அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
சிறிலங்கா இராணுவத்தின் நில அபகரிப்பும் - தமிழ்மக்களின் சொத்துரிமையும் [ சனிக்கிழமை, 13 யூலை 2013, 07:22 GMT ] [ நித்தியபாரதி ] சொத்து உரிமை என்பது பலவீனமாகவும், வினைத்திறனற்றதாகவும் இருப்பதால் போருக்குப் பின்னான சூழலில் பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன. இரத்தம் சிந்தப்பட்ட நீண்ட கால யுத்தமானது முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பொருளாதாரத்திற்கு மீளவும் புத்துணர்வு வழங்குவதில் மிகப் பாதுகாப்பான சொத்து உரிமைகள் என்பது தேவைப்பாடானதாகும். இவ்வாறான சூழலில் வாழும் பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்களுக்கு குறிப்பாக விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரமானது சொத்துப் பாதுகாத்தல் உரிமையிலும், தமது நிலங்களைப் பயன்படுத்தும் உரிமையிலுமே தங்கியுள்ளது. இதற்கும் மேலாக, நம்பகம…
-
- 0 replies
- 517 views
-
-
மேட்டுக்குடி உறவுகளைத் துறப்பாரா விக்னேஸ்வரன்? முத்துக்குமார் இந்திய அரசின் புண்ணியத்தில் வடமாகாணத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. ஊடகங்கள் பரபரப்பாகச் செய்திகளை வெளியிடத் தொடங்கிவிட்டன. ஆனால் அரசியற் கட்சிகள்தான் இன்னமும் வேட்பாளர் பட்டியலை நிறைவு செய்யவில்லை. இது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும், ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணிக்குள்ளும் உள் இழுபறிகள் முடிவுக்கு வரவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள கட்சிகள் சில தனித்துப் போட்டியிடுவதா? கூட்டணிச் சின்னத்தில் போட்டியிடுவதா? என இழுபறிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கூட்டணியில் பிரதான கட்சியாக விளங்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடும் விருப்பிலேயே உள்ளது. வடமாகாணத் தேர்தல் நடைபெறலாம…
-
- 4 replies
- 1.1k views
-
-
தடைசெய்யப்பட்ட 'ரைம்' சஞ்சிகையும் வலுவடையும் பௌத்த தீவிரவாதமும் - பார்த்தீபன் - 10 ஜூலை 2013 உலகின் முன்னணி சஞ்சிகையான அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'ரைம்' வார இதழ் கடந்த வாரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டது. பின்னர் சஞ்சிகை தடை செய்யப்பட்டு சுமார் 4,000 பிரதிகளை சுங்கப் பகுதியினர் கைப்பற்றிக்கொண்டார்கள். சர்வதேச ரீதியில் முன்னணியிலுள்ள சஞ்சிகை ஒன்று இலங்கையில் தடைசெய்யப்படுவது இதுதான் முதல் முறை என்பதால் விவகாரம் சர்வதேச கவனத்தைப் பெற்றிருக்கின்றது. ஊடக சுதந்திரம் தொடர்பில் முக்கியமாகப் பேசப்படும் நிலையில் இந்தத் தடை, அதுவும் அமெரிக்காவின் முன்னணி சஞ்சினை ஒன்றின் மீதான தடை அனைவரின் ஊடக சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்களின் கவனத்துக்குச…
-
- 1 reply
- 452 views
-
-
