Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ரணிலின் துணிவும் ஏனைய போட்டியாளரும்! August 21, 2024 — கருணாகரன் — நெருக்கடி காலத்திலிருந்து நாட்டை – மக்களை மீட்டது தானே என்கிறார் ரணில் விக்கிரமசிங்க. அதாவது தானொரு மீட்பர், ஆபத்பாந்தகர் என்றெல்லாம் சொல்கிறார். “அன்றைய நெருக்கடிச் சூழலில் யாருமே பொறுப்பேற்க முன்வராதபோது தனியாளாக முன்வந்து அந்தப் பொறுப்பைத்துணிவுடன் ஏற்றேன். நெருக்கடியிலிருந்து நாட்டைமீட்பதற்கான தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காகச் சஜித்தையும் அநுரவையும் கூட அழைத்தேன். அதைப்போல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் மலையக் கட்சிகளையும் முஸ்லிம்களையும் கேட்டிருந்தேன். யாரும் வரவில்லை. ஆனாலும், இணைந்து பணியாற்றக் கூடியவர்களைச் சேர்த்து ஆட்சியை அமைத்தேன். அதன் மூலம் பொருட்களுக்காகக் கா…

  2. ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும்-சிதைக்கும் முகமாக கனிய மணல் அகழும் நோக்கத்தோடு கரையோரத்தில் ஈடுபடும் திணைக்களங்கள் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருவது அப்பிரதேச மக்களை கவலைகொள்ள வைத்திருக்கிறது. அண்மையில் முல்லைத்தீவு அளம்பில் குருசடி பகுதியில் பல வாகனங்களில் வந்திறங்கிய கனிய மணல் கூட்டுத்தாபன, கடலோர பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், சுற்றுச்சூழல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் நீர்வளங்கல் முகாமைத்துவத்தினர், புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் கரைத்துறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், அப்பகுதி கிராம அலுவலர் ஆகியோர் குறித்த பிரதேசத்தில் கனிய மணல் அகழும் பணிகளை முன்னெடுப்பதற்கு வந்த வேளையில் அங்கு குழ…

  3. முன்னைய தேர்தல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அரசியல் கோலங்களுடன் 2024 ஜனாதிபதி தேர்தல் August 19, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இந்த தடவையே மிகவும் அதிக எண்ணிக்கையில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதுகாலவரையில் ஜனாதிபதி தேர்தல் பிரதான இரு அரசியல் கட்சிகளின் அல்லது அவற்றின் தலைமையிலான கூட்டணிகளின் வேட்பாளர்களுக்கு இடையிலான நேரடிப் போட்டியாகவே இருந்து வந்தது. ஆனால் இந்த தடவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான மும்முனைப் போட்டியாகவே தேர்தல் அமையப்போகிறது. இறுத…

  4. நாட்டின் முக்கிய பகுதி முடிவு 🤔 | Election Survey Hambantota | EP 02 நன்றி - யூரூப் இலங்கை அதிபர் தேர்தலோடு தொடர்புடைய விடயமாக இருப்பதால் இணைத்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

  5. புருஜோத்தமன் தங்கமயில் ஜனாதிபதித் தேர்தல் கால குதிரை ஓட்டம் சூடு பிடித்திருக்கின்றது. தேர்தல் முடியும் வரையில் யார் எந்தப் பக்கம் தாவுவார்கள் என்பதை கண்காணிப்பதே கட்சிகளுக்கு பெரும் தலைவலியாகிவிட்டது. தற்போது அதிகாரத்திலுள்ள ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவை நோக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களின் திரட்சி எதிர்பார்க்கப்பட்ட அளவினைக் காட்டிலும் அதிகளவு நிகழ்ந்து வருகின்றது. ஏற்கனவே, ராஜபக்ஷக்களின் கட்சியான பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலோடு சங்கமித்துவிட்டார்கள். முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் சஜித் பிரேமதாசவோடு இருக்க, பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் ரணில் பக்கம் சென்றுவிட்டார்கள். இவ்வாறான அச்சுறுத்தலை …

  6. ஊடறுப்பில் இலங்கையை இந்தியா கையாளும் விதமும் ஏனைய நாடுகள் கையாளும் விதத்தை பற்றி தெளிவாக பேசுகிறார்.

