அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
நெம்புகோல் தத்துவத்தை புரிந்து கொள்ளுமா கூட்டமைப்பு…? வசந்தன்- ஒரு சதாப்த காலமாக நடைபெற்று வரும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான தீர்வாக அவ்வப்போது இரு தரப்புக்கும் இடையில் உடனபடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு பின்னர் அதது சிங்கள பெரும்பான்மையினரால் கிழித்தெறியப்பட்மையே வரலாறு. ஒரு கட்டத்தில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக முழுமையாக தீர்வு இல்லாவிட்டாலும் தமிழ் தேசிய இனத்தின் தாயகக் கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டு இணைந்த வடக்கு, கிழக்கில் ஒரு மாகாணசபையும் உருவாக்கப்பட்டது. சிங்கள தேசியம் இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தையும் சீர்குலைப்பதில் முனைப்பு காட்டி அதில் வெற்றியும் பெற்றது. அதன்பின்னர் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்…
-
- 0 replies
- 621 views
-
-
ஜெனிவாத் தீர்மானத்தின் முதல் வரைவும் தமிழர்களும் - நிலாந்தன்:- 16 மார்ச் 2014 உத்தேச ஜெனிவாத் தீர்மானத்தின் முதல் வரைவு வெளிவந்துவிட்டது. அது தொடர்பான பிரதிபலிப்புக்களை உற்று நோக்கின் ஒரு முக்கியமான போக்கினை அடையாளங்காண முடியும். தமிழர்கள், சிங்களவர்கள் ஆகிய இரண்டு தரப்புமே அதை எதிர்க்கின்றன. சிங்கள மக்கள் அதை மேற்கின் மிரட்டல் என்று எதிர்க்கிறார்கள். தமிழர்களோ தாங்கள் நம்ப வைக்கப்பட்டு ஏமாற்றுப்பட்டுவிட்டதாக கருதி எதிர்க்கிறார்கள். குறிப்பாக, டயஸ்பொறாவிலும் தமிழகத்திலும் நடந்து கொண்டிருப்பவற்றின் அடிப்படையிற் கூறின் இம்முறை ஜெனிவாத் தீர்மான வரைவுக்கு எதிரான பிரதிபலிப்புக்கள் ஒப்பீட்டளவில் தமிழ்ப் பரப்பில்தான் அதிகமாகக் காணப்படுகின்றன எனலாம். ஒன்றில் அமெர…
-
- 1 reply
- 438 views
-
-
நாட்டின் பொருளாதார நெருக்கடி சமூக சீரழிவுக்கு வித்திடும் புருஜோத்தமன் தங்கமயில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்ட புதிய அமைச்சரவை, பகுதி பகுதியாக இன்னமும் பதவியேற்று வருகின்றது. புதிய அரசாங்கத்தை, ‘சர்வகட்சி அரசாங்கம்’ என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்மொழிகிறார்கள். ஆனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி போன்ற கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு எதிராக, அக்கட்சிகளின் உறுப்பினர்களைப் பிரித்தெடுத்து அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதன் மூலம், அது எப்படி சர்வகட்சி அரசாங்கம் ஆக இருக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கேள்வி எழுப்புகின்றன. கோட்டா பதவி விலகினால் …
-
- 4 replies
- 375 views
-
-
பொலிஸாகும் பொது பலசேனா - செல்வரட்னம் சிறிதரன்:- 26 ஏப்ரல் 2014 நாட்டில் யுத்தம் முடிவடைந்துள்ளது என்று சொல்லப்படுகின்றது. உண்மையில் துப்பாக்கிச் சண்டைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனவே தவிர, மோதல்கள் இன்னும் தொடரத்தான் செய்கின்றன. சத்தமின்றி, கத்தியின்றி இந்த மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதிகார பலம் என்ற ஆயுதமும், பெரும்பான்மை என்ற பலமும் இந்த மோதல்களில் தாரளமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் சிறுபான்மையினராக இருக்கின்ற மக்களும், சிறுபான்மை மதத்தவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். நாட்டில் சட்டங்கள் இருக்கின்றன. ஒழுங்கு விதிகள் இருக்கின்றன. சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுவதாகவும், அதற்குப் பொறுப்பாக பொலிசாரும், பொலிசாருக்கு உதவியாக இரா…
-
- 0 replies
