக் கொண்டு வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இன்னும் சில முக்கியஸ்தர்களையும் இணைத்துக் கொண்டு, 2010 பொதுத் தேர்தல்க் காலத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நிறுவினார். இதன் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல் பற்றிய உரையாடல்களில் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘மாற்று’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே அடையாளப்படுத்தப்பட…

  7. அச்சுறுத்தலாகிவரும் உமாஓயா 7 ஆயி­ரத்து 37 வீடுகள் வெடிப்­பு­க­ளுடன் சேதம். 3 ஆயி­ரத்து 112 கிண­றுகள் வற்­றி­யுள்­ளன. 400 க்கும் அதி­க­மான நீர் நிலைகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. விவ­சாய நிலங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. உயி­ரி­னங்கள் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றன. நிலம் தாழி­றக்கம், மண் சரி­வுகள் ஏற்­பட்டு அபாயம். ஒரு நாட்டின் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் அந்த நாடு அடுத்­த­கட்ட நீண்­ட­கால பய­ணத்தை முன்­னெ­டுத்து செல்ல ஊன்­றுகோலாக அமை­ய­வேண்டும். ஒரு பரம்­பரை மட்டும் அல்­ல…

  8. விபத்தல்ல சீனாவின் சதியாக இருக்கலாம்" சுப்ரமணியசாமி

  9. தமிழரசுக் கட்சியின் தீர்மானம் – செல்வரட்னம் சிறிதரன் வடமாகாண சபையின் அமைச்சரவை விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுப்பதற்கான நிலைமையை நோக்கி நகர்ந்திருக்கின்றது. அமைச்சர்களை மாற்றி புதிய அமைச்சர்களை நியமிப்பதற்காக முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்துள்ள தீர்க்கமான முடிவுகளே இதற்குக் காரணம் என தமிழரசுக்கட்சியினர் குற்றம் சுமத்தியிருக்கின்றனர். பிடிவாதப் போக்குடனும், தமிழரசுக் கட்சிக்கு அமைச்சர் பதவியை வழங்குவதில் பழிவாங்கும் நோக்கத்துடன் முதலமைச்சர் நடந்து கொள்வதாகக் குறிப்பிட்ட தமிரசுக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சரவையில் தாங்கள் எவரும் பதவி ஏற்பதில்லை என ஏகமனதாகத் தீர்மானித்திருக்கின்றனர். …

  10. போர்க்குற்றவாளிகளை புத்தபெருமானும் மன்னிக்கமாட்டார் ஜென­ரல் ஜகத் ஜய­சூ­ரிய உட்­படப் படை­யி­னர் அனை­வ­ரை­யும் போர்க்­குற்ற விசா­ர­ணை­ யி­லி­ருந்து பாது­காப்­பேன்’’ என அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யுள்­ளமை தெற்­கில் பெரும் வர­வேற்­பைப் பெற்­றி­ருக்­கும் என்­ப­தில் சிறி­த­ள­வும் ஐய­மில்லை. தெற்­கில் நில­வு­கின்ற தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் அவர் அப்­ப­டித்­தான் கூறி­யி­ருக்க வேண்­டும். அவ்­வாறு கூறி­யி­ருக்­காது விட்­டால், அவ­ரால் ஆட்­சி­யில் தொட­ர­மு­டி­யாத நிலை­தான் உரு­வா­கி­யி­ருக்­கும். முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி ஜகத் ஜய­சூ­ரிய மீதான குற்­றச்­சாட்­டுக்­கள் தற்­போது தீவி­ர­ம­டைந்­துள்­ளன. இவர் போர்க்­குற்­றங்­கள் புரிந்­…

  11. கஞ்சா அரக்கனிடம் அகப்படாதிருப்போம் அண்­மைக்­கா­ல­மாக கொழும்பு மற்­றும் யாழ்ப்­பா­ணத்­தைத் தள­மா­கக் கொண்டு வெளி­வ­ரும் சகல தமிழ்ப் பத்­தி­ரி­கை­க­ளில் மட்­டு­மென்­றல்­லாது, கொழும்­பி­லி­ருந்து வெளி­யா­கும் சிங்­க­ளப் பத்­தி­ரி­கை­கள் பல­வற்­றி­லும்கூட அடிக்­கடி இடம் பிடித்­து­வ­ரும் முக்­கிய செய்­தி­யொன்­றாக அமை­வது, கஞ்­சாக் கடத்­தல் முறி­ய­ டிப்­புச் சம்­ப­வங்களாகும். கேர­ளக் கஞ்சா என்ற பெய­ரில் அழைக்­கப்­ப­டும் இந்­தப் போதைப் பொருள், இந்­திய மாநி­லங்­க­ளில் ஒன்­றான கேரள மாநி­லத்­தில் பெரிய அள­வில் விளை­விக்­கப்­பட்டு தமிழ் நாட்­டின் கட­லோ­ரக் கிரா­மங்­க­ ளூ­டாக கடல் வழி­யாக இலங்­கை­யின் வட பகு…

