நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகியுள்ள நிலையில், அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதற்கு விசேட கூட்டத்தொடர் ஒன்றை நடத்துமாறு இணை அனுசரணை வழங்கிய நாடுகளிடத்தில் கோருவதே பாதிக்கப்பட்ட தரப்புக்கு உடன் காணப்படும் நடைமுறைச்சாத்தியமான வழியாகும் என்று; தமிழர் இயக்கத்தின் அனைத்துலக வெளியுறவுத்துறைக்கான ஒருங்கிணைப்பாளர் பொஸ்கோ தெரிவித்தார்.; ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் அதில் பங்கேற்றுள்ள அவர் ஜெனீவாவிலிருந்து வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் தெரிவித்தார் அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,; கேள்வி:-ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் வலுவற்றதொன்றாகும் என்று …
-
- 0 replies
- 221 views
-
-
முஸ்லிம் மறும் மலயக அரசியல் ஆர்வலர்களுக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன் . பலமானது கட்சியா தனி நபரா என்கிற கேழ்விக்கு கட்சி அல்லது கட்சியை முழுமையாகவோ பெரும்பாகமாகவோ கட்டுப்படுத்தும் தனிநபர் என்பதுதான் வரலாற்றின் பதிலாக உள்ளது. இதுதான் ரணிலுக்கும் சஜித்துக்கும் உள்ள போட்டி. காலம் கடக்கமுன்னம் தோழர் மனோ கணேசனும் முஸ்லிம் தலைவர்களும் நிலமையை உணர்ந்து கொள்வது சிறந்தது. ஐக்கிய தேசியக் கட்ச்சியின் தலைவர் ரணிலா சயித்தா என்பதை யு.என்.பி மட்டும்தான் தீர்மானிக்கும். அதனை தீர்மானிப்பது ஒருபோதும் முஸ்லிம்களதும் மலையக தமிழர்களதும் வேலையல்ல நண்பர்களே. உங்கள் இனத்தின் வெற்றியும் உங்கள் கட்ச்சியின் வெற்றியும் மட்டுமே உங்கள் இலட்ச்சியம் என்பதை இப்பவாவது நீங்க உணரவேண்டும். அல்லத…
-
- 0 replies
- 256 views
-
-
யாழ்கள உறவுகளுக்கு வணக்கம், ஜோன் பிஷ்சரின் கீழே உள்ள டுவிட்டர் பக்கத்திற்கு சென்று உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள். நன்றி கிளியவன்
-
- 6 replies
- 601 views
- 1 follower
-
-
இலங்கையில் கார்ட்டூனிஸ்டாக இருந்த தனது கணவர் காணாமல் போனது குறித்து உண்மையான விசாரணையை தொடங்க வைப்பதற்கு சந்தியா எக்னெலிகோடாவுக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் கடந்த நவம்பரில் பெரும்பான்மை ஆதரவுடன் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டதும், முக்கியமான விசாரணை அதிகாரி மாற்றப்பட்டதில், நிலைமைகள் மாறும் என்று அவர் உணர்ந்தார். அரசியல் பிரச்சனையின் மறுபக்கம் குறித்து பிபிசியின் அன்பரசன் எத்திராஜன் செய்தி அளிக்கிறார். கொழும்பு நகருக்கு வெளியே அவருடைய வீட்டில் ஒரு மணி நேரம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது சந்தியா எக்னெலிகோடா வெளியில் எட்டிப்பார்த்தார். ''நீங்கள் இங்கு வந்து என்னுடன் பேசிக் கொண்டிருப்பது குறித்து இந்நேரம் காவல் துறையினருக்கு தகவல் சென்றி…
-
- 0 replies
- 521 views
-
-
-
- 0 replies
- 263 views
-
-
ரஷ்யாவின் இரும்பு மனிதர் விளாடிமிர் புடின். அதிபர், பிரதமர் என, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவின் அதிகார சிகரத்தில் இருப்பவர். வல்லரசாக இருந்த சோவியத் ரஷ்யா சிதறுண்டு போன பின், ரஷ்யாவை அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ ரீதியாக, துாக்கி நிறுத்தியவர். ரஷ்யாவின் உளவு அமைப்பான கே.ஜி.பி.,யின் உயர் பொறுப்பில் இருந்தவர். சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினுக்கு பின், நீண்ட காலமாக பதவியில் இருப்பவர். 1997ல், போரிஸ் எல்சின் பிரதமராக இருந்தபோது, கிரம்ளின் மாளிகையில் நுழைந்தார். அவரை எப்.எஸ்.பி., என்ற உள்நாட்டு உளவு அமைப்பின் தலைவராக நியமித்தார் எல்சின். 1999ல், எல்சின் பதவியை ராஜினாமா செய்தபோது, ரஷ்யாவின் இடைக்கால பிரதமரானார் புடின். 2000ம் ஆண்டு, அதிபரானார்; 2008ம் ஆண்டு வரை, இ…
-
