அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வருமா? பரபரப்பான அரசியல் காட்சிகள் திரைப்படத்தின் அந்த ‘க்ளைமாக்ஸ்’ காட்சி, தமிழக அரசியலில் அரங்கேறி விட்டது. சசிகலாவின் ஆதரவு பெற்ற 19 சட்டமன்ற உறுப்பினர்களை, ‘ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது’ என்று தமிழக சட்டப் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ஏழு தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கும் சபாநாயகர், கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின்படியான ஒரு நடவடிக்கையை முன்னெடுத்துச் சென்று, இப்போது இருக்கின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்தைத் தக்க வைத்து விட முடியுமா என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். …
-
- 0 replies
- 479 views
-
-
-
- 0 replies
- 484 views
-
-
மேலோட்டமான அரசியல் சீர்திருத்தங்கள் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரப்போவதில்லை! Veeragathy Thanabalasingham on June 4, 2022 Photo, APnews இலங்கை அரசியலமைப்புக்கு இன்னொரு திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 1978 இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு கடந்த 44 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதற்கு கொண்டுவரப்படுகின்ற 21ஆவது திருத்தம் இதுவாகும். அமெரிக்காவின் அரசியலமைப்பு 234 வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது. இதுவரையில் அதற்கு 27 திருத்தங்களே கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இரண்டேகால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக…
-
- 0 replies
- 284 views
-
-
ஐ.எம்.எப் கடன்கள் கசப்பான மருந்து! -நஜீப் பின் கபூர்- இன்று நமது நாட்டில் பிரச்சினைகள் சங்கிலித் தொடர் போல வந்து கொண்டிருக்கின்றன.பொருட்களின் விலைகளில் மிகச் சிறியதோர் சலுகையை மக்களுக்கு கொடுத்து அதனைவிட பல மடங்கு பணத்தை மக்களிடம் பறிக்கின்ற ஒரு வேலைத் திட்டத்தைத்தான் அரசு இன்று முன்னெடுத்து வருகின்றது.இதனை மின் கட்டணங்கள் உயர்வில் நாம் பார்த்தோம்.மக்களுக்கு நெருக்கடியில் எந்த விமோசனங்களும் கிடையாது.பொருளாதாரத் துன்பங்கள் அப்படியே தொடர, ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் கடந்த 30ம் திகதி சமர்ப்பித்த இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் அரசு எந்தச் சலுகைகளையும் குடிகளுக்கு வழங்கவில்லை. இந்த வரவு-செலவுத்திட்டங்கள் ப…
-
- 0 replies
- 342 views
-
-
போர் நடக்கும் பொழுது எந்த நாட்டின் வெற்றிக்கும், உளவுப்பிரிவு மிக முக்கியமானது. எதிரி நாட்டை சீர்குலைப்பது. அதன் மூலம் தன்னுடைய நாட்டின் நலனை பாதுகாப்பது, போரில் தனது நாட்டை வெற்றி பெற வைப்பது இவை தான் உளவுப்பிரிவின் முக்கிய வேலையாக இருந்து வருகிறது. இந்தியாவிற்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையே பங்களாதேஷ் உருவாவதற்காக நடந்த போர் கூட உளவுப்படையின் பங்களிப்பிற்கு முக்கிய உதாரணமாக உள்ளது. கிழக்கு பாக்கிஸ்தானில் உள்ள வங்காளிகள் மேற்கு பாக்கிஸ்தானால் நிராகரிக்கப்பட்டு இருந்தனர். "முக்தி பாகினி" என்று சொல்லப்படும் பாங்களாதேஷ் போராளி குழுக்களுக்கு ரா இந்தியாவில் பயிற்சி அளித்தது. இந்த போராளி அமைப்பு பாக்கிஸ்தானுக்கு எதிராக செயல்பட தொடங்கியது. 