நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
அண்ணா பாவம்,அண்ணாவை எல்லோரும் ஏமாற்றிபோட்டியல்! – பம்பைமடு தடுப்பு முகாமில் …..! By Admin On Feb 13, 2019 Share வாழ்க்கையில் நாம்பட்ட துயர்கள் எப்போதும் நம் மனதில் இருந்து இலகுவில் அழிந்துவிடுவதில்லை, இறுதி யுத்தத்தில் ஓராயிரம் வலிகள் சுமந்தோம்.அந்த வலிசுமந்த நினைவுகளின் ஓர் சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்…. நான் இறுதியுத்த காலப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் தடுப்பு முகாமில் சிறிது நாட்களும் அதன்பின் இடமாற்றம் செய்யப்பட்டு பம்பைமடு தடுப்பு முகாமிலும் தங்கியிருந்தேன், நான்கு பகுதிகளாக A,B,C,D என பிரிக்கப்பட்ட கட்டடங்களைசூழ முட்கம்பி வேலிகளிற்குள் பெண்போராளிகள் தங்கவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
கடந்த ஆண்டு, 40 மீன்பிடி படகுகளுடன், வடக்கு இலங்கையை நோக்கி ஒரு கூட்டத்தைச் சேர்ந்த மக்கள் புறப்பட்டனர். இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் தீவை மீட்பதே இந்த பயணத்தின் நோக்கம். இந்த மீட்புப்பயணம் எவ்வாறு எந்த உயிர்ச்சேதமும் இல்லாமல் நடந்தது என்பதை விளக்குகிறார், பிபிசியின் ஆயிஷா பெரேரா. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி, வடக்கு இலங்கையின் இரணைமாதா நகரின் அருகில் நின்று கடலைப்பார்த்த யாராக இருந்தாலும், அவர்களுக்கு அந்தக்காட்சி சற்று வியப்பை அளித்திருக்கும். திருச்சபையின் பாதிரியார் முதல் மீன்பிடி பணியில் ஈடுபடும் மகளிர், உள்ளூர் ஊடகவியலாளர்கள் என அனைத்து சம…
-
- 2 replies
- 852 views
-
-
ஐக்கிய அரபு இராச்சியத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் முதல் தடவையாக ஒரு விடயத்தைப் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம் அது. கன்னியாஸ்திரிகள் மீதான பாதிரிமார்களின் பாலியல் சேஷ்டைகள், வதைகள் உண்மையே என்பதை முதல் தடவையாகப் போப் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டமை கவனம்பெற்றது. உலகளவில் இருந்து வரும் இந்தப் பிரச்சினை பல நாடுகளிலும் இனம் காணப்பட்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டுக்கு இடையில் கன்னியாஸ்திரி ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்தார் என்ற குற்றச்சாட்டில், இந்தியாவின் பஞ்சாப் மாநில ஜலந்தர்…
-
- 15 replies
- 1.9k views
-
-
தகவல் அறியும் உரிமை சட்டமும், தட்டிக்கழிக்கும் செயற்பாடுகளும் – – மயூரப்பிரியன் – February 10, 2019 தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை உள்ளது என மார்தட்டி கொண்டாலும், தகவல் அறியும் உரிமை சட்டம் அமுலுக்கு வந்து கடந்த பெப்ரவரி 4ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் அது தொடர்பில் விழிப்புணர்வு அல்லது அதனை நடைமுறைபடுத்தல் என்பது எவ்வளவு தூரத்தில் நிற்கின்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வடக்கில் குறிப்பாக யாழ்ப்பணத்தில் அரச அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவல்களை பெற்றுகொள்வதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இருந்த போதிலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழான ஆணைக்கு…
-
- 0 replies
- 624 views
-
-
சுமைலா ஜாஃப்ரி பிபிசி ஆசியா பீபி வீட்டுக்கு வெளியே இழுத்து வரப்பட்டு, கோபமாக இருந்த கும்பலால் தாக்கப்பட்ட…
