அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9268 topics in this forum
-
தேர்தல் முடியும் வரை கிழக்கு மக்கள் காத்திருப்பார்கள்? -இலட்சுமணன் ஆளுமை மிக்கவர்கள் அரசியலுக்குள் வரவேண்டும் என்ற ஒரு கதையை பலரும் சொல்கிறார்கள். எதனை வைத்து அதனை மட்டிடுகிறார்கள் என்பதுதான் புரிந்துகொள்ள முடியாத விடயமாக இருக்கிறது. “எனது மகன் வைத்தியராக வரவேண்டும்”, “பொறியியலாளராக வரவேண்டும்”, “கணக்காளராக வரவேண்டும்”, “சட்டத்தரணியாக வரவேண்டும்” என்று கனவு, கற்பனை வைத்து கற்பிக்கின்ற பெற்றோர், எனது மகன் அரசியல்வாதியாக வர வேண்டுமென்று எண்ணம் கொள்வதே இல்லை. இது வெறும் வாசகம் அல்ல நாம் அறிந்த உண்மை. தேர்தல் வரும் போதெல்லாம், நாம் எல…
-
- 0 replies
- 280 views
-
-
மலையகத்தை நோக்கிப் போதல் - நிலாந்தன் டித்வா புயலால் தமிழ்த் தரப்பில் அதிகம் பாதிக்கப்பட்டது மலையகத் தமிழர்கள்தான். மலையகத்தில் வெள்ளம்,புயல்,மண்சரிவு ஏற்படும்போது அங்கே உறக்கத்திலேயே மண்மூடி இறந்தவர்கள் அதிகமாக ஏழைகள்தான். மேல் நடுத்தர வர்க்கம் அவ்வாறு இறப்பது குறைவு. மலையகத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலா விடுதிகள்,தேயிலை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் போன்றன இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படுவது ஒப்பீட்டளவில் குறைவு. ஏனென்றால் செல்வந்தர்கள் தங்கள் வீடுகளையும் தொழிற்சாலைகளையும் பாதுகாப்பான இடங்களில் கட்டுகிறார்கள். ஆனால் ஏழைகள் மலை விளிம்புகளில்,மண் சரியக்கூடிய இடங்களில் வீடுகளைக் கட்டுவதனால் இயற்கை அனர்த்தங்களின் போது முதற் பலியாகிறார்கள். காலாகாலமாக இயற்கை அனர்த்தங்களின…
-
- 0 replies
- 280 views
-
-
சு.க. – கூட்டு எதிரணி தேர்தலின் பின்னரேனும் இணைவு சாத்தியமா? எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமது வெற்றியினை உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்கில் அரசியற் கட்சிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் இப்போது களைகட்டி இருக்கின்றன. தேர்தலில் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்கில் வேட்பாளர்கள் முழுமூச்சுடன் களத்தில் இறங்கி செயற்பட்டு வருகின்றனர். அரசியற் கட்சிகள் தனித்தும் கூட்டு சேர்ந்தும் போட்டியிடுகின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் கூட்டு எதிரணியையும் இணைத்துக்கொண்டு இத்தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கு முக்கியஸ்தர்களால் …
-
- 0 replies
- 280 views
-
-
விகிதாசாரத் தேர்தல் முறையே சிறந்தது சுமார் பத்து வருடங்களாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் மூலமாகவும் ஏனைய கூட்டங்களிலும் ஆராயப்பட்டு, பல சட்டத் திருத்தங்கள் ஊடாக அமுலுக்கு வந்த புதிய கலப்புத் தேர்தல் முறை, நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. புதிய முறையில், முதன் முறையாகக் கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆனால், அதன்பின் ஒரு மாதமாகியும் இன்னமும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கூடி சபைகளை ஸ்தாபிக்க முடியாமல் இருக்கிறது. தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை உரிய நேரத்தில் வர்த்தமானியில் வெளியிட, தேர்…
-
- 0 replies
- 279 views
-
-