- 0 replies
- 355 views
-
-
சர்வதேச விசாரணையை ஏற்க முடியாது என்றும் இணைஅனுசரணையில் இருந்துவிலகிக் கொள்கின்றோம் என்றும் இலங்கை அரசு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவித்திருந்தது. தவிர, உள்ளக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் இலங்கையின் அறிவிப்பு இருந்தது. இந்த அறிவிப்புத் தொடர்பில், பதிலளித்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர்; போர்க்குற்றம் தொடர்பான இலங்கையின் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை எனத் தெரிவித்துள்ளார். இவை மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நிகழ்வில் நடந்தவை. இலங்கை அரசின் மேற்போந்த அறிவிப்பும் அதற்கு ஆணையாளர் விடுத்த பதிலும் இவற்றின் முடிவுகள் என்னவாக அமையும் என் பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால் நாம் இங்கு கேட்பதெல்லாம் இலங்கையில் நடந்த போர்க்குற்றத்…
-
- 0 replies
- 457 views
-
-
”உள்ளக விசாரணை என்பது இலங்கை அரசாங்கத்தின் ஏமாற்று வேலைத்திட்டம்” - .வெ.கிருபாகரன் உள்ளக விசாரணை எனபது இலங்கை அரசாங்கத்தின் நீண்டகால ஏமாற்றுத்திட்டமாகும். முள்ளிவாய்க்காலின் பின்னர் உள்ளக விசாரணைகள், உள்ளக விசாரணைகள் என்று 11 வருடங்கள் சென்று விட்டன. அதன் பின்னர் இராணுவ வீரர்கள் மன்னிக்கப்பட்டுள்ளார்கள். மரண தண்டனை பெற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.இவைதான் இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டம். எனவே உள்ளக விசார ணைகளில் சர்வதேசத்துக்கும் நம்பிக்கையில்லை. இனிவரும் காலங்களில் அது இறுக்கமான தீர்மானத்துக்கு வழி வகுக்கும் என தமிழர் மனித உரிமைகள் மையத்தின் தலைவர் ச.வெ.கிருபாகரன் தெரிவித்…
-
- 1 reply
- 266 views
-
-
"சர்வதேச நாடுகள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது" - கஜேந்திரகுமார் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாத காலப் பகுதியிலேயே சர்வதேச நாடுகள் அதிருப்தி தெரிவிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளது. இந்த அரசாங்கத்தின் போக்கில் சர்வதேச நாடுகள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய ஒரு தேவை தற்போது அதிகரித்துள்ளது. ஆகவே அந்த அழுத்தங்களை எந்தெந்த இடங்களில் பிரயோகிக்க வேண்டும் என்பதில் சர்வதேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி யின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஜெனிவாவுக்கு வருகை தந்துள்ள கஜேந்திரகுமார் கேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவற்றைக் குறிப்பிட்டா…
-
- 0 replies
- 239 views
-
-
சிஏஏ சட்டத்தை இந்து - முஸ்லிம் விவகாரமாகப் பார்க்கக்கூடாது என சென்னையில் அச்சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசிய தலைவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் கையை மீறிப் போய்க்கொண்டிருப்பதாகவும் எச்சரித்தனர். தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக குடியுரிமை பாதுகாப்பு மாநாடு என்ற தலைப்பில் மிகப் பெரிய பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தி ஹிந்து குழுமத்தின் தலைவர் என். ராம், பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுப் பேசினர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக இருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், உடல்ந…
-
- 0 replies
- 689 views
-
-
