நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
கருணாநிதி சகாப்தம் சமஸ் உலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்டம் ஒன்று ராணுவ மரியாதை செலுத்த நின்றிருந்த சிப்பாய்களின் பூட்ஸ் கால்கள் இடையே சுற்றுவதும் மணல் வலைக்குள் போய்ப் பதுங்கி வெளியே ஓடி வருவதுமாக இருந்தது. மக்கள் வெள்ளம் சூழ, ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடலை ஏற்றி இறக்கி, டாப்ஸ் ஊதி, அஞ்சலிக்காக 21 துப்பாக்கிக் குண்டுகளை வெடிக்கச் செய்து, அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தியபோது, முப்படை வீரர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? இலங்கை சென்ற இந்தியப் படையினரால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்கள் நாடு திரும்ப இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததோடு…
-
- 1 reply
- 334 views
-
-
விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான 'யுவான் வாங் 5' இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர உத்தேசித்துள்ள நிலையில், இந்திய அழுத்தம் காரணமாக அதன் வருகை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவின் சென்னை புறநகர் பகுதியான காட்டுப்பள்ளி துறைமுகத்தில் எல் அண்ட் டீ கப்பல் கட்டுமான தளத்துக்கு அமெரிக்க கடற்படை கப்பலான சார்ல்ஸ் ட்ரூ ஒன்று வந்துள்ளது. 'பழுதுபார்ப்புப் பணி' என்ற பெயரில் அமெரிக்க போர்க் கப்பல் ஒன்று இந்தியாவுக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இலங்கையின் ஹம்பாந்தோட்டைக்கு வர ஆர்வம் கா…
-
- 0 replies
- 277 views
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக சீனாவின் 'யுவான் வாங் 5' (Yuan Wang 5) எனும் கப்பல் - இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர திட்டமிட்டுள்ள செய்தி, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, இந்த கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. இது விண்வெளி ஆய்வில் ஈடுபடும் கப்பல் எனக் கூறப்படுகின்ற போதும், இதை ஓர் உளவுக் கப்பலாகவே இந்தியா பார்க்கிறது. இந்தக் கப்பலில் இருந்தவாறு 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இடங்களை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது. அப்படியென்றால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்தபடியே, இந்தியாவின் மிக முக்கியமான கேந்திர நிலையங்களை இந்த கப்பல் உளவு பார்க்கும் எ…
-
- 0 replies
- 320 views
-
-
கடனும், கப்பலும். – நிலாந்தன். யுவான் வாங் – 5 என்ற பெயருடைய சீனக் கப்பல் வரும் 11ம் தேதி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இருக்கிறது. கப்பல் கிட்டதட்ட ஒரு வார காலம் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்கும். இது ஏற்கனவே கோட்டாவின் காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நிகழும் விஜயம். அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுக்கூடாகப் பார்த்தால் அது இயல்பான ஒன்று. முன்னைய அரசாங்கம் ஏற்றுக்கொண்ட ஒரு விடயத்தில் இருந்து இப்போது இருக்கும் அரசாங்கம் பின்வாங்குவதில் அடிப்படையான வரையறைகள் உண்டு. இப்படி ஒரு கப்பல் வரப்போகிறது என்பது இந்தியாவுக்கும் ஏற்கனவே தெரியும். ஆனால் இந்தியா அந்த கப்பலின் வருகை தொடர்பாக அ…
-
- 0 replies
