Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழ் தேசியப் போராட்டமும் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பும் - நிர்மானுசன் பாலசுந்தரம் 01 நவம்பர் 2013 அறிமுகம் கருத்தியல் வேறுபாடுகளுக்கு மத்தியில் புலம்பெயர் தமிழர்களும், அரசியல் வேறுபாடுகளுக்கு மத்தியில் தமிழக அரசியலும் சிக்குண்டாலும், தமிழர் தேச அரசியலில் அவர்களது பங்களிப்பு மிக முக்கியமானது. அத்தகைய சூழலில், ஈழத்தமிழர் நலனை முன்னிறுத்திய புலம்பெயர் மற்றும் தமிழக அரசியல் செயற்பாடுகளை பலவீனப்படுத்துமாற் போல் சில கருத்துக்களை வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தேர்தலை அண்மித்த காலப்பகுதியில் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கள், முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசு 2009 ல் நடாத்திய இனஅழிப்புப் போருக்குப் (Genocidal war) பின்னர், தமிழ…

  2. தமிழ்பேசும் மக்களின் தற்போதைய பொது எதிரி யார்…? : எஸ். ஹமீத் கட்டுரைத் தலைப்புக்கு பதில் சொல்ல ஆழமான ஆய்வுகள் எவையும் அவசியமில்லை. ஸ்படிக நீரால் நிரப்பப்பட்டிருக்கும் ஒரு நீச்சற் குளத்தில் மிதக்கின்ற பெரிய வண்ணப் பந்து போல அதற்கான பதில் மிகத் தெளிவானது. பந்தை எவ்வளவுதான் நீருக்குள் அமிழ்த்தி வைத்தாலும், அது மீண்டும் மேலே வந்துவிடுகிறது. பந்தைக் காணாதது போலப் பாசாங்கு பண்ணுபவர்கள் அரசியற் குருடர்களாக இருக்க வேண்டும். அவ்வாறே, அதனை மறுத்துரைப்போர் மனசாட்சியை அடகு வைத்துவிட்ட மாபாதகர்களாக இருக்க வேண்டும். கோர நகங்களையும் கொடுமையான பற்களையும் உடைய ஒரு வெறிபிடித்த சிங்கத்தினால் குதறப்படும் அப்பாவி மான்களாகவும் முயல்களாகவும்தான் இலங்கையின் தமிழ்,முஸ்லிம் இனங்கள் தம்ம…

    • 3 replies
    • 1.1k views
  3. "கூடுவார்கள் ஆனால் கூட்டமைப்பல்ல.. பேசுவார்கள் ஆனால் பொதுமுடிவல்ல.. ஏசாதையுங்கோ இதுதான் TNA" 28 அக்டோபர் 2013 குமரன் கார்த்திகேயன் 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக கேட்டதா என்பதல்ல தற்போதைய பிரச்சனை, பெருவாரியான மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் நான் கேட்கிறேன் படை அதியாரியான மேஜர் ஜெனரல் சந்திரசிறியை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கி பொதுவான ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும்' என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கோத்தாபய ராஜபக்ஸவிற்கு சவால் விடுத்துள்ளார். வடக்கின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களாக தெரிவானோருக்கு நல்லூர் பிரதேச சபை ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை அவர் தெரிவித்துள்ளார். கடந்த 25ஆம் திகதி இட…

  4. பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடு - 2013: சிறிலங்காவுக்கு நல்வாய்ப்பா, சவாலா? [ திங்கட்கிழமை, 28 ஒக்ரோபர் 2013, 08:58 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவானது தனது நாட்டில் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை நடாத்துவதற்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பின் மூலம், தன் மீது அனைத்துலக சமூகத்தால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து விலகிக் கொள்ள முடியும் எனக்கருதுகிறது. இவ்வாறு The Diplomat ஊடகத்தில் Salma Yusuf எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. நவம்பர் 2013ல் சிறிலங்காவில் முதன்முதலாக பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாடானது பிறிதொர…

