Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழர் அரசியலில் தேவையற்ற முரண்பாடுகளை வளர்க்க முற்படுகின்றனவா சில சக்திகள்? - யதீந்திரா படம் | rightsnow அமெரிக்காவின் மூன்றாவது பிரேரனை தொடர்பில் பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழலில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பிறிதொரு விவாதத்தை தொடக்கி வைத்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப்புலிகளின் வவுனியா, பின்னர் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளராக இயங்கிவந்த எழிலன் என்னும் புனைப்பெயருடைய வேலாயுதம் சசிதரனின் மனைவியான அனந்தி, வடக்கு மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளை பெற்ற ஒருவர். நீதிபதி விக்னேஸ்வரனிலும் பார்க்க அனந்தி அதிக விருப்பு வாக்குகளை பெறுவார் என்றே அப்போது எதிர்பார்…

    • 2 replies
    • 723 views
  2. வார்த்தை ஜாலங்களால் ஒரு அரசியல் விளையாட்டு! இன்னும் எத்தினை காலத்துக்கு இந்த சித்து விளையாட்டை அனுமதிப்பார் தமிழர்? [Tuesday, 2014-03-18 20:04:34] மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தைப்புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நீதி கோரி அடுத்த மாதம் 12ம் திகதி (12.03.2014 அன்று) மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக கடந்த 12.02.2014 அன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அறிவித்திருந்தார். ஏன்? எதற்கு? மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தைப்புதைகுழி விவகாரம், உள்நாட்டு யுத்தத்தினால் உயிர…

  3. 2009ம் ஆண்டுமுதல் 2013ம் ஆண்டுவரை உலகத்திற்கு அதிகளவு ஆயுதங்கள் வழங்கி முன்னணியில் நிற்கும் நாடுகளின் வரிசை. அமெரிக்கா 29 % ருசியா 27 % யேர்மனி 07 % சீனா 06 % பிரான்சு 05 % ஆதாரம்; Ludwigsburger Zeitung பாத்திரமறிந்து பிச்சைபோடு என்றொரு பழமொழி தமிழில் இருப்பது இவர்களுக்குத் தெரியுமா?????

    • 2 replies
    • 819 views
  4. இவ்வாண்டு இடம்பெற்றுள்ள மிலான் பயிற்சி நடவடிக்கையானது கிழக்காபிரிக்கா தொடக்கம் மேற்கு பசுபிக் வரை விரிவுபடுத்தப்பட்டமையானது இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா தனது செல்வாக்கை விரிவுபடுத்துகின்றது என்பதைச் சுட்டிநிற்கிறது. இவ்வாறு அவுஸ்திரேலியாவின் சிட்ணியை தளமாகக் கொண்ட The Interpreter* இணையத்தளத்தில் Dr David Brewster** எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்கா, மாலைதீவு மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து இந்திய மாக்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தொடர்பில் மேற்கொண்ட முக்கூட்டு நடவடிக்கையுடன் இந்திய மாக்கடலிலுள்ள தீவுளான செச்செல்ஸ் மற்றும் மொறிசியஸ் போன்றன இணைந்துள்ளதாக மார…

  5. ஜெனிவாத் தீர்மானத்தின் முதல் வரைவும் தமிழர்களும் - நிலாந்தன்:- 16 மார்ச் 2014 உத்தேச ஜெனிவாத் தீர்மானத்தின் முதல் வரைவு வெளிவந்துவிட்டது. அது தொடர்பான பிரதிபலிப்புக்களை உற்று நோக்கின் ஒரு முக்கியமான போக்கினை அடையாளங்காண முடியும். தமிழர்கள், சிங்களவர்கள் ஆகிய இரண்டு தரப்புமே அதை எதிர்க்கின்றன. சிங்கள மக்கள் அதை மேற்கின் மிரட்டல் என்று எதிர்க்கிறார்கள். தமிழர்களோ தாங்கள் நம்ப வைக்கப்பட்டு ஏமாற்றுப்பட்டுவிட்டதாக கருதி எதிர்க்கிறார்கள். குறிப்பாக, டயஸ்பொறாவிலும் தமிழகத்திலும் நடந்து கொண்டிருப்பவற்றின் அடிப்படையிற் கூறின் இம்முறை ஜெனிவாத் தீர்மான வரைவுக்கு எதிரான பிரதிபலிப்புக்கள் ஒப்பீட்டளவில் தமிழ்ப் பரப்பில்தான் அதிகமாகக் காணப்படுகின்றன எனலாம். ஒன்றில் அமெர…

