நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
நெருக்கமான ஜனாதிபதி தேர்தல் போட்டியில் கிளப்பப்படும் புலிப்பூச்சாண்டி இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையிலான போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததற்கு பின்னர் தமிழர்கள் சம்பந்தப்பட்ட பயங்கரவாத சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என்ற போதிலும், சிங்கள பெரும்பான்மை அரசியல் கட்சிகளினால் தேர்தல் ஒன்றுக்கு முன்னதாக எப்போதுமே புலிப்பூச்சாண்டி கிளப்பப்படுகிறது. நவம்பர் 16 நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலிலும் நிலைமை வேறுபட்டதாக இல்லை. தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத்தொடங்கியிருக்கும் நிலையில், நாட்டின் பாதுகாப்பையே பிரதான பிரச்சினையாக மக்கள் முன்கொண்டுசெல்லும் கடும்போக்காளரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச அக்டோபர் 14 முன்னாள் விடுதலை புலி…
-
- 0 replies
- 232 views
-
-
கறுப்பாடுகள் எங்காவது தகாத செயல்களில் ஈடுபட்டால் இராணுவத்தினரையும் காவல்துறையினரையும் அழைக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றிரவு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், மக்கள் தமது மனோநிலையை வெளிக்காட்டியுள்ளனர். அதற்கு நான் தலைவணங்குகின்றேன். ஆனால், அவர்களாகவோ, அவர்களுக்குள் இருக்கும் சில கறுப்பாடுகளோ எங்காவது தவறாக நடந்துகொள்வார்களானால் காவல்துறையினரையும், இராணுவத்தினரையும் அழைக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். அதனால், அவர்கள் ஆளுநரிடம் கொடுத்த மனுவை மீளப் பெற்றுக்கொண்டால் மக்களை அமைதிப்படுத்தமுடியும். மக்களும…
-
- 0 replies
- 232 views
-
-
கோவிட்-19 ஐ முழுமையாக ஒழிப்பது தான் இந்த பெருந்தொற்றை நிறுத்துவதற்கான ஒரே வழி மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் உலகெங்கிலும், கோவிட்-19 நோய்தொற்றுகளும், மருத்துவமனை அனுமதிப்புகளும் மரணங்களும் மீண்டும் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா மீண்டும் இந்த பெருந்தொற்றின் குவிமையமாக ஆகியுள்ளது, வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக 155,000 க்கு அதிகமான கோவிட்-19 நோயாளிகளும், 967 இறப்புகளும் அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் இந்த எண்ணிக்கை, புதிய SARS-CoV-2 வகைகள் முன்னிறுத்தும் அபாயங்களை அடிக்கோடிடுகின்றன. கலிஃபோர்னியாவின் பாலோ ஆல்டோவ…
-
- 0 replies
- 231 views
-
-
சியால்கோட்டில் பிரியந்த குமார படுகொலையும் இலங்கையில் தமிழ் முஸ்லிம் படுகொலைகளும், மனோகணேசன் இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளையும்இ இந்த பாகிஸ்தான் சியால்கோட் பிரியந்த குமார படுகொலைகளையும் போட்டு குழப்பி கொள்ள தேவையில்லை. தனிப்பட்ட முறையில் கொலைகள் தாக்குதல்கள் உலகம் முழுக்க நடக்கின்றன. ஆனால் இன மத மொழி அடிப்படையில் இவை நடக்கும் போதுதான் தலைப்பு செய்தியாகின்றன. அது சரிதான். இன மதம் உணர்வுகள் போதை வஸ்து மாதிரி ஆரம்பித்தால் முடிவுக்கு இலேசில் வராது. சுதந்திர இலங்கையில் தமிழருக்கு எதிரான இனரீதியான தாக்குதல்கள் படுகொலைகள் 1950 களில் ஆரம்பித்து 1956 1958 1961 1977 1981 1983 ஊடாக 2000கள் வரை தொடர்கின்றன. தமிழராக பிறந்த ஒரே காரணத்தால் இனரீதியாக பல நூறு தமிழர்கள் சி…
-
- 0 replies
- 231 views
-
-
அபிவிருத்தித் திட்டங்களில் கூட்டமைப்பின் பங்களிப்பு அவசியம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் புனரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இரண்டு முக்கிய விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. ஒன்று ஜனாதிபதி மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதி மற்றையது யாழ். பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறியுள்ள விடயம். முதலில் ஜனாதிபதி கூறியதை எடுத்துக்கொண்டால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் துரித அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக முன்னுரிமை அடிப்படையிலான செயற்திட்டங்களை முன்னெடுக்கவு…