  5. முதல் அமர்வில் கூறத் தவறிய விடயங்களும் எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டி பேச்சுக்களும் - அ.நிக்ஸன்- 28 அக்டோபர் 2013 Notes முதலமைச்சரின் அதிகாரங்கள் பற்றிய சட்டரீதியான அனுகுமுறைகளுக்கு எத்தனை உறுப்பினர்கள் ஒத்தழைப்பு வழங்குவார்கள்? மாகாண சபை நிரந்தரமானது என்ற நம்பிக்கையுடன் தமது பதவிகளை மட்டும் உறதிப்படுத்த முற்படும் உறுப்பினர்கள் பாதிப்புகள் தொடர்பான புள்ளி விபரங்களை சேகரிக்க தவறுகின்றனர் வடமாகாண சபையின் முதல் அமர்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை இரண்டு விடயங்களை கூறியது. ஓன்று அரசியல் தீர்வின் முக்கியத்துவம் இரண்டாவது அரசியல் தீர்வுக்காக இலங்கைக்கு வெளியில் நின்று நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தமிழகம் புலம் பெயர்தமிழர்கள் என்ற இரு சமூகங்களின் ஒத்தழைப்பு. 1…

  6. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் செல்வரட்னம் சிறிதரன் வடமாகாண சபைக்கான தேர்தலில் வாக்களித்துள்ள மக்கள் பல விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். அதுகுறித்து அரசியல் விமர்சர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அந்த மக்கள் வலியுறுத்தியுள்ள முக்கியமான ஒரு விடயம் உடனடியாகத் தீவிர கவனம் செலுத்த வேண்டிய தேவை இப்போது எழுந்துள்ளது. அரசாங்கம் கூறுகின்ற அல்லது வலியுறுத்துகின்ற அபிவிருத்தியை இலக்காக வைத்து அவர்கள் வாக்களிக்கவில்லை. வீதிகள் போடவேண்டும் என்றோ, பாலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றோ, மேலும் பல பகட்டான வசதிகள் வாய்ப்புக்களை வடபகுதிக்குக் கொண்டு வரவேண்டும் என்றோ அவர்கள் கோரவில்லை. அவர்கள் கேட்…

  7. தமிழரசுக் கட்சி எங்கே நிற்கிறது - கூட்டமைப்பு எங்கே செல்கிறது? விக்னேஸ்வரனின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகிறது?? - யதீந்திரா முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று ஒரு தமிழ் கருத்துண்டு. வடக்கு மாகாணசபை குறித்து சிந்திக்கும் போது மேற்படி கருத்தே நினைவுக்கு வருகிறது. ஏனெனில், அந்தளவிற்கு குழப்பங்களினதும், உள் முரண்பாடுகளினதும் சாட்சியாக தற்போது வடக்கு மாகாணசபை காட்சியளிக்கின்றது. இத்தகைய குழப்பங்களையும், முரண்பாடுகளையும் கடந்து செல்லவேண்டிய நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் காணப்படுகின்றார். அவரால் அது முடியுமா? விடுதலைப் புலிகள் தமிழர் அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின்னர், தமிழ் மக்களின் அரசியலை கையாளும் பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமானது. கூட்டம…

  8. கூட்டமைப்பும் ராஜதந்திரப் போரும் - நிலாந்தன் 27 அக்டோபர் 2013 ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் ஸ்கண்டிநேவிய நாடொன்றிலிருந்து வந்த ஒரு டயஸ்பொறாத் தமிழர் சொன்னார், ''இப்போதிருக்கும் நிலைமைகளே தொடர்ந்தும் இருக்குமாயிருந்தால் அல்லது இவற்றின் இயல்பான வளர்ச்சிப் போக்கின்படி மாற்றங்கள் நிகழுமாயிருந்தால் டயஸ்பொறாவில் உள்ள தமிழர்கள் பொதுப் பணிகளிலிருந்து விலகி தனிப்பட்ட வாழ்வின் சுக துக்கங்களிற்குள் அதிகம் முழ்கத் தொடங்கிவிடுவார்கள்... அடுத்த வசந்த கால விடுமுறைக்கு எங்கே போகலாம். பிள்ளைகளை வேறெந்த உயர்தரமான பள்ளிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் படிப்பிக்கலாம் அல்லது இப்போதிருப்பதை விட வேறெப்படி வசதியாக வாழலாம்... என்பவற்றைப் பற்றியே அதிகம் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள்' என்…

