அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
42 ஆண்டுகளாகக் கற்றுக்கொள்ளாத ஒரு தீவு – நிலாந்தன். முதலாவதாக 83 ஜூலை ஒர் இனக்கலவரம் அல்ல. இனக்கலவரம் என்றால் பரஸ்பரம் மோதிக்கொள்ள வேண்டும். அது இன அழிப்பு.நிராயுத பாணிகளாக இருந்த கொழும்பில் வசித்த தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட ஒரு தாக்குதல். அது திட்டமிடப்பட்டது என்பது முதலாவது. பின்னணியில் அரசு தரப்பைச் சேர்ந்த பிரமுகர்கள் இருந்தார்கள் என்பது இரண்டாவது. எனவே அது தன்னெழுச்சியாக தோன்றவில்லை. அதற்குப்பின் திட்டமிட்டு ஒரு தரப்பு உழைத்தது. தமிழ் மக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற ஒர் உள்நோக்கம் அங்கே இருந்தது. அதோடு தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி காரணமாக தூண்டப்பட்ட பொறாமையை தீர்த்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் தேவைப்பட்டது. இவ்வாறு எல்லாக் காரணிகளும்…
-
- 1 reply
- 337 views
-
-
தமிழர் அரசியலில், மூலோபாய கூட்டு ஒன்றின் தேவை?- யதீந்திரா இந்தியாவின் வெளியுறவுச் செயலர் தமிழ் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பில் வலியுறுத்தியிருந்தார். ஆகக் குறைந்தது 13வது திருத்தச்சட்டத்திலாவது, தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகின்றது. நீங்கள் சில அப்படையான விடயங்களில் ஒன்றுபடாவிட்டால், இந்தியாவினால் பெரிதாக எதனையும் செய்ய முடியாது என்பதுதான் இதன் பொருள். இந்திய வெளியுறவுச் செயலரின் விஜயத்தை தொடர்ந்து, மாகாண சபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் தேர்தலை வைப்பது தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்துவருவதாக கூறப்படுகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவைய…
-
- 1 reply
- 337 views
-
-
ஒரு பண்பாட்டுச் சிதைவுக்கு துணைபோகக் கூடாது - கருணாகரன் விடுதலைப்புலிகள் இல்லாத சூழலில், போர் முடிந்து ஏழு ஆண்டுகளின் பின்னர், கடந்த மாதம் 27 ஆம் திகதி நிகழ்ந்திருக்கும் மாவீரர் நாள் நிகழ்வு, அது முடிந்து ஒரு மாதம் கடந்துவிட்டபோதிலும், அந்த நிகழ்வின் அரசியல் பரிமாணம் மிகவும் விசாலமாகக் காணப்படுகின்றது. அந்த நிகழ்வையொட்டி, தமிழ் மக்களிடத்தில், குறிப்பாக மாவீரர் குடும்பங்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் உணர்நிலைகளும் அபிப்பிராயங்களும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் உண்டாக்கியுள்ளது. இந்தக் கட்டுரை அவற்றைப் பற்றிய கவனத்தையே ஈர்க்கிறது. மாவீரர்நாள் கொண்டாட்டங்கள் எத…
-
- 0 replies
- 337 views
-
-
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்புடன் பேணுவதில் இனப்படுகொலை சார்ந்த வாதப்பிரதிவாதங்கள் முதன்மையாக அமைந்துள்ளது. அந்த அடிப்படையில் 2009 களுக்கு பின்னர் மே மாதம் வடக்கு – கிழக்கு தாயக நிலப்பரப்பில் மாத்திரமன்றி, ஈழத் தமிழர்கள் பரந்து வாழும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழினப் படுகொலையை மையப்படுத்திய நிகழ்வுகளும், நினைவேந்தல்களும், நினைவு உரைகளும் நிலையான தன்மையை பெற்றுள்ளது. 2025 ஆம் ஆண்டு 16 வது ஆண்டு தமிழினப்படுகொலை நினைவேந்தல்கள் ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக அண்மைய ஆண்டுகளில் இறுதி யுத்தத்தின் துயரை நினைவூட்டும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு’ தமிழினப் படுகொலை நினைவேந்தலின் முக்கிய நிகழ்வாக நிலைபெற்று விட்…