  6. இலங்கை ராணுவத்தின் தந்திரங்கள் நிறைந்த மன்னார் புதைகுழி ! [Tuesday, 2014-03-11 21:14:45] படுகொலைகளின் நிலங்களாக இலங்கை இருந்து வருகிறது என்பதற்கு சமீபகால சான்று மனித புதைகுழிகள். இதுவரை மன்னார்,திருகோணமலை,முல்லைத்தீவு, மாத்தளை (சிங்களப் பகுதி)' என பல இடங்களில் மனித புதைகுழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த புதைகுழிகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இத்தனை நாள் சொல்லி வந்த இலங்கை அரசும் ராணுவமும், ஐ.நா.மனித உரிமை ஆணையக் கூட்டத் தொடர் நெருங்கியதிலிருந்து 'இந்த புதைகுழிகள் புலிகளால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள்' என பிரச்சாரம் செய்து வருகிறது. அவ்வாறாக கடந்த வாரத்தில் கொழும்பு-பி.டி.ஐ. , 'மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட புதைகுழி புலிகள் வலுவாக நிலைக்கொண…

  7. ஆண்டு 2001 தமிழர் தேசத்திற்கெதிரான அனைத்துலக திட்டமாக முக்கியமான நான்கு திட்டங்களை வரைவு செய்கிறது அமெரிக்கா. 1. புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்த்தேசிய செயல்பாடுகளை முடக்குதல் 2. புலிகளின் அனைத்துலக ஆயுத மற்றும் அரசியல் கட்டமைப்புக்களை உடைத்தல் 3. ஈழத்தில் புலிகளை மக்களிடம் இருந்து வேறுபடுத்துதல் 4. இறுதியாக புலிகளை படைகளை அழித்தொழிப்பு செய்தல் இந்த திட்டத்திற்கு பெயர்தான் “ஆபரேஷன் பெக்கன்” முதலில் அவர்கள் செய்த வேலை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களில் புலிகள் அமைப்பை தடை செய்தது... நிதி ஆதாரத்தை முடக்கியது... தெற்காசிய பிராந்தியத்தில் குறிப்பாக திரிகோணமலையில் தனது இராணுவ தளத்தை அமைக்கவேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்ட நாள் கனவு. இதன் மூலம் தெற்காசியா…

  8. தமிழக எழுத்தாளர்களும் ஈழத்தமிழர் இனப்பிரச்சினையும் – மு.பொ ‘இப்போது மட்டுமல்ல ஈழத்தில் இன அழிப்பு நடந்தபோதும் பல எழுத்தாளர்கள் கள்ளமௌனம் சாதித்தார்கள். மிகச்சிலரைத் தவிர பெரும்பான்மையோர் அருவருப்பான அமைதியைக் கடைப்பிடித்தனர். எழுத்தாளர்கள் என்போர் மொழியைக் கொண்டு பிழைக்கின்றார்கள். அவர்கள் தான் முதலில் வினையாற்றியிருக்க வேண்டும்.’ இவ்வாறு தமிழக எழுத்தாளர்கள் பற்றிக் கூறியிருக்கிறார். பிரபல ஓவியர் மருது, ஆனந்த விகடனில் (30-10-13) பாரதி நம்பிக்கு அளித்த செவ்வியின் போது. மேற்கண்ட பேட்டியைப் படித்தபோது, கனகாலமாக என் மனதை அரித்துக் கொண்டு கிடந்த, ‘தமிழக எழுத்தாளர்களும் ஈழத்தமிழர் இனப் பிரச்சினையும்’ என்ற கட்டுரையை எழுதி வெளிக் கொணர வேண்டுமென்ற உந்துதல் பெற்…

  9. இனக்கொலையாளி ராஜபக்சவின் புலம்பெயர் உளவாளிகள் யார்?: சபா நாவலன் காலனியத்தின் இறுதிக்காலப்பகுதியில் பிரித்தானிய ஆட்சியாளர்களால் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத அடையாளம் நந்திக்கடலில் இரத்தமும் சதையுமாக மிதந்ததைக் கண்டிருக்கிறோம். எண்ணுக்கணக்கற்ற அப்பாவி உயிர்களை விரல் எண்ணிக்கையில் அடங்கிவிடும் நாட்களில் பறிகொடுத்த எந்தக் குற்ற உணர்ச்சியும் இன்றி அதே முகங்கள் அதே கோர வெறியோடு அரசியல் காய்களை நகர்த்துகிறார்கள். தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளவோ அவற்றைத் தயவின்றி விமர்சித்து புதிய அரசியலை முன்வைக்கவோ கோரமாகக் கேட்கும் எந்த அரசியல் குரல்களுக்கும் தன்னம்பிக்கை இல்லை. ஆண்ட பரம்பரையின் புகழையே பேசிப் பழக்கப்பட்டுப்போன பாழடைந்த பழமைவாத சமூகத்தையும…

