அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
இலங்கை ஒற்றையாட்சியை நிலை நிறுத்தும் ஏமாற்றுவித்தைகளாக அரங்கேறும் ஒரே குப்பையில் ஊறிய மட்டைகளே இந்திய-இலங்கை ஒப்பந்தமும் 13 ஆவது திருத்தமும் தேசிய இனம் என்ற அங்கீகாரத்தைக் குறைத்து பல்லினச் சமூகங்களாக்கும் முயற்சி இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஈழத்தமிழர் தேசத்தின் பாரம்பரியத் தாயகமாக ஒன்றிணைந்த வடக்கு கிழக்கை நேர்த்தியாக அங்கீகரிக்கவில்லை. வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழிடம் என்று மட்டுப்படுத்தப்பட்ட ஒரு கோட்பாட்டையே முன்வைத்தது. கிழக்கில் மட்டும் நிரந்தர இணைப்புக்கான பொதுவாக்கெடுப்பு என்று தமிழ்த் தேசத்தின் நிலவொருமைப்பாட்டைச் சிக்கலுக்குள்ளாக்கியது. அந்த ஒப்பந்தம் 'பல்லின சமூகம்' என்ற சொற்பிரயோகத்தைக் கையாண்டிருப்பதில் ஏதோ விடயம்…
-
- 0 replies
- 327 views
-
-
2022ம் ஆண்டு தரும் புதிய நோக்கு January 1, 2022 — வி. சிவலிங்கம் — நாம் இப்போது கடந்து செல்லும் 2021ம் ஆண்டு உலக மக்களின் வாழ்வில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திச் செல்கிறது. கொரொனா நோயின் தாக்கத்தினை மட்டுமல்ல, பொருளாதார அடிப்படைகளில் பாரிய வெற்றி பெற்றதாக மார்பு தட்டிய பல அரசுகள் தத்தமது பொருளாதாரக் கட்டுமானங்களை மாற்றி அமைக்கும் கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. கொரொனா நோயின் தாக்கம் பொருளாதாரக் கட்டுமானங்களின் பலவீனங்களை மிகத் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளது. உதாரணமாக அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் சுகாதாரத்துறையின் சீர்கேடுகள் காரணமாக மிக அதிக அளவிலான மக்கள் மரணமடைந்தார்கள். இம் மரணத்தில் அகப்பட்டோரில் பலர் பொருளாதார அடிப்படையில் சமூகத்த…
-
- 1 reply
- 380 views
-
-
புத்தாண்டில் இலங்கைக்கு மனமாற்றம் தேவை மக்கள் இன்று மௌனமாக இருக்கலாம் ஆனால் அவர்கள் அறியாதவர்கள் அல்ல மேலும் பல பேரரசுகளும் (மற்றும் அரசாங்கங்களும்) தண்டனைவிலக்கீடும் ஊழலும் எல்லை மீறிச்செல்லும்போது வீழ்ச்சியடைந்துள்ளன. 00000000000 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறும் விவகாரத்தை சாதாரணமாக பார்ப்பது தண்டனைவிலக்கீட்டிற்கு மற்றொரு உதாரணம். கடந்த சில மாதங்களில் மக்கள் தங்கள் சமையல் தேவைக்காக பயன்படுத்திய 800 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியுள்ளன. மூன்று சிறு பிள்ளைகளின் தாய் உட்பட குறைந்தது ஏழு பேர் பலியாகியுள்ளனர் 000000000000000000 ஜெஹான் பெரேரா 00000000000000000 நாட்டை சீரமைப்பதற்கு சில வருடங்கள் இலங்கை இராணுவத்தினர் தேசத்தை …
-
- 0 replies
- 257 views
-
-
இலங்கை தனது எரிசக்தி தொடர்பான இறைமையை இழக்கப்போகின்றது – முன்னிலை சோசலிஸ கட்சி ———- திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் என்ன இடம்பெறுவது என்ன? ———– Oil Tank Farm இலங்கை எரிசக்தி தொடர்பான தனது சொத்துக்களை தொடர்ந்தும் தனியார்களிற்கு விற்பனை செய்து வருவதால் இலங்கை எரிசக்தி தொடர்பான தனது இறைமையை இழக்கும் என முன்னிலை சோசலிச கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. திருகோணமலையின் 99 எண்ணெய் குதங்கள் தொடர்பாக அடுத்த மாதம் இந்தியாவுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடப்போவதாக உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்,என தெரிவித்துள்ள முன்னிலைசோசலிஸ கட்சியின் புபுது ஜயகொட இந்தியாவுடன் இது குறித…
