அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9329 topics in this forum
-
நேற்றுக்காலை போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ [04/10/2013] தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனைகாலை உணவுடன் சந்தித்தார். இந்த சந்திப்பின் பின்னர் அங்கு என்ன நடந்தது என்பது பற்றி அறிக்கை எதுவும் வெலியிடப்படவில்லை. ஆனால் சந்திப்பு நடந்தது என கூறப்பட்டது. ராஜபக்ஷ அலுவலகம் இந்த சந்திப்பினை உறுதிப்படுத்தி மஹித - சம்பந்தன் கைகுலுக்கும் படம் ஒன்றினையும் வெளியிட்டது. இதேவேளை இரா சம்பந்தன் அவர்கள் இந்த சந்திப்பு பற்றிக் கூறுகையில் மஹிந்த ராஜபக்ஷவே தன்னை அழைத்ததாக கூறினார். மேலும் பல விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக வழமை போன்று மழுப்பியுள்ளார். சம்பந்தன் மஹிந்தருடனான சந்திப்பில் இப்படித்தான் கூறுவார் அதர்கு மேல் கூரமாட்டார் கேட்டால் அது ராஜதந்திரம் எனக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
புலிகள் போட்ட முதலீட்டை கூட்டமைப்பு அழிக்கின்றதா? முத்துக்குமார் வட மாகாணசபை தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததற்கு மேலான வெற்றியை கொடுத்துவிட்டன. அரசியல்வாதிகள் தமது கடமைகளில் சுத்துமாத்துக்களை செய்தாலும் மக்கள் தமது கடமைகளை நேர்மையாகவே வரலாற்றில் செய்திருக்கின்றனர். இந்த தேர்தல் முடிவுகள் மீள ஒருதடவை அதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது. தமிழ்த் தேசியத்தோடு நாங்கள் உறுதியாக நிற்கின்றோம் என்பதை இதனைவிட வேறு வழிகளில் மக்களால் வெளிப்படுத்தியிருக்க முடியாது. உலக வரைபடத்தில் இலங்கைத் தீவினை அடையாளங்காண்பதே மிகவும் கடினம். ஒரு சிறிய புள்ளிபோன்றே அது இருக்கும். அதிலும் வடமாகாணத்தை கண்டுபிடிக்கவே முடியாது. இன்று வடமாகாணம் ஐக்கியநாடுகள் சபையின் கதவுகளைக்கூட தட்டியிருக்கின்றது. த…
-
- 1 reply
- 892 views
-
-
கொழும்பு மீதான சர்வதேச அழுத்தங்களைப் புரிந்து கொள்ளுதல் பிரம்மஞானி தமிழ் தேசிய சக்திகளின் கவனத்திற்கு: தெளிவான அவதானிப்பே திடமான செயலுக்கான அடித்தளத்தை வழங்கும் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஈழத் தமிழர் அரசியல் என்பது முற்றிலும் குழப்பகரமான நிலைக்குச் சென்றுவிட்டது. இன்றுவரை அந்த நிலைமையில் பெரியளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இது தவிர்க்கமுடியாத ஒன்றும் கூட. ஏனெனில், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியென்பது தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில் சாதாரணமான ஒரு விடயம் இல்லை. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி ஒரு மூன்று தசாப்தகால அரசியல் அறுவடையை வெறும் சாம்பல் மேடாக்கிவிட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் பலரால் மீண்டெழ முடியாமல்தான் இருக்கிறது. சிலருக்கு அது ஒருபோ…
-
- 0 replies
- 605 views
-
-