  12. 2020 வரை நீடிக்குமா கூட்டு அரசு? Share அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்­த­வின் அரசு கவிழ்க்­கப்­பட்டு மைத்­திரி-– ரணில் தலை­மை­யி­லான கூட்டு அரசு உரு­வா­ன­போது, இந்த நாட்டு மக்­கள் மத்­தி­யில் ஒரு புதுவித­ உற்­சா­க­மும் நம்­பிக்­கை­யும் பிறந்­தன. இத்­தோடு ஊழல்,மோச­டி­கள் ஒழிந்து விடும்; வாழ்க்­கைச் செல­வி­னம் குறைந்­து­வி­டும்; பொரு­ளா­தார ரீதி­யில் நாடு அபி­வி­ருத்தி அடையப் போகிறது என்­றெல்­லாம் மக்­கள் கனவு காணத் தொடங்­கி­னர்.போர் முடி­ வுக்கு வந்த வேளை­யில் கண்ட கனவு போன்றதே அதுவும். வீழ்ச்சி காண ஆரம்பித்துள்ள ஐ.தே.கட்சியின் மதிப்பு ஐக்­கிய தேசி­…

  13. மைத்திரியின் யாழ். வருகையும் எதிர்வினையும் புறக்கணிப்புகள், சத்தியாக்கிரகங்கள், ஊர்வலங்கள் என்பவற்றை மேற்கொள்வதற்கு என்று சந்தர்ப்பங்கள் உள்ளன. எடுத்ததற்கெல்லாம் அவற்றை செய்யப்போனால், அவற்றுக்குரிய மதிப்பும் பெறுமானமும் குறைந்துவிடும். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் என்னுடைய ஆட்சியில்தான் நடைபெறுகின்றன. முந்தைய ஆட்சியில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றிருந்தால், வெள்ளை வானில் வந்து பிடித்துக் கொண்டு சென்றிருப்பார்கள்”. கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‘ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்’ நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். வடக்கு மாகாண ஆளுநர் …

  14. தமிழ் – முஸ்லிம் இணைவு அரசியலும், கற்பனாவாதமும் - யதீந்திரா சமீப நாட்களாக தமிழ் எழுத்தாளர்கள் பலர், தங்கள் உளக்கிடக்கைகளை பத்தி எழுத்துக்களாகவும், இணையவெளி உரையாடல்களாகவும் சிதறவிட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. தெற்கில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டமையை அடியொற்றியே, இவ்வாறான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அவ்வாறான எழுத்தாளர்கள், தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடும் காலம் வந்துவிட்டதாக வேறு, சொல்லிவருகின்றனர். அது உண்மைதானா என்று நோக்குவதுதான் இப்பத்தியின் நோக்கம். முதலில் தற்போது எழுந்திருக்கும் சிங்கள – முஸ்லிம் முரண்பாட்டின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. முஸ்லிம்கள் தொடர்பான அதிருப்தியென்பது பலரும் நோக்குவது போன்று ஒரு புதிய விவகாரம் அல…

  15. மோடியின் இந்தியா என்ன சொல்ல முற்படுகிறது? - யதீந்திரா படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம். சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் திட்டமிடலாளர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், இந்தியாவின் அணுகுமுறைகள் குறித்து மேலும் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருக்கின்றது. கொழும்பின் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான சுப்பிரமணிய சுவாமியே இக்குழுவினருக்கு தலைமை ஏற்றிருந்தார். சுவாமி, பாரதிய ஜனதாவின் உயர் மட்டத்தினருக்கு நெருக்கமானவர் என்பது இரகசியமல்ல. ஆனால், அவர் பாரதிய ஜனதா கட்சியின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவராக இருக்கின்றார் என்பது புதிய தகவலாகும். இது கூட்டமைப்பினருக்கு பேரதிர்ச்சியாக…

  16. முள் படுக்கையில் கூட்டமைப்பு வடக்கில் அறுதிப் பெரும்பான்மை பெறாத சபைகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆட்சியமைக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று வருகிறது. ஆனாலும், இது கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. யாழ்ப்பாண மாநகர சபையில் தொடங்கியது இந்தப் பலப்பரீட்சை. இங்கு, 16 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாநகர மேயர் பதவிக்கு ஆர்னோல்ட்டின் பெயரை முன்மொழிய, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மணிவண்ணனின் பெயரை முன்மொழிய, பதிலுக்கு ஈ.பி.டி.பியும் ரெமீடியசின் பெயரை முன்மொழிந்ததால் திருப்பம் ஏற்பட்டது. மும்முனைப் போட்டி எதிர்பார்க்கப்படாத நிலையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டு…

