அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
ராஜபக்சவின் தமிழ் நண்பர்கள் : சபா நாவலன் காலனியத்தின் இறுதிக்காலப்பகுதியில் பிரித்தானிய ஆட்சியாளர்களால் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத அடையாளம் நந்திக்கடலில் இரத்தமும் சதையுமாக மிதந்ததைக் கண்டிருக்கிறோம். எண்ணுக்கணக்கற்ற அப்பாவி உயிர்களை விரல் எண்ணிக்கையில் அடங்கிவிடும் நாட்களில் பறிகொடுத்த எந்தக் குற்ற உணர்ச்சியும் இன்றி அதே முகங்கள் அதே கோர வெறியோடு அரசியல் காய்களை நகர்த்துகிறார்கள். தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளவோ அவற்றைத் தயவின்றி விமர்சித்து புதிய அரசியலை முன்வைக்கவோ கோரமாகக் கேட்கும் எந்த அரசியல் குரல்களுக்கும் தன்னம்பிக்கை இல்லை. ஆண்ட பரம்பரையின் புகழையே பேசிப் பழக்கப்பட்டுப்போன பாழடைந்த பழமைவாத சமூகத்தையும் அது தோற்றுவித்த …
-
- 1 reply
- 874 views
-
-
மனிதகுல நீதிக்கான குரல் கொண்ட கௌரவமான தேசிய இனம் நாம் தத்தர் ஜனநாயகக் கண்ணோட்டம் இன்றி உலகக் கண்ணோட்டம் இன்றி ஒரு தேசிய கட்டுமானம் அமைய முடியாது. அதே வேளை 'சரியாக நடந்தால் மட்டும் போதாது சரியாக நடந்ததாகக் கருதப்படவும் வேண்டும்'. பரப்புரை என்பது எதிரியை அம்பலப்படுத்துவதிலும் எம்மை நியாயப்படுத்துவதிலும் அடங்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையோடு எதிரி தன்னைத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளான். ஆனால் அந்த அம்பலப்பட்டுள்ள நிலையை அரசியல் தீர்மானங்களாக்கவேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. இந்நிலையில் நாம் எம்மை அதிகம் நியாயப்படுத்தி எதிரிக்கெதிரான அரசியல் தீர்மானங்களை உருவாக்கவேண்டும். உலகில் நாம் வெடிகுண்டு வைப்பவர்களாயும், மனித வெடிகுண்டுகளாயும், பயங்கரவாதிகளாயும…
-
- 0 replies
- 750 views
-
-
ஜெனிவா களம்: தமிழ்த் தரப்பு வரலாற்றைக் கோட்டைவிட்டுள்ளதா? முத்துக்குமார் ஜெனிவாவில் நடைபெற இருக்கும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான விசாரணையை அமெரிக்கா கொண்டு வருவது நிச்சயமாகிவிட்டது. இலங்கைக்கு வந்த அமெரிக்க இராஜதந்திரக்குழு இலங்கையில் வைத்தே அதனைக் கூறிவிட்டது. பொறுப்புக்கூறல் பற்றியே பிரேரணையில் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது, அப் பிரேரணை மூலம் மேலும் ஒரு வருடம் காலஅவகாசம் கொடுக்கத் தீர்மானித்திருப்பதாகவே செய்திகள் வருகின்றன. இலங்கை, சீனா பக்கம் சரிந்துவிடும் என்ற அச்சம் தான் இந்த மென்மையான அணுகுமுறைக்குக் காரணம். அமெரிக்க இராஜதந்திரக் குழுவினர் தமக்கு நெருக்கமானவர்களிடம் இத் தகவலை நேரடியாகவே கூறியிருக்கின்றனர். போர்க்க…
-
- 3 replies
- 733 views
-
-