பொருளாதார அபிவிருத்தி மட்டும் சிறிலங்காவில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்தாது - ஆய்வாளர் [ வெள்ளிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2013, 11:30 GMT ] [ நித்தியபாரதி ] பாணைச் சாப்பிடுவதால் மட்டும் மனிதன் ஒருவன் உயிர் வாழந்துவிட முடியாது என்பதை அண்மையில் இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களித்து அரசாங்கத்தை தோல்வியுறச் செய்ததன் மூலம் தமிழ் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தென்னாசியவியல் போராசிரியர் வி.சூரியநாராயணன்* The New Indian Express ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. செப்ரெம்பர் 21 அன்று, பெரும்பான்மையினமான சிங்களவர்கள் வாழும் வடமேல் மாகாணம், மத்திய மாகாண…
-
- 0 replies
- 532 views
-
-
இராஜதந்திரப் போர் தமிழர்களுக்குப் புதிதல்லவே - வளவன் 04 அக்டோபர் 2013 உலக இராஜதந்திரக்களம் எப்போதும் தமிழர்களுக்கு சார்பானதாகவோ, அல்லது தமிழர்கள் மீதான அனுதாபம் மிக்கதாகவோ இருந்தது எனக் கொள்ள முடியாது. அது போலவே அது எல்லாவேளைகளிலும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருந்தது என்றும் கருத முடியாது. தமிழர்கள் மீது கரிசனையும் அனுதாபமும் கொண்டதாக உலக அரசியல் - இராஜதந்திரக் களம் தோற்றமளித்த சந்தர்ப்பங்களை மீள்வாசிப்புச் செய்தல் இன்றைய களநிலைமையின் கனதியையும், காலம் கையளித்துள்ள கடமையையும் உணர உதவும். போருக்குப் பிந்திய இந்தக் காலகட்டத்தில், ஈழத் தமிழர்கள் அரசியலில் எதைச் சாதித்தனர், எதைச் சாதிக்கப் போகின்றனர், ஈழத்தமிழரின் இலக்கை அடையும் முயற்சிகள் சரியான திசையில் செல்கின்றனவா என…
-
- 0 replies
- 700 views
-
-
முள்ளிவாய்க்கால் கிராமமும் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பும் [ வியாழக்கிழமை, 03 ஒக்ரோபர் 2013, 07:09 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள வன்னிப் பிரதேசத்தின் முள்ளிவாய்க்கால் கிராமத்திற்கு World Socialist இணையத்தள ஊடகவியலாளர்கள் தமது பயணத்தை மேற்கொண்டிருந்தனர். சிறிலங்காத் தீவில் நீண்ட காலமாகத் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரானது முள்ளிவாய்க்கால் கிராமத்தில் 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதிக் கட்ட யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இறுதிக்கட்ட யுத்தம் தீவிரமடைந்திருந்த பொழுதில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழிருந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்வதற்கு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் …
-
- 0 replies
- 606 views
-
-
விக்னேஸவரன் கூறிய மூன்றாவது அரசியல் போராட்டம் ஆரம்பம் - -அ.நிக்ஸன்- 01 அக்டோபர் 2013 Notes- நிர்வாக கட்டம் தேவiயில்லை தரையில் பாயை விரித்து மாகாண சபைக் கூட்டத்தை மட்டும் நடத்திக்காட்டுங்கள். Notes- தமிழத்தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியாக ஜனநாயக வழியில் அமைதியான முறையில் வீதியில் கூட இறங்காமல் இலங்கை அரசியலமைப்புச் சட்டங்கள் இப்படித்தான் பாருங்கள் என்பதை வெளிப்படுத்தி 60ஆண்டுகால அரசியல் போராட்டத்தை நியாப்படுத்த முடியும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கான காலம் தற்போது இல்லை என்பதை கொழும்பின் பேச்சுக்கள் நடவடிக்கைகள் கோடிட்டு காட்டுகின்றன. வடமாகாண சபைத் தேர்தலில் தமிழத்தேசிய கூட்டமைப்பு 30 ஆசனங்களை பெற்று விட்டது என்ற ஒரே ஒரு காரணத்துக்காக அரசாங்கமும் பங்காளிக் கட்சிகளும் க…
