அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
இவர்களை எப்படி மன்னிக்க முடியும்? - புகழேந்தி தங்கராஜ். ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை அறிந்ததும், உடுக்கை இழந்தவன் கைபோல நீண்டிருக்கவேண்டும் பாரதத்தின் கை. ஆனால், கொல்லப்பட்ட எம் உறவுகளைக் காப்பாற்ற நீளாமல், கொலைகாரர்களுக்கு ஆயுதம் கொடுக்க இந்த தேசத்தின் கை நீண்டது. 'வெல்க தமிழ்' என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்கிறவர்கள் மட்டுமே தமிழனின் முதுகில் குத்துவதில்லையாம்.....! அப்படியெல்லாம் எழுதி ஒட்டிக்கொள்ளாதவர்களும் இதைத்தான் செய்கிறார்களாம்...! 'அவர்களையெல்லாம் கண்டித்திருக்கிறீர்களா' - என்கிற புதிய கேள்வியோடு புறப்பட்டிருக்கிறார்கள் என் பழைய நண்பர்கள். 'தமிழக அரசியலில்' இந்த ஊடக அதர்மத்தைப் பற்றி, பாரபட்சம் இல்லாமல், அவ்வப்போது எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.…
-
- 0 replies
- 363 views
-
-
மீண்டும் அரசியலுக்கு வருவாரா மகிந்த ராஜபக்ச? – கேணல் ஹரிகரன் மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக சுமத்தப்படும் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்படாவிட்டால், ராஜபக்சவை ஆதரிக்கும் 5.8 மில்லியன் வாக்காளர்களும் அவரை ஒரு அதிகாரத்துவ ஆட்சியாளராக நோக்குவதை விட, ஒரு அரசியல் தியாகியாகவே கருதுவார்கள். இவ்வாறு, ‘சிலோன் ருடே’ நாளிதழில், இந்திய ஆய்வாளரான ‘கேணல் ஆர்.ஹரிகரன்’ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. ஜனவரி 2015ல் இடம்பெற்ற சிறிலங்கா அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, பிரதமராக வருவதற்கான ஏற்பாடுகளை மேற…
-
- 1 reply
- 392 views
-
-
‘றோவின் கரங்களும்’ மோடி – மஹிந்த சந்திப்பின் அரசியலும் யதீந்திரா படம் | Reuters, ALJAZEERA அண்மையில் இலங்கைக்கு இரு நாள் விஜயமாக வந்துசென்ற இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு அமைவாக சில நிகழ்வுகளில் பங்குகொண்டிருந்தார். மோடி – மஹிந்த சந்திப்பும் அவ்வாறான நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆனால், மேற்படி மோடி – மஹிந்த சந்திப்பு ஏனைய நிகழ்வுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாவே தெரிகிறது. ஏனெனில், மோடி – மஹிந்த சந்திப்பு இடம்பெறுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பதாக மஹிந்த இந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், இந்திய வெளியக உளவுத் துறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளுக்கான அமைப்பானது (Research and Analysis Wing) அமெரிக்க வெளியக உளவுத்…
-
- 0 replies
- 510 views
-
-
மைத்திரி அரசில் மொழிக் கொள்கை? லயனல் குருகே படம் | SILAN MUSLIM மத நல்லிணக்கத்தையும், தேசிய ஐக்கியத்தையும் பிரதானமாகக் கொண்டு கடந்த ஜனாதிபதித் தேர்தல் நிறைவுபெற்றது. வரலாற்றில் என்றும் இல்லாதவாறு தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு எதிராகத் தமது வாக்குகளைப் பயன்படுத்தினர். தமிழ், முஸ்லிம் மக்கள் தமது வாக்குகளை மைத்திரிபால சிறிசேனவுக்கே அள்ளிக் கொடுத்தனர். 30 வருடகால யுத்தம் முடிவடைந்த பின்னர் வடபுலத்தில் குறிப்பிட்ட பௌதீக அபிவிருத்தி ஏற்பட்டிருந்தாலும் மக்களின் இதயங்கள் வெல்லப்படவில்லை என மைத்திரிபால சிறிசேன தேர்தல் மேடைகளில் முழங்கினார். தமிழ், முஸ்லிம் மக்கள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதையிட்…