இலங்கை மலையக மக்கள் சிக்கல்கள் மலையக மக்களைப் பற்றி மக்கள் விடுதலை முன்னணி (சனத்தா விமுக்தி பெரமுனா )எவ்வாறான கருத்தைக் கொண்டிருந்தது? சோவியத், சீனகம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் உலகநாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள்ளும் அம்முரண்பாடுகள் எதிரொலித்தன. இதன் விளைவாக கம்யூனிஸ்ட் கட்சிகள் பிளவுபட்டன. இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும் பிளவு நோயால் பாதிக்கப்பட்டு இரண்டாக உடைந்தது. இத்தருணத்தில் சோவியத் உருசியாவில் உள்ள லுமும்பா பல்கலைக் கழகத்தில் கல்வி கற்று வந்த ரோகன விஜய வீரா தனது கல்வியை இடைநிறுத்தி விட்டு நாடு திரும்பினார். நாடு திரும்பிய அவர் தோழர் சண்முகதாசன் தலைமையில் செயல்பட்டு வந்த இலங்கைக் கம்யூனிஸ்ட்(சீனச்சார்பு) கட்சியில் …
-
- 0 replies
- 822 views
-
-
கூட்டமைப்பு - ஐக்கிய தேசியக் கட்சி கூட்டிணைவு: அபத்தங்களும் ஆபத்துகளும் யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர், பொதுவேலைத்திட்டத்தின் கீழ் பத்து அரசியல் கட்சிகள் இணைவது தொடர்பான கூட்டமென்று இடம்பெற்றிருந்தது. இதில் பங்குகொண்ட கட்சிகளில், வடக்கு கிழக்கில் வாழ்ந்துவரும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திவரும் பிரதான அரசியல் அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றாகும். இது தொடர்பில் உடன்படிக்கை ஒன்றும் ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்குகொண்டிருந்தார். அவர் எதிர்க்கட்சிகளின் கூட்டிணைவை ஆதரித்து பேசியிருந்த போதும், உடன்பாட்டில் யையெழுத்திடவில்லை. கிடைக்கும் தகவல்களின்படி, கூட்டமைப்பின்…
-
- 1 reply
- 509 views
-
-
துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் போர் நடந்தபோது எல்லாளனின் தோல்விக்குக் காரணமானது துட்டகைமுனுவின் கந்துலன் என்ற யானைதான் என்று மகாவம்சம் கூறுகிறது. தமிழரை வென்ற கந்துலன் யானையே எமது சின்னம் என்று தெற்கே சிங்கள இனவாதத்தை தூண்டிவரும் கட்சி ஐ.தே.க யானையை தனது கொடியில் வைத்திருப்பது தமிழரை வென்ற குறியீடே என்பது கவனிக்கத்தக்கது. அமைதிப் பேச்சுக்களை நடாத்தி புலிகளை பிளவு படுத்திய பெருமை தன்னையே சாரும் என்று சொன்னவர் ரணில். இப்படிப்பட்ட இனவாத ஐ.தே.கவை தமிழர் நம்பலாமா என்ற உண்மை வடக்கே மீண்டும் புலப்பட ஆரம்பித்துள்ளது. இரண்டு பெரும்பான்மை கட்சிகளும் தமிழரின் எதிரிகளே என்பதை உணர்ந்து வருகிறார்கள் வடக்கு மக்கள். பலாலி விமானப்படைத் தளத்தின் பாதுகாப்பு முக்கியம் எ…
-
- 0 replies
- 559 views
-
-
இன்றைய ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிந்துள்ள முகமூடியின் பின்னணி என்ன? "V for Vendetta" இந்த புகைப்படம் சமீக காலமாக மேற்கத்தேய நாடுகளில் அராஜகத்தை எதிர்த்தும், நீதிக்காக வீதிக்கிறங்கி போராடும் போராட்டக்காரர்கள் அணிந்திருப்பதை அவதானித்திருக்கிறேன். இந்த முகமூடி எதனை குறிக்கிறது என்று ஆராய்ந்த போது அந்த முகமூடி பயன்படுத்தப்பட்ட திரைப்படம் குறித்த தகவல்கள் கிடைத்தன. "V for Vendetta" இரவே அதனை தரவிறக்கி பார்த்துவிட்டேன். 132 நிமிடங்களை கொண்டது இந்த திரைப்படம். கதைக்களம் இங்கிலாந்து பாராளுமன்றம். கட்டுக்கடங்கா அதிகாரங்களைக்கொண்ட ஒரு சர்வாதிகார அரசு. வெளிநாட்டவர், ஓரினச்சேர்கையாளர்கள், முஸ்லிம்கள், சிறுபான்பாமையினர் நலிந்தவர்கள் ஆகியோருக்கு எதிரான அரசு…
-
- 0 replies
- 1.5k views
-
-