மே 18: ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர்.. யதீந்திரா ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், இதுபோன்றதொரு மே மாதத்தில், தமிழ்த் தேசிய அரசியல் இயங்குநிலையை மூன்று தசாப்தகாலமாக தனது இராணுவ ஆற்றலால் கட்டுக்குள் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிவுற்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆத்மா, தலைவர், முதன்மைத் தளபதி என்று, அனைத்து நிலைகளிலும் அந்த இயக்கத்தை தாங்கிநின்ற வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறந்த உடல் காண்பிக்கப்பட்டபோது, அதனை நம்புவதற்கு மிகவும் சொற்பமான தமிழர்களே இருந்தனர். அவர் இருக்கிறார், வருவார் என்று சொல்பவர்களின் கைகளே சொற்ப காலம் ஓங்கியிருந்தது. ஆனாலும் காலம் என்னும் ஆசானுக்கு முன்னால் அதிக காலம் பொய்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இன்று பிரபாகரனும், அவரது கட்டள…
-
- 0 replies
- 279 views
-
-
ராஜபக்சவின் மீள்வருகை சிறிலங்காவின் ஜனநாயகத்துக்குச் சோதனை – அலன் கீனன்Jul 11, 2015 | 13:18by நித்தியபாரதி சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெறுவதானது சிறிலங்காவில் கடந்த ஒரு சில மாதங்கள் நடைமுறையிலிருந்த ஜனநாயக ஆட்சி மீண்டும் நசுக்கப்பட்டு நயவஞ்சக அரசியல் மீண்டும் தலைதூக்கப் போகிறது என்பதற்கான சமிக்கையாகவே நோக்கப்பட முடியும். சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று ஆறு மாதங்கள் கடந்த பின்னர் தற்போது மீண்டும் மகிந்த ராஜபக்சவின் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளார். சிறிசேன அதிபராக வெற்றி பெற்ற பின்னர் சிறிலங்காவில் ஜனநாயக ஆட்சிக்கான புதியதொரு வழி திறக்கப்பட்டு…
-
- 0 replies
- 279 views
-
-
தேர்தலை நடத்தாது தொடர் போராட்டங்கள் ஓயாது புருஜோத்தமன் தங்கமயில் தொடர் போராட்டங்களால் கொழும்பு ‘அல்லோல கல்லோலம்’படுகிறது. கொழும்பு நகரத்தின் எந்தப் பிரதான வீதியில், எப்போது போராட்டம் ஆரம்பிக்கும், போக்குவரத்து தடைப்படும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் பல தொழிற்சங்கங்களும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், கட்சிகளும் போராட்டங்களை நடத்துகின்றன. இந்தப் போராட்டங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை இராணுவத்தையும் பொலிஸாரையும் கொண்டு ரணில் விக்கிரமசிங்க அரசு ஏவுகின்றது. போராட்டங்களில் காலாவதியான கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்படுவதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தப் போராட்டங்களை, கட்டுக்குள் கொண்டுவருவது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இந்…
-
- 0 replies
- 279 views
-
-
14 ஆண்டுகளாக தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை? – நிலாந்தன். 2009 மேமாதம் தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த மே மாதத்தோடு 14 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 14 ஆண்டுகளில் தமிழ் மக்கள் பெற்றவை எவை? பெறாதவை எவை? அல்லது கற்றவை எவை? கற்றுக்கொள்ளாதவை எவை? 2009 மே மாதம் வரையிலும் தமிழ் மக்களின் பிரதான பேர பலமாகக் கருதப்பட்டது ஆயுதப் போராட்டம்தான்.2009க்குப் பின் தமிழ்மக்களின் பேரபலம் எது? ஆயுதப் போராட்டம் எனப்படுவது இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார நிலைகளைத் தாக்கியது.உயிர்களை அழித்தது.நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை குழப்பியது. அந்நிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளைக் குறைத்தது. இவற்றுடன் போர்க்களத்தில் அரசாங்கம் பெருமளவு காசைக் கொட்டி சண்டை போட வேண்டி…
