Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. பௌத்த பேரெழுச்சியான பிரபா இல்லாத அரசியல் வெற்றிடம்! பகலவன் சமத்துவச் சிந்தனைகளை இந்தியாவின் காமராஜர் பேசியதாகத் தெரியவில்லை. ஆனால் அவரது வாழ்வு அந்த நெறியில் தான் அமைந்திருந்தது. இலங்கையிலோ இதற்கு எதிர்மாறு. "ஒரு மொழியெனில் இரு நாடு; இரு மொழியெனில் ஒரு நாடு" என முழங்கித் தள்ளிய பிரபல இடது சாரி கொல்வின் ஆர்.டி சில்வாதான் தமிழர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக்கும் புதிய அரசியல் அமைப்பை 1972 ல் உருவாக்கினார். இன்னொரு இடதுசாரி( கம்யூனிஸ்ட்) சரத்முத்தெட்டுவே கம பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது ஐ.தே.க உறுப்பினர்கள் (ஆளுங்கட் சி) குறுக்கிட்டனர். அப்போதைய பிரதமர் பிரேமதாச "அவரைப் பேசவிடுங்கள்; அவர் அண்மையில் ரஷியாவுக்கு சென்று வந்திருக்கிறார். அங்கே அவர்கள் அவர…

  2. ஈழத்தமிழர்கள் இப்போது அழிவின் விளிம்பில் நிற்கின்றனர். இந்நிலையில், தமிழ்த் தேசியம் என்பதை கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருக்கின்றது. ஆரம்பத்தில் இருந்து மீள்கட்டியெழுப்ப வேண்டிய சூழலில் நாம் இருக்கின்றோம். அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். தற்போது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்பது 1947 ஆம் ஆண்டு முதலே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த இனப்படுகொலையில் இருந்து தப்பிக்க நாம் கட்டமைக்கப்பட்ட தேசியவாதம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது. தமிழ் மக்கள் எவ்வாறு தப்பித்துக் கொள்ளலாம் தமிழ் மக்களின் விடுதலை யார் கையில் என்பது தொடர்பான அரசியல் மற்றும் அறிவியல் விளக்கங்களை அறிந்து கொள்ள கீழுள்ள காணொளி…

  3. சிறப்புக் கட்டுரை: கொரோனா காலம் - ஏற்றத்தாழ்வும் ஏழ்மையும்! மின்னம்பலம் ராஜன் குறை பொருளாதார ஏற்றத்தாழ்வு சிறிதும் அற்ற நிலை என்பது சமூகத்தில் சாத்தியமா என்பது ஐயம்தான். பொதுவுடமை சமூகமாக இருந்தாலும்கூட, அவரவர்கள் பணிகள், பொறுப்புகள் சார்ந்து சில கூடுதல் வசதிகள், சலுகைகள் தவிர்க்கவியலாதவை. ஓரளவாவது ஊக்கப்படுத்த தனிச் சொத்துரிமையை அனுமதிப்பதும், அதன் மூலம் ஏற்றத்தாழ்வு உருவாவதும் இன்றியமையாதது. சமூகம் முழுமையும் ஒருபடித்தான நிலையில் வாழ்வது என்பது ஆதிவாசி வேட்டைச் சமூகங்களில்கூட சாத்தியமாக இருந்ததா என்பது கேள்விக்குறிதான். அங்கேயும் சில அதிகார சமமின்மைகள், ஏதோவொரு வகையிலான ஏற்றத்தாழ்வு தோன்றியதை மானுடவியல் பிரதிகள் விவாதித்துள்ளன. ஏற்றத்தாழ்வுக…

  4. அடுத்த உரைக்கு இதே ஆளுநரா, இல்லையா? தமிழக சட்டமன்றம், எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதி, ஆளுநர் ரோசய்யாவின் உரையுடன் கூடுகிறது. மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் மாற்றப்படாமல் இருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆளுநர் ரோசய்யா, உரை நிகழ்த்தவுள்ளார்;. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்சியின் செயற்றிட்டங்கள் இந்த உரையில் இடம்பெறும். எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த முறை தமிழக சட்டமன்றத்தில் உதிரிக் கட்சிகள் ஏதுமில்லை. எதிர்க்கட்சிகள் தவிர, அரசியல் கட்சிகளும் இல்லை. குறிப்பாக, 1991இல் சட்டமன்றத்துக்குள் நுழைந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு எம்.எல்.ஏ இல்லை. 2006இல் முதன் முதலாக சட்டமன்றத்துக்குள் நுழ…

