அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
இப்தார் அரசியல்: நோன்பு காலத்து கவலைகள் நோன்பு காலம் என்பது இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, உலகெங்கும் வாழும் முஸ்லிம்களுக்கே ஒரு புனிதமான காலப்பகுதியாகும். அவர்கள், அக்காலப்பகுதியில் தங்களுடைய மார்க்கக் கடமைகளில் ஈடுபடுவதற்கு ஏதுவான, அமைதியான சூழல் நிலவ வேண்டியது அவசியமாகும். ஆனாலும், கடந்த சில வருடங்களாக அவ்வாறான அமைதியான சூழல் இலங்கையில் இல்லை என்பது மிகுந்த கவலைக்குரியது. நமது அனுபவங்களின்படி, கடந்த சில வருடங்களாக, இலங்கையில் இனவாத செயற்பாடுகள் முனைப்புப் பெற்றிருக்கின்றன. இந்த இனவாதச் செயற்பாடுகள், நோன்பு காலங்களில் தீவிரமடைகின்றன. ‘கிறீஸ் பூதம்’, ‘அபாயா பிரச்சினை’, ‘…
-
- 1 reply
- 319 views
-
-
சீனத் தூதுவர் தமிழ் மக்களுக்குச் சொல்லாமல் சொன்ன செய்தி? - நிலாந்தன் adminNovember 24, 2024 அண்மையில் நடந்த “நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்” இவ்வாறு தெரிவித்திருப்பவர் இலங்கைக்கான சீனத் தூதர். இந்த வாரம் அவர் வடக்கு கிழக்குக்கு விஜயம் செய்தார். நடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு தமிழர்களை நோக்கி வந்த முதலாவது வெளிநாட்டுத் தூதுவர் அவர். யாழ்ப்பாணத்தில் அவர் யாழ். ஊடக அமையத்துக்கு விஜயம் செய்து அங்கே ஒரு ஊடகச் சந்திப்பையும் நடத்தினார். ஒரு நாட்டின் தூதுவர் நாட்டின் ஒரு மாவட்டத்தில் உள்ள “பிரஸ் கிளப்புக்கு” தானாக வந்து ஊடகவியலாளர்களை சந்திப்பது என்பது பொதுவானது அல்ல. அதில் கேட்கப்பட்ட கேள்வ…
-
- 0 replies
- 319 views
-
-
முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்கான நீதி இன்றைய உலக அமைதிக்கான தேவை 111 Views நேற்று, 08.05.2021 கிட்லரின் இன அழிப்பு ஆட்சிக்கு பிரித்தானியாவின் இணைவுடன் நேச நாடுகளின் படையணிகள் அன்றைய யேர்மனியைச் சரணடைய வைத்த, ஐரோப்பா மேலான வெற்றி நாள் (VE Day), 76ஆவது ஆண்டாக மேற்குலகில் கொண்டாடப்பட்டது. ஆயினும் யப்பானின் ஹிரோசிமா மேல் 1945 ஆகஸ்ட் 6ஆம் திகதியும், நாகசாக்கி மேல் ஆகஸ்ட் 9ஆம் திகதியும் அமெரிக்கா அணுக் குண்டுகளை வீசி, யப்பானை 14ஆம் திகதி சரணடைய வைத்ததை ஆகஸ்ட் 15 இல் யப்பான் மேலான வெற்றி நாளாக (VJ Day) மேற்குலகு கொண்டாடுகிறது. இரண்டு நாட்களிலும் இந்த யுத்தங்களில் பங்குபற்றிய போர் வீரர்களையும், உயிரிழந்த மக்களையும் போற்றி வணங்…
-
- 0 replies
- 319 views
-
-
தெற்கின் அரசியற்களமும் வடக்கின் அரசியல் முகமும் September 15, 2024 — கருணாகரன் — சிங்களத் தரப்பிலிருந்து இந்தத் தடவை இனவாதத்தை முன்னிறுத்தி ஜனாதிபதித் தேர்தற்பரப்புரைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதற்காக தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களெல்லாம் இனவாதத்தைத் துறந்து விட்டார்கள், கடந்து விட்டார்கள் என்றில்லை. அதற்கான சூழல் இல்லை என்பதே முக்கியமான காரணமாகும். அரசியல் வரலாறு என்பதே அப்படித்தான். எப்போதும் ஒரே மாதிரி இருப்பதுமில்லை. எல்லாம் கனிந்துதான் நிகழ்வது என்றுமில்லை. சூழ்நிலைகளே பல சந்தர்ப்பங்களிலும் மாற்றங்களை நிகழ்த்துவன. அப்படியானதொரு நிர்ப்பந்தச் சூழல் சிங்களத்தரப்புக்கு இப்பொழுது உருவாகியுள்ளது. ஏனென்றால் வழமையை விட இந்தத் தேர…
-
- 0 replies
- 319 views
-
-
