அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
அனுமன் வால்போல் நீளும் “பிரெக்சிற்” விலகல் ஐரோப்பிய யூனியலிருந்து பிரித்தானியா விலகுவது என்கின்ற செய்தி முடிவில்லாமல் ஊடகங்களில் தொடர்கிறது என்பது பலவிதமான கருத்துக்கள், விமர்சனங்கள், ஊகங்கள், செவ்விகள் ஆகியவற்றுக்கு களமாக அமைகின்றது. பிரித்தானியா என்பது சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என முன்னர் புகழ்பெற்ற நாடு என்பதும், பாராளுமன்ற ஜனநாயகம், சட்ட ஆட்சி, மனித உரிமை மேம்பாடு, கைத்தொழில் செழிப்பு, வந்தோரை வரவேற்கும் நாடு எனவும் பல பெருமைகளை தன்னகத்தே கொண்டநாடு. ஏன் பிரித்தானியாவிலிருந்து விலகுதல் என்ற கொள்கை சார்ந்த விடயத்தில் முடிவில்லாமல் இழுபடுகிறது என்கின்ற வினா அரசியல் விடயங்களை பின்பற்…
-
- 0 replies
- 804 views
-
-
Published By: DIGITAL DESK 7 09 SEP, 2024 | 09:22 AM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் கட்சி என்று கருதப்படும் இலங்கை தமிழரசு கட்சி 2024 செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ( சமகி ஜன சந்தானய ) தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. செப்டெம்பர் முதலாம் திகதி வவுனியாவில் கூடிய அதன் ' மத்திய செயற்குழு ' அதற்கான தீர்மானத்தை எடுத்தது. தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிடும் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரிப்பதில்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அவர் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர். சிறுபான்மைச்…
-
- 0 replies
- 354 views
- 1 follower
-
-
ஹுசைனின் உறுதியும் தமிழரசு கட்சியின் தளம்பல் போக்கும் - யதீந்திரா இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்போது இலங்கையின் மீதான அமெரிக்க பிரேரணை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது. இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில், மேற்படி பிரேரணையின் திருத்தப்பட்ட நகலை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கவில்லை. எனவே அதற்கான வாக்கெடுப்பும் அவசியமில்லாமல் போனது. 30ம் திகதி குறித்த பிரேரணை தொடர்பான விவாதங்கள் ஆரம்பித்த வேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஹூசைன் தனதுரையில் தெரிவித்திருந்த விடயங்களையே இப்பத்தி பிரதானமாக எடுத்துக் கொள்கிறது. 2014ம் ஆண்டு அமெரிக்காவினால் கொண…
-
- 0 replies
- 228 views
-
-
பெளத்த பேரினவாதத்துக்கு கடிவாளம் போடவேண்டும் உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் மூலம் இரண்டு விடயங்கள் வெளிப்பட்டிருந்தன. உலக பயங்கரவாதத்தின் பிடிக்குள் இலங்கை சிக்கியிருக்கின்றது என்ற அதிர்ச்சி மிக்க அபாயகரமான உண்மை வெளிப்பட்டிருந்தது என்பது முதலாவது. இஸ்லாமிய ஜிஹாத் அடிப்படைவாதம் இலங்கைக்குள் வேரூன்றி இருக்கின்றது என்பது இரண்டாவது விடயம். இந்த பயங்கரவாதத்தில் இருந்தும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் இருந்தும் எவ்வாறு நாடு மீளப் போகின்றது என்ற கவலையான நிலைமையில் இருந்து விடுபடுவதற்காக நாடு போராடிக் கொண்டிருக்கின்றது. சமூகங்களும் வெவ்வேறு வழிகளில் இதனால் போராட வேண்டிய …
-
- 0 replies
- 530 views
-
-
