Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அரசியல் பாதை தேடி வீதிக்கு இறங்கிய தமிழர்கள் தமிழ் மக்கள் பேரவையினால் யாழ். நகரில் செப்டெம்பர் 24 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணி இலங்கையின் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருமளவில் அணிதிரண்ட முதல் வெகுஜன அரசியல் போராட்ட இயக்கமாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கும் இப் பேரணி தமிழர் அரசியலில் ஒரு திருப்புமுனையைக் குறித்து நிற்கிறதா என்பதே முக்கியமான கேள்வியாகும். தமிழ் மக்களை இன்று அழுத்திக் கொண்டிருக்கின்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு விரைவானதும் உருப்படியானதுமான த…

  2. அரசியல் பேய்க்காட்டல் பெரும்பாலான அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தம்மை அதீத புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருப்பது மட்டுமன்றி, தாங்கள் முற்றுமுழுதாக, மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்று காட்டிக் கொள்ளவும் முனைகின்றனர். இந்த அதிமேதாவித்தனம், அநேக சந்தர்ப்பங்களில் வேண்டாத விளைவுகளுக்கு இட்டுச் சென்று விடுகின்றன. தமது பிழையான நகர்வுகளையும் முட்டாள்தனமான முடிவுகளையும் எவ்வாறு நியாயப்படுத்தலாம்? மக்களை எவ்வாறு பேய்க்காட்ட முடியும்? எனத் தெரிந்து வைத்திருப்பதுதான், இன்றைய நிலையில் உயர்ந்தபட்ச அரசியல் சாணக்கியமாக ஆக்கப்பட்டிருக்கின்றது. முஸ்லிம், தமிழ் அரசியலில் மட்டுமன்றி, பெருந்தேசிய அரசியலிலும் இதுதான் நிதர்சனமாக இருக்கின்றது. தேர்தல் காலத்தில், …

  3. அரசியல் போட்டிகளுக்கு மத்தியில் கிழக்குத் தமிழர் ஒன்றியம் எடுபடுமா? -அதிரதன் பெரியமீன்களைப் பிடிப்பவர்கள் மத்தியில், சின்ன மீன்களையே பிடிக்க முடியாதவர்கள், தாம் பிடித்த சிறியசிறிய மீன்களை, பெரியமீன்கள் என்று சொல்லி, அரசியல் களத்தில் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். அரசியல் அநாதைகளாக தமிழர்கள் மாறிவிடக்கூடாது என்பதுதான், இனப்பிரச்சினைக்கான தோற்றுவாயாக இருந்திருக்கிறது. அந்த அடிப்படையில், இப்போதுள்ள அரசியல் போட்டிகளுக்கு மத்தியில், கிழக்கில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் பிரிந்து நிற்கின்ற தன்மையானது, அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கின்ற நிலைப்பாட்டுக்கு எதிராக இருக்கிறது, என்ற சிந்தனை வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் தான்,…

  4. அரசியல் போர்க்களம் – பி.மாணிக்கவாசகம்… November 9, 2018 நாட்டில் அரசியல் குழப்ப நிலைமை ஏற்பட்டு இரண்டு வாரங்களாகப் போகின்றன. ஆயினும் நெருக்கடிகள் நாளுக்கு நாள் கூடுகின்றனவே தவிர குறைவதற்கான அறிகுறிகளைக் காண முடியவில்லை. நவம்பர் 16 ஆம் திதகி வரை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம் இரண்டு தினங்கள் முன்னதாக 14 ஆம் திகதி கூட்டப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச வர்த்தமானியின் மூலம் அறிவித்துள்ளார். ஆயினும் தொடர்ந்து செல்கின்ற உறுதியற்ற அரசியல் செயற்பாடுகள் அடுத்தடுத்த கட்டங்களில் எத்தகைய நிலைமைகளைத் தோற்றுவிக்கும் என்பது குறித்து பலரும் கவலை கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள். உள்நாட்டில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் இந்த கவலை சார்ந்த அக்…

