அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
நாடாளுமன்றத் தேர்தல்: தமிழ் மக்களின் தெரிவு யார்? முத்துக்குமார் பாராளுமன்றத் தேர்தலுக்குத் திகதி குறித்தாகிவிட்டது. வருமா? வராதா? எனப் பல்வேறு விவாதங்களும் இடம்பெற்ற சூழலில் தேர்தல் வந்துவிட்டது. மைத்திரி அரசாங்கத்திற்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், தேர்தல் நடத்துவதைத் தவிர வேறு தெரிவு மைத்திரிக்கு இருக்கவில்லை. மகிந்தரின் மீள் எழுச்சியை பலவீனப்படுத்துவதற்காகத்தான் மைத்திரி தேர்தலைத் தொடர்ச்சியாகத் தள்ளிப் போட்டார். ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக மகிந்தர் ஒவ்வொரு நாளும் பலம்பெற்று வருகையில் மேலும் தாமதிப்பது பயன்தராது எனத் தெரிந்து கொண்டார். தென் இலங்கையில் மும்முனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. மகிந்தர் அணி எவ்வளவோ முயன்றும் பிரதமர் வேட்பா…
-
- 0 replies
- 279 views
-
-
இந்தியாதான் காப்பாற்றியது - நாங்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்பை மனதில் கொண்டிருப்போம்- இந்திய ஊடகத்திற்கான பேட்டியில் ரணில் Published By: RAJEEBAN 10 FEB, 2024 | 04:43 PM இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்தவேளை இந்தியா வழங்கிய உதவிகள் ஆதரவிற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமான wion ற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு நன்றி இந்தியா இல்லாவிட்டால் நாங்கள் தப்பியிருக்கமாட்டோம், இதன் காரணமாகவே இரு நாடுகள் மத்தியிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்துகின்றோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கேள்…
-
-
- 1 reply
- 279 views
- 1 follower
-
-
இலங்கை விடயத்தில்... கேள்விக்குள்ளாகும், சீனாவின் கொள்கைகள்? -யே.பெனிற்லஸ்- 019 நவம்பரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் ஆட்சிக்கு வந்தபோது, பீஜிங் மகிழ்ச்சியடைந்தது. சில வருடங்களுக்கு முன்னர், புதிய ஜனாதிபதியின் மூத்த சகோதரர் மஹிந்த, தனது நாட்டில் சீனச் செல்வாக்கில் புதிய யுகத்தை ஏற்படுத்துவதில் முக்கிய நகர்வுகளைச் செய்திருந்தார். பீஜிங்கின் கனவுத்திட்டமான பாதை மற்றும் மண்டலம் முன்முயற்சியின் (பி.ஆர்.ஐ) ஒரு பகுதியாக கண்கவர் உட்கட்டமைப்புத்திட்டங்களைச் செயற்படுத்தியது. இந்த முயற்சிகள் இலங்கையை இந்தியப் பெருங்கடலில் பீஜிங்கிற்கான மூலோபாய புறக்காவல் நிலையமாக மாற்றியுள்ளன. புவியியல் ரீதியாக, இலங்கை சீனாவிற்கு மலாக்கா ஜலசந்திக்கு…
-
- 0 replies
- 279 views
-
-
19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியது, அடுத்தது என்ன? - யதீந்திரா - on May 2, 2015 படம் | LANKAPUVATH சந்தேகத்துடன் எதிர்பார்க்கப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டம் எதிர்பார்ப்புக்களை பொய்ப்பிக்கும் வகையில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே கடினமென்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், 212 வாக்குகளால் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியிருப்பது அனைவராலும் ஆச்சரியமாகப் பார்க்கக் கூடிய ஒன்றே. ஆனால், வெளியில் வியப்பாக பார்க்கப்படுவது போன்று அவ்வளவு எளிதாக மேற்படி திருத்தம் நிறைவேறிவிடவில்லை. பல்வேறு சமரசங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனாலும், ஒரு சில முன்னேற்றகரமான விடயங்களும் மேற்படி சட்டத்திருத்தின் ம…