ஆபிரிக்காவில் பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்த முதலாவது நாடு தென் ஆபிரிக்கா: அங்கு வாழ்ந்த வெள்ளையர்களிடம் கொடுத்ததால், 'போராட்டம் இன்றி' கொடுக்கப் பட்டது. கடைசியாக 'போராடி' பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்தவர்கள், ரொடிசியா என அழைக்கப் பட்ட சிம்பாவே. இரு நாடுகளிலும் பெரும்பான்மையினர் கருப்பர்கள். வெள்ளை சிறுபான்மையினர் ஆட்சி பொறுப்பில் இருந்தார்கள். தாம் சிறுபான்மையினர் என்ற எண்ணம் இல்லாது, மேற்குலகம் ஆதரவு தரும் என இறுமாந்து எந்த வித சமரசமும் இன்றி, பெரும்பான்மை இனத்தவருடன் மோதி, தோற்று, பின்னர், பலவீனமான நிலையில் பேச்சு வார்த்தைக்குப் போய், வெள்ளையர் நலன்களை உறுதிப் படுத்தி பின்னர் சுதந்திரம் வழங்கி, இன்று பிரித்தானியா என்றாலே பாம்பாகச் சீ…
-
- 8 replies
- 810 views
-
-
மிக மும்மரமாக, வட மாகாண சபைக்கான தேர்தல்களுக்கு முன்னர், அம்மாகான சபைகள் உருவாக வழிவகுத்த அரசியில் அமைப்பின் 13 வது சட்டத்தினையே ஒன்றுமில்லாமல் ஆக்கி, வெறும் தேர்தலை வைத்து, தமிழர்களை மட்டும் மல்லாது சர்வதேச நாடுகளையும் ஏமாத்த சகோதரர்கள் போட்ட திட்டம் இந்திய கோப சுழியில் சிக்கி சிதறி விட்டது போல் தெரிகின்றது. அவிட்டு விட்டப் பட்ட, அமைச்சரவையில் இருந்த இனவாதிகள் மீண்டும் கட்டப் படுகின்றனர். தமிழர்களுக்கு உள்ள ஒரே வழி, இந்தியாவின் உதவியுடன் வரையப் படும் இந்த சிறு கோட்டினைப் பிடித்து ரோட்டினைப் போடுவது தான். http://www.dailymirror.lk/news/32300-govt-to-proceed-with-pc-polls-under-existing-provisions-of-13th-amendment.html
-
- 17 replies
- 1.6k views
-
-
13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, இந்தியாவின் கருத்தினை செவிமடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதனை இந்தியா புரிந்து கொள்ளுமென்று, இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், சனாதிபதியின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்ச தெளிவாகக் கூறுவதை இந்தியா கவனத்தில் கொள்ளாவிட்டாலும், அவர் என்ன சொல்ல வருகிறார் என்று, தமிழர் தரப்போடு அடிக்கடி உரையாடும் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனுக்கு புரியும். உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வு குறித்தே தாம் அக்கறை கொள்வதாக, கோத்தபாயா முதல் நிமால் சிறிபால டி.சில்வா வரை ஒருமித்தகுரலில் பாடுவதை, விரைவில் இலங்கை வரும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கவனத்தில் கொள்வாரென்று சிலர் நம்பலாம். கடந்த நான்கு ஆண்டுகளாக வட-கிழக்கில…
-
- 6 replies
- 723 views
-
-
ஜெனீவா தீர்மானம் ஏற்கப்படாத நிலையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா சொல்லப்போவது என்ன? 1983 ஆம் ஆண்டில் இருந்து 2009ஆம் அண்டு முள்ளிவாய்க்கால் அவலம் வரை எத்தனை கண்டனங்கள் அழுத்தங்கள். அத்தனையும் சலித்துப்போய்விட்டன. பொதுநலவாய நாடுகளின் மாநாடு இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறும்போது இனப்பிரச்சினைத் தீவுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் இந்தியாவும் கூறுகின்றது. ஏன் பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்காத அமெரிக்காவும் எதிர்பார்க்கின்றது. ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை இந்த கண்டனங்கள் அழுத்தங்கள் போன்றவற்றை 1983ஆம் ஆண்டில் இருந்து காண்கின்றனர். 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடைபெற்றபோது எத்தனை கண்டனங்கள் எழுந்தன. ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் கூட இலங்கை நிலைமை விவாதிக்க…