-
- 0 replies
- 231 views
-
-
வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் தமிழர்களுக்கு பக்கபலமாக இருக்கும் - அங்குரார்ப்பண நிகழ்வில் தெரிவிப்பு By VISHNU 19 OCT, 2022 | 12:17 PM வடக்கு - கிழக்கில் இன்று நடைபெறும் நினைவேந்தல்களில் நாங்கள் அரசியலை காண்கின்றோம். தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து விடயங்களுக்கு எதிராகவும் இனிமேல் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் பலமாக இருக்கும் என வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஊடகப்பேச்சாளர் இராசரெத்தினம் தர்சன் தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் என்னும் அமைப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குர…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் அடைவதற்காக மௌலானா பொய்யான கதையை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று ஐரோப்பிய நாட்டில் புகலிடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது எவ்வாறாயினும், சந்திப்பு நடந்ததாகக் கூறப்படும்காலப்பகுதியில் தான் இலங்கையில் இருக்கவில்லை என்பதை சுரேஷ் சா லே மறுத்துள்ளார் என்பதைசொல்வது நியாயமான முறையில் அவசியமாகும் . குண்டுவெடிப்புக்குப் பிறகு சிறையில் இருந்த பிள்ளையானைச் சந்தித்தபோது ரிஎம் வி பி . தலைவர், இதைப் பற்றி யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று சொன்னதாக கூறப்படுகிறது டி. பி . எஸ் . ஜெயரா ஜ் ஹன்சீர் அ சாத் மௌலானா சனல் 4 ஆவணப்படத்தில் இடம்பெற்ற முக்கிய விசி…
-
- 0 replies
- 231 views
-
-
கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தேசிய சக்திகளை ஒன்றிணைத்து, கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்! | க.மேனன் February 23, 2022 கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் கிழக்கு மாகாணத் தமிழர்களின் அரசியல் பொருளாதார நிலைமைகள் குறித்து நாங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகின்றோம். கிழக்கு மாகாணத்தின் முக்கியத்துவம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உணரப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் இது தொடர்பில் வெளிப்படுத்த வேண்டிய பல விடயங்களை எனது பத்தி ஊடாக எழுதி வருகின்றேன். இவற்றினை வெறுமனே வெறும் எழுத்துக்களாக நோக்காமல், கிழக்கு மாகாண தமிழ் மக்களின் உண்மை நிலையினை உணர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், யுத்தம் மௌனிக்கப்பட்டு 12வருடங…
-
- 0 replies
- 230 views
-
-
‘ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து’ ‘கோட்டாகோகம’ வரைக்கும்! சிங்கம் – ஹஸனாஹ் சேகு இஸ்ஸடீன்! அண்மைக் காலமாக இலங்கையின் தென்பகுதியில் இளைஞர்கள் மத்தியில் உருவாகிய ஒரு தன்னெழுச்சிப் போராட்டம் நாடெங்கிலும் பேசு பொருளாகியுள்ளது. இந்த அடிப்படையில் ஏப்ரல் மாத ஆரம்ப காலத்திலிருந்து இளைஞர் குழுமங்கள் முகாமிட்டு போராடத் தொடங்கியுள்ளன. அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக, அரசில் இருப்பவர்கள் சிலரும், அரசுக்கு எதிரானவர்களும் தங்களது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். இப்போராட்டம் தொடங்கியதிலிருந்து பல மாற்றங்களையும், உருமாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இப்போராட்டம் தெற்கில் நடைபெறுகின்ற அதேவேளை, எத்தனையோ போராட்டங்களை வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக…
-
- 0 replies
- 230 views
-
-
Putin is propably living in own bubble and surraunded by yes-men. No one hasn't enough courage to say: "Vladimir you can't do that!" ரசியா புட்டின் அவர்களுக்கு ஆலோசனை சொல்லும் உயர் அதிகாரிகள் காணப்படுகிறார்கள். நினைத்தை செய்தே காட்டுவேன் எனும் பிடிவாதம் கொண்டவர் .ஆலோசகர்கள் சொல்வதை கேட்ப்பாரோ என்றால் அதுவும் அவர் நினைத்தால் தான் செய்வர் . ரஷ்ய மக்களுக்கு உக்கிரேன் இல் நடப்பது மறைக்கப்பட்டிருக்கலாம். இறுதியில் பாதிக்கபட போவது பொதுமக்களும் ராணுவ வீரர்களும் நாட்டு மக்களின் எதிர்காலமும்.