றோம், ( சின்ஹுவா ) இத்தாலிய பிரதமர் கியூசெப்பி கொன்ரேயின் அரசாங்கம் கடந்தவாரம் வீழ்ச்சிகண்டபோது அது பதவியில் 15 மாதங்களைப் பூர்த்திசெய்வதற்கு 11 நாட்கள் குறைவாக இருந்தன.அதன் அர்த்தம் இரண்டாவது உலகப்போருக்கு பின்னரான காலகட்டத்தில் இத்தாலியில் பதவியில் இருந்த ஒரு அரசாங்கத்தின் சராசரி காலநீட்சியை உண்மையில் அதிகரித்தது என்பதேயாகும். புதிய அரசாங்கம் நியமிக்கப்படும் போது இத்தாலி உலகப்போரின் முடிவுக்கு பின்னரான ( 74 வருடங்களுக்கும் சற்று கூடுதலான காலகட்டம் ) அதன் 69 வது அரசாங்கத்தைக் காணும். ஒரு அரசாங்கம் சராசரி 13 மாதங்களுக்கும் குறைவான காலமே பதவியில் இருந்திருக்கிறது. இது ஐரோப்பாவின் வேறு எந்தவொரு நாட்டிலும் இல்லாத ' சுழலும் கதவு ' போன்ற நிலைவரமாகும்.அதே 74 வருட கால…
-
- 1 reply
- 959 views
-
-
-இலட்சுமணன் இன, மத, மொழி வேறுபாடுகள் அற்ற ஒரு நாட்டை, நாம் இனிமேலும் எதிர்பார்க்கவே கூடாது என்பதற்கான முடிவு ஒன்று, ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப் பெற்றிருக்கிறது. இதன்மூலம், தமிழர்கள் மீண்டும் ஒரு தோல்வியைத்தழுவிக் கொண்டுள்ளார்கள். இது நிரந்தரமான தோல்வியாகவும் இருக்கலாம்; இலங்கையின் வரலாறு, 70 வருட தமிழர் போராட்ட வரலாற்றையும் உள்ளடக்கியதேயாகும். இவ்வாறான சில கருத்துகளை முன்வைப்பதற்கு விருப்பமில்லை; மனம் இடங்கொடுக்கவில்லை என்றாலும், இத்தகைய யதார்த்தபூர்வமான கருத்துகளைப் பதிவு செய்தாகவேண்டும் என்ற தேவை இருக்கத்தான் செய்கின்றன. இனவாதமும் இனப்பற்றும், நாட்டை இழந்துவிடுவோம் என்ற அச்சமும் பெரும்பான்மைச் சிங்களவர்களிடம் இருப்பதன் வெளிப்பாடே, இந்த வருட ஜனாதிபதித்…
-
- 0 replies
- 419 views
-
-
ஈரான்-இசுரேலிய போருக்கான தேவை என்ன? 23 Jul 2025, 6:30 AM பாஸ்கர் செல்வராஜ் எந்த முகாந்திரமும் இன்றி தான்தோன்றித்தனமாக உலக சட்ட விதிமுறைகளை மதிக்காமல் இன்னொரு நாட்டின் இறையாண்மையை மீறி திடீரென ஈரானின் மீது வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது இசுரேல். உளவு அமைப்புகள் மூலம் அந்நாட்டுக்குள் ஊடுருவி புரட்சிப் பாதுகாப்புப் படை மற்றும் அணு விஞ்ஞானிகள் அறுபது பேரைப் படுகொலை செய்தது. சிரியாவை அடுத்து ஈரானில் ஆட்சி மாற்றமா? என்று குழம்பிய நிலையில் ஈரானின் பதிலடி தொடங்கியது. தொடர்ந்த போரின் போது ஈரானின் ஏவுகணைகளைச் செலுத்தும் ஏவூர்திகள் (launchers) பெரும்பாலானவற்றை அழித்து விட்டதாகவும் எஞ்சிய மலைக்குகைக்கு அடியில் இருக்கும் யுரேனிய செறிவூட்டும் மையங்களை மட்டுமே அழிக்கவேண்டும் என்றும் அமெ…
-
-
- 2 replies
- 204 views
-
-
சம்பூர் அனல்மின் நிலையம்: மக்களைவிட மின்சாரம் மேலானதா? – கலாநிதி. கோ. அமிர்தலிங்கம் APR 10, 2016 | 0:00by நெறியாளர்in செய்திகள் உலக நாடுகள் அனைத்தும் நிலக்கரி மூலம் பெறப்படும் மின் சக்தியிலிருந்து படிப்படியாக விடுபட்டு மீள உருவாக்கக்கூடிய சக்தி மூலங்களான சூரிய ஒளி, மற்றும் காற்று மூலம் மின்சாரம் பெறக்கூடிய பொறிமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, ஜேர்மன், சீனா போன்ற நாடுகள் நிலக்கரி அனல் மின் நிலையங்களை படிப்படியாக மூடி வருகின்றன. அண்மையில் மெக்சிக்கோ அரசாங்கம் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் 1720 மெகாவாட் மின்சாரத்தினை காற்று மற்றும் சூரிய ஒளியிலிருந்து பெறுவதற்கான முதலாவது முதலீட்டு வாய்ப்பினை தனியார் துறைக்கு வழங்கியுள்ளதுட…
-
- 0 replies
- 542 views
-
-