-
- 0 replies
- 263 views
-
-
ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா! என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan எதிர்வரும் பெப்ரவரி வந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிற்கு 89 வயது கழிந்து, தனது 90வது ஆண்டில் அவர் அடியெடுத்து வைக்க இருக்கிறார். பிரித்தானிய முடியின் கீழான கொலனியாக இலங்கை இருந்தபோது பிறந்தவர் இராஜவரோதயம் சம்பந்தன். டொனமூர் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பிறந்தவர். இலங்கை 1948ல் சுதந்திரம் பெறும் போது அவருக்கு 15 வயது கழிய ஒரு நாள் குறைவு. இலங்கைச் சட்டக் கல்லூரியில் கற்று சட்டத்தரணியாக பணிபுரிந்த அவர், 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில், தனது 44 ஆவது வயதில், திருகோணமலையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பாகப் போட்டியிட…
-
- 26 replies
- 2.8k views
-
-
தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி கழுத்தில் சைனட் கட்டியது தப்பு! பகிரங்க குற்றச்சாட்டு
-
- 22 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழ்க் கட்சிகளின் நகர்வும் கோட்டபாயவின் நிலைப்பாடும் – அகிலன் December 28, 2021 தமிழ்க் கட்சிகளின் நகர்வு: உடன்பாடு எட்டப்படுமா என்ற கேள்வி இறுதிவரையில் தொடர்ந்த நிலையில் தமிழ், முஸ்லிம் கட்சிகளிடையிலான சந்திப்பில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டிருக்கின்றது. கொழும்பில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற 11 கட்சிகளின் தலைவர்களுடைய சந்திப்பில் எட்டப்பட்ட உடன்படிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என வர்ணிக்கப் பட்டிருக்கின்றது. எதிர்பார்க்கப்பட்டதைப் போல கடுமையான வாக்குவாதம் தொடர்ந்தது. இருந்த போதிலும், இறுதியில் தமிழரசுக் கட்சியால் கொண்டுவரப்பட்ட சில திருத்தங்களையும் உள்ளடக்கியதாக புதிய ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருக்கின்றது. இதில…
-
- 0 replies
- 423 views
-
-
இலங்கை தமிழர் பகுதிகளில் சீனத்தூதர்...இந்தியா - இலங்கை உறவைப் பாதிக்குமா? ச.கார்த்திகைச்செல்வன் (நெறியாளர்) விருந்தினர்கள்: எம்.ஏ. சுமந்திரன் ( யாழ்ப்பாணம் எம். பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ) ராமு மணிவண்ணன் ( பேராசிரியர் ) ஆர்.கே.ராதாகிருஷ்ணன் (பத்திரிகையாளர்) கோலாகல ஸ்ரீநிவாஸ் (பத்திரிகையாளர்)
-
- 1 reply
- 417 views
-
-
குணா கவியழகனின் இன்றைய காணொளியில் இலங்கையில் ஆட்சிமாற்றம் தொடர்பாக சுமந்திரன் செயற்படத் தொடங்கியிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. https://youtu.be/yDPW9mTTHWI
-
- 10 replies
- 822 views
-
-
-
- 0 replies
- 570 views
-
-
