அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9207 topics in this forum
-
வெளியில் சொல்ல வேண்டும் மொஹமட் பாதுஷா தீர்வுத்திட்டம் தொடர்பாகவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு பற்றியும் அதில் முஸ்லிம்களுக்கான உப தீர்வு பற்றியும் பிரதான முஸ்லிம் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தெளிவான நிலைப்பாட்டை பகிரங்கமாகச் சொல்லாமல் இருப்பது நல்ல சகுணமல்ல. 'சேதாரமில்லாத விட்டுக் கொடுப்புக்கு தயார்' என்று பேசுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முஸ்லிம்களையும் திருப்திப்படுத்தப் போவதான ஒரு பிரக்ஞையை உருவாக்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கு உரித்தான 'பங்கு' தொடர்பில் என்ன நிலைப்பாட்டுடன் இருக்கின்றார்கள்? என்பது புதிராகவே இருக்கின்றது. இந்த விவகாரத்தில் தமிழர்களையும் …
-
- 0 replies
- 501 views
-
-
வெளியுறவுக் கொள்கை இல்லாத ஈழத்தமிழர்கள் ? நிலாந்தன். November 28, 2021 ஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஒரு கூட்டுக் கோரிக்கையை இந்தியாவை நோக்கி முன்வைக்க முயற்சிக்கின்றன. இம்முயற்சியில் முஸ்லிம் கொங்ரஸையும் மனோ கணேசனின் கட்சியையும் ஒருங்கிணைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள மிகப் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியை ஒருங்கிணைக்க முடியவில்லை. இது ஒரு ஓட்டம். அதேசமயம் சுமந்திரன் தலைமையிலான ஒரு சட்டவாளர் குழு அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அவர்கள் சென்றதாக சம்பந்தரும் சுமந்திரனும் கூறுகிறார்கள். ஆனால் அக்குழுவில் பங்காளிக் கட்சிகளின் …
-
- 0 replies
- 383 views
-
-
வெளியுறவுக் கொள்கையில் நடுநிலை தவறியது அரசு-தயான் ஜயதிலக வெளியுறவுக் கொள்கையில் நடுவுநிலை தவறியது அரசு சுட்டிக்காட்டுகிறார் தயான் ஜயதிலக கொழும்பு ஒக்.12 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அணிசேராக் கொள் கையிலிருந்து விலகியிருப்பது கவலை அளிப்பதோடு அண் மைய காலத்தில் வெளியுறவுக் கொள்கையில் நடுவுநிலை தவறிவிட்டது என்று ஐ.நாவுக் கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதியும் பிரபல அரசியல் விமர்சகருமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்தார். …
-
- 0 replies
- 511 views
-
-
வெளியே வந்துள்ள ‘ஹீரோக்கள்’ கே. சஞ்சயன் / 2019 மே 24 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:16 Comments - 0 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட சூழ்நிலைகள், இரண்டு முக்கியமான விடயங்களைப் பலரது கண்களில் இருந்தும் மறைத்து விட்டன. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை, அதில் ஒன்று. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், மேஜர் பிரபாத் புலத்வத்த என்ற இராணுவப் புலனாய்வு அதிகாரி, மீண்டும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது இன்னொன்று. சாதாரணமானதொரு சூழ்நிலையில் இந்த இரண்டும் நிகழ்ந்திருந்தால், அது ப…
-
- 0 replies
- 558 views
-
-
நாட்டில் காணப்படும் பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக கடந்த இரு ஆண்டுகளில் 25 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் 24 வீதமானோர் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குப் பயணமாகியுள்ள நிலையில், ஏனையோர் வேறு நோக்கங்களுடன் நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றனர் என்று இலங்கை மத்திய வங்கி கூறியிருக்கின்றது. இவற்றுக்கு மேலதிகமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றது. 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு இலங்கையை பல்வேறு நெருக்கடிகளுக்குள் தள்ளியிருக்கின்றது. அந்த நெருக்கடிகளின் தாக்கங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் நாட்டு மக்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதா…
