Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. புவிசார் - அரசியல், புவிசார் - பொருளாதாரம் அமெரிக்க வியூகம்- ரசிய இந்திய உறவில் தாக்கம் செலுத்துமா? ஈழத்தமிழர்களும் தமிழ்நாடும் செய்ய வேண்டியதென்ன? சீனாவுக்கு சார்பான பிறிக்ஸ் மற்றும் சங்காய் ஒத்துழைப்பு மையம் ஆகியவற்றில் அங்கம் வகிக்கும் இந்தியா, தற்போது அமெரிக்காவின் கடும் அழுத்தத்திற்கு முகம் கொடுத்துள்ளது. ரசிய � உக்ரெயன் போர்ச் சூழலில், ரசியாவுக்கு ஆதரவாக இந்தியா செயற்பட்டு வருகின்றது. அதேநேரம் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டுடனும் இந்தியா இயங்குகின்றது. குறிப்பாக இந்தோ - பசுபிக் பிராந்திய விவகாரத்தில் அமெரிக்காவுடன் இந்தியா ஒத்துழைக…

  2. பேச்சுவார்த்தைக்கான நிபுணத்துவ அறிவு கட்சிகளுக்குத் தேவையா ? நிலாந்தன். கடந்த 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பதினோராம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணம் ராஜா க்ரீம் ஹவுஸ் மண்டபத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது.மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கமானது மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழ்த்தேசிய மக்கள்முன்னணி அழைக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவு சுமூகமானது அல்ல. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இது போன்ற ஒருங்கிணைப்பு முயற…

  3. கடந்து செல்லும் கொந்தளிப்பான ஆண்டு - நிலாந்தன் இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் பல மாற்றங்கள் ஒன்றாக நிகழ்ந்து மிகக் கொந்தளிப்பான ஒரு ஆண்டு நம்மைக் கடந்து போகிறது. இந்த ஆண்டில்தான் இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் முப்பொழுதும் ஏற்பட்டிராத ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதற்கு எதிராக சிங்கள மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடினார்கள். அரகலய என்று அழைக்கப்பட்ட அப்போராட்டமானது உலகத்தின் கவனத்தை ஈர்க்குமளவுக்கு படைப்புத்திறன் மிக்கதாக காணப்பட்டது. போரை வெற்றி கொண்ட ஒரு குடும்பம் நாட்டின் கருவூலத்தை திருடிவிட்டது என்று சிங்கள மக்கள் குற்றம்சாட்டினார். போராட்டத்தை ஒடுக்குவதற்கு அக்…

  4. அமெரிக்காவின் புதிய வியூகமும் அடிபணியாத ரஷ்யாவும்

  5. சமூகத்தின் சகல தரப்புகளையும் அரசின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் அரவணைப்பதே உண்மையான நல்லிணக்கம் Photo, Eranga Jayawardena/AP மனித உரிமைகளில் அக்கறைகொண்ட பல அமைப்புகள் கடந்த வாரத்தை பல நிகழ்வுகளை நடத்துவதற்கு அர்ப்பணித்தன. குறிப்பாக, போராட்ட இயக்கம் ஒடுக்கப்பட்ட பிறகு மனித உரிமைகள் சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறிவிட்டது. தேசிய பாதுகாப்புக்கும் உறுதிப்பாட்டுக்கும் முன்னுரிமை கொடுப்பவர்களுக்கும் நீதிக்கு முன்னுரிமை கொடுப்பவர்களுக்கும் இடையே பதற்றம் நிலவிவருகிறது. பொருளாதாரம் சீர்குலைந்துபோன பின்புலத்தில் நீதி தொடர்பான பிரச்சினை முன்னரங்கத்துக்கு வந்திருக்கிறது. பொருளாதார சீர்குலைவு சில பிரிவினரை பெருமளவுக்கு பாதிக்காமல் இருக்கக்கூடும் என்ற போதிலும் சனத்தொக…