  9. பொதுநலவாய (கொமன்வெல்த்) அமைப்பிலுள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு அடுத்த மாத நடுப்பகுதியில் சிறீலங்காவின் ஹம்பாத்தோட்ட நகரில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை நடத்தி தங்கள் மீதுள்ள இனப்படுகொலை, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக் கறைகளை அழித்துவிடலாம் என்றெண்ணிய சிங்களத்தின் சிந்தனையில், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடில்லாமல் தற்போது அச்சம் படரத்தொடங்கியுள்ளது. மாநாட்டை சிறீலங்காவில் நடத்தமுனைந்து, வேலியிலை போன ஓணானை மடியிலை பிடித்துக் கட்டியவன் நிலையில் மகிந்த சிக்கித்திணறத் தொடங்கியுள்ளார். கறைகளைக் கழுவிவிடலாம் என்று எதிர்பார்த்த மாநாடு, மேலும் பல கறைகளை தங்கள் மீது ஏற்படுத்திக் கொடுக்கும் மாநாடாக அமைந்துவிடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம். ஏற்கனவே, மனித உரி…

  10. மனிதஉரிமை மீறலா? இன அழிப்பா? எமக்கு நடந்தது நடந்து கொண்டிருப்பது மனித உரிமை மீறலா அல்லது இனஅழிப்பா என்பது பற்றி பலர் தவறான கருத்துக்களை முன் நிறுத்துகின்றனர். உண்மையில் இறுதிப்போரில் இது இரண்டுமே நடைபெற்றது. பின்னர் எதற்கு இந்த கேள்வி என்று நீங்கள் கேட்கலாம். இங்கே நம்மில் பலர், முக்கியமாக புலம்பெயர்ந்த இளையோர்கள் மனித உரிமை மீறல் நடந்தது என்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்கிறார்கள். எமக்கு நடந்ததுஒரு திட்டமிட்ட இனஅழிப்பு என்பதை தெரிந்தோ தெரியாமலோ மறைத்து விடுகிறார்கள். இரண்டிற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? ஜரோப்பிய ஒன்றிய மனித உரிமை சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். அதாவது உள்நாட்டு சட்டங்களினால் முழுமையான நீதி கிடைக்காவிட்டால் மட்டுமே ஜரோப்பிய ஒன்றிய ம…

    • 23 replies
    • 2k views
  11. மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களாக நாம் இருக்க வேண்டும் – முதல்வர் விக்னேஸ்வரன் [ புதன்கிழமை, 23 ஒக்ரோபர் 2013, 00:37 GMT ] [ நித்தியபாரதி ] வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், கடந்த 11ம் நாள் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட நிகழ்வில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரை. வடக்கு மாகாண சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் எனது சகோதர சகோதரிகளே! இங்கு கூடியிருக்கும் எங்களில் பலர் முன்னர் வேட்பாளர்களாக சந்தித்திருந்தோம். தற்போது நாங்கள் அனைவரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் என்ற வகையில் இங்கு கூடியிருக்கிறோம். தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்கள்…

  12. துயிலுமில்ல தீர்மானங்களும் அரசியல் விவேகமும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - -வளவன் 23 அக்டோபர் 2013 மாவீரர் துயிலும் இல்லங்களை மீளமைப்பது தொடர்பாக இரு பிரதேச சபைகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பல உடனடி விளைவுகளையும், அதிர்வுகளையும் தோற்றுவித்துள்ளது. வட மாகாண சபைத் தேர்தலின் பின்னர் இராணுவத்தினரைச் சீண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன எனவும், இதன் மூலம் நாட்டைப் பிளவுபடுத்தும் நிலை ஏற்பட்டால், இராணுவம் அதனைத் தடுக்க, பதிலடி கொடுக்க, எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் எனவும் இராணுவத் தளபதி கருத்துத் தெரிவித்துள்ளதற்கு ஏறத்தாள சமகாலத்தில் வடக்கு கிழக்கில் படையினரால் இடித்தழிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லங்களை மீளக்கட்டியெழுப்ப வேண்டுமென்ற தீர்மானங்கள் சாவகச்சேர…