-
- 0 replies
- 320 views
-
-
தமிழரின் சின்னம் எது? ஜெரா படம் | WIKIPEDIA உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனித இனமும், தன்னை அடையாளப்படுத்துகின்ற சின்னங்களை, குறியீடுகளை வைத்திருக்கின்றது. அவ்வாறானதொரு சின்னம்/ குறியீடு தெரிவுசெய்யப்படும்போது அந்த இனத்தவரின் கூட்டு ஆன்மாவும், உளமும் அதில் தாக்கம் செலுத்தக்கூடியவகையில் பார்த்துக்கொள்ளப்படுகின்றது. அதற்குள் குறித்த இனத்தின் வரலாற்று, பண்பாட்டு, ஐதீக நடைமுறைகள் இரண்டறக் கலந்தனவாக இருக்கின்றன. இந்தியர்களுக்கு ஒரு அசோகச் சக்கரமும், அமெரிக்கர்களுக்கு ஒரு கழுகும், சீனர்களுக்கு அனல்கக்கும் பறவையும், சிங்களவர்களுக்கு சிங்கமும் இந்தப் பின்னணியிலேயே நிலைபெற்றுவிட்டன. இந்தச் சின்னங்களையும், அதனை அடையாளப்படுத்தும் அரசுகளையும், அந்தச் சின்னத்தை தாங்கிக்கொள்கின்…
-
- 0 replies
- 342 views
-
-
எரிதழல் கொண்டு வா....!- ச.ச.முத்து யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை அது நடக்கும் என்று. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்க்கு சிங்கள பேரினவாத அரசு வழங்கிய ஜீப் வண்டிகளில் ஒன்று தீ மூட்டி எரிக்கப்படும் என்று அதுவரை, அந்த நிமிடம் வரை யாரும் நினைத்தே பார்த்ததில்லை. அதுவும் பெருந்திரளாக மக்கள்கூடி நின்ற ஒரு பொதுக்கூட்ட இடத்தில் இப்படி நடந்தது இன்னும் அதிர்ச்சியை பலருக்கு கொடுத்திருந்தது. அதனைவிட,அதிர்ச்சிக்கெல்லாம் அதிர்ச்சி கொடுத்த இன்னொரு விடயம் ஜீப் எரிக்கப்படுவதற்கு முன்னர் துப்பாக்கி முனையில் சில அரசியல் கோசங்கள் எழுப்பபட்டு அதன் பின்னரே எரிக்கப்பட்டது என்பது. 1981ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி வல்வெட்டித்துறையின் கடற்கரை வீதி ஒன்றில் அந்த ஜீப் பலபல செய்திகளை நிகழ்கால…
-
- 1 reply
- 434 views
-
-
வடமாகாணசபையில் இனவழிப்பு-போர்க்குற்றம்- ஒரு நாடு இரண்டு தேசம் என்ற பிரேரனைகளை நிறைவேற்றிய பின்னர் ரணில் தனது சுயமுகத்தைக் காட்டியிருக்கின்றார். விக்கி- ரணில் எதிர்முனைப்போக்கு என்பதை வரலாற்று, சமூக அமைப்பின் ஊடாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். தேசங்களின் உருவாக்கம் என்பது தேசியவெறியாகவும், பிரிவினைவாதமாகவும் கொண்டு தேசத்தினை சிதைப்பதற்கான வேரை வரலாற்று நிகழ்வுகளை அகற்றிவிட்டு புரிந்து கொள்ள முடியாது. ரணில் சிறிலங்கா தேசத்தின் பழுத்த அரசியல்வாதி, இனவழிப்பை மேற்கொண்ட பிரதான கட்சியில் முக்கியமான காலகட்டத்தில் அங்கம் வகித்தவராவார். பாரம்பரியமாக தென்னிலங்கை அரைநிலப்பிரபுத்துவ- பௌத்த பேரினவாதத்தின் பிரதிநிதியாகும். நவதாராளவாதம் என்பது றீகன் காலத்தில் கட்டற்ற தனியார்மயமாக்கல…
-
- 0 replies
- 315 views
-
-