புலம்பெயர்ந்த தமிழ் தேசியம் நன்றி: http://kalaiy.blogspot.in 1978 ம் ஆண்டு, அக்டோபர் 5 ம் திகதி. 150 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும், ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அமர்வு. இலங்கையின் பிரதிநிதியை பேச அழைக்கிறார்கள். பொது மேடைக்கு வந்த ஒருவர் கணீரென்ற குரலில் பேச ஆர்மபிக்கின்றார். “என்னுடைய பெயர் கிருஷ்ணா. சிறி லங்காவிற்கும், இந்தியாவிற்கும் நடுவில் அமைந்திருக்கும், இரண்டரை மில்லியன் சனத்தொகையை கொண்ட தமிழீழம் என்ற தேசத்தில் இருந்து பேச வந்திருக்கிறேன். எமது தேசத்தில் சிறி லங்கா சிங்கள அரசு திட்டமிட்ட இனவழிப்பை மேற்கொண்டு வருகின்றது….” (இந்த இடத்தில் ஒலிவாங்கி இணைப்பு துண்டிக்கப்படுகின்றது. பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து, குண்டுக்கட்டாக தூக்கிச் சென…
-
- 2 replies
- 1.3k views
-
-
அடுத்தமாதமும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயத்தில் அமெரிக்கா பிரேரணையொன்றை கொண்டுவரவிருக்கிறது. அது இலங்கைக்கு சாதகமானதாக அமையும் என்று கூறுவதற்கில்லை. ஆனாலும் இலங்கை அரசாங்கம் அதனை பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. தமக்கு ஆபத்து இல்லை என்ற உத்தரவாதம் அரசாங்கத்திற்கு எங்கிருந்து கிடைத்ததோ தெரியாது. வரவிருக்கும் பிரேரணையை தோல்வியுறக் செய்யவேண்டும் என்று அரசாங்கம் கருதுவதும் அதற்காக சில நாடுகளின் உதவியை நாடுவதும் உண்மைதான். ஆனால் பிரேரணை வராமல் இருப்பதற்காக அல்லது வந்தால் அதற்கு எதிராக பல நாடுகளின் உதவியை பெறுவதற்காக உள்நாட்டில் தாமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. வியப்புக்குரிய விடயம் என்னவென்றால் பிரேரணையை த…
-
- 2 replies
- 816 views
-
-
கொமன்வெல்த் மாநாட்டை ‘நெலும் பொக்குண மஹிந்த ராஜபக்ஷ அரங்கில்‘ நடத்தும் இலங்கை அரசின் திட்டம் அவ்வளவு இலகுவாக கைகூடும் போலத் தெரியவில்லை. காரணம் இன்றுவரைக்கும், இந்த மாநாட்டை கொழும்பில் தான் நடத்துவது என்ற உறுதியான அறிவிப்பு ஏதும் உரியதரப்பில் இருந்து வெளியாகவில்லை. 2011 பேர்த்தில் விடுக்கப்பட்ட அறிவிப்புக்குப் பின்னர் - வரும் நவம்பர் 15 தொடக்கம் 18 வரை கொமன்வெல்த் உச்சி மாநாடு நடைபெறும் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்ட போதிலும், கொமன்வெல்த் உறுப்பு நாடுகளின் நிலைப்பாடு இன்னமும் சந்தேகத்துக்குரியதாகவே இருந்து வருகிறது. பேர்த் மாநாட்டின் முடிவில், அடுத்த மாநாடு இலங்கையில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் தொடக்கம், கனடா இதனை எதிர்த்தே வந்தது. மனித உர…
-
- 1 reply
- 754 views
-
-
படியளக்கும் இந்தியா! -யதீந்திரா 1 சமீபத்தில் எனது புலம்பெயர் நண்பர் ஒருவர், நீண்ட நாட்களுக்கு பின்னர் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிருந்தார். நீண்ட காலத்திற்கு பின்னர், அவரது மின்னஞ்சலை கண்டபோது மகிழ்ச்சி ஏற்பட்டது. நண்பர், நல்ல தகவல்கள் ஏதேனும் அனுப்பிருப்பாரோ! – ஆவலுடன் மின்னஞ்சலை திறந்த எனக்கோ, ஏமாற்றமே எஞ்சியது. தமிழ் அரசியல் ஆய்வுச் சூழலுக்கு நன்கு பரிட்சமான அந்த நனண்பர் ஒரு காலத்தில், உம்மையும் நிலாந்தனையும்தான் எனக்கு அதிகம் பிடிக்கும் என்றுரைத்தவர். உங்களிடம் ஒரு தனித்துவமான எழுத்துண்டு என்றவர். ஆனால் நான் விடுதலைப்புலிகளை விமர்சித்ததைத் தொடர்ந்து என்னுடனான உரையாடலை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டார். அந்த மின்னஞ்சல் – அவர் இப்போதும் முன்னரைப் போன்றே கறுப்பு-வெள்…
