Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மாற்று அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதில் உள்ள தடைகளும் வாய்ப்புகளும் முத்துக்குமார் மாற்று அரசியல் இயக்கம் ஒன்று தமிழ் மக்களுக்கு தேவையாக உள்ள போதும் அதனை கட்டி எழுப்புவதில் பல தடைகளும் காணப்படுகின்றன. அதில் முதலாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளாகும். கூட்டமைப்பு - அரசாங்கம், இந்தியா, சர்வதேச சக்திகள் என்பவற்றிற்கு தலையினையும், தமிழ் மக்களுக்கு வாலையும் காட்ட முற்படுகின்றது. தமிழ் மக்கள் மத்தியில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற அடிப்படைக் கோட்பாடுகளை பின்பற்றுகின்ற அமைப்பாக தன்னைக் காட்டுகின்றது. தேர்தல் காலங்களில் இந்த வெளிப்படுத்துகை அதி உச்சநிலைக்குச் சென்று விடுகின்றது. இதனால் தான் 'பிரபாகரன் மாவீரன்' என வடமாகாணசபைத் தேர்தல் காலத்தில் வ…

  2. மாற்று தமிழ்த் தேசிய தரப்பினரது வெற்றியும் அதன் அரசியல் முக்கியத்துவமும்? - யதீந்திரா இம்முறை தேர்தலில் மாற்றம் ஏற்படலாம் என்பது பலருடைய எதிர்பார்ப்பு. இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஒரோயோரு தமிழ்த் தேசிய தலைமையாக இருந்தது. கூட்டமைப்பு ஒரணியாக நிற்க வேண்டும் – அதுதான் தமிழ் மக்களுக்கு நல்லதென்பது, பலரதும் கருத்தாக இருந்தது. அதே போன்று, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அணைத்தும் கூட்டமைப்பிற்குள் ஓரணியாக நிற்க வேண்டும் என்னும் அபிப்பிராயமும் பலரிடம் இருந்தது. ஆனால் நிலைமைகள் எதிர்பார்த்தது போன்று இருக்கவில்லை. அனைவரையும் அரவைணத்து, கூடுத் தலைமையொன்றை, வழங்கக் கூடிய ஆற்றல் கூட்டமைப்பிடம் இருந்திருக்கவில்லை. அனைவரும் ஓரணில் நிற்க வேண்டுமென்னும் எதிர…

  3. மாட்டு தலைமை மன்னிக்கவேண்டும் மாற்று தலைமைகளுக்கிடையில் வேட்டியை உருவி அடிபாடு..! https://i.postimg.cc/YqmZN7d4/mj.png போினவாதிகளுக்கு நன்மையளித்து தமிழ் மக்களை பிாிக்கும் செயற்பாட்டை மேற்கொள்வது நாங்களா ? தமிழ் தேசிய மக்கள் முன்னணியா ? இந்த சம்பவம் தற்செயலாக நடந்த ஒரு சம்பவமல்ல. ஒருவா் அல்லது பலாின் வழிநடத்தலில் நடக்கின்றது.அந்த சந்தேகம் எனக்கு உள்ளது. மேற்கண்டவாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மீது வட மாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஊடகவியலாளா் சந்திப்பு என தானே ஒரு அறிக்கையை எழுதி வெளியிட்டுள்ளாா். ஊடகவியலாளர்:- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நீங்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் தமிழ் மக்களை ஏ…

  4. மாற்று தெரிவுகளும் முஸ்லிம்களின் தேடலும் மொஹமட் பாதுஷா / 2019 ஓகஸ்ட் 25 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 11:48 Comments - 0 பொதுவாக, மனித மனம் முழுமையாகத் திருப்தியடைவது என்பது, அபூர்வமான காரியமாகும். திருப்தியின் எல்லைகளைத் தொடர்ந்து, அகலமாக்கிச் செல்வதன் காரணத்தால், எதிலும் இலகுவில் திருப்தி காணாத ஓர் உயிரினமாக, மனிதர்கள் கருதப்படுகின்றார்கள். திருப்திப்படுத்த முயலும் விடயங்களிலேயே, மனிதர்கள் திருப்தி காணாத நிலை இருக்கையில், மக்களைத் திருப்திப்படுத்துவது பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத ஆட்சி, அதிகாரத்தால், மக்கள் எந்தளவுக்கு அதிருப்தி அடைந்திருப்பார்கள் என்பதைத் தனியாக விவரிக்க வேண்டியதில்லை. அப்படியொரு மனநிலையே, பெரும்பாலான இலங்கை மக்களுக்கு ஏற்பட்டிருப்ப…

