அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
அரசியலில் சூழ்ச்சி? - யதீந்திரா ரணில் விக்கிரமசிங்க நரித்தனமாக தமிழர்களை ஏமாற்றப் போகின்றார். ஜெனிவாவை கையாளும் ஒரு உக்தியாகவே ரணில் ஒரு புதிய ஆட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார். விடயம் தெரியாமல் தமிழ் தலைமைகள் கொழும்பின் பொறிக்குள் சிக்கப்போகின்றன. இதன் மூலம் சர்வதேச அழுத்தங்கள் பலவீனமடையப் போகின்றது. இவ்வாறான கருத்துக்களை சிலர் முன்வைப்பதை காணமுடிகின்றது. அரசாங்கத்துடன் பேசுகின்ற ஒவ்வொரு சந்தர்பங்களிலும் இவ்வாறான கருத்துக்கள் வெளிவருவது சாதாரணமானது. ஒரு நம்பிக்கையற்ற சூழலில் இடம்பெறும் அனைத்துமே அவநம்பிக்கையினூடாகத்தான் நோக்கப்படும். அவ்வாறாயின் ரணில் சூழ்ச்சி செய்யமாட்டாரா? இப்படி எவரேனும் கேட்டால் – பதில் சுலபமானது. அவர…
-
- 0 replies
- 397 views
-
-
அரசியலில் தந்திரோபாயம் என்பது – விரும்பியது கிடைக்கும் வரையில் கிடைத்ததை விரும்புவதாகும் - யதீந்திரா தமிழில் ஒரு கூற்றுண்டு. அதாவது, கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. தமிழர்களின் அரசியலும் இன்று அப்படியானதொரு நிலையில்தான் இருக்கின்றது. ஆரம்பத்தில் சமஸ்டி, அதிலிருந்து தனிநாடு, பின்னர் மீண்டும் சமஸ்டி. ஆனால் தமிழர் அரசியலின் உண்மையான நிலைமையோ, மாகாண சபையை முழுமையாக பயன்படுத்த முடிந்தாலே, போதுமானதென்னும் நிலையில்தான் இருக்கின்றது. அதாவது, பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கள் என்று கூறுவதற்கு ஒப்பானது. ஆனால் இந்த உண்மையை வெளிப்படையாக கூறும் துனிவு பலரிடம் இல்லை. வாக்குகள் பறிபோய்விடுமோ – என்று அச்சப்படும் அரசியல்வாதிகளால், சில விடயங்களை பகிரங்கமா…
-
- 4 replies
- 857 views
-
-
அரசியலில் பெண்கள்: நாம் எப்போது கரையேறுவோம்? சிறு வயதில், பொது அறிவு வினாக் கொத்துகளில், “உலகின் முதலாவது பெண் பிரதமர் யார்?” என்ற கேள்வி, அநேகமாக இடம்பெற்றிருக்கும். நாமும் பெருமையுடன், “இலங்கையின் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க” என்று எழுதிவிட்டு, முழுமையான புள்ளிகளைப் பெறுவோம். அதேபோல், ஆசியாவிலேயே, பெண்களுக்கு வாக்குரிமையை வழங்கிய முதல் சில நாடுகளில், இலங்கையும் ஒன்று. அவ்வாறான முக்கியமான பெருமையைக் கொண்ட இலங்கையில், அதற்குப் பின்னர் போதியளவிலான முன்னேற்றங்கள், அரசியலில் பெண்கள் என்ற விடயத்தில் காணப்பட்டிருக்கவில்லை. ஆனால், ஏனைய நாடுகள், சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. பாரதிராஜாவின் இயக்கத்தில் சத…
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசியலில் பொய்கள் -யதீந்திரா அண்மையில் எம்.ஏ.சுமந்திரன் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அந்தக் கருத்து கண்ணில் பட்டபோதே இவ்வாறானதொரு கட்டுரை எழுத வேண்டுமென்னும் எண்ணம் ஏற்பட்டது. அதாவது, நான் எந்த இடத்திலும் எந்தப் பொய்யையும், ஒரு தடவை கூட சொன்னதில்லை. மக்களுக்கு உண்மை நிலையை கூறுவதால்தான், என்னை பலருக்கும் பிடிப்பதில்லை. நான் எனது சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என பெயர் எடுத்தவன். சுமந்திரன் அவரது சட்டத்தரணி வாழ்வில் பொய்களை கூறுகின்றாரா அல்லது இல்லையா என்பது பற்றி கருத்துக் கூறும் ஆற்றல் எனக்கில்லை ஏனெனில் நான் சட்டத்துறை சார்ந்த நபரல்ல ஆனால், அரசியல் வாழ்வில் சுமந்திரன் போன்றவர்கள் பொய்களை கூறுகின்றனரா அல்லது இல்லையா என்பதை – இந்தக் கட…
-
- 0 replies