-
- 4 replies
- 857 views
-
-
விஸ்வரூபம்’ என்ற திரைப்படத்தை கடந்த வாரம் கமல் வெளியிட்டார். இப்படத்திற்குச் சாமரம் வீசியோரும், சாணி எறிந்தோரும் எண்ணிலடங்கார். ‘முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள்’ என அதில் காண்பித்திருப்பது அபத்தம் என்றனர், பலர். போட்டியாக, இந்து தீவிரவாதம் பற்றி வேறு பலர் பிரஸ்தாபித்தனர். ‘கலாசார தீவிரவாதம் மூலமாகக் கலைஞர்களைக் கட்டுப்படுத்தலாகாது’ என்று கமல் அறிக்கை விடுத்தார். எதிரும் புதிருமான விமர்சனங்களால் ‘விஸ்வரூபம்’ விளம்பரத்தின் உச்சத்தைத் தொட்டது. இது இவ்வாறிருக்க, அல்ஜீரியாவில் அண்மையில் இடம்பெற்ற எரிபொருள் நிலையத் தாக்குதலைத் தொடர்ந்து, கனடிய முஸ்லீம் தீவிரவாதிகளால் கனடாவிற்கு உள்ளேயும் வெளியேயும் அபாயம் காத்திருப்பதாகக் கனடியப் புலனாய்வுத்துறை கூறியது. இவையும் இவை…
-
- 1 reply
- 611 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழகத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் கொண்டு வருவதற்கான முயற்சியை எடுத்திருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. காங்கிரஸ் கட்சியுடன் திராவிட முன்னேற்றக் கழகம் இருப்பதால், மற்ற கட்சிகள் தி.மு.க.வுடன் இணைந்து இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்க தமிழகத்தில் தயாராக இல்லை. அதை உணர்ந்துள்ள தி.மு.க. தலைமை சமீபத்தில் அதற்கான முயற்சியில் இறங்கியது. அது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய வருகையையொட்டி சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற டெசோ அமைப்பின் கருஞ்சட்டைப் போராட்டத்தில் எதிரொலித்தது. கருஞ்சட்டைப் போராட்டத்தில் பங்கேற்று பேசிய கருணாநிதி, "இங்குள்ள (தமிழகத்தில்) இனப்பகைவர்கள்…
-
- 0 replies
- 539 views
-
-
'செயற்பாட்டு மூலோபாயம்' என்கிற சொல்லாடல் , மேற்குலக புவிசார் அரசியல் நோக்கர்களால் தற்போது பரவலாகப் பயன்படுத்தப் படுவதனை அவதானிக்கலாம். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா , ஆசிய-பசிபிக் பிராந்தியம் தொடர்பாக முன்வைத்த நீண்ட கால மூலோபாயத்திட்டம் குறித்து, தமது விமர்சனங்களையும் ,ஆலோசனைகளையும் தெரிவிக்கும் பல அரசறிவியலாளர்கள் , இந்த மூலோபாய திட்டத்திற்கான செயல்வடிவங்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டுமென்பதில் முரண்பட்டுக் கொள்வதைக் காணலாம். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் இருந்து விலகி, ஆசிய-பசிபிக் பிராந்தியம் நோக்கி நகரும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமது படைவலுவினை அதிகரிக்கும் அதேவேளை, ஏனைய தென்னாசிய மற்றும் கிழக்கு ஆசிய வளர்முக நாடுகளுடன் …