  5. உரிமையை போராடியே பெற முடியும்!! Nerukku Ner | Ep 9 Part 1 | IBC Tamil TV முள்ளிவாய்க்கால் போன்ற பல துயர சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில், தமிழர்களுக்கு விடுதலை வேண்டும் என குரல் கொடுக்கும் உலகெங்கிலும் உள்ள தமிழ் அமைப்பினைச் சார்ந்தவர்கள் நமது IBC தொலைக்காட்சி தளத்தில் ஒரே மேடையில் இணைந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்த நிகழ்வே நேருக்கு நேர்.

  6. ஐ.தே.க இறந்துவிட்டதா; உயிருடனா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 12:29 ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிட்ட எந்தவொரு மாவட்டத்திலேனும், ஓர் ஆசனத்தையாவது வெற்றிபெற முடியாத அளவுக்கு, ஐக்கிய தேசிய கட்சியையும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும், பொதுமக்கள் நிராகரித்துவிட்டார்களா? நாம் இவ்வாறு கேட்கும்போது இவ்வளவு தெளிவாகத் தெரியும் ஒரு விடயத்தைச் சந்தேகிக்க வேண்டுமா என, மற்றவர்கள் கேட்கலாம். ஆனால், ஐ.தே.கவில் இருந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவும் சஜித் பிரேமதாஸ தலைம…

  7. முன்னாள் போராளிகள்: தமிழ் தரப்புகள் மறந்துவிட்ட கடப்பாடு நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகள் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் திகதி, கிளிநொச்சி, இரணைமடுவிலுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தினை வேலை கோரி முற்றுகையிட்டனர். கொளுத்தும் வெயிலில் கைக்குழந்தைகளோடு வந்திருந்த முன்னாள் பெண் போராளிகளையும் மனதுருகி வேலை கோரிய அங்கவீனமுற்ற முன்னாள் போராளிகளையும் அங்கு காண முடிந்தது. ஊடகங்களும் அவர்களைப் பிரதானப்படுத்தி செய்தி வெளியிட்டன. சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் வேலைக்காகப் புதிதாக ஆட்கள் உள்வாங்கப்படுகிறார்கள் என்கிற தகவல் பரவியதை அடுத்தே, முன்னாள் போராளிகள் அங்கு கூடினர். அரசாங்கத்தின் புனர்வாழ்வுக் காலத்த…

  8. ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், தமிழ் தேசியம், தமிழ் உணர்வு எல்லாம் பொங்கிப் பீறிடும். தேர்தல் முடிந்தவுடன், சிங்கக் கொடியை ஆட்டுவதும், தாயகமா?…அப்படி ஒன்று இருக்கிறதா என்று முழிப்பதும், எம்மிடத்தில் பலம் இல்லையென்று கூனிக்குறுகுவதுமாக, தமிழ் தேசிய அரசியல் வெளியை நிரப்பிவிடும். மறுபடியும் ஒரு தேர்தல் வருகிறது. புது முகமொன்றை நிறுத்தினால், 2010 இல் ஏற்பட்ட வாக்களிப்பு வீழ்ச்சியை சரிசெய்து விடலாம் என்பது முடிவாகி விட்டது. களமிறக்கப்பட்டவர், தமிழ் தேசியத்தின் மீட்பராக மக்கள் மத்தியில் சித்தரிப்பதற்கு பலத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அவரின் சட்ட அறிவு, சிங்களத்தின் அரசியலமைப்புக்குச் சவாலாக இருக்குமென்றும், சர்வதேசத்தை தமிழர் பக்கம் திருப்புமென்றும், பரப்புரை செய்யப்படுகிறது.…