1971ல் இந்திய -பாக்கிஸ்தான் போரின் வெற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வடக்கு – கிழக்கு பிரச்சினையின் யதார்த்தம் ஈழத்தில் தொடக்கப்பட்ட பிரிவினைப் போராட்டத்தை இந்தியா எப்போதும் விடுதலைப் போராக ஏற்கவில்லை. ஈழத்தமிழர் இந்த கண்ணோட்டத்தோடு இவற்றை அணுகுவது மிகப்பெரும் குறைபாடு. 1987 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்திய– இலங்கை ஒப்பந்தத்தின் முதல் விடயம் இலங்கை ஒருமித்த நாடாக இருக்க வேண்டும் என்பதால் தனி ஈழ எண்ணத்தை இந்தியா எப்போதும் ஆதரிக்கவில்லை என்று இந்திய இராணுவ ஓய்வு நிலை புலனாய்வு நிபுணரும் எழுத்தாளருமான கேர்ணல் ஆர்.ஹரிஹரன் அண்மையில் பேட்டியளித்திருந்தார். அப்படியானால் ஈழம் என்பதும் பிரிவினை என்பதும் இந்தியாவுக்கு முன்பே தெரிந்திருப்பதாகவே அர்த்தமாகிறது. ஈழத்தமிழர…
-
- 0 replies
- 525 views
-
-
#தமிழ்தேசியம்: தேசியமா? தமிழ் தேசியமா? எது காலத்தின் கட்டாயம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன.…
-
- 0 replies
- 812 views
-
-
வூகான் உச்சிமாநாடு இந்திய சீன உறவுகள் பலமடையுமா? இந்தியா, சீனா என்னும் இரண்டு பழம்பெருமை வாய்ந்த இரு நாகரிகங்களும் இன்று உலகில் அதிவேகமாக பொருளாதார விருத்தியில் முன்னேறும் நாடுகளாகும். உலக சனத்தொகையில் நாற்பது வீதத்துக்கு மேற்பட்டோர் இவ்விரு தேசங்களிலும் வாழ்கின்றனர். இந்து பள்ளத்தாக்கு நாகரிகத்துக்கு பெயர் போன இந்தியா பல மொழிகளுக்கு, மதங்களுக்கு, பல வேறுபட்ட கலாசாரங்களுக்கு தாயகமாக விளங்குகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக உலகின் பெரும் ஜனநாயக நாடு என வர்ணிக்கப்படுகிறது. சனத்தொகை 120 கோடியைத் தாண்டிவிட்டது. தரையாலும் கடலாலும் சூழப்பட்ட நாடாகும். இந்தியாவின் தெற்கு இந்து சமுத்திரத்தால் சூழப…
-
- 0 replies
- 675 views
-
-
காணிப் பிரச்சினைகளைத் தீர்க்க போராடாத முஸ்லிம்கள் சனத்தொகைப் பரம்பல் மற்றும் அதனது மேல்நோக்கிய வளர்ச்சிப் போக்கு ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல், காணிகள் இல்லாத இனக் குழுமமாக, நாட்டில் பரவலாகவும் குறிப்பாக வடக்கு, கிழக்கிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இழந்த காணிகளை மீட்பதிலோ அல்லது காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலோ, இவர்கள் அக்கறை இல்லாமல் இருக்கின்றமை, மிகவும் ஆபத்தான நிலைமையாகும். பொருத்தமற்ற தலைவர்களையும் அரசியல் பிரதிநிதிகளையும் தெரிவு செய்கின்ற சமூகமும், சமூக அக்கறையற்ற அரசியல்வாதிகளால் ஆளப்படும் மக்கள் கூட்டமும் எவ்வாறான இழப்புகளையும் பின்னடைவுகளையும் சந்திக்கும் என்பதைத்தான், இலங்கை முஸ்லிம்கள் தற்சமய…
-
- 0 replies
- 352 views
-
-