  13. பொதுநலவாய மாநாடும் இந்தியாவும் - யதீந்திரா கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்குகொள்ளுமா, இல்லையா என்னும் வாதப் பிரதிவாதங்கள் தொடர்கின்றன. ஆனால் இந்தியாவின் பக்கத்திலிருந்து உறுதியான செய்திகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில், 'டைம்ஸ் ஒப் இந்தியா' கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பதிலாக, இந்தியாவின் துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி பங்குபற்றக்கூடுமென்று செய்தியிட்டுள்ளது. இதேபோன்று, சமீப நாட்களாக கொழும்பில் இடம்பெறும் கொமன்வெல்த் மாநாட்டை கடுமையாக விமர்சித்துவரும் கனேடிய பிரதமருக்குப் பதிலாக, பிறிதொரு உயர்மட்டக் குழுவினர் அனுப்பிவைக்கப்படுவர் என்று செய்திகள் வெளியாகியிருந்தன. கடந்த ஆண்டு, 58 வது கொமன்வெல்த் பாராளுமன்ற அமர்வு (Commo…

  14. ஐ.நா. தோற்று விட்டதா? நிலாந்தன் 20 அக்டோபர் 2013 இலங்கைத்தீவின் இறுதிக் கட்டப் போரில் ஐ.நா. மன்றம் தனது நடவடிக்கைகளில் தோல்வி கண்டுவிட்டதாக ஐ.நா.வின் இறுதி அறிக்கை கூறுவதாக இன்ரசிற்றி பிரஸ் இணையத்தளம் தெரிவிக்கின்றது. ராஜந்திர, சட்ட மற்றும் ஏனைய நடவடிக்கைகளை அமுல்படுத்தும் கொள்ளளவு போன்ற விடயங்களில் ஐ.நா. மன்றம் தோல்வி கண்டுள்ளதாகவும், தமது அதிகாரிகளை மாறுபட்ட சூழ்நிலைமைகளில் ஒழுங்குபடுத்தவும், ஈடுபடுத்தவும், அபாயகரமான செயற்பாடுகளின்போது அவர்களுக்கு ஆதரவளிக்கவும் ஐ.நா. மன்றம் தவறிவிட்டது என்றும் தெளிவான தலைமைத்துவம் இல்லாமையால் இது விடயத்தில் மாறுபட்ட செய்திகள் அனுப்பப்பட்டதுடன் இதனால் நல்ல சந்தர்ப்பங்களும் இழக்கப்பட்டன என்றும் அந்த இறுதி அறிக்கையில் கூறப்பட்ட…

  15. 'சட்டப் புலமைக்காக - முன்னாள் நீதியரசர் என்பதற்காக மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை' -அ.நிக்ஸன்- 21 அக்டோபர் 2013 "கோமாளிகள் போன்றும் சந்தர்ப்ப வாதிகளாகவும் உருமாறி நிற்பது 60 ஆண்டுகால போராட்டத்தை கேவலப்படுத்தும் செயல்." சம்பந்தனுடைய பாராளுமன்ற உரைகளும் விக்னேஸவரன் அறிய வேண்டிய தகவல்களும் Notes—13 ஆவது திருத்தச் சட்டத்தை தும்புத் தடியாலும் தமிழர்கள் தொட்டுப் பார்க்க மாட்டார்கள் என்று கூறி விட்டு அந்த சட்டத்தின் கீழான மாகாணசபை முறையை தூக்கிப் பிடித்து அதே மக்கள் முன்னிலையில் நீங்கள் கோமாளிகள் போன்றும் சந்தர்ப்ப வாதிகளாகவும் உருமாறி நிற்பது 60 ஆண்டுகால போராட்டத்தை கேவலப்படுத்தும் செயல். சர்வதேச அரசியலில் என்ன நடக்கின்றது. இலங்கை இனப்…