-
- 0 replies
- 597 views
-
-
விசாரணையில் தேசியம் : -யதீந்திரா தமிழ்த் தேசிய அரசியல் போக்கானது இன்று இந்தளவிற்கு வீரியம் கொள்வதற்கான பிரதான காரணம்,இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த வெற்றிகரமான அரசாங்கங்களின் எதேச்சாதிகார போக்குகளும்,அவற்றின் உதாசீனப்போக்குகளுமே ஆகும். இதில் என்னிடம் இரு வேறு கருத்துக்கள் கிடையாது. உதாரணமாக பண்டா-செல்வா ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமானால்,பின்னர் 83இன் துயர் நிகழ்ந்திருக்காது. அது 2009 வரை நீண்டிருக்காது. இத்தனை அழிவுகள் ஏற்பட்டிருக்காது. எனவே இன்றும்,தமிழ் தேசியம்,ஒரு விடயமாக விவாதிக்கப்படுவதற்கான பின்னனியாக,அரசாங்கத்தின் எதேச்சாதகாரப் போக்கே இருக்கின்றது. ஆனால் இவ்விடத்தில் நம் முன் எழும் கேள்வி – அவ்வாறு நியாயபூர்வமான காரணங்களின் அடிப்படையில் எழுச்சிபெற…
-
- 1 reply
- 628 views
-
-
மகிந்த ராஜபக்ஸவிடம் கற்றுக் கொள்ளுங்கள் ... மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்... 30 செப்டம்பர் 2013 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ராஜாபரமேஸ்வரி... வடமாகாண சபைக்கான போனஸ் ஆசன இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட 6 நாட்களுக்கு பின்புதான் இந்த மகா இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. அதுவும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது போன்று மன்னாரில் போட்டியிட்ட முஸ்லீம் பிரதிநிதி ஒருவருக்கு என்பது வாதப்பிரதிவாதங்கள் இன்றி முடிவாகி உள்ளது. இது வரவேற்கப்பட வேண்டியதே. மன்னாரில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய அயூப் அஸ்மிக்கு இந்த ஆசனம் கிடைத்துள்ளது. இனத்துவ முரண்பாடுகள் நிலவும் நாடுகளில் முதலாவது பெரும்பான்மைத் தேசிய இன ஆட்சியாளர்கள் இரண்டாவத…
-
- 1 reply
- 781 views
-
-
தவிர்க்க முடியாத சூழ்நிலையில், அவநம்பிக்கையுடனும், அச்சத்துடனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் அணுகப்பட்ட வடக்கு மாகாணசபை தேர்தலில், அவர்களே எதிர்பார்க்காத அறுதிப்பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள் வடக்கு வாழ் தமிழ்பேசும் மக்கள். தேர்தலுக்கு முன்னான சில நாட்களிலும், தேர்தல் தினத்தன்றிலும் கூட தமது வெற்றி குறித்த அச்ச உணர்வுடனேயே வேட்பாளர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்திருந்தனர். அவ்வாறானதொரு புறநிலை ஆளும் தரப்பால் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டு இருந்தது. மட்டுமில்லாமல், தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நிகழ்ந்த உள்வீட்டு பிரச்சனைகளும் இச் அச்சத்திற்கு ஒரு காரணியாக இருந்தது. இவற்றை எல்லாம் …
-
- 6 replies
- 816 views
-
-