மஹிந்தரை தனிமைப்படுத்தும் திட்டமா? மஹிந்தர் என்னதான் தோற்றுவிட்டாலும் ஒரு மூலையில் ஒதுங்கிவிடும் நபரல்ல என்பதை நாடும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். மஹிந்தர் மீண்டும் அரசியலுக்குள் நிறைவேற்று அதிகார பிரதமர் பதவியைப் பெற்று விடுவதற்காக திரைமறைவில் செயல்பட்டு வருகின்றார். மஹிந்தருக்கு ஆதரவான கூட்டங்கள் என்ற போர்வையில் நுகேகொடை, கண்டி. இரத்தினபுரி என்று மூன்று கூட்டங்கள் நடைபெற்று முடிந்து விட்டது. தற்போது கடந்த வியாழக்கிழமை இரத்தினபுரிக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டங்களை மஹிந்தவின் விசுவாசிகளான விமல் வீரவன்ச,வாசுதேவ நாணயக்கார, தினேஷ்குணவர்தன, உதய கம்மன்வில ஆகியோர்கள் ஏற்பாடு செய்து வருகின்றார்கள். ஆனால் இரத்தினபுரிக் கூட்டத்திற்கு எதிர்பார்த்த மக்கள் கூட…
-
- 2 replies
- 490 views
-
-
ரணிலிடம் சிக்கி சின்னாபின்னமாகப் போகும் தமிழர் அரசியல்...! இலங்கைத் தமிழனினம் இன்று அரசியல் அநாதையாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது வரலாற்றில் பதியப்படுவது ஒன்றும் புதிதானதன்று. வரலாற்றுக் காலம் தொட்டே இந்த நிலமை ஏற்பட்டுள்ளமையை நினைவுபடுத்திக் கொள்ளலாம். இலங்கையின் பகுதி முழுவதையும் தமது கட்டுபாட்டில் வைத்திருந்தனர் இயக்கர் நாகர்கள். இவர்கள் ஈழ தேசத்தின் சொந்தக்காரர்களாக, பூர்வீக குடிகளாக நாடு முழுவதிலும் பரந்து வாழ்ந்து வந்தனர். குவேனியை ஆரிய இளவரசன் மணந்து கொண்டு இலங்கை ஆட்சி உரிமையை பெற்றுக்கொண்டதில் இருந்து தொடங்கிற்று தமிழர்களின் அழிவு அரசியல். இந்தியாவில் இருந்து விரட்டப்பட்ட இளவரசன் விஐயன் எவ்வாறு தந்திரமாக இலங்கை அரசு உரிமையைப் குவேனியிடமிரு…
-
- 1 reply
- 501 views
-
-
சீறும் சீனத்து டிராகன் உலகின் மிகப் பழமையான நாடுகளான இந்தியாவும் சீனாவும் தான் அடுத்த வல்லரசுகள் என்று அடித்து சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். அதிலும் ஆசியாவின் நோயாளி என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட சீனா தன்னுடைய உள்நாட்டு சந்தையை எழுபதுகளில் வெளிநாடுகளுக்கு திறந்து விட்டதன்மூலம் பிரமிக்கத்தக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. சீனா மேலை நாடுகளுக்குத் தன்னுடைய சந்தையைத் திறந்து விட்டதுமல்லாமல் தன்னுடைய தொழிற் வளங்களை இந்த உலகமயமாக்கலின் மூலம் பெருக்கிக் கொண்டு உள்ளது. இன்று கிட்டத்தட்டதிட்ட தினமொரு புதிய தொழிற்சாலை திறக்கப்படும் அளவிற்கு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிவரும் சீனாவின் வணிகப்பொருட்கள் உலகெங்கிலும் உள்ள எல்லா சந்தைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. …
-
- 1 reply
- 3.9k views
-
-
இலங்கையில் தேசியகீதமானது தமிழிலில் பாடக்கூடாது என்று பொதுபலசேனா தெரிவித்திருக்கும் கருத்தானது தமிழ்மக்கள் மத்தியில் அதிகம் கவனத்தை ஈர்த்திருக்கவில்லையாயினும் பொதுபலசேனாவின் இக்கருத்தானது அரசியல் மட்டத்தில் பல்வேறு கருத்துக்களாக நோக்கவேண்டியுள்ளது. தமிழ்மொழி பேசுகின்றவர்களும் இலங்கை தேசத்தின் தேசிய கீதத்தினைப் பாடவேண்டும் என்கின்ற நோக்கத்திலேயே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இலங்கைதேசம் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் பிடியில் இருந்த இறுதிக்காலத்தில் பாரததேசத்தில் பல்வேறு அரசியல் போராட்டங்களும், விடுதலை எழுச்சிகளும் ஏற்பட்டன. மக்களை விடுதலையின்பால் திசை திருப்புவதற்கு விடுதலைப்பாடல்கள் அவசியம் தேவைப்பட்டன. இலங்கை பூகோள ரீதியில் இந்திய தேசத்திற்கு அருகில் அமைந்திருப்பதனால் அங்கு…