இந்திய – இலங்கை ஒப்பந்தம், 13, தமிழர் அரசியல்! யதீந்திரா அனைவருமாக இணைந்து இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைப்பது தொடர்பில், 11 தமிழ் கட்சிகளிடையே இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. இது ஒரு வரலாற்று சம்பவம். இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, இதனை குழப்புவதற்கும் பல முயற்சிகள் இடம்பெற்றிருந்தன. தேசியத்தை கைவிட்டுவிட்டனர், 13இற்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முடக்க முற்படுகின்றனர், 1987இற்கு பின்னர் இத்தனை உயிர்கள் போனதெல்லாம் எதற்காக – இப்படியான பலவாறான அலங்கார நச்சு வரிகள் இதற்காக பயன்படுத்தப்பட்டன. எனினும் இந்த விடயத்தில் அனைத்து தரப்பினரும் உறுதியாக இருந்தமையால், இந்த முயற்சி இணக்கப்பாட்டை எட்டியிருக்கின்றது. ஆரம்பத…
-
- 0 replies
- 577 views
-
-
சீனத் தூதுவரின் யாழ் விஜயம்: பின்னணியும் எதிர்பார்ப்புகளும் – பி.மாணிக்கவாசகம் December 27, 2021 சீனத் தூதுவரின் யாழ் விஜயம்: இலங்கைக்கான சீனத் தூதுவர் இந்த வருடத்தின் (2021) இறுதிப் பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட 3 நாள் விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த வருடத்தில் பல முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ள போதிலும், இந்த யாழ்ப்பாண விஜயம் அதி முக்கியத்துவம் மிக்கதாகவும், இலங்கையின் போக்கில் பல்வேறு திருப்பங்களுக்குப் பிள்ளையார் சுழி இட்டிருப்பதாகவும் அமைகின்றது. சீனாவின் எந்தவொரு நடவடிக்கையும் தன்னலம் மிகுந்ததாகவும் தனது வல்லரசுப் போக்கை நிரந்தரமாக நிலை நிறுத்து தற்காகவுமே அமைந்திருக்கும். சீனாவின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப்பவர் களுக்கு அதன் இந்…
-
- 0 replies
- 255 views
-
-
13வது திருத்தமும் தமிழ் சமூகமும் டிசம்பர் 26, 2021 இலங்கை – இந்திய சமாதான உடன்படிக்கையின் விளைவாக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 13ம் திருத்தம் காரணமாகவே மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதையும் அது தற்போது இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக ஆகி இருப்பதையும் நாம் அறிவோம். கடந்த இரண்டு வருடங்களாக பேசப்படாமல் இருந்த இந்த 13ஆவது திருத்தம் தற்போது தமிழ் அரசியலில் பேசு பொருளாக மாறி இருப்பதால் அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தமிழர்கள் அதிகாரங்களைக் கேட்பது இலங்கையில், குறிப்பாக தேசிய அரசியலில், கெட்ட வார்த்தையாக மாறியிருப்பதால், தமிழ்க் கட்சிகளின் கோரிக்கையான 13ம் திருத்த சட்டத்தை முழுமையாக அமுல…
-
- 0 replies
- 350 views
-
-
தமிழ் ஈழ ஆயுதப் போராட்டத்திற்கு ஆணிவேராகவும்,அச்சாணியாகவும் இருந்த கடற்புலிகளின் 9 ஆயுத விநியோக மற்றும் வர்த்தக கப்பல்களின் அழிவுக்கும் 160 க்கு மேற்பட்ட ஒப்பற்ற தலைசிறந்த தமிழீழ மாலுமிகளின் சாவுக்கும் முக்கிய சூத்திரதாரியாக இருந்தது சீனா. 2006ஆம் ஆண்டுக்கும் 2008ஆம் ஆண்டின் உறுதிக்கும் இடையில் நடந்த ஆயுதக் கப்பல் மூழ்கடிப்பாகும். இந்தச் சீனாவின் நயவஞ்சகத்தனம் பற்றிய தகவல்கள் மிக அதிர்ச்சிகரமானவை. இவ்வாறு கப்பல் மூழ்கடிப்பு விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு தோள்கொடுத்து தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழிக்க உதவி செய்து இலங்கை அரசை பாதுகாத்த சீனா, இப்போது கடல் தொழிலாளிகளுக்கு வலையும் நிவாரணமும் கொடுத்து தாயகத்தில் தமிழினத்தின் இருப்பை இல்லாதொழிக்கும் நயவஞ்சக நோ…