-
- 0 replies
- 279 views
-
-
மேலும் ஒரு ஜெனிவாக் கூட்டத் தொடரை நோக்கி! நிலாந்தன். கடந்த மாதம் 27ஆம் தேதி, ஐரோப்பிய நாடாளுமன்ற இணைக்குழு முன்னிலையில், இலங்கையின் மனித உரிமை மற்றும் தொழிலாளர் உரிமை குறித்து கருத்துக்கள் பரிமாற்றப்பட்ட ஒரு மெய்நிகர் சந்திப்பில், அம்பிகா சற்குணநாதன், இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். அக்கருத்துக்களுக்கு இலங்கைத்தீவின் வெளிவிவகார அமைச்சு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அம்பிகா சர்குணநாதன் ஒரு சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் ஆவார்.கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கூட்டமைப்புடன் காணப்பட்டார்.அவர் மேற்படி மெய்நிகர் சந்திப்பின் போது தெரிவித்த கருத்துக்கள் அரசாங்கத்துக்கு சீர்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இலங்கைத்தீவின…
-
- 0 replies
- 279 views
-
-
ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.கவும்! ஷோபாசக்தி இந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்த தெற்கு நோக்கிய புலப்பெயர்வே இலங்கைத் தீவின் தமிழ் – சிங்களம் பேசும் மக்களின் நிலைத்த குடிசன வரலாறு. இனம், மதம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நிலங்களுக்கும் இடையே பெரும் ஒற்றுமையுண்டு. நிலையான தேசங்கள் தோன்றாத பண்டைய காலத்திலும் பின்னர் காலனியக் காலத்திலும் இலங்கைத் தீவின் வரலாறு எப்போதும் இந்தியப் பெருநிலத்துடன் இணைத்தே எழுதப்பட்டிருக்கிறது. கண்டி அரசின் கடைசி நான்கு மன்னர்களும் மதுரை நாயக்கர்கள் என்பதும், யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னர்கள் ஆரியச் சக்கரவர்த்திகள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவை. சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கையின் உ…
-
- 0 replies
- 279 views
-
-
மொழி – மதம் – இனம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட நிலையற்ற கூற்றுகள்... சுதந்திரத்திற்குப் பிந்தைய கால இலங்கை அரசியலினைக் களங்கப்படுத்தியுள்ளன. மொழி, மதம் மற்றும் இனம் தொடர்பாக சிங்களவர்கள் மற்றும் தமிழர்களால் முன்வைக்கப்பட்ட நிலையற்ற கூற்றுகளானவை சுதந்திரத்திற்குப் பிந்தைய கால இலங்கை அரசியலினைக் களங்கப்படுத்தியுள்ளன. பௌத்தம் என்பது மிகச் சிறந்ததும் சிங்களவர்களுக்கே உரித்தானதுமான சிங்கள மதம் என சிங்களவர்கள் உரத்துக் கூறுகின்றார்கள். மறுபுறமாக அதே தீவிரத்துடன், தாம் எப்போதும் கலப்படமற்ற தூய இந்துக்களாக இருந்ததாகவும் தமக்கு பௌத்தத்துடன் எந்தத் தொடர்புமில்லை எனவும் தமிழர்கள் கூறுவதோடு, பௌத்தத்தை “சிங்கள மேலாதிக்கம்” என அடையாளம் காண்கின்றனர். தமிழர் செல்வாக்குள்ள வடக்…
-
- 1 reply
- 279 views
-
-
ஜனாதிபதி தேர்தலும் அவசரப்பட்ட சஜித்தும் என்.கே அஷோக்பரன் கடந்த மே மாதம் 15ஆம் திகதி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது, “ஜனாதிபதி தேர்தலை திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாக நடத்துவதற்கான அரசாங்கத்தின் பிரேரணைக்கு, ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும்” என அறிவித்தார். அதேநேரத்தில், அரசாங்கம் தனது வசதிக்காக, தேர்தல் நடைமுறைகளை கையாளும் முயற்சியை விமர்சித்த அவர், இது ஜனநாயகத்தை மீறுவதாகும் என்றும் கூறினார். ஜனாதிபதியின் அல்லது அவரது ஆதரவாளர்களின் பணிப்புரையின் பேரில் மாத்திரம், ஜனாதிபதி தேர்தலை திட்டமிடுவது அடிப்படையில் பிழையானது எனவும் வலியுறுத்தினார். விரைவானதும் ஜனநாயகத் தேர்தலை உறுதி செய்வதற்காக நியாயமானதும் வெள…