  5. மாற்றுத் தலைமை உருவாகிறதா? - கே. சஞ்சயன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அண்மைய நாட்களாகப் பூசல்கள் தீவிரமடைந்துள்ள ஒரு கட்டத்தில், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தமிழர் தரப்பின் ஒற்றுமையை வலியுறுத்திச் சென்றிருக்கிறார். 2015 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும், ஈபிஆர்எல்எவ், கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் கடுமையான நிழல் போர் நீடித்து வந்தது. தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தில், சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஒரு தரப்பாக இணைந்து கொண்டதையடுத்து, இந்த நிழல் போர் மேலும் தீவிரமடைந்தது. தமிழ் மக்கள் பேரவையின் …

  6. ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு மே மாதம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினையைக் கையாள்கின்ற பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையில் சுமத்தப்பட்டது. அப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன. யுத்தத்திற்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வவுனியா நகரசபைக்கும் யாழ். மாநகரசபைக்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. முகாமில் அடைக்கப்பட்டிருந்த மக்கள் தொடர்பாகவும் ஒட்டுமொத்த யுத்தம் தொடர்பாகவும் வன்னி மக்களும் யாழ்ப்பாண மக்களும் எத்தகைய உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக இலங்…

  7. மாற்றுத் தலைமை ஒன்றிற்கான உரையாடல்கள் எப்போது முடிவுக்கு வரும்? யதீந்திரா கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த உரையாடல் ஒரு முடிவற்று நீண்டு செல்கிறது. இதனை இனியும் தொடர அனுமதிக்கலாமா என்னும் கேள்வி பலரிடமும் உண்டு. அவ்வாறானவர்கள் அனைவரும் தமிழ் மக்களுக்கு ஒரு ஜக்கிய முன்னணி அவசியம் என்பதை உணர்ந்தவர்கள். அதற்காக பல்வேறு வழிகளிலும் உழைத்தவர்கள். இப்போதும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள். அவ்வாறானவர்களுடன் பேசுகின்ற போது, அவர்கள் அனைவரும் ஒரு விடயத்தை கூறுகின்றனர். இதற்கு மேலும் யார் தூய்மையானவர் என்னும் விவாதம் தேவையற்றது. இதற்கு மேலும் இந்த விவாதம் நீண்டு செல்லுமாக இருந்தால், அது நிச்சயமாக விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகவுள்ள மாற்றுத் தலைமையை பலவீனப்படுத்தும். ஒரு வ…

  8. மாற்றுத் தலைமை ஒன்றிற்கான சந்தர்ப்பம் தவறவிடப்படுமா? யதீந்திரா மாற்றுத் தலைமை தொடர்பில் ஆரம்பத்தில் இருந்த உற்சாகத்தை இப்போது காணமுடியவில்லை. அது தொடர்பான உரையாடல்களும் பெருமளவிற்கு கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதையாக சுருங்கிக்கொண்டு செல்கிறது. இது தொடர்பில் அதிகம் எழுதப்பட்டுவிட்டது. அதிகம் விவாதிக்கப்பட்;டுவிட்டது. ஆயினும் விடயத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் வடக்கு மாகாணத்தின் முன்னைநாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான விக்கினேஸ்வரன், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியதான செய்தியொன்று வெளியாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை…

  9. மாற்றுத் தலைமை குறித்து தீர்மானிக்க வேண்டியவர்கள் தமிழ் மக்களே வடக்குக் கிழக்கு அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன. வடக்குக் கிழக்கு அபிவிருத்திக்கான அரசதலைவர் செயலணி தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்குமிடையே இடம்பெற்ற கடிதப் பரிமாற்றம் இதற்குப் பிள்ளையார் சுழியை இட்டு வைத்துள்ளது. விக்னேஸ்வரன் கூட்டமைப்பிலிருந்து விலகி மாற்றுத் தலைமையொன்றை உருவாக்கும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளார் என்று நம்பிக்கை யான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னோடியாகவே தமிழ…