  6. ஏமாற்றும் பயண முகவர்களும் கண்டுகொள்ளப்படாத கப்பல் பயணிகளும்

  7. தமிழ்த் தேசிய அரசியல்: ‘தேவையில்லாத ஆணிகள்’ என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஹோம் சைனா’ (சீனா வீட்டுக்குப் போ) என்ற போராட்டத்தை, தான் தலைமையேற்று நடத்தவேண்டி வரும் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கிய ராகுல், பாராளுமன்றத்தில் சூளுரைத்திருக்கிறார். தமிழ்த் தேசிய அரசியலின் முன்னிலைக் கட்சிகளில் ஒன்றான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இன்று ‘மாலுமி இல்லாத கப்பலாக’, கடலில் அலையின் போக்குக்கு ஏற்ப, தன்பாட்டுக்கு மிதந்துகொண்டு நிற்கிறது. ஆளாளுக்கு தனக்குப் பிடித்த திசையில் கப்பலைச் செலுத்த, துடுப்புப் போடும் நிலையில், திக்குத் தெரியாது, கரை தெரியாது, நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது கட்சியும் தமிழ்த் தேசியமும்! கிட்…

  8. எல்லாரும் ஏறிச்சறுக்கிய குதிரையில் சக்கடத்தார்? - நிலாந்தன் இராமநாதன் சகோதரர்களில் இருந்து தொடங்கி சம்பந்தர்கள் வரையிலும் சிங்களத் தலைவர்களிடம் ஏமாந்திருக்கிறார்கள்.கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் அது. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இலங்கைத் தீவு சுதந்திரம் அடைய முன்னும் பின்னும் தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்களோடு நடத்திய பேச்சுவார்த்தைகள்,சந்திப்புகள்,எழுதிய உடன்படிக்கைகள் எதுவுமே வெற்றி பெறவில்லை. ஆயுதப் போராட்டம் கொழும்பின் மீது நிர்ணயகரமான அழுத்தத்தை பிரயோகித்தது. அதனால் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் நிலைத்திருந்த இரண்டு உடன்படிக்கைகள் எழுதப்பட்டன.மூன்றாவது தரப்பொன்று தலையிட வேண்டிய தேவையும் ஏற்பட்டது.இவ்வாறு ஆயுதப் போராட்டத்…

  9. தமிழ் தேசிய அரசியலில் கொள்கை – ஒரு பகிரங்க சவால்? - யதீந்திரா விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் காலமாகி 16 வருடங்களாகின்றன. கடந்த 14ம் திகதி, அவரது பதினாறாது நினைவுதினம். அதற்கு முதல் நாள்தான், தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ரணில் விக்கிரசிங்கவின் சர்வகட்சி கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றியமை தொடர்பில் மாறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. நிபந்தனையுடன் பேசியிருக்க வேண்டுமென்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. சமஸ்டியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே சிங்கள தரப்புடன் பேசவேண்டுமென்று, இன்னொரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. மூன்றாம் தரப்பு இல்லாமல் பேச்சுவார்த்தையி…

  10. ரணில் இந்தியாவை நெருங்கிச் சொல்கிறாரா? நிலாந்தன். ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதை இந்தியா விரும்பவில்லை என்று கருதப்பட்டது. ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பின் பொழுது இந்தியா டளஸ் அழகப்பெரும ஆதரிக்குமாறு கூட்டமைப்பிடம் கேட்டதாக தகவல்கள் வெளிவந்தன.இலங்கைத் தீவு இப்பொழுது முப்பெரும் பேரரசுகளின் இழு விசைகளுக்குள் சிக்கியிருக்கிறது. இன்னிலையில் ஒரு பேரரசை நோக்கி அதிகம் சாயும் ஒரு தலைவர் ஒப்பீட்டளவில் பேரவலம் குறைந்த பலவீனமான ஒரு தலைவராகவே இருப்பார்.அதனால்தான் சீனாவை நோக்கி சாய்ந்த மஹிந்த உள்நாட்டில் ஜனவசியம் மிக்க ஒரு தலைவராக இருந்தார். ஆனால் நாட்டுக்கு வெளியே அவருக்கு அந்த அளவுக்கு அங்கீகாரம் இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டுக்குள் அங்கீகாரம் இப்பொழுதும் இல்லை…

  11. கடந்த காலத்தில் இருந்து விடுபட்டு புதிய வழியில் பிரச்சினைகளை கையாள ஒரு வாய்ப்பு Photo, ECONOMYNEXT 2023 பட்ஜெட் கணிசமான பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேறியமை பாதகமான சூழ்நிலைக்கு மத்தியிலும் அரசாங்கத்தின் நாடாளுமன்ற பெரும்பான்மை உறுதியாக இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது. ஆளும் கட்சி இருபதுக்கும் அதிகமான அதன் உறுப்பினர்களை இழந்துவிட்டது. அவர்கள் இப்போது கட்சியின் நிலைப்பாடுகளை பின்பற்றுவதில்லை. ஏனைய உறுப்பினர்கள், தெளிவான தலைமைத்துவம் இல்லாவிட்டாலும் கூட ஒன்றிணைந்து நிற்கிறார்கள் போன்று தெரிகிறது. பிரிந்துசென்ற குழுக்களில் ஒன்றுக்கு தலைமைதாங்கும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆளும் கட்சி உறுப்பினர்களை கடுமையாக கண்டனம் செய்தார். எந்த ஆணை மீது கடந்த நாட…