-
- 0 replies
- 279 views
-
-
இறுபக்கிப்பிடிப்பாரா அல்ஹீசைன் ரொபட் அன்டனி நீதி வழங்கும் செயற்பாட்டில் எவ்வாறான பொறிமுறையை இலங்கை முன்வைக்கப் போகின்றது என்பதே சர்வதேசத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அந்த வகையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் முன்வைக்கப்போகும் அறிக்கை ஆர்வத்துக்குரிய விடயமாக மாறியுள்ளது. அதாவது ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு மேலும் கால அவகாசத்தை வழங்கப்போகிறாரா? அல்லது இலங்கை தொடர்பில் மற்றுமொரு பிரேரணைகொண்டுவருவதற்கான வழியை ஏற்படுத்தப் போகிறாரா? மிகவும் பரபரப்பாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச…
-
- 0 replies
- 279 views
-
-
சிங்களவர்களும் எற்றுக்கொள்ளாத தலைமை | ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பில் இராகுல தேரர் | Akalankam | IBC நன்றி - யூரூப்
-
- 0 replies
- 279 views
-
-
"கும்மியடி கும்மியடி" "மகாவம்சம் குழப்பிய தமிழன் வரலாற்றை சொல்லி சொல்லி கும்மியடி கும்மியடி விஜயன் வருகையில் இலங்கையில் இருந்தவன் விடயம் தெரியாதோ கும்மியடி கும்மியடி" "கல்வெட்டு ஆதாரம் தமிழைச் சொல்லுது ராவணன் பூமியென கும்மியடி கும்மியடி பஞ்ச ஈசுவரங்கள் பழமையைக் காட்டுது புரிந்தால் நல்லது கும்மியடி கும்மியடி" "விஜயன் மனைவியும் மதுரைத் தமிழ்ச்சியே விபரம் இருக்குது கும்மியடி கும்மியடி சிங்களம் தோன்றியது ஆறாம் நூற்றாண்டு சிறிது சிந்தியுங்கள் கும்மியடி கும்மியடி" "வந்தேறு குடிகள் தமிழர் அல்ல வளமுடன் வாழ்ந்தவர்கள் கும்மியடி கும்ம…
-
- 0 replies
- 279 views
-
-
நல்லிணக்கம் பற்றிய நம்பிக்கைகள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- அண்மையில் கிளிநொச்சி நகரில் ஒரு அறிவிப்பு வாகனம் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு மக்களுக்கு நிவாரணங்களைக் கோரிக் கொண்டு விலத்திச் சென்றது. தெற்கு மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நிவாரணப் பொருட்களை வழங்க முன்வருமாறும் அந்த அறிவிப்பு வாகனம் சொல்லிக் கொண்டு போனது. அந்த தெருவால் போக்குவரத்து செய்த பலரும் அந்த வாகனத்தைப் பார்த்துச் சென்றனர். சிலர் லேசாக புன்னகைத்தபடி சென்றனர். ஆனால் பொதுமக்களும் வர்த்தகர்களும் தெற்கில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஆர்வத்துடன் வழங்க முன்வந்தனர். இலங்க…
-
- 0 replies
- 278 views
-
-
டெல்லியில் ரணில்: 13மைனஸ்? நிலாந்தன்! adminJuly 23, 2023 டெல்லிக்கு போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கடந்த 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, ரணில் விக்கிரமசிங்க தமிழ்க் கட்சிகளுக்கு எதைத் தரமுடியும் என்று கூறினாரோ, அதைத்தான் இந்தியப் பிரதமரின் முன்னிலையில் வைத்தும் திரும்பக் கூறிவிட்டு வந்திருக்கிறார். தமிழ்க் கட்சிகளுக்கு அவர் சொன்னது போலீஸ் அதிகாரம் இல்லாத ஒரு மாகாண சபை. போலீஸ் அதிகாரம் என்பது என்ன? ஒரு சட்டமன்றம் தான் உருவாக்கிய சட்டங்களை அமல்படுத்துவதற்கான ஓர் அதிகாரக் கட்டமைப்புத்தான். அதை இன்னும் தெளிவாகச் சொன்னால், ஒரு சட்டமன்றத்தின் அதிகாரத்தை அமுல்படுத்தும் பிரிவு போலீஸ்தான். உலகம் முழுதும் அதுதான் நிலைமை. அந்த அதிகாரம் இல்லையென்றால், நிதி அதிகாரம், கல்வி…
-
- 0 replies
- 278 views
-
-
இந்திய ஆதரவாளர்கள் சம்பந்தரை விமர்சிக்கலாமா? பிரித்தானிய பிரெஞ்சுத் தேர்தலும் வலதுசாரிகளும்....
