அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9329 topics in this forum
-
எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் ! : எம். ரிஷான் ஷெரீப் இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக் கூடிய, பிரிவினை வாத சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறி வைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந் நிலை தொடருமானால், இன்னும் சில தசாப்த காலங்களுக்குள் இலங்கையில் பெரும்பான்மையானோராக முஸ்லிம்கள் ஆகிவிடுவார்கள் என்ற அச்சம் இனவாத சக்திகளை பெருமளவில் அச்சுருத்தியிருக்கிறது. இந் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், முஸ்லிம்களை அடக்கி வைக்கவும் பல்வேறு விதமான செயற்பாடுகள் முன்…
-
- 3 replies
- 1.1k views
-
-
தேர்தல் பரப்புரையும் இனமான அரசியலும் - நிலாந்தன் 15 செப்டம்பர் 2013 மாகாணசபை தேர்தல் பரப்புரைக்களத்தில் ஒரு இனமான அலையை தோற்றுவிப்பதில் கூட்டமைப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறிவருவதாகவே தோன்றுகின்றது. தனிப்பட்ட முறையில் கடிதங்கள், குறுந்தகவல்கள் என்பன படித்த வாக்காளர்களை நோக்கிப் பறந்து வந்துகொண்டிருக்கின்றன. இணையப்பரப்பில்தான் கூடுதலான வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒப்பீட்டளவில் இணையப்பரப்பில்தான் விவகாரங்கள் அதிகம் வெளிப்படையாக விவாதிக்கப்படுகின்றன. ஆனால் வழமையான கறுப்புவெள்ளை அரசியலின் பிரகாரம் இணையப்பரப்பானது அதிகமதிகம் வசைவெளியாக மாறியிருக்கிறது. ஒப்பீட்டளவில் அதிகபட்ச விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதால் ஒப்பீட்டளவில் அதிகபட்சம் ஜனநாயகமானதாக இண…
-
- 2 replies
- 527 views
-
-
சிறிலங்காவில் முஸ்லிம்களும் சிங்கள-பௌத்த தேசியவாதிகளும் [ ஞாயிற்றுக்கிழமை, 15 செப்ரெம்பர் 2013, 12:40 GMT ] [ நித்தியபாரதி ] "இது சிங்கள-பௌத்த நாடு. நாங்கள் பௌத்த கோட்பாடுகள், கலாசாரம், நம்பிக்கைகள் மற்றும் வாழ்வு முறைமை போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக செயற்பட வேண்டும்" என சிங்கள ராவயவைச் சேர்ந்த செயற்பாட்டாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு The Diplomat Magazine என்னும் இணைய ஊடகத்தில் Sudha Ramachandran* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவைச் சேர்ந்த சிங்கள-பௌத்த தேசியவாதிகள், சிறுபான்மையினருக்கு எதிரான தமது யுத்தத்தின் புதிய வடிவம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். சிறிலங்காத் தீவின் சிறுபான்மை மக்…
-
- 1 reply
- 611 views
-
-
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு தேர்தலில் கூட்டமைப்பிற்கான வெற்றி வாய்ப்பு - ஓர் இறுதி அவதானம் - யதீந்திரா வடக்குத் தேர்தலில் பெரும்பாலான ஆசனங்களைக் கைப்பற்றக்கூடிய வாய்ப்பு, பிரதான தமிழ் அரசியல் அமைப்பான, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே காணப்படுகிறது. அரசதரப்பு வேட்பாளர்களும் தங்களது வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வேட்பாளரது வெற்றி என்பது, அவர் பெறும் விருப்பு வாக்குகளில் தங்கியிருப்பதால், கட்சி, கொள்கை என்பவற்றுக்கெல்லாம் அப்பால், ஒவ்வொரு வேட்பாளரும் தாங்களும் வெற்றியாளர்கள் வரிசையில் இடம்பிடித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களும…