-
- 0 replies
- 159 views
-
-
மதிப்புக்குரிய கஜேந்திரகுமார் அவர்களே, தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் தம் உரிமைகளை துரித கதியில் மீட்டெடுக்க வேண்டிய காலத்தின் நிர்ப்பந்தந்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் அரசியல் பேரம்பேசும் சக்தியாக தமிழ் மக்களால் பெரிதும் நம்பப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் அதன் சில உறுப்பினர்களும் தமது சுயலாப நோக்கங்களிற்காக அரசுக்கும் மேற்கத்தைய சக்திகளிற்கும் துணைபோகின்ற அபாயத்தை நாம் கண்டு வருகின்றோம். இதன் அடிப்படையிலேயே தமிழ் மக்களால் இன்றளவும் மாற்றுத் தலைமையாக பெரிதும் நம்பப்படுகின்ற க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான அரசியல் கூட்டு ஒன்றிற்கான தேவை எழுந்திருக்கின்றது. கடந்த உள்ளுராட்சி சபை…
-
- 2 replies
- 877 views
-
-
பேச்சாளர்களின் பட்டியலில் கலாநிதி தயான் ஜெயதிலகவின் பெயர் காணப்பட்ட போது, இதற்கான அனுமதியை வழங்குவதற்கு மங்கள மறுத்தார். இக்கருத்தரங்கானது அதிபர் செயலகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டது என்பதைக் கூட மங்கள தனது கவனத்திற் கொள்ளவில்லை. இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. கருத்தரங்கு ஒன்றை நடத்துவதற்கு லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் மண்டபம் ஒன்றை தந்துதவுமாறு சில வாரங்களுக்கு முன்னர் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. மைத்திரிபால சிறிசேன அந்தக் கருத்தரங்கின் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் இக்கர…
-
- 0 replies
- 378 views
-
-
வெள்ளக் கதைகள் -நிலாந்தன் December 13, 2020 புரேவிப் புயல் கடந்த வாரம் தமிழர் தாயகத்தை ஓரளவுக்குச் சேதப்படுத்தியது. மூன்று மரணங்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தார்கள்.சொத்துக்களுக்கு நட்டம் ஏற்பட்டது.குறிப்பாக யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலைச் சூழ்ந்து வெள்ளம் நின்றது. யாழ் நகரத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. கோவில் வீதியில் அமைந்துள்ள இரண்டு நாடாளுமன்ற உறுபினர்களின்(விக்னேஸ்வரன்,அங்கஜன்) வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. விக்னேஸ்வரனின் வாடகை வீட்டின் படிக்கட்டுக்கு வெள்ளம் ஏறியது. இவ்வாறு யாழ்ப்பாணத்தின் சில பகுதிகள் வெள்ளத்துள் மிதந்தமை குறித்து சமூக வலைத்தளங்களில் ஊடகங்களில் பரவலாக விமர்சனங்கள் எழுந்தன. நகைச்சுவை உணர்வு மிக்…
-
- 3 replies
- 643 views
-
-
[size=5]போராட்ட மண(ன)ம்.[/size] மெரீனா சாலையில் அன்று... மத்தியப் பிரதேச சாலையில் இன்று.. வேலெடுக்கும் மரபிலே, வீரம் செறிந்த மண்ணிலே.. பால் குடிக்க வந்தவனே நடையை காட்டு... வரும் பகைவர்களை வென்று விடும் படையை காட்டு... நான்கு பேர்கள் போற்றவும், நாடு உன்னை வாழ்த்தவும் மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை.. நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனி மரியாதை... வெள்ளி நிலா முற்றத்திலே...விளக்கெரிய...விளக்கெரிய... [size=3]பாடல் உதவி: வேட்டைக்காரன்[/size].