-
- 0 replies
- 743 views
-
-
ஈ.பி.ஆர்.எல்.எப் மேற்கொண்ட படுகொலை விபரங்கள்! By Admin Last updated Feb 7, 2019 Share 1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சமாதானப் படை (IPKF) என்ற பெயரில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அழைத்துகொண்டு இலங்கைக்கு வருகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத் துணைக் குழுக்களாகச் செயற்படுகின்றது. இந்திய இராணுவத்துடன் இணைந்து மக்கள் மீதான தாக்குதல்களிலும் சமூகவிரோதச் செயற்பாடுகளிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஈடுபடுகின்றது. சுரேஷ் பிரேமச்சந்திரனின் தலைமையில் வரதராஜப்பெருமாளின் ஆலோசனையுடன் மண்டையன் குழு என்ற கொலைகாரக் குழு உருவாக்கப்படுகின்றது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தாலும், ஈ.பி.ஆர்.எல்.எப் இனாலும் புலி உறுப்பினர்கள் என்ற ச…
-
- 6 replies
- 2.9k views
-
-
கண்டுகொள்ளப்படாத மக்கள் கூட்டம் மொஹமட் பாதுஷா / 2019 பெப்ரவரி 08 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:28 Comments - 0 ‘வெளியே வந்து பாருங்கள்... போதும் போதும் என்று சொல்லுகின்ற நம்மில் பலருக்கு, அளவுக்கு அதிகமாகவே வசதிகள் கிடைக்கப் பெற்றிருப்பதைக் காண்பீர்கள்’ என்று வெளிநாட்டுக் கவிஞர் ஒருவர் எழுதினார். உண்மைதான்! நாட்டில் பெரிய பெரிய விவகாரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்ற நாம், சமகாலத்தில், உண்பதற்கு ஒருவேளை உணவும் அடிப்படை வசதிகளும் இன்றி, அன்றாட வாழ்க்கையைக் கூட, வாழ்வதற்கு வழிதெரியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் கணிசமான மக்கள் கூட்டம் நம்மிடையே இருக்கின்றார்கள் என்பதை, மறந்து விடுகின்றோம். அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்காக, இன்றைய, நேற்றைய அரசாங்…
-
- 0 replies
- 418 views
-
-
புலம்பெயர் தமிழர்களின் சீன வாந்தியும் சிந்தனை கோளாறும் “இலங்கையின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் சீனா. இலங்கையில் சீனா தலையிடாதிருந்தால், தமிழீழம் கிடைத்திருக்கும். நாம் எல்லோரும், ஊர் போய்ச் சேர்ந்திருப்பம். ஒருவேளை, தனிநாடு கிடைக்காட்டியும் அமெரிக்காவும் இந்தியாவும் வாங்கித் தந்திருக்கும்”. இதுதான், புலம்பெயர் தமிழர்கள் ஒரு பகுதியினரின், இலங்கையின் அயலுறவு தொடர்பான, இன்றைய நிலைப்பாடாகும். இதன் அடுத்த கட்டத்துக்கு இப்போது சில புலம்பெயர்ந்த ‘செயற்பாட்டாளர்கள்’ என்று சொல்வோர் சென்றிருக்கிறார்கள். அண்மையில், மேற்குலக நாடொன்றில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தொடர்பான கருத்தரங்கொன்றில், இந்த அறிவுஜீவிகள் “இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்க…
-
- 0 replies
- 349 views
-
-
உண்மையை ஒழிவின்றி உரைத்த ரிஷாட் பதியுதீன் காரை துர்க்கா / 2019 பெப்ரவரி 05 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:56 Comments - 0 நேற்று முன்தினம் (03) இரவு ஏழு மணியளவில், வவுனியா செல்லும் பொருட்டு யாழிலிருந்து வரும் புகைவண்டியை எதிர்பார்த்து, கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் காத்திருந்தோம். எமக்கு அருகில் இரு முதியவர்கள் உரையாடிக் கொண்டு இருந்தார்கள். “முன்னால் அமைந்திருக்கும், கிளிநொச்சி மாவட்ட செயலகம் ஏன் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது” என ஒருவர் வினாவினார். “நாளைக்கு (நேற்றைய தினம்) சுதந்திர தினமாம்” என மற்றையவர் விடை பகிர்ந்தார். “தமிழ் மக்களுக்கு, அது கிடைத்து விட்டதே?” எனத் தொடர்ந்து மற்றையவர் கேட்டார். தனது இரு கைகளையும் விரித்தார்,…
