நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
புதிய அரசியலமைப்பு முயற்சி தொடர்பில் சம்பந்தனின் ஆதங்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை உள்ளடக்கி புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு இந்தியா உதவி புரிவதுடன் அதற்கான அழுத்தங்களையும் வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அரசியல் யாப்பை உருவாக்கும் முயற்சி தோல்வியில் முடிவடையுமானால் வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைவிட தீவிரமான போக்கைக் கொண்ட தமிழ் தலைமை உருவாவதற்கு வாய்ப்பு ஏற்படுமென்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். சபாநாயகர் கரு ஜ…
-
- 0 replies
- 433 views
-
-
கொழும்பு நகரில் இடம் பெறும் விபச்சார நடவடிக்கைகளில் சில காவற்துறை அதிகாரிகள் தொடர்புக் கொண்டுள்ளதாக இரண்டு முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்களை அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள், உரிமையாளர்கள் மற்றும் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகளின் தொழிற்சங்க ஒன்றியம் என்பன முன்வைத்துள்ளன. நீண்ட நாட்களாக முச்சக்கர வண்டி சாரதிகளாக அல்லாதவர்கள் தமது தொழிலை முன் எடுப்பதன் காரணமாக தாம் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங் கொடுப்பதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், முச்சக்கர வண்டி தொழிற்துறையை கண்காணிப்பதற்கான நிறுவனம் ஒன்று அவசியம் எனவும் அவர் கோரிக்க…
-
- 1 reply
- 432 views
-
-
“பறையா” என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? – ஒரு வரலாற்றுப் பார்வை க.சுபகுணம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "என்னை பள்ளியிலுள்ள சக மாணவர்கள் ஒரு 'பறையன்' போல் நடத்துகிறார்கள்." இந்த வரியை பார்த்தவுடன் முகம் சுழிக்க வேண்டுமென உங்களுக்குத் தோன்றலாம். ஏனெனில் அந்த வார்த்தையின் வரலாற்றுப் பின்னணியை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அந்த வார்த்தை ஏற்படுத்தக்கூடிய காயம் அவர்களுக்குப் புரியும். ஆனால், ஆங்கில மொழியில் 'பறையா' மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் தான். சமீபத்தில், இளவரசர் ஆண்ட்…
-
- 0 replies
- 432 views
- 1 follower
-
-
சம்பூர் மக்கள் மீள் குடியேற சாத்தியம். அரசிதழில் நேற்று ஜனாதிபதி விடுத்த பிரகடனப்படி, சம்பூர் காணிகள் தொடர்பான வியாபார உடன்படிக்கைகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. இதனால் அப்பகுதி மக்கள் மீள குடியமரக் கூடிய நிலை உண்டாகி உள்ளது. இணக்க அரசியலின் பலனோ!
-
- 4 replies
- 432 views
-
-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=v_gWGYpbB74#! https://www.youtube.com/watch?v=3HVoa9HEHIw https://www.youtube.com/watch?feature=player_embedded&v=v_gWGYpbB74#!