-
- 0 replies
- 657 views
-
-
உண்மையிலிருந்து வெகுதொலைவில் ஜனாதிபதி்; நாட்டில் நல்லிணக்கம் எவ்விதம் சாத்தியமாகும்? இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சம உரிமைகளுடனும், ஐக்கியத்துடனும் வாழ்வதாகவும், தாம் நாட்டைப் பிரிக்கும் சதிகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என்ற ஜனாதிபதியின் கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.அவரது கருத்து தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும், உண்மையிலிருந்து வெகு தொலைவில் நிற்பதாகவும்மே உணரமுடிகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாம் இப்போது அந்நிய சக்திகளின் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது,இதிலிருந்து…
-
- 0 replies
- 541 views
-
-
வட ஆபிரிக்காவில் படுகொலைத் திட்டத்தை அமெரிக்கா விரிவாக்குகிறது ஒபாமா நிர்வாகமானது அல்ஜீரியா மற்றும் பிற வடமேற்கு ஆபிரிக்க நாடுகளில் அதனுடைய டிரோன் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்து வருகிறது என்று செய்தி ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவம் மற்றும் CIA ஆல் “கொலை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலை” விரிவுபடுத்தப்படுவதற்கான தயாரிப்பு யோசனைகளுக்கு இடையே இன்னும் பாதுகாப்பான முறையில் நிறுவனமயப்படுத்துவதற்கான உலகப் படுகொலைத் திட்டம் நடைபெறுகின்றன. சனிக்கிழமை வெளிவந்த Wall Street Journal இன் முதல் பக்க அறிக்கையின் தலையங்க அறிவிப்பின்படி, “அமெரிக்கா ‘கொலை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலை’ விரிவுபடுத்தும் முயற்சியான” டிரோன் விரிவாக்கத் திட்டத்தின் உடனடி இலக்கு…
-
- 1 reply
- 485 views
-
-
காமினி பாஸ் தவறு செய்துவிட்டார் ஷோபாசக்தி சரிநிகர் இதழில் என். சரவணன் எழுதிய பிரேமாவதி மன்னம்பேரி குறித்த கட்டுரையொன்றை பல வருடங்களுக்கு முன்பு நான் படித்திருக்கின்றேன். அந்தக் கட்டுரையின் விபரங்கள் இப்போது எனக்குத் தெளிவாக ஞாபகமில்லை என்றாலும் மன்னம்பேரி மரணிப்பதற்கு முன்பு சொன்ன அவருடைய இறுதிச் சொற்கள் மட்டும் என் நெஞ்சில் இப்போதும் அழியாமலுள்ளன. கதிர்காமத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண்ணான மன்னம்பேரி, ஜே.வி.பியினர் நடந்திய 1971 ஏப்ரல் கிளர்ச்சியில் பங்கெடுத்தவர். கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்டதன் பின்பாக அரசபடையினரால் கைது செய்யப்பட்டு, வதைக்கப்பட்டு, வல்லாங்கு செய்யப்பட்டு மன்னம்பேரி சுட்டுக் கொல்லப்பட்டபோது மரணத்தறுவாயில் அவர் சொன்ன சொற்கள்: “காமினி பாஸ் தவறு செய்த…
-
- 1 reply
- 989 views
-
-