-
- 0 replies
- 319 views
-
-
சர்வதேச விசாரணையைத் தடுக்கவே தேசிய அரசு அமைக்கப்பட்டுள்ளது ரணிலின் நரி மூளையும் மைத்திரியின் யானை மூளையும் சேர்ந்து இலங்கையில் தேசிய அரசை நிறுவியுள்ளது. தேசிய அரசு அமைக்கப்பட்டதும் அதனை முதலில் வரவேற்றவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக் என்பதை இங்கு நோக்குதல் அவசியம். தேசிய அரசை அமைத்ததன் மூலம் மகிந்த ராஜபக்வின் நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்த முன்னாள் அமைச்சர்களுக்கு அமைச்சுப் பதவி கிடைத்துள்ளது. அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கிறார். ஆக, மைத்திரி ஜனாதிபதி; ரணில் பிரதமர்; ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்ந்தவர்கள் அமைச்சர்கள் என்ற வகையில் எதிர்க் கட்சி இல்லை என்பதாகப் பாராளுமன்ற நிலைமை மாற்றப்பட்டுள்ள…
-
- 0 replies
- 255 views
-
-
ஆள் பாதி ஆடை பாதி! அரசியலில் அதுவே நீதி - ஜெசிக்கா சுப்பர் சிங்கரில் பாடிய பாடல் புலிகளால் தடை செய்யப்பட்ட பாடல்? ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள் இது அனுபவபூர்வமான வார்த்தை அரசியலிலும் இது மிக முக்கியமானது.' இவர் எங்களுடையவர் " என்ற ஈர்ப்பை ஆடைகளால் உருவாக்க முடியும் தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை ஜி.ஜி. தந்தை செல்வா, தொண்டமான், அமிர்தலிங்கம், சம்பந்தன், சிவசிதம்பரம், ராஜதுரை விக்னேஸ்வரன் போன்ற எவரைக் குறிப்பிட்டாலும் உடனே நினைவுக்கு வருவது தேசிய உடையிலான தோற்றம் தான். பிறநாட்டவர்களுடனான சந்திப்பு அல்லது வெளிநாட்டுப் பயணம் என்றால் மட்டுமே இவர்கள் பொதுவாக கோர்ட் ரை எனக் காட்சியளிப்பர். இதனையே டக்ளசும் பின்பற்றுகிறார். ஆனால் முதலமைச்சர் பதவியேற்ற புதிதில் கோர்ட் ரைக்கு…
-
- 1 reply
- 534 views
-
-
திருகோணமலையை வசப்படுத்திய மோடி! மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில், இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்ட ,திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் விவகாரத்துக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தின் போது ,திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை, இந்தியாவின் ஐ.ஓ.சி (இந்தியன் ஒயில் நிறுவனம்) ஊடாக புனரமைப்பதற்கு இரு நாடுகளும் இணைந்து உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. 13 ஆண்டுகளுக்கு முன்னர், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கமைய.திருகோணமலை எண்ணெய்க் குதங்களின் மீதான கட்டுப்பாட்டை இந்தியா தன்வசம் எடுத்துக் கொண்டிருந்தாலும், மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அந்த உடன்பாடு …
-
- 0 replies
- 296 views
-
-
