Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அரசியற் கைதிகளின் விடுதலை – திறப்பு யாருடைய கையில்? நிலாந்தன் அரசியல்க் கைதிகளின் விடுதலை தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் ரெம்பிள் றோட்டில் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையக் காரியாலயத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. அரசியல்க் கைதிகள் தொடர்பாக அதிகம் போராடி வருகின்ற, அதிகம் பேசி வருகின்ற, அதிகளவு சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்ற ஒரு செயற்பாட்டாளரும், அங்கிலிக்கன் மதகுருவுமாகிய பாஃதர் சக்திவேல் மேற்படிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தற்பொழுது தமிழ் அரங்கிலுள்ள பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளை விடவும் மிகவும் தெளிவாகவும், செறிவாகவும், அறிவு பூர்வமாகவும் அவர் உரையாற்றினார். அரசியற் கைதிகளுக்கு பொது மன்னிப்போ புனர்வ…

  2. ரணில் ஒரு வலிய சீவன்? நிலாந்தன்… பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவைப் பற்றி அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த கருத்துக்கள்தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தமானவை. ரணிலை’ஒரு நரி’ என்று பாலசிங்கம் வர்ணித்திருந்தார். குறிப்பாக நோர்வேயின் அனுசரனையுடனான சமாதான முயற்சிகளின் போது புலிகள் இயக்கத்தின் தலைமைப்பீடத்திற்கும் அதன் கிழக்குப் பிரிவுத் தலைமைக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு ரணிலை ஒரு காரணமாகக் காட்டுவோரும் உண்டு. அப்படிக் காட்டுவோர் பாலசிங்கம் கூறிய ‘ரணில் ஒரு நரி’ என்ற வாசகத்தையை மேற்கோள் காட்டுவதுண்டு. 2005ல் ரணில் பதவிக்கு வருவததை புலிகள் தடுத்து நிறுத்திய பொழுதும் மேற்படி வாசகம் மேற்கோள் காட்டப்பட்டது. நோர்வே செய்த சமாதானத்தை ஒரு தர்மர் ப…

  3. கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து முறையாக பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் தயாராக உள்ளது : ஜனாதிபதி தெரிவிப்பு By PRIYATHARSHAN 19 OCT, 2022 | 07:13 PM கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து முறையாக பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. நேரடிவரி வருமானம் 20% விட அதிகமாக இருக்க வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டதால் புதிய வரிகொள்கை அமுல்படுத்தப்பட்டது. வரி அறவீட்டு முறையொன்று இல்லாவிட்டால் இலக்கை அடைய முடியாதென்பதோடு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளையும் இழக்க நேரிடும். வருமானத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை பலப்படுத்த…

  4. தமிழ் தேசிய அரசியலும் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளுதலும் -யதீந்திரா வரலாற்றின் தவறுகளை மறப்போர் அதனை மீளவும் செய்வதற்கு சபிக்கப்பட்டவர்களாவர். இது, அமெரிக்க சிந்தனையாளர் ஜோர்ஜ் சத்நயணாவின் கூற்று. ஆனால் இந்த மொழிபெயர்ப்பு, ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் க.வே.பாலகுமாரனுடையது. இதே போன்று வரலாறு தொடர்பில் ஜேர்மனிய சிந்தனையாளர் ஹெகலின் கூற்றொண்டு. அதாவது, நாம் வரலாற்றிலிருந்து எதைக் கற்றுக் கொண்டிருக்கின்றோம் என்றால் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என்பதை மட்டும்தான். நான் இங்கு கூறவரும் விடயம் நமது அரசியல் வரலாறு தொடர்பானதாகும். வரலாறு என்பது இறந்தகாலமாகும். இறந்த காலம் தொடர்பில் எதற்காக ஒருவர் சிந்திக்க வேண்டும்? நிகழ்காலத்தை வெற்றி…