தொய்வு நிலை தயக்கம், காரணம்? முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பகிரங்க கடிதம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களே- வணக்கம் உங்களைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளன. இதனால் உங்களுக்கு கடிதம் ஒன்றை எழுத வேண்டும் என தோன்றியது. இவர் முதலமைச்சராக இருந்து என்ன செய்தார் என்று சிலரும், நீங்கள்தான் இலங்கை அரசாங்கத்துக்கு சரியான அடி கொடுக்கக்கூடியவர் என்று வேறு சிலரும், அதேவேளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உடைத்தவர் நீங்கள்தான் என்று கூறுவோரும் உண்டு. ஒருவர் அரசியலில் ஈடுபட்டால், அவர் எத்தகைய உயர் தகுதி நிலையில் இருந்தாலும் அவர் குறித்து எழக்கூடிய சாதக பாதகமான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் ஏற்கத்தான் வேண்டும். …
-
- 0 replies
- 319 views
-
-
மைத்திரி அரசில் மொழிக் கொள்கை? லயனல் குருகே படம் | SILAN MUSLIM மத நல்லிணக்கத்தையும், தேசிய ஐக்கியத்தையும் பிரதானமாகக் கொண்டு கடந்த ஜனாதிபதித் தேர்தல் நிறைவுபெற்றது. வரலாற்றில் என்றும் இல்லாதவாறு தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு எதிராகத் தமது வாக்குகளைப் பயன்படுத்தினர். தமிழ், முஸ்லிம் மக்கள் தமது வாக்குகளை மைத்திரிபால சிறிசேனவுக்கே அள்ளிக் கொடுத்தனர். 30 வருடகால யுத்தம் முடிவடைந்த பின்னர் வடபுலத்தில் குறிப்பிட்ட பௌதீக அபிவிருத்தி ஏற்பட்டிருந்தாலும் மக்களின் இதயங்கள் வெல்லப்படவில்லை என மைத்திரிபால சிறிசேன தேர்தல் மேடைகளில் முழங்கினார். தமிழ், முஸ்லிம் மக்கள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதையிட்…
-
- 0 replies
- 319 views
-
-
“சேர்ந்து இயங்க வேண்டிய நேரம் ; காலம்” ? - நிலாந்தன் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் கிடைத்த பின் முல்லைத்தீவில் இருந்து ஒரு தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர் முகநூலில் பின்வருமாறு எழுதினார்… “முல்லைத்தீவு ரவிகரனோடு, கிளிநொச்சி சிறீயரோடு” என்று. அதற்கு கிளிநொச்சியைச் சேர்ந்தவரும் முன்பு பிரதேச சபை உறுப்பினராக இருந்தவரும், இப்பொழுது சுமந்திரனின் தீவிர விசுவாசியுமான ஒருவர் பதில் எழுதினார் “யாழ்ப்பாணம் சுமந்திரனோடு” என்று. இது ஒரு சமூக வலைத்தளக் காட்சி. இரண்டாவது காட்சி, தேர்தல் வெற்றிகள் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுமந்திரன், “தமிழரசுக் கட்சி பலவீனமடையவில்லை. தமிழ்த் தேசியக் கூடடமைப்பாக சேர்ந்து இருந்ததைவிட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கிறது” என்று கூறிய…
-
- 1 reply
- 319 views
-
-
அமெரிக்காவின் எல்லைக்குள் செல்லும் ரஸ்ய ஆயுதங்கள் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
-
- 2 replies
- 319 views
-
-
இலங்கை - ஒரு யுகத்தின் முடிவாகிப் போன 2020! - GTN December 19, 2020 விக்டர் ஐவன்… போதுமான அளவு கவனம் செலுத்தப்படாவிட்டாலும் இலங்கையில் 1948 இல் சுதந்திரத்துடன் ஆரம்பித்த யுகம் 2020 உடன் முடிவடைந்ததாகவே நான் கருதுகிறேன். நீண்ட கால காலனித்துவ ஆட்சியின் பின்னரான சுதந்திரத்தின் பின்னர் பிரித்தானியாவிடமிருந்து எங்களுக்கு வாரிசாகக் கிடைத்த அரசும் அதனுடன் தொடர்பான சமூக அரசியல் முறைமைகளும் முற்றாக வீழ்ச்சியடைந்து காலாவதியாகிப் போயுள்ளன என இதனைச் சுருக்கமாக எடுத்துச் சொல்லலாம். எமது எல்லைகள் எமக்குச் சுதந்திரம் தந்து விட்டுச் செல்லும் போது இலங்கைக்கு மரபுரிமையாகக் கிடைத்த முறைமைகளில் குறைபாடுகள் இருந்திருக்கலாம். இருந்தாலும் அதற்கு முன்னர் எம்மிடமிர…