-
- 0 replies
- 432 views
-
-
தமிழ் அரசியலை செப்பனிடும் விக்னேஸ்வரனின் முன்னுதாரணம் கபிலன் இராசநாயகம் அரசியல் என்றாலே பணம் உழைப்பதற்காக என்று மக்கள் முகம் சுழிக்கும் இன்றைய நிலையில் தனது பாராளுமன்ற பிரவேசம் அத்தகைய ஒரு சாக்கடைக்குள் சிக்காது என்பதை உறுதிப்படுத்தவும் பொதுமக்கள் தன்னை கண்காணித்துக்கொள்வதற்கு ஏதுவாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தனது சொத்துவிபரங்களை தேர்தலுக்கு முன்னதாகவே பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தி ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டார். விக்னேஸ்வரனின் இந்த செயற்பாடு இலங்கை அரசியலில் மட்டுமன்றி தமிழக அரசியலிலும் எதிர்வரும் காலங்களில் பெரும் செல்வாக்கை செலுத்தப்போகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப…
-
- 1 reply
- 432 views
-
-
ஜனாதிபதியும் கலாசார பொலிஸ் பணியும் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலத்தீன் பொப் பாடல்களின் அரசரென அழைக்கப்படும் என்றிக் இக்லேசியஸின் இலங்கைப் பயணம், அதிகமான சர்ச்சைகளையும், இலங்கை மீதான உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துச் சென்றுள்ளது. 5,000 ரூபாய் முதல் 35,000 ரூபாய் வரையிலான பெறுமதிகளில் நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்ட இந்நிகழ்வு, இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட அதிபிரபலமான நட்சத்திரமொன்றின் இசை நிகழ்ச்சியாக அமைந்த போதிலும், ஏற்பாடு தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தான், திங்கட்கிழமை கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த இசை நிகழ்ச்சியில், பெண்ணொருவர் எனச் சந்தேகிக்கப்படுபவர், என்றிக் இக்லேசியஸ் மீது மார்…
-
- 0 replies
- 431 views
-
-
எங்களின் வீரவராற்றினையும், அடையாளங்களையும் மீட்கவே புதுச்சேரியில் மாவீரர் அரங்கம் நிறுவப்பட்டுள்ளது - லோகு அய்யப்பன் எங்களுடைய உயிரிலும் மேலான மாவீரர்களின் துலயில் கொள்ளும் துயிலும் இல்லங்களை முற்றிலும் அடையாளம் தெரியாமல் அழித்தொழித்துள்ளார்கள். இந்த வேதனை தாங்க முடியாது எங்களின் வீரவரலாற்றினை, அந்த அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கில் புதுச்சேரி அரியம்குப்பத்தில் மாவீரர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்கிறார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன்.https://www.youtube.com/watch?feature=player_embedded&v=lENeb-Cj7UM http://www.pathivu.com/news/35562/57//d,article_full.aspx
-
- 0 replies
- 431 views
-
-
அம்பேத்கரும் இடதுசாரி இளம்பருவக் கோளாறுக்காரர்களும் இந்தக் கவிதை(?) எழுத்துக்களை வாசிப்பவர்கள் மனம் புண்பட்டால் என்னை மன்னித்து அருள்வீராக. “குறிமடக்கி அமரும் புத்தனின் வழிகளில் படர்கிறது யோனியின் ரேகை”, "ஆகச் சிறந்த புணர்ச்சியை நிறைவேற்ற வேண்டுமாயின் -----தான் புணர வேண்டும் அவளுக்குத்தான் ஆயிரம் கைகள்" - 'காமத்துப்பால்' என்ற புத்தகத்தில் 'தூய மார்க்சிய கவிஞரும், அறிஞருமான' வசுமித்ர என்பவர் எழுதியது. இவர் தான் "புத்தரின் ஆண்……. அம்பேத்கர் அறிவைத் தேடுகிறார்” என இழிவுபடுத்தி (அடே கிறுக்கன்களா இது விமர்சனம் அல்ல, விஷம்) வன்மத்தைக் கொட்டினார். அதற்கு எதிராக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர் சாமுவேல்ராஜ் இந்த நபரின் மீது வன்கொடுமை தண்டனைச் சட்டத்தின் கீழ் புகார் கொ…
-
- 0 replies
- 431 views
-
-
இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள் உடல்கள் எரிப்பு: இனப்பாகுபாடு காட்டுகிறதா அரசு? சரேஜ் பத்திரானா பிபிசி சிங்கள சேவை Nikita Deshpande இஸ்லாமிய முறைப்படி உயிரிழந்தவர்களின் உடல்கள் புதைக்கப்படும். உடலுக்கு எரியூட்டுவது இஸ்லாமியர்களின் வழக்கத்தில் இல்லை. ஆனால் இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. இந்த கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி அதிகாரிகள் இஸ்லாமியர்களின் உடல்களை தகனம் செய்து தங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றனர் என இலங்கை முஸ்லிம்கள் கூறுகின்றனர். மே 4ம் தேதி, மூன்று குழந்தைகளுக்கு தாயான, 44 வயது ஃபாத்திமா ரினோசா, கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்துடன் மருத்துவமனையில் அனுமதிக…
-
- 0 replies
- 431 views
-
-
முத்தையா முரளிதரனும் மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளும் 10/18/2020 இனியொரு... இலங்கை பேரினவாத அரசிற்கு எதிரான அரசியல் திட்டம் தேவையானது தான். ஆனால் அது அழிவு அரசியலாக அமைந்துவிடக் கூடாது. முத்தையா முரளிதரன் என்ற தமிழராகத் தன்னை எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்ளாத இலங்கையில் இந்திய வர்த்தக சமூகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரரை முன்வைத்து முன்னெடுக்கப்படும் தமிழ்த் தேசிய அரசியல் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாது. முரளிதரனைத் தமிழராக காட்ட முற்படுவது எவ்வளவு தவறானதோ அதைவிட ராஜபக்ச அரசிற்கு துணை போகும் தமிழ்த் தேசிய அரசியலும் தவறானது தான். மலையகத் தமிழர்கள் இலங்கையின் மத்திய பகுதியில் வசிக்கும் மலையகத் தமிழர்கள் 19ம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் ஆங்கில…
-
- 0 replies
- 431 views
-
-
ஐரோப்பாவிற்கு வருகை தந்திருக்கும் சுவாமி ஸ்ரீரவிசங்கர் குருஜி சுவிட்சர்லாந்து சென் மார்க்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அவர் தினக்கதிர் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் தமது கலாசாரத்தை அழியாது பேண வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்தியாவில் பெரிய மாற்றம் ஒன்று உருவாகினால் மட்டுமே ஈழத்தமிழர்களின் துன்பங்களுக்கு விடிவு கிடைக்கும் என்றும் ஸ்ரீரவிசங்கர் குருஜி தினக்கதிருக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். - See more at: http://www.thinakkathir.com/?p=51278#sthash.XozD5rEg.dpuf இந்த காணொளி தினக்கதிர் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது -
-
- 1 reply
- 431 views
-
-
மட்டக்களப்பு மயிலாம்பாவெளி சிறுவர் இல்லம் திறப்புவிழா. கனேடிய தமிழ் மக்களின் பூரண பங்களிப்பில் அமைக்கப்பட்ட மட்டக்களப்பு மயிலாம்பாவெளி C REPசிறுவர் இல்லம் 2013 மாசி 09 திகதி சனிக்கிழமை அன்று திருமலை மறைமாவட்ட ஆயர் வண கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களள் திறந்துவைக்கப்பட்டது. சிறுவர் இல்ல கட்டிட நிர்மானத்துக்கு ஆதரவுதந்துதவிய கனேடிய தமிழ் உள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு 2013 மாசி 10 திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று 733 Birchmount Rd, Scarborough, Ontario இல் அமைந்திருக்கும் கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் மாலை பல நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வில் சிறுவர் இல்லத் திறப்புவிழா காணொழி காண்பிக்கப்பட்டதுடன் கலை கலாச்சார நிகழ்வுகளும…
-
- 0 replies
- 430 views
-
-
கைதிகளைச் சிறையிலடக்கத் துணை போன டக்ளஸ் இன்று விடுதலை செய்யக் கோருகிறார் பத்துவருடங்களாக இனக்கொலையாளிகளான ராஜபக்ச குடும்பத்தின் அடியாளாகவிருந்து செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தாவிற்கு திடீரென சிறைக் கைதிகள் மீது அக்கறை பிறந்துள்ளது. மகிந்த அரசில் செல்வாக்கு மிக்க அரசியல் வாதியாகத் திகழ்ந்த டக்ளஸ் கைதிகள் தொடர்பாக மூச்சுக்கூட விட்டதில்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொள்ள நேரிட்டதும் சிறைகளில் வாடும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பfடவேண்டும் எனக் பாராளுமன்றத்தில் கோரியுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பதாக மகிந்த ராஜபக்சவே தமிழ் மக்களின் தேவைகளை உணர்ந்து செயற்படுகிறார் என்று கூறிய டக்ளஸ் நேற்றுப் பாராளுமன்றத்தில் மகி…