  17. தமிழ் தேசிய சபைக்கான கொள்கை நிலைப்பாடு என்ன? - யதீந்திரா படம் | Srilankabrief தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் கூடி சில முடிவுகளில் உடன்பட்டிருக்கின்றனர் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ‘தமிழ் தேசிய சபை’ ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பிலும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. கூட்டமைப்பு அவ்வப்போது கூடி, முடிவெடுப்பதும், பின்னர் அந்த முடிவுகளை கிடப்பில் போடுவதும், தமிழ் அரசியல் வாசகர்களுக்கு புதிய விடயமல்ல. ஆனால், இதுவரை முடிவுகள் எடுக்கப்பட்ட போதிருந்த நிலைமைக்கும் தற்போதிருக்கின்ற நிலைமைக்கும் இடையில் ஒரு வேறுபாடு உண்டு. முன்னைய முடிவுகளின் போது, ஜயா சம்பந்தனே தமிழரசு கட்சியின் தலைவராகவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் இருந்தார். ஆனால், தற்ப…

  18. தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களைத் தோற்கடிக்கக் கூடாது புருஜோத்தமன் தங்கமயில் அமையும் சந்தர்ப்பங்களை வெற்றிகரமாகக் கையாளும் சமூகமே, அரசியல் வெற்றியை சுவைக்கும்; இலக்குகளை அடையும். மாறாக, அமையும் சந்தர்ப்பங்களை கையாளத் தெரியாமல், தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்திக்கும் சமூகம், பெரும் தோல்வியின் அடையாளமாக மாறும். தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய அரசியலும், இன்றைக்கு தோல்வியின் அடையாளமாக நோக்கப்படுவதற்கு, சந்தர்ப்பங்களைக் கையாளத் தெரியாத, தூரநோக்கற்ற, குறுகிய சுயநல அரசியலே பிரதான காரணம் எனலாம். இலங்கை, உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் இன்று சந்தித்து நிற்கின்ற பொருளாதார - இராஜதந்திர நெருக்கடிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான அவசரத்தைக் காட்டுகின்றது. அதற…

  19. அமெரிக்க போர்களும் விளைவுகளும்: கடந்த பத்தாண்டு- ஒரு பார்வை: ராஜன் சடகோபன் உலக வல்லரசான அமெரிக்கா, கடந்த 10 ஆண்டுகளில் தன்னை காப்பாற்றி கொள்ள போர் என்ற ஆயுதத்தை எப்படி எல்லாம் பயன்படுத்தியது, அந்த போரால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை சுருக்கமாக விளக்குகிறது இக்கட்டுரை அமெரிக்க வரலாற்றில், போர் என்பது ஒரு தொடர் கதை. அந்த நாடு உருவாகும் முன்பு, அங்கிருந்த செவ்விந்தியர்களை அழித்ததில் துவங்கிய அந்தப் போர், நிலத்துக்காக, அடிமைகளுக்காக, வர்த்தக உரிமைகளுக்காக, துறைமுகப் பகுதிகளுக்காக, இயற்கை வளங்களுக்காக இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இரண்டாவது உலகப் போருக்கு பின், வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா மீதான பனிப்போர், கொரியா, வியட்நாம், …

  20. பத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா? இலங்கையில் அடுத்த சனாதிபதி தேர்தல் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால் தேர்தல் களத்தில் இறங்க இப்போதே ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. இதில் மூன்று பேர்களது பெயர்கள் அடிபடுகின்றன. இப்போதுள்ள சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மீண்டும் போட்டியிடுவார் என்று அவரது கட்சியில் உள்ள அமைச்சர்கள் சொல்கிறார்கள். அதே போல் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் சிலர் பிரதமர் இரணில் விக்கிரமசிங்காதான் தங்கள் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் என உறுதிபடக் கூறுகிறார்கள். இந்த இருவரைத் தவிர மூன்றாவதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக…

  21. பிச்சை வேண்டாம் நாயைப் பிடி எம்.எஸ்.எம் ஐயூப் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலம்: சர்வதேச ரீதியாக விமர்சிக்கப்பட்டு வந்த பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, அரசாங்கம் கொண்டு வரப்போகும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாக, ஏற்கெனவே தெற்கிலும் வடக்கிலும் சர்வதேச ரீதியாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிலர், தற்போது அமலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பார்க்கிலும், புதிய சட்டம் மோசமானது எனக் கூறுகின்றனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் வற்புறுத்தலாலேயே, அரசாங்கம் தற்போது அமலில் உள்ள சட்டத்துக்குப் பதிலாக, புதிய சட்டம் ஒன்றை வரைந்துள்ளது. இலங்கைக்கு தொட…