-
- 0 replies
- 319 views
-
-
தமிழ் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுமா ஐ.நா…? நரேன்- ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனிதவுரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை தொடர்பான ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரின் அறிக்கை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே இலங்கை அரசாங்கம் ஐ.நா சபையையும், சர்வதேச நாடுகளையும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நன்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே கடந்த 2015 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி எடுக்கப்பட்ட எச்.ஆர்.சி 30- 1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கால அவகாசம் பெற்றிருந்தது. அந்த கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் இலங்கை அரசாங்கம் குறிப்பி…
-
- 0 replies
- 319 views
-
-
தமிழ் மக்கள் அங்கீகரிக்காத எந்தவொரு தீர்வையும் ஏற்கோம் கடந்த காலத்தைப்போல் ஏமாறவும் மாட்டோம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை இன்றைய ஆட்சியாளர்களான ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடைய அனுசரணையுடன் பெற்றே தீருவோம். எவ்வகை சூழ்நிலையிலும் கடந்த காலங்கள் போல் நாம் ஏமாறப்போவதுமில்லை. இதேவேளை தமிழ் மக்கள் அங்கீகரிக்காத எந்தவொரு அரசியல் தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். சமகால அரசியல் போக்கு குறித்தும் அரசியல் தீர்வின் முன்னேற்றம் குறித்தும் பொது மக்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் கட்சியின் உ…
-
- 1 reply
- 319 views
-
-
போராட்டங்களின் சாதிப்பு லக்ஸ்மன் உரிமைகளை அடைந்து கொள்வதற்கு போராட்டங்களை நடத்துவது நமது நாட்டில் மாத்திரமல்ல வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சாதாரணமாகனதாகவே இருக்கிறது. அது தொழிலாளர்களின் தொழில் உரிமைக்கானது. அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வது. சமூகங்கள் தங்களது உரிமைக்காக நடத்துவது. தனிப்பட்டவர்கள், நிறுவனம் சார்ந்தவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலவகையான போராட்டங்கள் நடந்துவருகின்றன. போராட்டம் என்பது சமூக, அரசியல், இனம், பொருளாதாரம் போன்ற உரிமை மறுப்புகள், வன்முறை, அதிகார கட்டுப்படுத்தல்கள், சுரண்டல்கள் போன்ற அநீதிகளைகளுக்கு எதிராக தனியாகவும் கூட்டாகவும் நடத்தப்படுவது வழமையாகும். தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக போராட்டங்க…
-
- 0 replies
- 318 views
-
-
ஜெனீவா – ஏமாற்றமா? சுபத்ரா மீண்டும் ஒருமுறை இலங்கை பற்றிய விவாதங்கள், ஜெனீவாவில் நடந்து முடிந்திருக்கின்றன. கடந்த வாரத்துடன் நிறைவடைந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், 37 ஆவது கூட்டத்தொடரில், கடந்த 19ஆம் திகதியும், 21ஆம் திகதியும் இலங்கை பற்றிய இரண்டு விவாதங்கள் இடம்பெற்றன. மார்ச் 19ஆம் திகதி நடந்தது, பூகோள கால மீளாய்வு அறிக்கை தொடர்பானது. அது அவ்வளவு முக்கியத்துவம் அற்றது. ஆனால், மார்ச் 21ஆம் நாள் நடந்த விவாதம் அப்படிப்பட்டதல்ல. அது ஒப்பீட்டளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் தான், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அமைச்சர்கள் சரத் அமுனுகம, பைசர் முஸ்தபா என்று …
-