வெற்றியும் பொறுப்பும் - நிலாந்தன் 29 செப்டம்பர் 2013 கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலான தமிழ் வாக்களிப்பு பாரம்பரியத்தின்படி மற்றுமொரு முறை தமிழ் இனமான அரசியல் பெருவெற்றி பெற்றிருக்கிறது. தமது தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை இதுவென்று கூட்டமைப்பு கூறுகிறது. இதுசரியா? பெருமளவுக்கு உணர்ச்சிகரமான விவகாரங்களின் மீது தளமிடப்பட்டிருக்கும் ஜனநாயகப் பரப்புகளில் எளிமையான கவர்ச்சியான சுலோகங்களே பொதுசனங்களை விரைவாகச் சென்றடைகின்றன. சிக்கலான தேர்தல் விஞ்ஞாபனங்களைப் படிப்பாளிகளும், அரசியல் மயப் படுத்தப்பட்ட பொதுசனங்களும் வாசிப்பதுண்டு. மார்ச்சிய முலவர்கள் கூறியதுபோல கருத்து மக்களைப் பற்றிக் கொண்டு ஒரு சக்தியாக உருவெடுப்பதற்கிடையில் எப்பொழுதும் எரிபற்று நிலையில் இருக்கு…
-
- 0 replies
- 536 views
-
-
2009 மே18 பின் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தி முடிவுக்கு வர ஈழ விடுதலையை முன்னெடுக்கும் முன்னெடுப்பார்கள் என நம்பியவர்கள் எல்லாம் தமிழர் தலைகளில் கல்லை போட செய்வதறியாது நின்ற ஈழ மக்களுக்கு தேசியத்தின் தலைவர் கைகட்டி போன தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே எஞ்சி இருத்தது அதன் பிரகாரம் ஈழமக்கள் அவர்கள் பின்ன நடக்க முழுமையான அரசியல் மட்டுமே செய்து பேசக்கூடிய செய்யக்கூடிய ஒருதலைவரை இவர் போராட பயப்பிடுறார் எனவும் சிங்களுத்துக்கு சார்பா நடக்குறார் எனவும் வசைபாடி துரோகியாக்கி என்ன எல்லாம் பேச முடியுமோ பேசி விலகி வைக்க பெரும் பாடு நடத்தது தெரிந்த விடையம் இதில் என்ன வேடிக்கை என்றால் தலைவரால் கைகாட்டபடு கூப்பிட்டு கூட்டமைப்புக்கு தலைவர் ஆகும்வரை சம்மந்தன் ஐயா பற்றி எவரும் வ…
-
- 5 replies
- 692 views
-
-
"முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழர்களை தோற்கடித்த மகிந்த தேர்தல் யுத்தத்தில் மக்களிடம் தோற்றுப்போனார்"குளோபல் தமிழ் செய்திகளுக்காக பிரியதர்தசன் வடக்குத் தேர்தலும் தமிழ் மக்களின் தீர்ப்பும் இதை ஒரு போராட்டம் என்றே குறிப்பிடவேண்டும். ஆழ்கடலில் தவிப்பவனுக்கு சிறு துரும்பும் ஓடம் என்பதுபோல இன்று ஈழத் தமிழர்கள் இந்த உலகத்தால் தள்ளப்பட்ட சூன்ய அரசியல் வெளிக்குள் வடக்கு மாகாண சபைத் தேர்தலை ஒரு போராட்டமாவே செய்து முடித்திருக்கின்றனர். அதுவும் இரக்கமற்ற கொடிய இலங்கை அரச படைகளின் துப்பாக்கிகளின் நிழலில்தான் வடக்கு மக்கள் இந்தத் தேர்தலில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தலின் பொழுது வாக்களிப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட பொழுது மக்களை அச்…
-
- 0 replies
- 793 views
-
-
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் - 'சமூக சிற்பிகளின்' ஆய்வு [ வியாழக்கிழமை, 26 செப்ரெம்பர் 2013, 02:26 GMT ] [ நித்தியபாரதி ] போர் முடிவுற்ற கையோடு சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் தமது அடுத்த கட்ட நிலை தொடர்பில் குழப்பமடைந்திருந்தனர். குறிப்பாக தமிழ் மக்கள் தமக்கான அரசியல் எதிர்காலம் தொடர்பில் குழப்பமடைந்திருந்தனர். இவ்வாறு சமூக சிற்பிகள் அடைப்பின் [The Social Architects - TSA.] நிறுவக உறுப்பினர்களான *Gibson Bateman and Rathika Innasimuttu ஆகியோர் [sep 23, 2013] எழுதியுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளனர். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்திபாரதி. இவ்வார இறுதியில் சிறிலங்காவின் வடக்கில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட…
-
- 2 replies
- 755 views
-
-