  10. மாற்றுத் தலைமைக்கான வாய்ப்புகளைத் தோற்கடிப்பது யார்? கோடைக் காலத்தில் எப்போதாவது ஒருநாள் சில மணித்துளிகள் பெய்யும் சிறுமழையை நம்பி, விவசாயம் செய்ய முடியுமா? அதுவும், வரட்சியின் உச்சத்தில் நிலம் வெடித்து வெம்மையை கக்கிக் கொண்டிருக்கின்ற தருணத்தில், சிறுமழையை நம்பி விவசாயத்துக்கான பெரும் ஏற்பாடுகளைச் செய்யும் தொழிலாளியை மற்றவர்கள் எப்படிப் பார்ப்பார்கள்? அந்த மழையின் ஈரம், நிலத்தில் அரையடி இறக்கும் முன்னரே, நிலத்தின் வெம்மையினால் கானலாக மாறி, காணாமற்போய்விடும். இப்படியான நிலையை எந்தவொரு மனிதனும் உணர்ந்து வைத்திருப்பான். அதுவும், வடக்கு- கிழக்கில் அந்த மண்ணோடும் அதன் வாசத்தோடும் வாழும் மக்களிடம், சிறுமழையை மாரி மழைபோல கருத வேண்டும் என்று கோருவதும…

  11. மாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 நவம்பர் 27 , ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புகள் முடிவுக்கு வந்த நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், புதிய தலைமையைக் கட்டியெழுப்புவது தொடர்பிலான உரையாடல் வெளி, மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றது. இம்முறை, புதிய தலைமை என்பது, இளம் தலைமையாக இருக்க வேண்டும் என்கிற விடயம், முன்னிறுத்தப்படுகின்றது. உரிமைப் போராட்டத்தை, வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட சமூகத்தில் புதிய, நம்பிக்கையான, இளம் தலைவர்கள் எழுந்து வருவது, உருவாக்கப்படுவது காலத்தின் கட்டாயம்; வரவேற்கப்பட வேண்டியது ஆகும். இது குறித்து, மாற்றுக் கருத்துகள் இருக்க வேண்டியதில்லை. ஆனால், ஒரு சமூகமாக, அதுவும் 70 ஆண்டுகளுக்கும…

  12. மாற்றுத் தலைமைக்கு அவசரம் வேண்டாமே!! மாற்றுத் தலைமைக்கு அவசரம் வேண்டாமே!! மாற்­றுத் தலைமை தொடர்­பாக அவ்­வப்­போது சந்­தர்ப்­பத்­துக்கு ஏற்­ற­வாறு சிலர் கூறு­வ­தைக் கேட்­கின்­றோம். இவர்­கள் யாரை மன­தில் வைத்­துக்­கொண்டு கூறு­கி­றார்­கள் என்­ப­தும் எமக்கு நன்­றா­கத் தெரி­யும். ஓர் இனத்­தின் தலை­மையை சிலர் ஒன்று சேர்ந்து ஒரே இர­வில் உரு­வாக்­கி­விட முடி­யாது. அவ்­வாறு உரு­வாக்­கப்­ப­டு­வது உண்­மை­யான தலை­மை­யும் அல்லை. அவ­ரி­டத்­தில் சிறந்த தல…

  13. மாற்றுத் தலைமையும் முதலமைச்சர் பதவியும்…. பி.மாணிக்கவாசகம் வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது மில்லியன் டொலர் பெறுமதி மிக்க கேள்வியாக எழுந்துள்ளது. தமிழ்த்தரப்பு அரசியல் ஓர் அரசியல் சுழலுக்குள் சிக்கி ஒரு தள்ளாட்டமான நிலைமைக்கு ஆளாகியிருப்பதே இதற்குக் காரணமாகும். உள்ளுராட்சித் தேர்தலுக்கு அடுத்தபடியாக நடைபெற வேண்டிய மாகாணசபைத் தேர்தல், இந்த வருட இறுதிக்குள் நடத்தப்படுமா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. அந்தத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல் திணைக்களம் தயாராக இருக்கின்ற போதிலும், அரச பங்காளிக்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும், சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில்…

  14. மாற்றுத்தலைமை சாத்தியமா? – செல்வரட்னம் சிறிதரன்:- இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கும், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள ஏனைய பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்கும் நல்லாட்சி அரசாங்கம் வழி வகுக்கும். உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் – என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருந்து படிப்படியாகக் கரைந்து கொண்டிருக்கின்றது. அதேவேளை, இப்போதுள்ள தமிழ் அரசியல் தலைமையின் நிலை என்ன, அது தொடர்ந்து மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான முறையில் செயற்பட முடியுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கி…