- 464 views
-
-
-கே.சஞ்சயன் தமிழ்நாட்டில் தணிந்து போய்க்கிடந்த இலங்கை அரசுக்கு எதிரான உணர்வலைகள், இப்போது மீண்டும் கொதி நிலைக்கு வந்திருக்கின்றன. இதற்கு, இலங்கைத் தமிழர் பிரச்சினையோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களோ காரணமல்ல. இலங்கை பாதுகாப்பு அமைச்சே இந்த பிரச்சினையை உருவாக்கி விட்டது. எங்கோ சிறகடித்துப் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய - இலங்கை உறவுகளுக்கு கடிவாளம் போட்டு அடக்கி விடும் சூழலை பாதுகாப்பு அமைச்சே ஏற்படுத்தி விட்டது. ஒரு வகையில் சொல்லப் போனால், இதனை யானை தன் தலையில் மண்ணை வாரியது போல என்று கூறலாம். ஏனென்றால், புதுடெல்லியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அமைந்த நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கம், கொழும்புக்குச் சாதகமான உற்சாகத்தை ஏற்படுத்தத்தக்க …
-
- 2 replies
- 1.1k views
-
-
கண்களை குத்திக்கொண்ட அதிகாரம் – ஏமாற்றப்பட்ட காரைநகர் சுயேட்சைக் குழு – நிலாந்தன்…. கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காரைநகரில் ஒரு சுயேட்சைக் குழு மீன் சின்னத்தில் போட்டியிட்டது. விழிம்புநிலை மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய மேற்படி சுயேட்சைக் குழு பெரிய கட்சிகள் எதனோடும் சேர்ந்து போட்டியிடத் தயாராக இருக்கவில்லை. பெரிய கட்சிகள் கடந்த காலங்களில் தமது மக்களின் குறைகளைத் தீர்க்கவில்லை என்றும் குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள் கூடப் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் இச் சுயேட்சைக் குழு குற்றம் சாட்டியது. தேர்தலில் இக் குழுவிற்கு மூன்று ஆசனங்கள் கிடைத்தன. கூட்டமைப்புக்கும் மூன்று ஆசனங்கள் கிடைத்தன. ஏனைய கட்சிகள் அதை விட குறைவாகப் பெற்றன. யாருக்…
-
- 0 replies
- 329 views
-
-
அதிகாரத்தை பகிர மறுப்பது தமிழீழத்திற்கு வழிவகுக்குமா? வட மாகாண சபை - இன்றுடன் ஒருவருடம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:- வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் ஆட்சி அமைத்து இன்றுடன் ஒரு வருடமாகின்றது. வட மாகாண சபையுடன் இனப்பிரச்சினையை முடக்கி விடலாம் என எதிர்ப்பார்த்த இலங்கை அரசின் எண்ணம் ஈடேறவில்லை. இலங்கை இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்கும் முகமாக இலங்கை அந்திய ஒப்பந்தத்தின்படி 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டு மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்று அமைக்கப்பட்ட ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் 25 வருடங்களின் பின்னர் பிரிக்கப்பட்ட வடக்கு மாகாண சபைக்கான…
-
- 0 replies
- 413 views
-
-
இராணுவத்தினர் மீதான முதலமைச்சரின் குற்றச்சாட்டும் யதார்த்த நிலையும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இராணுவத்தினரின் ஆதிக்கம் தொடர்ந்து வருவதாக பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். படையினர் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடுவதாகவும் வியாபார செயற்பாடுகளிலும் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது. அப்பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான பெருமளவான நிலங்களில் படையினர் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதுடன் ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இராணுவத்தினரின் இத்த…
-
- 0 replies
- 457 views
-
-