-
- 2 replies
- 1k views
-
-
சீமான் – அவதூறுகளை அறுத்தெறியும் அறம் - மணி.செந்தில் & பாக்கியராசன் சே உலக மூத்தகுடி தமிழ்த் தேசிய இன மக்களின் பூர்வீக தாய்நிலங்களுள் ஒன்றான ஈழப் பெருநிலத்தின் மீது சிங்களப் பேரினவாதத்தின் கொடும் நிழல் படியத் துவங்கிய 2008க்குப் பின்னான கால கட்டத்தில்தான் இன உணர்வுள்ள இளைஞர்கள் தாயக தமிழகத்தில் கண்கலங்க கைப் பிசந்து நின்று கொண்டிருந்தார்கள். ஈழமும், தமிழகமும் கடலால் பிரிக்கப்பட்ட இரு நிலப்பரப்புகளாய் நின்றனவே ஒழிய உணர்வால்..உறவால்..மரபணு தொடர்ச்சியால் ஒற்றை நிலமாகவே இருக்கின்றன. ஈடு இணையற்ற வீர தீரத்துடன் போர் புரிந்து கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் தியாகத்தினால் ஈழம் சிவப்பாகிக் கொண்டிருந்த வேளையில்.. தாயகத் தமிழ் இளைஞர்களின் நெஞ்சில் ஆற்றவே முடியாத பெருநெருப்பு…
-
- 1 reply
- 1.5k views
-
-
முடியப்பு றெமிடியஸ் என்ற பெயர் நினைவிருக்கிறதா? இவர் ஒரு சட்டவாதி. யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர். மனித உரிமை வழக்குகளில் நீதிமன்றம் ஏறி வாதாடுபவர். அண்மையில் மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிவிட்டார். விலகிய கையோடு ஆளும் அய்க்கிய சுதந்திர மக்கள் முன்னணி என்ற சிங்கள (அவரே சொல்வது) கட்சியோடு சங்கமமாகிவிட்டார். யாழ்ப்பாண மாநகர சபைக்குத் தேர்தல் நடந்த போது ததேகூ சார்பாகப் போட்டியிட்டு றெமிடியஸ் வென்றார். அதிகப்படியான விரும்பு வாக்குகள் பெற்ற காரணத்தால் எதிர்க்கட்சித் தலைவராகவும் கொலுவிருந்தார். அது கொஞ்ச நாட்கள்தான். பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு ஆளும் கட்சியை ஆதரிக்கத் தொடங்கினார். மாநகரசபையில் ஆளும் கட்சி கொண்டு வரும் தீர்மானங்களு…
-
- 0 replies
- 654 views
-
-
நாளுக்கு நாள் சீன - இலங்கை உறவு வலுப்படுவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையப்போகிறது. சீனாவின் அமைச்சர் அல்லது உயர்அதிகாரிகள் அடிக்கடி இலங்கைக்கு வருகை தருகின்றனர். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே பல உடன்பாடுகள், ஒப்பந்தங்கள் மாதா மாதம் கையெழுத்தாகிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக, இந்து மகா சமுத்திரம், வங்கக் கடல், கச்சத்தீவு வரை சீனாவின் ஆதிக்கம் பரவிவிட்டிருக்கிறது. பாகிஸ்தானுடன் சீனா பல உடன்பாடுகள் கண்டு, குஜராத் வரை அரபிக் கடலில் சீனாவின் ஆதிக்கமும் ஆளுமையும் ஏற்பட்டுவிட்டது. அது மட்டுமா? தரை வழியாக சீனாவிலிருந்து பாகிஸ்தானின் தென்பகுதியான அரபிக் கடல் வரை நெடுஞ்சாலைகள் அமைத்து தனது மேற்குப் பகுதிக்கு கடல் வாணிகத் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியிலும் சீ…
-
- 0 replies
- 884 views
-
-