  10. தமிழர்கள் உக்ரெய்ன் நெருக்கடியிலிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை - நிலாந்தன்:- 09 மார்ச் 2014 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த ஓர் உரையாடல் இது. அப்பொழுது கிளிநொச்சி நகரம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ்தானிருந்தது. அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளருமான ஒரு நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்தேன். அந்நாட்களில் அனைத்துலக அரசியலில் பேசுபொருளாக மாறியிருந்த ரஷ்ய-ஜோர்ஜிய நெருக்கடி பற்றிய உரையாடல் அது. ரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றி ரஷ்யா ஜோர்ஜியா மீது பலப்பிரயோகத்தை மேற்கொண்டிருப்பது பற்றி உரையாடினோம். உரையாடலின் போக்கில் ஒரு கட்டத்தில் நான் சொன்னேன் ''ஜோர்ஜிய அரசாங்கம் தூரத்தில் இருக்கும் அமெரிக்கப் பேரரசை நம்பி பக்கத்தில் இருக்கும் பிரா…

  11. இந்திய ஆன்மாவும் ஏழுபேர் விடுதலையும் பா.செயப்பிரகாசம் மூன்று தமிழருக்கு வாய்ப்பான ஒரு தீர்ப்பை 18.02.2004 அன்று உச்சநீதிமன்றம் நல்கியிருக்கிறது. மூன்று தமிழர் மட்டுமல்ல, உலகத்தமிழினம் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டிய தீர்ப்பு. உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்துள்ளது. அப்போதும் மூவரும் குற்றவாளிகள் அல்ல என்று சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் தலையீடு செய்ய நினைத்தது அந்த விசயத்தில் அல்ல. கருணை மனுவைப் பரிசீலிப்பதில் அநாவசியமான காலதாமதம் செய்யப்பட்டதைக் காரணமாக்கி தண்டனையைக் குறைத்தது. ('நீண்ட காலதாமதம் ஏற்பட்டால் மரண தண்டனையைக் குறைக்கலாம் என்கிற உச்சநீதிமன்றத்தின் கருத்து பிரச்சினையானது தான். அந்தக் கருத்து சரியானதா என்பதை நாம் ஆராய…

    • 1 reply
    • 745 views
  12. வண. சோபித தேரர் -விரிவான நேர்காணலும் எழுந்துள்ள ஆதரவு/ எதிர் கருத்துகளும்……நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?? வண. சோபித தேரர் அவர்கள் கடந்த வாரம் தினக்குரல் பத்திரிகைக்கு ஒரு விரிவான நேர்காணல் வழங்கி இருந்தார். அந்த நேர்காணல் தொடர்பான விடயங்கள் colombotelegraph.com உட்பட பல இணையத்தளங்களிலும் , சிங்கள , ஆங்கில ஊடகங்களிலும் வருவதுடன் பல்வேறு வாதப்பிரதிவாதங்களையும் , எதிர்பார்ப்பினையும் ,அரசியல் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவை தொடர்பான கருத்துக்களை இங்கு தொகுத்துள்ளதுடன், வண. சோபித தேரர் அவர்களின் முழு நேர்காணலும் , தமிழ்சூழலின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக இங்கு பதிவேற்றப்படுகிறது. உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் (ஆசிரியர் குழு) …

