Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொள்ளவுள்ள சவால்கள்? யதீந்திரா அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற மேதின நிகழ்வில் பேசுகின்றபோது இரா.சம்பந்தன், நாங்கள் மீண்டுமொருமுறை எங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டியிருக்கிறது என்னும் பொருளில் பேசியிருந்தார். சம்பந்தன் பலம் என்று குறிப்பிட்டது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின்போது வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் சார்பில் அனைத்து ஆசனங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாக வேண்டும், அப்போதுதான் புதிய அரசாங்கத்துடன் நாங்கள் பலமான நிலையில் பேசமுடியும் என்னும் உட்பொருளைக் கொண்டதாகும். சம்பந்தன் இவ்வாறு எதிர்பார்ப்பது தவறல்ல, ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றனவா? இதிலுள்ள சவால்கள் என்ன? சவால்கள்…

  2. முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட அரசியல் நியாயம்: தமிழர் தலைமைகளின் கூட்டுச் சதி 05/16/2015 இனியொரு... “ஆப்கானிஸ்தானிலும், அரபு நாடுகளிலும், ஆபிரிக்காவிலும் ஆசிய நாடுகளிலும் எங்களுக்கு அக்கறையிருக்கிறது. அங்கு மனித் உரிமைகள் மீறப்படும் போதும் மக்களுக்காகக் குரல் கொடுப்போம், அந்த நாடுகள் எல்லாம் அபிவிருத்தியடைவதற்கு நாம் உறுதுணையாக இருப்போம். ” இப்படித்தான் மேற்கு ஏகபோக நாடுகள் உலக மக்களை ஏமாற்றிக்கொண்டே அவர்களைச் சுரண்டி ஏழைகளக்கி அழித்து வருகின்றன. ராஜித சேனாரத்ன மேற்கு நாடுகளால் கற்பிக்கப்பட்ட இலங்கை அரசாங்கம் தமது உள்ளூர்ப் பதிப்பை ஆரம்பித்துள்ளது. “போர் வெற்றியை நாங்கள் வழமை போலக் கொண்டாடப் போவதில்லை. இலங்கையின் ஒரு பகுதி இன மக்களுக்கு எதிராகத் தொடுக்கப…

  3. முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் கடந்து போன நாளொன்றில், 'வன்னியுத்தம் " என்ற பொத்தகம் ஒன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எழுத்தாளர் 'அப்பு" கண்ணீரையும் இரத்தத்தையும் சாட்சி வைத்து எழுதியிருந்த அப்பதிவில் எனது இதயத்தை ஊடுருவிய பக்கமொன்றை வாசகர்களுக்காக அப்படியே தருகின்றேன். 1998ம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்துடன் நடந்த ஒரு மோதலில் விசுவமடுவைச் சேர்ந்த ஒரு இளைஞன் வீரச்சாவடைந்தான்;. அந்த விபரத்தை அவனது குடும்பத்திற்கு அறிவிக்கும்படி விசுவமடு அரசியல் துறை பொறுப்பாளருக்கு அறிவிக்கப்பட்டது. உடனே அந்த விசுவமடு பொறுப்பாளர் தனது உந்துருளியில் அந்த மாவீரனின் வீடு நோக்கி புறப்பட்டார். அப்போதுதான் முதன் முதலாக அந்த பொறுப்பாளர் அந்த வீட்டுக்கு செல்கின்றார். அது வரை ஒரு போராளியின் வ…