அரசியல்வாதிகள் மீட்பர்கள் இல்லை எம்.எஸ்.எம் ஐயூப் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைக்க, அரசாங்கம் இதுவரை எடுத்த சகல முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. அம்முயற்சிகளை நாம், கடந்த வாரக் கட்டுரையில் பட்டியலிட்டோம். ஆனால், அதன் பின்னரும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும், தேர்தல்களின் போது செலவிடும் பணத்தின் தொகையை கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று, வியாழக்கிழமை (19) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம் இம்முறை, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒத்திப்போடப்படலாம் …
-
- 0 replies
- 858 views
-
-
யாழ் கலாச்சார மையம் யாருடைய பொறுப்பில்? நிலாந்தன். கொழும்பில் ஆயிரக்கணக்கான பிக்குகள் திரண்டு 13வது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். அத்திருத்தத்தின் பிரதியை நெருப்பில் கொளுத்தியிருக்கிறார்கள். 13 ஆவது திருத்தம் தொடர்பான ரணில் விக்கிரமசிங்காவின் நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைக்குமாறு கூறி அவருக்கு இரண்டு கிழமைகள் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க 13ஐ முழுமையாக அமல்படுத்த போவதில்லை. கடந்த புதன் கிழமை நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய கொள்கை விளக்க உரையில் அது தெரிகிறது. குறிப்பாக போலீஸ் அதிகாரம் தொடர்பில் அவர் தெளிவற்ற வார்த்தைகளில் கதைக்கிறார். இப்பொழுதுள்ள போலீஸ் நிர்வாக கட்டமைப்பின்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு டிஐஜி…
-
- 0 replies
- 734 views
-
-
சம்பந்தன் பேசும் தேர்தல் ஒற்றுமையும் விக்கினேஸ்வரன் பேசும் கொள்கைசார் ஒற்றுமையும் எது தமிழ் மக்களுக்குத் தேவையானது ? யதீந்திரா கடந்த 24ஆம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நூல் வெளியீடும், அங்கு இடம்பெற்ற உரைகளும் தமிழ் தேசிய அரசியல் அரங்கில் அதிக கவனிப்பை பெற்றிருந்தது. வழக்கத்துக்கு மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து தலைவர்களும் இந்த நூல் வெளியீட்டில் பங்குகொண்டிருந்தனர். இதில் கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் இரா.சம்பந்தன் சிறப்பு விருந்தினராக பங்குபற்றியிருந்தார். சம்பந்தன் நிகழ்வில் பங்கு பற்றியது அத்துடன், விக்கினேஸ்வரனை எவ்வாறாயினும் அரசியலிலிருந்து ஓரங்கட்ட வேண்டுமென்னும…
-
- 0 replies
- 451 views
-
-
ஜூலை 83 தமிழின அழிப்பு: 40 ஆண்டுகளின் பின்னரும் கூட அதற்கு வழிகோலிய மூல காரணங்கள் இன்னும் கவனத்தில் எடுக்கப்படவில்லை Photo, SRILANKA GUARDIAN 2023 ஜூலை 23ஆம் திகதி 1983 ஜூலை இன அழிப்பின் 40ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது. இந்த இன அழிப்பு இலங்கையின் வரலாற்றில் அழியாத ஒரு கறையை விட்டுச் சென்றிருக்கிறது. இந்த இருண்ட அத்தியாயம் நமது தேசத்தின் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட யுகத்தின் பூதாகரமான ஒரு நிழலாக வியாபித்திருப்பதுடன், அதனையடுத்து இடம்பெற்ற நீண்ட உள்நாட்டுப் போரில் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தை வகித்தது. இந்த வன்முறைக்கான விதைகள் நீண்ட காலத்துக்கு முன்னரேயே விதைக்கப்பட்டிருந்தன. 1956, 1958, 1961, 1964, 1974, 1977 மற்றும் 1981 ஆகிய வருடங்களையும் உள்ளடக்கிய…
-
- 0 replies
- 315 views
-
-