-
- 0 replies
- 337 views
- 1 follower
-
-
ஃபிடல் காஸ்ட்ரோ: வரலாற்றின் விடுதலை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ வரலாற்றின் வழித்தடத்தில் தவிர்க்கவியலாத தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் வெகுசிலரே. அதிலும் வரலாற்றின் திசைவழியை மாற்றியவர்கள் மதிக்கத்தக்கவர்கள் மட்டுமன்றி மாண்புடையோருமாவர். உலகில் ஒடுக்கப்படும் மக்களுக்கான அயராத குரல்கள் எப்போதும் மெச்சத்தக்கன. அவ்வாறான குரல்கள் உலகெங்கும் போராடுவோருக்கு முன்உதாரணமாக, உந்துசக்தியாக இருக்கும். உலகை நேசித்த அக்குரல்கள் காலம்கடந்தும் நிலைக்கும். வரலாறு அவ்வாறான குரல்களை விடுதலை செய்யும். தனது 90 ஆவது வயதில் கியூபப் புரட்சியின் தலைமைத் தளபதியும் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக கியூபாவைத் தலைமையேற்று வழிநடாத்திய…
-
- 0 replies
- 337 views
-
-
இனத் தேசிய அரசியலும் ‘பயன்தரு கடந்த காலமும்’ என்.கே அஷோக்பரன் அரசியலில், வரலாறு என்பது நாடுகள் மற்றும் சமூகங்களின் சித்தாந்தங்கள், அடையாளங்கள் மற்றும் அபிலாஷைகளை வடிவமைக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக செயல்படுகிறது. ‘பயன்தரு கடந்த காலம்’ என்ற கருத்து, குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்கு, பெரும்பாலும் இன-மத தேசியவாத அரசியலுக்காக, வரலாற்றுக் கதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட வியாக்கியானம் மற்றும் கையாளுதலைக் குறிக்கிறது. வரலாற்றிற்கான இந்த அணுகுமுறை சமூகத்தை ஒன்றுபடுத்தவும் வல்லது, பிரிக்கவும் வல்லது. ஏனென்றால், ‘பயன்தரு கடந்த காலம்’ ஒன்று சமகால அரசியலினால் கட்டமைக்கப்படும் போது, அது சமகால சமூகம் சமகாலப் பிரச்சினைகளை குறித்த பயன்தரு கடந்த காலக்…
-
- 0 replies
- 337 views
-
-
ஹலாயிப் முக்கோணம்: யாருடைய கதியால்? யாருடைய வேலி? வேலிச்சண்டைகளுக்கு நம்மூர் பெயர்போனது. வீட்டுக்கோடியின் எல்லைக்கு உரிமை கொண்டாடி, கதியாலைத் தள்ளிப் போட்டு, பூவரசம் தடிகளை எட்டி நட்டு, நடந்த சண்டைக்கு உரியோர் கடல்கடந்து நாட்கள் பல ஆச்சு. ஆனால், வேலிச்சண்டைகளுக்கு முடிவில்லை. இது உலக அரசியலுக்கும் பொருந்தும். எல்லைத் தகராறுகள் எப்போதுமே இக்கட்டானவை. அவை, நாடுகளிடையே நடக்கும் போது, அதன் தீவிரம் மிக அதிகம். உலகின் ஏராளமான போர்கள், தீர்க்கக்கூடிய எல்லைப் பிரச்சினைகளால் மூண்டவை. சில எல்லைப் பிரச்சினைகளுக்கு, நூற்றாண்டு காலப் பழைமையும் பெருமையும் உண்டு. கடந்தவாரம், “எங்களுக்குச் சொந்தமான நிலப்…
-
- 0 replies
- 337 views
-
-
Published By: RAJEEBAN 23 SEP, 2024 | 11:56 AM எரிக்சொல்ஹெய்ம் இடதுசாரி அனுரகுமார திசநாயக்க வார இறுதியில் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாரம்பரிய உயர்குழாமிற்கு வெளியே ஒருவரை இலங்கை மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்வது சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில் இதுவே முதல் தடவை. ஏகேடி என அழைக்கப்படும் திசநாயக்க அனுராதபுரத்தில் மிகவும் சாதாரண குடும்ப பின்னணியை கொண்டவர். அவரது கட்சியோ அல்லது கூட்டணியோ கடந்த காலத்தில் ஆட்சிக்கு அருகில் இருந்ததில்லை. பொருளாதார நெருக்கடியின் போது வறிய ஏழ்மையான நிலையில் உள்ள இலங்கையர்கள் அனுபவித்த வலிக்கு இந்த தேர்தல் முடிவு ஒரு சான்று. …