-
- 4 replies
- 1.6k views
-
-
வெள்ளை கொடி விவகாரம் சந்திரகாந்தன் சந்திரநேரு
-
- 0 replies
- 544 views
-
-
வெள்ளை யானை பார்க்கின்ற விழிப்புலனற்றோர் அண்மையில் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களின் பிரதானிகளைச் சந்தித்தபோது வெளியிட்ட கருத்துக்கள், அவரினதும் அவரால் தலைமையேற்று நடத்தப்படும் அரசினதும் இனப்பிரச்சினை தொடர்பான மற்றும் மாகாண சபைகள் தொடர்பான அணுகுமுறையின் ஒரு தெளிவான தூரநோக்குடைய இலக்குகளை அம்பலப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன. வெள்ளை யானை இனி வேண்டாம் இன்று சிங்களக் கடும் போக்காளர்கள் எனக் கருதப்படுபவர்களின் கருத்துக்களின் மூலவேர் ஜனாதிபதியின் சிந்தனைக்குள்ளேயே படர்ந்திருப்பதையும் புரிந்து கொள்ள முடியும். அங்கு அவரால் மாகாண சபை ஒரு வெள்ளை யானை எனவும் அதன் அதிகாரங்கள் ஒவ்வொன்றாகக் களையப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி வடமேல் மாகாண ச…
-
- 0 replies
- 582 views
-
-
வெள்ளை வேன் கடத்தல்: நீதியை தாமதப்படுத்தும் திரைமறைவு காய் நகர்த்தல்களும் மிரட்டல்களும் ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் இடம்பெற்று இன்றுடன் 10 வருடங்களாகின்றன. எனினும் இத்தனை நாட்களாகியும் இந்த விவகாரத்தில் இன்னும் நீதியும் நியாயமும் மெளனம் காக்கிறது. ஏன், இவ்வளவு நாட்களாகியும் நீதி நிலைநாட்டப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது என எல்லோருக்கும் எழும் கேள்விகளுக்கு பதில் தேடும் போது தான், இந்த கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், திரைமறைவில் குற்றவாளிகளைக் காக்கும் காய் நகர்த்தல்களும் நீதியை பெற்றுக்கொடுக்க போராடுகின்றவர்களுக்கு எதிரான அ…
-
- 0 replies
- 319 views
-
-
வெள்ளை வேன் சுமந்து சென்ற ப்ரியாவின் எதிர்பார்ப்பு : ப்ரியந்த லியனகே அவர் பூபாலசிங்கம் உதயகுமார். அவரது மனைவி ப்ரியா உதயகுமார். ‘தாய்’ எனும் கிரீடத்துக்கு உரிமை கொண்டாட அவருக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருந்தன. உதயகுமாரின் சாயலையொத்த அழகிய பிஞ்சுக் குழந்தையொன்றை உதயகுமாருக்குப் பரிசளிக்க அவர் கனவு கண்டார். அக் குழந்தையினதும் ப்ரியாவினதும் எதிர்காலத்தை சிறப்பாக்குவதே உதயகுமாரின் இலட்சியமாக இருந்தது. அதற்காக அவர்கள் நிறைய கனவுகள் கண்டார்கள். அவர்களது அழகிய அக் கனவுகள் மேல் ஷெல் மழை பொழிகையில் அவர்கள் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பியோட வேண்டியிருந்தது. எனினும், தமது பாதுகாப்புக்காகத் தப்பியோடுவதைக் கூட அவர்களால் செய்ய முடியாதிருந்தது. ஏனெனில், விடுதலைப…
-
- 1 reply
- 704 views
-
-
வெள்ளைக்கொடி - ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் தமிழில்: ஆர். சிவகுமார் தன்னுடைய உயிரைக் காத்துக்கொள்ள வேண்டி, தான் யாரைப் பாதுகாத்திருக்க வேண்டுமோ அவரையே காட்டிக் கொடுத்த ஆள் காட்டியாக தான் மாறியதை விளக்கிக் கொண்டிருந்தார் அந்தப் பருத்த, குட்டையான தமிழர். அவர் அணிந்திருந்த முக்காடுடன் கூடிய மெல்லிய, கறுப்பு நிற மேல் சட்டைக்குள் தன் உடலை அப்படியும் இப்படியுமாகப் பதற்றத்துடன் திருப்பினார். அந்தப் பனிக் காலத்தின் மிகக் குளிரான நாள்கள் ஒன்றில் அவர் அணிந்திருந்த மேலாடை வானிலைக்குக் கொஞ்சமும் பொருத்தமாக இல்லை. விக்டோரியா ரயில் நிலையத்தின் உணவகம் ஒன்றில் நாங்கள் காஃபி குடித்துக் கொண்டிருந்தோம். உணவகத்தின் ஆள் அரவமற்ற ஒரு தாழ்வாரத்தில், திறந்த வெளியில் கடுங்குளிரைத் தாங்கிக்கொண்டு உட்க…
-
- 6 replies
- 2.8k views
-
-