-
- 0 replies
- 686 views
-
-
சட்டமும் கருணையும் மொஹமட் பாதுஷா / 2019 பெப்ரவரி 03 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:00 Comments - 0 இன, மதம்சார் தொல்பொருட்களும் அடையாளங்களும், அந்த இனத்தின் அல்லது மதத்தைப் பின்பற்றும் மக்கள் கூட்டத்தின் வரலாற்றை, அடுத்த சந்ததிக்குக் கொண்டுக் கடத்திச் செல்பவையாகும். ஒரு மதப் பிரிவினர், அவ்விடத்தில் வாழ்ந்ததற்கான எச்சமாகக் காணப்படுகின்றமையால், அவை, பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதில், இருவேறு கருத்துகள் கிடையாது. ஆனாலும், இலங்கையைப் பொறுத்தமட்டில், எல்லா மதங்களின் தொன்மையான அடையாளங்களையும் பேணிப் பாதுகாப்பதற்கு, சமஅளவான முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்று கூற முடியாத அளவுக்கு, நடைமுறை யதார்த்தம் இருக்கின்றது. அந்த வகையில், அநுராதபுரம் ஹொரவப்பொத்தான…
-
- 0 replies
- 520 views
-
-
அமைச்சர் மனோவுடன்- சிறப்புச் செவ்வி!! பதிவேற்றிய காலம்: Feb 3, 2019 கேள்வி: – புதிய அரசமைப்புக்கான வரைவில் ஏக்கிய ராஜ்ஜிய/ ஒருமித்தநாடு என்று மூன்று மொழிகளிலும் குறிப்பி டப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது. ஆனால் ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்களும், தலைமை அமைச்சரும் ஏக்கிய ராஜ்ஜிய என்றுதான் மூன்றுமொழிகளிலும் இருக்கும் என்று சொல்கின்றார்கள். உண்மை எது? பதில்: – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்மொழிவின் அடிப்படையில் மூன்று மொழிகளிலும் ஏக்கிய என்ற சொல்லைப் பயன்படுத்திவிட்டு அதற்குப் பக்கத்திலேயே விளக்கத்தையும் கொடுத்துள்ளார்கள். ஏக்கிய என்ற சொல்லுக்குத் தமிழ…
-
- 0 replies
- 560 views
-
-
கூட்டுஒப்பந்தத்திற்குப் பின் உருவாகியுள்ள எதிர்ப்புகள் தோட்டத்தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்த விவகாரம் இன்னும் நீறுபூத்த நெருப்பாக கணன்று கொண்டிருக்கிறது. முதல் தடவையாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை தொழிற்சங்க கூட்டமைப்பு தவிர்த்துள்ளது. இரண்டு தொழிற்சங்கங்கள் மட்டுமே கைச்சாத்திட்டுள்ளன. மட்டுமல்லாது சில திருத்தங்களுடன் மீண்டும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்று வருகின்றன. ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத ஏனைய மலையக தொழிற்சங்கங்களைப்பற்றி இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கமும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தமது தரப்பில் பேச்சுக்களில் ஈடுபட்ட ஒரு தொழிற்சங்கம் கூட்டு ஒப்பந்தத்தை புறக்கணித…
-
- 0 replies
- 321 views
-
-
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடுமையானது - விளக்குகின்றார் ஜனாதிபதி சட்டத்தரணி தவராஜா புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கான சட்டமூலத்தில் நெகிழ்ச்சித் தன்மை இருப்பதுபோன்று காண்பிக்கப்பட்டாலும் கடுமையான பிரிவுகள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன. ஆகவே அச்சட்டமூலத்தினை உடன் விலக்கிக்கொள்ளவேண்டுமென ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா தெரிவித்தார். தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டத்தினை நீக்கி சர்வதேச நியமங்களுக்கு அமைவாக புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, அனுபவமும் பி…