ஜேர்மன் ஜனாதிபதி Joachim Gauck இரண்டாம் உலகப்போரின் போது நாசிப்படைகளால் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டின் Oradour-sur-Glane கிராமத்திற்கு அண்மையில் விஜயம் செய்து கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ஜேர்மன் நாட்டின் நாசிப்படைகளால் 1944ஆம் ஆண்டு யூன் 10ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த படுகொலையில் 247 சிறுவர்கள் உட்பட 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை நடந்த பின்னர் இந்த பகுதிக்கு செல்லும் முதலாவது ஜேர்மன் அரசுத்தலைவர் இவராகும். இவருடன் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஹொய்ஸ் ஹொலண்டே (François Hollande) யும் அந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த படுகொலையிலிருந்து தப்பி இன்றும் வாழும் சிலரையும் அவர்கள் சந்தித்தனர். தனது நாட்டு நாசிப்படைகள் …
-
- 0 replies
- 522 views
-
-
தமிழன் தமிழனாக நிமிர்ந்து நின்று வாழ்ந்த காலத்தில் வன்னியில் பெரியபெரிய கடைக்காரர்கள் இருந்தார்கள் தலைவர் அவர்களின் போராட்டம் இருந்த காலத்தில் நிறைந்த பணக்காரர்கள் இருந்தார்கள் இன்று அனைவரும் ஓட்டாண்டியாகி தூங்கி சாகின்றார்கள் இது திட்டமிட்ட சிங்கள அரசின் செயற்பாடு என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சியில் போட்டியிடும் வேட்பாளர் பசுபதிப்பிள்ளை தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்துள்ளார். உண்மையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டங்களில் தன்னிறைவான பொருளாதாரத்துடன் மக்கள் வாழ்ந்தார்கள் என்றால் அது பெருமைகொள்ளவேண்டியது இதனை திட்டமிட்டு சிங்கள அரசு அழித்துள்ளது. இன்று கிளிநொச்சியில் மாங்குளம் தொடக்கம் பரந்தன் வரை லீசிங்முறையில் கடனுக்கு ஊர்திகள் வட்டிக…
-
- 0 replies
- 601 views
-
-
https://www.youtube.com/watch?v=-oWSbkG8rF8
-
- 2 replies
- 895 views
-
-
நவிபிள்ளை அம்மையார், விடுதலைப் புலிகள் மீது பகிரங்கமாக விமர்சனங்களை வைத்தாலும், அவரைக் காப்பாற்றுவதற்கென்றே நம்மிடையே ‘இராசதந்திரம்’ பேசும் ராசாக்கள் தோன்றிவிடுவார்கள். வரிக்கு வரி வியாக்கியானங்களும், பொழிப்புரைகளும் கொட்டப்படும். அத்தோடு, ‘மக்களின் எதிர்ப்புணர்வுகளை தனித்துவிட்டோம்’ என்று சுயதிருப்தி கொள்வார்கள். இதுவும் ஒருவகையில், மக்களின் போராடும் உணர்வினை மழுங்கச் செய்யும், ஒடுக்குமுறையாளர்களின் உத்திதான். முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின்னர், புலம்பெயர் நாடுகளிலேயே திட்டமிட்ட வகையில் இவை முன்னெடுக்கப்படுகின்றன. உண்மையிலேயே, தலைவரோடு நீண்ட காலமாகக் களத்தில் நின்று போராடியவர்கள், வேறு இயக்கங்களில் இருந்து சிங்களத்தின் ஒடுக்குமுறைக்கெதிராக களமாடியவர்கள் எவரும், போ…
-
- 2 replies
- 961 views
-
-