வேடன்;வாகீசன்;முருகப்பெருமான் - நிலாந்தன் சில மாதங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த வேடனின் Rap – ரப் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பரவின. இப்பொழுது வாகீசனின் பாடல். வேடன் யாழ்ப்பாணத்து தாய்க்கும் மலையாளத்து தகப்பனுக்கும் பிறந்தவர். வாகீசன் யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர். இருவருமே குறுகியகால இடைவெளிக்குள் தமிழ் சமூகவலைத் தளங்களில் லட்சக்கணக்கானவர்களைக் கவர்ந்திருக்கிறார்கள். வேடன் 2020ல் இருந்து பாடுகிறார். அவர் வாகீசனிடம் இருந்து வேறுபடும் இடங்களில் ஒன்று, அவர் அதிகம் ஒடுக்கப்படும் சமூகங்களின், மக்களின் குரலாக ஒலிப்பதுதான். அவருடைய முதலாவது முயற்சி “குரலவற்றவர்களின் குரல்” என்ற தலைப்பின் கீழ்தான் வெளிவந்தது. அவர் ஈழத் தமிழர்களின் அரசியலில் தொடங்கி சிரியா,பாலஸ்தீன…
-
- 0 replies
- 228 views
-
-
வேடிக்கை ஜனநாயகத்தைக் கட்டிக் காத்து, நல்லாட்சி புரியப் போவதாக உறுதியளித்து அதிகாரத்திற்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தின் போக்கிலேயே சிறுபான்மையின மக்களை அடக்கி ஒடுக்குவதில் மறைமுகமாக தீவிர கவனம் செலுத்தி வருகின்றதோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியிருக்கின்றது. முன்னைய அரசாங்கம் விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்ததன் மூலம் நாட்டில் நிலவிய பயங்கரவாத நிலைமைக்கு முற்றுப்புள்ளி இட்டது என்றும், பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து இராணுவத்தினர் நாட்டிற்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்தார்கள் என்றும் பிரசாரம் செய்தது. ஆயுத ரீதியான பயங்கரவாதத்தை …
-
- 0 replies
- 819 views
-
-
வேடிக்கை பார்ப்பதன் விபரிதங்கள் இலங்கை, இன்று மெதுமெதுவாக இராணுவ ரீதியிலான ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸை ஒழித்தல் என்ற போர்வையும் ‘ஒழுக்கமான சமூகமொன்றை உருவாக்குதல்’ என்ற கருத்துருவாக்கம் நிலைபெற்ற நிலைமையும் சிங்கள, பௌத்த பெருந்தேசிய அகங்காரத்தின் அப்பட்டமான வெளிப்பாடும் அதைச் சாத்தியமாக்கியுள்ளன. இதில், இலங்கையர்கள் கவனிக்க வேண்டிய விடயமொன்று உண்டு. இது இருபுறமும் கூரான கத்தி போன்றது. இன்று இந்த அடக்குமுறையை நோக்கிய நகர்வுக்கு, தேசியவாதத்தின் பேரால் ஆதரவளிக்கும் பலர், இந்த ஆபத்தை உணரவில்லை. அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டு வரப்படுகின்ற போது, இன்னாரைத் தண்டிக்கவும் இன்னென்ன வகையான குற்றங்களைத் தடுக்கவும் என்றுதான் சொல்லப்படுகிறது. இதன…
-
- 0 replies
- 597 views
-
-
வேடிக்கையும் விளையாட்டும் தற்கொலையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்களுடைய தேவைகளைப் பற்றிச் சிந்திப்பதில்லை. இது குறித்து அரசாங்கத்துடன் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு பலமாக முன்வைக்கப்படுகிறது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அதற்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம். அதற்குப் பிறகு மேலும் மேலும் கூட்டமைப்பின் மதிப்பு கீழிறங்குவதற்கும் அதனுடைய முரணான நிலைப்பாடுகளும் செயற்பாடின்மையுமே காரணமாகும். இதனால் அரசியற் தீர்வும் கிட்டவில்லை. மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளும் தீரவில்லை. …
-
- 0 replies
- 729 views
-
-
வேட்டிக் கனவில் இருப்பதையும் இழக்கும் நிலை வடக்கு மாகாணத்துக்குரிய அரசியல் சமன்பாடு கிழக்கு மாகாணத்திற்குப் பொருந்த மாட்டாது. இந்த அரசியல் யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துத்தான் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கிழக்கிற்கான ஒரு தனித்துவமான அடையாள அரசியலை முன்னெடுத்துள்ளது என கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் செங்கதிரோன் த.போகாலகிருஸ்ணன் தெரிவித்தார். கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் நேற்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத் தமிழர்கள் எதிர்நோக்கும் தனித்துவமான பிரச்சினைகளுக்கான தீர்வை நாடும்போது வடக்கு மாகாணத்திற்கும…