    • 0 replies
    • 890 views
  13. ஊசலாடும் தமிழர்களுக்கான நீதி? - யதீந்திரா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனது அறிக்கையில், சர்வதேச விசாரணை ஒன்றிற்கான பரிந்துரையை வழங்கியிருக்கின்றார். கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நவிப்பிள்ளை, இலங்கை சர்வாதிகார ஆட்சியொன்றிற்கான வழிகாட்டல்களை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்ததை இந்த இடத்தில் நினைவுகொள்ளலாம். சர்வாதிகார வழிகாட்டலுக்குள் சிக்கிக்கிடக்கும் ஒரு நாட்டுக்குள் இடம்பெறும் எந்தவொரு விசாரணையும் நம்பத்தகுந்தவையாக இருக்க முடியாது என்னும் அடிப்படையில்தான், தற்போது நவிப்பிள்ளை சர்வதேச விசாரணையொன்றிற்கான பரிந்துரையை வழங்கியிருக்கின்றார். ஆனால் இது நவிப்பிளையின் பரிந்துரை மட்டுமே ஆகும். வழமை போலவே இலங்கை அரச…

  14. தீண்டா மலம் - தீண்டத்தகாத மனிதன் சி. இராஜாராம் ஒரு மனிதன் விடுதலை பெற்றுக் கடவுளை அடைய வேண்டுமானால் அவன் முங்கி இருக்கிற மலங்களிலிருந்து வெளிவர வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஆணவம், கன்மம், மாயை. இந்த மலங்களை உதறி எழாத எந்த மானுடப்பிறவியும் கடவுளை அண்ட முடியாது. ஆனால் மலங்களை உதறவும் கடவுளின் புனிதப் பார்வை வேண்டும். இன்னொருபுறம் இடுப்புக்குக் கீழுள்ள எந்தப் பகுதியும் அசுத்தமானது. மலம் சார்ந்தது. அதனைக் கைகள் தொட்டுவிட்டால் கூட மீண்டும் சுத்தம் செய்யாமல் கடவுளை வணங்க முடியாது என்பவையும் வைதீகக் கோட்பாட்டின் மையமான பகுதியாகும். தமிழ் இலக்கணங்களில்கூட சமூகத்தில் சிலவற்றைப் பற்றியப் பேச்சு வரும்போது அவற்றை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைத்துச் சொல்வது என்பன போன்றவ…

    • 4 replies
    • 5.9k views
  15. எலும்புக்கூடுகள் சாட்சி சொல்லும் ஈழம் - தீபச்செல்வன்:- 05 மார்ச் 2014 எலும்புக்கூடுகள் வாக்குமூலங்களுடன் சாட்சியாக கிளம்பும் நிகழ்வுகள் கடந்த முப்பதாண்டுகளாக ஈழத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் ஈழத்து மக்களை அதிர்ச்சி கொள்ள வைத்த இடம் மன்னார் திருக்கேதீச்சரம். மன்னார் மனிதப் புதைக்குழிகளைத் தொடர்ந்து ஈழத் தலைநகர் திருகோணமலையிலும் இறுதிப்போர் நடந்த முல்லைத்தீவிலும் எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எங்கு மண்ணை தோண்டினாலும் எலும்புக்கூடுகள் கிளப்புமா என்பதுதான் இன்றைய ஈழ நிலத்தின் அச்சம். ஈழத்தின் வடக்கில் உள்ள மன்னார் திருக்கேதீஸ்வரம் பல்லவர் காலத்தில் பாடல் பற்ற தலம். சுந்தரரும் சம்பந்தரும் இந்த ஆலயத்தின்மீது பதிகங்களைப் பாடியுள்ளனர். பா…

  16. ஜெனிவாக் கூட்டத் தொடர் ஒரு சடங்காக மாறுமா? நிலாந்தன்:- 02 மார்ச் 2014 இம்முறை ஜெனிவாவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழ் லொபியானது, முன்னைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், துலக்கமான ஒரு கருத்தொருமைப்பாட்டை எட்டியிருப்பது தெரிகிறது. தமிழ் டயஸ்பொறாவிலும், தமிழகத்திலும் ஒழுங்கு செய்யப்படும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள், முன்வைக்கப்படும் சுலோகங்கள் என்பவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அது தெரியவரும். அதாவது, முன்னைய ஆண்டுகளைப் போலன்றி இம்முறை போர்க்குற்ற விசாரணை என்ற மையப்பொருளைக் கடந்து இனப்படுகொலை எனப்படுவதே மையப்பொருளாக மாறியிருக்கிறது. இலங்கைத் தீவில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதை நிறுவுவதன் மூலம் அதற்குரிய உச்சபட்ச பரிக…