- 671 views
-
-
அரசியலில் பொய்கள் ? - யதீந்திரா சர்வதேச அரசியல் உரையாடல்களில், உலகளவில் கவனிக்கப்படும் அறிஞர்களில் ஒருவரான ஜோன் மியஷைமர், சர்வதேச அரசியலில் தலைவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதை விபரிக்கும் வகையில் ஒரு நூலை எழுதியிருந்தார். அந்த நூலின் பெயர் தலைவர்கள் ஏன் பொய் சொல்லுகின்றனர் : சர்வதேச அரசியலில் பொய்கள் பற்றிய உண்மை (Why leaders lie : the truth about lying in international politics) இந்த நூல் பிரதானமாக அமெரிக்க தலைவர்களை அடிப்படையாகக் கொண்டே விடயங்களை ஆராய்கின்றது. ஆனால் இந்த நூலின் உள்ளடக்கம் அனைத்து நாட்டுச் சூழலுக்கும் பொருந்தக் கூடியது. அவர் பொய்களை வகைப்படுத்தியிருக்கின்றார். அதவாது நாட்டின் நலன்களுக்காக கூறப்படும் பொய்களும் இருக்கின்றன. வெறும் சுயநலன்களுக்கா…
-
- 0 replies
- 389 views
-
-
அரசியலில் வெகுஜனங்களும் புலமைத்தளமும் -என்.கே. அஷோக்பரன் பிரபல எழுத்தாளரான ஐசக் அசிமொவ், அமெரிக்க ஜனநாயகம் அடைந்து வரும் மாற்றத்தை அவதானித்து, “புலமைத்துவ எதிர்ப்பு என்பது, நமது அரசியல், கலாசாரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய வாழ்க்கையில், ஒரு நிலையான அம்சமாக இருந்து வருகிறது. ‘எனது அறியாமையும் உங்கள் அறிவும் ஒன்று’ என்ற தவறான கருத்தியலால், ஜனநாயகம் தவறான வழியில் வளர்க்கப்படுகிறது”என்று கருத்துரைத்திருந்தார். ‘மக்கள் மயப்படுத்துகிறோம்; மக்களிடம் கொண்டு செல்கிறோம்’ என்ற போர்வையில், புலமைத்தளத்தின் பங்களிப்பை நிராகரித்து விட்டு, ஜனநாயகத்தை கொண்டு நடத்துவதானது, தோல்வியிலேயே முடியும். வீதியில் இறங்குவதும், கூச்சல் கூப்பாடு போடுவதும், அதன் மூலம் அரசியல் சாதனைகளைப் பு…
-
- 0 replies
- 455 views
-
-
அரசியலில்... கர்ம வினைப் பயனெல்லாம் கிடையாது? நிலாந்தன். “நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட காணி சென்னைக்கு அருகே விற்பனைக்கு உண்டு” இது ஒரு விளம்பரம் அல்ல. அண்மை நாட்களில் சமூக வலைத்தளங்களில் ஒரு ஒளிப்படத்துடன் சேர்ந்து பகிரப்படும் ஒரு குறிப்பு இது. அந்த ஒளிப்படத்தில் என்ன இருக்கிறது என்றால், இந்தியப் பிரதமர் மோடிக்கு முன் பசில் ராஜபக்ச பவ்வியமாக அமைந்திருக்கும் காட்சியாகும். வழமைபோல இந்தியா இம்முறையும் நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவியிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தியா இலங்கைக்கு வழங்கிவரும் கடன்கள் இலங்கை அரசாங்கத்துக்கு மூச்சுவிடும் அவகாசத்தை வழங்கியிருக்கின்றன. அதற்கு பிரதியுபகாரமாக அரசாங்கம் சம்பூரில் மீளப்புதுப்பிக்கும…
-
- 0 replies
- 348 views
-
-
மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தையும் ஹம்பாந்தோட்டை ருஹூணு மாகம்புர துறைமுகத்தையும் நேரடியாக பார்வையிட்டு தகவல் திரட்டுவதற்காக அவ்விரண்டு இடங்களுக்கும் கடந்த 17ஆம் திகதி சென்ற ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குண்டர்கள் முட்டை வீசியும் அவர்களை மிரட்டியும் இம்சிப்பதை தொலைகாட்சித் திரைகளில் நாடே கண்டது. அந்த குண்டர்கள் மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயைச் சேர்ந்த ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோவும் இருப்பதையும் நாட்டு மக்கள் கண்டனர். ஆனால் இந்த தாக்குதலுக்கு தமது கட்சி பொறுப்பல்ல என்றும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை ஐ.தே.க. விமர்சிப்பதனால் ஆத்திரமுற்ற சாதாரண மக்களே இந்த எம்.பிக்களை தாக்க முற்பட்டுள்ளனர் என…