  5. அரசியல் மயப்படுத்தபட்ட சிந்தனை யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளி­டையே ஏற்­பட்ட மோதல் வட­ப­கு­தியில் மட்­டு­மல்­லாமல் நாட­ளா­விய ரீதியில் பெரும் பர­ப­ரப்பு சம்­ப­வ­மாகப் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது. ஊட­கங்­களில் இது, தலைப்புச் செய்­தி­யாக இடம்­பெற்­றி­ருந்­தது. அர­சியல் மட்­டங்­க­ளிலும் புத்­தி­ஜீ­விகள் மட்­டத்­திலும் வாதப் பிர­தி­வா­தங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இந்தச் சம்­ப­வ­மா­னது இரண்டு இனங்­களைச் சேர்ந்த இளை­ஞர்­க­ளி­டையே ஏற்­பட்­டி­ருந்த ஒரு மோத­லாக இருந்த போதிலும்,இன அடை­யா­ளத்தை முதன்­மைப்­ப­டுத்­திய அர­சியல் நோக்கில் இதனை சீர்­தூக்கிப் பார்த்­ததன் விளை­வாக அது ஊதிப் பெருத்து, பெரி­ய­தொரு விவ­கா­ர­மா­கி­யது. பல்­க­லைக்­க­ழகம் ஒன்றில் …

  6. அரசியல் மிதவாதத்தின் நெருக்கடி எம்.எஸ்.எம். ஐயூப் / எதிரிக்கு ஆயுதம் வழங்கக் கூடாது என்பார்கள். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஓர் ஆயுதத்தை அல்ல; ஆயுதக் களஞ்சியம் ஒன்றையே, எதிரியின் கையில் கொடுத்துவிட்டார் போலும். உத்தேச புதிய அரசமைப்பு தொடர்பாக, காலியில் அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில், அவர் உரையாற்றும் போது தெரிவித்த ஒரு கருத்தை, வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போட்டியாளர்கள், அவரை மட்டுமல்லாது, கூட்டமைப்பையே தாக்குவதற்காகப் பாவிக்கிறார்கள். அந்தக் கூட்டத்தின் பின்னர், யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிச் சென்ற சுமந்திரன், தமது காலி உரை குறித்து அளித்த விளக்கத்தை, கூட்டமைப்…

  7. அரசியல் யாப்பு உருவாக்கமும் முரண் நிலையும் – துன்னாலைச் செல்வம்:- 1945-1946 கிய ஆண்டுகளில் தொடங்கிய தமிழ் மக்களின் அரசியல் குரல் இத்தனை ஆண்டுகளின் பின் எங்கே நிற்கின்றது? இதுவரை கடந்து வந்த பாதையில் பயணிக்கப் போகின்றதா? புதிய பாதையில் போகப்போகின்றதா என்பன போன்ற பல வினாக்களுக்கு விடை தேடவேண்டிய காலம் இது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி வலுவான நிலையில் அப்பொழுது இருந்தது.இலங்கைத் தீவை விட்டு வெள்ளையர்கள் வெளியேறும் நிலையில் ஆட்சி எப்படி அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தமிழ் அரசியல் தலைவர்கள் திறம்படக் கையாளவில்லை என்றும் கூறப்படுகின்றது. இலங்கைத் தீவுக்குப் புதிய அரசியல் யாப்பு எழதப்பட்ட அந்த நேரத்தில் தமிழினம் தான் ஒரு தேசிய இ…

  8. கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் 28.5.2025 அன்று நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மன்னார் வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சிடம் கையளிப்பது என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு தீர்மானங்கள் உடனடியாகவே மத்திய சுகாதார அமைச்சருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் விரைவான நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி. பங்குபற்றுபவர்கள் மத்திய மற்றும் மாகாண அரசுகளின் உயர் அதிகாரிகள். இவை தவிர முக்கிய சமூக அமைப்புகளின் முக்கியஸ்தர்கள்; அனைத்துக்கும் மேலாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து அரசியல் யாப்பு விதிகளை மீ…