  17. கூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது? செல்வரட்னம் சிறிதரன்:- 01 மார்ச் 2014 இரணைமடு குளத்து நீர் தொடர்பாகவும், ஜனாதிபதி ஆணக்குழு தொடர்பாகவும் இரண்டு முக்கிய தீர்மானங்களைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் கூடி நிறைவேற்றியிருக்கின்றது. இரண்டுமே மிகவும் முக்கியமான தீர்மானங்கள். கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் இரண்டு தீர்மானங்களும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இரணைமடு குளத்து நீர் தொடர்பாக விரிவாக விவாதித்திருக்கின்றார்கள். மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக வாதிட்டதன் பின்னர், ஏகம…

  18. இராஜிவ் கொலை வழக்கில் விடை தெரியாத வினாக்கள்...? 1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி அந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டாம் என சொல்லியும் ; ஏன் அங்கு கூட்டம் நடத்தப்பட்டது . ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா? 2. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்? 3. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்கா…

  19. இது, அந்தக் கோரச் சம்பவத்தின் இன்னொரு முகம்! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட அந்த நாளில் அவருடன் 15 அப்பாவி உயிர்களும் பலியாகின. ''தூக்குமேடைக்குப் போனவர்களைக் காப்பாற்றத் துடிக்கும் தலைவர்கள், அந்த சம்பவத்தில் இறந்துபோன தமிழர்களின் குடும்பங்களுக்காகக் குரல் கொடுத்தார்களா?'' எனக் கொந்தளிக்கிறார்கள் பலியானவர்களின் குடும்பத்தினர். ஸ்ரீபெரும்புதூர் பிரசாரத்தின்போது ராஜீவ் அருகில் இருந்த காங்கிரஸ் பிரமுகர் லீக் முனுசாமி, எஸ்.பி-யான முகமது இக்பால், டெல்லியில் இருந்து பாதுகாப்புக்காக வந்த குப்தா, இன்ஸ்பெக்டர் ராஜகுரு, இன்ஸ்பெக்டர் எட்வர்டு ஜோசப், சப் இன்ஸ்பெக்டர் எத்திராஜூ, கான்ஸ்டபிள் முருகன், கான்ஸ்டபிள் தர்மன், பெண் கான்ஸ்டபிள் சந்திரா, கமாண்…

  20. எவ்வித மாயைகளுமின்றி செயற்படுகின்ற ஒரு நிர்வாகியாக அரசியல்வாதியாக இவர் உள்ளார். இவர் சமாதானம் மற்றும் நீதி ஆகிய இரண்டினதும் கலவையாக உள்ளார் என்பதை நான் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் மேற்கொண்ட நேர்காணலின் மூலம் அறிந்துகொண்டேன். இவ்வாறு கொழும்பை தளமாகக் கொண்ட The Island ஆங்கில ஊடகத்திற்காக நேர்காணல் செய்த NILANTHA ILANGAMUWA* தெரிவித்துள்ளார். அந்நேர்காணலை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர், நீதிபதி கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரனுடன் அண்மையில் நான் மேற்கொண்ட நேர்காணலானது மிகவும் முக்கியமானதாகும். நீதிபதி விக்னேஸ்வரனை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையில்லை. இவர் ஒரு சிறிலங்காத் தமிழ் சட்டவாளரு…

  21. வங்காள விரிகுடாவிலிருந்து கடலலைகள் அடித்துக் கொண்டிருக்கின்ற முள்ளிவாய்க்கால் என்கின்ற வடக்கு மாகாணத்தின் அழகிய கடற்கரையில் இரத்தம் தோய்ந்த துன்பியல் சம்பவங்கள் நிறைந்த சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவடைந்தது. இவ்வாறு Al Jazeera ஊடகத் தளத்தில் Amarnath Amarasingam* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. "எறிகணைகள் மழை போல பொழிந்துகொண்டிருந்தன" என அஜந்தன் என்னிடம் தெரிவித்தார். இது தொடர்பாகத் தற்போது கூறும்போது அஜந்தன் சிரித்தார். ஆனால் இந்த உண்மையைச் சொல்வதற்கு இவர் உயிருடன் இருக்கிறார் என நான் நினைத்தேன். அஜந்தன் 2006ல் புலிகள் அமைப்புடன் இணைந்து கொண்டார். அதாவது தமிழ்ப் புலிகள் குடும்பத்திற்கு ஒருவரை த…

