நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
பிரதமரின் அலுவலகத்தில், பிரதமர் மகிந்தவை பார்த்து சலூட் அடித்தார் IGP பூஜித ... நாட்டு பாதுகாப்பு நிலை குறித்து ஆய்ந்த பின்னர், எழுந்த சலூட் அடித்தார் அவர். கூடவே, தலையை குனிந்து... ஐயா, அந்த FCID என்ற ஒன்று இருக்கிறதே. அதை களைத்து, அதுக்கு பொறுப்பான DIG யை வேறு வேலைக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்திருக்கிறேன், என்றார். நீ ஒரு முடிவும் செய்ய வேண்டாம், (ஒரு ஆணியும் புடுங்க வேணாம்.) நாம் முடிவு எடுத்து, உனக்கு அறிவிப்போம் என்று சொல்லி விட்டார் மகிந்த. அவர் போனதும், இருக்கிற பிரச்சனைக்குள, இந்தாள் இப்படி செய்தால், கிழி , கிழி என்று கிழித்து துளைப்பார்கள், என்று பக்கத்தில் நின்ற தனது நம்பிக்கைக்கு உரியவர்களுக்கு சொன்னார் மகிந்த . MR on Police Chi…
-
- 0 replies
- 723 views
-
-
பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெறும் 2015 பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கை சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சேனக ஹரிபிரிய டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக விருதினை இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். இந்தியாவினால், வருடாந்தம் நடத்தப்படும் இந்த பாதுகாப்பு மாநாட்டில் உலகில் பல நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு சம்பந்தமான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். பயங்கரவாதம் …
-
- 6 replies
- 613 views
-
-
தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகளான விடுதலைப்புலிகளும், மேற்குலக நாடுகளும். இற்றை வரை 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப்புலிகள் ஆரம்பக் கட்டத்தில் கெரில்லாப் போர் மூலம் போராடி வந்து, தற்போது மரபு வழியில் முப்படைகளையும் அதாவது தரைப்படை, கடற்படை, வான்படை ஆகியவற்றை உள்அடக்கி பலம் வாய்ந்ததன் காரணமாக சிறிலங்கா அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் படைச் சமநிலை உருவாக்கியதன் விளைவு போர் நிர்ப்பந்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தம் 2002 ல் உருவாகி ஐந்து வருடங்கள் கடந்தும், ஆறாவது வருடத்தை நோக்கிக் கொண்டிருக்கும் போதும் இதுவரை காலமும் ஒருவித சமாதான உடன்படிக்கையும் , மேற்குலகம் சிறிலங்கா அரசாங்கத்தின் ஏதேச்சைத்தனமான சமாதான நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா…
-
- 17 replies
- 5.8k views
-
-
* ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 6 replies
- 5.5k views
-
-
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐந்து அரசியல் கட்சிகள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பொதுநிலைப்பாடொன்றுக்கு தற்போது முன்வந்திருப்பது வடக்கு – கிழக்கு தமிழ் சமூகத்துக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு – கிழக்கு தமிழ்ச் சமூகம் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? இரண்டு பிரதான வேட்பாளர்களில் தமிழர்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும்? அவ்வாறு ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொள்வதற்கு முன்பாக தமிழ்ச் சமூகத்தின் சார்பாக முன்வைக்க வேண்டிய நிபந்தனைகள் எவை? இவ்வாறான விடயங்கள் பற்றியெல்லாம் ஆராய்ந்து தீர்மானத்துக்கு வருவதற்காக ஆறு தமிழ்க் கட்சிகள் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில ஒன்றாகச் சந்தித்துக் கொண்டன. …