  5. வடக்கில் விரிவடையும் இரா­ணுவ அதி­காரம் வடக்­கிலும் தெற்­கிலும் இப்­போது பெரும் பிரச்­சி­னை­யாக மாறி­யி­ருக்­கின்ற ஒரே விடயம், போதைப்­பொருள் கடத்தல், விற்­பனை, பயன்­பாடு தான். வடக்கில் நூற்­றுக்­க­ணக்­கான கிலோ கஞ்சா பொதிகள் கைப்­பற்­றப்­ப­டு­வது சர்வ சாதா­ர­ண­மான விட­ய­மாகி விட்­டது போலவே, தெற்கில் நூற்­றுக்­க­ணக்­கான கிலோ ஹெரோயின், கொக்கைன் போன்­றவை ஒரே தட­வையில் சிக்­கு­வதும் சாதா­ர­ண­மாகி விட்­டது. இலங்கைத் தீவு இப்­போது, போதைப்­பொருள் கேந்­தி­ர­மாகி விட்­டது என்­பதைத் தான் இது காட்­டு­கி­றது. வெறு­மனே போதைப்­பொருள் கடத்தல் கேந்­தி­ர­மாக மாத்­தி­ர­மன்றி, அதனைப் பயன்­ப­டுத்­து­வோரை அதிகம் கொண்ட இட­மா­கவும், இது மாறி­யி­ருக…

  6. உளியின் வெற்றியா, கல்லின் தோல்வியா? பொதுவாகக் கறுப்பு நிறம் எல்லோராலும் விரும்பப்படுவதில்லை. ஆனாலும், அதிலும் ஒரு படி மேலே சென்று, கறுப்பு என்றாலே ஈழத் தமிழ் மக்களுக்கு தீராத கவலைகளை, வலிகளை, வேதனைகளை மனக்கண் முன்னே கொண்டு வரும். அதுவே, 1983ஆம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’ (ஆடிக்கலவரம்) ஆகும். இதற்கு முன்னர், இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் 1958, 1977ஆம் ஆண்டுகள் என, இனக்கலவரங்களுக்கு இயல்பாக்கப்பட்டார்கள். ஆனாலும், நாட்டின் தெற்கு, மலையகப் பகுதிகளில் நீண்ட பல காலமாக, சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த தமிழ் மக்களைப் பிரித்தெடுத்து, மீதியின்றி துரத்தப்பட்டனர் அல்லது அழிக்கப்பட்டனர். நன்கு திட்டமிட்டு, ஒழுங்கமைக்கப்பட…

  7. சித்தார்த்தனும் செல்வமும் என்ன செய்யப் போகிறார்கள்? புருஜோத்தமன் தங்கமயில் / 2018 செப்டெம்பர் 12 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான உறவு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. பிரிவுக்குப் பின்னர், எவ்வாறான பாதையைத் தேர்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் கூட்டமைப்பினரும் விக்னேஸ்வரனும் ஓரளவுக்குத் தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார்கள். உறவை ஒட்டுமொத்தமாக முறித்துக் கொள்வதற்கு முன்னரான, சம்பிரதாயபூர்வ சந்திப்புக்கான காத்திருப்பு மட்டுமே இப்போதுள்ளது. டெல்லிப் பயணத்தை முடித்துக்கொண்டு, இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும், ‘கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கூட்டமைப்பின் முதலமைச்சர்…

  8. ஒரு புலப்பெயர்ச்சி அலை? நிலாந்தன். கனடாவில் வசிக்கும் ஒரு நண்பர் சொன்னார்..கனடாவுக்கு விசிட் விசாவில் வருபவர்களுக்கு படிவங்களை நிரப்பி கொடுப்பதற்கு என்று கிட்டத்தட்ட 30 மையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன என்று.அம்மையங்களில் ஒரு படிவத்தை நிரப்புவதற்கு ஆயிரம் கனேடியன் டாலர்கள் அறவிடப்படுகின்றன என்றும் அவர் சொன்னார்.கிட்டத்தட்ட இலங்கை ரூபாயில் இரண்டரை லட்சம். கனடாவில் இருக்கும் தமிழர்கள் தாயகத்தில் உள்ள தமது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களை அவ்வாறு அழைக்கலாம் என்று ஒரு கதை பலமாக உலாவுகிறது. அதனால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமல்ல, நண்பர்கள் தெரிந்தவர்கள் போன்றவர்களும் கனடாவில் இருப்பவர்களை அனுகி தமக்கு விசா பெற்றுத் தருமாறு கேட்கின்றார்கள். இது சம்பந்தமாக அண்…

