அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
சாதுரியமான முன்னெடுப்புக்களே உரிய தீர்வைக்காண உதவும் – செல்வரட்னம் சிறிதரன் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலம், இனப்பிரச்சினைக்கு ஒர் அரசியல் தீர்வைக் காண முடியுமா, எந்த வகையில் அது சாத்தியம் என்பதை பரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை உருவாகியிருக்கின்றது. இந்த நிiலையில் எதிரும் புதிருமாக இருந்து கொண்டு புதிய அரசியலமைப்பில் முன்கூட்டியே இணக்கப்பாடு ஒன்றை எட்டாமல் தீர்வு காண்பது சாத்தியம் என்று கூறுவதற்கில்லை. ஏனெனில், வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், …
-
- 0 replies
- 344 views
-
-
இலங்கையின் இளைஞர்கள் மத்தியிலான 'நீல நிற' வேலைகள் மீதான தயக்கம் ஒரு பெரிய சமூக-பொருளாதார சவாலாகும், இது உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. வேலையின்மை, வருமான ஏற்றத்தாழ்வு மற்றும் போதைப்பொருள் பாவனை போன்ற சமூகப் பிரச்சனைகளுக்கு இந்த மனநிலை நேரடியாகக் காரணமாக அமைகிறது. கல்வி முறை சீர்திருத்தம், தொழிற்கல்விக்கு முக்கியத்துவம், சமூக மதிப்பீடுகளில் மாற்றம் மற்றும் அரசாங்கக் கொள்கைகள் மூலம் இந்த மனநிலையை மாற்றியமைக்கலாம். மேம்பட்ட நாடுகள் உடல் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் அதே வேளையில், இலங்கை இளைஞர்கள் தங்களின் மனநிலையை மாற்றிக்கொண்டு நாட்டின் உற்பத்தித்திறனை அதிகரிக்க பங்களிக்க வேண்டும். இந்த மாற்றங்கள் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதுடன், …
-
- 1 reply
- 344 views
- 1 follower
-
-
கருத்துக் கணிப்பு ! மூன்று விடயங்கள் இன்றைய அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு, செலவுத் திட்டம், புதிய அரசியலமைப்பின் ஊடான அரசியல் தீர்வுக்கான விவாதம் மற்றும் ஜனவரி மாதத்தில் நடைபெறுவதற்காகத் திகதி குறிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆகிய மூன்றுமே அந்த முக்கிய விடயங்களாகும். இந்த மூன்றும் தனித்தனி விடயங்கள். ஆயினும், இடைக்கால அறிக்கை மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் என்பவற்றில் அரசாங்கம் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றது. இந்த நிலையில், இந்த இருகட்சி அரசாங்கம், தன்னை தொடர்ந்து பதவியில் தக்க வைத்துக் க…
-
- 0 replies
- 344 views
-
-
ஒன்பது வருடங்கள் கடந்தும் கண்ணீருடன் பாதிக்கப்பட்டோர் நாட்டில் நிலவிவந்த 30 வருடகால யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. தென்னிலங்கை யுத்த வெற்றியை கொண்டாட வேண்டுமென வலியுறுத்தி வருகின்ற நிலையில் வடக்கு–கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது துன்ப–துயரங்களை வெளிப்படுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவில்லை. மக்கள் தமக்கு நீதியை நிலைநாட்டுமாறு கோரிப் போராடி வருகின்ற போதிலும் பதவியிலிருக்கின்ற அரசாங்கமானது அதனை தமது அரசியல் இருப்புக்களுக்கு ஒரு ச…
-
- 0 replies
- 344 views
-
-
தமிழ்க் கட்சிகளும் ஒற்றுமைக்கான அழைப்பும் புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளதாக திருமலை ஆயர், தென் கயிலை ஆதீனம் ஆகியோரின் தலைமையிலான குழுவொன்று, கடந்த வாரம் அறிவித்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அரசியல் கட்சிசாரா பிரபல சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க உள்ளதாகவும் அந்தக்குழு குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு, ஊடகங்களில் ஒருநாள் செய்தியாக மட்டுமே இடம்பெற்றிருந்தது. அதற்கு மேல் அந்த அறிவிப்புக்கான முக்கியத்துவத்தை, அரசியல் கட்சிகளோ ஊடகங்களோகூட வழங்கியிருக்கவில்லை. தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பி…