-
- 0 replies
- 426 views
-
-
எங்கும் அரசியல் எதிலும் அரசியல்! அழிவின் விளிம்பில் தமிழர்கள் Report us Dias 1 hour ago ஆன்மீகவாதிகள் இறைவன் துரும்பிலும் இருப்பான், தூணிலும் இருப்பான் என்பார்கள். இறை நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும், வாழ்வியலில் அவர்களை நல்வழிப்படுத்தவதற்குமாக இதனைக் கூறுவார்கள். ஆனால் இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றானோ இல்லையோ, இலங்கையைப் பொறுத்தமட்டில் அரசியலே எங்கும் வியாபித்திருக்கின்றது. எங்கும் அரசியல் எதிலும் அரசியல் என்பதே நிலைமையாக உள்ளது. அதனை நிகழ்வுகளின் ஊடாகவும், நடவடிக்கைகளின் ஊடாகவும் தெளிவாகக் காணவும் உணரவும் முடிகின்றது. ஆயினும், இது நாட்டு மக்களை நல்வழிப்படுத்துவதற்கான அரசியலாகத் தெரியவில்லை…
-
- 0 replies
- 842 views
-
-
கோத்தாபயவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்! அவர் யாரென்று மக்களுக்கு தெரியும்! - எம்.ஏ சுமந்திரன் February 2, 2019 எம்.ஏ சுமந்திரன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ யாரென்று தமிழ் மக்களுக்கு தெரியும் என்றும் அவருக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, அரசியல் பயணம், சர்வதேச விசாரணை, அரசியல் தீர்வு, புதிய அரசியலமைப்பு முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்த வீரகேசரிப் பத்…
-
- 1 reply
- 458 views
-
-
பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய் ஆர்.மகேஸ்வரி / 2019 ஜனவரி 30 புதன்கிழமை, பி.ப. 05:55 Comments - 0 கடந்த 4 மாதங்களாக, இழுப்பறி நிலையில் காணப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம், நேற்று முன்தினம் (28), கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கைச்சாத்தானது. இதனால், ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை விட, ஒப்பந்தத்துக்குப் பின்னர், மலையகம், தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் சூடு பிடித்துள்ளன. இவ்வாறு எத்தனை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை நாள் சம்பளமான ஆயிர…
-
- 0 replies
- 217 views
-
-
புலிகளின் முன்னாள் பேச்சாளர் – இந்நாள் ஜனாதிபதி சட்டத்தரணி இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளராக கலந்துகொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி அருணாசலம் முத்துக்கிருஷ்ணன், ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த அருணாசலம் முத்துக்கிருஷ்ணன் 18.01.2019 (வெள்ளிக்கிழமை) அன்று பிரதம நீதியரசர் நளின் பெரேரா முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இருந்து 1956 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கலைபீட பட்டதாரியான இவர் லண்டன் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் 1964 இல் சட்டமானிப் பட்டத்தினை பெற்றுக்கொண்டார். …
-
- 1 reply