- 305 views
-
-
சீன கப்பலால் சிக்கும் இலங்கையும்: கைகொடுக்கும் இந்தியாவும் ஆசியாவின் பார்வை மட்டுமன்றி உலகின் பார்வையே, தற்போது முக்கியமான இரண்டு இடங்களின் மீதே விழுந்துள்ளது என்றால் அதில் தவறிருக்காது. ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றிருந்த நிலையில், தைவான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டமை முதலாவது பார்வையாகும். இரண்டாவது, ஓகஸ்ட் 11 ஆம் திகதியன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகைதரும் சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்திவாய்ந்த உளவுக்கப்பல், அங்கு ஓகஸ்ட் 17ஆம் திகதி வரையிலும் நங்கூரமிட்டிருப்பதாகும். சீன உளவுக் கப்பல் தொடர்பில், இலங்கை அரசாங்கத்…
-
- 0 replies
- 122 views
-
-
திராவிட இயக்கமும் ஆரிய மாயைகளும் மனுராஜ் சண்முகசுந்தரம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் ஆற்றிய உரையில், "ஆரியர் - திராவிடர் வேறுபாடு என்பது புவியியல் அடிப்படையிலானதே, இன அடிப்படையிலானது அல்ல!" என்றார். இது தற்போதைய அரசியல் போக்கு குறித்து சில முக்கியமான பார்வைகளை நமக்குத் தருகிறது. பாஜக ஆட்சி செய்யாத மற்ற மாநிலங்களின் ஆளுநர்களுக்கு நேரெதிராக ஆர்.என்.ரவி, சித்தாந்தக் காட்டுக்குள் காலடி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கும் திராவிட அரசியல் சித்தாந்தத்துக்கும் இடையிலான தொடர்புகள் பிரிக்க முடியாதவை. ஆகவே, ஆர்.என்.ரவியின் கூற்றுகளை நாம் கவனத்துடன் அணுக வேண்டும். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களாகிய ஆளுநர்கள் இப்ப…
-
- 1 reply
- 316 views
-
-
-
- 0 replies
- 669 views
- 1 follower
-
-
மக்கள் போராட்டங்களைப் பலவீனப்படுத்த ரணில் கையில் எடுத்துள்ள உபாயங்கள்-அகிலன் August 3, 2022 இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்த ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களில் முன்னணி செயற்பாட்டாளரான ஒருவர், டுபாய் செல்லவதற்காக சிறிலங்கன் விமானத்தில் ஏறிய பின்னர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுப் பலவந்தமாக இழுத்துச்செல்லப்பட்ட காட்சியை நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். விமானத்திலிருந்த பயணிகள் பலர் இந்த சம்பவத்தை தமது கைப்பேசிகளில் பதிவுசெய்து உடனடியாகவே பகிர்ந்திருந்தார்கள். விமானப் பயணிகளிலும் பலர் இந்தக் கைதை எதிர்த்தார்கள். ஆனால், எதனையிட்டும் கவலைப்படாமல் கைதான தனிஸ் அலி என்ற அந்த முன்னணி செயற்பாட்டாளர் விமானத்திலிருந்த…
-
- 0 replies
- 249 views
-
-
-
- 1 reply
- 680 views
- 1 follower
-
-
தவிச்ச முயல் அடிக்கும் வர்த்தகர்கள் August 1, 2022 — கருணாகரன் — நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கியிருக்கலாம். மக்களுக்கு வாழ்க்கைச் சுமையாக. ஆட்சியாளருக்கு அரசியல் நெருக்கடியாக, ஆட்சிச் சுமையாக. அதனால் அவர்கள் தீராத பிரச்சினைகளுக்குள்ளாகியிருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் இதற்குள் மிகப் பெரிய நன்மைகளைப் பெற்றிருப்பது ஒரு பெரிய கூட்டம். அது வணிகத்தரப்பாகும். முன்னெப்போதும் பெற்றிராத லாபத்தை இந்த நெருக்கடிக் காலத்தில் வர்த்தகர்கள் பெற்றிருக்கின்றனர். ஆம், அவர்கள் மட்டுமே. இன்னும் அவர்கள் லாபத்தைப் பெற்றுக் கொண்டேயிருக்கிறார்கள். இது அவர்களுக்குக் கிடைத்த கொடை – வர…