ரணில் விக்கிரமசிங்கவின் அடுத்த கட்ட வியூகம் இந்திய இலங்கை வர்த்தக உறவைச் சீர்ப்படுத்தும் முயற்சி சீனாவை விலக்கி வடக்குக் கிழக்கில் புதுடில்லிக்கு முன்னுரிமை பொருளாதார நெருக்கடிச் சூழலில் சர்வதேச நாயணய நிதியம் வழங்கிய நிதி போதாது. அத்துடன் அடுத்த கட்ட நிதி தற்போதைக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதனை உணர்ந்துகொண்ட இலங்கை அரசாங்கம், இந்தியாவின் தயவுடன் இந்திய - இலங்கை வர்த்தக உறவுகளை மீளவும் புதுப்பிப்பது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கின்றது. வடக்குக் கிழக்கில் இந்தியத் திட்டங்களுக்கு முன்னுரிமை என்ற வியூகத்துடன் இந்தியாவுடனான வர்த்தக உறவை விரிவுபடுத்தும் ஏற்பாடுகள் வகுக்கப்படுகின…
-
- 0 replies
- 239 views
-
-
சிறிலங்காவில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ள சீனா சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சொந்த இடத்தில் புதிய விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்காக சீனா 200 மில்லியன் டொலர்களுக்கும் மேல் வழங்கியிருந்தது. இது சீன அரசாங்கத்தின் சிறந்த முதலீடுகளில் ஒன்றாகக் காணப்படவில்லை. 2013ல் மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இந்த விமான நிலையத்தின் ஊடாக நாளொன்றுக்கு ஒரேயொரு விமான பறப்பு மட்டுமே அதாவது டுபாய்க்கான விமான சேவை மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. ஜனவரி மாதத்தில், ராஜபக்சவின் மீள்தேர்தல் பரப்புரையானது தோல்வியில் முடிவடைந்த பின்னர், சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான சிறிலங்கா எயர்லைன்ஸ் மத்தல விமான நிலைய…
-
- 0 replies
- 392 views
-
-
2008 விடுதலைப் புலிப் போராளி கலைக்கோன் மாஸ்ரரின் பார்வையில்... இன்றைய காலத்தில் எழுப்பப்படும்.. பல கேள்விகளுக்கு அன்றே பதில் சொன்னவர்களுக்கு இப்போது சிலர் மீள்பார்வை.. மீளாராய்ச்சி என்று கத்துக்குட்டிக்கள் வகுப்பெடுப்பது தான் வேடிக்கை.
-
- 0 replies
- 1.2k views
-
-
துறவிகளை முன்னிலைப்படுத்தும் நிகழ்கால உண்ணாவிரதங்கள் மொஹமட் பாதுஷா / 2019 ஜூன் 23 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:03 Comments - 0 பல்லின நாடொன்றிலான நமது சமூக, அரசியல் சூழலில் விவகாரங்களையும் நெருக்கடிகளையும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பிழையான முன்மாதிரிகளை நிகழ்காலம் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. இதில் ஆகப் பிந்திய விடயமானது - காவியுடை உடுத்த பௌத்த துறவி ஒருவர், உண்ணாவிரதம் இருந்தால் அவரது கோரிக்கையிலுள்ள சரி, பிழைகளுக்கு அப்பால் நாட்டின் அரசாங்கமும் ஏனைய தரப்பினரும் அதனை நிறைவேற்றித் தருவார்கள், தரவேண்டும் என்ற ஓர் எழுதப்படாத விதியொன்று இன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. அத்துரலிய ரதனதேரரின் உண்ணாவிரதம் அதைத் தொடர்ந்து முஸ்லிம் அ…
-
- 0 replies
- 505 views
-
-