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன் மீது சிங்கள பேரினவாதம் கடும் விசனத்தில் இருக்கிறது. இன்னொரு புறத்தில் தமிழ் விட்டுக் கொடுப்பு அரசியல் தலைமை கொதிப்பில் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் கொழும்பில் இருந்து வரும் பொழுது இருந்த விக்னேஸ்வரன் இப்பொழுது இல்லை என்பது தான் கசப்பான உண்மை. வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்றது சர்வதேசம், நடத்தினால் தோற்பேன் என்பது மகிந்தவிற்கு தெரிந்த விடயம். வடக்கிற்கு யாரை முதலமைச்சராக நியமிப்பது என்பது கூட்டமைப்பிற்கான சிக்கல். இந்த நிலையில் தான் பலராலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இப்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான சம்பந்தனின் தெரிவாக இருந்தது முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் தான். …
-
- 0 replies
- 230 views
-
-
சனத் நிசாந்தவின் அகால மரணமும் பிரதிபலிப்புகளும் February 4, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — மரணத்தைக் கொண்டாடுவது உண்மையில் ஒரு மனப்பிறழ்வு. இறந்தவர்களைப் பற்றி நாம் பொதுவில் கெடுதியாகப் பேசுவதில்லை. ஆனால்,காலங்காலமாக அந்த பண்பை மீறிய நிகழ்வுகளை நாம் கடந்து வந்திருக்கிறோம். ஜனாதிபதி பிரேமதாச மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டபோது வடக்கு,கிழக்கில் அல்ல, தென்னிலங்கையில் பல பகுதிகளில் பட்டாசு கொளுத்தியும் பாற்சோறு வழங்கியும் பலர் மகிழ்ந்த சம்பவங்கள் பற்றி கேள்விப்பட்டோம். அவர்கள் நிச்சயமாக விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் அல்ல. அதற்கு ஒரு தசாப்தம் முன்னதாக புதுடில்லியில் இந்தியப் பிரதமர் இந…
-
- 0 replies
- 229 views
-
-
ஜெனீவா மாநாட்டுக்கு தயாராகும் இலங்கை - பேசுபொருளாகும் அம்பிகா சற்குணநாதனின் கருத்து ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 10 பிப்ரவரி 2022 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 49வது அமர்வு, எதிர்வரும் பிப்ரவரி மாதம் 28ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் முதலாம் தேதி வரை ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக தற்போது தயாராகி வருவதை காண முடிகிறது. இதேவேளை, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தொடர்பான ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் இந்த முறை அமர்வில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
முஸ்லிம் கூட்டமைப்பு உருவானால் முஸ்லிம் கட்சிகள் அழிந்திடுமா? மொஹமட் பாதுஷா முஸ்லிம் கட்சிகளும் அம்மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்றாகச் சேர்ந்து இயங்க வேண்டுமென்ற குரல்கள், தற்போது அழுத்தமாக ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. சமகாலத்தில், அவ்வாறானதோர் அமைப்பாக்கம் தேவையில்லை, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு உருவாகி விட்டால், முஸ்லிம்களின் தனித்துவக் கட்சி அடையாளங்கள் அப்படியே அழிவடைந்து, தூர்ந்து போய்விடும் என்று விதண்டாவாதமும் முன்வைக்கப்படுகின்றது. இலங்கையில், முஸ்லிம்களின் அரசியல், பல பரிணாமங்களைக் கடந்து வந்திருக்கின்றது. பெருந்தேசியக் கட்சிகளின் ஊடான அரசியல் …
-
- 0 replies
- 229 views
-
-
‘தமிழர் தேசம்’ மீள முடியாத நிலைக்குச் செல்லும் நிலை இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது இன்று சிங்கள தேசத்தினை உலுக்கியுள்ளதோ இல்லையோ தமிழர் தேசத்தினை நன்றாகவே உலுக்கியுள்ளது. கடந்த கால யுத்த சூழ்நிலையின்போது அதற்கேற்றாற்போல் இசைவாக்கம் அடைந்தவர்கள் தமிழர்கள் என்று கூறினாலும் இன்றைய நிலைமை மாறுபட்டதாகவே உள்ளது. பொருளாதார நெருக்கடியென்பது தமிழர்களின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு போராட்டத்தினை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையினை இன்று ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் எந்த போராட்டத்தினையும் நடாத்தாத காரணத்தினால் ஏதோ அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லையென்பது போல சிங்கள தேசம் நடந்து கொள்வதையும் அவதானிக்கமுடிகின்றது. கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையி…