  4. வித்தியாவின் மரணத்தின் பின்னரான சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரல் நிர்மானுசன் பாலசுந்தரம் பல ஆயிரக்கணக்கான பாலியல் வல்லுறவின் கொடூரங்களையும், அது சுமந்து நிற்கும் பெரும் வலிகளையும் தமிழர் தேசம் கடந்து வந்திருக்கிறது. இவற்றில் பலவற்றிற்கு சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாத உரிமை மறுப்பு இடம்பெற்றது. நூற்றுக்கணக்கானவை வெறும் துயர் பகிர்வோடு நிறைவுற்றன. கிரிசாந்தி, கோணேஸ்வரி மற்றும் ரஜனி போன்றவர்கள், குறிப்பாக கிரிசாந்தி மீதான சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படைகளின் கூட்டு பாலியல் பலாத்காரம் சர்வதேச அளவில் பேசப்பட்டும் கூட, மக்கள் போராட்டத்திற்கான ஓர் உடனடியானதும் நேரடியானதுமான தோற்றுவாயாக மாற்றம் பெற்றிருக்கவில்லை. ஆயினும், புங்குடுதீவில் சிவலோகநாதன் வித்தியா என்னும் …

  5. மறைக்கப்பட்ட நீதியின் மேல் நீதிக்கான பயணம்: வித்யா மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை தொடர்பான ஒரு பார்வை நவரஞ்சினி நடராஜா மற்றும் தவச்செல்வி [ig=http://maatram.org/wp-content/uploads/2015/05/IMG_7155-800x365.jpg] படம் | Maatram Flickr கடற்பரப்பின் ஒளிப்புனலிலும் மௌன அலைகளின் வரவேற்பிலும் புங்குடுதீவினை நோக்கி கடலை ஊடறுத்தவாறான எமது பயணத்தில் வித்யாவின் நினைவுகளுடன் நீண்டு சென்றது பாதை. பரந்து நீண்டிருந்த கடலின் ஆழத்தில், உப்புக்காற்றின் ஈரத்தில், எம்மவர் கதைகள் புதைந்திருப்பதனை உணர முடிந்தது. நீதிமன்றக் கட்டடத்தைத் தாண்டிய போதே வழமைக்கு மாறான இராணுவம் மற்றும் பொலிஸாரின் பிரசன்னத்தைக் காணக்கூடியதாக இருந்தது. இராணுவ மயமான யாழ்ப்பாணக் கோட்டை, காலனித்துவ கால…

  6. விக்னேஸ்வரனின் முள்ளிவாய்க்கால் உரை அரசின் மீது மட்டுமல்ல கூட்டமைப்பின் மீதும் விரல் சுட்டுகின்றதா? யதீந்திரா படம் | AP Photo/Eranga Jayawardena, NEWSOBSERVER முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கான அஞ்சலி நிகழ்வின் போது வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில், அவர் பல்வேறு விடயங்களை அடையாளப்படுத்தியிருக்கின்றார். போர் முடிவுற்று ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் கூட, போரில் உயிரிழந்த பொது மக்கள் தொடர்பான உண்மைநிலை இன்னும் வெளிக்கொணரப்படவில்லை என்று தெரிவித்திருக்கும் விக்னேஸ்வரன், மக்களின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கண்டறிவதற்கான உண்மையான – நம்பகமான விசாரணை பொறிமுறை ஏற்படுத்தப்பட்டமையானது, தமிழ் மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்திய…

  7. மீண்டும் எதற்காக ராஜபக்‌ஷ? வீ. தனபாலசிங்கம் படம் | Reuters Photo, NEWS.XINHUANET சுமார் ஒரு தசாப்த காலமாக நாட்டை ஆட்சி செய்த பிறகு ஜனவரி தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஜனாதிபதியை பிரதமராக மீண்டும் பதவிக்கு கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கையை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பிரசாரங்கள் இலங்கையின் இன்றைய அரசியல் நிலைவரத்தில் கவனத்தை பெரிதும் ஈர்க்கின்ற விசித்திரங்களில் ஒன்று. “பிரகாசமான எதிர்காலத்துக்காக மஹிந்த” என்று சமூக வலைத்தளங்களில் சுலோகம் வேறு. முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பிரசாரங்களில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற உத்வேகம் மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் வந்து விடுவாரோ என்று பலருக்கும் மருட்சியை ஏற்ப…