பொதுத் தேர்தலுக்கான அறிவித்தல் எதிர்வரும் மார்ச் மாதம் வெளிவரலாமென நம்பப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் வெற்றிக்காக பொய் வேடம் தரித்துக் கொண்டு, தேர்தல் களம் இறங்குவதற்கான ஏற்பாடுகளில் சிலர் ஈடுபட் டிருப்பதைக் காணமுடிகிறது. இதுகாறும் மெளனம் சாதித்தவர்கள் இப்போது திடீரென விழித்துக் கொண்டவர்கள் போல சர்வதேச விசாரணை தேவை என்ற பொருள்பட கருத்துரைத்து வருகின்றனர். ஏலவே சிங்கள அரசுடன் சேர்ந்து கொண்டு, ஐ.நா மனித உரிமை ஆணையம் விதித்த நிபந் தனைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக் குக் கால அவகாசம் கொடுக்க வேண்டு மென்று கூறியவர்கள் இப்போது ஐ.நாவுக்கு அழுத்தம் கொடுப்பதுபோல தங்கள் உரை களையும் கருத்துக்களையும் மாற்றி வரு கின்றனர். சரி, பரவாயில்லை, முன்பு மோசம் செய்த வர்கள் இப்ப…
-
- 0 replies
- 240 views
-
-
இலங்கை வாழ் முஸ்லிம்களில் நூற்றுக்கு இரண்டு வீதமானோர் அடிப்படைவாத கருத்துகளில் தீவிரமாக உள்ளதாகவும் இந்நிலைமை எதிர்காலத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையலாமென்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடிப்படைவாத கருத்துகளுக்கு அடிமையாகியுள்ள இந்த முஸ்லிம்களை அந்த அடிப்படைவாத மனோநிலையிலிருந்தும் விடுவிக்க வேண்டும். அதற்கென பாதுகாப்பு அமைச்சு, சமூகம் மற்றும் உளவியலாளர்கள் ஒன்றிணைந்து வெகுவிரைவில் வேலைத்திட்டமொன்றினை ஆரம்பிக்க வேண்டுமெனவும் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு சுட்டிக்க…
-
- 23 replies
- 2.1k views
-
-
யாழ் பல்கலைகழக பகிடி வதை விசாரணை அறிக்கை தொடர்பாக - வ.ஐ.ச.ஜெயபாலன் ’ யாழ் பல்கலைக் கழக கிழிநொச்சி வளாகத்தில் 2020ம் ஆண்டு புதிய மாணவர்களுக்கான வரவேற்பும் பகிடி வதையும் குற்றச் செயல்மட்டத்துக்கு சீர்குலைத அதிற்ச்சிதரும் செய்திகள் 06.02.2020 அன்று வெளியாகி நமக்கெல்லாம் பேரதிற்சியை ஏற்படுத்தியது. மேற்படி சம்பவங்கள் தொடர்பான விசாரணை ஆரம்ப அறிக்கை யாழ் பல்கலைக் கழப் பதிவாளரால் 24.02.2020 வெளியிடபட்டுள்ளது. விசாரணைகள் யாழ் பல்கலைக்ழக மாண்புக்கேற்ப பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நீதிக்கும் அதேசமயம் சம்பந்தபட்ட மாணவர்களின் திருந்திய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்தும் வகையிலும் இடம்பெறுவது மகிழ்ச்சி தருகிறது. இதற்க்காக பழைய மணவன், முன்னைநாள் மாணவர் தலைவன் என்கிற வகை…
-
- 0 replies
- 552 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 43ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கூடும் போதெல்லாம் ஈழத் தமிழ் மக்கள் எங்களுக்கு நீதி கிடைக்குமா? நடந்த கொடுமைக்கு தண் டனை வழங்கப்படுமா? எங்கள் இனத்துக்கு உரிமை வழங்கப்படுமா? என ஜெனிவாவை நோக்கித் தவமிருப்பர். இந்தத் தவமிருப்பு இன்று நேற்றல்ல. பத்து ஆண்டுகளாக நீண்டு செல்கிறது. போர்க்குற்ற விசாரணை பற்றியும் தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை அரசு நிறை வேற்ற வேண்டிய நிபந்தனைகள் தொடர்பிலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தீர் மானங்களை நிறைவேற்றியதுடன் அதற்கு இலங்கை அரசின் ஒப்புதலையும் பெற்றிருந் தது. எனினும் ஒவ்வொரு தடவையும் ஜெனிவா கூட்டத் தொடர் ஆரம்பமாகும்போது, மனித உரிமைகள் ஆணையம் விதித்த ந…
-
- 0 replies
- 576 views
-
-
வித்தியா கொலை வழக்கு: தடயப்பொருளை பயன்படுத்திய பொலிஸ் பரிசோதகர்- விசாரணைகள் ஆரம்பம் யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை ஆவணங்களில் பதிவிடாமலும் தடயப் பொருளாக நீதிமன்றத்தில் ஒப்படைக்காமலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். தடயப் பொருளாக மோட்டார் சைக்கிள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படாமை சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்…
-
- 0 replies
- 393 views
-
-