கன்னியா: சிவபுராணம் எதிர் இராணுவம்? நிலாந்தன்.. July 21, 2019 கன்னியா வெந்நீரூற்றில் தமது மரபுரிமைச் சொத்தைக் காப்பாற்றுவதற்காக சுமார் இரண்டாயிரம் மக்கள் திரண்டிருக்கிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை தென்கயிலை ஆதீனமும், கன்னியா மரபுரிமை அமைப்பும் மேற்படி திரட்சியை ஒழுங்குபடுத்தியிருந்தன. ஒரு வழிபாடாக தேவாரங்களைப் பாடிக்கொண்டு கன்னியாப் பிரதேசத்திற்குச் செல்வது இத்திரட்சியின் நோக்கமாகும். முகநூலில் விடுக்கப்பட்ட அழைப்பு மற்றும் கைபேசிச் செயலிகளின் வலையமைப்பு போன்றவற்றிற்கூடாக மக்கள் திரட்டப்பட்டிருக்கிறார்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் அங்கே க…
-
- 0 replies
- 460 views
-
-
ஓர் அஸ்தமனத்தின் உதயம்? இலட்சுமணன் போருக்குப் பின்னரான, இன்றைய தமிழ்த் தேசிய அரசியலின் அண்மைக்கால செல்நெறியானது, என்றுமில்லாத அளவு ஓர் இக்கட்டான சூழலுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. காரணம், ஐந்து கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளும் அதன் பின்னரான அரசியல் சூழலும் ஆகும். தமிழ் மக்களின் அரசியல் கட்சித் தலைமைகளை ஒன்றிணைத்து முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகளின் உள்ளடக்கமானது, சிங்களத் தேசியவாதிகளிடத்தில் எந்த அளவுக்குச் சாதகமான வகிபாகத்தைப் பெறும் என்பது, கடந்த கால அனுபவங்களில் இருந்து ஊகித்தறியக் கூடியதே. எதிர்பார்த்தது போலவே, சிங்களத் தேசியவாதிகளின் பரப்புரைகளும் கருத்துகளும் கண்ணோட்டங்களும் அமைந்துள்ளன. தமிழரது உரிமைகள் தொடர்பான அடிப்படை விடயங்களுடன் அமைந…
-
- 0 replies
- 943 views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் தேவை எட்டாவது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரசாரப்பணிகள் தீவிரமடைந்து செல்கின்றன. பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தமது கொள்கை பிரகடனங்களை வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் பயணித்துக்கொண்டிருக்கும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமது கொள்கைகளையும் அபிவிருத்தி திட்ட யோசனைகளையும் வெளியிட்டு வருகின்றனர். இன்னும் 13 நாட்களே ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு எஞ்சியுள்ள நிலையில் மிகவும் அதிகளவான பிரசார கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இரண்டு பிரதான வேட்பாளர்களும் தாம் ஆட்சிக்கு வரும் பட்சத…
-
- 0 replies
- 321 views
-
-
புருஜோத்தமன் தங்கமயில் / 2019 நவம்பர் 20 , கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கு ஒருசில மணி நேரத்துக்கு முன்னராகத் தன்னுடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில், ‘வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வது, வெற்றியை நோக்கிய பயணத்தை விட முக்கியமானதாகும்’ என்று எழுதியிருந்தார். பெரும் தோல்விகளிலிருந்து, ஐந்து வருடத்துக்கு உள்ளாகவே மீண்டெழுந்து, வெற்றியை அடைந்துவிட்ட ராஜபக்ஷக்களின், தொடர் வெற்றிகளுக்கான கட்டியமாகவே, மேற்கண்ட நிலைத்தகவலைக் கொள்ள முடியும். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், ராஜபக்ஷக்கள் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்படும் போது, அவர்கள் குறித்த நம்பிக்கைகள் பெரிதாக யாரிடமும் இருக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படாதவர்க…
-