  9. ஈழத்தமிழரின் இன்றைய சவால்: நாம் மனந்திறந்து பேசுவது எப்போது? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இன்று, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்ன? என்ற கேள்விக்கான ஒருமித்த பதிலை, ஈழத்தமிழ்ச் சமூகத்தால் சொல்லிவிட முடியாது. அதேபோலவே, ஈழத்தமிழர் என்ற வரையறைக்குள், யாரெல்லாம் அடங்குகின்றார்கள் என்பதற்கும் ஒருமித்த பதில் இல்லை. யாழ்ப்பாணத் தமிழர்கள், இலங்கையில் வாழும் எல்லாத் தமிழர்களையும் ஈழத்தமிழர்களாகக் கருத விரும்புகிறார்கள். ஆனால், ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்கள், தங்களை ஈழத்தமிழர்களாக அடையாளம் காட்ட விரும்புகிறார்களா என்ற கேள்வி இயல்பானது. அகஒடுக்குமுறைகள் நிரம்பிக் கிடக்கின்ற சமூகமொன்றில், புறஒடுக்குமுறையின் காரணமாக, அகஒடுக்குமுறைகளை மிகக் கொடூரமான முறையில்,…

  10. தமிழ்நாட்டில் “தமிழ் அகதிகள்” ஓகஸ்ட் 3, 2021 ~ Vigetharan A.S அ. சி. விஜிதரன் தமிழ்நாட்டில் “தமிழ் அகதிகள்” என்பது வித்தியாசமான தலைப்புப் போல தெரியலாம். ஆனால் முப்பது ஆண்டுகாலமாக இதுவே எதார்த்தமாக உள்ளது. இலங்கையில் இன மோதல் காரணமாகத் தமிழ்நாட்டில் சுமார் 110 முகாம்களில் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் அகதிகள், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். மொழியாலும், பண்பாட்டாலும் பல ஒற்றுமைகள் இருக்கும் தமிழ் நிலத்தில் தமிழர்கள் அகதிகளாக இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து வாழ்ந்து வருவது வேதனைக்குரியது. தமிழ் அகதிகள் நிலையை மாற்ற பல்வேறு மட்டங்களில் உரையாடல்கள் உருவாக்க வேண்டியுள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு தமிழ் அகதிகள் தொடர்பில் இந்திய …

  11. இரட்டை சவால்களை வெற்றி கொள்வாரா? ட்ரம்ப் இன்று உலகின் ஏக­வல்­ல­ர­சாக ஆதிக்கம் செய்­வ­தென்­பது எவ்­வ­ளவு கடி­ன­மா­னது என்­பதை உலகில் அர­சியல், பொரு­ளா­தார, இரா­ணுவ, விஞ்­ஞான, தொழில்­நுட்பத் துறை­களில் முதன்­மை­யாகப் பவ­னி­வரும் ஐக்­கிய அமெரிக்க நாடுகள் என வர்­ணிக்­கப்­படும் அமெரிக்­காவின் புதிய ஜனா­தி­ப­தி­யான ட்ரம்ப் புரிந்து கொள்­வ­தற்­கான தருணம் வந்­து­விட்­டது. ஜன­நா­யக விழு­மி­யங்­க­ளுக்கும், சமஷ்டி அமைப்பு முறைக்கும் வலு­வே­றாக்­கத்­திற்கும் உல­கி­லேயே பெருமை மிக்க அமெரிக்கா, வெளிநாட்டுக் கொள்கை விட­யங்­களில் மிகவும் விமர்­ச­னத்­திற்கும் கண்­ட­னத்­திற்கும் உள்­ளாகி வரு­வது யாவரும் அறிந்த விட­ய­மாகும். இரண்டாம் உலக மகா­யுத்­தத்தின் பின்னர் நாசிச ஜே…

  12. வடக்கு, கிழக்கு இணைப்புக்கு செய்ய வேண்டியது என்ன ? எஸ். பாலசுப்பிரமணியம் 1948.02.04 ஆம் திகதி இலங்கை சுதந்திரமடைந்த போது வடக்கும், கிழக்கும் நிலத் தொடர்பில் ஒன்றாகவே இருந்தன. இந்தியா, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தன்னுடன் இணைத்துக்கொண்டு விடும் என்ற அச்ச உணர்வு சிங்கள ஆட்சியாளர்களிடமும் பௌத்த மத நிறுவனங்களிடமும் இன்றும் உண்டு. சிங்கள, பௌத்த மக்கள் வாழும் பகுதி மக்களின் எதிர்ப்பினால் சாத்தியப்படாது போனாலும் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு இந்தியாவுடன் இணைந்து ஒரு மாகாணமாகக்கூடும் என்ற அச்சம் சிங்களத் தலைவர்களிடம் அன்றும் இருந்தது இன்றும் உள்ளது. இத்தகைய அச்சத்தை அன்றைய பிரதமர் டி.எஸ். சேனநாயக்க சுதந்திரம…