நெருப்பில் பூத்த மலர் - சாய்ந்தமருது நகர சபை முகம்மது தம்பி மரைக்கார் / 2020 பெப்ரவரி 18 சாய்ந்தமருது பிரதேச மக்கள், பல வருடங்களாகக் கோரி வந்த உள்ளூராட்சி சபையை, அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (14ஆம் திகதி) நள்ளிரவு வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம், சாய்ந்தமருதுக்கு நகர சபை அந்தஸ்தை வழங்குவதாக, பொறுப்புக்குரிய அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளார். பல்வேறு விதமான சாத்வீகம், அரசியல் வழிமுறைகளிலான போராட்டங்கள் மூலமாகவே, தமது கோரிக்கையை, சாய்ந்தமருது மக்கள் வென்றெடுத்து உள்ளார்கள். 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த கரைவாகு தெற்கு (இப்போதைய சாய்ந்தமருது பிரதேசம்), கரைவாகு மேற்கு, கரைவாகு வடக்கு ஆகிய மூன்று கிராம சபைகளையும்…
-
- 1 reply
- 418 views
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் அண்மையில் சிறைச்சாலைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்திருந்தார். இதில் விசேடமாக தமிழ் அரசியல் கைதி யான ஆனந்தசுதாகரனையும் ஜனாதிபதி சந்தித்துள்ளார். தமிழ் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரன் சிறைத்தண்டனையை அனுபவித்து வருபவர். கடந்த வருடம் அவரின் மனைவி நோய் காரணமாக இறந்துபோக, அவரது இரண்டு சிறுபிள்ளைகளும் அநாதைகளாயினர். மனைவியின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்காக ஆனந்தசுதாகரனை சிறைச் சாலை உத்தியோகத்தர்கள் கிளிநொச்சிக்கு அழைத்து வந்தனர். இறுதிக்கிரியை முடிந்து உடல் எடுத்துச் செல்லப்பட, ஆனந்தசுதாகரன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறுவதற்குச் சென்றார். அப்போது அவரது பெண் குழந்தை தந்தையின் பின்னால் சென்று த…
-
- 0 replies
- 272 views
-
-
பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இந்தியாவைப் பயன்படுத்தி, பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக் கொள்வதற்கான, முயற்சிகளில் இறங்கி யுள்ள நிலையில், அவர் நாட்டின் பெயரைக் கெடுத்து விட்டார் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்த ஆரம்பித்திருக்கின்றன. இந்தியாவிடம் பெறப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான தவணைக் காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீடிப்புச் செய்து தருமாறு இந்தியாவிடம் கோரியிருப்பதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைக்கும் என்று நம்புவதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் கூறியிருந்தார். கடனை திருப்பிச் செலுத்துவதற்கு இயலாமல் உள்ளது, அதற்கு மேலதிக காலஅவகாசம் தர வேண்டுமென்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இந்தியாவிடம் கோரவில்லை. …
-
- 0 replies
- 277 views
-
-
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு, வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்த போராளிகளும் கொல்லப்பட்டபோது இந்தியா அதனை வேடிக்கை பார்த்து நின்று ஒரு பெரும் வரலாற்றுத் தவறை இழைத்திருந்தது என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வாரத்துக்கொரு கேள்வியில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கேள்வி ;- இந்திய விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய அரசு பெரு வரவேற்பளித்து இராணுவ பொருளாதார உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன? இலங்கை…
-
- 2 replies
- 594 views
-
-
திடீர் வேகத்துடன் பணிகள் முடிக்கப்பட்டு, அவசர அவசரமாக திறக்கப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த போதும், வெற்றிகரமானதாக செயற்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கடந்த ஒக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்ட போதும், நவம்பர் 11ஆம் திகதியே யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான பயணிகள் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. எயார் இந்தியாவின் இணை நிறுவனமான எலையன்ஸ் எயார் நிறுவனம் வாரத்தில் மூன்று நாட்களுக்கு மாத்திரம் சேவைகளை நடத்துகிறது. 72 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ஏரிஆர் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற போதும், இப்போது இந்த சேவையில் பயணிகளின் எண்ணிக்கை திருப்திகரமானதாக இல்லை என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன…