-
- 1 reply
- 599 views
-
-
யாழ். மே தினக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் சிங்கக்கொடி பிடித்த விவகாரம், தென்னிலங்கையில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதைத் தெரிந்துதான் செய்தேன் என்று அடம்பிடிப்பதால் சிங்களத்திற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. கொடி பிடித்து நல்லிணக்கத்தை உருவாக்கலாமென்று சம்பந்தன் கற்பிதம் கொண்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேத்தானந்த தேரர் விடுவதாக இல்லை. வட கிழக்கு தமிழர் தாயகம் என்பது புனைக்கதை, பௌத்த கோவில்களை இடித்தே, திருக்கோணேஸ்வரமும் திருக்கேதீஸ்வரமும் கட்டப்பட்டதென தேரர் புது விளக்கம் தருகின்றார். திருமலை பத்திரகாளி அம்மனின் வாகனம் சிங்கம் என்பதால், பௌத்த கோவிலை உடைத்து காளி கோவில் நிர்மாணிக்கப்பட்டதாக மேதானந்த தேரர் கூற முற்படலாம். இம் மாதத்தோடு முள்ளிவாய்க்கால் இன அழி…
-
- 0 replies
- 548 views
-
-
பெய்ஜிங், (சின்ஹுவா )</strong> 100 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர், ஆஸ்திரிய -ஹங்கேரிய சாம்ராச்சியத்தின் முடிக்குரிய வாரிசான கோமகன் பிரான்ஸ் பேர்டினண்ட் சரஜீவோவில் கொலை செய்யப்பட்டதையடுத்து தோன்றிய நெருக்கடியை கையாளுவதில் அன்றைய பெரிய வல்லரசுகள் இழைத்த தொடர்ச்சியான புவிசார் அரசியல் தவறுகள் முதலாவது உலகப்போருக்கு வழிவகுத்தன. இன்று உலகம் ஏற்கெனவே உலகளாவிய ' போர் ' ஒன்றுக்குள் மூழ்கிக்கிடக்கிறது. இத்தடவை எதிரி கண்ணுக்குப்புலப்படாத -- முன்கூட்டியே அறிந்திராத ஒரு வைரஸாக இருக்கின்ற போதிலும், பயங்கரமான புவிசார் அரசியல் விளையாட்டுக்களின் பேயுரு இன்னமும் வானில் உலாவுகிறது. அது ' போரை ' மேலும் படுமோசமானதாக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது. கொரோ…
-
- 0 replies
- 380 views
-
-
'சமஷ்டித் தீர்வுக்காகவே ஆட்சியாளர்களுடன் பேசுவோம்': த.சித்தார்த்தன் செவ்வி சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காகவே தமிழ் மக்கள் ஆணை வழங்குகின்றார்கள். அத்தகைய தீர்வினைப் பெறுவதற்காக நாம் தொடர்ந்தும் ஆட்சியில் உள்ளவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என்று புளொட் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான த.சித்தார்த்தன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது கடுமையான முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு உங்களுடைய பதில் என்ன? பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் தமிழ் மக்களின் ஏறக்குறைய ஏகோபித்த ஆணையை பெற்ற தரப்பாக இருக்கின்றது. …
-
- 0 replies
- 226 views
-
-
இன்றைய செய்தி இது: ஞாயிற்றுக்கிழமை அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இன்று காலை 10 மணியளவில் கிளி நொச்சி 155 ம் கட்டைப் பகுதியில் பரீட்சார்த்த பயணத்தில் ஈடுபட்டிருந்த புகையிரத்தத்தினால் முதலாவது பொதுமகன் பலியெடுக்கப்பட்டுள்ளார். அன்றைய செய்தி: 2005 ல் ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், தனது சொந்த தேர்தல் தொகுதியான, ஹம்பாந்தோட்ட பகுதியில் முதலாவது தேர்தல் பரப்புரையினை ஆரம்பித்தார் மகிந்த ராஜபக்ச. திறந்த வெளி அரங்கம் ஒன்றில் நிகழ்ந்த இந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், மகிந்த வெக்கை காரணமாக புழுக்கத்தில் அவதிப் பட்டார். மேலே இருந்த மின் காத்தாடி வேலை செய்ய வில்லை. எங்கிருந்தோ மின் பொறியியலாளர் அழைக்கப் …