-
- 0 replies
- 430 views
-
-
யாழ். – மானிப்பாய் – பொன்னாலை வீதிப் புனரமைப்பில் நிதி மோசடி: வலிகாம மக்கள் ஏமாளிகளா? November 12, 2021 யாழ். மாவட்டத்தில் தற்போது பல வீதிகள் காபெற் வீதியாக புனரமைக்கப்பட்டு வருகின்றது. இதில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த யாழ்ப்பாணம், மானிப்பாய் – பொன்னாலை வீதியும் புனரமைக்கப்படுகின்றது. நீண்ட காலம் தாம் எதிர்கொண்ட போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கப்போகின்றது என மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும், வீதியின் புனரமைப்பு விதம் மக்களை கவலையடையச் செய்துள்ளது. யாழ்ப்பாணம் சுடுகாட்டு ஆலடிச் சந்தியில் இருந்து மானிப்பாய் ஊடாக பொன்னாலைச் சந்தி வரை இந்த வீதி புனரமைக்கப்பட உள்ளது. அதாவது இந்த வீதி யாழ்ப்பாணம், நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை …
-
- 0 replies
- 430 views
-
-
தோல்வியை ஏற்றுக்கொண்ட சுமந்திரன் அடுத்தடுத்த நகர்வுகள் தொடர்பில் மனம் திறப்பு | அக்கினி பார்வை நன்றி - யூரூப்
-
- 0 replies
- 430 views
-
-
‘தமிழ் மக்கள் பேரவை அநாதையா?’ Editorial / 2018 ஒக்டோபர் 25 வியாழக்கிழமை, பி.ப. 10:00 Comments - 0 வா. கிருஸ்ணா தமிழ் மக்கள் பேரவையை விக்னேஸ்வரன் தொடங்கினார். அதனை அரசியல் சாராத அமைப்பு என்றார். இன்று தமிழ் மக்கள் கூட்டமைப்புக்குப் போய்விட்டார். தமிழ் மக்கள் பேரவையில். இனி தான் இல்லையென்று தெளிவாகக் கூறிவிட்டார் என்று தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், தமிழ் மக்கள் பேரவை அநாதையாக்கப்பட்டுவிட்டதா என்றும் வினவினார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், புதியக் கட்சியை ஆரம்பித்தமை தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில், இன்று (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்ப…
-
- 0 replies
- 430 views
-
-
இலங்கை நெருக்கடி: பணவீக்கம் விரைவில் 40 சதவீதமாக அதிகரிக்கும் - மத்திய வங்கி ஆளுநர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (இன்றைய (மே 20) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) இலங்கையில் இந்தாண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமானது மிகவும் மந்தகரமான நிலையிலேயே காணப்படும் என்றும் தற்போது 30 சதவீதமாகக் காணப்படுகின்ற பணவீக்கம் எதிர்வரும் சில மாதங்களில் 40 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளிய…
-
- 1 reply
- 430 views
- 1 follower
-
-
யாழ்ப்பாண சம்பவங்கள் – ஒரு எச்சரிக்கை மணி May 25, 2015 இளையோர்கள் பயனுள்ள செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வடக்கில் அதிகரித்து வரும் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைப்பதற்குமான அவசியத்தையும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் எடுத்துக்காட்டியுள்ளன. இவ்வாறு ‘சிலோன் ருடே’ நாளிதழில் சுலோச்சனா ராமையா மோகன் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. கடந்த வாரம் புங்குடுதீவு மாணவி வித்யா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாண நீதிமன்றம் மற்றும் காவற்துறையினர் மீது ஆவேசங் கொண்ட இளைஞர்களா…
-
- 0 replies
- 430 views
-
-
தமிழ்த் தேசியம் - சிந்தனையும் தேடலும் இலங்கை அரசின் இருப்பு என்பது சிங்கள - பௌத்தத்தை பாதுகாப்பது, வளர்த்தெடுப்பது எனும் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது. இதுவரை ஆட்சிக்கு வந்த எல்லா அரசாங்கங்களும் இந்த இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதில் தீவிரத் தன்மையும் அக்கறையையும் வெளிப்படுத்தி வந்துள்ளன. சுதந்திரத்திற்கு பின்னர் வந்த எல்லா அரசாங்கங்களும் அரசாங்கம் கைமாறுகின்றபோதெல்லாம் தமது இருப்புக்கு அடிப்படையாக இருக்கும் சிங்கள - பௌத்த சித்தாந்தத்தை தீவிரமாக பற்றிப் பிடித்து வந்துள்ளன. இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிங்கள- பௌத்த பேரினவாதம் மேலாதிக்கம் செலுத்தும் அம்சமாக எழுச்சி யடைந்துள்ளது. தமிழ்பேசும் மக்களது வாழ்வாதார உரிமைகள் சமூக பாதுகாப்பு மற்றும் சுத…