இந்த மக்கள் கேரள மக்களைப் போல விசாலமாக வாழ்கின்றார்கள் இன்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், யாழ்ப்பாணம் வந்திறங்கிய இந்திய அமைதிப்படை ஜவான்கள் யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்வியலை, இந்தியாவின் "கடவுள் தேசமாக' வர்ணிக்கப்படும் மலையாள வாசனைக்குரிய கேரளாவுடன் ஒப்பிட்டு பேசிய தருணங்கள் அவை. புறப்படையான பார்வை நோக்கலின் அடிப்படையில், யாழ்ப்பாணத்து மக்கள் "விசாலமானவர்கள்" என்னும் முடிவுக்கு அந்நியர்கள் வேகமாக வந்து விடுவதற்கான முக்கிய காரணங்கள் எமது "பொருளாதாரமும்', "வாழ்வாதாரமும்', "வாழிடக் கோலமுமே! தனித்தனியான, கிணறுகள், எல்லைப்படுத்தப்பட்ட தனிக் குடும்ப வாழிடங்கள், பிரத்தியேகமான மலசலகூடங்கள், பொறுப்புணர்ச்சியுடன் விளைவிக்கப்படுகின்ற விவசாய நிலங்கள் என்று எமக்க…
-
- 0 replies
- 645 views
-
-
சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இந்தியப் பயணம் அவருக்கு பெருத்த அவமானத்தையும் சங்கடத்தையுமே அவருக்கு உருவாக்கியுள்ளது. பீகார் மாநிலத்திலுள்ள புத்தகாயாவுக்குச் செல்வதாக மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட இந்தியப் பயணம் உண்மையிலேயே ஆன்மீக நோக்கங்களை மட்டும் கொண்டதல்ல. அதற்கும் மேலாக, அது மிகவும் முக்கியமான அரசியல் இலக்கோடு மேற்கொள்ளப்பட்டது. ஆன்மீகப் பயணம் என்ற பெயரில், இந்திய ஆட்சியாளர்களிடம் உள்ள உறவை மேம்படுத்தி, எதிர்வரும் ஜெனிவா ஐ.நா. அமர்வில் தனக்கு எதிராக உருவாக்கக்கூடிய அழுத்தங்களுக்கு எதிராக இந்திய ஆதரவைக் கோருவதுதான் அவரது முதன்மைத் திட்டமாக இருந்தது. 1600 இந்துக் கோவில்களை அழித்த ராஜபக்ச பக்தி மேலீட்டால் திருப்பதிக்கு விஜயம் செய்தார் என்று நம்ப முடியா…
-
- 0 replies
- 602 views
-
-
முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்த்தர் குமார்குணரட்ணம் அவர்களுக்கு பகிரங்கக்கடிதம் 2 - இனவாத உப்பில் ஊறிய மிளகாய் சிவக்காது – நடராஜா குருபரன் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிதாமகரும் ஜே.வீ.பீயின் முன்னாள் அரசியற்குழு – மத்திய குழு – செயற்குழு உறுப்பினரும் அக்கட்சியின் இயந்திரம் என அழைக்கப்பட்டவருமான குமார் குணரட்ணத்திற்கு நான் எழுதிய முதலாவது பகிரங்கக் கடிதம் பல வாதப் பிரதி வாதங்களை தோற்றுவித்திருக்கிறது. அந்தப் பகிரங்க மடல் முகப்புத்தகத்தில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியதுடன் என்மீது தனிப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்படவும் ஏதுவாகஅமைந்தது. எனது முதலாவது மடலில் நான் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதில் முன்னிலை சோசலிசக் கட்சியையும் அதன் முன்னணியான சம உரி…
-
- 0 replies
- 739 views
-
-
இஸ்ரேலிய அடிப்படைவாதிகள் பாலஸ்தீனர்களுடன் நிரந்தரமான அமைதி ஒப்பந்தம் ஒன்றை எழுதி அதில் முறைப்படி கையொப்பமிடுவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளனர். மேற்கண்ட கருத்தை இப்போதைய இஸ்ரேலிய பிரதமரான பென்ஜமின் நெட்டன்யாகுவின் அரசுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கும் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் அவிக்டோர் லிபர்மான் தெரிவித்துள்ளார். நிரந்தரமான சமாதான ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதைவிட தற்காலிகமான சமாதான ஒப்பந்தம் ஒன்றை எழுதி அதில் கையெழுத்திட்டால் இஸ்ரேலிய யூத அடிப்படைவாதிகளை சமாதானம் செய்ய முடியும் என்று கருத்து வெளியிட்டுள்ளார். ஊல்ரா நாஷனல் கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த தை 22ம் திகதி தமது கட்சிக்கு அதிக ஆதரவு கிடைக்காததைத் தொடர்ந்து சிறிய மாற்றமடைந்துள்ளமை தெரிகிறது. வர…