-
- 1 reply
- 337 views
- 1 follower
-
-
பிணைமுறி விவகாரம்: தண்டிக்கப்படுவாரா மகேந்திரன்? நல்லாட்சி அரசாங்கத்திலேயே நல்லாட்சி இல்லை என்றும் ஊழலை ஒழிப்பதைத் தமது பிரதான பணிகளில் ஒன்றெனக் கூறிப் பதவிக்கு வந்த அரசாங்கம், பதவிக்கு வந்து ஒரு மாதத்திலேயே வரலாற்றில் மிகப் பெரும் ஊழல்களில் ஒன்று நாட்டில் இடம் பெற்றிருக்கிறது என்று எதிர்க்கட்சி குற்றம்சாட்டும் அளவுக்கு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது நல்லாட்சியின் பெயரால் பதவிக்கு வந்தவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைமையாகும். கடந்த வெள்ளிக்கிழமை ‘கோப்’ என்றழைக்கப்படும் நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துந்நெத்தி நாடாளுமன்றத்தில் சமர…
-
- 0 replies
- 337 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மேற்கொண்ட தவறான பொருளாதார மேலாண்மைத் தீர்மானங்களே காரணம் என இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் மேல் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? பட ம…
-
- 0 replies
- 337 views
- 1 follower
-
-
யூலைக் கலவரமும் தீர்வின்றி தொடரும் தமிழ் மக்கள் கோரிக்கையும்! இற்றைக்கு 34 வருடங்களுக்கு முன்னர் தீவிரம் பெற்ற தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டமும், அதன் கோரிக்கைகளும் இன்றும் தீர்க்கப்படாத நிலையிலேயே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் புதிய குடியேற்றங்களின் மூலமாகவும் இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமாகவும் முன்பை விடவும் மோசமான நிலைக்கு சென்றிருக்கின்றது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழ் தேசிய இனம் தனது உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1920 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மனிங் அரசியல் யாப்பு சீர்திருத்தம் ச…
-
- 0 replies
- 337 views
-
-
மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்க வெளியேற்றம்: ‘இருந்தென்ன போயென்ன’ உலக அரசியல் அரங்கில், ‘மனித உரிமை’ என்ற சொல்லாடல், பல பொருள்கோடல்களுக்கு உள்ளாகியுள்ளது. மனித உரிமைக்கான வரைவிலக்கணங்கள் ஒருபுறம் இருந்தாலும். மீறப்படுவது யாருடைய உரிமைகள் என்பதும், மீறுவது யார் என்பதுமே, மீறப்படுவது மனித உரிமைகளா இல்லையா என்பதைத் தீர்மானிக்கின்றன. மனித உரிமையின் அரசியல், அதிகம் பேசப்படாத விடயமாக உள்ளது. குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபை, தனக்கான மனித உரிமைப் பேரவையை நிறுவியது முதல், மனித உரிமையின் உலகளாவிய அரசியலைப் பொது வெளிக்குக் கொணர்ந்துள்ளது. ஆனாலும், மனித உரிமைகள் இன்னமும் எல்லோருக்கும் …
-
- 0 replies
- 337 views
-
-