-
- 0 replies
- 429 views
-
-
ஆர்.பி கொரோனா வைரஸ் ஓர் உயிரியல் ஆயுதமா? அது சீனாவால் உருவாக்கப்பட்டதா? அல்லது சீனாவில் உருவானதா? இன்றேல் வுஹான் ஆய்வு கூடத்திலிருந்தும் தப்பிய வைரஸால் கொரோனா உருவானதா? என பல்வேறு கோணங்களில் கேள்விகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ள நிலையில், இதன் உண்மைத் தன்மை குறித்து சர்வதேச தொலைக்காட்சி சேவை ஒன்று ஆய்வொன்றை மேற்கொண்டது. அதில் கூறப்பட்ட கருத்துக்கள் வருமாறு: பிரித்தானிய பத்திரிகையான டெய்லி மெயில் பத்திரிகையே கொரேனா வைரஸ் ஆய்வு கூடமொன்றிலிருந்து வெளியானதாக தகவலொன்றை முதலில் வெளியிட்டது. அதில் சீனா வுஹானில் சார்ஸ் மற்றும் இபோலா மற்றும் கொடிய வைரஸூகள் தொடர்பில் ஆராய ஆய்வு கூடமொன்றை நிறுவியது. இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு அதிலிருந்தும் தப்பிய வைரஸ் இதற்கான முக்கிய …
-
- 0 replies
- 429 views
-
-
சிறீரங்காவும் விக்கியும் : ஒரு புள்ளியில் இணையும் தமிழ்த் தேசிய அசிங்கங்கள் 07/09/2015 இனியொரு நாமல், டக்ளஸ், பசில், சிறீரங்கா இலங்கை அரசியலில் வடக்குக் கிழக்கிற்கு வெளியில் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்துப் பிழைப்பு நடத்தும் முக்கிய நபர்களில் சிறீரங்கா ஜெயரட்ணம் என்பவர் பிரதானமானவர். தொலைக்காட்சியில் அரசியல் நிகழ்ச்சி நடத்தும் இலங்கையின் ஒரே அரசியல்வாதி சிறீரங்கா ஜெயரட்ணம் மட்டுமே. நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராக ஐக்கிய தேசிய முன்னணியில் வெற்றிபெற்ற சிறீரங்கா வவுனியாவைச் சேர்ந்தவர் என்பது பலருக்குத் தெரியாத தகவல். இன்று கொழும்பில் வாழும் சிறீரங்கா மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவர். நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பர். சிறீரங்காவிற்கு மகிந்த…
-
- 0 replies
- 429 views
-
-
வாஜ்பாயும் நல்லக் கண்ணும் | இன்று அவர் தேசபக்தர்… இவர் தேச விரோதி.!! 1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.. "சுதந்திரம் கேட்டு நீ போராடினாயா.? "நீதிபதி கேட்கிறார். இல்லை, நான் போராட வில்லை என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னவன் அத்தோடு மட்டும் நிற்கவில்லை, இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்.! அதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது.! சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை. போராளிகள் ஒருவரைக்கூட அவன் காட்டிக்கொடுக்கவில்லை.! கோபத்தின் உச்சத…
-
- 0 replies
- 429 views
-
-
இந்திய மத்திய அரசு கடந்த போரில் வீடிழந்த ஈழத் தமிழர்களுக்கு 50,000 வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை சில வருடங்களுக்கு முன்பு அறிமுகஞ் செய்தது. ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில் ஒரு தொய்வு ஏற்பட்டது. திட்டம் நிறை வேற்றப்படுமோ என்ற ஜயம் எழுந்தது. திடீரென்று இந்த மாத (ஓக்ரோபர்2012) முதலாம் நாள் 43,000 வீடுகள் கட்டும் திட்டத்தை இந்திய அரசு தொடங்கி வைத்தது. இந்த வைபவத்திற்கு ஒரு பட்டாளம் இந்தியப் பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சி நிருபர்களும் இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு படையெடுத்தனர். இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையில் தொடர்பாளராக இருப்பவருமான அதிபர் ராஜபக்சவின் இளவல் பசில் ராஜபக்ச இந்திய ஊடகத்துறையினரின் க…
-
- 0 replies
- 429 views
-
-