-
- 0 replies
- 229 views
-
-
நன்றி - யூரூப் இணையம்
-
- 0 replies
- 229 views
-
-
முஸ்லிம்களின் பேரம்பேசலை பறித்தெடுக்கும் தேரவாத வியூகம் முஸ்லிம் சமூகத்தின் கூட்டுப்பொறுப்பை உணர்த்தி பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள், எதைச் சாதித்தனர், இந்தப்பதவி விலகல் உணர்த்திய செய்திகள் என்ன? இந்தக் கேள்விகளின் எதிரொலிகளே முஸ்லிம் அரசியல் களத்தின் எதிர்கால நகர்வுகளைக் கட்டியங் கூறப் போகின்றன முஸ்லிம் பெயர்தாங்கிய ஒரு சில இளைஞர்களின் பயங்கரவாதச் செயற்பாடுகளை ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்க முயன்ற, தேரவாதிகளின் பிரயத்தனங்களை, இப்பதவி விலகல்களால் முறியடிக்க முடிந்ததை மட்டும் எல்லோரும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். முஸ்லிம் எம்.பி.க்களை மீண்டும் அமைச்சரவைக்குள் உள்வாங்கும்…
-
- 0 replies
- 229 views
-
-
யாழ்ப்பாணத்தை உலுக்கும் எலிக் காய்ச்சல் – மயூரப்பிரியன் : adminDecember 22, 2024 யாழ்ப்பாணத்தில் கடந்த இரு வார கால பகுதியாக எலிக் காய்ச்சலால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருவதால் , மக்கள் மத்தியில் ஒரு வித பய உணர்வு ஏற்பட்டுள்ளதுடன், சுகாதார பிரிவினர்கள் அவற்றினை தடுப்பதிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அண்மைய சில நாட்களில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர்களில் இது வரையிலான தரவுகளின் அடிப்படையில் 08 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 121 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்தவர்களில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர். ஏனைய ஏழு பேரும் யாழ்ப்பாணத்த…
-
- 0 replies
- 228 views
-
-
தேனை விற்று தீவிரவாத அமைப்பை நடத்த முடியுமா? அது ஓரளவுக்கு முடியும் என தாலிபான்கள் நிரூபித்துள்ளனர். உலகின் பல நாடுகளில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் தமது நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை பல வகைகளில் ஈட்டுகின்றனர். அவ்வகையில் ஆப்கானிஸ்தானில் செயல்படும் தாலிபான்கள் தமது இயக்கத்துக்கான நிதியை பல வழிகளிலும் ஈட்டுகிறார்கள் என்றும் அதில் தேன் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானமும் ஒன்று என புதிய ஆய்வுத் தகவல் ஒன்று கூறுகிறது. தாலிபான் அமைப்பினர் எப்படிச் செயல்படுகின்றனர், அவர்களுக்கு நிதியாதாரங்கள் எங்கிருந்து வருகின்றன என்பது தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இதுவரை தெரியாதது என கருதப்பட்ட பல விஷயங்கள் தெரியவந்துள்ளன. ஆப்கானிஸ்தானுக்குள் பாதுகாப்பு அளிக்கிறோம் எனக் கூறி …
-
- 0 replies
- 228 views
-
-
அமெரிக்காவின் இந்தோ-பசிஃபிக் அறிக்கை இந்தியா, சீனா குறித்து என்ன சொல்கிறது? 12 பிப்ரவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தோ-பசிஃபிக் பிராந்தியம் தொடர்பான தனது கொள்கை குறித்த அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்தியா தற்போது முக்கியமான புவிசார் அரசியல் சவால்களால் சூழப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனா மற்றும் மெய்யான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (சீனாவுடனான எல்லைக் கோடு) தொடர்பான அதன் நிலைப்பாடு காரணமாக இந்த சவால் ஏற்பட்டுள்ளது என்கிறது அந்…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