-
- 0 replies
- 735 views
-
-
‘அரசியலுக்குள் பெண்கள் புகுவதை ஆணாதிக்கமே முடக்குகிறது’ ஏ.எச்.ஏ. ஹுஸைன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல, மற்றுமுள்ள பல கட்சிகளும் பெண்களை அரசியலில் முன்னுக்குக் கொண்டுவருவதில் அக்கறை காட்டவில்லை. இது பெண்களின் பிழையல்ல. இது ஆணாதிக்கத்தின் ஒரு வடிவமேயாகும் என்று, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் சார்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உதயசூரியன் சின்னம் இலக்கம் 6இல் களமிறங்கியுள்ள கலாநிதி சந்திரகாந்தா மகேந்திரநாதன் தெரிவித்தார். தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய செவ்வியின் முழ…
-
- 0 replies
- 650 views
-
-
அரசியலை அதிரச் செய்யும் 20 மில்லியன் ரூபாய் “இருபது மில்லியன் ரூபாய் விவகாரம்” இப்போது அரசியலில் பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயமாக, மாறியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் உள்ள தேசிய திட்டமிடல், பொருளாதார விவகார அமைச்சின் ஊடாக, தலா 20 மில்லியன் ரூபாய் நிதி இலஞ்சமாக வழங்கப்பட்டது என்று, ஈ.பி.ஆர்.எல்.எவ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியிருந்த குற்றச்சாட்டே இதன் அடிப்படை. வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக இந்தச் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது அவரது குற்றச்சாட்டு. அண்மையில், …
-
- 0 replies
- 331 views
-
-
அரசியலை ஆட்டிப்படைக்கும் ஜோதிடம் - கே.சஞ்சயன் இலங்கை அரசியலில் ஜோதிடத்தின் செல்வாக்கு அதிகமாகவே இருந்து வந்திருக்கிறது. அரசியல் மாற்றங்கள் நிகழும் போதும், தேர்தல்கள் நடத்தப்படும் காலங்களிலும் ஜோதிடர்களின் கணிப்புகள், குறிப்பாக சிங்கள ஊடகங்களில் அதிகளவில் இடம்பெறுவது வழக்கம். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், அவரது எல்லா நடவடிக்கைகளுமே ஜோதிட ஆலோசனைப்படிதான் செயற்படுத்தப்பட்டன. அந்த ஜோதிடக் கணிப்புதான் அவரது காலையும் வாரிவிட்டது. இப்போது, எதிர்காலத்தைச் சரியாகக் கணிக்கும் ஜோதிடர் என்று தன்னை தானே கூறிக்கொள்ளும், ஒருவர், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ள ஜோதிடக் கணிப்பு வீடியோ ஒன்று, பரபரப்பை ஏற்ப…
-
- 0 replies
- 442 views
-
-
அரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன் எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜனவரி 15 மாதிவெலயில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் அமைந்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இருந்து, கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் சில இறுவட்டுகள் தான், இன்று நாட்டின் பிரதான பிரச்சினை என்று கூறுமளவுக்கு, அவை ஊடகங்களில் இடம்பிடித்துக் கொண்டுள்ளன. அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், நீதிபதிகள், பெண்கள் ஆகியோருடன், ராமநாயக்க தொலைபேசி ஊடாகவும் நேரடியாகவும் நடத்தியதாகக் கூறப்படும் உரையாடல்களே, இந்த இறுவட்டுகளில் உள்ளன எனக் கூறப்படுகிறது. இந்த உரையாடல்கள் மூலம் அவர், தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக நடவடிக்கை…
-
- 1 reply
- 1.2k views
-
-
அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்? — வீரகத்தி தனபாலசிங்கம் — March 17, 2025 புலம்பெயர் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் சிறந்த அரசியல் ஆய்வாளர்களில் ஒருவருமான டி.பி.எஸ். ஜெயராஜ் அண்மைக் காலத்தில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக வெளிவந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கடந்த வருடம் செப்டெம்பரில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியல் எழுச்சி குறித்து ஆறு கட்டுரைகளையும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி குறித்து மூன்று கட்டுரைகளையும் ஜெயராஜ் எழுதியிருந்தார். அவற…
-
- 1 reply
- 327 views
-
-
அரசியல் அதிகாரத்தை பகிர்வதற்கான உறுதிப்பாட்டை நிறைவேற்றுங்கள் திருத்தப்பட்ட, இலங்கைதொடர்பான தீர்மான வரைபில் வலியுறுத்தல் ஐ.நா மனித உரிமைகள் பேரவை (யு.என்.எச்.ஆர்.சி) இலங்கை குறித்த திருத்தப்பட்ட தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.கொரோனா வைரசினால் இறந்தமுஸ்லி ம் களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்த கவலைகள் புதிய திருத்த வரைபில் உள்ளன. கொரோனா வைரஸ் நோய்க்கான (COVID-19) தொற்றுநோய்குறித்த நடவடிக்கைகள் மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நடைமுறையில் ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாட்டை அதிகப்படுத்தியுள்ளதாகவும் திருத்தப்பட்ட வரைபு கவலையை வெளிப்படுத்துகிறது. கோவி…
-
- 0 replies
- 318 views
-
-
கடந்தகால வரலாறு, நிகழ்கால நிகழ்வுகள் போன்றவற்றை கூர்ந்து ஆய்ந்து விளங்கி எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடுவது ஏற்றது, பொருத்தமானது. பயனுள்ளது என்பது புத்தியுள்ளோர் புரிந்து வைத்துள்ள உண்மை. யதார்த்தமும் கூட. இது தனிப்பட்ட மனிதனின் வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்வதற்கு மட்டுமல்ல நாட்டை, சமூகத்தை வழிநடத்தத் தலைப்பட்டுள்ள அரசியல் அரங்காடிகளுக்கும் பொருந்தும். வரலாறு என்பது வெறும் பழங்கதையல்ல. நிகழ்வுகளின் தாக்கம் எவ்வாறமையும், அதனால் விளையும் நன்மை, தீமைகள் எவ்வாறு நாட்டை, சமூகத்தை, இனத்தை, மதத்தை, மொழியை, தனிப்பட்ட வாழ்வை பாதித்தன என்பது பற்றி புரிந்து கொள்ள, எதிர்காலத்தை திட்டமிட, உகந்ததாயமைந்துள்ளது. ஏற்கனவே நிகழ்ந்த நிகழ்வுகளை அதாவது வரலாற்றை மறந்தோ, புறந்தள்ளியோ செய…
-
- 0 replies
- 485 views
-
-
அரசியல் அறம் கற்க வேண்டிய தமிழ்க் கட்சிகள் -புருஜோத்தமன் தங்கமயில் இன விடுதலை, தேச விடுதலை, அரசியல் உரிமை என்று மேடைகளில் முழங்கினாலும், தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டால் வெற்றிக்காகவும் பதவிக்காகவும், எவ்வளவு மட்டகரமான வேலைகளையும் செய்வதற்கு அரசியல்வாதிகள் தயங்குவதில்லை. சாதிய அணுகுமுறை, பிரதேசவாதம், மதவாதம் என்று தொடங்கி, சமூக மேம்பாட்டுக்கு ஒப்பில்லாத அனைத்துக் கட்டங்களையும் அவர்கள் துணைக்கு அழைப்பார்கள். கடந்த பொதுத் தேர்தல் காலத்திலும், அதற்குப் பின்னரான நாள்களிலும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு, அசிங்கமான வழிகளில், இதைப் பதிவு செய்து வருகின்றது. பொதுத் தேர்தல் காலத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் சக வேட்பாளர…
-
- 0 replies
- 762 views
-
-