  9. சலிப்படைய வைத்துத் தோற்கடிக்கும் மைத்திரி புருஜோத்தமன் தங்கமயில் / 2018 டிசெம்பர் 12 புதன்கிழமை, மு.ப. 01:23Comments - 0 “நாட்டு நடப்பைப் பார்க்கும் போது சலிப்பு வலுகிறது. மைத்திரியும் ரணிலும் மஹிந்தவும், தங்களுக்கிடையில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் ‘அரசியல் ஆடுபுலி’ ஆட்டத்தால், எல்லோரையும் சலிப்படைய வைக்கிறார்கள்” என்று, மனோ கணேசன் கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்துக்குள்ளும், நீதிமன்றத்துக்குள்ளும், பொது வெளியிலும் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்காகத் தொடர்ச்சியாகப் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஒருவரே, முடிவின்றித் தொடரும் அரசியல் குழப்பத்தால் சலிப்படைய ஆரம்பித்துவிட்டார் என்றால், சாதாரண மக்களின் நிலை எப்படியிருக்கும்? ஜனநாயக அடிப்படைகளில், ‘தா…

  10. இந்திய அரசியலுக்கு 2019 எப்படி அமையும்? எம். காசிநாதன் / 2018 டிசெம்பர் 31 திங்கட்கிழமை புத்தாண்டு 2019 நாளை பிறக்கப் போகிறது. இந்தியாவில், புதிய ஆட்சியை மத்தியில் அமைக்க, காங்கிரஸ் கட்சியின் தலைமையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும், இருக்கின்ற ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள, பிரதமராக இருக்கும் நரேந்திரமோடியும் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அமித்ஷாவும் ‘பம்பரமாக’ இயங்கத் தொடங்கி விட்டார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு கூட்டணியும் பா.ஜ.கவுக்குப் பிடிக்காத சில கட்சிகள் ஒருங்கிணைந்து தனிக் கூட்டணியும் (உத்தரபிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ் யாதவ், தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ், ஒரிசாவில் நவீன் பட்நாயக்) அமைவதற்கான சாத்தியக்கூறுகளைப் புதுவருடம் …

  11. கனதியான செய்தியைக் கூறுவதற்கான களமாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்! -தமிழர்கள் விழிப்புடன் செயற்படவேண்டுமென தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் வலியுறுத்தல் Published By: VISHNU 24 DEC, 2023 | 04:03 PM (நா.தனுஜா) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் பொது வேட்பாளரொருவரைக் களமிறக்குவது குறித்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மாறுபட்ட நிலைப்பாடுகளை வெளியிட்டுள்ளனர். இருப்பினும் அத்தேர்தலை கனதியானதொரு செய்தியைக் கூறுவதற்கான களமாகத் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ்மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழிகளும், டெல்லிக்கு வழங்கும் வாக்குறுதிகளும் அடுத்த க…

  12. முன்னைய தேர்தல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அரசியல் கோலங்களுடன் 2024 ஜனாதிபதி தேர்தல் August 19, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இந்த தடவையே மிகவும் அதிக எண்ணிக்கையில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதுகாலவரையில் ஜனாதிபதி தேர்தல் பிரதான இரு அரசியல் கட்சிகளின் அல்லது அவற்றின் தலைமையிலான கூட்டணிகளின் வேட்பாளர்களுக்கு இடையிலான நேரடிப் போட்டியாகவே இருந்து வந்தது. ஆனால் இந்த தடவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான மும்முனைப் போட்டியாகவே தேர்தல் அமையப்போகிறது. இறுத…