  13. தமிழர் அரசியல் புலத்தில் விடை தெரியாத கேள்விகள் - க. அகரன் ‘சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த’ கதையாகியுள்ளது வடக்கு, கிழக்கு அரசியல் நிலைமைகள் என்றால் மறுப்பதற்கில்லை. தமிழர்களது போராட்ட வரலாறுகளும் அதனூடான உரிமைக்கான குரலும் ஓங்கி ஒலித்த காலத்தில் இருந்த திடமான அரசியல் களம், தற்போது தடம்புரளும் வங்குரோத்தில் செல்கின்றமை ஆரோக்கிமானதாக இல்லை. விடுதலைப் புலிகளினால் உருவாக்கம் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று ஆரம்பகால தார்ப்பரியங்களை மறந்து செயற்படுவதாகப் பல்வேறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அந்தப் பந்தையக் குதிரையில் பயணிப்போர் தமிழர் நிலைப்பாட்டை உணர்ந்துள்ளனர…

  14. ''அரசு என்பது துப்பாக்கிகளினால் நிலைநிறுத்தப்படவில்லை, வார்த்தைகளினால் ஆன பிரதிகளினால்.'' உலகில் காலகாலமாக அதிகாரமும் அடக்குமுறையும் நிகழ்ந்துகொண்டே வருகிறது. இதில் கவனிக்க வேண்டியது அடக்குமுறையை நிகழ்த்தும் சமூகம் எண்ணிக்கையளவில் மிகக்குறைவானதாக இருப்பதும் அடக்குமுறைக்கு உட்படும் சமூகம் பெரியதாக இருப்பதும். எப்படி இது சாத்தியமாயிற்று. அதன் விடைதான் முதல்வரிகளில். நமக்குள் மூன்றுவிதமான சமூக அமைப்புகளை நாம் காணலாம். முதலாவது அடக்குமுறைக்கு உட்படும் அடிமை சமூகம், இரண்டாவது அடக்கும் அதிகார சமூகம், மூன்றாவது தரகு சமூகம். வரலாறு என்பது ஒரு சமூகத்தை பற்றிய செய்தியாக, ஆவணமாக, செல்வமாக உணரப்படுகிறது. இதன் மீதான நம்பிக்கைகளே அடுத்தடுத்த தலைமுறைகளை வழிநடத்திச் செல்கிறது. …

    • 0 replies
    • 1.3k views
  15. ரணிலின் பதவி பறிபோகுமா? உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் தாக்கம், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஐ.தே.கவுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள், அதன் தலைமைத்துவத்துக்கான சவாலாகவும் மாறியிருக்கிறது. ஐ.தே.கவில் எப்போதுமே தலைமைத்துவச் சிக்கல்கள் இருந்து வந்தமை வரலாறு. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தலைவர்களாக மேலெழும் போது, இந்தச் சிக்கல்கள் ஏற்பட்டு வந்துள்ளன. ஐ.தே.கவின் தலைவராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கவுக்கும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்கவுக்கும் இடையிலான தலைமைத்துவச் சிக்கலே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கக் காரணமானது. அதற்குப் பின்னர், டட்லி சேனநாயக்க…