-
- 0 replies
- 278 views
-
-
மேற்குலகின் இலங்கை மீதான ஈடுபாடு. சீனாவின் மடியில் இருந்து இலங்கை மீட்கப் பட்டு உள்ளது. அண்மைய தேர்தலில் ராஜபக்சே, ஜனநாயக ரீதியில் மண் கவ்வ வைக்க, பின்புலத்தில் மேற்கின் கடும் உழைப்பு இருந்தது அவதானிக்கப் பட்டு உள்ளது. ராஜபக்சேவின் வெற்றியானது, நாட்டினை மீண்டும் சீனாவின் கைக்கு கொண்டு செல்லும் நிலைமை கொண்டதாக இருந்தாலும், மைத்திரி எனும், அதிகார மையத்தினை சரியாக கையாண்டு அவரது தோல்வி உறுதிப் படுத்தப் பட்டு உள்ளது. அடுத்து என்ன? இந்திய நிலைப்பாடு இந்தியாவிலும் பார்க்க வேகமாக அமரிக்கா செயல்படுவது தெளிவாக தெரிகின்றது. சிலர் அமெரிக்க ஈடுபாடு, இந்தியாவிற்கு பிடிக்காவிடினும், சீனாவிலும் பார்க்க, அமெரிக்கா, பரவாயில்லை என்று கருத்து தெரிவிக்கின்றனர். தமிழ் நாட்டில், அமெரிக்…
-
- 0 replies
- 278 views
-
-
மஹிந்தவின் கட்சியில் தனித்து இயங்கும் எம்பிக்கள் - உடைகிறதா ராஜபக்ஷ கோட்டை? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுயாதீனமாக செயல்பட தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் விசேட உரையொன்றை ஆற்றிய, நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளருமான ஜீ.எல்.பீரிஸ், இந்த தீர்மானத்தை அறிவித்தார். இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகபெரும, டிலான் பெ…
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
கல்வியில் சாதனைகளை படைப்பதன் மூலமே தமிழ் தேசியத்தினை வேரூன்றச் செய்ய முடியும் மட்டு.நகரான் 17 Views வடகிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாங்கள் பல்வேறு தளங்களில் பேசி வருகின்றோம். ஆனால் அந்தத் தளங்கள் எந்தளவுக்கு தமிழ்த் தேசியத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். குறிப்பாக தமிழர்களின் காணி, நிலம், பொருளாதாரத்திற்கு முன்னோடியாக கல்வி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்று உணரப்படுகின்றது. கல்வியில் சாதனைகளை படைப்பதன் மூலமே எதிர்காலத்தில் தமிழ்த் தேசியத்தினையும் வேரூன்றச் செய்ய முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும். ஆனால் இந்த நம்பிக்கை தமிழர் பகுத…
-
- 0 replies
- 278 views
-
-
உள்ளூராட்சி சபைகள் யாருக்கு? நிலாந்தன். நீண்ட இடைவெளிக்கு பின் தலதா மாளிகையின் புனித தந்த தாதுவை தரிசிப்பதற்கு சிங்கள மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் விளைவாக கண்டிமா நகரை நோக்கி லட்சக்கணக்கான யாத்திரிகர்கள் குவிந்தார்கள். சன நெரிசலில் சிக்கி ஓர் இருதய நோயாளி இறக்க நேரிட்டது. பொருளாதார நெருக்கடியின் போது எரிபொருளுக்காக நின்ற மிக நீண்ட வரிசைகளுக்குப் பின் புனித தந்த தாதுவை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் வந்தார்கள். எதிர்பாராத இந்த ஜனத்தொகையினால் கண்டி மாநகரம் குப்பை மேடாகியது. நகரத்துக்குள் புதிதாக நுழையும் ஜாத்திரிகர்களை வரவேண்டாம் என்று கூறித் தடுத்து நிறுத்த வேண்டி ஏற்பட்டது. கண்டி மாநகரின் புவியியல் கொள்ளளவை மீறி யாத்திரிகர்கள் குவிந்தார்கள். அவர்கள…
-
- 0 replies
- 278 views
-
-