-
- 6 replies
- 467 views
-
-
இந்தியாவை நோக்கி முன்வைக்கப்படவிருக்கும் கூட்டுக்கோரிக்கை எது? நிலாந்தன். தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் நோக்கத்தோடு டெலோ இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமையோடு புதிய திருப்பத்தை அடைந்திருப்பதாக தெரிகிறது. டெலோ இயக்கம் அந்த நகர்வை முன்னெடுத்த பொழுது 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது என்பதே பிரதான கோரிக்கையாக காணப்பட்டது. அக்கோரிக்கையை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளில் தமிழரசுக்கட்சி ஈடுபட மறுத்தமைக்கு அது மட்டும்தான் காரணமல்ல. அதைவிட ஆழமான காரணங்கள் உண்டு. சிறிய பங்காளிக் கட்சியான டெலோ அவ்வாறான ஒருங்கிணைப்ப…
-
- 0 replies
- 318 views
-
-
உள்ளூராட்சி சபைகளில் நடப்பதென்ன? http://www.nillanthan.com/wp-content/uploads/2021/12/copy.jpg கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின்போது காரைநகரில் ஒரு சுயேச்சைக் குழு போட்டியிட்டது. அப் பிரதேசத்தில் காணப்படும் சமூக வேறுபாடுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட சில சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சுயேட்சைக்குழுவாக அது தேர்தலில் போட்டியிட்டது. எனினும் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவான தமிழ்தேசிய நிலைப்பாட்டை அக்கட்சி வெளிப்படுத்தியது.தேசிய விடுதலை என்பது சமூக விடுதலையையும் உள்ளடக்கியதே என்பதனை அந்த தேர்தல் அறிக்கை தெளிவாக வெளிப்படுத்தியது. தேர்தலில் அச்சுயேச்சைக் குழு மூன்று ஆசனங்களைப் பெற்றது.எனினும் பிரதேச சபையை கை…
-
- 0 replies
- 255 views
-
-
நடந்து முடிந்த மூன்று கூட்டங்களைப் பற்றி ஆதரவாகவும் எதிராகவும் இங்கு பலர் களமாடியிருந்ததைத் காணக்கூடியதாக இருந்தது. இதை மிகவும் ஆழமாக அழகாக ஊடகவியலாளரும் விரிவுரையாளரும் ஆகிய நிக்ஸன் அமிர்தநாயகம் உரையாடுகிறார்.
-
- 0 replies
- 636 views
- 1 follower
-
-
-
தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட 13 எதற்கு? சில தமிழ் கட்சிகள் அரசியல் தீர்வுக்கு 13 ஐ நடைமுறைப்படுத்தக் கோருகின்றன. அது குறித்து தங்களது நிலைப்பாடு என்ன? எனும் கேள்விக்கு பதிலளித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
-
- 1 reply
- 341 views
-
-
தமிழ்க் கட்சிகளின் ‘இரு கூர் அரசியலும்’ தமிழ் மக்களின் தவிப்பும் – பி.மாணிக்கவாசகம் December 21, 2021 தமிழ்க் கட்சிகளின் ‘இரு கூர் அரசியலும்’ தமிழ் மக்களின் தவிப்பு: தமிழ்த்தேசியமே உயிர் மூச்சாகக் கொண்டிருந்த தமிழ்க் கட்சிகள், இன்று தடுமாறிக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. தமிழ் மக்களுக்கான தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் அரசியல் செய்து வந்த தமிழ்க்கட்சிகள், தமது அரசியல் செல்நெறியில் இப்போது இரு கூராகப் பிளவுண்டிருக்கின்றன. ஆயுத ரீதியாக விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனிநாட்டுக் கோரிக்கை தளர் நிலைமைக்கு ஆளாகியது. ஒற்றையாட்சியின் கீழ் தனிநாடு கோரமாட்டோம் என சத்தியப் பிரமாணம் செய்து ந…
-
- 1 reply
- 380 views
-
-
-
- 2 replies
- 935 views
-
-
இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் மட்டும்தான் சாதியடக்குமுறை உண்டு என்றும், சிங்கள மக்களிடம் சாதிப் பாகுபாடு இல்லை என்றும், அனேகர் கருதுவது மிகத் தவறானது என கட்டுரையாளர் திபாகரன் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தனது கட்டுரையில், இருபகுதியினரிடமும் சாதிப் பாகுபாடு வலுவாக உண்டு எனினும் தமிழ் மக்களிடம் சாதிப்பாகுபாட்டில் தீண்டாமை என்கிற அம்சம் உண்டு. ஆனால் சிங்களவர்களிடம் தீண்டாமை என்பது கிடையாது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் சாதி பேதமானது தமிழ் மக்களிடம் இருக்கின்ற சாதி பேதத்தை விடவும் அரசியல் மத ரீதியில் மிக ஆழமானதும் கடுமையானதும் ஆகும். இது பற்றி தெரிந்து கொள்ளாமல் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதும் மிகப்பெரும் அரசியல் ரீதியான சமூக ர…
-
- 0 replies
- 500 views
-
-
வடக்கின் மீதான சீனாவின் ‘புதிய காதல்’ என்.கே. அஷோக்பரன் இலங்கைக்கான சீன நாட்டு தூதுவர், கடந்த வாரம் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் என இலங்கையின் வடக்குக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்கு வரும் முக்கிய பிரமுகர்களின் அடையாள விஜயமாக, நல்லூர்க் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவது அமைந்துவிடுகின்றது. அதேபோல், சீனநாட்டின் தூதுவரும் மேலாடை களைந்து வேட்டி கட்டி, கந்தன் தரிசனம் பெற்று, கோவில் வாசலில் எடுத்த புகைப்படங்கள் வௌியாகியிருந்தன. வௌிநாட்டுத் தூதுவர்கள் இலங்கையின் பல பாகங்களுக்கும் விஜயம் செய்வதொன்றும் புதிய விடயமல்ல! ஆகவே, சீன நாட்டின் தூதுவரின் வடக்குக்கான விஜயம் பற்றி, தனித்துக் குறிப்பிட வேண்டியது…
-
- 0 replies
- 351 views
-
-
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முற்றாக நிராகரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) இதனைத் தெரிவித்தார். தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “சிதைந்து போகிற தமிழ்தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற கருத்தாய்வு நிகழ்விலேயே இதனைக் கூறினார். ஜனநாயகம் மற்றும் மனித உரிமை கோட்பாடுகளில் சீனா பின்னிற்பதனாலேயே வடக்கு கிழக்கில் அதன் தலையீட்டை நிராகரிப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். மூலம்:https://ibctamil.com/article/chinese-dominat…
-
- 12 replies
- 876 views
-
-
அடுத்த பிறவியில் நான் ஒரு சிங்களவராக பிறக்க விரும்புகிறேன் இந்த பிறந்த நாளில், இதற்கு முன் நான் கடந்து வந்த பிறந்த நாட்களில் தோன்றாத ஒரு விருப்பம் எனக்குள் தோன்றுகிறது. அடுத்த பிறவியில் நான் ஒரு இலங்கையிலே ஒரு சிங்களவராக பிறக்க வேண்டும். தென் மாகாணத்தில், சிங்களம் மட்டுமே பேசும் ஒரு கடும் சிங்கள குக்கிராமத்து குடும்பத்தில் பிறக்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்கான காரணங்களை நான் பகிரங்கமாக கூற விருபவில்லை. ஆனால், இதன் அர்த்தம் எனக்கு தமிழ் மீது வெறுப்பு என்பதல்ல. என் தாய் தமிழ் மீது எனக்கு தீராத பற்று இருக்கிறது. நான், மாணவ பருவத்தில் இருந்து தமிழ் மொழியில் கையெழுத்திடும் தமிழன். தமிழ் திமிர் கொண்ட எனக்கு ஒரு போதும் உடல் களைப்பு ஏற்படுவதில்லை. ஒவ…
-
- 0 replies
- 481 views
-