ஐநாவில் தமிழ்த் தரப்பு பலமாக உள்ளதா? நிலாந்தன். அண்மையில் நோர்வேயில் அந்த நாட்டின் துணை வெளி விவகார அமைச்சர் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பகுதினரோடு உரையாடியுள்ளார். இதன்போது அவர் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். முதலாவது, இலங்கைதீவின் நல்லிணக்க முயற்சிகள் இப்பொழுது நோர்வே நாட்டின் முன்னுரிமை பட்டியலுக்குள் உள்ளன என்பது. இரண்டாவது, தமிழ் மக்கள் ஒருமுகமாக உலக சமூகத்தை அணுகுவதில்லை என்பது. இதில் இரண்டாவது விடயம்,அதாவது தமிழ் ஐக்கியத்தைப் பற்றிய விடயம்.அதனை நோர்வே மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, ஐரோப்பிய சமூகம் மட்டுமல்ல,உலகில் பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் பொழுது அல்லது தமிழ்ச் சிவில் சமூகங்களைச் …
-
- 0 replies
- 137 views
-
-
ஜெனீவாவுக்குப் போதல்: - நிலாந்தன் தமிழ் மக்கள் காசிக்கு போவதுண்டு. கதிர்காமத்திற்கு போவதுண்டு, மடுவிற்கு போவதுண்டு. அவையெல்லாம் புன்ணியம் தேடிப் போகும் மத யாத்திரைகள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஈழத் தழிழர்களுடைய வாழ்க்கையில் இணைந்திருக்கும் ஓரு புதிய அம்சம் 'ஜெனீவாவுக்கு போதல்.' இது நீதி தேடிப் போகும்ஓர் அரசியல் யாத்திரை. ஜெனீவாவிற்கு தாயகத்திலிருந்தும் ஆட்கள் போகிறார்கள். டயாஸ்பொறாவிலிருந்தும் போகிறார்கள். அரசியல் வாதிகள் போகிறார்கள் செயற்பாட்டாளர்கள், சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள் போகிறார்கள்ஊடகவியலாளர்கள் போகிறார்கள் என். ஜி. ஓ. அலுவலர்கள் போகிறார்கள். இவர்;களோடு சில சமயங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்தும் சி…
-
- 1 reply
- 367 views
-
-
ராகுல் காந்தியால் காங்கிரசைக் காப்பாற்ற முடியுமா? மக்களவை தேர்தலுக்கு இன்னும் சுமார் 18 மாதங்கள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்தியால் இப்போது பெரும் நெருக்கடியில் இருக்கும் காங்கிரசை வரும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் வலிமைப்படுத்திக் காப்பாற்றமுடியுமா?காங்கிரஸ் கட்சியே காப்பாற்றப் படவேண்டுமா என்ற கேள்வியை சிலர் கேட்கலாம். இந்தியாவில் தேர்தல் பாராளுமன்ற ஜனநாயக முறையில் எத்தனையோ சிக்கல்கள் இருந்தாலும் அதை விட சிறந்த மாற்றாக எதையும் பார்க்க இயலாத நிலையில் இன்னமும் அதன் மீதே நம்பிக்கை வைத்திருப்பவன் என்ற முறையிலேயே இந்த விஷயத்தை நான் அணுக விரும்புகிறேன். இதில் இயங்கும் கட்சிகளில் இடதுசாரி கட்சிகள் பரவலாக பலம் பெறாத சூழலி…
-
- 0 replies
- 595 views
-
-
கிழக்கு பறிபோய்விடுமென்ற சம்பந்தனின் எச்சரிக்கை வடக்கு மாகாணத்துடன் இணையாவிடின் கிழக்கு மாகாணம் விரைவில் பறிபோய் விடும் என்ற எச்சரிக்கையை பகிரங்கமாக விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் அதாவது வடக்கும் கிழக்கும் இணையாது பிரிந்து செயற்படுமாயின் கிழக்கு மாகாணம் விரைவில் பறிபோய்விடும். கிழக்கு மாகாணமானது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு உரிமை இல்லாத நிலை ஏற்பட்டுவிடும். எனவே கிழக்கு மாகாணம் பறி போவதற்கு தமிழ், முஸ்லிம் மக்கள் உடந்தையாக இருக்கக்கூடாது. எனவே இரு மாகாணங்களும் இணைக்கப்படவேண்டியது அவசியமானது. அவசரமான தேவையுங்கூட. இந்த நிலைப்பாட்டிலேயே த.தே.கூட்டமைப்பு உள்ளது என்ற ய…
-
- 0 replies