அடுத்து என்ன செய்யப் போகிறார் இலங்கை ஜனாதிபதி சிறிசேன? பகிர்க படத்தின் காப்புரிமைISHARA S. KODIKARA இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படுகின்ற கடுமையான விமர்சனங்கள் குறித்து கோபமடைந்திருக்கும் நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவம் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளிடையே கூர்மையடைந்து வருகின்ற முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. அமைச்சரவைக்கு தலைமை தாங்குகிற ஜனாதிபதி வெளியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களை ஆட்சேபித்து கூட்டத்தில் இ…
-
- 0 replies
- 337 views
-
-
கட்டியிருக்கும் கோவணமும் களவாடப்படும்-பா.உதயன் அதிகாரம், அடக்குமுறை, நாடுகளுக்கு இடையிலான அதிகார ஏகாதிபத்திய அரசியல் பொருளாதார சுயநலன்களுக்கு இடையிலான போட்டிகள் இவை தவிர இயற்கை அழிவுகளாலும் நோய் நொடிகளாலும் இந்த உலகு பல அழிவுகளை சந்தித்து வருகின்றது. பல கோடி மக்கள் இதனால் இறந்திருக்கிறார்கள் இன்னும் இறந்து கொண்டே இருக்கிறார்கள். மனிதத் தவறுகளினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் இந்த உலகு மிகக் கொடிய மனித அவலங்களை சந்தித்து வருகின்றது. தர்மமும் நீதியும் சார்ந்து இந்த உலகம் சுழலுவதில்லை. மனித அவலம் மனிதக் கொடுமைகள் நடந்த பொழுதெல்லாம் பலர் கண்ணை மூடி இறந்தவர்கள் போல் தங்கள் சுய நலன் கருதி பார்த்துக் கொண்டிருந்தார்கள் பல ஜனநாயகத்தின் காவலர்கள். எங்கு தான் என்ன மனித அ…
-
- 0 replies
- 337 views
-
-
கானல் நீராகியிருக்கும் கூட்டமைப்பின் நம்பிக்கை மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பார்கள். அதுபோல, உள்ளூராட்சி தேர்தல் முடிந்த பின்னரும், தேர்தல் காலத்து, எதிரணிகள் மீதான கருத்து பரப்புரைகள் இன்னும் முடிவடையவில்லை. கட்சி அரசியலை முதன்மைப்படுத்தும் போக்கில் தமிழ் அரசியல்வாதிகள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றார்கள். உள்ளூராட்சி சபைகளுக்குரிய பிரச்சினைகளிலும் பார்க்க, தேசிய மட்டத்திலான பிரச்சினைகளுக்கே இந்தத் தேர்தலில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், இந்த கலப்பு தேர்தல் முறையில் முன்னிலை பெற்றிருந்த கட்சிகளை முதன்மைப்படுத்தும் போக்கில் இருந்து கட்சித் தலை…
-
- 0 replies
- 337 views
-
-
அரசியலை அதிரச் செய்யும் 20 மில்லியன் ரூபாய் “இருபது மில்லியன் ரூபாய் விவகாரம்” இப்போது அரசியலில் பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயமாக, மாறியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் உள்ள தேசிய திட்டமிடல், பொருளாதார விவகார அமைச்சின் ஊடாக, தலா 20 மில்லியன் ரூபாய் நிதி இலஞ்சமாக வழங்கப்பட்டது என்று, ஈ.பி.ஆர்.எல்.எவ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியிருந்த குற்றச்சாட்டே இதன் அடிப்படை. வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக இந்தச் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது அவரது குற்றச்சாட்டு. அண்மையில், …
-
- 0 replies
- 336 views
-
-
நவம்பர் -02 உள்ளிட்ட போராட்டங்கள் எதற்காக? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan வரலாறு காணாத மக்கள் எழுச்சியை இலங்கை சந்தித்து, அதன் வாயிலாக, 2019 நவம்பரில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ, வெறும் இரண்டரை ஆண்டு பதவிக்காலத்துக்குள் பதவி விலகியமை, பெரும் வரலாற்று நிகழ்வு. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. இந்த மக்கள் எழுச்சிக்கான காரணம், இலங்கை சந்தித்து நின்ற வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவாக மக்களால் தம் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலை உருவானதுமாகும். எரிபொருள் பற்றாக்குறை; அதன் விளைவாக மின்சாரத் தடைகள் எனபன, இலங்கையை ஸ்தம்பிக்கச் செய்திருந்தன. எதிர்காலம் பற்றிய அச்சம் ஒருபுறமும் நிகழ…