அரசியல் அறம் மறந்த மாவை புருஜோத்தமன் தங்கமயில் / 2020 மார்ச் 18 தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கவீந்திரன் கோடீஸ்வரன், அவர் சார்ந்திருந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை (டெலோ) விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் தமிழரசுக் கட்சியில் இணைந்திருக்கிறார். அவர் இம்முறை தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அம்பாறை மாவட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் கூட்டத்தின் போதே, இந்த விடயம் டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவால் சொல்லப்பட்டிருக்கின்றது. ஒரு மாவட்டத்தின் தலைமை வேட்பாளர், அதுவும் கடந்த பொதுத் தேர்தலில் தன்னை முன்னிறுத்திய கட்சிக்கு இறுதிவரை அறிவிக்…
-
- 0 replies
- 882 views
-
-
அரசியல் அலசல் 'வெளிச்சம்' Velicham Jan 17,2013 Part 1
-
- 1 reply
- 583 views
-
-
வேல் தர்மா: அரசியல் அலசல்: சீனாவின் (அஞ்சுவது) அஞ்சாமை துணிவுள்ளவனுக்கு அச்சமில்லை என்பது கொன்பியூசியசின் போதனையாகும். சீனாவின் புள்ளிவிபரங்கள் அதிசயிக்கத் தக்கன. உலகிலேயே பெரிய மக்கள் தொகை, உலகிலேயே அதிக அளவு வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு, இரண்டாவது பெரிய பொருளாதாரம், மிகப் பெரிய படைத்துறை ஆளணி, இரண்டாவது பெரிய படைத்துறை, விண்வெளியில் பல சாதனைகள், அதிக நீர் மூழ்கிக்கப்பல்கள், மிகப் பெரிய அருங்காட்சியகம், மிகப் பெரிய நீன் மின் உற்பத்தி நிலையம், மிகச் சிறந்த தொடருந்துக் கட்டமைப்பு, உலகில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுடன் மிகப் பெரிய வர்த்தகம், உலக தொழில்துறை உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு சீனாவில் செய்யப்படுகின்றது, இரண்டாவது பெரிய அந்நிய முதலீ…
-
- 0 replies
- 519 views
-
-
2009 மே18 பின் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தி முடிவுக்கு வர ஈழ விடுதலையை முன்னெடுக்கும் முன்னெடுப்பார்கள் என நம்பியவர்கள் எல்லாம் தமிழர் தலைகளில் கல்லை போட செய்வதறியாது நின்ற ஈழ மக்களுக்கு தேசியத்தின் தலைவர் கைகட்டி போன தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே எஞ்சி இருத்தது அதன் பிரகாரம் ஈழமக்கள் அவர்கள் பின்ன நடக்க முழுமையான அரசியல் மட்டுமே செய்து பேசக்கூடிய செய்யக்கூடிய ஒருதலைவரை இவர் போராட பயப்பிடுறார் எனவும் சிங்களுத்துக்கு சார்பா நடக்குறார் எனவும் வசைபாடி துரோகியாக்கி என்ன எல்லாம் பேச முடியுமோ பேசி விலகி வைக்க பெரும் பாடு நடத்தது தெரிந்த விடையம் இதில் என்ன வேடிக்கை என்றால் தலைவரால் கைகாட்டபடு கூப்பிட்டு கூட்டமைப்புக்கு தலைவர் ஆகும்வரை சம்மந்தன் ஐயா பற்றி எவரும் வ…
-
- 5 replies
- 685 views
-
-
அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் படைத்துறை மென்பொருள் – வேல்ஸ் இல் இருந்து அருஸ் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் படைத்துறை மென்பொருள் இஸ்ரேலும் பெஹாசஸ் ஸ்பைவெயரும் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ (NSO) நிறுவனம் தயாரித்த பெஹாசஸ் ஸ்பைவெயர் (Pegasus spyware) எனப்படும் மென்பொருள், உலக நாடுகளில் உள்ள மக்களின் சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன். தற்போது அமெரிக்காவையும் பதற்றமடைய வைத்துள்ளது. என்.எஸ்.ஓ நிறுவனத்தைத் தடைசெய்ய வேண்டும் என அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் இந்த வாரம் கோரிக்கை விடுத்துள்ளனர். 17 இற்கு மேற்பட்ட ஊடக நிறுவனங்களும் மற்றும் மனித உரிமை அமைப்புக்களும் அதனைத் தான் கூறியுள்ளன. …
-
- 0 replies
- 464 views
-
-