- 436 views
-
-
காட்டுமிராண்டி பௌத்த துறவிகளின் தொடரும் வன்முறை எதிர்கொள்ளப்பட வேண்டும்! 11/16/2016 இனியொரு... மட்டக்களப்பில் தமிழ்க் கிராம சேவரைத் நடுத்தெருவில் வைத்துத் திட்டித்தீர்த்த காட்டுமிராண்டி பௌத்த பிக்கு தொடர்பான அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை. இலங்கை அரசு இன்று பேசிவரும் நல்லிணக்கம் என்ற கருத்தியலின் மீதான நேரடித் தாக்குதல் நடத்தியுள்ள இந்த பௌத்த துறவி தனியாள் இல்லை. இன்றைய இலங்கையின் சிங்கள பௌத்த மனோ நிலையின் மொத்த உருவம் தான் இவர். யாழ்ப்பாணத்தில் இரண்டு மாணவர்களைக் கொலை செய்வதற்கான துணிவை வழங்கியதும், பௌத்த துறவியை பொலிஸ் முன்னிலையில் பேச வைத்ததும் சிங்கள பௌத்த மேலாதிக்க உளவியல் தான். ஆக, இப் பௌத்த துறவி நல்லிணக்கம் என்று இலங்கை அரசு கூறும் அழகான வார்த்தை சிங்கள…
-
- 0 replies
- 557 views
-
-
எரிதணல் மொஹமட் பாதுஷா இலங்கையில் வாழும் அனைத்து இனங்களைச் சேர்ந்த மக்களும் இனவாதம் என்கின்ற எரிதணலுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த எரிதணலை,ஊதிஊதிப் பெரும் தீயாக எரியச் செய்யலாம். இல்லாவிடின், நீருற்றி அணைத்து விடலாம். இதில் எதைச் செய்யப் போகின்றோம் என்பதே நமக்கு முன்னே இருக்கின்ற வினாவாகும். தற்போது நடைமுறையில் இருக்கும் முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றுவதற்கான நிர்ப்பந்தம் பற்றிஅரசாங்கம் விடுத்தஅறிவிப்பையடுத்து, முஸ்லிம் சமூகம் பாரிய உணர்வு மேலீட்டுக்கு ஆளாகியது. இந்நிலையில் கொழும்பு, புறக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தெரிவித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அ…
-
- 0 replies
- 509 views
-
-
தமிழர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம்’ – மட்டு.நகரான். 61 Views கிழக்கு மாகாணத்தின் நிலைமை, அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள், கிழக்கு தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகள், அந்த நெருக்கடிகள் எவ்வாறான வகையில் ஏற்படுத்தப்படுகின்றன போன்ற விடயங்களை நாங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகின்றோம். இன்று கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் நிழல் யுத்தம் ஒன்றை தமிழினம் எதிர்கொண்டுள்ளதாகவே பார்க்கப்பட வேண்டியதாகவுள்ளது. குறிப்பாக யுத்த காலத்தில் தமிழர்கள் எந்த விடயங்களை பாதுகாத்தார்களோ, அந்த விடயங்களை அவர்களிடம் இல்லாமல் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மிகவும் திட்ட…
-
- 0 replies
- 605 views
-
-
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்கு பின்பான இலங்கை - இந்திய உறவு - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் இலங்கை-இந்திய உறவில் நெருக்கடி நிலவுவதற்கான புறச்சூழல் தென்படுவதாக தெரிகிறது. குறிப்பாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் 06.01.2021 இல் இலங்கையின் அழைப்பின் பேரில் வருகைதந்த போதே அத்தகைய சூழல் ஆரம்பித்துள்ளது எனலாம். ஆனாலும் முழுமையாக இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா முரண்பட்டுக் கொள்ளும் போக்கு எழவில்லை என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். மறுபக்கமாக குறிப்பிடுவதாயின் எதிர்காலத்தில் அத்தகைய நிலை தோன்றுவதை தடுக்க முடியாத போக்கு ஏற்படவும் வாய்புள்ளது. ஆனால் அதற்காக இரு தரப்பிலும் அரசாங்கள் அமைந்திருப்பதோடு பிராந்திய சர்வதேச சூழலும் வாய்ப்பானதாக அமைய வேண்டும். இக்க…