  12. https://www.koormai.com/pathivu.html?therivu=2448&vakai=5&fbclid=IwAR0m1zWUvXeFCm4XHM8wrPzEqTKbwUASjJq6ZG0rUXm9wW5Z8gHzJAZFgXA ஜெனீவா மனித உரிமைச் சபையின் மார்ச் மாத அமர்வு ஆரம்பமாவதற்கு இன்னமும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், இலங்கை தொடர்பாக ஆணையாளர் தயாரிக்கவுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டு மேலதிக முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையிலேதான், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி மாநாட்டை நடத்தியிருக்கிறார். ஈழத்தமிழர் விவகாரத்தை ஒட்டுமொத்த இலங்கை மக்களின் மனித உரிமைப் பிரச்சினையாக 2015 இல் ரணில் மடைமாற்றியிருந்தார். தற்போது ரணில் முழு அதிகாரம் படைத்த ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், 2015 இ…

  13. அரசியல் ஆய்வாளர் நிக்ஸன் எப்போதும் கட்சி பேதமில்லாமல் எவரென்றாலும் முகத்துக்கு நேரே பழிச் சென்று உண்மை நிலையை சொல்லக் கூடியவர். நேரமிருப்பின் இதையும் கேளுங்கள்.

  14. ஊழல் என்பது இலங்கை அரசியலில் புற்றுநோயாக மாறியுள்ளது - கலாநிதி ஜயதேவ உயன்கொட By NANTHINI 15 DEC, 2022 | 10:51 AM (ஆர்.ராம்) இலங்கையின் அரசியலில் ஊழல் புற்றுநோயாக உருவெடுத்துள்ளதோடு, அது ஜனநாயக கட்டமைப்புக்களையும் வெகுவாக தாக்கியுள்ளது என்று கலாநிதி ஜயதேவ உயன்கொட தெரிவித்தார். இலங்கையில் ஊழலுக்கு எதிராக போராடி வரும் ட்ரான்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அமைப்பின் இரு தசாப்த நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஊழலுக்கு எதிரான தேசிய மாநாடு நேற்று புதன்கிழமை (டிச. 14) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் ம…

  15. சர்வதேச மனித உரிமை பிரகடனம் இலங்கையில் தாக்கம் செலுத்தியிருக்கிறதா? Posted on December 13, 2022 by தென்னவள் 22 0 ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு அக்கறையுள்ள எவருக்கும், எழுபத்து நான்கு வருடங்கள் குறுகிய காலம் அல்ல! வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இலங்கையின் ஆட்சியாளர்கள், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு மேலாக தமிழர்களையும், சர்வதேச சமூகத்தையும் முட்டாளாக்குவதற்கான வழிகளை மட்டுமே தேடுகிறார்கள் என்பதே யதார்த்தம்-உண்மை. உலகெங்கிலும் உள்ள கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்துவதற்கான போராட்டங்களுக்கு எதிரான ஒடுக்குமுறையாகும். சர்வதேச மனித உரிம…

    • 0 replies
    • 378 views
  16. எப்போது மீண்டு வரப் போகிறது இலங்கை? 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், தொற்றுநோய்ப் பரவலின் முடிவானது துயரத்தின் முடிவைக் குறிக்காது என்று இலங்கையர்கள் எவரும் நினைத்திருக்க மாட்டார்கள், எனினும் இலங்கையர்கள் அறியாத வடிவங்களில் வரும் துயரத்தின் வருகையை அது சமிக்ஞை செய்தது. இந்தவருடத்தின் ஆரம்பத்தில், சுற்றுலா, தேயிலை உற்பத்தி, அதிக கல்வியறிவு கொண்ட இலங்கை, 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் தொடங்கி, இலங்கையின் முதுகெலும்பைத் தாக்கிய தொடர் சம்பவங்களில் இருந்து நாடு இன்னும் மீளாத நிலையில், தொற்றுநோய் பேரழிவு தாக்குதலில் ஈடுபட்டு, சுற்றுலாவை அழித்தது. பொருளாதாரத்தின் கடுமையான வீழ்…