இந்தமுறை நான் இலங்கை சென்றிருந்தபோதுகல்வி சார்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றில் பணி செய்து கொண்டுள்ள நண்பர் ஒருவர் இலங்கையின் கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் ஒரு மாற்றத்தைக் கவனிக்குமாறு அறிவுறுத்தினார். கல்வித்துறையில் இராணுவத் தலையீடு குறித்துத்தான் அவரது கவன ஈர்ப்பு அமைந்தது. ‘தலையீடு’ என்கிற சொல்அதன் முழுமையான பரிமாணத்தை உணர்த்தப் போதுமானதல்ல. இலங்கை அரசமைவும் சமூகமும் பல்வேறுஅம்சங்களில் இராணுவமயப்பட்டு வரும் நிலை கல்வித்துறையில் வெளிப்படும் தன்மை என்றுதான் அதைச் சொல்லவேண்டும். இது குறித்து நான் ஏற்கனவே சற்று வாசித்திருந்தபோதிலும் முழுமையாகஅறிந்திராததால் அவரிடமும் கல்வித்துறை சார்ந்த பிற நண்பர்களிடமும் கேட்டறிந்தபோது சற்றுவியப்பாகவும் கவலையாகவும் இருந்தது. பல்வேறு வகையான அர…
-
- 4 replies
- 1k views
-
-
நாம் போராடியது ஈழத்திற்காக! - தீபச்செல்வன் தமிழக முதல்வர் ஜெயலலிதா 13ஆவது திருத்த சட்டத்தைப் பாதுகாப்பது தொடர்பாக இந்தியப் பிரதமரை வலியுறுத்திக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் 13ஆவது திருத்தத்தை மாற்றம் செய்வது கவலையளிக்கிறது என்று குறிப்பிட்ட ஜெயலலிதா, அந்த சட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கும் அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார். 13ஆவது அரசியல் திருத்தத்தை இலங்கையின் அரசியலில் பிரதான பேசுபொருளாகப் பிரபலப்படுத்தியிருக்கிறார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே. ராஜபக்சேவின் இந்த சூழ்ச்சி அரசியல் தமிழக அரசியல் தலைவர்கள் வரை வலை விரித்திருக்கிறது. இப்படித்தான் உலகின் கவனத்தை தான் விரும்பிய பக்கமெல்லாம் திருப்பிக்கொண்டிருக்கிறார் ராஜபக…
-
- 0 replies
- 546 views
-
-
நாங்கள் ஏதோ ஒன்றை இழந்துவிட்டோம்! Gunnar Sørbø - (தமிழாக்கம்: ரூபன் சிவராஜா) 'போருக்குப் பின்னான சிறிலங்கா' எனும் தலைப்பில் மூத்த நோர்வேஜிய ஆய்வாளரும் கிறிஸ்தியான் மிக்கல்சன் ஆய்வு மையத்தின் - Christian Michelsens institutt (CMI) முன்னாள் பணிப்பாளருமான Gunnar Sørbø அவர்கள் அண்மையில் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்கம் இதுவாகும். <em>Morgenbladet</em> (The Morning Paper) எனும் நோர்வேஜிய வார இதழில் இவ்வாய்வு வெளிவந்தது. *** இரத்த வெள்ளத்தோடும், தமிழீழ விடுதலைப் புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்ட நிலையிலும் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்குமிடையிலான நீண்டநெடிய உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு…
-
- 4 replies
- 626 views
-
-
September 10, 2013 அரசியல் பார்வை 0 8 பின் முள்ளிவாயக்கால் காலத்தில் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு அதற்கு அண்மித்த முந்தைய காலத்தின் நிலைபாட்டிலிருந்து மாறுபட்டுள்ளதனை அதன் நடவடிக்கைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். இருப்பினும், அதன் தலைவர்கள் வெளியிடும் முரண்பட்ட கருத்துகளிலிருந்து அதன் கொள்கை நிலைப்பாட்டை சரியாக அறிந்து கொள்ளமுடிவதில்லை. ஒரு முறை குறிப்பிட்டதை இன்னொரு இடத்தில் மறுத்தும், ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிடுவதாகக் கூறியும், இடத்திற்கு ஏற்றமாதிரி கருத்துகள் வெளியிட்டும் கூட்டமைப்பின் தலைவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். 2010ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது வெளியிடப்பட்ட விஞ்ஞாபனம், தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற முன்னைய கொள்கை நிலைப்பாட்டை ஒத்ததாக அமைந…