-
- 4 replies
- 829 views
-
-
கட்டுரை: குருதியில் நனைந்த சாட்சியங்கள் ஈழப்படுகொலை ஓர் ஊடகவியலாளரின் சாட்சியம் ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் தமிழில்: என்.கே. மகாலிங்கம் அதிபயங்கரமான படுகொலைகள் நடந்த அந்தப் பொன்னிற மணல் பிரதேசத்திலிருந்து தப்பி வருகிறார் லோகீசன். ஆறு அடி உயரம். மழிக்கப்படாத தாடி. நீண்ட குழம்பிய தலைமுடி. இருபத்தேழு வயது. தன் தந்தையை ஒரு குழந்தையைப் போல் தூக்கி வருகிறார். தன் தலைக்கு மேலாகப் பறந்துகொண்டிருக்கும் துப்பாக்கிக் குண்டுகளை அவர் கவனிக்கவில்லை. காலடியில் கிடக்கும் செத்த உடல்களைக் கவனிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவருக்கு இப்போது தண்ணீர்த் தாகம். பயங்கரமான தண்ணீர்த் தாகம். அது மட்டுந்தான் அவருக்கு இப்போது நினைவிலிருக்கிறது. அது 2009ஆம் ஆண்டு ஏ…
-
- 0 replies
- 1.9k views
-
-
கனடாவின் 150-ஆம் பிறந்த நாள் : யாருக்கு கொண்டாட்டம் ? ஐரோப்பியர்கள் வட அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே செவ்விந்தியர்கள், இனுவிட், மேட்டிசு உள்ளிட்ட பழங்குடி இன மக்கள் அங்கே வாழ்ந்து வந்தனர். ஜூலை முதல் நாள் அன்று பெருநகரங்கள், நகரங்கள், பட்டித்தொட்டியெங்கிலும் தன்னுடைய 150 வது ஆண்டு பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடியது ஒரு முதலாளித்துவ நாடு. அதே நேரத்தில் இந்த கொண்டாட்டம் தங்களுக்கு எதிரான இனவெறி, இனப்படுகொலை மற்றும் காலனித்துவம் பற்றிய ஒரு குறியீடு என்று இந்த விழாவை புறக்கணித்து பல்வேறு இடங்களில் பேரணிகள், போராட்டங்கள் நடத்தினர் அதே நாட்டின் ஒரு பகுதி மக்கள். அவர்கள் இந்த கொண்டாட்டங்களுக்கு பன்னெடுங்காலம் முன்பிருந்…
-
- 1 reply
- 728 views
-
-
ராஜராஜனும் வெற்றிமாறனும்: யார் இந்து? ராஜன் குறை கிருஷ்ணன் ராஜராஜ சோழன் இந்து மன்னனா அல்லது தமிழ் சைவ மன்னனா? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் பலருக்கும், ‘இது என்ன புதுக்குழப்பம்?’ என்று வியப்பாக இருக்கிறது. பெயரில் என்ன இருக்கிறது என்று சிலர் கேட்கலாம். பெயரில்தான் எல்லாம் இருக்கிறது என்று ஒருவர் சொல்லலாம். ஒன்று மட்டும் நிச்சயம். பெயரில் அரசியல் இருக்கிறது. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மணி விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் அதைத்தான் கூறினார். நமது இருப்பே அரசியல்தான் என்று திருமாவளவன் தெளிவுபடுத்தியதாகக் கூறினார். இதைத்தான் ‘ஆன்டு - பொலிடிக்கல்’ (onto-political) என்று கூறுவார் அரசியல் கோட்பாட்டாளர் வில்லியம் கனோலி. வெற்றிமாறன் தன்னுடைய பேச்சில், எப்…
-
- 0 replies
- 304 views
-
-
தமிழர்களிடம் சாதி என்றொரு வந்தேறி: வி.இ.குகநாதன் 06/10/2018 இனியொரு... இந்துக்களைப் பொறுத்தவரையில் அங்கிங்கு எண்ணாதபடி எங்கும், எல்லாவற்றிலும், நீக்கமற நிறைந்திருக்கும் சாதியானது தமிழர்களையும் விட்டுவைக்கவில்லை. “இப்போதெல்லாம் யார்தான் சாதி பார்க்கிறார்கள்” என்று மேம்போக்காகப் பேசுபவர்களின் முகத்திலடித்தாற்போல இந்தக் கிழமை நடைபெற்ற கச்சநந்தம் சாதிய வன்முறையும் (சிவகங்கை மாவட்டம்-தமிழகம்), யாழில் வரணி அம்மன் தேரினை கனரகப் பொறி(JCB digger) மூலம் இழுத்த நிகழ்வும் காணப்படுகின்றன. இதில் முதலாவதாக கச்சநந்தம் ஊரில் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படுமிருவர் தேநீர் கடையில் (தமது)காலிற்குமேல் கால் போட்டுக்கொண்டு தேநீர் குடித்தயினைக் கண்டு தமது சாதிப்பெருமை களங…