  13. ஜெனிவா தீர்மானம் – தமிழர் தரப்பின் குழப்பம்OCT 04, 2015 ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம், தமிழர் தரப்புக்குள் ஒரு தெளிவற்ற நிலையைத் தோற்றவித்துள்ளது என்றே கூறலாம். ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வெளியிட்ட கருத்துக்கள், இந்த தீர்மானம் சாதகமானது போன்ற கருத்தை தோற்றுவிக்க முனைகிறது. மறுபக்கத்தில், கூட்டமைப்பில் உள்ள ஏனைய பங்காளிக் கட்சிகளும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் சிவில் சமூகமும், இந்த தீர்மானம் குறித்து ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளன. இதுபோலவே, புலம்பெயர் சமூகத்திலும், உலக…

  14. ஐ.நா - மறுக்கப்படும் நீதி..! அவர் பெயர் சுரேசுகுமார். இடுப்புக்குக் கீழே எந்த உறுப்பும் செயல்படுவதில்லை. இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இலங்கையில் எந்த மருத்துவ வசதியும் இல்லாததால், மருத்துவச் சிகிச்சைக்காகத் தன் நண்பர்கள் உதவியுடன் தாய்த்தமிழகத்திற்குக் கடந்த 2012 ஆம் ஆண்டு வந்து சேர்ந்தார். மருத்துவச் சிகிச்சைக்காகப் பல்லாவரத்தில் தங்கியிருந்த போது தமிழகக் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவருடன் சிவனேசுவரன், டாக்டர் மகேசுவரன் உள்ளிட்டோரும் கைது செய்யப்படுகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் சிவனேசுவரன் வெப்பன் தாக்கப்பட்டு உடல் முழுவதும் காயப்பட்டவர். கெமிக்கல் அதாவது போரில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்…

  15. 2015இல் நிகழ்ந்த ஆட்­சி­மாற்­றத்­துக்குப் பின்னர், எல்­லா­வற்­றையும் நிறை­வேற்­றுவோம் என்று ஜெனீவாவில் வாக்­கு­று­தி­களைக் கொடுத்து, சர்­வ­தேச சமூ­கத்தை நம்­ப­வைத்து வந்த இலங்­கையின் தற்­போ­தைய அர­சாங்கம், தமது வாக்­கு­று­தியை மீறும் வகையில் செயற்­ப­டு­வதை சர்வ­தேச சமூ­கத்­தினால் பொறுத்­துக்­கொள்ள முடி­யா­ தி­ருக்­கி­ன்றது. இலங்­கையின் புதிய இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்ள விவ­காரம், புதி­ய­தொரு பரி­மா­ணத்தைத் தொட்­டி­ருக்­கி­றது, இதனை ஐ.நாவும் சர்­வ­தேச சமூ­கமும், தமக்கு விடுக்­கப்­பட்ட சவா­லா­கவே பார்க்­கின்­றன. 2010ஆம் ஆண்டு தொடக்கம், இலங்­கையின் மனித உரிமை மீறல்­க­ளுக்கு, பொறுப்­புக்­கூ­று­வ­தற்கு எடுக்­கப்­பட்டு வந்…

    • 0 replies
    • 354 views
  16. 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது- மோடி முன்னிலையில் நேரடியாகவே மறுத்தாரா கோட்டாபய தெரியாதது போன்று அமைதிகாக்கும் இந்திய ஊடகங்கள்பதிப்பு: 2019 டிச. 02 23:15 புலம்: யாழ்ப்பாணம், ஈழம் புதுப்பிப்பு: டிச. 03 15:03 1 2 3 நிருபர் திருத்தியது ஆசிரியர் திருத்தியது உறுதிப்படுத்தப்படக்கூடியது …