செப்டெம்பர் 26, ஈழத்தமிழினத்தின் வாழ்வில் மறக்கமுடியாத நாள். காந்தியின் அகிம்சைப்போராட்ட வடிவத்தின் உச்சத்தை தொட்டுச் சென்ற, லெப்.கேணல்.திலீபன் மரணித்த நாள். ஆயுதப்போராட்டத்தின் ‘வான்’ பரிமாணத்தை எட்டிவிட ,முப்பொழுதும் உழைத்த கேணல். சங்கரை, எதிரியின் ஆழ உடுருவும் கோழைப்படையணி முள்ளியவளையில் வீழ்த்திய நாள். அந்த நாள்....ஒடுக்குமுறைக்கு எதிராக வீறு கொண்டெழும் தேசங்களுக்கும், ஒடுக்கப்படும் மக்களுக்கும் விடுதலை உணர்வினை ஊட்டும் நாள். 266 மணி நேரம், மரணத்துள் வாழ்ந்த திலீபனின் ஒருமுகப்பட்ட சிந்தனை 5 அம்சக் கோரிக்கைகளிலேயே நிலைத்து நின்றது. சாவினை அரவணைத்தபடியே இலக்கோடு வாழ்ந்தார் திலீபன். இனத்தின் அடையாளங்களைத் தொலைத்துவிட்டு, அழிப்பவனோடு நல்லிணக்க அரசியல் பேசும் அடிபணி…
-
- 2 replies
- 961 views
-
-
இரண்டு மே-18களும், மக்கள் ஆணையும் -- வளவன் 25 செப்டம்பர் 2013 (மிதவாதத்திலிருந்து தீவிரவாதத்திற்கும் தீவிரவாதத்திலிருந்து மிதவாதத்திற்கும்) தமிழர் தேசிய விடுதலைக்கான முப்பது வருட கால சாத்வீகப்போராட்டத்தின் நிறைவுக்கட்டத்தில் 1976 மே 14 ம் திகதி வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு 1977 தேர்தலில் ' ஈழத்தமிழர்களின் அரசியல் இலக்கு தனிவேறான தமிழீழ அரசு ' என்பதை ஆணித்தரமாக எடுத்தியம்பும் மக்களாணை பெறப்பட்டது. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும். அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும் என்ற தீர்மானத்தின் சாரம் …
-
- 0 replies
- 522 views
-
-
சென்ற இதழ் கட்டுரை தொடர்பாக நண்பர்கள் அப்புசாமிக்கும் குப்புசாமிக்கும் இடையே ஒரு மோதலே நடந்து முடிந்துவிட்டது. திலீபன் என்கிற ஈடு இணையற்ற போராளியின் உன்னதமான அறப்போர் பற்றி எழுதவேண்டிய நேரத்தில் பொறுப்பும் அர்ப்பணிப்பும் இல்லாத தயிர் சோற்று சிவகாமிகள் பற்றியெல்லாம் எழுதலாமா என்பது குப்புசாமியின் வாதம். போலிகளைப் பற்றி எழுதினால்தான் திலீபனின் தியாகத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்பது அப்புசாமியின் வாதம். (இந்த மாஜி ஐ.ஏ.எஸ். பற்றித்தான் எழுதச் சொன்னாராம் அவர்.) நீங்கள் அப்புசாமி கட்சியா குப்புசாமி கட்சியா? எனக்குத் தெரியாது. என்றாலும் தயிர்சாதத்துடன் அன்புச் சகோதரி சிவகாமி உண்ணாவிரதப் பந்தலுக்குள் நுழைந்ததையும் தயிர்சாதம் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு மணி நேரமும் தயிர் சாதம் ச…
-
- 0 replies
- 509 views
-
-
ஒரு விதமாக முன்னாள் நீதிபதி விக்கினேசுவரன் அவர்கள் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக வந்துள்ளார். இது பற்றி யாழ் களத்தில் பலமுறை பேசியுள்ளோம். பேசிக்கொண்டிருக்கின்றோம். அவர் என்ன சொல்லப்போகின்றார் என்ற கேள்விக்கும் தமிழ் மக்களின் நலன்களுக்காக பாடுபடுவேன் என சொல்லியுள்ளது இன்று வெளி வந்துள்ளது. இந்தநிலையில் தமிழரின் உரிமைப்போராட்டம் பலவாறு வீறு கொண்டு எழுந்து இன்று எதுவும் கைகூடாதநிலையில் ஒவ்வொருவரையும் நம்பி எல்லோராலும் ஏமாற்றப்பட்டு எந்த ஒரு நம்பிக்கையுமற்று படுகுழியில் கிடக்கும் இவ்வேளை இது போன்ற சில முடிவுகளை தமிழர் தரப்பு எடுப்பது முக்கியம் பெறுகிறது. முன்னாள் நீதிபதி என்ன இறைவனே வந்தாலும் மசியாது அடக்கும் சிங்களத்தின் கபட ஆட்சியின் முன்னால் இந…