  16. தமிழகத்துக்கு தண்ணி காட்டும் கர்நாடகாவும் பா.ஜா.காவும் காவிரி நதிநீர் பங்­கீடு விவ­கா­ரத்தில் தமி­ழக மாநில அரசு இரட்­டை­வேடம் போடும் அதே­வேளை, மத்­திய அர­சாங்கம் தமி­ழக மக்­களை வஞ்­சிப்­ப­தாக தமி­ழ­கத்தின் எதிர்க்­கட்­சி­களும் பொது அமைப்­பு­களும் குற்­றஞ்­சாட்டி வரு­கின்­றன. காவிரி நதியில் தமி­ழ­கத்­துக்கு திறந்­து ­வி­ட­வேண்­டிய நீரை திறந்­து­வி­டாமல் உச்­ச­நீ­தி­மன்­றத்தின் உத்­த­ர­வையும் உதா­சீ­னம்­செய்து அடம்­பி­டித்துக் கொண்­டி­ருக்­கி­றது கர்­நா­டக மாநி­லத்தின் முத­ல­மைச்சர் சித்­த­ரா­மை­யாவின் அர­சாங்கம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்­ப­த­னூ­டாக காவிரி நீரை தமி­ழகம், கேரளம், புதுச்­சேரி மற்றும் கர்­நா­டகம் ஆகிய நான்கு மாநி­ல…

  17. அக்கனிப்பார்வை- திரு சேனன்

  18. ஜனாதிபதியின் ஐ.நா.உரை நல்லிணக்க சவால்களை நன்கு புலப்படுத்தும் ஆட்சிமுறைப் பிரச்சினைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைக்காலத்தில் செய்திருக்கும் தலையீடுகள் அவரின் தலைமையிலான அரசாங்கத்திற்குள் நிலவுகின்ற கடுமையான அபிப்பிராய வேறுபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருகின்றன. அவற்றில் முக்கியமானது போர்க்காலத்தில் இடமபெற்றதாகக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்லான பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்திற்கு அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளில் இருந்து விடுபடுவதற்கு அவர் மேற்கொள்கின்ற முயற்சியாகும்.முன்னைய அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்தின் சில பிரிவுகளுக்கும் தீவிரமடைந்திருந்த பதற்றநிலையை புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அரசாங்…

  19. மைத்திரியின் அளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும் Nillanthan18/11/2018 அப்பா பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதுஒரு முறை வகுப்பத்தலைவராக நியமிக்கப்பட்டார்.உதவி வகுப்புத்தலைவராகநியமிக்கப்பட்ட மாணவர் சற்று வெட்க குணமும் பெண் சுபாவமும் கொண்டவராகஇருந்தார். அத்தோடு அவர் அவரது சில குறிப்பிட்ட நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு ஆங்கிலத்தில் கதைப்பவராகவும் இருந்தார்.இந்த நடவடிக்கைகள்அப்பாவை கோபத்திற்கு ஆளாக்கியது.உடனே வகுப்பாசிரியரிடம் சென்று உதவிமாணவத்தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறு அடம்பிடித்திருக்கிறார்.இதனால்இரண்டு நாட்கள் பாடசாலைக்கும் செல்லவில்லையாம்.அப்பாவின் முகம்சாதாரண நிலையிலும் கோபக்காரரைப்போலவே இருந்ததால்வகுப்புத்தலைவருக்கு அவரே பொருத்தம் என கருதிய…

  20. அரசியல் நெருக்கடியால் இலங்கை செலுத்தப் போகும் விலை! இலங்கையில் தற்போது தீவிரம் பெற்றிருக்கும் அரசியல் அதிகார நெருக்கடி நிலைமையின் பாரதூரத்தை ‘ 30 வருடகால யுத்த காலத்தில் செய்ய முடியாமற்போனதை 3 கிழமைகளில் செய்துவிட்டனர்’ எனப் பகுதித்தறிவுடன் சிந்திக்கும் பலருடனான கலந்துரையாடல்களின் மூலமாக உணர்ந்துகொள்ளமுடிகின்றது. தற்போது இலங்கையின் அரசியல் நெருக்கடி ஒரு மாதத்தை கடந்து முடிவின்றி சென்றுகொண்டிருக்கின்றது. ஒக்டோபர் 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி அமைச்சரவையைக் கலைத்து மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்தமை தொடக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கைகளும் அதனைத் தொடர்ந்து இலங்கையின் பாராளுமன்றத்தில் நடந்தே…

  21. நடைமுறையில் உயிர்ப்பிக்கப்படாத எந்தவொரு கொள்கையும் சாத்தானுக்கு சேவகம் செய்வதாகவே முடியும். மூத்த அரசியல் ஆய்வாளர் திரு. மு. திருநாவுக்கரசு அவர்கள்