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி என்ற பெயரில் இடம்பெறும் உள்வீட்டு அதிகாரச் சண்டை படம் | Eranga Jayawardena/Associated Press, DHAKA TRIBUNE 2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் பாரிய உயிர் அழிவுகள் ஏற்பட்டமைக்குக் காரணமாக அமைந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை ஆணைக்குழு விசாரிப்பது எனத் தீர்மானித்திருந்தது போரினாலே பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்திருக்கக் கூடிய முக்கியமான வெற்றி ஆகும். பாதிக்கப்பட்டவர்களுடைய கௌரவத்தினை உறுதிப்படுத்துவதற்கு உண்மைகள் பயமற்ற முறையிலும், பக்கச்சார்பற்ற வகையிலும் வெளிக்கொண்டுவரப்படல் வேண்டும். அத்துடன், நீதியும், பரிகாரங்களும், மீட்சியும் அவர்களுக்குக் கிடைப்பதற்கு…
-
- 0 replies
- 249 views
-
-
நரேந்திர மோடி- -ராஜீவ் காந்தி வருகையின் ஒற்றுமையும் வேறுபாடும்: அ.நிக்ஸன்:- அன்று ஈழப்போராளிகளை சமாதானப்படுத்தி இந்தியாவின் ஒற்றை ஆட்சி முறை பாதுகாப்புக்காக 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இன்று சீனாவின் செல்வாக்கை குறைத்து பிராந்திய பாதுகாப்புக்கு முன்னுரிமை கோரப்படுகின்றது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதே தயாரிக்கப்பட்ட விடயங்களைத் தான் இந்திய இலங்கை ஒப்பந்தமாக ராஜீவ்- ஜே.ஆர் 1987இல் கைச்சாத்திட்டனர். -அ.நிக்ஸன்- இனப்பிரச்சினை தீர்;வுக்கு இந்தியா செய்த வழிமுறைகள் என்ன? அல்லது எந்த வகையில் இந்தியா இடையூறாக இருந்தது? என்ற இரண்டு கேள்விகள் முக்கியமானது பிரதமர் நாரேந்திரமோடி இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இவ்வாறான கேள்விகள் எழுவது இயல்பானது. ஏ…
-
- 1 reply
- 748 views
-
-
மோடியின் இலங்கை விஜயம்? யதீந்திரா சுமார் 27 வருடங்களுக்கு பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கை வந்துள்ளார். இந்தியாவின் உடனடி அயல்நாடாக இலங்கை இருந்த போதும், கடந்த காலத்தில் நிலவிய ஸ்திரமற்ற அரசியல் சூழலின் காரணமாக, எந்தவொரு இந்திய பிரதமரும் இலங்கை வருவதற்கு விரும்பியிருக்கவில்லை. 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கைக்குள் ஒரு சக்தியாக இயங்க முடியாதளவிற்கு அழிக்கப்பட்டு, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட பின்புலத்தில், இலங்கையின் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை முற்றுப்பெற்றது. புலிகளை அழித்தொழிக்கும் யுத்தத்தின் போது, காங்கிரஸ் தலைமையிலிருந்த இந்தியா அவ்யுத்தத்திற்கு உதவியதாக பரவலான அபிப்பிராயங்கள் உண்டு. தன்னுடைய உடனடி அயல்நாடான இலங்கைக்குள் …
-
- 1 reply
- 444 views
-
-
கடந்த வாரம் அமெரிக்க பாராளுமன்றத்தின் ஆயுதப்படைகள் தொடர்பான உப குழுவின் முன்பாக உரையாற்றிய அமெரிக்க கடற்படையின் நடவடிக்கைப் பிரதித் தளபதியான வைஸ் அட்மிரல் ஜோசப் முல்லொய், அதிர்ச்சி தரக்கூடிய பெரியதொரு குண்டைத்தூக்கிப் போட்டிருந்தார். அமெரிக்கவிடம் உள்ள நீர்மூழ்கிகளின் எண்ணிக்கையை விட, சீனாவின் நீர்மூழ்கிகளின் பலம் அதிகமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். உலகிலேயே படைபல ரீதியாக அதிசக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்ட நாடு அமெரிக்காவே என்ற கருத்து உலகில் உள்ளது. அமெரிக்கா அடுத்த தலைமுறைக்கான ஆயத தயாரிப்புகள், கண்டுபிடிப்புகளுக்குக் கூட முக்கியமளிக்கும் ஒரு நாடு. ஆனால், அமெரிக்காவையும் மிஞ்சக் கூடியளவுக்கு சீனாவின் ஆயுதப் போட்டி அதி வேகத்தில்…
-
