அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9207 topics in this forum
-
2002 இல் கைச்சாத்தாகி கடந்த நான்கு ஆண்டுகளாக நடைமுறையிலிருந்த சமாதான ஒப்பந்தம் என்றுமில்லாதவாறு கடும் நெருக்கடிக்கு உள்ளான நிலையில் அடுத்து என்ன ? என்ற கேள்வி பலராலும் கேட்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. என்ன நடக்கும் என்ற நிஜத்திற்கு அப்பால் பல ஊகங்களின் அடிப்படையில் கருத்துகள் கூறப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சம்பந்தப் பட்ட அனைத்துத் தரப்பும் பல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. சமாதான உடன்பாட்டாளர்கள் என்ற நிலையில் இருக்கும் நோர்வேயினதும் சமாதான இணைநாடுகளினதும் செயற்பாடுகளை மீறிய வகையில் களநிலவரம் வரலாறு காணாத கொடிய போர் ஒன்றுக்கான திசையை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றது. மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களும் மக்கள் எழுச்சிப் படை என்ற பெயரில் …
-
- 0 replies
- 1.6k views
-
-
டி.சிவராம் (தராக்கி) நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (08.08.04) புலிகள் சமர்ப்பித்துள்ள இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை திட்டத்திற்கும் நீங்கள் அருந்துகின்ற 'பன்ரா" போன்ற மென்பானங்களில் நிறக் கலவை போத்தலடியில் படியாமலிருப்பதற்கும் என்ன தொடர்பு? (இக்கேள்வியைப் பார்த்தவுடன் 'ஆஹா! கடைசியாக ஆளுக்கு மூளையில் தட்டிவிட்டது" என எண்ணுவோரை சற்றுப்பொறுமையாக மேற்கொண்டு படிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்) புலிகள் பல்வேறு நாடுகளில் ஸ்ரீலங்கா அரசுடன் (ஆறுமுறை) பேசி கிடைத்தபலன் ஒன்றுமில்லை. நீண்டகாலமாக ஸ்ரீலங்கா அரசும் சிங்களத் தேசியவாதிகளும் சர்வதேச சமூகத்திடம் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துவந்தனர். 'புலிகள் பேச்சுவார்த்தைகளை தமது போரியல் தயாரிப்புகளை செய்வதற்கான ஒரு சுத்துமாத்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
நாம் தனித்துவிடப்படவில்லை- தென் அமெரிக்க நாடுகளைப் போல் எழுவோம்: மக்களுக்கு விடுதலைப் புலிகள் அழைப்பு! puthinam நம்மை நோக்கி அவலமும் துன்பமும் விரைந்து வருகின்றமையால் எதிர்கொள்ள தயாராவோம்- நாம் தனித்துவிடப்படவில்லை- தென் அமெரிக்க நாடுகளைப் போல் எழுவோம் என்று தமிழீழ மக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நம்பிக்கை அழைப்பு விடுத்துள்ளனர். புலிகளின் குரல் வானொலியில் கடந்த சனிக்கிழமை (07.01.06) "சேர்பியாஇ பொஸ்னியாவைப் போல் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் விரைவில் சிறிலங்கா" என்ற தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் ஆற்றிய உரை: சர்வதேச நீதிமன்றில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருக்கும் சேர்பியாவின் முன்னாள் ஜனாதிபதி மி…
-
- 0 replies
- 1.3k views
-
-
இன்றைய உலகப் பொருளாதார மயமாக்கல் என்ற நிலைக்கூடாக உலக நாடுகள் அனைத்தும் தம் பூகோள அரசியல் இருப்பையும் தாண்டி நெருங்கி வரக்கூடிய நிலமையே காணப்படுகின்றது. பூமிப் பந்தில் இருக்கக்கூடிய நாடுகளின் வாழ்க்கை முறை அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் அனைத்து நாடுகளையும் சென்றடையக் கூடியதாக காணப்படுகின்றது. உலகின் எந்த மூலையிலும் ஏற்படக் கூடிய புயலோ பூகம்பமோ இல்லை போரோ கூட உலக நாடுகளின் பொருளாதார வாழ்க்கை முறைகளில் பெரும் தாக்கத்தை உடனும் ஏற்படுத்துவதை நாம் காண்கின்றோம். அந்த வகையில் இன்று உலகின் சில பகுதிகளில் ஏற்படக்கூடிய இனங்களுக்கிடையிலான மோதல்களும் சுதந்திரத்துக்கான போராட்டங்களும் உலகின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஆட்டங்காணச் செய்வதுடன் வசதி பெற்ற நாடுகளின் சந்தை வாய்ப்புக்களைய…
-
- 6 replies
- 2.1k views
-
-
இன்று போய் நாளை வா! Atha Gila Heta Enda! வடக்குக் கிழக்கினைச் சிங்கள தேரவாத பௌத்தத்திற்கு உரிமைகோரும் Ven. Ellawala Medhananda Thera The Sinhala Buddhist Heritage in The East and The North of Shri Lanka என்ற நுல் பற்றிய விமர்சனம் சாணக்கியன் 07.01.2005, சனி. இலங்கையில் அன்று, முடிவுகளைத் தாமாகவும், சரியாகவும் எடுக்கும் பக்குவ நிலையை அடையாத சிறுவர்கள, தேரவாத பௌத்த பிக்குகளாக ஆக்கப்பட்டும், கத்தோலிக்க பாதிமார்களாக ஆக்கப்பட்டும் வந்துள்ளனர். ஆனால், இன்று, எந்தவித முடிவுகளையும் தாமாகச் சிந்தித்து எடுக்க முடியாத நிலையில் இருக்கும் சிறுவர்களுக்கு இவை தொடரும் அதே வேளையில், தென்னிலங்கையில் 40,000 இற்கு மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் களியாட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்…
-
- 0 replies
- 1.5k views
-
-
அண்மையில் யாழ்ப்பாண மாணவர் பேரவை வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் வரும் ஜனாதிபதிதேர்தலை தமிழ்மக்கள் புறக்கணிக்கவேண்டும் எண்டு தெரிவித்திருந்தார்கள்,, இது பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்,,,வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழீழ மக்கள் என்ன செய்யவேண்டும்?? :!: :?:
-
- 29 replies
- 6.1k views
-
-