-
- 2 replies
- 402 views
-
-
சீனாவினால்... கடும் நெருக்கடியில், இலங்கை? -யே.பெனிற்லஸ்- அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைக்கு சீனாவால் புதிய தலையிடியொன்று ஏற்பட்டிருக்கின்றது. காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் உத்வேகமும், தன்னெழுச்சியான மக்கள் கூட்டத்தாலும் ராஜபக்ஷக்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு எதிராக நெருக்கடிகள் ஏற்பட்டபோது தான், தமது தவறான கொள்கைகளை உணர்ந்தனர். தாம் செல்லும் பாதையை மாற்றுவதற்கு முனைந்தனர். அதனால், ராஜபக்ஷக்கள் ‘யூ டேர்ன்’ எடுக்கும் போது நிலைமைகள் கையறு நிலைக்குச் சென்றுவிட்டன. இதனால் அவர்களால் பொதுமக்களின் எழுச்சிக்கு முன்னால் தாக்குப்பிடிக்கவில்லை. குறிப்பாக, சர்வதேச நாணயநித…
-
- 0 replies
- 454 views
-
-
இலங்கை வல்லரசுப்போட்டியின் மத்தியில் சிக்கிவிட்டதா? இலங்கையின் இன்றய நிலை பல ஊகங்களையும், கேள்விகளையும் எழுப்பி உள்ளது. ரணில் விசயத்தில், இந்திய, மேற்கு கைகள் உள்ளன என்ற நிலைப்பாட்டில் பல ஊடகவியலாளர்கள் இருந்தனர். ஆனால், டல்லஸ் ஆதரவான நிலைப்பாட்டினை எடுக்க சொல்லி இந்தியா வலியுறுத்தியதாக சில தமிழ் அரசியல்வாதிகள் வெளியே சில தகவல்களை கசிய விட, அதனை இந்திய தூதரகம் மறுக்க.... ரணில் இந்திய விருப்புக்குரியவர் இல்லையோ என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், சீனாவின் யுத்த கப்பல் ஒன்றுஇலங்கை வருவதும், அது குறித்து ரணில் அமைதி காப்பதும், இந்தியா அதீத கரிசனை காட்டுவதும் கவனிப்புக்குரியதாகி உள்ளது. மேலும், போராட்டம் நடத்தியவர்களில் பலர் கைதாகி உள்ளதும், போராட்டம…
-
- 20 replies
- 978 views
-
-
நீலன் திருச்செல்வம் - சிங்களவர்களுக்குப் பிடித்தமான அரசியல்வாதி கீச்சகத்தில் சில காலமாகக் குப்பை கொட்டி வருகிறேன். எல்லாம் இந்த பாழாய்ப்போன காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக் காரர்களினால் வந்த வினை என்று வைத்துக்கொள்ளுங்களேன். எப்படியாவது எமது வலிகளை, போராட்டத்திற்கான நியாயப்பாட்டினை, இன்றுவரை தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டுவரும் எமது தாயகத்தின் உண்மை நிலையினை சிங்களவர்களுக்கு சிறிதாவது எடுத்துக்கூறலாம் என்கிற சிறிய நப்பாசையினால் இதனை இன்றுவரை செய்துவருகிறேன். சில கீச்சகப் பதிவாளர்களின் கருத்துக்களை அவ்வப்போது படிப்பதுண்டு. அந்தவகையில் இன்று நான் படித்த ஒரு பதிவு தொடர்பாகவும், அதற்கான பின்னூட்டங்கள் தொடர்பாகவும், அப்பதிவின் செய்தி தொடர்பாகவும் பேசவேண்டும் என்று எண்ணியத…
-
- 6 replies
- 1.3k views
-
-
சுமந்திரனின் கருத்தும் வியாக்கியானமும் July 28, 2022 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — எதிர்கால அரசை அமைக்கும் உரிமை ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணிக்குக் கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டபய ராஜபக்சே மக்கள் ஆணையை இழந்ததைப் போலவே அவரது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் மக்கள் ஆணையை இழந்துள்ளது. எனவே, நாட்டின் எதிர்கால அரசைஅமைப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினருக்குத் தமது நாடாளுமன்றப் பெரும்பான்மையை உபயோகிக்கும் உரிமை கிடையாது’ (காலைக்கதிர் 15.07.2022 மின்னிதழ் மாலைப் பத…
-
- 26 replies