- 0 replies
- 318 views
-
-
கடலில் இறங்கிப் போராடிய தமிழ் அரசியல்வாதிகள்? நிலாந்தன்! மீனவர்களுக்காக போராடத்தான் வேண்டும். விவசாயிகளுக்காக போராடத்தான் வேண்டும். ஆனால் போராட்டங்கள் திடீர் ரசங்கள் ஆகவோ அல்லது தேர்தல்மைய நோக்கு நிலையில் இருந்து சிந்திக்கப்பட்டவைகளாகவோ இருக்கக்கூடாது. மக்களை ஒரு திரளாக கூட்டிக் கட்டும் நோக்கிலானாவைகளாக இருக்க வேண்டும். 2009க்கு பின்னர் தீர்க்கப்படாத பிரச்சினைகளில் ஒன்று மீனவர் பிரச்சினை அது மீனவர்களின் பிரச்சினை தான் என்றாலும் அதை மீனவர்களால் தீர்த்துக் கொள்ள முடியாது. அதை மீனவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்று இதுவரை காலமும் இழுபட விட்டதில் ஒரு தந்திரம் உண்டு. இருதரப்பு மீனவர்களையும் மோத விட விரும்பும் சக்திகள் அதனால் வெற்றி பெறுகின்றன. எனவே அதை மீனவர்களுக்கு இ…
-
- 0 replies
- 318 views
-
-
வன்முறையின் குறிக்கோள் இந்நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் தொடருமாகவிருந்தால் நாங்கள் ஆயுதமேந்தி போராடவும்தயங்க மாட்டோம் என்ற ஆவேசமான கருத்தை பாராளுமன்றில் தெரிவித்திருந்தார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன். கண்டி நிர்வாக மாவட்டத்தில் தெல்தெனிய திகனவில் முஸ்லிம் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர தாக்குதல் மற்றும் வன்முறைச்சம்பவங்களைக் கண்டித்து அவரால் மேற்கண்ட காட்டமான வாக்கியங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தின்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப…
-
- 0 replies
- 318 views
-
-
ஆட்சி மாற்றங்களும் தமிழர் பிரச்சினைக்கான தீர்வும்? - யதீந்திரா ஆட்சி மாற்றமொன்று தேவை – அதன் மூலம்தான் பிரச்சினைகளை தீர்க்க முடியுமென்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். சம்பந்தன் எந்தப் பிரச்சினைகளை பற்றிப் பேசுகின்றார்? ஒரு வேளை அவர், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் பேசினால், ஆட்சி மாற்றம் தேவையென்னும் வாதம், சரியானதுதான் – ஏனெனில், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், ஒரு ஸ்திரமான அரசாங்கம் இருக்க வேண்டியது கட்டாயமானது. தற்போதுள்ள அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. ஒரு புறம் ராஜபக்சக்கள் வீழ்சியுற்றாலும் கூட, மறுபுறமாக, அவர்கள் பொதுஜன…
-
- 0 replies
- 318 views
-
-
திருத்தந்தை பிரான்சிஸும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும் Photo, Americamagazine திருத்தந்தை பிரான்சிஸ் காலமானார் எனும் செய்தி ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருப்பதும், அடுத்த திருத்தந்தை யார் என்ற ஊகங்கள் வெளிவரத் தொடங்குவதும் வரலாற்றில் புதியது அல்ல. திருத்தந்தையின் வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுக முயற்சிப்பது இயல்பானது. ஆனால், திருத்தந்தை பிரான்சிஸின் (ஆட்சிக்காலம்) காலத்தை புவிசார் அரசியல் பரப்பிலிருந்து ஆராயும் பார்வை அதிகரித்திருப்பதை நிராகரிக்க முடியாது. “திருத்தந்தை பிரான்சிஸின் புவிசார் அரசியல்” என்ற நூல் 2019 இல் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருந்ததையும் ஏனைய கட்டுரைகளையும் சாதாரண தேடல் மூலம் இணையத்தில் வாசிக்கலாம். தமிழ் வாசிப்பு ஆய்வுப்பரப்பில் தி…
-
- 0 replies
- 318 views
-
-