  16. மாகாணசபை தேர்தல் வெற்றியால் இனமான மகிழ்வின் உச்சத்தில் இருந்த மக்களை சடுதியாக தரையில் இறக்கி உள்ளனர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர். ஒன்றுபட்டு திரண்டெழுந்து அல்லது திரண்டெழும் வகையில் திட்டமிட்டு செயலாற்றி, மக்களிடமிருந்து மகத்தான ஆதரவினை பெற்ற பின் ஒன்றுபட்ட அந்த மக்கள் திரளினை அப்படியே கை விட்டு விட்டு ஏற்கனவே தங்களுக்கென நிர்ணயிக்கப்பட பாதையில் பிரிந்து செல்லத்தொடங்கி உள்ளனர் எனலாம். ஒரே பாதையில் பேரணியாக வந்து அந்த பாதை பிரியும் இடத்தில், பதவிகளை கையகப்படுத்தியவர்கள் இரு பாதைகளாலும் பிரிந்து செல்லத்தொடங்க அவர்களால் அழைத்துவரப்பட்ட மக்கள் சந்தியில் நின்றுகொண்டு மீண்டும் தங்களுக்குள் முரண்படத் தொடங்கியுள்ளனர். இத்தகைய செயற்பாடுகள் தமிழர் அரசியல் மேடைகளில…

  17. "ஊருக்குச் செல்வதை விட வேறு என்ன கனவு இருக்கிறது" குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன் 18 அக்டோபர் 2013 "ஒவ்வொரு மனிதர்களின் இரவுக் கனவுகளும் சம்பூர் பற்றியதாகத்தான் இருக்கிறது" உலக அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 7.6 மில்லியன் மக்கள் இன்னமும் அகதிகளாக உள்ள நிலையில் ஒவ்வொரு 41.1 விநாடிக்கு ஒருவர் அகதியாகிக் கொண்டிருக்கிறார். இந்த அகதிகளின் எண்ணிக்கையில் ஈழ அகதிகளும் குறிப்பிட்டளவு பங்கை வகிக்கின்றனர். இலங்கையில் நடந்த யுத்தம் காரணமாக அகதிகளாக்கப்பட்ட பலர் இன்னமும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவேயில்லை. யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகள் முடிவடைந்த பின்னரும் அகதிகள் இன்னமும் தமது சொந்த இடத்தில் குடியமர முடியவில்லை என்பது நாட்டின …

  18. 'எய்தவர்களுடன் நல்லிணக்கம் - அம்புகளுடன் பகைமுரண்' கூட்டமைப்பின் ராஜதந்திரமோ? குமரன் கார்த்திகேயன் 17 அக்டோபர் 2013 மாகாணசபைத் தேர்தலைத் தொடர்ந்து வடக்கில் நிலவும் சூழ்நிலைகளை அவதானிக்கும் ஒருவருக்கு எற்படக்கூடிய மன வருத்தமும் கோபமும் இந்தக் கட்டுரையில் வெளிப்படையாகத் தெரிகிறது என எவராவது கருதுவாரானல் அது இக்கட்டுரையின் வெற்றியாகும் எமது கடந்த காலங்களை உரிய பொழுதுகளில் மீள்பார்வைக்கு உட்படுத்தாமையினாலும் புறமிருந்து வந்த விமர்சனக்களை புறந்தள்ளியமையினாலும் நாம் எதிர்கொண்ட அனர்த்தங்களை அனைவரும் அறிவோம். இனிவரும் காலங்களையும் மௌனத்திற்கு இரையாக்கி எதிர் வரும் பல தசாப்தங்களை கறை படிந்த வரலாறுகளாக மாற்றக் கூடாது என்பதன் வெளிப்பாடாகவே இந்தப் பதிவு அமைகிறது. …