-
- 1 reply
- 840 views
-
-
மேனன் விஜயம் - நிலாந்தன் 07 ஜூலை 2013 சிவ்சங்கர் மேனன் நாளை மறுநாள் வருகிறார். அவர் வருவது ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு என்றும், அப்படி வரும்போது அவர் அரசுப் பிரதிநிதிகளைச் சந்திப்பார் என்றும் ஒரு செய்தி உண்டு. ராஜிய நகர்வுகளில் இதுவும் ஒரு வகைதான். அதாவது வேறு எதற்கோ வருவதுபோல் வந்து விவகாரத்தைக் கையாண்டுவிட்டுப்போவது என்பது. ஆனால், எது விவகாரமோ அதைப் பிரதான நிகழ்ச்சி நிரலாக உத்தியோகபூர்வமாக இரு நாடுகளும் அறிவிக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். அப்படி உத்தியோக பூர்வமாக அறிவிக்குமளவிற்கு இவ்வருகை முக்கியத்துவமற்றது என்று கருதியிருக்கலாம் அல்லது அப்படி அறிவிப்பதால் ஏதாவது ஒரு தரப்புக்கு நேரிடக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்க முயற்சிக்கலாம். எதுவாயி…
-
- 5 replies
- 898 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மிக நீண்ட காலமாகக் கை நழுவல் போக்கினை கடைப் பிடித்து வந்த இந்தியா இப்போது மீண்டும் தீவிரமாக இப்பிரச்சனையினை கையில் எடுத்துள்ளது போல் தெரிகின்றது. தனது அமைச்சரவையில், இனவாதிகளை வைத்துக் கொண்டு, தேவையான போது அவிழ்த்து விடுவதும், தேவை இல்லாத போது கட்டி வைப்பதுமாக ராஜபக்ச சகோதரர்கள் காட்டும் சித்து விளையாட்டுக்கு ஒரு கடிவாளம் இடப்பட்டிருப்பதாக தோன்றுகின்றது. வெளிவிவகார முடிவுகளை சகோதரர்களே பெரும்பாலும் எடுப்பதால், இலங்கை வெளி விவகார அமைச்சர் பீரிஸ் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாகி அவர் மீதான டெல்லியின் நம்பகத் தன்மை இல்லாது போய், இம்முறை பசில் ராஜபக்சே நேரடியாக அழைக்கப் பட்டு இருக்கின்றார். டெல்லியில் பசிலுக்கு, இந்தியாவின் எதிர்ப் பார்ப்புகள்…
-
- 5 replies
- 1.1k views
-
-
சீனா, சிறிலங்கா குறித்த மூலோபாயக் கொள்கைகளை இந்தியா மாற்ற வேண்டும் – கேணல் ஹரிகரன் [ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 05:13 GMT ] [ நித்தியபாரதி ] சீனாவின் கடல்சார் நடவடிக்கைகள் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அதிகரிப்பதால் ஏற்படுகின்ற ஆபத்தை தவிர்ப்பதற்கு, சீனா மற்றும் சிறிலங்கா தொடர்பான தனது மூலோபாயக் கொள்கைகளில் இந்தியா மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இவ்வாறு சண்டேலீடர் ஆங்கில வாரஇதழுக்கு அளித்துள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ள இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன். அவரது செவ்வியை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் 'நித்தியபாரதி'. கேள்வி: சிறிலங்காவின் தேசிய பிரச்சினையில் இந்தியா கடந்த பல பத்தாண்டுகள…
-
- 7 replies
- 926 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு திடீரென தமது பழைய முடிவுகளை மாற்றினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.. மேலும் அவர் தெரிவிக்கையில் 13 வது திருத்த சட்டம் அது இருக்கும் நிலையிலோ தற்போது உள்ள நிலையில் பலவீனப்பட்டாலும் அது பெயருக்காவது இருந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்தியாவின் சிந்தனையும் செயற்பாடுகளும் அமைகின்றன இந்திய இலங்கை ஒப்பந்தம் உயிரோடு இருப்பதற்கு 13 வது திருத்தம் தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது 13 வது திருத்தத்தை நீக்கினால் அல்லது தமிழர்கள் 13 வது திருத்த சட்டத்தை வேண்டாம் என கூறுமிடத்து இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு கேள்விக்குறியான நிலைமையே உருவாகும் . இந்தியாவுடைய நலன்கள் இவ் ஒப்பந்தத்…