    • 0 replies
    • 807 views
  22. மஹிந்தவும் கோத்தாவும் சம்பந்தனுடன் பேசியது என்ன? இவ்­வாரம் இலங்கை அர­சி­யலில் அதி­க­மாக மக்­களால் பிரஸ்­தா­பிக்­கப்­பட்ட பத்­தி­ரிகை செய்­தி­களில் மிக கவ­னத்தை ஈர்த்த செய்­தி­யாக பேசப்­ப­டு­வது. எதிர்க்­க­ட்­சித் தலைவர் இரா. சம்­பந்தன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷ­வுடன் உரை­யா­டி­ய­தாக கூறப்­ப­டு­கின்ற விடயம் .மற்­றொன்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜ­யம் ­செய்து ஆற்­றிய உரை. இன்­னொன்று முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா அம்­மையார் வடக்கு பிரச்சினைக்கு தீர்­வின்றேல் அங்கு மீண்டும் பிரச்சினை உரு­வா­கலாம் என்ற கருத்து. பிர­தமர் ரணில் யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டி­ருந்த வேளை வடக்கு மற்றும் …

  23. ராஜபக்ஷ சகோதரர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதே தமிழ் பொது உளவியலின் பிரதான கூறாகக் காணப்படுகிறது. ஆனால், இதன் அர்த்தம் தமிழ் மக்கள் மைத்திரியை நம்புகின்றார்கள் என்பதல்ல. படித்த, நடுத்தர வர்க்கத் தமிழர்களைப் பொறுத்த வரை ஏதோ ஒரு மாற்றம் தேவை என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இதன் அர்த்தம் மைத்திரி மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்பதல்ல. மைத்திரி எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வருவார் என்ற கேள்விக்கு அவர்களில் பலரிடம் துலக்கமான பதில் இல்லை. தமிழ்ப் பொது உளவியலின் பெரும் போக்கைக் கருதிக் கூறின், தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக காணப்படுகிறார்கள் என்பதே சரி. இவ்விதம் அரசுக்கு எதிராக காணப்படும் வாக்குகள் அவற்றின் தவிர்க்கப்படவியலாத தர்க்கபூர்வ விளைவாக மைத்திரி…

  24. இன்­றைய கூட்­டாட்­சி­யின் விரி­வாக்­கம்!! வழக்கு இன்­றைய பேரு­ரைக்­கான தலை­யங்­கம் சமஷ்டி பற்­றி­யது. இந்­தச் சொல் பெட­ரல் என்­கின்ற ஆங்­கி­லச் சொல்­லைக் குறிக்­கி­ற­தா­கத் தமி­ழிலே பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருந்­தா­லும் அது வட­மொழி சார்ந்த ஒரு சொல்­லா­கும். பொருத்­த­மான தமிழ்ச் சொல் இல்­லை­யென்­றா­லும் கூட்­டாட்சி அல்­லது இணைப்­பாட்சி என்ற சொற்­கள் தற்­போது பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. சமஷ்­டி­யைத் தனது அடிப்­ப­டை­யா­கக் கொண்­டி­ருக்­கின்ற இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யும் சில வரு­டங்­க­ளுக்கு முன்­னர் எமது யாப்­பிலே காணப்­ப­டும் வட சொற்­க­ளைத் தமிழ்ச் சொற்­க­ளாக மாற்­றி­ய­போத…

  25. Posted by: on Jun 11, 2011 ஐ. நா மனித உரிமைச் சபையின் 17வது கூட்டத்தொடர் ஆரம்பமாகி இன்றுடன் (07.06.2011) எட்டு வேலை நாட்கள் முடிந்துள்ளன, ஆனால் இன்றுவரை ஐ. நா வின் நிபுணர் குழுவினால் சிறீலங்காவின் இறுதி யுத்த நிகழ்வுகள் பற்றி வெளியிட்ட அறிக்கைக்கு ஆதரவாக சிறீலங்கா மீது ஒரு கண்டனப் பிரேரணை மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியங்கள் மிகக் குறைந்தே காணப்படுகின்றன. இதன் ஏமாற்றம் காலதாமதம் பற்றி நாம் ஆராய்வோமானால், பல மறைந்துள்ள காரணங்கள் வெளியாகின்றன. முதலாவதாக - மனித உரிமைச் சபையில் அங்கத்துவ நாடுகள் மூன்றாக பிரிந்து காணப்படுகின்றன. இவை ஐ.சா அறிக்கைக்கு ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஒரு பிரிவும், இவ் அறிக்கைக்கு சர்வதேச விசாரணை நடத்தப்படாது எ…

    • 1 reply
    • 782 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.