-
- 0 replies
- 643 views
-
-
குருதிச் சாட்சியங்கள் தீபாவளி, பொங்கல், புதுவருடம் என பண்டிகை நாள்களில்தான் தமிழ்த் திரைப்படங்கள் அள்ளுகொள்ளையாக வெளியாவதுண்டு. ஏனெனில் பண்டிகைக் காலங்களில் தான் பெருமளவான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு இழுக்க முடியும். பொதுவாகவே இத்தகைய பண்டிகைகளின் போது அந்த நாள்கள் அரச விடுமுறை நாள்கள் என்பதால் எல்லோரது கவனமும் புதிய படங்களின் மீது பதிவதால் தாம் நினைத்த இலக்கினை இந்தத் திரைப்படங்களால் அடையமுடிகிறது. என்னதான் மோசமான திரைப்படமாக இருந்தாலும் கூட முதலுக்கு பாதகமில்லாத நிலைமை பண்டிகைக் காலங்களில் தான் கிடைக்கிறது. எனவேதான் இத்தகைய பண்டிகைகளைக் குறிவைத்தே படங்களின் வெளியீட்டுத்திகதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஜெனிவா மனிதஉரிமைகள் சபை அமர்வு ஆரம்பித்தாலே "சனல்4'…
-
- 2 replies
- 619 views
-
-
ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), ஹெச்.ராஜா (பாஜக), கோபண்ணா (காங்.), விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்ற விவாதத்தின் முழு காணொளி:
-
- 6 replies
- 825 views
-
-
தமிழ் தேச விடுதலை: நாம் என்ன செய்யலாம்……? ?? நம் முன் உள்ள தெரிவுகள் என்ன…??? ஒரு முன்மொழிவு!. தமிழ் தேச விடுதலைக்கு நாம் (புலம் பெயர்ந்த அல்லது பெயர்க்கப்பட்ட தமிழ் பேசும் மனிதர்கள்; ) என்ன செய்யலாம்……. இன்றைய புலத்தின் அதாவது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் நிலைமை என்ன? அந்த மண்ணில் சகல இடங்களிலும் சிறிலங்கா இராணுவத்தின் பிரசன்னம். தமது நாளாந்த வாழ்வை கொண்டு செல்வதற்காக அரசாங்கத்திடமும் அதன் இராணுவத்திடமும் அரசியல்வாதிகளிடமும் அரசசார்பற்ற நிறுவனங்களிடமும் கையேந்தி நிற்கின்ற மனிதர்களின் கையறுநிலை. தமது வாழ்வுரிமைக்காகவும் அரசியல் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கமுடியாதää போராட முடியாத இராணுவ மயப்பட்ட சுழல். ஜனநாயகமின்மை நிலவுகின்ற அதிகாரமயப்…
-
- 1 reply
- 618 views
-
-
ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான். மிதுலா நகரம் தீப்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் ஜனக மகாராஜா தன் அரண்மனையில் வேதாந்தம் படித்துக் கொண்டிருந்தார். பிடில் வாசிக்கவில்லை என்றாலும், வேதாந்தம் படிக்கவில்லை என்றாலும் ……….. பேரினவாதம் கொழுந்துவிட்டு எரிகையில் நமது அரசியல் தலைமைகளும் அவர்களைப் போலத்தான் புதினம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது இனி அனைத்து மக்களும் பேதங்களை மறந்து வாழும் சூழல் உருவாகும் என்று சிறுபான்மையின மக்கள் மட்டுமன்றி சகோதர வாஞ்சையுள்ள சிங்கள மக்களும் எண்ணினர். ஆனால் அந்த எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டுள்ளது பேரினவாதத்தின் கோரமுகம். இந்நாட்டின் முத…
-
- 0 replies
- 752 views
-