- 0 replies
- 552 views
-
-
புதைகுழி அரசியலிருந்து விடுபடுதல் July 6, 2025 — கருணாகரன் — சில மாதங்களுக்கு முன்பு, நிலங்க அலெக்ஸாண்டர் என்ற சிங்கள எழுத்தாளரின் கதைகளுக்கு முன்னுரை எழுத நேர்ந்தது. அவருடைய கதைகளில் ஒன்று, “கொலை நிலத்தில் ஓலமிடும் உள்ளங்கள்” என்பது. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் அண்மையில் (2024)கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளைப்பற்றிய – மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளைப் பற்றிய கதை. சரியாகச் சொன்னால், அந்தப் புதைகுழிகளை – எலும்புக்கூடுகளை – பகுப்பாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட துறைசார்ந்த பேராசிரியரின் அரசியல் – உளவியல் பற்றிய கதை. நிலந்த அந்தக் கதையை எழுத்தாளருக்குரிய (மனிதருக்குரிய) நேர்மையான முறையில் எழுதியிருந்தார். அந்தக் கதையில் இடம்பெறுகின்ற பேராசிரியர் பண்டுக என்ற ப…
-
- 0 replies
- 161 views
-
-
நொண்டிக் குதிரைகள் அழகன் கனகராஜ் மலையகத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான இடங்களில் 'சுமைதாங்கிக் கல்' இருக்கும். நகர்புறங்களுக்குச் சென்று வாங்கும் பொருட்களை மூடையாய்க் கட்டி, தலையில் சுமந்து வருகின்றவர்கள், அந்தச் சுமைதாங்கியின் மேல் மூடையை வைத்துவிட்டு இளைப்பாறியதன் பின்னர், அவ்விடத்திலிருந்து வீட்டை நோக்கி நடப்பர். எனினும், நிறைமாதமாய் இருக்கின்ற கர்ப்பிணிப் பெண் திடீரென இறந்துவிட்டால், அப்பெண்ணின் நினைவாகவே சுமைதாங்கிக் கல், ஊர் எல்லையிலுள்ள ஒரு முச்சந்தியில் அமைக்கப்பட்டதாக முன்னோர்கள் கூறியது இன்னுமே ஞாபகத்தில் இருக்கின்றது. அந்தச் சுமைதாங்கிக் கல், பெரும்பாலும் ஊர் (தோட்டத்தின்) எல்லையிலேயே இர…
-
- 0 replies
- 501 views
-
-
-
- 0 replies
- 710 views
-
-
‘நன்மை தரும் சர்வாதிகாரி’ எனும் மாயை அண்மைய ஆண்டுகளாக உலகளவில் ‘ஸ்தாபன எதிர்ப்பு’ (anti-establishment) மனநிலை, மக்களிடம் மேலோங்கி வருவதை, அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அது என்ன ‘ஸ்தாபன எதிர்ப்பு’? காலங்காலமாக அரசியலிலும் ஆட்சி அதிகாரத்திலும், ஆதிக்கம் செலுத்தி வரும் தரப்பே, இங்கு ‘ஸ்தாபனம்’ எனப்படுகிறது. இந்தத் தரப்பே, அரசியலில் உயரடுக்காகின்றனர். இந்த உயரடுக்குக்கு எதிரான அரசியல்தான், ‘ஸ்தாபன எதிர்ப்பு’ அரசியல் என்றாகிறது. இந்த ‘ஸ்தாபன எதிர்ப்பு’ அரசியல், “நாம் எதிர் அவர்கள்” என்ற பெருந்திரள்வாத பகட்டாரவாரம் மூலம், மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கப்படுகிறது. இதன் மூலதனம், இயல்பிலேயே மக்களுக்குள்ள ‘ஸ்தாபன அரசியல்’ மீதான அதிருப்தியாகும். “இவர்களே …
-
- 0 replies
- 470 views
-
-
உயிரீந்தோர் நினைவோடு இலக்கிற்காய் ஒன்றிணைவோம்- அ. தனசீலன் 135 Views முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் 11 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஈழத்தமிழினம் இன்னமும் அதன் தாக்கத்திலிருந்து மீளுவதாக இல்லை. விடுதலையின் வாசலில் வந்து நிற்பதாக நம்பிய எங்களது மக்களுக்கு 2009இல் முள்ளிவாய்க்கால் வரை நிகழ்ந்தேறிய சம்பவங்கள் மனங்களை விட்டு அகலாத ரணங்களாக இன்னமும் இருந்து கொண்டே இருக்கின்றது. அடுத்த ஆண்டிற்கான ஒரு வருடப் பயண வழிகாட்டலை, நெறிப்படுத்தலை ஒவ்வொரு ஆண்டு மாவீரர்நாளின் போதும் தமிழீழத் தேசியத் தலைவரிடமிருந்து பெற்று வந்த எங்களது மக்கள் இன்னமும் சரியான தலைமைத்துவ வழிகாட்டலுக்காக காத்திருக்கின்றார்கள். இந்தக் காத்திருப்பு நியாயமா…