-
- 0 replies
- 344 views
-
-
அழுத்தங்களைத் தாண்டிய அரசின் செயற்பாடுகள்: ஜீ.எஸ்.பி வரிச்சலுகை லக்ஸ்மன் சர்வதேச அழுத்தங்கள் ஒரு பொருட்டேயல்ல என்பதுபோல், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இதற்குச் சிறப்பானதொரு எடுத்துக்காட்டு ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் அதனை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம் என தற்போதைய மத்திய வங்கியின் ஆளுனராக இருக்கின்ற அஜித் நிவாட் கப்ரால் முன்னர் இராஜாங்க அமைச்சராக இருந்த வேளை வெளியிட்ட கருத்தாகும். ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை நிறுத்தப்பட்டால், அதற்கு அரசாங்கம் என்றவகையில் நாங்கள் முகம்கொடுப்போம். ஏனெனில் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை மூலம் நாட்டுக்கு கிடைப்பது நூற்றுக்கு 3வீதமான நிவாரணமாகும். என்றாலும் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை தொடர்ந்து பெற்றுக…
-
- 0 replies
- 344 views
-
-
இந்திய, சீன உறவுகளை சிறிலங்கா எப்படிச் சமநிலைப்படுத்தப் போகிறது? ‘ஆசிய விவகாரங்களைக் கையாள்வதும், ஆசிய விவகாரங்களைத் தீர்ப்பதும் அதன் பாதுகாப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியதும் ஆசிய மக்களாவர்’ என 2014ல் இடம்பெற்ற ஆசியாவில் ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கை கட்டுமான அளவீடுகள் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின்பிங் கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால் ஆசியாவில் துரித கதியில் வளர்ந்து வரும் இரண்டு நாடுகள் தமக்குள் ஒத்துழைப்பு மற்றும் ஒன்றிணைவு ஆகியவற்றைக் கட்டியெழுப்பி தத்தமது நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதன் மூலம் ஆசியாவின் விவகாரங்களைக் கையாளுவதற்கான ஆளுமையைக் கொண்டுள்ளார்களா? பல ஆண்டுகளாக, சீனா ப…
-
- 0 replies
- 343 views
-
-
இனவாதியா விக்னேஸ்வரன்? இரண்டு வாரங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட எழுக தமிழ் நிகழ்வைத் தொடர்ந்து, அதற்குத் தலைமை தாங்கிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இனவாதியாகச் சித்திரிக்கும் போக்கு, தென்னிலங்கையில் அதிகரித்திருக்கிறது. இனவாதம் பேசுவதாகவும் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முனைவதாகவும், மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு உயிர்கொடுக்க முனைவதாகவும், அவர் மீது பரவலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இனவாதம் பேசும் வடக்கு மாகாண முதலமைச்சரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விடுக்கப்படுகின்றன. அவரைக் கைது செய்யக் கோரி, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடுகளும் செய்யப்…
-
- 1 reply
- 343 views
-
-
சம்பந்தருக்குப் பிறகு? - நிலாந்தன் சம்பந்தர் எதை விட்டுச் சென்றிருக்கிறாரோ அங்கிருந்துதான் அடுத்த கட்டம் தொடங்கும். சம்பந்தர் எதை விட்டுச் சென்றிருக்கிறார்? சம்பந்தர் சிதறிப்போன தன் பலத்தைத் தானே உணராத ஒரு தமிழ்ச் சமூகத்தை விட்டுச் சென்றிருக்கிறார். சம்பந்தரின் வழி தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பதனை இரண்டு தளங்களில் ஆராயலாம். முதலில் அனைத்துலக அளவில். இரண்டாவதாக உள்நாட்டுக்குள். அனைத்துலக அளவில் சம்பந்தர் தமிழ்மக்களின் மெய்யான பலம் எது என்பதைக் கண்டுபிடித்திருக்கவில்லை. தமிழ் மக்களின் துயரங்களுக்கெல்லாம் எது காரணமோ அதுதான் தமிழ் மக்களின் மெய்யான பலமும். அதுதான் தமிழ் மக்களின் புவிசார் அமைவிடம். அந்த அமைவிடம் காரணமாகத்தான…