  8. முள்ளிவாய்க்கால் ஆறாம் ஆண்டு நினைவு: ஒரு தேசமாக எம்மை வலுப்படுத்துவதற்கு என்ன செய்துள்ளோம்? முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து ஆறு ஆண்டுகள் ஆகிப் போயின. தமிழீழ நடைமுறை அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தலைவர் பிரபாகரன் உட்பட தளபதிகள், ஆயிரக்கணக்கான போராளிகள், பல்லாயிரக்கணக்கான மக்கள், தமிழர்களின் நிறுவனங்கள் என 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் நாம் இழந்தவை சொல்லில் வடிக்க முடியாத பெருந்துயர் தருபவை. ஆறு ஆண்டுகளின் முன்னர் நிகழ்ந்தவைகளை இப்போது நினைத்துப் பார்த்தாலே இதயம் வெடித்து விடுவது போன்ற பெரும் வலி எம்முள் ஏற்படும். தலைவர் பிரபாகரன் உட்பட தமது இன்னுயிரை ஈகம் செய்த தளபதிகள், போராளிகள் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்குதமிழ் இத்தருணத்…

  9. கடந்த மேமாதம் 15ம் திகதி யாழில் ஓர் சுவாரசியமான கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் ததேகூ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் இடையேயான விவாதமே அதுவாகும். ஈழமக்கள் ஜனநாயக முன்னணியின் உறுப்பினர் தவராஜா உள்ளிட்ட யாழில் இயங்கும் பல அரசியல் பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டிருந்தார்கள். எதிர்பார்த்தது போலவே அவ் விவாதமும் “இரு தேசம் ஒரு நாடு” என ததேமமு இன் நிலைப்பாடு ஒரு பக்கமாகவும “அதிகாரப்பகிர்வு”; என ததேகூ இன் நிpலைப்பாடு மறுபுறமாகவும் இந்த சித்தாந்தங்களை (அப்படி இவற்றை அழைக்கலாமோ?) மையமாக வைத்து நடத்தப்பட்டது. தாமும் இரு தேசம் ஒரு நாடு கொள்கையின் அடிப்படையில்தான் செயற்படுகின்றார்கள் எனினும் அணுகும…

    • 0 replies
    • 358 views
  10. செத்த வீட்டு அரசியல் - நடராஜா குருபரன் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மரணம் அனைவவரையும் உலுக்கியுள்ளது. அதிர்வுகள் தொடர்கின்றன. உயிருக்கு உயிரானவளின் மரணம் தந்த வலியால் பெற்றவரும் உற்றவரும் துடிக்கின்றனர். முள்ளிவாய்க்காலில் சுமந்த வலியை நினைவு கூரும் மாதத்தில் மீண்டும் ஒரு துயர் தமிழ் மக்களை சூழ்ந்து கொள்கிறது. பாடசாலைக்கு காலை புறப்பட்ட வித்தியா மறுநாள் காலை பாழடைந்த வீட்டில் பிணமாக மீண்டாள். வித்தியாவின் கொலைக்கான காரணங்கள் இப்போ வெளிவந்துகொண்டு இருக்கின்றன. வித்தியாவின் படுகொலைக்கு காரணமானவர்கள் எனச் சந்தேகிக்கப் படுபவர்கள் மூவர் கைதாகி உள்ளனர் என இலங்கைப் பொலிசும் கூறுகிறது. வித்தியா இறுதிக் கணங்களில் எதிர்கொண்ட நரக வேதனைகள், கொடூரங்களை வைத்தியசாலையின் பிரேதபரி…

  11. தமிழ் மக்களின் கூட்டுத் துக்கமும் கூட்டுக் கோபமும் நிலாந்தன் மாற்றத்தின் விரிவைப் பரிசோதித்தல் நாளை, ஆட்சி மாற்றத்தின் பின்னரான முதலாவது மே 18 ஆகும். இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் கடந்த வாரத்தில் இருந்து ஆங்காங்கே நடந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை குறியீட்டுத் தன்மைமிக்கவை. சிறுதொகையினரே இவற்றில் பங்கு பற்றி வருகிறார்கள். அவர்களிற் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகளே. ஆனால் இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவோரின் உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வாக ஒழுங்கமைக்கப்பட்டால் அது பல்லாயிரக்கணக்கானோர் பங்குபற்றும் ஓர் அரசியல் வணக்க நிகழ்வாகவே இருக்கும். சிறீலங்காவின் சுதந்திர தின விழாவில் பங்குபற்றிய தமிழ…