-
- 1 reply
- 336 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்களின் வெளியுறவுச் செயற்பாடுகள்! நிலாந்தன். அண்மையில் ஒஸ்ரேலியாவைச் சேர்ந்த சில தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் அமெரிக்காவைச் சேர்ந்த சில செயற்பாட்டாளர்களும் இணைந்து புதுடில்லியில் சில சந்திப்புகளை ஒழுங்குபடுத்தினார்கள்.அச்சந்திப்பிற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலரின் அனுசரணையைப் பெற்றுக் கொண்டார்கள். அச்சந்திப்புகளில் தாயகத்திலிருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு ஆதீனத் தலைவரும் பங்கு பற்றினார்கள்.காவியுடை அணிந்த ஒரு ஆதீன முதல்வரைக் குழுவுக்குள் உள்ளடக்கியதன்மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை மேலும் நெருங்கலாம்,அதன் மூலம் இந்தியாவின் ஆளுங்கட்சியாகிய பாரதிய ஜனதா கட்சியின் முடிவுகளில் தாக்…
-
- 0 replies
- 336 views
-
-
இயக்கங்களின் அன்றைய இயலுமையும் இன்றைய இயலாமையும் ? - யதீந்திரா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் (ஈ.பி.ஆர்.எல்.எப்) அவர்களது, தலைவர் பத்மநாபா கொலைசெய்யப்பட்ட தினத்தை, தியாகிகள் தினமாக நினைவு கூர்ந்துவருகின்றனர். அண்மையில் 31வது தியாகிகள் தினம் நினைவு கூரப்பட்டது. நிகழ்வில் பேசுமாறு, பத்மநாபா அபிவிருத்தி ஒன்றியம் என்னும் பெயரில் இயங்கிவரும் ஒரு பிரிவினர், என்னை அழைத்திருந்தனர். இதன் போது நான் பகிர்ந்துகொண்ட சில விடயங்களையே – இங்கு கட்டுரையாக்கியிருக்கின்றேன். இதிலுள்ள கவலைக்குரிய விடயம் என்னவென்றால், தங்களின் தலைவருக்கான நினைவு தினத்தைக் கூட, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரால், கருத்தொருமித்து, ஒருங்க…
-
- 0 replies
- 336 views
-
-
ராஜீவ் காந்தி படுகொலைக் கைதிகள் ஆறுபேரின் விடுதலையின் பின்னால் அரசியல் இல்லை- சட்டம் தன் வழி சென்றிருக்கிறது வடக்குக் கிழக்கு இணைந்த அரசியல் தீர்வை இந்தியா பெற்றுத் தரும் என்பதற்கான சமிக்ஞையுமல்ல பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட அன்றைய தினமே நளினி உள்ளிட்ட ஏனைய ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையில் இந்திய உயர் நீதிமன்றத்தினால் வெள்ளிக்கிழமை ஆறுபேரும் விடுதலை செய்யப்பட்ட பின்னணியில் எந்தவொரு அரசியலும் இல்லை என்பது பகிரங்கம். இந்த விடுதலைக்கு மோடி அரசாங்கமோ, தமிழகத்தில் தி.மு.க.அரசாங்கமோ உரிமை கோரவும் முடியாது முப்பது ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தைச் செயல்பாடுகள் ஆகிய…
-
- 0 replies
- 336 views
-
-