நாடாளுமன்றத்தில் குப்பை விவாதம் வேண்டுமா? பொது எதிரணி என அழைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் பெயரளவிலான தலைவரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்த்தன, கடந்த தமிழ், சிங்களப் புத்தாண்டு தினத்தில் மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்தமை தொடர்பாக, நாடாளுமன்ற விவாதம் ஒன்றைக் கேட்டு இருக்கிறார். அதற்கு இணங்குவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூறியிருக்கிறார். நாட்டில் முக்கியமான விடயங்கள் தொடர்பாகவும் அல்லது பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்றாலும் அவற்றைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்காக அவகாசம் கோருவது எதிர்க்கட்சிகளின் வழக்கமாகும். சில விவாதங்களின்போது, எதிர்…
-
- 0 replies
- 318 views
-
-
இலங்கையில் அதிகாரப்பரவலாக்கலுக்கான வாய்ப்புக்களை மேலும் மங்கச்செய்யும் காஷ்மீர் நிகழ்வுகள் பி.கே.பாலச்சந்திரன் கொழும்பு, ( நியூஸ் இன் ஏசியா ) இந்தியாவில் சமஷ்டிமுறைக்கும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஜம்மு -- காஷ்மீர் பிராந்தியத்துக்கான அதிகாரப் பரவலாக்கத்துக்கும் நடந்திருப்பவை இலங்கையின் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்டிருப்பவற்றையும் விட கூடுதலான அதிகாரப்பரவலாக்கலை இலங்கைத் தமிழர்கள் பெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் மங்கச்செய்யக்கூடும். பலம்பொருந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசாங்கம் ஜம்மு -- காஷ்மீர் மாநிலத்துக்கு பெருமளவு சுயாட்சியை வழங்கியிருந்த இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவையும…
-
- 0 replies
- 318 views
-
-
மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம்: அரசாங்கம் கையிலெடுக்கும் இன்னுமொரு ஆயுதம் அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதில் கிட்டத்தட்ட தோல்வியைக் கண்டுள்ள அரசாங்கம், மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை பெரும்பான்மைப் பலத்துடன் நிரூபித்திருக்கின்றது. இதனால் ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற நிலையில் அரசாங்கம் தனது கௌரவத்தைக் காப்பாற்றியிருக்கின்றது. ஆனால், சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு இச்சட்டமூலம், ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதுடன், இதுவிடயத்தில் சிறுபான்மைக் கட்சிகள் மீண்டுமொரு தடவை நம்பவைக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு இருப்பதாகவே உணர முடிகின்றது. இப…
-
- 0 replies
- 318 views
-
-
நினைவுத் தூபியை அவமதிப்பது? நிலாந்தன்! ஜெனிவா கூட்டத் தொடர் காலப்பகுதியில் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன் நிகழ்ந்த இழுபறிகளுக்குள் தமிழ்மக்களின் கவனம் திசை திருப்பப்பட்டிருக்கிறது. ஜெனிவா கூட்டத் தொடரானது தமிழ் மக்களுக்கு மோட்சத்தை பெற்று தராது என்பது கடந்த 13 ஆண்டு கால அனுபவம்.ஆனால் அக்கூட்டத்தொடர் காலகட்டத்தில் வந்த ஒரு நினைவு நாளை நீதிக்காக போராடும் ஒரு மக்கள்கூட்டம் எவ்வாறு வடிவமைத்திருந்திருக்க வேண்டும்? தமிழ் மக்களைப் பொறுத்தவரை நினைவு கூர்தல் என்பது ஒரு கூட்டுத் துக்கத்தை கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்றும் ஒரு நிகழ்வுதான். தமிழ் மக்களை ஓர் உணர்ச்சிகரமான புள்ளியில் நினைவு நாட்கள் இணைகின்றன. எனவே தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதற்குரிய உச்சபட்ச …