ரணிலிடம் சிக்கி சின்னாபின்னமாகப் போகும் தமிழர் அரசியல்...! இலங்கைத் தமிழனினம் இன்று அரசியல் அநாதையாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது வரலாற்றில் பதியப்படுவது ஒன்றும் புதிதானதன்று. வரலாற்றுக் காலம் தொட்டே இந்த நிலமை ஏற்பட்டுள்ளமையை நினைவுபடுத்திக் கொள்ளலாம். இலங்கையின் பகுதி முழுவதையும் தமது கட்டுபாட்டில் வைத்திருந்தனர் இயக்கர் நாகர்கள். இவர்கள் ஈழ தேசத்தின் சொந்தக்காரர்களாக, பூர்வீக குடிகளாக நாடு முழுவதிலும் பரந்து வாழ்ந்து வந்தனர். குவேனியை ஆரிய இளவரசன் மணந்து கொண்டு இலங்கை ஆட்சி உரிமையை பெற்றுக்கொண்டதில் இருந்து தொடங்கிற்று தமிழர்களின் அழிவு அரசியல். இந்தியாவில் இருந்து விரட்டப்பட்ட இளவரசன் விஐயன் எவ்வாறு தந்திரமாக இலங்கை அரசு உரிமையைப் குவேனியிடமிரு…
-
- 1 reply
- 503 views
-
-
அரசாங்கம் வீழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ஏன் சொன்னார்? அரசாங்கம் வீழ்ச்சி அடைகிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருக்கக் கூடிய ஒருவர், தனது அரசாங்கம் வீழ்ச்சியடைகிறது எனக் கூறியதற்குள் அவரின் இயலாமை தெரிகிறதா? அல்லது தேசிய அரசாங்கம் என்பது ஒருபோதும் சாத்தியமற்றது என்பதைக் குறிக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது. கூடவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் போக்கு ஆளுமையற்றது என்பதைச் சொல்லாமல் சொல்வதற்காக அரசு கீழ் இறங்கிப் போகின்றது என்ற வார்த்தையை ஜனாதிபதி மைத்திரி பிரயோகித்தாரா? என்றெல்லாம் எண்ணத்தோன்றும். எதுவாயினும் மகிந்த ராஜபக் இருந்த கதிரையில் இன்னொருவர் இருப்பதாக இருந்தால், அவர் மகிந்தவைவிட மிகவும் வல்லமை பொருந்தியவராக, அதிரடியான …
-
- 1 reply
- 349 views
-
-
ஓரு உள்நாட்டு யுத்தத்திற்கு பின்னரான அரசியல் தீர்வு முயற்சி ஏன் இந்தளவு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது? யதீந்திரா புதிய அரசியல் யாப்பு ஒன்று வரவுள்ளது என்னும் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றன. ஆனால் இன்றைய தென்னிலங்கை அரசியல் நிலைமைகள் ஒரு விடயத்தை தெளிவாக நிரூபித்துவிட்டது. அதாவது, அவ்வாறானதொரு அரசியல் யாப்பு ஒன்று வரப்போவதில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான நிபுனர் குழு அறிக்கையொன்று வெளியாகியிருக்கிறது. இதனை தாம் நிராகரிப்பதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் பிறிதொரு பங்காளிக் கட்சியியான புளொட்டின் தலைவர் சித்தார்த்தனோ, பல்வேறு சந்தர்ப்பங்களில், புதிய …
-
- 0 replies
- 619 views
-
-
கந்தையா அருந்தவபாலன் இலங்கை மக்களுக்கு வளமான வாழ்வையும் அழகான நாட்டையும் தருவதாக வாக்குறுதியளித்த அனுரகுமார திசநாயகவை இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நாட்டு மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். ஜனாதிபதியாக பதவியேற்ற அனுர தானும், தனது கட்சிக்கு நாடாளுமன்றத்திலிருந்த மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து அமைச்சுப் பொறுப்புகளைப் பகிர்ந்த பின் நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆந் திகதி தேர்தல் நடைபெறவிருப்பதுடன், 21 ஆந் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் சட்டவாக்கத்துறையான நாடா…
-
- 0 replies
- 408 views
- 1 follower
-
-
அரசியல்வாதி கோட்டாவின் அவலம் கே. சஞ்சயன் / 2019 ஓகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:29 Comments - 0 சிறுபான்மையினரின் ஆதரவு இன்றி, சிங்களவர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று, சில ஆண்டுகளாகக் கூறிவந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டதும், பதற்றமடைந்து போயிருக்கிறார். அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனை, அழைத்துப் பேசியிருந்தார் கோட்டாபய ராஜபக்ஷ. இந்தச் சந்திப்புத் தொடர்பாக, அரசல்புரசலாகத் தகவல்கள் வெளியானதும் சித்தார்த்தன், ஊடகங்களிடம் உண்மையைக் கக்கினார். அதில், “தமிழ் மக்களின்…
-
- 0 replies
- 537 views
-
-