-
- 2 replies
- 343 views
-
-
எமது முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல் September 18, 2023 —- வீரகத்தி தனபாலசிங்கம் — றொடீசியா என்று முன்னர் அழைக்கப்பட்ட ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில் சிறுபான்மை வெள்ளையரின் ஆட்சிக்கு எதிரான கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் றொபேர்ட் முகாபே. வெள்ளையர் ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்ட பிறகு அவர் 1980 தொடக்கம் 1987 வரை அந்த நாட்டின் பிரதமராகவும் 1987 தொடக்கம் 2017 வரை ஜனாதிபதியாகவும் பதவிவகித்தார். மொத்தமாக 37 வருடங்கள் அவர் ஆட்சியதிகாரத்தில் இருந்தார். அதிகாரத்தில் இருந்து இறங்கவிரும்பாமல் நீண்டகாலமாக பதவியில் இருந்த முகாபேயிடம் ஒரு தடவை செய்தியாளர் ஒருவர், “நீங்கள் எப்போது சிம்பாப்வே மக்களுக்கு பிரியாவிடை கொட…
-
- 0 replies
- 343 views
-
-
நாதியற்ற தமிழன்..! ஈழத்தின் பூர்வீகக்குடிகளான தமிழன் செத்துமடிந்து கொண்டிருக்கின்றான். [ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 06:26.57 AM GMT ] உலகப்பரப்பில் தமிழன் ஏனோ பிறந்து ஏனோ தன் வாழ்க்கையை வாழ்ந்து கடமைக்காக செத்துப்போகின்றானா என்கின்ற சந்தேகங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. எங்கும் எப்போதும் வரலாற்றைப்பற்றியும் தமிழினத்தின் பெருமைகளைப்பேசியும் இருக்கும் தமிழர்கள் இன்று அடிமைத்தனத்திற்கும் அடக்கு முறைகளுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆம்...! தமிழனின் இன்றைய மற்றும் அன்றைய நிகழ்வுகளை எல்லாம் தொகுத்து பார்க்கும் போதெல்லாம் தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் தான் ஞாபகத்திற்கு வருகின்றார். தமிழீழப்போராட்டம் இன்று இவ்வளவு தூரத்திற்கு வளர்ந்து தமிழினத்தின் விடுதலை…
-
- 0 replies
- 343 views
-
-
மஹிந்த மனது வைத்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வு தூரமாகாது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது. எனினும் இதற்கான முன்னெடுப்புகள் உரியவாறு இடம்பெறுகின்றதா? என்பது கேள்விக்குறியாகி இருக்கின்றது. இந்நிலையில், இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுப்பதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் வகிபாகத்தினையும் அவரது ஆளுமைகளையும் புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கின்றனர். மஹிந்த மனது வைத்தால் தீர்வு சாத்தியமாகுமென்றும் பெரும்பான்மை மக்கள் அதனை நிச்சயம் ஏற்றுக்கொள்வர் என்றும் இவர்…
-
- 0 replies
- 343 views
-
-
சர்வதேச நீதிமன்ற விவகாரம் நுட்பமாக கையாளும் இலங்கை சர்வதேச நீதி என்பது உலக நாடுகளின் புவிசார் அரசியல் நலன்களில் தங்கியுள்ளது. ரோஹிகின்ய முஸ்லிம்களுக்கு நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்கும் பிரித்தானியா, காசாவில் நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்கத் தயங்கும் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு சர்வதேச அரசியலை இலங்கை நன்கு கையாளுகின்றது, காய் நகர்த்துகின்றது. ஆனால் தமிழ்த்தரப்பு? அ.நிக்ஸன் காசாவில் நடப்பது இன அழிப்பு என்று தென்னாபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்துள்ளதை அமெரிக்கா கண்டித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் அமைதியாக இருக்கின்றன. ஆனாலும் அமெரிக்காவை விடவும் ஐரோப்பிய நாடுகள் காசாவில் ந…