  7. சங்கும் சிலிண்டரும் - நிலாந்தன் இலங்கைத் தீவின் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய நிலைமைகள் வளர்ந்து வருகின்றனவா? முதலாவது சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி. அவர் காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இலங்கைத் தீவின் தேர்தல் வரலாற்றில் ஒரு ஜனாதிபதி சுயேட்சைச் சின்னத்தில் போட்டியிடுவது இதுதான் முதல் தடவை. உண்மையில் அவர் சுயேச்சை அல்ல. தாமரை மொட்டு கட்சியின் பெரும்பாலான பகுதி அவருக்கு பின் நிற்கின்றது. அப்படிப் பார்த்தால், அவர் தாமரை மொட்டுக்களின் மறைமுக வேட்பாளர்களில் ஒருவர். தாமரை மொட்டுக் கட்சி என்பது யுத்த வெற்றிக்கு பின் எழுச்சி பெற்றது. ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை குடும்பமயப்படுத்தி நிறுவனமயப்படுத்தி கட்டியெழுப…

  8. நம்பிக் கெட்டோம்

  9. Published By: VISHNU 16 AUG, 2024 | 03:46 AM சுஹாசினி ஹைதர் இந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவுக்கு அதன் அயல்நாடுகளில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் ஒன்றுக்குப்பின் ஒன்றாக அதிர்ச்சியை கொடுத்துவருகின்றன. 2021 ஆம் ஆண்டில் மியன்மாரில் சதிப்புரட்சியும் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்களின் ஆட்சியும். 2022 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் பதவி கவிழ்க்கப்பட்டார். இலங்கையில் மக்கள் கிளர்ச்சியினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்டார். அதற்கு பிறகு மாலைதீவு தேர்தலில் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணிவந்த ஜனாதிபதி சோலீ அரசாங்கம் தோற்கடிக்கப்பட்ட அதேவேளை, நேபாளத்திலும்…

  10. பொதுக் கட்டமைப்பும் மூன்று கட்சிகளும்! நிலாந்தன். தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் ஜனாதிபதியையும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்தித்திருக்கின்றன. ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்புச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அழைப்பு விடுத்தார்கள். கட்டமைப்பாக அழைக்கவில்லை. ஆனாலும் கட்டமைப்பில் உள்ள பெரும்பாலானவர்களை அழைத்தார்கள்.ஆனால் பொதுக் கட்டமைப்பாக அழைக்கிறோம் என்று அழைப்பில் குறிப்பிடப்படவில்லை. எதற்காக அழைக்கிறோம் என்றும் இரு தரப்புமே கூறவில்லை. இதில் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் ஏழு பேர்களும் மேற்படி இரண்டு சந்திப்புகளுக்கும் செல்லவில்லை. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நா…

  11. Well done Ranil. ரெலோ புளட் ஜனநாயக போராளிகளை பொதுக்கட்டமைப்பிலிருந்து வெளியேற்று.

  12. 12 AUG, 2024 | 11:09 AM டி.பி.எஸ். ஜெயராஜ் ரணில் விக்கிரமசிங்க முதலில் பிரதமராகவும் பிறகு ஜனாதிபதியாகவும் அதிகாரத்துக்கு வந்த நேரம் தொடக்கம் எதிரிகளும் விமர்சகர்களும் அவரைப்பற்றி பல தவறான கதைகளை கட்டிவிடுவதில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு அஞ்சுகிறார் என்பதும் அவர் வழமைக்கு மாறான நடவடிக்கைகள் மூலமாக தேர்தலைப் ஒத்திவைப்பார் என்பதும் அந்த்கதைகளில் ஒன்று. இந்த போலிக்கதை தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தல் திகதியை வர்த்தமானியில் வெளியிட்டபோது அம்பலமானது. விக்கிரமசிங்கவே ஒரு சுயேச்சை வேட்பாளராக முதலில் தனது கட்டுப்பணத்தையும் செலுத்தினார். இந்த உண்மை முகங்கொடுக்க இயலாத அவரது எதிரிகள் தற்போ…