- 0 replies
- 329 views
-
-
தமிழ்த் தலைமைகளின் இராஜதந்திரம் எது? அ.நிக்ஸன் படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS. YAHOO இனப்பிரச்சினை என்றால் என்ன என்று கேள்வி கேட்ட மாணவன் ஒருவன் தமிழர்களிடம் இராஜதந்திரம் இருக்கின்றதா என்றும் ஒரு வகையான கோபத்துடன் கேட்டான். அதற்கு பதிலளித்த அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர் இனப்பிரச்சினை என்றால் என்ன என்பதற்கு விடைகூற கடந்த 60 ஆண்டுகால வரலாற்றை புரட்டிப்பார்க்க வேண்டும் என கொஞ்சம் கிண்டலாக சொன்னதுடன், அப்படி பார்க்கின்றபோதுதான் தமிழர்களிடம் இராஜதந்திரம் இருந்ததா இல்லையா என்பதையும் உன்னால் உணர்ந்து கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார். மீண்டும் கேள்வி தொடுத்த அந்த மாணவன் அப்படியானால் இன்னுமொரு 60 ஆண்டுகாலம் என்னையும் காத்திரு என்றுதானே நீங்கள் சொல்கின்றீர…
-
- 0 replies
- 385 views
-
-
மேற்குலகையும் இந்தியாவையும் கையாளும் தந்திரம் ச.பா. நிர்மானுசன் படம் | US Department of State, Fllickr Photo ஐம்பது நாளை கடந்துள்ள சிறீலங்காவின் புதிய அரசு தமிழர்கள் தொடர்பாக கட்டுக்குள் வைத்திருக்கும் உபாயத்தையும், சர்வதேச சமூகத்தை நோக்கி வளைத்துப் போடும் உபாயத்தையும் கைக்கொள்கிறது. தம்வசம் வைத்திருக்கும் உபாயத்தின் அங்கமாக தற்போது இரு நகர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பாடுகள் முடுக்கி விட்டுள்ளது. இலங்கைத் தீவுக்கு வரும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை வளைத்துப் போடும் முகமாக, சீனாவின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் போர்ட் சிற்ரி திட்டத்தை இடைநிறுத்துவதற்கு சிறீலங்காவின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அத்துடன், இந்தியா பயன்படுத்துகின்ற தம…
-
- 0 replies
- 323 views
-
-
மிருதுளா தம்பையா - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- கடந்த இரு மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 10 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புபிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அனேகமானவர்கள் யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள், புதிய அரசாங்கம் அவர்களை நாடு திரும்புமாறு விடுத்த அழைப்பை ஏற்று நாடு திரும்பியவர்கள் அவர்கள் நம்பிக்கையுடன் நாடு திரும்பியபோதிலும், விமான நிலையத்தில் அவர்கள் நடத்தப்பட்டவிதம், அவர்கள் எதிர்கொண்ட அனுபவங்கள் அவர்கiளை அதிர்ச்சியடைய வைத்துள்ளன. அவர்கள் பல மணிநேரங்களுக்கு மேல் விசாரிக்கப்பட்டு உள்ளனர்.பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் மீதான கண்காணிப்பு தொடர்கின்…
-
- 6 replies
- 681 views
-
-
"எதற்காக பாலஸ்தீனத்திற்காக அழுகிறீர்கள்?""தமிழர்கள் அழ வேண்டியது முள்ளிவாய்காலுக்காக மட்டுமே!" தமிழர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று சிலர் சமூக வலைத் தளங்களில் சட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளில் முதன்மையானது, ஒடுக்கப் பட்ட மக்களை பிரித்து வைப்பது. அதை இப்படியான வழிகளிலும் சாதிக்கலாம். வன்னியில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது கண்களை மூடிக் கொண்டிருந்த, ஓய்வு பெற்ற நீதியரசர் விக்கினேஸ்வரன், வட மாகாண முதலமைச்சராக பதவி வகிக்கிறார். வன்னியில் முற்றுகைக்குள் அகப்பட்ட மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்த நேரத்தில், அமெரிக்காவில் சில தமிழ் தனவந்தர்கள், ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் நிதியத்திற்கு கோடிக் கணக்கில் பணம் வழங்கினார்…