முரண்பாடுகளும் குழப்பங்களும் கூட்டமைப்பினுள் புதியவையல்ல! "தொடர்ந்தும் அரசிய லில் ஈடுபடுவதற்கான முகாந்திரங்களை விக்னேஸ்வரன் கொண்டிருக்கிறாரா” என்ற கேள்வி இன்று எழுப்பப்பட்டே ஆக வேண்டும். விக்னேஸ்வரனின் அபிமானிகளும் அவரை ஆதரிப்போரும் எத்தகைய கேள்விகளுக்கும் அப்பால் வைத்தே விக்னேஸ்வரனை நோக்குகின்றனர்.இதனால்தான் “சரியோ பிழையோ அவர்தான் எங்களுக்கு வேண்டும். அவரால்தான் தற்போதைய சூழலில் தமிழ் மக்களின் உரிமைக்கான அரசியலை முன்னெடுத…
-
- 0 replies
- 278 views
-
-
இன அழிப்பின் குறியீடே தையிட்டி விகாரை- அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ. யோதிலிங்கம்யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை இன அழிப்பின் குறியீடு என அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் இன்றையதினம்(15) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தையிட்டி விகாரை தொடர்பாக தமிழ் மக்களின் ஒன்றிணைந்த போராட்டம் கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை பௌர்ணமி தினத்தன்று நடந்து முடிந்திருக்கின்றது. ஆயிரக்கணக்கில் மக்கள் போராட்டத்தில் பங்குபற்றியுள்ளனர். போராட்டக்காரர்களுக்கும், பொலிசாருக்குமிடையே வாக்குவாதங்களும் இடம்பெற்றிருக்கின்றன. சிங்கள மக்களை விகாரை வளவுக்குள் அனுமதித்த பொலிஸார் …
-
- 0 replies
- 278 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை காணாமல் ஆக்குவது ? நிலாந்தன்! கடந்த வெள்ளிக்கிழமை அதாவது அனைத்துலக சிறுவர் தினத்திலன்று யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் ஐநா அலுவலகத்திற்கு முன்பு காணாமல் ஆக்கப்பட்டோருக்காகப் போராடும் உறவினர்கள் ஒரு கவனஈர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தார்கள். காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் சிலருடைய ஒளிப்படங்களை ஏந்தியவாறு அவர்கள் ஐநா அலுவலகத்தின் வாசலில் நின்றார்கள். சிறுவர் தினம் எனப்படுவது ஒரு கருப்புநாள் என்று அவர் தெரிவித்தார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைந்துவரும் ஒரு நாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் சமூக முடக்கம் நீக்கப்பட்ட அன்றைய தினமே ஐநா அலுவலகத்துக்கு முன்பு ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.…
-
- 0 replies
- 278 views
-
-
புதிய கூட்டுக்களும் – தமிழ் மக்கள் பேரவையின் சிதைவும்? – நிலாந்தன் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஒரு பலமான மாற்று அணியைக் கட்டியெழுப்பும் விதத்தில் சம்பந்தப்பட்ட கட்சிகளோடு உரையாடி ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்துவது என்று யாழ்ப்பாணத்தில் உள்ள வெகுசன அமைப்புக்கள் சில கூடிக் கதைத்தன. அரசியல் கைதிகளின் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக்களே மேற்படி சந்திப்பில் பங்கு பற்றின. தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து வகுக்கப்படும் ஓர் உள்ளூராட்சிக் கொள்கையின் பிரகாரம் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கட்சிகளைக் கேட்பது என்று அக்கூட்டத்தில் கதைக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு கட்சிகளின் மீது அழு…
-
- 0 replies
- 278 views
-
-
-
- 0 replies