-
- 0 replies
- 772 views
-
-
ஈ.பி.டி.பி கட்சியில் இருந்து விலகிய ஒருவரின் நேரடி வாக்கு மூலம். வணக்கம் மக்களா. நான் தவராசா தினேஷ் நான் இலங்கையின் வவுனியா பகுதியை சேர்ந்தவன் இப்போது மலேசியாவில் வாழ்கிறேன். நான் EPDP கட்சியில் இருந்து தப்பி ஓடியவன். அது கட்சி என்று சொல்வதைவிட நரகக்குழி என்று சொல்லலாம் அந்த அளவுக்கு மோசமான இடம். டக்ளசின் தலைமையில் மிகப்பெரும் சட்டவிரோத செயல்களே அங்கு நடைபெறுகிறது. இதில் இடம்பெறும் உறுப்பினர்கள் எல்லோரும் மிகப்பெரும் குற்றவாளிகள். நானும் அப்படியே இருந்தேன் இப்போது திருந்தி வாழ்கின்றேன். இக்கும்பலிடம் சிக்கினால் எனக்கு மரணம் தான் நான் உயிருக்கு பயப்பிடவில்லை நான் செய்த பாவங்களுக்கு தண்டனை பெறத்தானே வேண்டும் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறேன். மக்களே நான் இந்த நரகக…
-
- 9 replies
- 1.5k views
-
-
திருமலை மண்ணில் பன்னாட்டுக் கம்பனிகள் : இதயச்சந்திரன் அண்மைக்காலமாக அரசியல் வெளியில் உரையாடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து, இப்போது எவரும் பேசுவதில்லை. அந்த அறிக்கைக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து அரசும் அலட்டிக்கொள்வதில்லை. அதனை வரவேற்ற பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா, கொழும்பில் மாநாடு நடாத்துவதில் அக்கறை செலுத்தும் அளவிற்கு, தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை பற்றி வாய் திறப்பதில்லை. இலங்கையில் மாநாடுகளையும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளையும், வர்த்தக கண்காட்சிகளையும், பாதுகாப்பு கூட்டங்களையும் நடாத்தும் சர்வதேச நாடுகள், சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமது பூர்வீக நிலத்தையும், தேசிய இன அடையாளங்களையும் இழந்து கொண்டிருக்கும் தம…
-
- 0 replies
- 582 views
-
-
ஒர் எழுத்தாளரான ஜெயமோகனின் தமிழக மக்கள் பற்றிய புரிதல்: ( இது சரியானதா? தவறானதா என்பதைப்பற்றி முழுமையாகப்படித்தபின் உங்கள் கருத்தை பதிவுசெய்க. நன்றி : > தமிழகத்தின் பொதுமக்களிடையே வேறு எந்தக் கலையில் தரமான ரசனையும் ஆர்வமும் இருப்பதைக் கண்டீர்கள்? எந்தத் தளத்தில் பொருட்படுத்தவேண்டிய சிந்தனைகள் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்கள்? எங்கே அடிப்படைத்தகவல்களாவது தெரிந்துவைத்திருப்பவர்களை சந்தித்திருக்கிறீர்கள்? நேற்று ஒரு நண்பர் சொன்னார். சில ஆண்டுகளுக்கு முன்னல் ஃபேஸ்புக்கில் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஒரு கன்னடர் என்பதை அவர் சொன்னதும் நூற்றுக்கணக்கானவர்கள் கொந்தளித்து வந்து அதை எதிர்த்தார்கள். அது ஓர் அவதூறு என்றார்கள். எல்லாருமே ஈவேரா ஆதரவாளர்கள். அவரைப்பற்றி அவர்களுக்குத் தெரிந…
-
- 1 reply
- 985 views
-
-