  13. பொதுவேட்பாளர் கண்டுபிடிப்பு: சிறுவர்களின் குரும்பட்டித்தேர்! August 15, 2024 — கருணாகரன் — தமிழ்ப்பொது வேட்பாளராக(?) ஒருவரை (பா.அரியநேத்திரனை) க் கண்டு பிடித்ததைப் பெருஞ்சாதனையாக தமிழ்ப்பொது வேட்பாளருக்கான(?) பொதுச்சபையினர் அறிவித்து, ஆரவாரப்படுகின்றனர். அரசியல் பெறுமானத்தில் இது நகைப்புக்குரியதாக (கோமாளிதனமாக) இருந்தாலும் அவர்களைப் பொறுத்தவரையில் இது பெரும் சாதனைதான். சிறுவர்கள், குரும்பட்டியில் தேர் செய்வதைப்போல (அது அந்தச் சிறுவர்களுக்கு படு சீரியஸான விடயமாகவே இருக்கும்) விளையாட்டாகத் தொடங்கப்பட்ட “பொதுவேட்பாளர்” விடயம், ஒரு மெய்யான தேராகுவதற்குப் பல சிக்கல்களைக் கொண்டதென்று அவர்கள் எண்ணியிருக்கவில்லை. போகப்போகத்தான் அதனுடைய சிக்கல்களும் சிரமங்கள…

  14. புருஜோத்தமன் தங்கமயில் நீண்ட நெடிய தேடுதல்களுக்குப் பின்னராக தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் (அரியம்) அறிவிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இரு தடவைகள் பதவி வகித்த அவர், தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராவார். யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் கடந்த வியாழக்கிழமை பொதுக் கட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளராக அரியநேத்திரன் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த அறிவிப்பு வெளியானதும், சமூக ஊடகங்களில் யாழ். மையவாதிகளினால் கிழக்கில் இருந்து இன்னொரு பலியாடு களமிறக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்…

  15. முன்னணியால் மட்டும் களத்தில் இறங்க முடிவது எப்படி | EETAMIL சமகால ஈழத்தமிழர் அரசியயோடு தொடர்புடைய கருத்துப் பகிர்வென்பதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

    • 0 replies
    • 637 views
  16. Published By: RAJEEBAN 12 AUG, 2024 | 03:39 PM https://www.scmp.com/ Dimuthu Attanayake தமிழில் ரஜீபன் இலங்கை 2022ம் ஆண்டின் மிகமோசமான நாட்டை முடக்கிய பொருளாதார நெருக்கடியின் பின்னர் முதலாவது தேர்தலை எதிர்கொள்ள தயாராகும்வேளையில் ராஜபக்ச குடும்பம் அதன் அரசியல் வாரிசினை அறிவித்துள்ளது. பல அரசியல் ஆய்வாளர்கள் இதனை அந்த குடும்பத்தின் அரசியல் மறுபிரவேச முயற்சியாக கருதுகின்றனர். இந்த வாரம் ராஜபக்சாக்கள் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன யுத்தகால தலைவர் மகிந்த ராஜபக்சவின் 38 வயது மகன் நாமல் ராஜபக்சவை செப்டம்பர் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தலிற்கான வேட்பாளராக அறிவித்தது. 2022 போராட்டக்காரர்கள்…

  17. நன்றி - யூரூப் சமகால அரசியலோடு தொடர்புடைய உரையாடலாதலால் இணைத்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

    • 5 replies
    • 593 views
  18. மாகாணசபைத் தேர்தல் தனிநபர் பிரேரணையும் தனிநபர்களின் நிகழ்ச்சித் திட்டங்களும் Digital News Team 2017 ஆம் ஆண்டில் மாகாணசபைத் தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கில் ரணில் – சுமந்திரன் கூட்டு முயற்சியில் கொண்டுவரப்பட்ட ‘ மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம்’ ஆகும். இதை இருவரின் கூட்டுமுயற்சி எனக் கூறுவதன் காரணம், இருவருக்கும் அத்தேர்தலை ஒத்திவைக்கவேண்டிய தேவை இருந்ததுடன், நல்லாட்சிக் காலத்தில் சம்பந்தன் தலைமையிலான எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியின் ஒரு அங்கமாகச் செயற்பட்டமையுமாகும். தென்னிலங்கையில் நல்லாட்சியாளர்கள் மீது அதிகரித்து வந்த அதிருப்தியினால் மாகாணசபைத் தேர்தல்கள் தனக்குப் பாதகமாக அமைந்துவிடலாம் என ரணில் தரப்புக்கு ஏற்பட்ட பயம் ஒருபுறமும், மறுபுறத்தி…

    • 0 replies
    • 229 views
  19. ரணிலை தக்கவைக்க போராடும் அமெரிக்கா | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்