-
- 1 reply
- 623 views
- 1 follower
-
-
சாதுரியமான முன்னெடுப்புக்களே உரிய தீர்வைக்காண உதவும் – செல்வரட்னம் சிறிதரன் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலம், இனப்பிரச்சினைக்கு ஒர் அரசியல் தீர்வைக் காண முடியுமா, எந்த வகையில் அது சாத்தியம் என்பதை பரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை உருவாகியிருக்கின்றது. இந்த நிiலையில் எதிரும் புதிருமாக இருந்து கொண்டு புதிய அரசியலமைப்பில் முன்கூட்டியே இணக்கப்பாடு ஒன்றை எட்டாமல் தீர்வு காண்பது சாத்தியம் என்று கூறுவதற்கில்லை. ஏனெனில், வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், …
-
- 0 replies
- 345 views
-
-
இனத்துரோகி என்னும் பட்டத்தை ஏற்கத் தயார் – லீனா மணிமேகலை நேர்காணல் PREV 1 of 3 NEXT மாற்று சினிமா என்பது நெருப்பு ஆறு. இங்கே யாருக்கும் அதன் அருகில் போகத் துணிச்சல் இல்லை. லீனா அந்த நெருப்பாற்றை நீந்திக் கடந்து கொடியை நாட்டியவர். சர்வதேச அளவில் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தும் சில இயக்குனர்களில் ஒருவர். ராமேஸ்வரம் கடல் பரப்பில் இன்று விழும் ஒவ்வொரு பிணத்தையும் மருத்துவ அறிவைக் கொண்டல்ல; சர்வதேச அரசியல் அறிவைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை தன்னுடைய செங்கடல் படம் மூலம் உருவாக்கிக் கொண்டிருப்பவர். சமீபத்தில் "இளங் கலைஞர்களுக்கான சார்ல்ஸ் வாலஸ் விருது" பெற்று லண்டன் பல்கலைக் கழகத்தில் Visiting Scholar ஆக UK விற்குப் பறந…
-
- 17 replies
- 2.7k views
-
-
திருப்பித்தாக்க போகிறதா ஐ. நா? ரொபட் அன்டனி கடந்த இரண்டு பிரதான தேர்தல்களில் அரசாங்கம் பெற்றுக் கொண்ட மக்கள் ஆணையின் பிரகாரம் செயற்படுவதா அல்லது தென்னிலங்கையின் கடும் போக்குவாத சக்திகளுக்கு அடி பணிந்து நல்லிணக்க பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்தாமல் விடுவதா என்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டம் வந்துள்ளது. மிகவும் காட்டமாகவே வரப்போகின்றது செய்ட் அல் ஹுசேனின் இலங்கை தொடர்பான அறிக்கை... இலங் கைக்கு இம்முறை சற்றுக் கடினமாகவே ஜெனிவா கூட்டத் தொடர் இருக்கப்போகின்றது.. கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகமும் ஐக் கி…
-
- 0 replies
- 625 views
-
-
உண்மையை பேசுங்கள் சீமான்! - அனந்தி சசிதரன், மேனாள் அமைச்சர் நேர்காணல்
-
- 10 replies
- 1.5k views
-
-
கும்புறுமூலை விவகாரம்: குடியை கெடுக்குமா நல்லாட்சி - முகம்மது தம்பி மரைக்கார் முரண்நகை’ என்று தமிழில் ஒரு சொல் உள்ளது. முரண்பாண்டின் மூலம் உருவாகும் நகைச்சுவை என்பது இதன் அர்த்தமாகும். ‘படிப்பது இராமாயணம்; இடிப்பது சிவன் கோயில்’ என்பதில் முரண்நகை உள்ளது. அரசியலில் முரண்நகைக்கு பஞ்சமேயில்லை. போதையற்ற நாட்டினை உருவாக்குவது, தனது இலட்சியங்களில் ஒன்றெனக் கூறும் நல்லாட்சி அரசாங்கம், மட்டக்களப்பு, கும்புறுமூலை பகுதியில் 450 கோடி ரூபாய் முதலீட்டில் மதுபான உற்பத்திசாலையொன்றினை அமைப்பதற்கு வரிச் சலுகையுடன் அனுமதியளித்துள்ளமையானது, சமகால அரசியல் முரண்நகையாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் உள்ளது…
-
- 0 replies
- 452 views
-
-