  22. இளங்கோவன் என்ற தமிழ் நாட்டுக் காங்கிரஸ் அரசியல்வாதி, ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழுபேரும் விடுவிக்கப்பட்டால் தாம் தீவிரவாதிகளாக மாறப்போவதாக மிரட்டிருயிருக்கிறார் என்று முகநூலில் சில செய்திகள் சொல்கின்றன.. https://www.facebook.com/Sevanthinetwork/timeline?filter=1 இப்போதாவது புரிகிறதா தீவிரவாதிகள் ஒழிந்திருக்கும் குகை எங்கே என்று. தலைமைகள் தொடக்கம் தொண்டுகள் வரைக்கும் உள்ளே தள்ளப்பட வேண்டியவர்களின் மடம் அது. பிடித்து உள்ளே தள்ளிவிட வேண்டியதுதானே. ஏன் தாமதம்? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ரஜீவ் காந்தி காலம் தொடக்கம் பதவியில் இருந்தபோதெல்லாம் கொள்ளை அள்ளிய கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் ஒருவரின் மானம் கெட்டதனமான வீராப்பு பேச்சு அது. இந்த வீரவண்டி…

  23. நிலாந்தனும் ஜெனீவாவும் தமிழ்த் தேசிய அரசியலும் : சபா நாவலன் இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அன்றி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ குறைந்த பட்சம் ‘தேசிய சக்திகள்’ என்ற எல்லைக்குளாவது செயற்பட எல்லா வாய்ப்புக்களையும் கொண்டிருக்கின்றன. தேசியம் என்பதன் அடிப்படையைக் கூட அவர்கள் விளங்கிக்கொள்ளாமல் அன்னிய அதிகாரசக்திகளின் அரசியல் போட்டிக்குள்ளும் ஏகாதிபத்தியக் காய் நகர்த்தல்களுக்குள்ளும் தம்மை அமிழ்த்திக்கொள்கின்றனர். இன்று ஜனாதிபதி ஆணைக்குழு என்ற மகிந்த அரச பாசிசத்தின் போலி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் மக்கள் கூறுகின்ற சாட்சியங்களால் யாருக்கும் நீதி கிடைக்கப்போவதில்லை. ஆனால் சாட்சி கூறுபவர்களின் மன உறுதியும் துணிவும் வியக்கவைக்கிறது. அவர்களைப் பொறுத்தவரையில் எல்ல…

  24. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நாளில், அற்புதம் அம்மாளைச் சந்திக்க முடியவில்லை; ஓரிரு நாட்கள் கழித்துச் சென்றபோது, வழக்கம்போல, மரண தண்டனைக்கு எதிரான புத்தகங்கள் கனக்கும் தோள்பையுடன் கிளம்பியிருந்தார். “எம் புள்ள மட்டும் இல்லப்பா, இன்னும் நெறையப் புள்ளைங்களைத் தூக்குக் கயித்துப் பிடிக்கு வெளியே இழுத்துக்கிட்டு வர வேண்டியிருக்கு” என்றவர், வழியில் ஒரு பொரி பொட்டலத்தை வாங்குகிறார். “ரொம்ப அசத்தினா தவிர, நான் சாப்பாடு தேடுறதுல்ல; பல நாள் இந்தப் பொரிதான் நமக்குச் சாப்பாடு” என்கிறார் சிரித்துக்கொண்டே. நடந்துகொண்டே பேச ஆரம்பித்தோம். இந்த நாட்டின் சர்வ வல்லமை பொருந்திய அமைப்பு களோடு 23 வருஷங்கள் போராடி, உங்கள் மகனைத் தூக்குக் கொட்டடியிலிருந்து மீட்டிருக்கிறீர்கள். இந்தப் போராட்ட…

  25. புரட்சி / அத்தியாயம் 1 ‘இது வரலாற்று நூல் அல்ல. சோஷலிசத்தின்மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளை விவரிப்பதே இதன் நோக்கம்… இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தாலும் சரி, நம் கண் முன்னே இப்போது நடந்திருந்தாலும் சரி. கலகம் ஒன்று நடந்திருந்தால், அதில் சோஷலிசத்தின் சாயல் சிறிதளவு படிந்திருந்தால் அதை இந்தப் புத்தகத்தில் இடம்பெறச் செய்திருக்கிறேன்.’ ஸ்பெயினைச் சேர்ந்த சோஷலிஸ்டும் எழுத்தாளரும் அரசியல் விமரிசகருமான அல்வாரெஸ் (முழுப்பெயர் Julio Álvarez del Vayo) தனது The March of Socialism என்னும் புத்தகத்தின் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பிரெஞ்சுப் புரட்சி, பாரிஸ் கம்யூன், ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளை இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.