  12. போரினை நினைவுகூருதலும் அதன் அரசியல்களும் மகேந்திரன் திருவரங்கன் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில், இலங்கையின் முப்பதாண்டு கால சிவில் யுத்தம் பொது மக்கள், விடுதலைப் போராளிகள், இராணுவத்தினர், அரசியற் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பட்ட, ஆயிரக்கணக்கானோரினைப் பலியெடுத்ததன் பின்னர் ஓய்ந்தது. போரின்போது கொல்லப்பட்ட அனைத்து உயிர்களும் அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கும், அரசியல் ரீதியிலான சமூகங்களுக்கும் மிகவும் முக்கியமானவர்கள். மனித உயிர்கள் யாவும் பெறுமதி மிக்கவை. எனவே போர் எமது சமூகங்களிலே விட்டுச் சென்றுள்ள இழப்புக்களை நாம் உணர்வுபூர்வமாக நினைவு கூருகின்ற அதேவேளை, எமது நினைவுகூரற் செயன்முறைகள் மீளவும் ஒரு முறை இவ்வாறான இழப்புக்கள் நேராதபடி எமது சமூகங்களி…

  13. மே 18: ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர்.. யதீந்திரா ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், இதுபோன்றதொரு மே மாதத்தில், தமிழ்த் தேசிய அரசியல் இயங்குநிலையை மூன்று தசாப்தகாலமாக தனது இராணுவ ஆற்றலால் கட்டுக்குள் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிவுற்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆத்மா, தலைவர், முதன்மைத் தளபதி என்று, அனைத்து நிலைகளிலும் அந்த இயக்கத்தை தாங்கிநின்ற வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறந்த உடல் காண்பிக்கப்பட்டபோது, அதனை நம்புவதற்கு மிகவும் சொற்பமான தமிழர்களே இருந்தனர். அவர் இருக்கிறார், வருவார் என்று சொல்பவர்களின் கைகளே சொற்ப காலம் ஓங்கியிருந்தது. ஆனாலும் காலம் என்னும் ஆசானுக்கு முன்னால் அதிக காலம் பொய்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இன்று பிரபாகரனும், அவரது கட்டள…

  14. மாற்றம் மாற்றமா? - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா 16 மே 2015 முள்ளிவாய்க்கால் நினைவு வாரப் வெளியீடு - 1: விடுதலைப்புலிகள் தமது கைகளில் எடுத்துக்கொண்டு நிகழ்த்திய தமிழீழ விடுதலைப்போராட்டம் அழிக்கப்பட்டு ஆறுவருடங்கள் முடிந்துவிட்டன. போரை நிகழ்த்தி வெற்றி அடைந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இலங்கையின் அரசு கடந்த மூன்று தசாப்தங்களில் எதிர்கொண்ட உள்நாட்டுப் போரில் இருந்தும் பின் தொடர்ந்த ஊழல் நிறைந்த ஆட்சியில் இருந்தும் விடுபட்டுள்ளது. இலங்கையில் மாற்றம் வேண்டும் என்ற குரல் எழுச்சியுடன் மகிந்தவின் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. மகிந்த அரசாங்கம் அது கொண்டிருந்த மோசமான ஊழல் மற்றும் சர்வாதிகாரக் குணங்களுக்காக சிங்களமக்களாலும் நான்காம் …