  17. தமிழருக்கு தீர்வு வருகிறதாம்-பா.உதயன் தமிழருக்கு தீர்வு தருவேன் என்றான் ஒருவன். அதுவெல்லாம் முடியாது என்றான் இன்னொருவன். பின்பு முடியாது என்றவன் தீர்வு தருவேன் என்றான். முன்பு முதல் முடியும் என்றவன் இப்போ முடியாது என்றான். அவனிடமும் இவனிடமும் மாறி மாறி கதைத்து ஏமாந்தது தான் மிச்சம். சமஸ்டி தீர்வு என்று கதைத்தாலே சத்தி வருகிறது என்கிறார்கள் பெளத்தத் துறவியார் கூட. கொடுத்தால் பிறகு எல்லாம் நாட்டை பிரித்து எடுத்து விடுவார்களாம். மாகாணசபைக்கு கொஞ்சம் கொடுத்து மடக்க நினைக்கிறார் ரணில். பெரிய நரியார் இவர் ஆச்சே கதையால் எல்லாம் மடக்குவார். 13 ம் திருத்தம் கூட இந்தியா திணித்த தீர்வாம் பாதி உடைஞ்சு போச்சாம் பழைய கதையாய் ஆச்சாம் கிடப்பில இப்போ கிடக்காம். இனி என்ன நடக…

  18. மொரோக்கோவும் போர்த்துக்கலும் இலங்கை சோனகராகிய நாமும். இலங்கை முஸ்லிம்களின் இன உருவாக்கத்தின் சிக்கலான வரலாற்றுப் பின்னணியை சமூக கலாச்சார மற்றும் அரசியல் அம்சங்களுடன் விரிவாக விளங்கிக்கொள்தல் எமக்கும் மொரோக்கோவிற்கும் போர்த்துக்கலுக்குமான தொடர்பை ஓரளவு விபரிக்கும் என நம்பலாம். மூர் என்ற பெயரின் சொற்பிறப்பியல் தோற்றம் உலகளவில் அறியப்படுகிறது. இது லத்தீன் மூலமான மவுரியிலிருந்து வந்தது. இன்றைய மேற்கு அல்ஜீரியா மற்றும் வடகிழக்கு மொராக்கோவை உள்ளடக்கிய ரோமானிய மாகாணமான மவுரேட்டானியாவில் வசிப்பவர்களின் சந்ததியினரே உலகெங்கும் மூர் என முதலில் அழைக்கப்பட்டனர். இலங்கையைப் பற்றிய போர்த்துகீசிய வரலாற்றாசிரியர், ஃபெர்னாவோ டி குய்ரோஸ்(Portuguese …

  19. பேச்சுக்கான முஸ்தீபு மும்முரம்? December 12, 2022 — கருணாகரன் — எதிர்பார்க்கப்பட்டதற்கும் மாறாக அடுத்த சில தினங்களில் அதிகாரப்பகிர்வுக்கான பேச்சுகள் நடப்பதற்கான சூழல் கனிந்துள்ளது போலிருக்கு. தமிழ்த் தரப்பிலும் இதற்கான கவனம் ஏற்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகள் இதைப் பற்றிக் கூடிப் பேசுவது, பேச்சுகள் குறித்துப் பொதுவெளியில் உரையாடுவது, பொறிமுறைகளைப் பற்றிச் சிந்திப்பது என்று பச்சைக் கொடி காட்டியுள்ளன. ரெலோ இதில் இன்னும் முன்னுக்கு வந்து இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக – பேச்சுக்கு செல்லும்போது நாம் ஒரு பொறிமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று ரெலோவின் பேச்சாளரான சுரேந்திரன் கேட்டுள்ளார். “ஐ.நா.…

  20. தமிழர்களை ஆதரிக்குமா இந்தியா ? By Digital Desk 2 11 Dec, 2022 | 02:44 PM (என்.கண்ணன்) “இலங்கையில் தமிழர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா விரும்பினாலும், தமிழர்களின் பக்கம் மட்டுமே அது நிற்கும் என்றில்லை” “சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து இந்தியாவினதும், மக்களினதும் நலன்களை உறுதி செய்வதாயின், இலங்கையில் எந்த தரப்பையும் முன்னிலைப்படுத்தக் கூடாது என்று கருதுகிறது இந்தியா” இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த புதன்கிழமை ராஜ்ய சபாவில் உரை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். அவரது அந்த உரை, இந்தியாவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.