-
- 9 replies
- 968 views
-
-
யுத்தத்தை அழித்த மஹிந்தவுக்கு அரசியலால் தமிழர்களை வெற்றி கொள்ள முடியவில்லை - -அ.நிக்ஸன்- 23 செப்டம்பர் 2013 "மதுவுக்கும் பணத்திற்கும் வாக்குகளை விற்பணை செய்வது மற்றும் நிவாரண அரசிலுக்கும் பழக்கப்பட்டவர்கள் அல்ல தமிழர்கள்" தமிழ் மக்கள் தமிழ் ஈழம் கேட்கிறார்களா கேட்கவில்லையா என்பதற்கு அப்பால் சுயமரியாதைய இழக்க அவர்கள் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் தமிழ் ஈழம் கேட்டு போராடினார்கள். பெரும்பான்மைத் தமிழ் மக்கள் அதற்கு ஆதரவு வழங்கினர். பேரிணவாதத்துக்கு அடிப்பதற்கு புலிகள்தான் சரி என்ற முடிவு தமிழர்களிடம் இருந்தது. ஆனால் சர்வதேசம் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி அவர்களை அழிப்பதற்கு மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு உதவியளித்தனர். இந்தியா அதற்கான நகர்வு…
-
- 0 replies
- 936 views
-
-
தமிழ்த் தேசியம் ஒருமுகமூடி by noelnadesan இலங்கையில் தமிழர் அரசியலின் அறுபத்தைந்து வருடகால வரலாறு எக்காலத்திலும் இலங்கைத் தமிழ் சமூகத்தை அறிவார்ந்த முடிவுகளைஎடுப்பவர்களாக காண்பிக்கவில்லை. தனது உணர்ச்சிகளின் கொதிப்பில் வெந்துஅழியும் இனமாகத்தான் நிரூபித்திருக்கிறது. இதற்கு நான் பல உதாரணங்களைச் சொல்ல வேண்டியஅவசியம் இல்லை. வியட்நாமியயுத்தகாலத்தில் மட்டும்தான் புத்தபிக்கு தன்னை எரித்துக் கொண்டதாக அறிந்தோம். ஆனால் ஜெனிவாவிற்கும் சென்று தீக்குளிக்கும் முட்டாள்தனத்தைக் கொண்ட சமூகமாகத்தான் எமது தமிழ் இனம் உருவாகியிருக்கிறது. ஜெனிவாவின் பிரஜைகள் எரிந்து இறந்த உடலை அப்புறப்படுத்தும் பொழுது அந்தக் கோரத்தை இளம் பிள்ளைகள் பார்த்து விடக்கூடாது என்பது பற்றித்தான் ஜெனிவா நகரத்தினர்…
-
- 2 replies
- 911 views
-
-
வரலாற்றில் என்றும் இல்லாதளவிற்கு கடும் அச்சுறுத்தல்களுடனும், எச்சரிக்கைகளுடனும் வடமாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்படுகின்றது. இந்தத் தேர்தலில் தங்கள் வெற்றிகளை விட, எதிர்த்துப் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தோற்கடிக்க வேண்டும் என்பதையே குறியாகக் கொண்டு சிங்களப் பேரினவாதம் சாம, தான, பேத, தண்டம் என அனைத்து வழிகளையும் கையாண்டு வருகின்றது. இராணுவத்தினரும், புலனாய்வாளர்களும், ஒட்டுக்குழுக்களும் எல்லா வழிகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும், அவர்களுக்கு ஆதரவாக தேர்தல்ப் பணியாற்றுபவர்களையும் அச்சுறுத்திப் பார்த்துவிட்டனர். ஆனாலும், கூட்டமைப்பிற்கே வெற்றி கிடைக்கும் என சிங்களப் பேரினவாதமே உறுதியாக நம்புகின்றது. இதனால் தேர்தலை வென்றுவிடுவதற்காக மகிந்த ராஜபக்சவே …
-
- 3 replies
- 1k views
-
-