-
- 1 reply
- 631 views
-
-
நவிப்பிள்ளையும் தமிழர்களும் - நிலாந்தன் 08 செப்டம்பர் 2013 விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான தமிழர்களின் கூட்டு உளவியலின் பெரும் போக்கெனப்படுவது ஒருவித கொதி நிலையிலேயே காணப்படுகின்றது. கொதிப்பான இக்கூட்டு உளவியலானது பின்வரும் மூலக் கூறுகளின் சேர்க்கையாகக் காணப்படுகின்றது. 01. பேரழிவுக்கும் பெருந்தோல்விக்கும் பின்னரான கூட்டுக் காயங்களும் கூட்டு மனவடுக்களும். 02. தோல்வியினால் ஏற்பட்ட தாங்க முடியாத அவமானமும் பழிவாங்கும் உணர்ச்சியும் 03. அப்படிப் பழிவாங்க முடியாதபோது ஏற்படும் அதாவது பிரயோகிக்கப்பட்டவியலாத கோபத்தின் பாற்பட்ட சலிப்பு, விரக்தி, சுயபச்சாதாபம், கையாலாகாத்தனம். 04. தோல்விக்குத் தங்களுடைய சுயநலமும் கோழைத்தனமும் ஒரு காரணம் என…
-
- 7 replies
- 1.3k views
-
-
அகிம்சைப்போர் அடக்கப்பட்டதன் பின் ஆயுதப்போர் ஒன்று வெடித்தது அது முடிவாக்கப்பட்ட தாக பேசப்படும் நிலையில் இராஜ தந்திரப்போர் ஒன்றுக்குள் நம்பிக்கை கொண்டி ருக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கைக் குறியீடாக பிள்ளையவர்களின் வருகை அமைந்திருக்கின்றது. நவநீதம்பிள்ளையவர்களின் இலங்கை விஜயமானது தமிழ் மக்கள் மத்தியிலும் அதேவேளை சிங்கள மக்கள் மத்தியிலும் வெவ்வேறு அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கின்ற நிலையில் இந்த விஜயத்தின் பிரதிபலிப்பாக சர்வதேச அளவில் அது எத்தகைய தாக்கத்தைக் கொண்டு வரப்போகின்றது என்பது பற்றியே இன்றைய நிலையில் எல்லோருடைய முணுமுணுப்பாக இருக்கின்றது. பிள்ளையவர்களுடைய வரவு காரணமாக தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் ஒரு திசைப்பட்டதாகவும் அதேேவளை சிங்கள மக்கள் மற்றும் அவர்களின் …
-
- 1 reply
- 758 views
-
-
நவிப்பிள்ளை அம்மையாரின் விஜயம் - நிலாந்தன் 02 செப்டம்பர் 2013 வீட்டுக்கு வரும் ஒரு விருந்தினரை குடும்பத் தலைவர் கனம் பண்ண விரும்பவில்லையென்றால், அந்த விருந்தினர் வரும்வேளை, அவர் வீட்டைவிட்டு வெளியே சென்று விடுவதுண்டு. இதில் உள்ள செய்தி என்னவென்றால் விருந்தாளியை வராதே என்று சொல்லவும் முடியவில்லை. அதேசமயம் அவர் வரும்போது அவரை வரவேற்கவும் விரும்பவில்லை என்பதுதான். ஏறக்குறைய இதுபோன்றதொரு நிலைமைதான் கடந்த வாரம் இலங்கைத் தீவிலிருந்தது. வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் ஒரு அரசாங்கத்தின் தலைவர் அந்த வெற்றி பெறப்பட்ட விதம் தொடர்பான அனைத்துலகின் கரிசனைகளை அதிகம் பிரதிபலிக்கும் ஐ.நா.வின் மனித உரிமைகளிற்குப் பொறுப்பான அதிகாரியின் விஜயத்தின்போது நாட்டைவிட்டு வெளியேறி இ…
-
- 2 replies
- 746 views
-
-