  9. அரசியல் ரீதியான அணுகுமுறையை சர்வதேச சமூகம் கைவிட வேண்டும் – ஒக்லன்ட் நிறுவன நிகழ்வில் விக்கி 71 Views “சர்வதேச சமூகம், இலங்கை விடயத்தில் இனிமேலும் அரசியல் ரீதியான அணுகுமுறையைப் பின்பற்றாமல் மனித உரிமைகள் அடிப்படையிலான ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மனித உரிமைகள் சபை ஆணையாளர் பச்லட் அம்மையாரின் அறிக்கை அத்தகைய மனித உரிமைகள் அடிப்படையிலான ஒரு அணுகுமுறையை கொண்டிருக்கின்றது. ஆனால், தற்போது, மனித உரிமைகள் சபையில் சமர்பிக்கப்படவிருக்கும் பூஜ்ய அறிக்கை அரசியல் அணுகுமுறை அடிப்படையில் அமைந்திருக்கின்றது” இவ்வாறு குற்றஞ்சாட்டியிருக்கின்றார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக…

    • 1 reply
    • 373 views
  10. அரசியல் ரீதியான சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் ‘வெசாக்’ பி.மாணிக்கவாசகம் வெசாக் பண்டிகை நாட்டின் பல பகுதிகளிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது. இது பௌத்த மதத்தின் முக்கியமான பண்டிகையாகும். உலக நாடுகளில் பௌத்தர்கள் வாழும் இடங்களில் இது சிறப்பாகக் கொண்டாடப்;படுகின்றது. இலங்கையில் அதிக முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின் இது. அரசாங்க பண்டிகையாக மிகப் பரந்த அளவில் கொண்டாடப்படுகின்றது. ஆனால், அந்தக் கொண்டாட்டம் பௌத்த மதக் கலாசாரத்தைப் பின்பற்றி அதனை, பேணி பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ள போதிலும், அது எல்லையைக் கடந்து அதனை சிறப்படையச் செய்கின்ற ஒரு நடவடிக்கையாக அமைந்திருக்கின்றது. நாட்டின் பிரதான மதத்தவர்கள…

  11. அரசியல் வியாபாரக்களம் பாராளுமன்றம், மாகாண மட்டம் என்பவற்றுக்கு அடுத்ததாக அடி மட்டத்தில் அல்லது தாழ்ந்த மட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி சபைகள் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற பணிகளுக்குப் பொறுப்பானது. பிரதேச சபைகள், நகர சபைகள், மாநகரசபைகள் என குறுகிய எல்லைப் பிரதேசத்தைத் தமது நிர்வாக நிலப்பரப்பாக இவைகள் கொண்டிருக்கின்றன. இங்கு மக்கள் சேவையே முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இந்தப் பணிகள் முக்கியமாக அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட வேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் தற்போதைய நாட்டின் அரசியல் சூழலில், உள்ளூராட்சி சபைகளை அரசியல் மயமாக்குவதற்கான பணிகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதற் கான முக்கிய…

  12. அரசியல் விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன் ஆயுதம் ஏந்தி விட்டோம்!!!

    • 0 replies
    • 792 views
  13. அரசியல் வெற்றிடம் – பி.மாணிக்கவாசகம்… அனைத்துத் தரப்பினரையும் ஆளுமையுடன் கூட்டிணைத்து, செயல் வல்லமையுடன் வழிநடத்திச் செல்லத்தக்க தலைமைக்கு, தமிழர் அரசியலில் வெற்றிடம் நிலவுவதைப் போலவே, நாட்டின் தேசிய மட்டத்திலும் அரசியல் தலைமையில் ஒரு வறுமை நிலை காணப்படுகின்றது. இது, சிலவேளைகளில், சிலருக்கோ அல்லது பலருக்கோ மிகைப்படுத்தப்பட்ட ஒரு பார்வையாகத் தோற்றலாம். ஆனால் அரசியல் உரிமைகளுக்காக பல தசாப்தங்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்ற பாதிக்கப்பட்ட தேசிய சிறுபான்மை இனம் ஒன்றின் அரசியல் நோக்கில் இந்த அரசியல் வறுமையைக் காண முடியும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டங்கள் பல வடிவங்களில் இடம்பெற்றிருந்தன. சாத்வீகப் போராட்டமும…