- 722 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தை எப்படி காப்பாற்றப்போகிறோம்?!… செ.துஜியந்தன் January 30, 2019 இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? மக்கள் எக்கேடு கெட்டுப்போனால் என்ன? நான் நன்றாக இருந்தால் சரி, என் பொக்கற்றை நிரப்பினால் சரி, ஏ.சீ காரிலும், ஓ.சீ வீட்டிலும் ஒய்யாரமாய் படுத்துக்கிடந்து அவ்வப்போது ஊடகங்கள் ஊடாக அறிக்கைகளை விட்டுக் கொண்டு இருந்தால் சரி என்ற நிலைப்பாட்டிலே பல அரசியல்வாதிகள் இருக்கின்றனர். அவர்களை நம்பி வாக்களித்த மாவட்ட மக்களைப்பற்றி கிஞ்சித்தும் நினைத்துப் பார்ப்பதில்லை. பாரதியார் சொன்னதைப்போல் எல்லோரும் ‘ வாய்ச் சொல்லில் வீரராகவே’ இருக்கின்றனர். இன்று கிழக்கு மாகாணம் சகல துறைகளிலும் பின்தங்கிய மாகாணமாகவுள்ளது. அதிலும் இங்கு வாழும் தமிழ் மக்க…
-
- 2 replies
- 743 views
-
-
’2/3 பெரும்பான்மை இன்மையே புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதற்கான நல்ல சகுனம்’ - எம்.ஏ.சுமந்திரன் Editorial / 2019 ஜனவரி 30 புதன்கிழமை, மு.ப. 09:59 Comments - 0 - மேனகா மூக்காண்டி நாட்டின் மிக முக்கியமானதும் முன்னேற்றகரமானதுமான அரசமைப்புத் திருத்தங்கள் அனைத்தும், அரசாங்கத்துக்குப் பெரும்பான்மை இல்லாத சந்தர்ப்பத்தில் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவ்வாறான சந்தர்ப்பத்தில் தான், அனைவரது ஒத்துழைப்புடனும், முன்னேற்றகரமான விடயங்கள் நடந்தேறின. ஆகையால், புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதற்கு, அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லாதிருப்பது தான் நல்ல சகுனம். இதனால், மிக முன்னேற்றகரமான அரசமைப்பை உருவாக்கக்கூடியதாக இருக்குமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற…
-
- 1 reply
- 611 views
-
-
லாயக்கு முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜனவரி 29 செவ்வாய்க்கிழமை, மு.ப. 07:18Comments - 0 ஒரு மக்கள் கூட்டம் தனக்கான நிலத்தையும் மொழியையும் இழத்தல் என்பது மிகவும் ஆபத்தானது. ஓர் இனத்தை அழித்து விடுவதற்கு, அவர்களை நிலமற்றவர்களாக மாற்றி விடுவதே, மிகச் சூழ்ச்சிகரமான வழியாகும். நிலத்தை மீட்பதற்காகவும் மொழிக்கான அங்கிகாரத்துக்காகவும் உலகில் ஆரம்பித்த சண்டைகள், இன்னும் முடிந்தபாடில்லை. இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களும், நீண்ட காலமாக, இந்த ஆபத்துக்குள் சிக்கி விட்டன. ‘தேசிய இனம்’ எனும் அடையாளத்தை, சமூகமொன்று பெற்றுக் கொள்வதற்கு, நிலமும் மொழியும் மிகப் பிரதானமானவையாகும். அதனால்தான், தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் நிலங்களை அபகரிக்கும் முயற்சிகளில், பெரு…
-
- 0 replies
- 329 views
-
-
தேர்தல் அரசியலுக்கு வந்த பிரியங்கா எம். காசிநாதன் / 2019 ஜனவரி 28 திங்கட்கிழமை, பி.ப. 04:43 Comments - 0 இந்திரா காந்தியின் பேர்த்தியும் சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி, காங்கிரஸ் சார்பில், திடீரென்று களமிறக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு மண்டலத்துக்கான, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகள், மத்திய அரசாங்கம் அமைப்பதற்குத் தேவையான 272 எம்.பிக்கள் கொண்ட பெரும்பான்மையை நிர்ணயிக்கும் வல்லமை படைத்தவை. இதை நன்குணர்ந்துள்ள அரசியல் கட்சிகள், தேர்தல் தந்திரங்களையும் கூட்டணி முடிவுகளையும் அவசர அவசரமாக எடுத்து வருகின்றன. அதன் ஒரு…
-
- 0 replies
- 585 views
-