  15. மாற்றுத்தலைமை மீதான மோகம் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழரசுக் கட்சி, தன்னை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டு காரியங்களை முன்னெடுப்பதே மாற்றுத் தலைமை குறித்த சிந்தனைக்கு அடிப்படை காரணமாகும். கூட்டமைப்பைப் பதிவு செய்தால், தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு இல்லாமல் போய்விடுமே என்ற அச்சத்தின் காரணமாகவே தமிழரசுக் கட்சியினர் பதிவு விடயத்தில் முரண்பட்டிருக்கின்றனர். தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அடுத்த கட்ட நிலைமை என்ன? - இந்தக் கேள்வி குறித்து சிந்திக்க வேண்டிய நிலைமையொன்று இப்போது உருவாகியிருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியலின், அரசியல் இயங்கு தளத்தில் ஒரு வெற்றிடம் காணப்படுகின்றது. …

  16. மாற்றுத்தலைமைக்கு செல்வாக்கு அதிகரிக்கிறதா? கரிகாலன் விக்கினேஸ்வரன் தலைமையிலான மீன் சின்னத்தின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. ஆரம்பத்தில் மாற்றுத் தலைமை தொடர்பில் தடுமாற்றங்கள் இருந்தாலும் கூட, தற்போது சம்பந்தன்- சுமந்திரன் தலைமையிலான கூட்டமைப்பிற்கு சவால்விடக் கூடிய, தலைமை என்னும் அபிப்பிராயம் யாழ்.மாவட்டத்தில் அதிகரித்திருப்பதாகவே தெரிகின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பு ஐந்து ஆசனங்களை வெற்றிகொண்டிருந்தது. ஆனால் இம்முறை அதனை தக்க வைக்க முடியுமா என்னும் சந்தேகம் தமிழசு கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. இதனை அவர்கள் பகிரங்கமாக கூறாவிட்டாலும் கூட, உண்மையான நிலைமை இதுதான். அதேவேளை வடக்கின் தேர்த…

  17. மாற்றுத்தலைமையை ஏற்பாரா விக்னேஸ்வரன்? http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-17#page-5

  18. மாற்றுப் பாதை- சாத்தியமாகுமா? தமிழ் மக்­கள் ஒரு­போ­துமே இரண்­டாம்­த­ரக் குடி­மக்­க­ளாக இருக்க மாட்­டார்­கள். அவர்­களை அரசு தொடர்ந்து ஏமாற்­றி­னால் அவர்­கள் மாற்­றுப் பாதை­யொன்றை நாட­வேண்­டிய கட்­டா­யத்­துக்­குத் தள்­ளப்­ப­டு­வார்­கள். இவ்­வாறு எதிர்க் கட்­சித் தலை­வ­ரான சம்­பந்­தன் இலங்­கை­யி­லி­ருந்து விடை­பெற்­றுச் செல்­லும் இலங்­கைக்­கான அமெ­ரிக்­கத் தூது­வ­ரி­டம் கூறி­யமை இன்­றைய சூழ்­நி­லை­யில் கவ­னத்­தில் கொள்­ளத்­தக்­கது. எதிர்க்கட்­சித் தலை­வர் என்ற வகை­யில் சம்­பந்­த­னின் கருத்­துக்­க­ளுக்கு பன்­னாட்­டுச் ச…

  19. மாலி: இஸ்லாமிய பயங்கரவாதத்தின் புதிய களம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஏப்ரல் 04 வியாழக்கிழமை, பி.ப. 06:32Comments - 0 போரின் களங்கள், போராட்டக் களங்கள் மட்டுமல்ல, பயங்கரவாதத்தின் களங்களும் மாறுகின்றன. பயங்கரவாதமும் தனது எல்லைகளை விரிக்கிறது. இதற்கு இஸ்லாமியப் பயங்கரவாதமும் விலக்கல்ல. இன்று உலகெங்கும், இஸ்லாமியப் பயங்கரவாதம் பேசுபொருளாகி இருக்கிறது. அது இஸ்லாமிய வெறுப்புணர்வைக் கட்டியெழுப்புவதில் பங்காற்றுகிறது. அதன்மூலம், தமக்கான ஆதரவுத்தளத்தை, இஸ்லாமியப் பயங்கரவாதம் உருவாக்குகிறது; ஓன்றில் ஒன்று தங்கி வளர்கின்றன. இது உலகெங்கும் பாரிய சவால்களை உருவாக்கியுள்ளது. மத்திய கிழக்கில் மய்யங்கொண்டு, மேற்குலகில் தனது கைவரிசையைக் காட்டி வந்த இஸ்லாமி…