-
- 0 replies
- 537 views
-
-
22 OCT, 2023 | 10:34 AM (லியோ நிரோஷ தர்ஷன்) 'ஒரு பாதை ஒரு மண்டலம்' முன்முயற்சி திட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின்போது எழுத்து மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இராஜதந்திர கொந்தளிப்புகளை பிராந்தியத்தில் ஏற்படுத்தியுள்ள 'ஷி யான் 6' ஆய்வுக் கப்பலை இலங்கைக்கு அனுப்பாதிருக்க சீனா தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடவிருந்த குறித்த சீன ஆய்வுக் கப்பலின் வருகையை நவம்பர் மாதம் வரை ஒத்திவைக்குமாறு அரசாங்கம் கோரியிருந்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே 'ஷி யான் - 6' ஆய்வுக் கப்பலின் இலங்கைக்கான விஜயத்தை சீன தரப்பு இரத்து செய்துள்ளதாக அறிய முடிகி…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
‘இஸ்லாமிய பிரிவினைவாதச் செயற்பாடுகள் 10 வருடங்களுக்கு முன்னரும் இருந்தன’ Editorial / 2019 மே 08 புதன்கிழமை, பி.ப. 08:07 Comments - 0 இஸ்லாமியப் பிரிவினைவாதக் குழுக்களின் செயற்பாடுகள், இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போதும் காணப்பட்டன. யுத்தத்துக்குப் பின்னர், இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்து, அதற்குரிய நடவடிக்கைகளையும் எடுத்து வந்ததாக, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வழங்கிய செவ்வியின் முழு விவரம் வருமாறு, கே: முப்பது வருட யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் நிறைவில், எதிர்பாராத ஓர் அசாதாரண நிலைமைக்கு இலங்கை முகம்கொடுக்க நேரிட்டது ஏன்? இதனை 10 வருடங்களுக்குள் இடம்பெற்ற சம்பவம…
-
- 0 replies
- 315 views
-
-
அப்படிச் சொன்னவர்கள் இப்போது வாயே திறக்கவில்லை - மு.க...! திராவிட பிழைப்புவாத லாவணி அரசியலின் உச்சம் - ஈழதேசம்..! [size=3] தி.மு.க., தலைவரின் கேள்வி பதில் அறிக்கை..? அதென்ன..உலகத்தில் எங்குமே இல்லாத கேள்வி பதில் அறிக்கை..? ஒன்று பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு பேட்டி கொடுப்பார்கள். அல்லது பத்திரிக்கை செய்தி என்று சில பேப்பர்களை அந்தந்த மீடியாவிடம் கொடுப்பார்கள். இவ்வாறு யாராவது கேள்வி பதில் பத்திரிக்கை செய்தி என்று எங்கேயாவது கொடுதிருக்கிரார்களா..?அதுதான்...திராவிட இனமான மு.க.வின் தனி பாணி. வழக்கமாக கேள்விகளை மீடியாக்காரர்கள் கேட்பார்கள், பதில்களை சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகள் அல்லது நபர்கள் அளிப்பார்கள். கேள்வியும் நானே பதிலும் நானே என்று ஒரு பத்திரிக்கை ச…
-
- 0 replies
- 610 views
-
-
கடந்த மாதம், 29-ம் திகதி எகிப்து நாட்டை சேர்ந்த “எகிப்து ஏர்” என்ற பயணிகள் விமானம், அதே நாட்டில் உள்ள அலெக்சாண்டிரியா என்ற நகரிலிருந்து எகிப்தின் தலைநகரான கெய்ரோவிற்கு, விமானக் குழுவினர் உள்பட ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களுடன் புறப்பட்டபோது மர்ம நபர் கடத்தியது நினைவிருக்கலாம். பிறகு சைப்ரஸ் நாட்டில் தரையிறக்கப்பட்டு பயணிகள் விடுவிக்கப்பட்டனர். விமானத்தைக் கடத்திய சயிஃப் அல்தின் முஸ்தஃபா, சைப்ரஸ் நாட்டில் தஞ்சமடைய கடத்தியதாகவும், சைப்ரஸில் உள்ள தன் முன்னாள் மனைவியைச் சந்திக்க வேண்டி கடத்தியதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், அதே விமானத்தில் பயணம் செய்த அப்து அல்லாஹ் இ ஆஸ்மாவி என்ற 31 வயதுடைய அறுவை சிகிச்சை நிபுணர், அந்த விமானப் பயண அனுபவத்தை…
-
- 0 replies