கிளை பலமானது என்று பார்த்து எந்த பறவையும் அமர்வதில்லை. எந்த நேரத்தில் கிளை முறிந்தாலும் பறக்க திடமான சிறகுகள் தன்னிடம் உள்ளன என்பதே பறவையின் பலம். அதுவே எமது பலமாகவும் இருக்கட்டும். கூட்டமைப்புக்கு வாக்களிப்போம். சிங்கள தேசத்தின் தேசிய அரசியலை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை காட்டுவதற்காகவேனும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களித்தே ஆகவேண்டும். வேறுவழி எதுவுமே இல்லை. இருப்பதில் இப்போதைக்கு இதுவே சிறந்தது. மகிந்தர் இந்த தேர்தலை நடாத்துவது ஒன்றும் தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை ஏற்றுக்கொண்டு அல்ல. அவருக்கு இறுகிக்கொண்டே வரும் சர்வதேசத்து அழுத்தங்களில் இருந்து தற்காலிகமாக ஓரளவுக்கு தன்னை சுதாகரித்துக் கொள்ளவே என்பது சிறுகுழந்தைக்கும் தெரிந்த பெரிய உண்மையாகும். மேலும் இ…
-
- 1 reply
- 630 views
-
-
இந்தியாவும் ராஜபக்சேவும் வேறு வேறு அல்ல. இரண்டுபேருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். (இந்தியா என்று நான் குறிப்பிடுவதுஇ இந்தியாவை ஆளும் மத்திய அரசை!) இந்தியாவையும் ராஜபக்சேவையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் இரண்டு ஒற்றுமைகளைப் பார்த்து வியந்து போவார்கள். 1. இருவருமே வஞ்சகர்களில்லை நயவஞ்சகர்கள். நம்பவைத்துக் கழுத்தறுப்பதில் விற்பன்னர்கள். 2. இரண்டுமே புளுகுப் பூனைகள். சொல் வேறு செயல் வேறு. நான்தான் உனக்குப் பாதுகாப்பு - என்று அவர்கள் சொன்னால் மறுநாள் நாம் பிரியாணி ஆகப்போகிறோம் என்று பொருள். ராஜபக்சேவின் பொய்முகத்தை முழுமையாக அறிந்தவர் சிங்களப் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க. அதனால்தான் லசந்தவை விட்டுவைக்கவில்லை ராஜபக்சே வகையறா. நடுத்தெருவில் சுட்டுக் கொன்றது. கொழும்…
-
- 0 replies
- 765 views
-
-
"இங்கு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறிலங்கா அரசாங்கமானது நாட்டில் 'இறுதியான நிலையான அரசியற் தீர்வொன்றை' முன்வைப்பதற்குப் பதிலாக 'வீதிகளுக்கு தரைவிரிப்புக்களை (carpeting the road)' போடும் பணியில் ஈடுபட்டுள்ளது" என றெக்னோ அடிகளார் குறிப்பிட்டார். இவ்வாறான அதிருப்தியான உணர்வுகளுடன் வடக்கில் மக்கள் வாழ்கின்றனர். இவ்வாறு ucanews.com correspondent, யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவிக்கின்றார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் வடக்கில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்களைப் போன்று, கடந்த நான்கு ஆண்டுகளாக அருட்திரு றெக்னோ பேர்னாட் அடிகளார் நாட்டில் நல்லதொரு சூழல் வருமென்ற எதிர்பார்ப்புடன் பொறுமையாகக் காத்திருக்கிறார். நல்லதொரு சமிக்கையான…
-
- 0 replies
- 720 views
-
-
இலங்கையின் வடமாகாணத் தேர்தல், அபிவிருத்திக்கும் அரசியல் உரிமைக்கும் இடையிலான போட்டியாகத் திகழ்கின்றது. யதார்த்தங்கள் குறைவு, எதிர்பார்ப்புகள் பெரிது இந்த மக்களிடம் இந்தத் தேர்தலில் அபிவிருத்தியை முன்னிறுத்தி ஆளும் கூட்டணியாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி களத்தில் இறங்கியிருக்கின்றது. அதேநேரம் அரசியல் உரிமையை முதன்மைப்படுத்தி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரசாரம் செய்து வருகின்றது. வடமாகாண சபை என்பது, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதாகும். இதற்குப் போதிய அதிகாரங்களில்லை.தமிழ் மக்கள் எதிர்நோக்கியிருக்கின்ற இனப்பிரச்சினைக்கு இது தீர்வாகமாட்டாது என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். பிளவுபட்டுள்ள முஸ்லிம்…
-
- 0 replies
- 527 views
-