-
- 0 replies
- 222 views
-
-
சீனா அடக்கப்படுமுன் ஒடுங்கிப் போய்விடுமா? – வேல் தர்மா 85 Views 2021 மார்ச் மாதம் 25ஆம் திகதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடத்திய தனது முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டில் மக்களாட்சி நாடுகள் தனியொருவராட்சி நாடுகளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என அறைகூவல் விடுத்தார். தனியொருவராட்சியின் கீழ் உள்ள நாடுகள் உலகின் முன்னணி நாடுகளாக, செல்வந்தமிக்க நாடுகளாக, வலிமை மிக்க நாடுகளாக உருவெடுக்க முயல்கின்றன. நான் பதவியில் இருக்கும்வரை அதை நடக்க அனுமதிக்கமாட்டேன் என்று சூழுரைத்தார் பைடன். சீனாவின் பொருளாதார மேம்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சி, படைவலிமைப் பெருக்கம் ஆகியவை அடக்கப்பட வேண்டும்என அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர். கோவிட்-19 தொற்று நோ…
-
- 0 replies
- 650 views
-
-
மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் கதை போல அமெரிக்கா பசில் ராஜபக்ஷ ஊடாக தமிழர் தரப்புடன் இரகசியப் பேச்சு நகர்வா? சுரேனும் சுமந்திரனும் முன்னோடி ஆலோசனையா? சுமந்திரன் மறுக்கிறார் ஒரு வாரத்துக்கு முன்பதாக, கடந்த ஞாயிறன்று பரம இரகசிய இணையக் கூட்டமொன்றை பிரித்தானியாவிலிருந்து இயங்கும் உலகத் தமிழர் பேரவை எனும் அமைப்பின் பேச்சாளரான சுரேன் சுரேந்திரன் கூட்டினார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான திரு எம். ஏ. சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டிருக்கிறார். அந்தக் கூட்டம் என்ன விடயம் பற்றியது தெரியுமா? அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் மறைமு…
-
- 0 replies
- 615 views
-
-
வறுமையும் அரசியலும் என்.கே. அஷோக்பரன் ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரமும் அந்தச் சிறுமியின் அகால மரணமும், பல்வேறு வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளன. இனவாதம் இந்த நாட்டுக்குப் புதியதல்ல. 16 வயது தமிழ்ச்சிறுமி, முஸ்லிம் இன அரசியல் செய்யும், ஒரு முஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டில் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, தீக்கிரையாகி மரணித்த கொடூரம், இரண்டு சமூகங்களைச் சார்ந்தவர்கள் இடையே, இனரீதியான வாக்குவாதங்கள் சமூக ஊடகப்பரப்பில் இடம்பெறும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. எங்கெல்லாம் இனவெறி தலைதூக்குகின்றதோ, அங்கெல்லாம் அறிவு செத்துவிடுகிறது. ஒரு 16 வயது சிறுமியின் கொடூர மரணத்தை, நியாயமாக விசாரித்து, அதற்கு நீதி வழங்க வேண்டும் என்கிற கருத்தை அல்லவா, …
-
- 0 replies
- 538 views
-