    • 0 replies
    • 517 views
  20. பாவம் தமிழ் மக்கள்! August 8, 2024 — கருணாகரன் — “தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தைச் சற்றுக் கிண்டலாக நீங்கள் எழுதி வருகிறீர்கள். அதைப் படிக்கும்போது மனதுக்குக் கொஞ்சம் கஸ்ரமாக உள்ளது. அதுவும் நீங்கள் அப்படி எழுதுகிறீர்கள் எனும்போது இன்னும் வருத்தமாக இருக்கிறது. தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது ஒரு தரப்பினரின் அரசியல் நிலைப்பாடல்லவா! அதைச் சொல்வதற்கு அவர்களுக்கு ஜனநாயக உரிமை உண்டு. அது தொடர்பாக உங்களுக்கு மறு பார்வைகள் இருந்தால், அதை அதற்குரிய ஜனநாயகப் பண்போடு முன்வைக்கலாம். விவாதிக்கலாம். அதுதானே நியாயம். அவ்வாறான விவாதத்துக்குரிய கருத்துகளையும் நியாயங்களையும் எதிர்பார்க்கிறேன். அதை விடுத்து, பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாட்டையும் அதை முன்னெடுப்ப…

  21. பொது வேட்பாளர் வந்து விட்டார் - நிலாந்தன் தமிழ்ப்பொது வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்து விட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக அந்த கேள்வியை முன்வைத்து பல்வேறு விதமாக விமர்சிக்கப்பட்டது. தமிழ் மக்கள் பொதுச்சபையும் கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய பொதுக் கட்டமைப்பினால் ஒரு பொது வேட்பாளரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஒரு மிகப்பெரிய பலவீனமாக உருப்பெருக்கிக் காட்டப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன ? தமிழ் மக்கள் பொதுச்சபை என்று அடக்கப்படும் அமைப்புக்கான முதலாவது கருநிலைச் சந்திப்பு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வவுனியாவில் இடம் பெற்றது. அதன் பின் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஜூன் மாதம் 2…

  22. மும்முனைப் போட்டியா? நான்கு முனைப் போட்டி? – நிலாந்தன். ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களின் பொது வேட்பாளராகக் களம் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ராஜபக்சக்களின் வேட்பாளராக களமிறங்குவதை விடவும் ராஜபக்சக்களின் ஆட்களுக்கு தான் தலைமை தாங்குவது என்று முடிவெடுத்து விட்டது போல் தெரிகிறது.ரணில் ராஜபக்சக்களின் கட்சியைச் சாப்பிடத் தொடங்கி விட்டார். கட்சியைக் காப்பாற்றவும் ரணிலுடன் தமது பேரத்தைப் பலப்படுத்தவும் இளைய ராஜபக்சவாகிய நாமல் களமிறக்கப்படுகிறாரா? அவர் இக்கட்டுரை எழுதப்படும் வரையிலும் கட்டுப் பணம் செலுத்திதியிருக்கவில்லை. ராஜபக்சக்களின் வேட்பாளராக களம் இறங்கினால் தனக்கு பின்வரும் பிரதிகூலங்கள் உண்டு என்பது ரணிலுக்கு நன்றி தெரியும். முதலாவத…

  23. பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தல் களத்தில் முதல் தடவையாக 1999ம் ஆண்டு போட்டியிட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கையிலிருந்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். பொருளாதார ரீதியில் இலங்கை வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில், நாட்டை இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க, பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை ஓரளவு மீட்டு இயல்பு நிலைக்கு திருப்பியுள்ளார். இவ்வாறான பின்னண…

  24. மோடி பாணியில் பயணித்த லேடி ஷேக் ஹசீனா! -ச.அருணாசலம் மக்கள் புரட்சிக்கு முன்பு ராணுவம் மண்டியிட்டது. இரும்பு பெண்மணி என்று இறுமாந்திருந்த பங்களா தேச பிரதமர் ஷேக் ஹசீனா மக்கள் சக்திக்கு முன்பு வெறும் துரும்பானார். மோடி பாணியை அப்படியே காப்பியடித்த ஹசீனா உயிருக்கு பயந்து இந்தியாவில் அடைக்கலம். வங்க தேசத்தில் என்ன நடக்கிறது..? ஷேக் ஹசீனாவின் மக்கள் விரோத சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் கிளர்ந்து எழுந்தனர். மாணவர் போராட்டத்தை ஒடுக்க ஷேக் ஹசினா உத்திரவின் பேரில் காவல் துறையினர் தடியடி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுத்து சோர்ந்தனர். இதன் காரணமாக வங்கதேசம் முழுவதும் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.