  14. அரசியல்களம்... திரு வரதராஜபெருமாள் அவர்களுடனான செவ்வி

  15. தமிழ் - சிங்கள புத்தாண்டு முடிவடைந்த உடனேயே அனைத்து அரசியல் கட்சிகளும் மே தினத்தில் தத்தமது மக்கள் செல்வாக்கை நிரூபிக்கும் முயற்சியில் தீவிரமாக செயற்படத் தொடங்கியுள்ளன. உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தினமாக கொண்டாடப்படுகின்ற மே தினம் இலங்கையில் மாத்திரமன்றி பல நாடுகளிலும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும். உலகில் நாடுகளுக்கு இடையிலான மேலாதிக்க மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. பெரும்பாலும் வல்லரசு நாடுகள், தனக்கு எதிரான நாடுகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிகார மேலாதிக்க போக்குடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தடை விதிப்பது மாத்திரமன்றி உலக பொருளாதார ஒழுங்கிலிருந்தும் எதிரி நாடுகளை தனிமையப்படுத்துவதன் ஊடாக வல்லரசு நாடுகள் தமது மேலாதி…

  16. அரசியல்வாதி கோட்டாவின் அவலம் கே. சஞ்சயன் / 2019 ஓகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:29 Comments - 0 சிறுபான்மையினரின் ஆதரவு இன்றி, சிங்களவர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று, சில ஆண்டுகளாகக் கூறிவந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டதும், பதற்றமடைந்து போயிருக்கிறார். அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனை, அழைத்துப் பேசியிருந்தார் கோட்டாபய ராஜபக்‌ஷ. இந்தச் சந்திப்புத் தொடர்பாக, அரசல்புரசலாகத் தகவல்கள் வெளியானதும் சித்தார்த்தன், ஊடகங்களிடம் உண்மையைக் கக்கினார். அதில், “தமிழ் மக்களின்…

  17. அரசியல்வாதிகளின் அபிவிருத்தி அரசியல்: பறிபோகும் தமிழர் நிலங்கள் Editorial / 2019 ஜூலை 23 செவ்வாய்க்கிழமை, மு.ப. 11:05 Comments - 0 -க. அகரன் ‘காற்று இடைவெளிகளை நிரப்பும்; தேசம் தன் தலைவர்களை உருவாக்கும்’ என்பது அறிஞர் அண்ணாவின் வாக்காக காணப்பட்டிருந்தது. இவ் வார்த்தை, சொல்வதற்கு உணர்வுபூர்வமானதாகவும் தத்துவார்த்தமானதாக இருந்தாலும் கூட, அதன் உள்ளார்ந்தக் கருத்தை நுட்பமாகப் பார்த்தல் காலத்தின் தேவையாகும். வளர்ச்சி பெற்று வரும் நாடுகளுக்கு அல்லது சிறுபான்மை இனங்களைக் கொண்ட தேசங்களுக்கு, மேற்குறிப்பிட்ட வாக்கு, வலுவான கருத்தைப் போதிப்பதாகவே இருக்கின்றது. வளர்ச்சி அடையும் நாடொன்றில், தற்போதைய விஞ்ஞானத் தொழில்நுட்ப, நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப, தனத…

  18. அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் காலம் மக்களுக்கு…..!மா.பாஸ்கரன் யேர்மனி Posted on March 18, 2020 by சிறிரவி 49 0 தமிழருக்கானதொரு தலையமற்ற வெற்றிடத்தில் எவரும் சவாரி செய்யலாம் என்றதொரு நிலையிற் கடந்த பத்தாண்டுகளைக் கடந்து செல்லும் தமிழரது அரசியலில் மூன்று அரசுத்தலைவருக்கான தேர்தலையும் இரண்டு நாடாளுமன்றத் தேர்தலையும் சந்தித்துள்ள சூழலில் மீண்டுமொரு நாடாளுமன்றத் தேர்தலை ஈழத்தமிழினம் எதிர்கொண்டு நிற்கும் இவ்வேளையில் கடந்தகாலத்திற் பதவிக்கு வந்த அரசுகளும் தமிழ்க்கட்சிகளும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினவா அல்லது குறைந்தபட்சம் ஏதாவது முனைப்புகளை மேற்கொண்டனவா என்றால் எம்மிடம் இருப்பது வெறும் சுழியமேயாகும். இந்தச் சுழியத்துள் சுற்றியவாறு அழி…