-
- 0 replies
- 318 views
-
-
உக்ரேனில் "ஜனநாயகம்" - நேட்டோ எதற்காக ஒரு போர் அபாயத்தை பணயம் வைக்கிறது? 24 January 2022 மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் போர் குற்றவாளிகள், பாரிய கொலைகாரர்கள், சைமன் பெட்லியுரா, ஸ்டீபன் பண்டேரா மற்றும் ரோமன் ஷுகேவிச் போன்ற யூத எதிர்ப்பு மற்றும் நாஜி ஒத்துழைப்பாளர்களுக்கு பொது நினைவுச் சின்னங்களை வைப்பதுடன் மற்றும் நினைவுதினங்களையும் அரசு கொண்டாடுகின்றது. உக்ரேனில் அரசின் பாதுகாப்புக் கரத்தின் கீழ் உலகம் முழுவதிலுமிருந்து நவ-நாஜிக்களை ஒருங்கிணைத்தல், இராணுவப் பயிற்சி மற்றும் உத்தியோகபூர்வ ஆயுதப் படைகளில் பாசிஸ்டுகளை ஒருங்கிணைத்தல் நிகழ்கின்றது. ஒரு சில தன்னலக்குழுக்கள் மற்றும் ஊழல் நிறைந்த நீதித்துறை மற்றும் அதிகாரிகளுக…
-
- 0 replies
- 318 views
-
-
பலமான தலைவர்களும் பலமான நிறுவனங்களும் -என்.கே. அஷோக்பரன் தமிழில் ‘முதல்வன்’ என்று ஒரு திரைப்படம். அதில், கதாநாயகன் ஒரே ஒரு நாள் மட்டும், மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றுவதாகக் கதை. அந்த ஒரு நாளில், குறித்த முதலமைச்சர், மக்களுடன் நேரடியாகத் தொலைபேசியில் உரையாடி, அவர்களின் குறைகளைக் கேட்டு, உடனே நேரடி களவிஜயம் செய்து, அதிரடி, தடாலடியாக நடவடிக்கைகளை எடுத்து, மக்களின் மனங்களை வெற்றி கொள்வதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் காட்சிகள், பலரையும் மயிர்க்கூச்செறியச் செய்திருக்கலாம், இப்படி ஒரு தலைவன், எமக்கு இல்லையே என்று அங்கலாய்க்கவும் ஆதங்கப்படவும் செய்திருக்கலாம். இவ்வளவும் ஏன், ஒரு நாட்டின் தலைவன் என்றால், இப்படியல்லவா இருக்க வேண்…
-
- 0 replies
- 318 views
-
-
மஹிந்த ராஜபக் ஷ தரப்பினர் கனவு நனவாகி விட்டால் நிலைமை என்ன? 2009 மே மாதம் முற்றுப் பெற்ற 26 வருட கால உள்நாட்டு யுத்தத்தில் பங்கேற்ற ஆயுதப்படையினர் தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து ஈட்டிய வெற்றியின் காரணமாக ‘யுத்த கதாநாயகர்கள்’ (War heroes) என்றழைக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை எச்சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பதற்கு தான் உறுதிபூண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிவருவதை யாரும் அறிவர். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் 3 கடற்படைத் தளபதிகளுக்கெதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தொடரப்பட்டது தவறு என்ற தோரணையில் ஜனாதிபதி மைத்திரிபால் 12.10.2016ஆம் திகதி இலங்க…
-
- 0 replies
- 318 views
-
-
ஜெனீவாவில் இந்தியாவின் நிலை என்ன? பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் ஒன்றிலேயே இடம்பெற்றிருக்கிறது. ஒரு பக்கத்தில் ஐ.நா விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டுள்ள சூழல், இன்னொரு பக்கத்தில், ஜெனீவாவில் அந்த அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடக்கவுள்ள சூழல், மற்றொரு புறத்தில் இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வு என்ன என்று சர்வதேச சமூகம் தீர்மானிக்கவுள்ள சூழல். இந்தப் பின்னணியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதுடெல்லிப்; பயணத்தின் போது, இந்த விவகாரம் குறித்து இந்தியத் தரப்புடனான பேச்சுக்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் கடந்த ஒன்பது மாதங்களாக…
-
- 0 replies
- 318 views
-