-
- 0 replies
- 343 views
-
-
நம்பிக்கையில்லா பிரேரணையும் அதன் அதிர்வலைகளும் நரேன்- கிராம, நகர அபிவிருத்தி மற்றும் அவைகளின் அடிப்படை சுகாதாரம் போன்ற விடயங்களை கையாள்வதற்காக கிராம மட்டத்தில் பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான உள்ளூராட்சி தேர்தலானது நாட்டின் ஒட்டுமொத்த அரசியலையே ஆட்டம் காண வைத்துள்ளது. மைத்திரி – ரணில் கூட்டாச்சியை இல்லாமல் செய்து ரணிலை பிரதமர் பதவியில் இருந்து அகற்றிவிடுமோ என்ற அளவிற்கு கூட நிலமைகள் சென்றிருந்தது. ஒரு சில அரசியல் அவதானிகள் மத்தியில் இந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை மீறுவதற்காகவே இந்த நகர்வு மஹிந்தவின் மூலம் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவடைந…
-
- 0 replies
- 343 views
-
-
இலங்கைக்கு ஆச்சரியம் தேடித்தரும் விடயங்களில் "ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு”. இலங்கையின் நீதித்துறையும், சட்டத்தரணிகளும் புரியப்பட்ட குற்றத்தை நிரூபிக்க வருடக்கணக்கில் உழைத்திருப்பர். தமது சட்ட அறிவைக் கொட்டித்தீர்த்திருப்பர். குறித்த குற்றத்தை நிரூபிப்பதற்காக பெரியதொரு அரச நிதி செலவழிக்கப்பட்டிருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக குற்றவாளியினால் பாதிக்கப்பட்ட – உறவுகளை இழந்த குடும்பத்தவர் கண்ணீரோடு நீதியை எதிர்பார்த்து நீதிமன்றத்திற்கு அலைந்திருப்பர். தம் உழைப்பை, பணத்தை செலவழித்திருப்பர். இவ்வாறானதொரு கூட்டுழைப்பின் பின்னர் குற்றவாளிக்குத் தண்டனை வழங்கப்படும். ஆனால் அவர் சிறைக்கு சென்று ஒரு வருடத்திலோ, அல்லது சில மாதங்களிலோ எல்லாவிதக் குற்றங்களிலிருந்தும் நீக்கம் செய…
-
- 0 replies
- 343 views
-
-
சீனாவின் செல்நெறியில் திபெத்தை விளங்கிக் கொள்ளல் -நரசிம்மன் புனைகதைகளின் மூலம் ஏமாற்றி, காரியங்களைச் சாதிக்கும் முயற்சிகளில் ‘அழுங்குப்பிடி’யாகத் தொடர்வதையே, திபெத்தில் சீனாவின் செல்நெறியாகக் காணப்படுகின்றது. ஆனால், அந்தப்போக்கை எவரும் கேள்விக்கு உட்படுத்தக் கூடாது என்பதிலும் கவனமாகக் காரியமாற்றுகின்றது. திபெத் ஒருபோதும் சீனப்பேரரசின் கீழ் இருந்ததில்லை என்பது, சீனாவுக்குத் தேவையான மறைக்கப்பட வேண்டிய உண்மை என்பதால், எவரையும் நம்பவைக்கும் விதத்திலும் மிக நேர்த்தியாகவும் ஆனால் தந்திரமாகவும் திபெத் குறித்து பல புனைகதைகள் கட்டியெழுப்பப்பட்டு இருக்கின்றன. வரலாற்றுக் காலம் முதற்கொண்டு, ஆதாரபூர்வமான பல உண்மைகள், தான்தோன்றித்தனமான முறையில், மறைத்தழிக்கும் வகையிலேயே இ…
-
- 0 replies
- 343 views
-
-
ஐ.எம்.எப் கடன்கள் கசப்பான மருந்து! -நஜீப் பின் கபூர்- இன்று நமது நாட்டில் பிரச்சினைகள் சங்கிலித் தொடர் போல வந்து கொண்டிருக்கின்றன.பொருட்களின் விலைகளில் மிகச் சிறியதோர் சலுகையை மக்களுக்கு கொடுத்து அதனைவிட பல மடங்கு பணத்தை மக்களிடம் பறிக்கின்ற ஒரு வேலைத் திட்டத்தைத்தான் அரசு இன்று முன்னெடுத்து வருகின்றது.இதனை மின் கட்டணங்கள் உயர்வில் நாம் பார்த்தோம்.மக்களுக்கு நெருக்கடியில் எந்த விமோசனங்களும் கிடையாது.பொருளாதாரத் துன்பங்கள் அப்படியே தொடர, ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் கடந்த 30ம் திகதி சமர்ப்பித்த இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் அரசு எந்தச் சலுகைகளையும் குடிகளுக்கு வழங்கவில்லை. இந்த வரவு-செலவுத்திட்டங்கள் ப…