  19. சர்வதேச உறவுநிலை குறித்து அதிகமாகப்பேசப்படும் இன்றைய காலகட்டத்தில், அதனை இயக்கும் சக்திகளாக பாதுகாப்பும் பொருளாதாரமும் இருக்கின்றது என்பதனை மறந்துவிட முடியாது. நாடுகளுக்கிடையிலான உறவுநிலை என்பதனை, நாட்டின் அதிகார உச்சநிலையில் இருப்பவர்களுக்கிடையிலான உறவாக பார்க்கும் பழக்கம் அண்மைக்காலமாக பெருகிவருவதை காண்கிறோம். உதாரணமாக கமலேஷ் சர்மா, விஜய் நம்பியார் போன்றோர் ஓர் அதிகாரமையத்தின் நலன்களைப் பிரதிபலிக்கும் நபர்களாக இருப்பதை, அவர்களின் செயற்பாடுகளால் பாதிப்புறும் ஈழத்தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது கமலேஷ் சர்மா மீது கனடா அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டூ, விஜய் நம்பியார் மீது யுத்தம் முடிவுற்றதும் மேற்கொள்ளப்பட்ட கடுமையான விமர்சனங்கள் என்பன, சர்வதேச உறவில் சிற…

  20. நல்லிணக்கத்தின் காட்சியறை? நிலாந்தன் 13 அக்டோபர் 2013 மலையகத்தில் தொழில் புரியும் ஒரு நண்பர் சொன்னார்.......அவர் அங்கு ஒரு சிங்கள முதாட்டியின் வீட்டில் வாடகைக்கு இருக்கிறார். கடந்த கிழமை வடமாகாண சபையின் முதலமைச்சர் இலங்கையின் அரசுத் தலைவர் முன்னிலையில் பதவியேற்ற நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியபோது மேற்படி நண்பர் அந்த சிங்கள் முதாட்டியுடன் இருந்து அந்தச் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். முதலமைச்சர் தொலைக்காட்சியில் தோன்றியபோது, அம்முதிய பெண் சொன்னாராம் 'கொட்டியநாயக்க' - இவரும் ஒரு புலிப் பிரதானி - தான் என்று... அந்தச் சிங்கள மூதாட்டியைப் போலவே பெரும்பாலான சாதாரண சிங்கள வாக்காளர்களும் கருதுவதாகக் கூறப்படுகின்றது. யுத்த வெற்றிவாதத்திற்குத் தலைமை…

  21. உலகத் தமிழரைக் குறிவைத்து சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற உளவியல் நடவடிக்கைகள் பற்றி தற்பொழுது அமெரிக்காவில் வசித்துவருகின்ற ஒரு சிங்கள ஊடகவியலாளருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அவர் ஒரு உதிரித் தகவலைத் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்த அந்தத் தகவல் எந்த அளவிற்கு ஏற்புடையது என்று தெரியவில்லை. ஆனால் அவர் கூறிய அந்தத் தகவல் பற்றி நாம் எமது அக்கறையைச் செலுத்துவது தவறல்ல என்றும் எண்ணத் தோன்றுகின்றது. அண்மையில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளுள் ஒருவரான கேணல் ரமேஷ் சிறிலங்காப் படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதான ஒரு காட்சி ஊடகங்களில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது அல்லவா? – ரமேஷ் விசாரணைக்கு உற்படுத்தப்படும் காட்சியை சிறிலங்காவின் உளவ…

  22. சிறிலங்கா: அரசின் அபிவிருத்தியானது தமிழர்களின் தன்னாட்சி அவாவை சிறிதளவேனும் குறைக்கவில்லை [ திங்கட்கிழமை, 14 ஒக்ரோபர் 2013, 08:24 GMT ] [ நித்தியபாரதி ] அபிவிருத்தி என்கின்ற போர்வையில் வடக்கில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் பிரிவினைவாத எண்ணத்தை நீக்குவதற்காக சிறிலங்கா அரசாங்கமானது தனது காலத்தை இழுத்தடிப்பதற்கான உத்தியைப் பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு Mail & Guardian ஊடகத்தில் JASON BURKE எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. ஒரு பத்தாண்டு காலத்திற்குள் இரு சகோதரர்கள் தமது மூன்றாவது வீட்டை மிகவும் அழுக்கான வீதியிலிருந்து சில மீற்றர் தூரத்தில் கட்டுகின்றனர். இது தமக்கு நிலையான வீடாக இருக்கும் …