மாகாணத்தின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக அனைவரும் அணிதிரளுங்கள்; சுரேஷ் பிறேமச்சந்திரன் 6 Views மாகாணங்களுக்கென்று குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்கள் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக எதேச்சாதிகாரமாகப் பறிக்கப்படுகின்றது. இந்தப் போக்கை அனைத்து அரசியல் தலைமைகளும் ஓரணியில் நின்று எதிர்க்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிறேமச்சந்திரன் அறைகூவல் விடுத்திருக்கிறார். மாகாண பாடசாலைகளை தரம் உயர்த்தல் என்ற போர்வையில் மத்திய அரசு மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றிவருகின்றது. இந்தப் போக்கு கண்டனத்திற்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும் என்று தெரிவித்துள்ள சுரேஷ் பிறேமச்சந்திரன் அரசின…
-
- 0 replies
- 276 views
-
-
மலையக அரசியல் பிரவேசத்துக்கான இலவச ஓடுபாதை - சி.அருள்நேசன் இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில் மலையகத் தமிழர்கள் 200 வருடகால வரலாற்றைக் கொண்டவர்கள். எட்டு பிரதான மாவட்டங்களில் செறிந்து வாழும் மலையக மக்கள், அதே லயன் குடிசைகளிலும் முறையற்ற சுகாதார வசதி, கல்வி வசதி, பொருளாதார பிரச்சினை, வரட்சி, வறுமை, வேலைவாய்ப்புத் திண்டாட்டம், மத்திய கிழக்கு நோக்கிய பெண்கள் பயணம், இளைஞர்களின் நகர்ப்புற மோகம் என்ற பல்வேறு சொல்லொணாத் துயரங்களை நாளுக்கு நாள் அனுபவித்து வருகின்றனர். மனிதன் மரணித்து, அவனை அடக்கம் செய்வதற்கான நிலம்கூட இல்லாத சமூகமாகவே, மலையகச் சமூகம் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றது. மலையகத்தைச…
-
- 0 replies
- 451 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம்- சர்ச்சையை தோற்றுவித்துள்ள கருத்துக்கள்- அங்கம் 01 ஆயுதப்போராட்டம் 2009ஆம் ஆண்டு மேமாதத்தில் முடிந்த பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமை என மக்களால் அடையாளம் காணப்பட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான். இன்றும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமையாக இருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புதான். அதேவேளை தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் இலட்சியத்திலிருந்து வழி தவறி செல்வதாக குற்றம் சாட்டுபவர்கள் பலர். எதிர்க்கட்சி தலைவர் பதவி, நாடாளுமன்ற குழுக்கள…
-
- 22 replies
- 5.4k views
-
-
‘1999’ மற்றும் ‘கண் அன்ட் றிங் (A Gun and A Ring)’ ஆகிய ஈழத் திரைப்படங்களின் இயக்குநர் லெனின் எம் சிவம் அவர்கள் ‘கண் அன்ட் றிங்’ திரைப்படத்தின் பிரத்தியேக காட்சிக்காக கனடாவில் இருந்து பரிசுக்கு வருகை தந்திருந்தார். அவரை எமது ஊடக இல்லத்திற்கு அழைத்து அவருடன் ஒரு நேர்காணலை ஏற்பாடு செய்திருந்தோம். அவர் எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்களை எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். ஊடக இல்லம்:- ‘கண் அன்ட் றிங்’ திரைப்படத்தின் அனுபவங்கள் பற்றி எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்? லெனின்:- கண் அன்ட் றிங்’ திரைப்படம் புலம்பெயர்ந்த கலைஞர்களின் படைப்பு. இப்படத்தில் குறிப்பாக பரிசில் இருந்து மன்மதன் பாஸ்கி அவர்களும் ஜேர்மனியில் இருந்து தேனுகா கந்தராஜாவும் நடித்துள்ளார்கள். ஏனைய கல…
-
- 3 replies
- 732 views
-