- 278 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? இதற்கு முன் அப்படி நடந்திருக்கிறதா? இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14-ஆம் தேதியன்று நடக்கவிருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாகியிருக்கும் நிலையில், இந்த நாடாளுமன்றத் தேர்தல் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்…
-
-
- 1 reply
- 278 views
- 1 follower
-
-
இலங்கை நெருக்கடி: வரி விகிதம் உயர்வால் அரசுக்கு எவ்வளவு கூடுதல் வருவாய் வரும்? மக்களுக்கு என்ன ஆகும்? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமர் அலுவலகம், கொழும்பு இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ள இந்தத் தருணத்தில், வரி விகிதங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 8 வீதமாக காணப்பட்ட பெறுமதி சேர் வரியை, இந்த மாதத் தொடக்கம் முதல் அமலுக்கு வரும் வகையில் 12 வீதம் வரை அதிகரித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது. இதன்படி, பெறும…
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் தருணத்துக்கேற்ற அரசியல் பூச்சாண்டியே வடபகுதி தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் விடுதலைப் புலிகளின் ஆதரவு மனநிலை குறித்து ஆய்ந்தறிந்து அதற்கான நடவடிக்கை தொடர்பாக தீர்மானிப்பதற்காக சட்டம் ஒழுங்கு அமைச்சர் பிரதி அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் அண்மையில் வடபகுதிக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் மட்டுமல்லாமல் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள் மத்…
-
- 0 replies
- 277 views
-
-
தீர்வைத்தருமா காணாமல் போனோர் பணியகம்? ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பித்து இரண்டு நாட்கள் கழித்து, காணாமல் போனோர் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனங்களை வழங்கியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த பணியகத்தின் உறுப்பினர்களாக, ஜெயதீபா புண்ணியமூர்த்தி, கணபதிப்பிள்ளை வேந்தன், மிராக் ரகீம்,மேஜர் ஜெனரல் மொஹந்தி அன்ரோனெட் பீரிஸ், கலாநிதி சிறியானி நிமல்கா பெர்னாண்டோ, சுமணசிறி லியனகே, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். காணா…
-
- 0 replies
- 277 views
-
-
ரூபன் சிவராஜா ‘பொருண்மை தெரிதலுஞ் சொன்மை தெரிதலுஞ் சொல்லி னாகும் என்மனார் புலவர்’ (தொல். 158) ‘மொழி’ இரண்டு அடிப்படைக் கூறுகளின் வழிநின்று செயல்படக்கூடியது என்று வரையறை செய்கிறது தொல்காப்பியம். ஒன்று சொன்மை (சொல்) மற்றையது பொருண்மை (பொருள்). ஒலி, சொல், வாக்கிய அமைப்பு முறைகளை ஆதாரமாகக் கொண்டு சொன்மை வெளிப்படும். பொருண்மை என்பது, சொல்லின் பொருளைக் குறிக்கும் தன்மையைச் சுட்டுகிறது. அதேபோல் சொற்கள் அனைத்துமே பொருளைக் குறிக்கும் தன்மையும் - உணர்த்தும் தன்மையும் வாய்ந்தவை என்பதை, ‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’ (தொல். 157) என்கிறது தொல்காப்பியம். சொல்லுக்கும் பொருளுக்குமான தொடர்பு தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தில் நுணுக்கமாகவும் விரிவாகவும் விளக…
-
- 1 reply
- 277 views
- 1 follower
-
-
எழுதப்பட்ட தீர்ப்பும் வாசிக்கபடாத அரசியல் செய்தியும் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-03#page-11
-
- 0 replies
- 277 views
-