  20. மாலி: ஓநாய் அழுத கதை ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதைகள் ஏராளம். உலக அரசியலிலும் இக்கதைகள் தொடர்ந்தும் அரங்கேறுகின்றன. ஓநாய்களின் மனிதாபிமானம் பற்றிய புகழுரைகளை, எல்லாவிடங்களிலும் கேட்கக் கிடைக்கிறது. ஆடுகள் மீது அவை காட்டும் அக்கறை, உயர் விழுமியங்களின் பாற்பட்டது என ஊடகங்கள் எழுத எழுத, அதைக் கேள்வியின்றி நம்பப் பழக்கப்பட்டிருக்கிறோம். அவ்வளவில், ஓநாய்கள் வெற்றிபெற்றுள்ளன. ஆடுகள், ஓநாயை நட்புப் பிடித்தால், ஏனைய கொடிய விலங்குகளில் இருந்து தப்பிக்கலாம் என்ற அபத்தங்களையும் கேட்கும் சூழலிலேயே நாம் வாழ்கின்றோம் என்பது, துயரம் நிறைந்த உண்மை. அண்மையில் பிரான்ஸின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற இமான…

  21. மாலியில் பயங்கரவாத அச்சுறுத்தல் - ஜனகன் முத்துக்குமார் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியிலும் நடப்பாண்டின் நடுப்பகுதிவரையிலும், பயங்கரவாதம் தொடர்பாக சர்வதேச அரங்கில் பேசப்பட்ட நாடுகளின் வரிசையில், மாலி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பிரதானமாக நாட்டின் பயங்கரவாதக் குழுக்களையும் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தீவிரவாத நடவடிக்கைகளையும் களைதல், சர்வதேச பாதுகாப்புக்கான உதவிகளைப் பெறுதல் தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மாலி முன்வைக்கும் அதேவேளை, உள்நாட்டு பயங்கரவாதச் செயற்பாடுகள், தொடர்ச்சியாக பிராந்தியத்துக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியவண்ணமே உள்ளன. 2012ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் இருந்து, பயங்கரவாதத்து…

  22. அமெரிக்காவும் பிரான்சும் ஆப்பிரிக்க நாடுகளின் மீது இராணுவ ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஏகாதிபத்திய படைகள் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்பது உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் கோரிக்கை. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி மீது பிரான்ஸ் இராணுவத் தாக்குதலை தொடுத்திருக்கிறது. மாலியின் வடபகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இசுலாமிய தீவிரவாதிகள் தென்பகுதிகளை நோக்கி நகர ஆரம்பித்த போது அவர்கள் மீது பிரான்ஸ் வான் வழித்தாக்குதல்களை நடத்தியது. 250 கிலோ எடையிலான குண்டுகளை வீசி கடநத 5 நாட்களாக தாக்கிய பிறகும் இஸ்லாமிய போராளிகளின் முன்னேற்றத்தை பிரான்சால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மாலியின் மத்தியப் பகுதியில் உள்ள 35,000 பேர் வசிக்கும் டயாப…

    • 6 replies
    • 809 views
  23. மாலேயில் செய்ததை புதுடில்லி கொழும்பில் செய்யமுடியாது - கொன்ஸரான்ரினோ சேவியர் இலங்கையின் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில், உலகின் கண்கள் கொழும்பை மாத்திரமல்ல, புதுடில்லியையும் உற்றுநோக்கிக்கொண்டிருக்கின்றன. அயல்நாடுகளுடனான உறவுகளுக்கு முதன்மை கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது மாலைதீவில் எதேச்சாதிகாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு தலையீடு செய்து வெற்றிகண்டதைப் போன்று கொழும்பிலும் இந்தியா செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஜனநாயக மீட்சியை நோக்கி நெருக்குதலைப் பிரயோகிக்க இந்தியாவினால் இயலுமாக இருந்தது என்று மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி …

  24. மாலைதீவின் தேர்தல் முடிவு நமக்குச் சொல்லும் செய்தி என்ன? யதீந்திரா மாலைதீவின் தேர்தல் முடிவு உலக ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றிருக்கின்றது. கடந்த சில வருடங்களாக மாலைதீவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் கடுமையான விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. இதன் உச்சமாக இந்தியாவினால் வழங்கப்பட்ட இரண்டு உலங்கு வானூர்திகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு மாலைதீவு நிர்வாகம் பணித்திருந்தது. மாலைதீவில் தங்கியிருந்த இந்தியாவின் 26 விமானப்படை அதிகாரிகளுக்கான கடவுச் சீட்டை இரத்துச் செய்தது. அத்துடன் மாலைதீவில் பணியாற்றிக் கொண்டிருந்த 2000 இந்திய பணியாளர்களுக்கான வேலை அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்தது. வழமையாக இந்தியர்களால் விண்ணப்பிக்கப்பட்டு, பெறப்படும் மாலைதீவின் விளம்பர நிறுவனங்களுக்கு இந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.