தேர்தல் அரசியலும், இலட்சிய அரசியலும் ஒன்றாகப் பயணிக்கமுடியுமா? - முத்துக்குமார் தேர்தல்கள் இலட்சிய அரசியலைச் சிதைக்கும் ஒரு கருவி என்பது இன்று நிரூபிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இதற்கு இடதுசாரி அரசியலோ, தேசிய இன அரசியலோ விதிவிலக்காக இருந்ததில்லை. இலட்சிய அரசியலின் எதிரிகள் அதனைத் தோற்கடிக்க எப்போதும் தேர்தல் அரசியலையே பயன்படுத்த முனைவர். தேர்தல் அரசியலில் ஈடுபடும்வரை இடதுசாரி இயக்கம், இலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி வலுவானதாக இருந்தது. அவை எப்போது தேர்தல் அரசியலைத் தேர்ந்தெடுத்ததோ, அன்றிலிருந்தே சிதையத் தொடங்கியிருந்தன. சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலும், சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒரு சில வருடங்களும், இடதுசாரி இயக்கங்கள் வலிமையான அமைப்புகளாக இலங்கையில் இருந்தன.…
-
- 0 replies
- 588 views
-
-
மாகாணசபையை தளமாகக் கொள்ளும் தமிழர் அரசியலும், அதன் மீதான விமர்சனங்களும் - யதீந்திரா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபையில் போட்டியிடும் முடிவை அறிவித்த நாளிலிருந்து, சில விமர்சனங்களும் மேலெழுந்தவாறே இருக்கின்றன. அதாவது ஒன்றுமில்லாத மாகாணசபையை கூட்டமைப்பு ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்கிறது என்பதுதான் அவ்வாறான விமர்சனங்களின் அடிப்படையாக இருக்கிறது. இத்தகைய விமர்சனங்களின் சொந்தக்காரர்கள், 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைவான மாகாணசபை முறைமையை தீர்விற்கான ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக்கொள்வதானது, ஓர் உண்மையான தீர்வை நோக்கிச் செல்வதற்கான பாதையை மூடிவிடும் என்கின்றனர். மாகாணசபையை கையாளுவது தொடர்பான முன்னைய பத்திகள் தொடர்பில் என்னுடன் பேசிய புலம்பெயர் ஊடக நண்பர் ஒருவர் பி…
-
- 0 replies
- 429 views
-
-
ஈழத்தமிழர்களுக்கும் தமிழ் ஈழத்திற்க்கும் தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் ஆதரிக்கும் கட்சி சிவப்பு கட்சி. நோர்வேயில் எம் இனத்திற்கு பக்க பலமாகவும் குரல் கொடுக்கும் அரசியல் ஆதரவு சக்தியாகவும் சிவப்பு கட்சி இருந்து வருகிறது. 2009 ஆம் ஆண்டு தமிழீழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட சிங்களத்தின் ஆக்கிரப்பு போரில் நடந்த இனவழிப்பை விசாரிப்பதற்காக சர்வதேச விசாரணைக்குழு ஒன்று அவசியம் என்பதை சிவப்பு கட்சி வலியுறுத்துகிறது. அதோடு நோர்வேயில் தமிழ் ஈழத்தை ஆதரிக்கும் ஒரேயொரு கட்சி சிவப்புக்கட்சியே என்பதை நாம் அனைவரும் அறிவோம். நோர்வே அரசியலில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் அரசியலிலும் நேரடியாக ஈடுபட்டவர்கள் சிவப்பு கட்சியினர். உதாரணம் பியோனர் மோகனாஸ். நோர்வே ஈழத்தமிழர் அவையின் உறுப்பி…
-
- 0 replies
- 615 views
-
-