வெள்ளை யானை பார்க்கின்ற விழிப்புலனற்றோர் அண்மையில் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களின் பிரதானிகளைச் சந்தித்தபோது வெளியிட்ட கருத்துக்கள், அவரினதும் அவரால் தலைமையேற்று நடத்தப்படும் அரசினதும் இனப்பிரச்சினை தொடர்பான மற்றும் மாகாண சபைகள் தொடர்பான அணுகுமுறையின் ஒரு தெளிவான தூரநோக்குடைய இலக்குகளை அம்பலப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன. வெள்ளை யானை இனி வேண்டாம் இன்று சிங்களக் கடும் போக்காளர்கள் எனக் கருதப்படுபவர்களின் கருத்துக்களின் மூலவேர் ஜனாதிபதியின் சிந்தனைக்குள்ளேயே படர்ந்திருப்பதையும் புரிந்து கொள்ள முடியும். அங்கு அவரால் மாகாண சபை ஒரு வெள்ளை யானை எனவும் அதன் அதிகாரங்கள் ஒவ்வொன்றாகக் களையப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி வடமேல் மாகாண ச…
-
- 0 replies
- 583 views
-
-
பொய் சொல்லும் இனம். // பரணி கிருஸ்ணரஜனி ( சற்று நீண்டு விட்டது. நேரம் கிடைக்கும்போது கட்டாயம் படியுங்கள்) நேற்று முகநூல் வழி மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவருடன் உரையாட முடிந்தது. மண்டபம் அகதி முகாமில் நீண்டகாலம் பணியாற்றியதாகவும் குறிப்பிட்டார். ஈழப்போராட்டத்தின் வீழ்ச்சி தொடக்கம் தமிழக மாணவர் போராட்டம் வரை நிறைய கதைத்தார். தமிழீழம் ஒன்றுதான் தமிழனுக்கு தீர்வு என்றும் குறிப்பிட்டார். மேற்றர் இதுவல்ல. பேசி முடிக்கும் போது ஒரு வசனம் கூறினார். "எல்லாம் பிடிக்கும், ஈழத்தமிழர்களிடம் எனக்கு பிடிக்காதது அவர்கள் சொல்லும் பொய்கள்தான். மண்டபத்தில் பணிபுரியும்போது அவர்கள் சொல்லும் பொய்களை கேட்டு எனக்கு வெறுத்து விட்டது." உண்மைதான். அவர் சொல்வது …
-
- 11 replies
- 1.8k views
-
-
இலங்கையை வளைக்கப்போகின்றதா அல்லது முறிக்கப்போகின்றதா இந்தியா? முத்துக்குமார் 13வது திருத்தம் பற்றிய அரசியல் தொடர்ந்து சூடான நிலையில் இருக்கின்றது. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும், 13வது திருத்தம் பற்றியே கவனம் குவிந்திருக்கின்றது. எல்லாத் தரப்பினையும் எல்லாவற்றையும் மறக்கச் செய்து 13வது திருத்தப் பக்கம் திருப்பியதில் மகிந்தர் வெற்றி கண்டிருக்கின்றார் என்றே கூறவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு 13வது திருத்தத்தைப் பாதுகாக்கும் காவலனாக புதுடில்லி வரை சென்று வந்திருக்கின்றது. அரசியல் தீர்வு விவகாரத்தை புதுடில்லியிடம் அது ஒப்படைத்ததினால் எடுத்ததற்கெல்லாம் புதுடில்லிக்கு ஒடவேண்டிய நிலை அதற்கு. அங்குகூட எஜமான்கள் சொன்னதா…
-
- 8 replies
- 1.2k views
-
-
13ஆவது திருத்தமும் சிங்களக் கடுந்தேசியவாதமும் - நிலாந்தன் 30 ஜூன் 2013 இலங்கை-இந்திய உடன்படிக்கை எனப்படுவது ஒரு கெடுபிடிப் போரின் குழந்தை. கெடுபிடிப்போரின் நிலைமைகளுக்கேற்ப அது உருவாக்கப்பட்டது. எனது முன்னைய கட்டுரையில் கூறப்பட்டது போல அது வன்புணர்வின் மூலம் பிறந்த ஒரு குழந்தைதான். இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் வெங்கடேஸ்வரன் அதை ''செத்துப் பிறந்த குழந்தை' என்று ஒரு முறை வர்ணித்திருந்தார். ஜெயவர்த்தன அரசாங்கம், விடுதலைப்புலிகள் இயக்கம், பிரேமதாஸ அரசாங்கம் மற்றும் ஜே.வி.பி. ஆகிய நான்கு தரப்பும் சேர்ந்து அதைச் செயலிழக்கச் செய்தன. எப்பொழுது விடுதலைப்புலிகள் இயக்கமும், பிரேமதாஸ அரசாங்கமும் கூட்டுச் சேர்ந்து ஐ.பி.கே.எவ்.ஐ வெளியேறுமாறு கேட்டனவோ அப்பொழுதே இந்…