- 1.5k views
- 1 follower
-
-
போராட்டங்களில் மாற்றம் தேவை July 26, 2022 — கருணாகரன் — இலங்கையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட –நம்பப்பட்ட –காலிமுகத்திடல் போராட்டம் (Galle face Revolution) அப்படியே சுருங்கி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் மிகப் பெரிய எழுச்சியைக் கொண்ட Galle face Revoluation, யாருமே எதிர்பார்த்திராத வகையில் ராஜபக்ஸவினரை அதிகாரத்திலிருந்து அகற்றியது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியில் அசைக்கவே முடியாது என்றிருந்த கோட்டபாயவை நாட்டை விட்டே ஓட வைத்தது. ஆனாலும் இறுதியில் அது மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை பிரமராக்கி, இப்பொழுது ஜனாதிபதியாக்கியுள்ளது. எதிர்பார்த்திராத–பொருத்தமற்றவருக்கு – பெரிய பரிசை அளித்திருக்கிறது. இதற்கு ஒரு வக…
-
- 1 reply
- 313 views
-
-
காகமும் வடையும் நரியும்..! July 22, 2022 ~~~ அழகு குணசீலன் ~~~ பறவைகளில் தந்திரமானது காகம். மிருகங்களில் தந்திரமானது நரி. பாலர் வகுப்பில் படித்த ஞாபகம். வடை ஒன்றைப் பறித்துக்கொண்ட காகம் மரமொன்றில் இருந்ததாம். கீழே வந்த நரி அதைக் கண்டதாம். “காக்கையரே காக்கையரே உங்கள் அழகான குரலில் கா… கா…. என்று பாடுங்கள் பார்ப்போம் என்றதாம். காக்கையரோ சொண்டைத் திறந்து பாடத்தொடங்க வடை நிலத்தில் விழ, நரி வடையை கௌவிக்கொண்டதாம் . இலங்கை ஜனாதிபதித்தேர்தலில் சஜீத் தலஸ் காகத்தை ரணில் நரி ஏமாற்றிய கதை இது. இலங்கை இடைக்கால ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊதிதித்தள்ளிய ஊடகங்களுக்கும், நேர்காணல் என்ற பெயரில் அளந்து கொட்…
-
- 0 replies
- 605 views
-
-
நாளாந்த நடவடிகையில் ஒன்று இந்த BBC liveஇல் பேசுவது ஆனால் இன்று இன்னொரு ஊடகத்துக்கு இதே விடயங்களை சிங்களத்தில் தெரிவித்திருந்தேன். அதுவும் இங்கு இருக்கிறது. இன்று பேசியது தான் நாம் இங்கு இருப்பதன் முதன்மையான நோக்கும் கூட. https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0FCyXiHxpHoQ1FBdLVJN3t9bUG6TEQr3jHjJg4aNniDcUJA77NTMCCqDCfacBEeBDl&id=1184320359
-
- 1 reply
- 357 views
-
-
விளையாடும் அரசியல் வணிகர்கள்; வேடிக்கை பார்க்கும் மக்கள் July 21, 2022 — கருணாகரன் — இலங்கை நன்றாகக் குழம்பிவிட்டது. (அல்லது யாரோ குழப்பிவிட்டார்கள்!) ஏறக்குறையப் பைத்தியம் முற்றிய நிலையில் பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு இப்போதைக்கு முடிவில்லை. பெரும்பாலான சனங்களுக்கு என்ன நடக்கிறது? என்ன நடக்கப்போகிறது என்றே தெரியவில்லை. “ஏதோ நடக்கிறது நடக்கட்டும். இதில் நாம் என்ன செய்ய முடியும்? நம்மால் என்ன செய்ய இயலும்?” என்று சிலர் நினைக்கிறார்கள். முதலில் பொதுஜன பெரமுனவே பிழையானது. அதன் தலைமைப்பீடம் மோசமானது. ஜனாதிபதி கோட்டபாய, பிரதமர் மகிந்த உள்பட அத்தனை ராஜபக்ஸக்களும் குற்றவாளிகள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதற்கெதிராகத் திரண்டவர்கள் ரா…
-
- 0 replies
- 219 views
-
-
-
- 7 replies
- 426 views
- 1 follower
-
-
ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றார். இலங்கையின் பொது மக்கள் வாக்குகளினால் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ, மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில், நாட்டை விட்டு தப்பிச் சென்று, சிங்கப்பூரிலிருந்து கடந்த 14ம் தேதி தனது பதவி விலகலை அறிவித்தார். இதையடுத்து, கடந்த 15ம் தேதி பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, பதவி பிரமானம் செய்துக்கொண்டார். ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (20) நடத்தப்பட்டது. …
-
- 0 replies
- 193 views
-
-
தப்பியோட முன்னர் கோட்டாவிற்கு நடந்தது என்ன? ஐ.தே.க விற்கு மற்றுமொரு அதிஸ்டம்
-
- 0 replies
- 378 views
-
-
ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரணில் விக்கிரமசிங்கே கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது. புதிய ஜனாதிபதி தேர்வுக்காக, இலங்கையின் தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் இந்த…
-
- 1 reply
- 257 views
-
-
ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பாக - கூட்டமைப்பிற்கு ஒரு பகிரங்க மடல் யதீந்திரா நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையை தொடர்ந்து, நாடாளுமன்ற வாக்களிப்பின் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களை பிரதிநித்துவம் செய்பவர்கள் என்னும் வகையில், தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் அதே வேளை, உடனடி மற்றும் நீண்டகால அரசியல் நலன்களை கருத்தில் கொண்டும் செயலாற்ற வேண்டிய கடப்பாடு தங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அடிப்படையில் இது தென்னிலங்கை சிங்கள தரப்புக்களிடையிலான அதிகாரப் போட்டியாகும். இதனை ஜனநாயகம் என்னும், ஒற்றைச் சொல் கொண்டு அளவிட முடியாது. இதனை ஜனநாயகம் என்னும் சொல் கொண்டு அளவிட முடியுமென்றால், ஒரு ஆசனத்தை கொண்டிருந்த, ரணி…
-
- 0 replies
- 441 views
-
-
ராஜபக்ஷவினரின் தப்புக்கணக்கு சத்ரியன் ராஜபக்ஷவினர் தங்களின் பலத்தை மிகையாகவும், மக்களின் பலத்தை குறைவாகவும் கணித்து விட்டனர். முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த பெருமை மாத்திரமன்றி, மூன்று தசாப்தங்களாக சிம்மசொப்பனமாக விளங்கிய விடுதலைப் புலிகளுக்கும், முடிவு கட்டியவர்கள் ராஜபக்ஷவினர். அவர்கள் தனியாக நின்று அதனைச் செய்திராத போதும், தங்களால் தான் அதனை சாதிக்க முடிந்தது என்ற இறுமாப்பு அவர்களிடம் என்றுமே இருந்து வந்திருக்கிறது. தங்களின் ஆயுத பலம் மீது கொண்டிருந்த மிகையான நம்பிக்கை, விடுதலைப் புலிகள் போரில் தோல்வி காண நேரிட்டமைக்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. தங்களின் பலத்தை மிகையாக நம்புவதும், மதிப்பிடுவதும், போர்க்களத…
-
- 0 replies
- 409 views
-
-
அடுத்தது என்ன? என்ன செய்வது? July 17, 2022 — கருணாகரன் — அரசியல் நிலைமாற்ற அதிரடிகளின் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார். சரி, அடுத்து என்ன நடக்கப்போகிறது? நிலைமை சீரடையுமா? அல்லது மேலும் மோசமடையுமா? அவர் இந்தப் பதவியில் எவ்வளவு காலம் நீடிப்பார்? அதற்கு மக்களும் போராட்டக்கார்களும் அனுமதிப்பார்களா? அல்லது அரசியலமைப்பின் பிரகாரமே எல்லாமே நடக்கப்போகிறதா? சபாநாயகர் விடுத்த ஏராளம் அறிவிப்புகளில் எவையெல்லாம் நடக்கும்?எவையெல்லாம் நடக்காது? அடுத்த பிரதமர் யார்? அடுத்து எப்படி ஆட்சிக் கட்டமைப்பு இருக்கும்?நடக்கும்? புதிய அமைச்சரவை உருவாக்கப்படுமா?அல்லது உள்ள அமைச்சரவையில் திருத்தம் நிகழுமா? இப்படி ஏராளம் கேள்விகளோடுதான…
-
- 0 replies
- 373 views
-