-
- 0 replies
- 605 views
-
-
ஐ.நா விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமைக்கு கூட்டமைப்பே காரணம்! முத்துக்குமார் மார்ச் மாதம் வெளியிடப்படவிருந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணை அறிக்கை செப்ரெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் ஐ.நாவுடன் இணைந்து செயற்பட இலங்கை அரசாங்கம் விருப்பம் தெரிவித்ததனால் அதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதற்காகவே ஒத்திவைக்கப்படுவதாக மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தாலும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தாம் உருவாக்கிய அரசாங்கத்தை பாதுகாக்கவேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளது. வருகின்ற யூன் மாதம் பாராளுமன்றத் தேர்தல் எதிர்பார்க்கப்படுவதால், அறிக்கை அதனை பாதிப்பதாக இருக்கக்…
-
- 0 replies
- 295 views
-
-
இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள புதிய அரசு, ராஜபக்ச சகோதரர்களின் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் விசாரணகளையும் வழக்குகளையும் தொடுத்து வருகின்றது. ராஜபக்ச சகோதரர்கள் தமது ஆட்சிக் காலம் முழுவதும் ஈழ மக்களுக்கு எதிராக பல்வேறு அநீதிகளை இழைத்தமை குறித்து யாரும் எதுவும் பேசவில்லை. ராஜபக்ச சகோதரர்கள் தங்கள் குடும்ப சர்வாதிகார ஆட்சியில் செயத மாபெரும் குற்றம் ஈழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றமே. ஈழ மக்கள் ஒன்றரை லட்சம் பேரை படுகொலை செய்து மிகக்கொடிய போர்க்குற்றங்களை அரங்கேற்றிய ராஜபக்சக்களை விசாரிக்க சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கு மாத்திரம் இலங்கையின் புதிய ஆட்சியாளர் தயங்குவது ஏன்? முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக…
-
- 0 replies
- 331 views
-
-
ஆட்சி மாற்றத்தின் மீதான கேள்விகள்? கூட்டமைப்பின் பதில் என்ன? -யதீந்திரா (கட்டுரை) தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் தமிழ் மக்களுக்குள்ளும் நாளுக்கு நாள் குழப்பங்கள் அதிகரித்தவாறு இருக்கின்றன. ஒரு புறம் கூட்டமைப்பின் தலைவர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக் கொள்கின்றனர். மறுபுறும் மக்கள் மத்தியில் அதிருப்திகளும், எதிர்ப்புக்களும் அதிகரித்து வருகின்றது. இந்த அதிருப்தி காணாமல்போனோரின் ஆர்ப்பாட்டங்களாகவும், மாணவர் போராட்டமாகவும் வெளிப்பட்டிருக்கிறது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் இவ்வாறான மக்களின் தன்னியல்பான நடவடிக்கைளில் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் வலிந்து ஒட்டிக்கொள்கின்றனரே ஒழிய, கூட்டமைப்பின் தலைமையின் கீழ் மக்கள் ஒன்றுதிரளவி…
-
- 0 replies
- 406 views
-