-
மன்னார் நகர்ப் பகுதியில் சதோச வளாகத்துக்கான கட்டடம் அமைப்பதற்காக நிலம் தோண்டப்பட்டது. அந்த இடத்தைத் தோண்டியதில் மனித எலும்பு எச்சங்கள் தென்பட்டன. அங்கு தொடர்ந்து எலும்பு எச்சங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவை போர்க்காலத்தில் இராணுவத்தால் கொன்று புதைக்கப்பட்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் என்று கரிசனை கொள்ளப்பட்டிருக்கிறது. இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஏராளமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக முறைப்பாடுகள் எழுந்தன. இறுதிப்போருக்கு முன்னரும் வடக்கு மாகாணத்தில் ஏராளமான தமிழர்களை இராணுவம் கொன்று குவித்திருந்தத…
-
- 1 reply
- 326 views
-
-
ஜெனீவா:நல்லிணக்கம்:பொறுப்புக்கூறல்:ஜீ.எஸ்.பி. மறுபரிசீலனை:இலங்கையில் இந்தியாவின் வகிபாகம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கூறுவது என்ன ? அரசியல் மனித உரிமைகள் நல்லாட்சி மதிக்கப்படாவிடின் ஜீ.எஸ்.பி.யை மறுபரிசீலனை செய்ய நேரிடுமென ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். ஜெனிவாவில் இம்முறையும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படலாம். ஆனால் அதனை ஜெனிவாவில் நடைபெறும் கலந்துரையாடல்களிலேயே தீர்மானிப்போம் என இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டங் லை மார்க் எமக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். தற்போது எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் மனந்திறக்கிறார். கேள்வி: ஜெனிவா …
-
- 0 replies
- 204 views
-
-
இன, மத சகிப்பு தன்மையும் புத்திசாலித்தனமும் மொஹமட் பாதுஷா / 2019 ஜனவரி 25 வெள்ளிக்கிழமை, மு.ப. 07:03 பல்லின சமூகங்களும் பல மதங்களைப் பின்பற்றுகின்ற மதக் குழுமங்களும் வாழ்கின்ற இலங்கை போன்ற நாடுகளில், மத சகிப்புத்தன்மை என்பது மிக முக்கியமானதாகும். இன ஒற்றுமை, மத நல்லிணக்கம், சகவாழ்வு என்பவற்றுக்கெல்லாம் முன்னதாக, மத சகிப்புத்தன்மை கட்டியெழுப்பப்படுவது அடிப்படையானது. சிறுபான்மைச் சமூகங்களின் மத நம்பிக்கைகளைப் பெரும்பான்மைச் சமூகங்கள், நெருக்குவாரங்களுக்கு உள்ளாக்குவதோ, நாசமாக்குவதோ ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. மறுபுறத்தில், பெரும்பான்மைச் சமூகத்தின் மத விடயங்களை, சிறுபான்மையினர் யாரும் கேலிக்குள்ளாக்குவதும் பெரும் சிக்கல்களைக் கொண்டு வரும். சுரு…
-
- 0 replies
- 821 views
-
-
படிப்படியாக இலங்கையர்களின் ஆதரவைப்பெற்றுவரும் கொழும்பு துறைமுக நகரத்திட்டம் கடலில் இருந்து நிலமீட்புப்பணிகள் பூர்த்தியடைந்ததை அடுத்து கொழும்பு துறைமுகத்துக்கு அருகாக நிர்மாணிக்கப்பட்டுவரும் சீனாவின் நிதியுதவியுடனான கொழும்பு துறைமுக நகரத்திட்டம் வடிவம் பெற ஆரம்பித்துவிட்டது. விரைவில் அது கடல்சார் கட்டமைப்புக்களையும் ஏனைய கட்டமைப்புக்களையும் அமைக்கும் பணிகளுக்கு தன்னைத் தயாராக்கிவிடும். கொழும்பு துறைமுக நகரத்திட்டம் படிப்படியாக அதேவேளை, அதிகரித்த வேகத்தில் இலங்கையர்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றுவருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. அதன் வசதிகளைப் பயன்படுத்துவதற்கு பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். " ஆரம்பத்தில் துறைமுக நகரத்திட்டத்தை முன்ன…
-
- 0 replies
- 677 views
-