  15. ஜோன் கெரியின் இலங்கை விஜயம்: அறிக்கைகள் அல்ல, செயலே தேவை முத்துக்குமார் அமெரிக்க அரசுச் செயலர் ஜோன் கெரி தனது இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருக்கின்றார். இவர் இலங்கை வருமுன் இலங்கையின் வெளிநாட்டமைச்சருக்கும் படைத்தளபதிகளுக்கும் இந்துசமுத்திரக் கடலில் தரித்திருந்த இராட்சத விமானம் தாங்கிக் கப்பலை அமெரிக்கப் படையினர் காட்டியிருக்கின்றனர். அவரது பயணத்தின் நோக்கம் ஆட்சிமாற்றத்தைப் பாதுகாப்பதும் தமிழர் எழுச்சியைத் தடுப்பதும்தான். மோடியைப் போலவே அரசாங்கத்திற்குக் கரைச்சல் கொடுக்கவேண்டாம் எனக் கூட்டமைப்பினருக்கு புத்திமதியும் கூறிச் செல்லவும் அவர் தவறவில்லை. அமெரிக்க இராஜதந்திரிகள் அரசுமுறைப் பயணத்தின்போது கருத்துச் சொல்வதிலும் ஒரு ஒழுங்குமுறை உண்டு. தாம்…

  16. இறந்தவர்களை நினைவுகூர்தல் நிலாந்தன் சில ஆண்டுகளுக்கு முன் ஜே.வி.பி.யின் முன்னாள் மூத்த உறுப்பினர் ஒருவரோடு உரையாடும்போது அவர் சொன்னார், 'ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி நசுக்கப்பட்டபின் அதில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்வது என்பது உடனடுத்து வந்த ஆண்டுகளில் மிகவும் ஆபத்தாக இருந்தது. ஆனால் சந்திரிக்காவின் வருகைக்குப் பின் நிலமை மாறத் தொடங்கியது. 90 களின் முன்கூறில் ஓரளவுக்கு இரகசியமாக இறந்தவர்களை நினைவுகூரக் கூடியதாக இருந்தது. அப்பொழுது அது மிகவும் புனிதமானதாகவும் ஒரு வழிபாடாகவும் இருந்தது. அந்த வழிபாட்டிற்கு ஓர் ஆத்மா இருந்தது. பின் வந்த ஆண்டுகளில் நிலமைகள் மேலும் இறுக்கம் குறைந்தன. இதனால் இறந்தவர்களை நினைவு கூர்வது ஆபத்தற்ற ஓர் அரசியல் நிகழ்வாக மாறியது. அந்நாட்கள…

    • 1 reply
    • 829 views
  17. அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் இலங்கை விஜயமே இந்த வாரம் பெரிய செய்தியாகிற்று. அவர் அரச தலைவர்களை மட்டுமன்றி தமிழ் அரசியல் தலைவர்கள் சிவில் சமூக பிரமுகர்கள் எனப் பலதரப்பட்டவர்களைச் சந்தித்து சென்றிருக்கின்றார். கடந்த சில வருடங்களாக ஸ்ரீலங்கா அரசின் மீது அழுத்தம் கொடுக்கக்கூடிய சக்தியாகவும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அதற்கு எதிரான பிரேரணையைக்கொண்டு வருவதற்கு உதவிய சக்தியாகவும் அமெரிக்கா இயங்கியதனால் இவருடைய வருகை தமிழ் மக்கள் விசேடமாகக் கவனம் செலுத்தும் வருகையாகி விட்டது. புதிய அரசாங்கத்துடன் தனது நல்லுறவுகளைப் புதுப்பித்துக்கொண்டிருக்கும் பின்னணியில், தமிழ் மக்களின் நலன்களையொட்டி அமெரிக்கா எடுக்கப் போகும் நிலைப்பாடுகள் யாவை என்பதே கேள்வியாகும். இக்கேள்வ…