    • 0 replies
    • 406 views
  17. ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் எம். காசிநாதன் / 2019 டிசெம்பர் 30 தேசிய மக்கள் தொகைப் பதிவேடும் தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் இந்திய அமைச்சரவைக் கூட்டம், “தேசிய மக்கள் தொகைப் பதிவேடு புதுப்பிக்கப்படும்” என்று, முடிவு எடுத்திருக்கிறது. குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் சர்ச்சைகள் ஓய்வு பெறுவதற்கு முன்பே, எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, மீண்டும் போராட்டக் களத்தை சூடுபடுத்தி இருக்கிறது. தேசிய மக்கள் தொகைப் பதிவேடு என்பது, இந்தியாவுக்குப் புதிதல்ல. ஏற்கெனவே, மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது, இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, மக்கள் தொகை பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இப்படி, மக்கள் தொகை சேகரிப்புக்காக வெளியிடப்பட்ட கேள்…

  18. பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 28 ஆகஸ்ட் 2025 புதுப்பிக்கப்பட்டது 29 ஆகஸ்ட் 2025 இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், 6 தடவை பிரதமர் பதவியை வகித்தவரும், ஒரு தடவை ஜனாதிபதியாக பதவி வகித்தவருமான ரணில் விக்ரமசிங்க அவ்வப்போது சர்ச்சைகளை எதிர்நோக்கி வருவதை கடந்த பல பத்தாண்டுகளாகவே காணக்கூடியதாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை தன்வசம் கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, கட்சியின் உள்ளக பிரச்னைகள் முதல் தேசிய அரசியலில் பிரச்னை வரை அவ்வப்போது பல்வேறு சவால்மிகுந்த பிரச்னைகளை எதிர்நோக்கி வந்துள்ளார். தனது கட்சியின் உள்ளக பிரச்னைகள், கூட்டணி கட்சிகளின் பிரச்னைகள் என சந்தித்து வந்த ரணில் விக்ரமசி…

  19. மீண்டும் உருவாகும் தமிழீழ அச்சம் லக்ஸ்மன் அரசாங்கம் நாட்டுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது பற்றிப் பேசிக்கொண்டு அதற்கான எதனையும் செய்யாமல் பாராமுகமாக இருந்து வருகின்றது. இருந்தாலும், தங்களது திட்டமிட்ட செயற்பாடுகளை நகர்த்துகிறது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தின் பின்னர் தமிழீழத்தைப் பற்றியும் பிரிவினை பற்றியும் தமிழர்களைவிடவும் சிங்களத் தரப்பினரே பேசிவருகின்றன. கடந்த வாரத்தில், ஐ.நாவில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான பழிவாங்கல் தொடர்பாக ஒரு நிகழ்வு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பேசிய முன்னாள் கடற்படை அதிகாரி ஓய்வு பெற்ற ரியர் அத்மிரல் டி.கே.பி.தசநாயக்க, இலங்கையில் அரசியலமைப்பின் 13 ஆவது தி…

  20. அமைதியை தவிர வேறு வழியில்லை லக்ஸ்மன் இனவாதமும் பௌத்த மேலாதிக்கமுமே ஆரம்பத்திலிருந்து இலங்கையின் இன முரண்பாடுகளுக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் மூல காரணம் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே. இருந்தாலும் அதனை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கும் துணிச்சல் இல்லை. அதனாலேயே சுதந்திரமடைந்து 80 வருடங்களாகின்ற போதிலும், நிம்மதியற்ற இலங்கையே இருந்து வருகிறது.கடந்த வாரத்தில் உருவான திருமலை புத்தர் சிலை விவகாரத்தில் கருத்துவெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “பிக்குகளைக் கொண்டே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தமிழ் மக்களுக்கெதிராக அரசியல் செய்தார். திருகோணமலைப் பகுதியில் பிரதிஸ்ட்டை செய்யப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டமை தேசியப் பிரச்சினை …