  22. உயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஏப்ரல் 24 புதன்கிழமை, மு.ப. 02:28 Comments - 0 சித்திரைப் புத்தாண்டுக் காலத்தையொட்டி, ஆரம்பித்த தொடர் விடுமுறைக் காலம், உயிர்த்த ஞாயிறுக் கொண்டாட்டங்களோடு முடிவுக்கு வரவிருந்தது. ஆனால், உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளை மக்கள் முடிப்பதற்கு முன்னரேயே, நாடு, பேரிழப்பைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டிருக்கிறது. தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என்று உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள், கொண்டாட்டங்களுக்காக மக்கள் அதிகளவில் கூடும் இடங்களை இலக்கு வைத்து, தீவிரவாதிகள் நடத்தியிருக்கின்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், நாட்டு மக்களைப் பெரும் சோகத்துக்குள்ளும், சந்தேகப் பீதிக்குள்ளும் தள்ளியிருக்க…

  23. ஜனநாயகம் குறித்து அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு கடந்த 25 வருடங்களாக திருப்தி இல்லை என்ற ஒரு முடிவை உலகின் தொல்முதுப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான கேம்பிறிட்ச் பல்கலைக்கழகம் தான் நடத்திய புதிய ஆய்வுகளில் வெளிப்படுத்தியுள்ளது. சுமார் 40 லட்சம் மக்களிடம் எடுக்கப்பட்ட 3500 கணிப்பீட்டு செயற்திட்டங்களில் இருந்து இந்தமுடிவுபெறப்பட்டதாக இந்த ஆய்வை நடத்திய கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தின் எதிர்கால ஜனநாயகத்துக்கான மையம் கூறுகிறது. அதாவது முன்னெப்பொதும் இல்லாத வகையில் ஜனநாயகத்தில் திருப்தியடையாத மக்களின் வகிபாகம் முன்னர் இருந்த 48 வீதத்தில் இருந்து 10 புள்ளிகள் மேலும் எகிறி தற்போது 58 வீதத்தில் இருப்பதாக ஐரோப்பாவின் நிதிவசதி கொண்ட கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்த…

  24. [size=2] [size=4]செப்டெம்பர் 11, 1973 அன்று சல்வடார் அலண்டேயின் ஆட்சி அமெரிக்க அரசாங்கத்தின் துணையுடன் தூக்கியெறியப்பட்டது. அலண்டே ‘மர்மமான முறையில்’ கொல்லப்பட்டார்.[/size][/size][size=2] [size=4]2001ம் ஆண்டு, செப்டெம்பர் 11 அன்று நியூ யார்க், வாஷிங்டன் டிசி ஆகிய நகரங்களின்மீது நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 3000 பேர் கொல்லப்பட்டனர். [/size][/size] [size=2] [size=4]இரண்டுமே ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகள். ஒன்று அமெரிக்காவின் துணையுடன் நிகழ்த்தப்பட்டது. இரண்டாவது, அமெரிக்காவின்மீதே.[/size][/size] [size=2] [size=4]பரமக்குடியில் சென்ற ஆண்டு செப்டெம்பர் 11 அன்று காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை மற்ற இரு செப்…

    • 0 replies
    • 1.1k views
  25. கல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா கல்வியானது மனிதனது அடிப்படைத் தேவைகளில் ஒன்றானதை தொடர்ந்து சமூகத்தில் அனைவரும் பேசப்படுகின்ற ஓர் விடயமாகக் காணப்படுகின்றது.ஆனாலும் தற்கால கல்விமுறைமையிலும் கல்வி நடவடிக்கைகளிலும் பாரிய பிரச்சனைகள ; காணப்படுகின்ற போதிலும் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பது கேள்விக்குறியான ஓர் விடயமாகவே காணப்பட்டு வருகின்றது. எமது நாட்டைப் பொறுத்தவரையில் கல்வி தொடர்பான அபிவிருத்தி நடவக்கைகளும் புதியன புகுத்துதலும் மேற் கொள்ளப்பட்டாலும ; சர்வதேசத்தோடு ஒப்பிடுகின்ற போது போட்டியிட முடியாத ஓர் கல்வி முறையாகவே காணப்படுகின்றது. தற்காலத்தில் இலங்கையைப் பொறுத்தவரை முறைசார்ந்த மற்று…

    • 0 replies
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.