-
- 2 replies
- 379 views
-
-
ஆர்.பி கொரோனா வைரஸ் ஓர் உயிரியல் ஆயுதமா? அது சீனாவால் உருவாக்கப்பட்டதா? அல்லது சீனாவில் உருவானதா? இன்றேல் வுஹான் ஆய்வு கூடத்திலிருந்தும் தப்பிய வைரஸால் கொரோனா உருவானதா? என பல்வேறு கோணங்களில் கேள்விகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ள நிலையில், இதன் உண்மைத் தன்மை குறித்து சர்வதேச தொலைக்காட்சி சேவை ஒன்று ஆய்வொன்றை மேற்கொண்டது. அதில் கூறப்பட்ட கருத்துக்கள் வருமாறு: பிரித்தானிய பத்திரிகையான டெய்லி மெயில் பத்திரிகையே கொரேனா வைரஸ் ஆய்வு கூடமொன்றிலிருந்து வெளியானதாக தகவலொன்றை முதலில் வெளியிட்டது. அதில் சீனா வுஹானில் சார்ஸ் மற்றும் இபோலா மற்றும் கொடிய வைரஸூகள் தொடர்பில் ஆராய ஆய்வு கூடமொன்றை நிறுவியது. இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு அதிலிருந்தும் தப்பிய வைரஸ் இதற்கான முக்கிய …
-
- 0 replies
- 426 views
-
-
தமிழ் தலைவர்கள் விட்டுக்கொடுத்து செயற்படவேண்டும் - சுமந்திரன் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கெதிராகக் கூறும் மாற்றுத் தலைமை என்னும் கோசம் எம்மை வலுவிழக்கச் செய்யும் சதியே எனத்தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். காரணம், தமிழரின் பிரச்சினைபற்றி எவரோடு பேசுவது என அரசு கைவிரிக்கும் நிலை வேண்டாம். தமிழ் தேசியக் கூட்டமைப்போடு மட்டுமே பேச வேண்டும் என்னும் ஆணையை வழங்குங்கள். எமது அடிப்படை பிரச்சினையான தமிழ் தேசிய பிரச்சினை என்ன? இந்நாட்டில் நாம் எத்தகைய பிரஜைகளாக வாழ்கிறோம். சம பிரஜைகளாகவா, இரண்டாம் மூன்றாம் தரப் பிரஜைகளாகவா? உரிமைகளோடு வாழ வேண்டுமா? அவற்றைக் கேட்கக…
-
- 8 replies
- 1.1k views
-
-
பலாப்பழம் எவ்வளவுதான் பழுத்தாலும் அதன் பால் கையில் ஒட்டிக்கொள்வதை விலத்துவதே இல்லை. முதிர் மரங்கள் தரும் பலாக்கனிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனாலேயே பலாப்பழப் பண்பாடு என்றுரைத்தோம். ஆக, எவ்வளவுதான் முதிர்ச்சியடைந்தும் இயற்கையின் அனுபவங்களை உள்ளுணர்ந் தும் ஏனைய கனிதரும் மரங்களின் கூட்டத்தில் கலந்திருந்தும் பால் விலத்தி, பலாச் சுளை தரமுடியாத அளவிலேயே பலா மரங்களின் பண்பாடு உள்ளது. இத்தகைய பலாப்பழப் பண்பாடு போலவே பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவ தைக் கொடுமையும் அமைந்துள்ளது. ஆம், நிறைந்த போட்டிகளுக்கு மத்தியில் பரீட்சையில் உயர்பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்துக்குச் செல்வதென்பது பெருமைக்குரியது. என் பிள்ளை பல்கலைக்கழகத்தில் படிக்கிறான் என்று கூற…
-
- 1 reply
- 345 views
-
-
பகடிவதை: இனியாவது புனிதங்களை களைவோமா? பல்கலைக்கழகங்கள் பற்றி, எமது சமூகத்தில் கட்டி எழுப்பப்பட்டுள்ள புனிதங்கள் பல. அவையே, பல்கலைக்கழக சமூகத்தை, அனைத்துக்கும் மேலானதாக, கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக மாற்றியுள்ளன. ‘கற்றோருக்கு எல்லாம் தெரியும்’ என்ற மனோநிலை, தமிழ்ச் சமூகத்தை ஆண்டாண்டு காலமாகப் பீடித்த நோய். அது, படித்தவர்கள் அரசியல் செய்தால், உரிமைகள் கிடைக்கும் என்று நம்பி, வாக்களிக்கத் தொடங்கிய காலம் முதல் இருந்து வரும் ஒன்று. ‘அப்புக்காத்து’ அரசியலின் அடிப்படையும் இதுதான். இன்றுவரை, பல்கலைக்கழகங்களை அதுசார்ந்த சமூகங்களைக் கேள்வி கேட்காத, விமர்சிக்காத ஒரு சமூகமாக, நாம் இருந்து வந்திருக்கிறோம். ஆனால், எமது சமூகத்தில் புரையோடிப் போயுள்ள அனைத்து…
-
- 1 reply
- 680 views
-