-
- 0 replies
- 610 views
-
-
A9 வீதி ஊடாக பயணிக்க நாம் போராடவில்லை "நாங்கள் எங்களுடைய தேசத்தில் விடுதலையுடன் பயணிக்கவே போராடினோம்" 25 ஜூன் 2013 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக பிரியதர்சன் அண்மையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் தலைநகரம் எனப்படும் கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு ஏ-9 வீதியையும் விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளத்தையும் திறந்து வைத்தார். இந்தப் வீதியில் நடப்பதற்காக, இந்தப் வீதியில் பயணிப்பதற்காக மக்கள் கனவுகள் வளர்;த்த காலங்களும் உண்டு. உண்மையில் இவ்வீதி ஒரு கனவு வீதி. மறுவளத்தில் இந்த வீதி இலங்கை அரசியலின் இனப்பிரச்சினையை சிக்கலையும் நீளத்தையும் பிளவுகளையும் துண்டிப்புக்களையும் விபரிக்கின்றது. இலங்கை இனப்பிரச்சினையில் இரத்தம் படிந்த வீதியொ…
-
- 0 replies
- 1.3k views
-
-
வடமாகாண சபைத் தேர்தல்: யாருக்கு நன்மை? யாருக்குத் தீமை? நிலாந்தன் 24 ஜூன் 2013 வடமாகாண சபைத் தேர்தல் நடக்குமா? இல்லையா என்பது பற்றி உரையாடுவது இன்று இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக, அத்தேர்தலை நடாத்துவதால் தமிழர்களிற்கும், அரசாங்கத்திற்கும் கிடைக்கக்கூடிய நன்மைகள் எவை? தீமைகள் எவை என்று பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மாகாண சபை அமைப்பெனப்படுவது தமிழர்களுடைய தெரிவு அல்ல. ஏனெனில், அது இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் விளைவாகும். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் தமிழர்கள் ஒரு தரப்பு அல்ல. எனவே, மாகாண சபை உருவாக்கத்தின் போது தமிழர்கள் ஒரு தரப்பாக இருக்கவில்லை. இனப்பிரச்சினைக்குத் தீர்வாகவே மாகாண சபை உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அது முழு இலங்கைத் தீவுக்குமான அத…
-
- 0 replies
- 467 views
-
-
இருள் சுமந்த நிலம் - மு.புஷ்பராஜன் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, இவ்வாண்டு 'முள்ளிவாய்கால் வெற்றி' உரையில், 'இந்த நாள், தாய் நாட்டை மீட்டெடுத்த நாள். தாய் நாட்டை மீட்பதற்கான இந்தப் போரில் இலட்சக்கணக்கானோர் பலியானார்கள். உடல் உறுப்புக்களை இழந்தார்கள். இரத்தத்தை, வியர்வையைப் பூமிக்கு அர்ப்பணித்தார்கள். இவ்வாறான தனித்துவம்மிக்க சிறிலங்கா படையினரை சிலர் அனைத்துலக மேடைக்குக் கொண்டுசெல்ல முயற்சித்தனர். புலிகளுடன் மோதவேண்டாம், அவர்கள் கேட்பதைக் கொடுக்குமாறு அனைத்துலகம் எம்மிடம் அடிக்கொரு தரம் ஆலோசனை கூறியது. புரிந்துணர்வு உடன்பாட்டின் மூலம் நாட்டைப் பிரித்துக் கொடுக்கவும் முயற்சித்தனர். ஒன்றிணைக்கப்பட்ட நாட்டின் ஓர் அங்குலத்தையயேனும் பிரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்' …
-
- 0 replies
- 472 views
-
-
இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் தமிழர் பிரச்சனை மீண்டும் முக்கியத்துவம் பெறுமா? - யதீந்திரா சமீபகாலமாக இடம்பெற்றுவரும் சில நிகழ்வுகள் இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கை தமிழர் பிரச்சனை மீண்டும் முக்கியத்துவம் பெறும் நிலை ஏற்படுமா என்னும் கேள்வியை எழுப்புகின்றது. இலங்கை தொடர்பான விடயங்களைக் கையாளுவதற்கென சிறப்புத் தூதுவர் ஒருவரை இந்தியா நியமிக்கக் கூடிய சாத்தியங்கள் பற்றியும் செய்திகள் வெளிவருகின்றன. இதற்கென ஓய்வு பெற்ற மூத்த ராஜதந்திரியும், தற்போதைய இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு நெருக்கமானவருமான பூரி நியமிக்கப்படலாம் என்றவாறான தகவல்களும் வெளிவருகின்றன. பூரி 1987 ஆம் ஆண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் கொழும்பு தூதரகத்தில் அரசியல் அதிகாரியாகப் பணியாற்ற…
-
- 0 replies
- 472 views
-
-
அனைத்துலக அளவில் மனித உரிமை பாதுகாப்புக்கு தலைமைதாங்க இந்தியாவால் முடியுமா? [ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 07:59 GMT ] [ நித்தியபாரதி ] இந்தியாவானது கடந்த இரு ஆண்டுகளாக பாதுகாப்புச் சபையில் நடந்து கொள்ளும் விதமானது இதன் வெளியுறவுக் கொள்கை வட்டாரம் தொடர்பில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அனைத்துலக சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கடும்போக்கான விவகாரங்களிலிருந்து இந்தியா விலகி நடந்துள்ளது. இவ்வாறு The Morung Express எனும் ஊடகத்தில் Meenakshi Ganguly எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இந்தியாவானது அதிகாரம் மிக்க நாடாக உள்ளதால் இது உலக விவகாரங்களில் தனது பங்களிப்பை வழங்குவதும் அதிகரித்துள்ளதாக பெரும்பா…
-
- 0 replies
- 438 views
-
-
புலம்பெயர் தேசியவாத அரசியலின் மறுபக்கம் : ஸ்கந்தா எழுதும் புதிய தொடர் நாற்பது வருட அரசியலும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளும் போராட்டத்தை செழுமைப்படுத்தும் நோக்கத்தில், அதனை முன்னோக்கி நகர்த்தும் வகையில் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டும். இலங்கை பேரினவாத பாசிச அரசின் அடிமைகள் மக்களதும் போராளிகளதும் தியாகங்களையும் வீரத்தையும் சேறடிக்கும் ஒரு காலப்பகுதியில் வாழ்கிறோம். இதனிடையே நம்மை நாமே மறுவிசாரணை செய்துகொள்வதும் கற்றுக்கொள்வதும் எதிர்கால சந்ததிக்கு உண்மைகளை விட்டுச் செல்வதும் அவசியமான பணி. மக்கள் மத்தியில் அவர்களின் பலம் மீதான நம்பிக்கயீனத்தை ஏற்படுத்தி அதனை ஆயுதமாகப் பயன்படுத்தி அன்னிய தேச உளவாளிகளிடம் சரணடையக் கோரும் பிழைப்புவாதிகளின் கூட்டம் உருவா…
-
- 10 replies
- 935 views
-
-
இலங்கை விடயத்தில் தெற்காசியாவின் பிராந்திய சக்தி என்னும் தகுதி நிலையை இழந்து வருகிறதா இந்தியா? - யதீந்திரா 13வது திருத்தச் சட்டத்தை நீக்குவது அல்லது அதன் பெறுமதியை வலுவிழக்கச் செய்வது தொடர்பான முஸ்தீபுகள் தீவிரமடைந்திருக்கின்ற சூழலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அழைத்திருக்கின்றது. யூலை மாதத்தின் ஆரம்பப்பகுதியில், இந்தியா செல்வதற்கான திட்டமொன்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஏலவே இருந்தது. எனினும் தற்போது புதுடில்லி கூட்டமைப்பை அவசரமாக அழைத்துள்ளதாகவே செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் 13வது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பான விடயங்கள் தொடர்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிசிடம்…
-
- 2 replies
- 975 views
-