-
- 0 replies
- 279 views
-
-
முன்னணியின் முக்கியமான மாற்றம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஸ்தாபிக்கப்பட்டு சுமார் எட்டு ஆண்டுகளாகின்றன. இந்த எட்டு ஆண்டுகளுக்குள் முன்னணி இரண்டு பொதுத் தேர்தல்களில் மாத்திரம் போட்டியிட்டிருக்கின்றது. ஓர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் இரண்டு மாகாண சபைத் தேர்தல்களைப் புறக்கணித்திருக்கின்றது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை. மாறாக, வேட்பாளர்களைத் தேடுவதில் ஏற்பட்ட சிக்கல்களினால் போட்டியிடவில்லை என்று முன்னணி தற்போது கூறிவருகின்றது. ஆக, மாகாண சபைத் தேர்தல்களை மாத்திரம் முன்னணி புறக்கணித்ததாகக் கொண்டு இந்தப் பத்தி மேலே செல்கின்றது. 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான ஆசனப்பங்கீட…
-
- 0 replies
- 278 views
-
-
கோவிட் – 19 செயற்குழுவும் மக்கள் சேவையின் அரசியல் தலையீடும் – நிலவன்.. April 12, 2020 கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன. இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,91,719 ஆக உயர்ந்திருக்கிறது. அதிகபட்சமாக இத்தாலியில் 18,849 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவில் 18,637 பேர் இறந்துள்ளனர். உலகநாடுகள் அவசரப்பட்டு ஊரடங்கை தளர்த்த வேண்டாம். கோரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்கு முன்பே ஊரடங்கை தளர்த்தினால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார். இலங்கையில் கோரோனா வைரஸ் கோவிட் -19 நோய் பரவுவதைத் தடுப்பதற்கென நாட்ட…
-
- 0 replies
- 278 views
-
-
கட்டப் பஞ்சாயத்து நடத்திய சர்வதேச ரவுடி டிரம்ப்! சாவித்திரி கண்ணன் வரலாற்றில் இப்படி ஒரு முன் உதாரணமே கிடையாது – ஒரு நாட்டு அதிபர் அவமானப்பட்டதற்கு! அராஜகம், அடாவடித்தனம், திமிர்த்தனம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவமாக டிரம்ப் இந்த உரையாடலில் வெளிப்பட்டார். ‘நம்பியவர்களை நட்டாற்றில் விடுவது, தன்னலம் மட்டுமே பிரதானம்’ என்பதே டிரம்பின் தாரக மந்திரமோ..! அழைக்கப்பட்ட நாடு, ‘வெறும் மூன்றரை கோடி மக்களை கொண்ட சுண்டைக்கா நாடு தானே’ என்ற எண்ணமா? ‘நம்ம உதவியைக் கொண்டு தானே இத்தனை நாள் தாக்கு பிடித்தார்கள்.. எனவே, ஏன் நமக்கு கூழைக் கும்பிடு போட வேண்டியது தானே’ என்ற மனோபாவமா? ஆனால், யாரும் எதிர்பாரா வண்ணம் உலகறிய அனைத்து நாடுகளும் பார்க்கும் வண்ணம் நேரலை செய்யும் தொலைகாட்சி சேனல்களை …
-
- 0 replies
- 278 views
-
-
*வெனிசுலா விவகாரமும் இடதுசாரிகளும் *ஆங்கில பாடநூல் தவறுக்காக பிரதமர் ஹரிணிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இடதுசாரிகள், தமிழ் வரலாற்று பாடநூல்களில் பௌத்த சமய திணிப்பு மற்றும் சிங்கள மொழிபெயர்ப்பு பாடநூல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லையே! *இடதுசாரி நாடுகளில் புலிகளை அமெரிக்க கைக் கூலி என்று பொய்ப் பிரச்சாரம் செய்த தயான் ஜயதிலக. *சுயநிர்ணய உரிமையை மறுத்து ”ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம்” என்று மட்டுப்படுத்தும் இடதுசாரிகள்... -- --- ----- வகுப்பு ஆறுக்குரிய கல்விச் சீர்திருத்தத்தில் ஏற்பட்ட சில தவறுகளுக்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை மையப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் மற்றும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும்…