-
- 0 replies
- 343 views
-
-
ஒரே நாடு ஒரே சட்டம் அதே தேரர் ? நிலாந்தன். “ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவராக ஞானசார தேரரை ஜனாதிபதி நியமித்தமை என்பது என்னைப் பொருத்தவரை பொருத்தமானதே. அது அபகீர்த்திக்குரிய ஒரு மாணவனை வகுப்பின் மாணவத் தலைவராக நியமித்தமை போன்றது” இவ்வாறு ருவிற்றரில் பதிவிட்டுள்ளார் நிமால் பெரேரா என்பவர்.ஒரே நாடு ஒரே சட்டம் என்பது ஒரு புதிய கோஷம் அல்ல. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோத்தாபய ராஜபக்ச அதை முன்வைத்தார். ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப்பின் இந்த கோஷத்துக்கு அழுத்தமான காரணங்கள் இருந்தன. இப்பொழுது அதற்கு ஒரு செயலணியை ஜனாதிபதி உருவாக்கி இருக்கிறார். 13 அங்கத்தவர்களை கொண்ட அந்த செயலணிக்கு சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இச்செயலணியில் தமிழ் மக…
-
- 1 reply
- 343 views
-
-
சிறிலங்காவின் அரசியல் வரலாற்றின் பிரகாரம், சீனா மற்றும் சிறிலங்காவின் உறவு மிகவும் நெருக்கமானதாகக் காணப்படுகிறது. எனினும், 1952-2014 வரையான ஆறு பத்தாண்டு கால சீன-சிறிலங்கா உறவு நிலையானது மேலும் நெருக்கமானதாகக் காணப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அண்மையில் சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் மற்றும் சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு இடையிலான சூடான வார்த்தைப் பிரயோகங்கள் இந்த உறவில் மேலும் சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் ராஜபக்சவின் இரண்டாம் ஆட்சிக்காலத்தில் சிறிலங்கா மீது சீனா அதீத செல்வாக்கைச் செலுத்தியிருந்தது. இதன் காரணமாக தற்போதைய அரசாங்கமா…
-
- 0 replies
- 342 views
-
-
கிழக்கு ஆளுநரின் முன்னாலுள்ள சவால்கள் -லக்ஸ்மன் கிழக்கு மாகாணத்தில், பெரும்பான்மையாகத் தமிழ் மக்கள் வாழும் நிலையில், கிழக்கு மாகாணத்தின் ஆளுநராகத் தமிழர் ஒருவரை நியமிக்க, ஜனாதிபதி முன்வரவேண்டும்; இன ஐக்கியத்தின் வெளிப்பாடாக, சிறுபான்மை இனங்களுக்குத் தமது அரசாங்கத்தில் பங்குகளைக் கொடுத்து, அவர்களையும் இணைத்துக் கொண்டு, அவர்களுக்கும் அதிகாரப் பரவலாக்கம் செய்யக்கூடிய வாய்ப்புகளை ஜனாதிபதி வழங்க வேண்டும்; அதன் ஊடாகவே சிறுபான்மையினர் உடனான நல்லிணக்கத்தை வெற்றிபெற வைக்க முடியும் என்ற கோசங்கள் வலுத்த நிலையில் தான், தேசிய கீதம் தொடர்பான இடறல்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கையில் 13ஆவது திருத்தச்சட்டம் ஊடாக, மாகாண சபை முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இதை ஏற…
-
- 0 replies
- 342 views
-
-
மைத்திரியை வலுப்படுத்தும் மேற்கு நாடுகள்! புதிய அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டம் முடிவடைவதற்கு முதல்நாளான கடந்த புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய நாடுகளின் தூதுவர்கள் சந்தித்துப் பேசியிருந்தனர். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்த மிச்சேல் ஜே சிசன் ஐநாவுக்கான துணைத் தூதுவராக நியமிக்கப்பட்ட பின்னர் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நிர்வாகப் பொறுப்பை மூத்த இராஜதந்திரியான அன்ட்ரூ மான் வகித்து வருகிறார். அவரும், பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவராக உள்ள லோறா டேவிஸ், ஜேர்மன் தூதுவர் ஜேர்ஜன் மோர்ஹாட் ஆகியோருமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர். 100 நாட்களை புதிய அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளதற்கு பாராட…