இலங்கை- கண்ணால் காண்பதும் பொய் – இரா. முருகவேள் அக்டோபர் 2024 - Uyirmmai Media · அரசியல் இலங்கை சிவந்தது. மார்க்சீயவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டனர். இலங்கை ஒரு மார்க்சீய சார்பு கொண்ட ஜனாதிபதியைத் தேர்தெடுத்துள்ளது. புதிய ஜனாதிபதி சே குவேராவால் உத்வேகமூட்டப்பட்டவர் என்றெல்லாம் இந்திய, பன்னாட்டு ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு செய்தி வெளியிட்டன. ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட இடதுசாரி அமைப்பு தேர்தலில் நின்று வெற்றி கண்டது சிறப்பானது என்று இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட் ) தோழர்கள் கொண்டாடினர். இவையெல்லாம் முழுவதும் பொய் என்று சொல்லிவிட முடியாது. ஜேவிபி ஒரு சோஷலிச இலங்கையை உருவாக்கத்தான் தோற்றுவிக்கப்பட்டது. இலங்கை இடதுசாரிகள் போதுமான அளவுக்கு…
-
- 1 reply
- 385 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள் Editorial / 2019 ஓகஸ்ட் 22 வியாழக்கிழமை, பி.ப. 01:04 Comments - 0 -இலட்சுணனன் லங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கருத்தாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வேளையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தனது வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ எனப் பெயரிட்டுள்ளது. இச்சூழலில், மக்கள் விடுதலை முன்னணியும் தனது வேட்பாளர் அநுரகுமார எனப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள், தான்தான் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக, அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துக்கொண்டு, அக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்களின் ஆதரவுடனும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் கணிசமான ஆதரவுடனும், தன் பாணியின…
-
- 0 replies
- 449 views
-
-
வாய்ப்பு தவறுமா?: உச்சமடைந்திருக்கும் தேர்தல் காய்ச்சல்..! ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேற்குலக ஆதரவு அதிகம் இருக்கிறது, சிறுபான்மையின கட்சிகள் மத்தியிலும் ஓரளவுக்கு ஆதரவு உள்ளது, ஆனால் பிரதான வாக்கு வங்கியாக உள்ள சிங்கள பௌத்த வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கு குறைவானவர். ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல் காய்ச்சல் உச்சமடைந்திருக்கிறது. இந்த நிலையில், கோத்தாபய ராஜபக் ஷவை எதிர்த்துப் போட்டியிடப் போகும் பிரதான வேட்பாளர் யார் என்பதே, இப்போது முதன்மையானதும் பிரதானமானதுமான கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால், ஐக்கிய தேசியக் கட்சிக்குள், ஜ…
-
- 0 replies
- 732 views
-
-
தமிழ் அரசியலில்13வது திருத்தமும், அதற்கு அப்பாலும் …..?(பகுதி 1) January 28, 2025 — வி.சிவலிங்கம் — சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கம் அவர்கள் ’13வது திருத்தத்தினை தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?’ எனக் கேள்வி எழுப்பி கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருந்தார். இக் கட்டுரை இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னதான நிகழ்வுகளின் பின்னணியில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலமைகளைக் கருத்தில் கொண்டு வரையப்பட்டிருந்தது. குறிப்பாக, 13வது திருத்தம் தொடர்பாக வழமையாக இந்திய தரப்பினர் அதனை நடைமுறைப்படுத்துவதை வற்புறுத்துவது வழக்கம். ஆனால் இம்முறை வழக்கிற்கு மாறாக தற்போதைய அரசியல் யாப்பின் உள்ளடக்கத்தினை நடைமுறைப்படுத்துமாறு கோரியிருப்பதும் அது தொடர்பாக …
-
- 2 replies
- 431 views
-
-