இலங்கை வன்முறை- “ஜனநாயகத்திற்கு விழுந்த பலத்த அடி“-துரைசாமி நடராஜா May 9, 2022 அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கனுப்பும் போராட்டங்கள் இன்று (9) உக்கிரமடைந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது பதவியை இராஜினாமா செய்திருக்கின்றார். இதேவேளை காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை என்பவற்றுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் மீது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடாத்தியதில் காயமடைந்த 154 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இத்தாக்குதலின் எதிரொலியாக நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மக்கள் ஊரடங்கினையும் பொருட்படுத்தாது வீதிகளில் …
-
- 0 replies
- 228 views
-
-
ஆரோக்கியம் கெட்ட ஆரோக்கியபுரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அழிக்கப்படும் வளங்கள் முல்லைத்தீவு, கொக்காவில் பிரதேசத்தில் சட்ட விரோத கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி, கடந்த வாரம் முற்றுகையிடப்பட்டு, கிரவல் அகழ்வில் ஈடுபட்ட கனரக வாகனங்களுடன் அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டு உள்ளமையானது, பிரதேச மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இதுவரைகாலமும் இவற்றைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் கண்மூடியிருந்தார்களா? எனவும் கேள்வியெழுப்பி உள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தில் 2,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதிகளில் பெருங்காடுகள் அழிக்கப்பட்டு, கிரவல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் …
-
- 0 replies
- 228 views
-
-
புதிய பாதையில் செல்வதற்கு தயாராவதன் முதல் அறிகுறி Photo, REUTERS/ The Telegraph மக்கள் போராட்ங்களைக் கையாளுவதில் அரசாங்கத்தின் அடங்குமுறைக் கொள்கைக்கு ஒரு தடுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போடுகின்றார் போன்று தெரிகிறது. ஆனால், இதை அவர் எப்போதோ செய்திருக்கவேண்டும். கொழும்பில் முக்கிய பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் செய்யும் வர்த்தமானி அறிவித்தலில் கைச்சாத்திடுவதற்கு அவர் முதலில் எடுத்த தீர்மானம் அரசாங்கத்தின் சொந்த மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட மனித உரிமைகள் அமைப்புக்களின் கடுமையான கண்டனத்துக்குள்ளானது. பாதுகாப்புத் துறையினால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகின்ற இந்தத் தீர்மானம் வர்த்தக மற்றும் தொழிற்துறை நடவடிக்கைகளுக்குப் பாதகமாக அமையும் எ…
-
- 0 replies
- 228 views
-
-
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள ராஜபக்சர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு இறுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் ராஜபக்சர்களின் பல சொத்துக்கள் ஆப்பிரிக்காவில் உள்ளது. அவையும் தற்போது இறுக்கப்பட்டு வருகின்றன என்று இந்தியாவின் இராணுவத்தின் முன்னாள் மேஜர் தர அதிகாரி மதன்குமார் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், 13ஆவது சீர்த்திருத்தம் குறித்து இலங்கைக்கு வேறு வழியில்லை. 13ஆவது சீர்த்திருத்தம் என்பது இரு நாடுகளுக்கு போடப்பட்ட ஒப்பந்தம். இருநாட்டு தலைவர்கள் அதில் கையெழுத்திட்டுள்ளனர். அதாவது, ஜெயவர்தன அவர்களும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள். இலங்கைக்கு உள்ள தார்மீ…
-
- 1 reply
- 227 views
-
-
தமிழ்ப்படகு மக்கள் 15 NOV, 2022 | 01:31 PM படகு மக்கள் என்று சொன்னால் ஒரு காலத்தில் வியட்நாமியர்களே நினைவுக்கு வருவர்.வியட்நாம் போரில் 1975 ஆம் ஆண்டு அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டதன் பிறகு ஆயிரக்கணக்கான வியட்நாமியர்கள் (பெரும்பாலானவர்கள் சீன வம்சாவளியினர்) தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.பலவீனமான படகுகளில் பயணம் செய்த அவர்கள் ஆழ்கடலில் அனுபவித்த அவலங்கள் தொடர்பான விபரங்கள் நடுக்கம் தருபவை. ஆபிரிக்காவில் இருந்தும் மத்திய கிழக்கில் இருந்து ஐரோப்பாவுக்கு மத்திய தரைக்கடலின் ஊடாக படகுகளில் சென்ற படகு மக்களின் அவலங்கள் தனியான வரலாறு. உலகின் படகு மக்களின் வரலாற்றுக்கு இலங்கைத் தமிழர்களும் …
-
- 1 reply
- 227 views
-