  21. மறக்க முடியாத ஓராயிரம் வலிகளின் பதிவு…. ! On May 25, 2020 தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டின் மே மாத நாட்கள்; வாழ்வில் மறக்கமுடியாத கொடூர நாட்களாகப் பதிவாகி இருக்கின்றன. ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களிலும் எரிமலை பிழம்புகளாக அந்த நினைவுகள் சுடர்விட்டெரிந்து கொண்டே இருக்கின்றன. அந்த உணர்வுகளுடன் உலகில் எந்த மூலையிலிருந்தாலும் மே மாதம் 18 ஆம் திகதி உணர்வு ரீதியாக அனைவரும் ஒன்றாக இணைகின்றோம். அழுகின்றோம், புலம்புகின்றோம் ஓராயிரம் வலிகளை பதிவு செய்கின்றோம். ஆனால் அதன் பின்னர் நாம் என்ன செய்கின்றோம்? என்ன செய்யப்போகின்றோம்? என்ற வினாக்கள் என்னைப்போல் உங்கள் அனைவருடைய இதயங்களையும் துளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.அந்த வலி …

    • 1 reply
    • 1.8k views
  22.  மதங்களின் பெயரால் பிணந்தின்னிகள்... கனகலிங்கம் கோபிகிருஷ்ணா முஸ்லிம்களின் புனித மாதமான ரமழானின் முடிவில், ஈகைத் திருநாள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றுள்ள சில தாக்குதல்கள், ஒரு விதமான அச்சத்தையும் வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கின்றன. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற பணயக்கைதிகள் விவகாரம் அதில் முதலாவதுƒ ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் அடுத்ததுƒ சவூதி அரேபியாவிலும் இந்தோனேஷியாவிலும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள் மூன்றாவது. டாக்காவில், இராஜதந்திரிகள் உள்ளிட்டோர் உணவருந்தும் இடத்துக்…

  23. உண்­மை­யான தீர்வை நோக்கி தமிழ் மக்­களை அழைத்துச் செல்­லுங்கள் எதிர்க்­கட்சித் தலைவர் ஆர். சம்பந்­த­னுக்கு தமிழர் விடு­தலைக் கூட்­டணி செய­லாளர் நாயகம் வீ.ஆனந்­த­சங்­கரி எழு­திய கடிதம் நான் ஏற்­கனவே கூறி­யது போல் கடிதத் தொடரின் நான்­கா­வது கடிதம் உங்­களால் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தாக இருக்கும். வழ­மை­போ­லவே இது புறக்­க­ணிக்­கக்­கூ­டி­ய­தல்ல. தற்­போ­தைய மோச­மான நிலை­மையை பற்றி நீங்கள் உணர்­வ­தா­கவும் தெரிய­வில்லை. கனடா நாட்டின் ரொறொன்டோ ஒன்­டா­ரியோவில் விசா­ரிக்­கப்­பட்டு, ஒட்­டாவா ரொறொன்டோ சமஷ்டி நீதி­மன்­றத்தில் இடம்­பெற்ற மேன்­மு­றை­யீட்டு விசா­ரணை ஒன்றின் தீர்ப்பு 25.8-.2016 இல் வழங்­கப்­பட்­டது. முன்­னைய எனது கடி­தத்­திலும் இந்த வழக்க…

    • 1 reply
    • 628 views
  24. ‘மக்களுக்காகப் பேசுவதும்மக்களைப் பேச வைப்பதும்’- திரு எஸ். திருச்செல்வம் October 24, 2020 ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகங்கள் என்பன அமைந்துள்ளன. முதல் மூன்றும் அரசாங்க கட்டமைப்புகளுடன் சம்பந்தப்பட்டவை. எனவே அவற்றிடமிருந்து நேர்மை, வெளிப்படைத்தன்மை, உண்மை என்பவைகளை எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஊடகம் என்பது செய்தி – தகவல் – விமர்சனம் என்பவற்றோடு கருத்துருவாக்கம், கருத்துப் பரிமாற்றம் என்பவற்றை உள்ளடக்கியதால், இதனை ஜனநாயகத்தின் காவல் நாய் (watch dog) என்பர். அதனால், ஊடகம் எப்போதும் காய்தல், உவத்தலின்றி உண்மையை உண்மையாகக் கூறுவதாக (நடுநிலை என ஒன்றில்லை) இருக்க வேண்டும். அதேசமயம், மக்களின் கருத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.