1949 முழுமையாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த திருகோணமலை மாவட்டத்துக்கு வருகிறார் பிரதமர் டி.எஸ். சேனநாயக்க. அரச மரம் ஒன்றை நாட்டி வைத்த பின்பு திட்டமிட்டுக் குடியேற்றப்பட்டிருந்த சிங்கள மக்கள் மத்தியில் பேசுகிறார் அவர், “இந்த மரம் வளர்ந்து பெருவிருட்சம் ஆகும்போது நீங்கள் (சிங்களவர்) மட்டும்தான் இந்தப் பகுதியில் இருக்க வேண்டும்”, என்கிறார். தமிழர் தாயகத்துக்குள் அத்துமீறி நுழைந்த முதல் குடியேற்றத்திட்டம் இதுதான். சிறுபான்மை இனத்தவராக கிழக்கு மாகாணத்தில் இருந்த சிங்களவர்கள்தான் இன்று பெரும்பான்மையினர். பெரும்பான்மையினராக இருந்த தமிழினம் வீழ்ச்சியை சந்தித்து மூன்றாவது சிறபான்மை இனமாக மாறிவிட்டது. சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் கைகளில் ஆட்சிப் பீடம் சென்றதுமே சிறுபான்…
-
- 2 replies
- 943 views
-
-
படைமய சூழலுக்குப் பழக்கப்படுதல் கே. சஞ்சயன் / 2020 ஜூன் 05 கொரோனா வைரஸ் தொற்றால், கடந்த மூன்று மாதங்களாக, உலகளாவிய ரீதியாகப் பொருளாதார உற்பத்திகள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், புதிய அச்சுறுத்தல் ஒன்று, வெட்டுக்கிளிகளின் வடிவத்தில் வந்திருக்கிறது. சோமாலியா, எதியோப்பியா போன்ற ஆபிரிக்க நாடுகளில், வெட்டுக்கிளிகள் பயிர்களுக்குப் பேரழிவுகளை ஏற்படுத்துவது வழக்கம். உள்நாட்டுப் போர், வறுமை, பொருளாதார வளமின்மை போன்ற காரணிகளால், இந்த நாடுகள் பலமான உணவுப் பாதுகாப்புக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதில்லை. இதனால், இங்கு வெட்டுக்கிளிகள் கட்டுக்கடங்காமல் பரவுகின்றன. இந்த வெட்டுக்கிளிகள், அவ்வப்போது உலகத்துக்கே அச்சுறுத்தலாகவும் மாறுகின்றன. ஒரு நாளைக்கு 150 கி.மீ வ…
-
- 0 replies
- 445 views
-
-
காக்கா எச்சமா, காக்கைக் கூடா? காரை துர்க்கா / 2020 ஜூன் 16 பருத்தித்துறைக் கடலில், சிறப்புப் பூஜைகள் நடத்தி, வெளி மாவட்ட மீனவர்கள், கடலட்டை பிடிக்க ஆரம்பித்து உள்ளனர். திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நீலியம்மன் ஆலயம் அழிக்கப்பட்டு, அவ்விடத்தில் விகாரை அமைக்கப்பட்டு, அதற்குப் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டு உள்ளதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இவை, கடந்த வாரப் பத்திரிகைச் செய்திகள் ஆகும். தமிழர் ஒருவர், கொழும்பில் மத்திய அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராக இருந்த போதிலும், வெளி மாவட்ட மீனவர்கள், தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிக் கடற்றொழில் செய்வதைத் தடுக்க முடியவில்லை. அடுத்து, அந்நியர் ஆட்சிக் காலத்தில் கூட…
-
- 0 replies
- 515 views
-
-
கடந்த புதன்கிழமை அலரிமாளிகையில் அமைச்சரவை கூட்டம் முறையாக ஆரம்பமாவதற்கு முன் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணை தொடர்பான விடயங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி அமைச்சர்கள் ஆராய்ந்தார்கள். சட்டத்தரணிகள் சங்கத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவிருந்தது தொடர்பாக அமைச்சர்கள் தம் கவனத்தை முதலில் செலுத்தினார்கள். குற்றப் பிரேரணையை எதிர்ப்பதற்கு மேற்கொண்டும் எடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து அந்தக் கூட்டத்தில் சட்டத்தரணிகள் ஆராய்ந்தார்கள். அதில் ஒரு தீர்மானம் புதிதாக பிரதம நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரை வரவேற்பதில்லை என்பதாகும். நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களும் வருமாறு: * பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை தொட…
-
- 1 reply
- 584 views
-