    • 1 reply
    • 352 views
  18. இணக்க அரசியல் தோல்வியடைந்துள்ளது சமூக ஆய்வாளர் நிலாந்தனுடன் ஒரு நேர்காணல் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான தென்னிலங்கை அரசியல் சூழலையும் தமிழர் அரசியல் சூழலையும் எப்படிப் பார்க்கின்றீர்கள்? தென்னிலங்கை அரசியல் சூழல் ஸ்திரமற்றதாக மாறியிருக்கின்றது. அதேநேரம் அது அதிகம் வெளிச்சக்திகளுக்குத் திறந்து விடப்பட்டதாகவும் மாறியிருக்கின்றது. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்படும் 2009 மே மாதத்திற்கு முன் வரையிலும் இலங்கையில் தமிழ் அரசியல் ஒரு வகையில் மூடப்பட்டதாக இருந்தது. அதாவது வெளிச்சக்திகள் எளிதில் கையாள முடியாததொன்றாகவும், வெளிச்சக்திகளால் கையாளப்பட முடியாததொன்றாகவும் வெளிச்சக்திகளின் தலையீடுகளுக்கு வரையறுக்கப்பட்ட ஒரு பரப்பாகவும் காணப்பட்டது. 2009 மே மாதத்திற்குப் பின…

  19. ஹெரி - கூட்டமைப்பு சந்திப்பில் அமெரிக்கா இராஜதந்திர நடைமுறைகைளை உதாசீனம் செய்ததா? யதீந்திரா ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்த முதல் முக்கிய நபர் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆவார். அதனைத் தொடர்ந்து அண்மையில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் ஹெரி, இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்காவை பொறுத்தவரையில் அதன் மிக உயர் பொறுப்புக்களில் ஒன்றை பிரதிநிதித்துவம் செய்பவரின் இலங்கை விஜயமானது ஒரு குறியீட்டு அரசியல் பெறுமதியை கொண்டதாகும். தன்னுடைய தோல்விக்குப் பின்னால் இந்திய, அமெரிக்க உளவுத் துறைகளின் திரைமறைவு சதியிருப்பதாக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறிவரும் நிலையில்தான், ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இந்திய பிரதமரின் விஜயமும், தற்போது அமெர…

    • 1 reply
    • 495 views
  20. சிறிலங்காவில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ள சீனா சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சொந்த இடத்தில் புதிய விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்காக சீனா 200 மில்லியன் டொலர்களுக்கும் மேல் வழங்கியிருந்தது. இது சீன அரசாங்கத்தின் சிறந்த முதலீடுகளில் ஒன்றாகக் காணப்படவில்லை. 2013ல் மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இந்த விமான நிலையத்தின் ஊடாக நாளொன்றுக்கு ஒரேயொரு விமான பறப்பு மட்டுமே அதாவது டுபாய்க்கான விமான சேவை மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. ஜனவரி மாதத்தில், ராஜபக்சவின் மீள்தேர்தல் பரப்புரையானது தோல்வியில் முடிவடைந்த பின்னர், சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான சிறிலங்கா எயர்லைன்ஸ் மத்தல விமான நிலைய…

  21. ஈழத்தமிழரின் விடுதலைக்கான அடிப்படை நிறுவன கட்டமைப்புக்கள் தத்தர் ஈழத்தமிழரின் வாழ்வில் பல விடயங்களை அடிப்படையிலிருந்தும் ஆரம்பத்திலிருந்தும் தொடங்க வேண்டியுள்ளன. ஈழத்தமிழரின் விடுதலைக்கான அடிப்படை நிறுவன கட்டமைப்புக்களை அவசர அவசரமாக உடனடியாக தொடங்க வேண்டியுள்ளது. உதிரியாகவும் எதிரும் புதிருமாகவும் நாம் செயற்படுவதன் மூலம் மரத்தின் கிளையில் அமர்ந்துகொண்டு அக்கிளையை வெட்டுவதுபோல் எமக்கு நாமே தீங்கை தேடிக்கொண்டிருக்கிறோம். சரியான கருத்தாக்கமும் அதனை செயற்படுத்துவதற்கான நிறுவன அமைப்புக்களும் இருக்குமேயானால் இத்தகைய தவறுகள் தோன்ற இடம் இருக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக எம்மிடம் சரியான கருத்து மண்டலம் இருக்கவேண்டும். அவ்வாறான கருத்து மண்டலத்தை உருவாக்குவது என்பது …