-
- 0 replies
- 406 views
-
-
வேட்பாளர் நியமன நெருக்கடி மொஹமட் பாதுஷா நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், நேற்று ஆரம்பமாகி இருக்கின்றது. இருப்பினும் தனித்தும் கூட்டாகவும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகின்ற முஸ்லிம் கட்சிகள், அரசியல் அணி சார்பாக யார், யாரை வேட்பாளராகக் களமிறக்குவது, எவ்வாறான தந்திரோபாயங்களைக் கையாள்வது தொடர்பில், இன்னும் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை என்றே தெரிகின்றது. எந்தப் பக்கத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கும், இந்தத் தேர்தலானது, மிகவும் சவாலான ஒரு தேர்தலாக அமையும் என எதிர்பார்க்கலாம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில், பெரும்பாலான முஸ்லிம்கள் பொதுஜன பெரமுனவை ஆத…
-
- 0 replies
- 514 views
-
-
-
- 0 replies
- 472 views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
வேண்டும் புதிய பாதை! முற்றிலும் புதிய அணுகுமுறை: ஏ.ஜி.யோகராஜா சயந்தன் என்னிடம் இப்படிக் கேட்டிருந்தார்: இலங்கையின் இன்றைய அரசியல் – குறிப்பாக சாதிய மற்றும் தமிழ்த் தேசிய – பிரச்சனைகள் குறித்த உங்கள் கருத்தியலை, (அதாவது மார்க்ஸியமா, அல்லது பெரியார் மற்றும் அம்பேத்கார் வழியிலா அல்லது வேறு எந்த அடிப்படையில்) கட்டுரையாக எழுதித்தரும்படி. இவ் வருட ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டிருந்த “எழுவோம்! நிமிர்வோம்! திரள்வோம்! சமூக சமத்துவம்: அடுத்தகட்ட நகர்வு குறித்த முன்வரைவு” எனும் எனது நூலை வாசித்ததன் பிரகாரம் இம் முடிவுக்கு வந்திருப்பார் என்பது எனது எண்ணம். சோவித் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின் மார்க்ஸிய உலகங்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன என்பது உலகள…
-
- 0 replies
- 324 views
-
-
வேரோடு களைதல் காலத்தின் தேவை! -நஜீப் பின் கபூர்- நாட்டு நடப்புகளைப் பார்க்கின்ற போது ஆரோக்கியமான வாழ்வுக்கான அறிகுறிகள் ஏதுவுமே நமது கண்ணுக்கெட்டிய தூரத்தில் கண்டு கொள்ள முடியவில்லை. எனவே நெருக்கடிகள், மோதல்கள், வன்முறைகள், வறுமை துயரங்கள் என்பன கடலலைபோல தொடர்ந்து ஓயாது அடித்துக் கொண்டிருப்பதும் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அதிகாரத்தில் இருப்போரின் அட்டகாசங்கள், அடக்கப்படுகின்ற மக்களின் போராட்டங்கள், இயல்பு வாழ்க்கை சீரழிக்கப்பட்டதால் தெருவுக்குக் கொண்டு வந்து விடப்பட்டிருக்கின்ற பொது மக்கள், உள்நாட்டில் வாழ்வு சூனியமான நிலையில் தமது குடும்பங்களை காப்பாற்ற வெளி நாடுகளுக்கு ஓடுகின்ற உழைப்பாளிகள் படை, வல்லுநர்களுக்கு கொடுக்கப்படுகின்ற தொந்தரவுகள் காரணமாக அவர்கள் நா…
-
- 0 replies
- 623 views
- 1 follower
-
-
வேறு கோணத்தில் பார்க்க மாட்டோம்’ அதிரதன் அபிவிருத்தி என்பதை, அரசாங்கக் கட்சியோடு சேர்ந்திருப்பவர்கள் பார்க்கின்ற அதேகோணத்தில், நாங்கள் பார்க்க மாட்டோம். மக்களும் அந்தக் கோணத்தில் பார்த்து மயக்கம் அடைந்துவிடக் கூடாது. ஆக, அரசியல் தீர்வுத் திட்டத்தையும் அபிவிருத்தியையும் உரிமை சார்ந்த அபிவிருத்தி அல்லது, அபிவிருத்தியோடு கூடிய உரிமை அல்லது, பொருளாதார உரிமை என்ற அடிப்படையில், இந்த இரண்டு விடயங்களையும் சமாந்தரமாகக் கொண்டு செல்வோம் என்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத் தலைமை வேட்பாளரும் இலங்கை தமிழரசுக் கட்சியின…
-
- 0 replies
- 533 views
-