"சிங்கள கடும்போக்குவாதிகள் தலைதூக்கியுள்ளனர்" தமிழீழத்தை உருவாக்கும் நிராயுத பொறி முறையில் நாடு கடந்த விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மேற்குலக நாடுகளின் அனுசரணையுடன் செயற்படுகின்றனர். இவர்கள் இலங்கைக்கு எதிராக பல்வேறு குற்றச் சாட்டுக்களையும் சாட்சியங்களையும் உருவாக்கியுள்ளனர். இவற்றின் நிழலாகவே ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நிகழ்ச்சி நிரலும் காணப்பட்டது என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். இறுதி யுத்தத்தின் போது வெறும் 26 பேர் மாத்திரமே இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனதாக தகவல்கள் உள்ளது. பல்லாயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக கூறுவது புலம்பெயர் விடுதலைப் புலி …
-
- 1 reply
- 1k views
-
-
ஜின்னா - காந்தி இரு தேசப்பிதாக்கள் ரொடெரிக் மாத்யூஸ் தமிழில்: கண்ணன் காந்தி, ஜின்னா இருவருமே தேசத் ‘தந்தை’களாக பாராட்டப்பட்டுள்ளனர். ஆனால் தந்தைமை இருவருக்கும் சுகமானதாக அமையவில்லை. அதிக பணிச்சுமையால் ஜின்னா தன் உடல்நலத்தை இழந்தார். வரலாற்றில் அதிகம் அறியப்பட்ட இந்திய ஆளுமையான காந்தி, ஒரு ‘தேசபக்த’னின் கருத்தில், குறைபட்ட இந்தியத்தன்மை கொண்ட இந்தியாவை உருவாக்கியதற்காகச் சுட்டுக் கொல்லப்பட்டார். தந்தைமை இருவரையுமே பலிவாங்கியது. ஆனால் அதுவே பிற்காலத்தில் அவர்களுக்குப் புத்துயிர்ப்பும் அளித்து திருஉருக்களாக்கியது. அவர்கள் இருவருக்கும் இடையில் உருப்பெற்ற எல்லைக் கோட்டின் தம் பக்கத்தில் அவர்கள் புகழப்பட்டார்கள். இரு தலைவர்களும் எப்படிப் பார…
-
- 1 reply
- 1.5k views
-
-
நவனீதம் அம்மையாரும் அவவின்ர அறிக்கையும்....!!! இந்த மனிசி கொஞ்சம் ஓவராத்தான் பொங்குது!!! நவனீதம் அம்மா 2009 மே இல செவ்வாய் கிரகத்தில் நடந்த போர்க்குற்ற விசாரணைக்கு போன நேரம் தான் ஈழத்தில இனப்படுகொலை நிகழ்ந்தது. அதனால தான் அவவுக்கு 2009 மே 18 இல் நிகழ்ந்த இனப்படுகொலை பற்றி எதுவும் தெரியாதாம்! ஏனெண்டா ஒரே இரவில 1லச்சம் சனத்தினை இனப்படுகொலை செய்தா எப்பிடி ஐ.நா வால் கண்டுபிடிக்கேலும்.மேலும் வன்னியில மின்சாரம் இல்லை. அதனால வெளிச்சம் இல்லை.அதனால தான் , ஐ.நா வின் செய்மதிகள் எல்லாம் தெளிவில்லாத புகைப்படங்கள் எடுத்துவிட்டதாம்.மேலும் அவா வீட்டில tv யும் இல்லையாம்! அதைவிட கொடுமை internet conection உம் இல்லையாம்!!! பாவம் மனிசி ...இந்த பான் கீன் மூனும…
-
- 9 replies
- 1.7k views
-
-
மே 2009 , இனப்படுகொலை முடிந்த கையோடு, இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. பொதுச் செயலாளர் பாண் கி மூன் அவர்கள் என்ன சொன்னார்?. சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணை ஒன்று தேவை என்றரா? இல்லவேயில்லை. நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்குங்கள் என்று கூறினார். நடந்தது நல்லபடியாக நடந்தது என்பதுபோல்தான் அவரின் ஊடக நேர்காணல்கள் அமைந்திருந்தன. வவுனியா வதை முகாம்களுக்கும் சென்று பார்வையிட்ட மூன், அரசை பாராட்டிவிட்டே சென்றார். சர்வதேச மனித உரிமைச் சங்கங்களின் தொல்லைதாங்க முடியாமல், மூவரடங்கிய நிபுணர் குழுவொன்றை வழமைபோல் அமைத்து நீண்ட அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டார். அதனை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்காமல் நீண்டகாலமாக இழுத்தடிப்புச் செய்தார் பொதுச் செயலாளர் பாண் கி மூன். அறி…
-
- 0 replies
- 749 views
-