“சேர்ந்து இயங்க வேண்டிய நேரம் ; காலம்” ? - நிலாந்தன் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் கிடைத்த பின் முல்லைத்தீவில் இருந்து ஒரு தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர் முகநூலில் பின்வருமாறு எழுதினார்… “முல்லைத்தீவு ரவிகரனோடு, கிளிநொச்சி சிறீயரோடு” என்று. அதற்கு கிளிநொச்சியைச் சேர்ந்தவரும் முன்பு பிரதேச சபை உறுப்பினராக இருந்தவரும், இப்பொழுது சுமந்திரனின் தீவிர விசுவாசியுமான ஒருவர் பதில் எழுதினார் “யாழ்ப்பாணம் சுமந்திரனோடு” என்று. இது ஒரு சமூக வலைத்தளக் காட்சி. இரண்டாவது காட்சி, தேர்தல் வெற்றிகள் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுமந்திரன், “தமிழரசுக் கட்சி பலவீனமடையவில்லை. தமிழ்த் தேசியக் கூடடமைப்பாக சேர்ந்து இருந்ததைவிட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கிறது” என்று கூறிய…
-
- 1 reply
- 336 views
-
-
வரவு செலவுத் திட்டம் 2022: கட்டியிருந்த கந்தையும் காணாமல் போதல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் கடந்த இரண்டு தசாப்தகால வரவு செலவுத் திட்ட அனுபவங்கள் உணர்த்துகின்ற செய்தியொன்று உண்டு. உள்ளே எதுவுமற்ற ஒன்றை, அழகாக நிறந்தீட்டிக் காட்சிப்படுத்துவதற்கு அப்பால், எதையும் செய்யும் திறனற்றவை, அந்த வரவு செலவுத் திட்டங்கள் என்பதே அச்செய்தி. ஆனால், ஒவ்வொரு முறையும் வரவு செலவுத் திட்டத்தின் மீது, ஒரு நம்பிக்கையிருக்கும்; சில எதிர்பார்ப்புகள் இருக்கும். சாதாரண மக்களுக்கான சில திட்டங்கள் ஆறுதல் அளிக்கும். இம்முறை, சில அதிவிஷேசங்களோடு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அவை, இலங்கையின் பொருளாதார அடிப்படையின் குறைகளின் பாற்பட்டவை. இலங்கையின் பொர…
-
- 1 reply
- 336 views
-
-
இம்முறையும் தப்பிப் பிழைப்பாரா விமல்? இது தேர்தல் காலம். இச்சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காகப் பலமாக ஒலிக்க வேண்டிய ஒரு குரல், மௌனித்து இருப்பது முக்கியமானதொரு விடயமாகத் தெரிகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், சில காலமாக அடங்கிக் கிடந்த மஹிந்வை, உசுப்பேற்றி, மீண்டும் களத்துக்கு இழுப்பதில் சூத்திரதாரியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, தமது குருவும் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, முக்கியமான தேர்தலுக்கு முகம் கொடுக்கத் தயாராகி வரும் நிலையில், அசாதாரணமாக மௌனம் காக்கிறார்;அல்லது குரலைத் தாழ்த்திப் பேசுகிறார். காரணம், நாடு அறிந்ததே. அவரது கட்சியான தேசிய சுதந்திர முன்ன…
-
- 0 replies
- 336 views
-
-
உத்தேச அரசியலமைப்பை கண்டு அச்சப்படும் பௌத்த தேசியம் http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-22#page-7
-
- 0 replies
- 336 views
-
-
எட்டிப்பார்த்தது புதிய கட்சி ரொபட் அன்டனி நாட்டின் அரசியல் களமானது தொடர்ச்சியாக சூடுபிடித்துக் கொண்டே போகிறது. என்றும் இல்லாதவாறு அரசியல் காய்நகர்த்தல்கள் அதிகரித்துச் செல்கின்றன. விசேடமாக மஹிந்த அணியினரின் புதிய கட்சி விவகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மிகவும் பரபரப்பாக முடுக்கிவிட்டுள்ளமை உள்ளிட்ட நகர்வுகளை காணமுடிகிறது. மஹிந்த அணியினர் கடந்த 20 மாதங்களாகவே புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பான சமிக்ஞைகளை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது மஹிந்த அணியின் முக்கியஸ்தரான முன்னாள் வெ ளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் புதுக்கட்சியை ஆரம்பித்திருக்கிறார். அதாவது எமது ஸ்ரீ லங்கா சுதந்திர முன்னணி என்று …
-
- 0 replies
- 336 views
-