வரதராஜ பெருமாள் - ஈழ அரசியல் அறிந்தவர்களுக்கு மறக்க முடியாத பெயர். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் காந்தி அமல்படுத்திய நேரத்தில் வட கிழக்கு மாகாணத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டவர். புலிகளின் கொலைப் பட்டியலில் அவர் இடம்பெற்றதாகச் சொல்லப்பட்ட நிலையில் வரதராஜ பெருமாள் அங்கிருந்து தப்பினார். எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்த சூழலில் அவரைச் சென்னையில் சந்தித்தோம். ''இத்தனை ஆண்டுகள் எங்கேதான் இருந்தீர்கள்?'' ''11 வருடங்கள் ராஜஸ்தானிலும் பத்து வருடங்கள் டெல்லியிலும் இருந்தேன். இலங்கையில் இருந்திருந்தால் இப்போது நான் இருந்திருக்க மாட்டேன். ராஜீவ் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக இருந்ததால், என்னைக் கொல்வதும் இந்தியாவை அடிப்பதும் ஒன்று என புலிகள் கருதினார்கள். தலைமறைவாக இரு…
-
- 7 replies
- 1.1k views
-
-
அரசியல் உரிமைக்கான அறவழி இயக்கம் தொடங்க இதுவே தக்க தருணம்! - பெ.மணியரசன் அறிக்கை! [saturday 2015-01-10 21:00] இலங்கைத் தேர்தல் தரும் பாடம் இதுதான்! தமிழீழ மக்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் வேண்டுகோள்! தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை! இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இனப்படுகொலைக் குற்றவாளி இராசபட்சே படுதோல்வி அடைந்தது வரவேற்கத்தக்கது. ஆனால், இத்தேர்தல் முடிவு தமிழீழத்தில் இராணுவ முற்றுகைக்குள் பணையக் கைதிகள் போல் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு குடியியல் உரிமைகள் - அரசியல் உரிமைகள் ஆகியவற்றை பெற்றுத்தருமா என்பது மிகப் பெரியக் கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில், வெற்றுபெற்றுக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மைத்…
-
- 0 replies
- 458 views
-
-
அரசியல் என்பது கடவுள் வாதமல்ல யதீந்திரா அரசியல் என்பது அடிப்படையில் ஓர் அறிவியல் என்பதையே நம்மில் பலர் அடிக்கடி மறந்துவிடுவதுண்டு இத்தனைக்கும் அவர்கள் நமது சூழலின் முன்னேறிய பிரிவினரும் கூட. கருத்தியல் அர்த்தத்தில் அரசியல் ஒரு விஞ்ஞான வாதமாகும். அதனால்தான் அரசியல் விஞ்ஞானம் (Political Science) என்று அழைக்கிறோம். ஆனாலும் என்னதான் இதுபற்றி அறிவில் நாம் முதிர்ந்தவர்கள் என்று பேசிக் கொண்டாலும் உணர்வெழுச்சிக்கு ஆட்பட்டு, அவ்வப்போது அரசியலை ஒரு மதவாதப் பண்புடனேயே அணுக முற்படுகிறோம், அணுகியும் வருகிறோம். அரசியல் எப்போதெல்லாம் கடவுள்வாதப் பண்பைப் பெறுகிறது? அரசியலில் பல்வேறு புரிதல்களுக்கு இடமுண்டு என்பதை மறுக்கும்போது, ஒரு அரசியல் நிலைப்பாடு முற்றிலும் எதிர்பா ரா…
-
- 0 replies
- 902 views
-
-
அரசியல் கட்சிகளின் உத்திகளுக்குள் அமிழும் உள்ளூராட்சி உள்ளூராட்சி சபைத் தேர்தல் - 2018 அறிவிக்கப்பட்டு, பெப்ரவரி மாதம் 10ஆம்திகதி வாக்கெடுப்பு நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல்த் திருகுதாளங்களும் திருவிழாக்களும் களைகட்டத் தொடங்கிவிட்டன. அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்களும் ஒரே தடவையில் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில், சட்டங்களை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் இம்முறை தேர்தல் நடைபெறுகிறது. இம்முறை நடைபெறவிருக்கும் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில், 25 சதவீதம் பெண்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெறுவது முக்கியமானதாகும். இன்னொரு முக்க…
-
- 0 replies
- 309 views
-