  19. அரசியல்வாதிகள் குட்டையைக் குழப்பாமல் இருப்பது நல்லது முத்துக்குமார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் இனச்சுத்திகரிப்புப் பிரச்சாரம் அவுஸ்ரேலியாவரை தாக்கம் செலுத்தியிருக்கின்றது. புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் கூட்டமொன்றில் அவரை பேசவிடாது தடுத்திருக்கின்றனர். ஜனநாயக ரீதியாக இளைஞர்களின் செயல்பற்றி விமர்சனங்கள் இருந்தாலும், அவர்களிடமிருந்த தேசிய உணர்வை குறைத்து மதிப்பிடமுடியாது. வெறுமனே சுமந்திரனின் கருத்துக்கெதிரான செயல்கள் என்பதாக அல்லாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால போக்குகள் பற்றிய ஒட்டுமொத்த அதிருப்தியின் விளைவு என்றே அதனைக் கூறவேண்டும். எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் இணக்க அரசியலுக்குச் சென்றமை, …

  20. அரசியல்வாதிகள் மீட்பர்கள் இல்லை எம்.எஸ்.எம் ஐயூப் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைக்க, அரசாங்கம் இதுவரை எடுத்த சகல முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. அம்முயற்சிகளை நாம், கடந்த வாரக் கட்டுரையில் பட்டியலிட்டோம். ஆனால், அதன் பின்னரும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும், தேர்தல்களின் போது செலவிடும் பணத்தின் தொகையை கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று, வியாழக்கிழமை (19) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம் இம்முறை, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒத்திப்போடப்படலாம் …

    • 0 replies
    • 856 views
  21. அரசில கட்சிகளும் சூழல் மாசடைதளும் சுற்றுச் சூழலின் மாசடைதல் பற்றி அரசாங்கம் கவலைப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கவலைப்படுகின்றன. பத்திரிகை நிறுவனங்கள் கவலைப்படுகின்றன. நடுத்தெருவில் குப்பை கொட்டி விட்டுப் போகிறவர்களுங் கூடத் தான் கவலைப்படுகிறார்கள். ஆனாலும், என்ன நடந்திருக்கிறது? தோட்டத்துக் குப்பையிலிருந்து உரமும் வேண்டுமானால் எரிபொருளும் தயாரிக்கலாம் என்றும் பொலித்தீன் தாள்களை மீள் சுழற்சி செய்து பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யலாம் என்றும் வீசி எறிகிற ஒவ்வொன்றையும் என்னென்னவெல்லாம் செய்யலாம் என்றும் விஞ்ஞானிகள் என்று சொல்லப்படுகிறவர்கள் முதலாகப் பல்வேறு தகுதிகளையுடையவர்களும் எல்லாவற்றையும் விடப் பெரிய தகுதியான பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகுதி உள்ளவர்கள் வரை எல்லாரும…

    • 1 reply
    • 1.1k views
  22. அரசு தனிவழி. ஈழத்தமிழர் எவ்வழி சிறீலங்காவில், சிறீலங்காப் பொதுஜன பெரமுனவிற்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைத்ததை அடுத்து, அரசு சிங்கள பௌத்த பேரினவாதத்தையே இலங்கைத் தீவின் ஆட்சியாக மாற்றும் தனிவழிப் பயணத்தை அனைத்துலக நாடுகளுக்கோ அமைப்புக்களுக்கோ எவ்வித அச்சமுமின்றித் தொடங்கி விட்டது. ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்று வெளிப்படையாக அரசை நடுநிலையற்றதாக்கும் பிரகடனத்தைச் செய்தும் விட்டது. இந்த ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற பிரகடனம் பொதுவாக சட்டத்தின் ஆட்சியில் சுதந்திரமான நிர்வாகம், சமத்துவமான சட்ட அமுலாக்கம் என்பன உள்ள நிலையில்தான் சட்டப் பாதுகாப்பை அனைவருக்கும் ஏற்படுத்தி வளர்ச்சிகளை வேகப்படுத்தும். ஆனால் சிறீலங்கா தமிழ் இன அழிப்பினை நடாத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.