-
- 1 reply
- 278 views
- 1 follower
-
-
இலங்கை எப்போதும் இந்தியாவிற்கு நட்பு நாடாக இருந்தது இல்லை!. - " தமிழீழ ஆய்வறிஞர் " பேராசிரியர் திருநாவுக்கரசு
-
- 1 reply
- 278 views
-
-
ஆட்சி மாற்றமும் வடமாகாணசபையும்: சுன்னாகம் நீர் விவகாரத்தை முன்வைத்து சில கேள்விகள் நிலாந்தன் இலங்கைத் தீவின் மாகாண சபை வரலாற்றிலேயே ஒரு மாகாண சபைக்கு எதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட எதிர்ப்பு நடவடிக்கையாக சுன்னாகம் கழிவு எண்ணைப் பிரச்சினை காணப்படுகிறது. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம் இல்லைத்தான். இதற்கொரு ஒட்டுமொத்த தலைமைத்துவம் இல்லைத்தான். இதில் எதிர்ப்பைக் காட்டும் எவரும் முழுநேர செயற்பாட்டாளர்கள் இல்லைத்தான். ஆனாலும் இலங்கைத் தீவின் வயதால் மிக இளைய ஒரு மாகாண சபைக்கு வந்த ஒரு முக்கிய சோதனையாக இதைக் குறிப்பிடலாம். இன்று இக்கட்டுரையானது குடிநீரில் என்ன கலந்துள்ளது என்ற ஆராய்ச்சிக்குள் இறங்கப்போவதில்லை. அது துறைசார் நிபுணர்களின் ஆய்வுக்குரிய ஒரு பரப…
-
- 0 replies
- 278 views
-
-
போதைப் பொருளைத் தடுக்க ஒரு படைப்பிரிவு? – நிலாந்தன். October 30, 2022 “வடக்கில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கஞ்சா தொகையாகக் கைப்பற்றப்பட்டது. இந்தியாவிலிருந்து யாழ்ப்பணப் பகுதிக்கு மிகவும் பிரமாண்டமான முறையில் போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இளம்சந்ததியினரும் அவற்றிற்கு அடிமையாகின்ற தன்மையானது வெகுவாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த துர்ப்பாக்கிய நிலையினை இல்லாதொழிப்பதனை நோக்கமாகக் கொண்டு யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேயசுந்தர அவர்களினுடைய தலைமையில் விசேட படைப் பிரிவானது உருவாக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் மற்றும் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு அதன…
-
- 0 replies
- 278 views
-
-
இந்திய ஊடகமொன்றுக்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ அளித்த செவ்வியின் தமிழக்கம் இலங்கையை கடுமையாக இராணுவமயப்படுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் இலங்கையின் பௌதீக அளவிற்கு பொருத்தமற்ற வகையில் இராணுவத்தை விஸ்தரித்து உள்ளதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி உங்களது கருத்து? இராணுவமயப் படுத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச் சாட்டுக்களில் உண்மையில்லை. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கை இராணுவம் விரிவாக்கப்பட்டது. பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்தை வெற்றி கொள்வதற்காக இவ்வாறு இராணுவத்தை விஸ்தரிக்க நேரிட்டது. அமெரிக்காவின் எப்.பி.ஐ புலனாய்வுப் பிரிவு கூட இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகளை உலகின் மிகக் கொடிய பயங்கரவாத அமைப்பு என அடையா…
-
- 0 replies
- 278 views
-
-
ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதக் காலப்பகுதிக்குள் இலங்கையினால் மீன் இறக்குமதிக்காக மாத்திரம் 24 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கரின் ‘வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் தொடர்பில் மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறையை கையாளுங்கள் என்ற பரிந்துரையை அநுரகுமார அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா? ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான 9 மாத காலப்பகுதியில் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (நிவேதா அரிச்சந்திரன்) இலங்கை தீவைச் சூழ அமைந்துள்ள கடற்பரப்பு நாட்டுக்கு கிடைத்துள்ள அருங்கொடையாக பார்க்கப்படுகிறது. ஆனால் …
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
நடைமுறையில் உயிர்ப்பிக்கப்படாத எந்தவொரு கொள்கையும் சாத்தானுக்கு சேவகம் செய்வதாகவே முடியும். மூத்த அரசியல் ஆய்வாளர் திரு. மு. திருநாவுக்கரசு அவர்கள்
-
- 0 replies
- 278 views
-
-
குழம்பிப்போயுள்ள கட்சிகள்! : செல்வரட்னம் சிறிதரன் 07/11/2015 இனியொரு.. நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் பதவி வகிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்த வருடம் ஜனவரி மாதம் நாட்டு மக்கள் மீது வலிந்து ஜனாதிபதி தேர்தலைத் திணித்தார். இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், அந்த பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு வருடங்கள் இருந்த நிலையிலேயே இந்த ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அறிவித்தலை வெளியிட்டிருந்தார். மூன்றாம் தடவையாக ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவருடைய அரசியல் எதிர்பார்ப்பு சுக்கு நூறாகியது. வீசிய கையும் வெறும் கையுமாக அவர் தென்மாகாணத்தில் உள்ள தனது வீட்டிற்…
-
- 0 replies
- 278 views
-
-
தமிழ் மக்களின் கூட்டுத் துக்கமும் கூட்டுக் கோபமும் நிலாந்தன் மாற்றத்தின் விரிவைப் பரிசோதித்தல் நாளை, ஆட்சி மாற்றத்தின் பின்னரான முதலாவது மே 18 ஆகும். இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் கடந்த வாரத்தில் இருந்து ஆங்காங்கே நடந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை குறியீட்டுத் தன்மைமிக்கவை. சிறுதொகையினரே இவற்றில் பங்கு பற்றி வருகிறார்கள். அவர்களிற் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகளே. ஆனால் இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவோரின் உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வாக ஒழுங்கமைக்கப்பட்டால் அது பல்லாயிரக்கணக்கானோர் பங்குபற்றும் ஓர் அரசியல் வணக்க நிகழ்வாகவே இருக்கும். சிறீலங்காவின் சுதந்திர தின விழாவில் பங்குபற்றிய தமிழ…
-
- 0 replies
- 277 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டக்களம் பலம்பெற வேண்டும் தமிழ்த் தேசியப் போராட்டத்தின் இன்றைய ஒற்றைக் குறியீடாக, ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளே’ எழுந்து நிற்கின்றார்கள். முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளைத் தமது தோளில் சுமந்து கொண்டு முன்வந்தவர்கள் அவர்கள். தனது பிள்ளையையும் பேரப்பிள்ளைகளையும் ஒருங்கே தேடுகின்ற ஆச்சிமாரையும் தன்னுடைய கணவனையும் மகனையும் தேடுகின்ற தாய்மாரையும் தன்னுடைய தந்தையையும் அண்ணனையும் தேடுகின்ற மகள்மாரையும் ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்’ என்கிற அடையாளத்துக்குள் நாளாந்தம் காண்கிற…
-
- 0 replies
- 277 views
-