  23. விக்னேஸ்வரனின் பதவியேற்பும் விமர்சனத்திற்குள்ளாகிவரும் கூட்டமைப்பின் முக்கூட்டு அணுகுமுறையும் - யதீந்திரா வடக்கு மாகாணசபையின் ஆரம்பமே சர்ச்சைகளுடனும், அதிக வாதப்பிரதிவாதங்களுடனும் ஆரம்பித்திருக்கிறது. வடக்கு மக்களால் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன், மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டமையே மேற்படி வாதப்பிரதிவாதங்களினதும், சர்ச்சைகளினதும் அடிப்படையாகும். சம்பந்தன் எவ்வாறு அத்தகையதொரு முடிவை எடுக்க முடியும். வடக்கு மக்கள் அத்தகையதொரு ஆணையை விக்னேஸ்வரனுக்கு வழங்கியிருக்கவில்லை. மாறாக, அரசுக்கு எதிராகவே மக்கள் வாக்களித்திருந்தனர். எனவே சம்பந்தன், சுமந்திரன் மற்றும் புதிதாக இணைந்திருக்கும் விக்னேஸ்வரன் ஆ…

  24. பழையதும் புதியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் எதிர்கால யதார்த்தங்கள் 12 அக்டோபர் 2013 சாந்தி சச்சிதானந்தம் 1970ம் ஆண்டு பொதுத்தேர்தல்கள் காலம். எனது தந்தையார் லங்காசமசமாஜ கட்சியில் யாழ் மாவட்டத்தில் நல்லூர் தொகுதியில் வேட்பாளராக நின்றிருந்தார். நான் அப்போது மிக இளம் வயதாக இருந்தாலும்கூட என்னையும் தேர்தல் பிரசாரங்களில் ஊர் ஊராக நடந்து துண்டுப் பிரசுரம் வழங்குவது போன்ற எடுபிடி வேலைகளில் அவர் ஈடுபடுத்தினார். அரசியல் பற்றிய கீழிருந்து மேலாகப் பார்க்கின்ற (உண்மையாகவே) அனுபவத்தை இது தந்தது எனலாம். அப்போதெல்லாம் வீடு வீடாகச் சென்று இடதுசாரி அரசியலைப் பற்றி எமது குழுவினர் விளக்க நான் பார்த்துக்கொண்டு நிற்பேன். 'சிங்களக் கட்சிகள் என்ட வாசல்படி மிதிக்கக்கூடாது' என்று வீர…

  25. வன்னியில் தமிழீழத் தேசியத் தலைவர் வசித்ததாக கருதப்படுகின்ற நிலக்கீழ் மாளிகை வீடு ஒன்று சிறீலங்காப் படையினரால் அழிக்கப்பட்டிருக்கின்றது. புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியில் உள்ள காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இந்த வீடு மிகவும் ஆச்சரியம் மிக்க கட்டுமானமாக அமைந்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தளபதிகளைத் தவிர இளநிலைத் தளபதிகளால் கூட கால்பதிக்க முடியாத இடமாக இருந்த இந்த வீடு, இன்று இடித்தழிக்கப்பட்டிருக்கின்றமையானது தமிழ் மக்களிடையே பெரும் கவலைகளைத் தோற்றுவித்துள்ளது. போரியல் ரீதியில் மட்டுமல்ல, தொழில்நுட்ப ரீதியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழீழத் தேசியத் தலைவரும் கைதேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதற்கு இந்த நிலக்கீழ் மாளிகை வீடு எடுத்துக்காட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.