  22. சம்பூர்: மீள்குடியமர்த்தப்படுவார்களா மக்கள் – ஒரு பார்வை தற்போதைய பீல்ட் மாஸ்ரர் சரத்பொன்சேகா அவர்களுக்கு 2006 சித்திரை மாதம் கொழும்பில் தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலின் காரணமாக மறுநாள் பழிவாங்கும் வகையில் திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதி நோக்கி சரமாரியான செல், பீரங்கி தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக அலறியடித்து உடுத்த உடுப்புடன் கையில் எடுத்தவற்றுடன் ஓடிய சம்பூர் மக்கள் இடம் பெயர்ந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான நம்பிக்கையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறான நீண்ட இடம் பெயர்வையும் அகதி வாழ்வையும் சந்தித்த இந்த மக்களின் மீள்குடியேற்றம் எவ்வகையில் நிகழப்போகின்றன எ…

  23. “இலவச கல்வி தருகிறார்கள். மகா பொல புலமை பரிசில் பணம் தருகிறார்கள். தின்னும் நிவாரண அரிசியிலிருந்து அனைத்தையும் இலவசமாக தரும் சிறிங்கா அரசாங்கத்தினை எதிர்க்கவும் புறக்கணிக்கவும் பிரசாரம் செய்துகொண்டு வெளிநாட்டிலிருக்கும் உங்களுக்கு தாயத்திலுள்ள மக்களின் யதார்த்தநிலை பற்றி என்ன தெரியும்” தாயகத்தின் நிலமை குறித்தும் தாயகத்தின் விடுதலை குறித்தும் இறுக்கமாக நடக்கும்; விவாதங்களின் நீட்சியில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களின் வாயை அடைப்பதற்காக எதிர்தரப்பினால் முன்வைக்கப்படும் ஒற்றை வாக்கியம் இதுவாகும். இந்த ‘எதிர்த்தரப்பு’ அநேக தருணங்களில் தாயகத்திலிருந்து பேசும் குரலாக இருப்பதே இல்லை. மாறாக, தாயக மக்களுக்காக கரிசனைப்படுவதுபோன்ற போர்வையில் புலம்பெயர்ந்த மண்ணிலேயே இருந்துகொ…

    • 5 replies
    • 519 views
  24. குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தமிழில் கவின்:- சர்வதேச யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கைப் படையினரின் பெயரை புனர்நிர்மானம் செய்ய சிறந்த சந்தர்ப்பமாக நேபாளத்தில் இடம்பெற்ற பூமியதிர்வினை பயன்படுத்திக் கொள்ள தூர நோக்குடன் ஜனாதிபதியும் பிரதமரும் முயற்சிக்கின்றனர். இதன் ஓர் கட்டமாக நேபாளத்தில் இடம்பெற்ற பூமியதிர்வினை பயன்படுத்திக் கொள்ள பிரதமரும் ஜனாதிபதியும் தீர்மானித்துள்ளனர். நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். உலகின் எந்தவொரு மூலையில் அனர்த்தம் ஏற்பட்டாலும் அந்த அனர்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோள் கொடுப்பது நாகரீகமான மனித சமூகத்தின் த…

    • 0 replies
    • 227 views
  25. கதவுகளை திறக்கும் அமெரிக்கா! [ ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2015, 08:59.20 PM GMT ] பயணிகள் விமானங்களின் வருகை, புறப்படுகையால் எப்போதும் பரபரப்பாக இருக்கும், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த மாதம் 19 ஆம் திகதி, இராணுவ விமானம் ஒன்று வந்திறங்கியது. அது 26 பேர் பயணம் செய்யக் கூடிய அமெரிக்க கடற்படையின் சி-2 ரக போக்குவரத்து விமானம். அமெரிக்க கடற்படையினரின் பயன்பாட்டுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்ட அந்த விமானத்தில், இரண்டு விமானிகள், இரண்டு விமானப் பணியாளர்கள், மற்றும் சில அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினர். ஆனால் அவர்கள், அதிலிருந்து இறங்கி விமான நிலையத்துக்குள் நுழையவில்லை. கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்ததாக உள்ள, விமானப்படைத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.