-
- 0 replies
- 342 views
-
-
வரலாற்றில் கற்றுக்கொள்ள மறுத்த பாடம் March 8, 2025 — கருணாகரன் — இலங்கை அரசியலில் பேரலையாக எழுச்சியடைந்திருக்கும் தேசியமக்கள் சக்தி (NPP) யை எதிர்கொள்வதில் எதிர்க்கட்சிகளுக்கு(எதிரணிகளுக்கு) சவாலே மிஞ்சுகிறது. இதனால் தனிப்பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைத்திருக்கும் NPP அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு பலமான தரப்புகள் எதுவுமே தற்போதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. NPPயை விமர்சிப்பதற்குக் கூட பலமான காரணங்களை எதிரணிகள் கண்டுபிடிக்கவில்லை. பாராளுமன்றத்திலும் வெளியிலும் சில காரணங்களை அவை சொன்னாலும் அவை ஒன்றும் சனங்களிடம் எடுபடக் கூடிய அளவுக்கில்லை. இதனால் எந்த ஊடகங்களிலும் அவற்றுக்கு முன்னிலை இல்லை. மலையில் எறும்பு ஊர்வதைப்போலவே முன்வைக்கப்படும் விமர்சனங்கள் உள்ளன. இது அரசியல் அரங…
-
- 0 replies
- 342 views
-
-
கைதாவாரா ஞானசாரர்? நல்லாட்சியின் இரண்டரை வருடங்களின் பின்னர் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான அசாதாரண நடவடிக்கைகளை கட்டவிழ்த்துள்ளார். எனினும் இதுவரையில் அவர் கைது செய்யப்படவில்லை. இருந்தபோதிலும் அவரை கைது செய்வதற்கு நான்கு பொலிஸ் குழுக்கள் அமர்த்தப்பட்டுள்ளன. ஆகவே இனவாதமாக வீரவசனம் பேசிய ஞானசார தேரர் தற்போது தலைமறைவாகி பதுங்கியுள்ளார். இலங்கை சுதந்திர நாடு என்பதால் இங்கு சகல மக்களும் தமது சமய கலாசார அடையாளங்களுடன் வாழ்வதற்கான உரித்துக் கொண்டுள்ளார்கள். அவ்வுரிமை அரசியலமைப்பினூடாக உறுதி செய்யப்பட்…
-
- 0 replies
- 342 views
-
-
2020 ஜனாதிபதித்தேர்தல் ஒரு பொறியாகத் தமிழ் மொழிச் சமூகங்களின் முன்னே நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் எவரும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய உரிமைகளுக்கான உத்தரவாதம், பிரச்சினைகளுக்கான தீர்வு, பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் போன்றவற்றில் துல்லியமான நிலைப்பாடுகள் எதனையும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. இது இதுவரையான வரலாற்றில் நிகழ்ந்திருக்காத ஒரு அபாயகரமான நிலையாகும். கடந்த காலத்தில் நிகழ்ந்த அத்தனை தேர்தல்களின்போதும் தமிழ் பேசும் தேசிய இனங்களின் பிரச்சினைகள் குறித்தும் அதற்கான தீர்வைப்பற்றியும் இந்தக் கட்சிகள் பேசி வந்திருக்கின்றன. அவை பேசியவாறும் உடன்பட்டவாறும் தீர்வுகளை முன்வைக்காது விட்டாலும் அவற்றைப் பற்றிப் பேசியே தீர வேண்டும…
-
- 0 replies
- 342 views
-
-
எதைச் செய்ய முடியும்? Norman Finkelstein அவர்கள் 1953 இல் அமெரிக்காவில் பிறந்த யூத இனத்தவர். அவரது பெற்றோர் இருவரும் நாசிகளின் இருவேறு கொன்சன்றேசன் முகாம்கள் (Auschwitz, Majdanek) இலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள். இவர்கள் 1995 இல் காலமாகினர். பின்கல்ஸ்ரைன் அவர்கள் அறியப்பட்ட அரசியல் விஞ்ஞானியும், பேராசிரியரும் எழுத்தாளரும் ஆவார். அவர் சியோனிசம், கொலோகாஸ்ற் என்பன குறித்து நூல்கள் எழுதியவர். அவர் The Jimmy Dore Show க்கு 12.10.2023 இல் வழங்கிய நேர்காணலில் அவர் முன்வைத்த கருத்துகளை நன்றியுடன் தமிழாக்கம் செய்திருக்கிறேன். யார் காஸா மக்கள்?. 70 வீதமான காஸா மக்கள் 1948 யுத்தத்தின் போதான அகதிகள் அல்லது அந்த அகதிகளின் வாரிசுகள். இஸ்ரேலிய அரசால் துரத்தப்பட்ட …
-
- 0 replies
- 342 views
-