- 453 views
-
-
முஸ்லிம் கூட்டமைப்பு உருவானால் முஸ்லிம் கட்சிகள் அழிந்திடுமா? மொஹமட் பாதுஷா முஸ்லிம் கட்சிகளும் அம்மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்றாகச் சேர்ந்து இயங்க வேண்டுமென்ற குரல்கள், தற்போது அழுத்தமாக ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. சமகாலத்தில், அவ்வாறானதோர் அமைப்பாக்கம் தேவையில்லை, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு உருவாகி விட்டால், முஸ்லிம்களின் தனித்துவக் கட்சி அடையாளங்கள் அப்படியே அழிவடைந்து, தூர்ந்து போய்விடும் என்று விதண்டாவாதமும் முன்வைக்கப்படுகின்றது. இலங்கையில், முஸ்லிம்களின் அரசியல், பல பரிணாமங்களைக் கடந்து வந்திருக்கின்றது. பெருந்தேசியக் கட்சிகளின் ஊடான அரசியல் …
-
- 0 replies
- 232 views
-
-
>சமுதாயத்தில் கணனியையும் இணையத்தொடர்பையும் பயன்படுத்துவதற்கான வசதியைக்கொண்ட பிரிவினருக்கும் அந்த வசதியைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாத பிரிவினருக்கும் மத்தியிலான இடைவெளியே ' டிஜிட்டல் பிளவு ' ( Digital divide ) என்று அழைக்கப்படுகிறது. இந்த பிளவு நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையில் பாரியளவில் அகலமானதாக இருப்பதுடன் நகர்ப்புறங்களிலும் கூட வசதிபடைத்தவர்களுக்கும் வசதியில்லாத பின்தங்கிய மக்கள் பிரிவினருக்கும் இடையில் இடைவெளி பாரியதாக இருக்கிறது. புதிய கொரோனாவைரஸ் உலகெங்கும் பரவத்தொடங்கியதும் உலக நாடுகள் தொற்றுநோயைக்கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை (Lock down) நடைமுறைப்படுத்துகின்றன. அரசாங்க சேவையில் உள்ள ஊழியர்களும் தனியார்துறை ஊழியர்களும் அலுவலகங்களு…
-
- 0 replies
- 274 views
-
-
-
வன்னியிலுள்ள பொது மக்களை வெளியேற அனுமதிக்காவிட்டால், விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாக கருதபட்டு தடைசெய்யப்படுமென மஹிந்த தெரிவித்துள்ளார். ஒரு தலைப்பட்சமாக ஒப்பந்தத்தை கிழித்து, யுத்தத்தை அரசு ஆரம்பித்த பொழுதே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் செயற்பாடுகள் தடைசெய்யபட்டு விட்டன. 83லும் 98லும் தடை செய்தபோது, புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களளை அரசு காரணம் காட்டியது. அதேபோன்று வெளிச்சக்திகளின் அழுத்தத்தால் 87ல், 2002ல் போர் நிறுத்தம் ஏற்பட்டபோது, விடுதலைப் புலிகள் மீதான தடையை அரை மனதோடு நீக்கியது அரசு. ஆனாலும், இம் முறை மேற்கொள்ள உத்தேசித்துள்ள 'தடை' நகர்வில் பிராந்திய அரசியல் நகர்வொன்று பின்னிப் பிணைந்துள்ளது. தமிழ்நாட்டு அழுத்தத்தால், கொழும்…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் முக்கிய விடயங்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கின்றது. அரசாங்கத்தினால் 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த சூட்டோடு, அவருடைய முதலாவது விஜயம் அமைந்திருந்தது. முள்ளிவாய்க்கால் என்ற கடலோரப் பிரதேசத்தில் ஒரு சிறிய நிலப்பகுதிக்குள் முற்றுகையிடப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் மீது மோசமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருந்தன. அவர்களும் அந்தத் தாக்குதலை எதிர்த்து மூர்க்கமாகப் போரிட்டிருந்தார்கள். இந்த மோதல்களுக்கிடையில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் சிக்கி சின்னாப…
-
- 0 replies
- 506 views
-
-
-
மனம் திறந்துள்ளார் பொப் இசைப் பாடகி மாயா. இலங்கையில் பிறந்த மாதங்கி அருட்பிரகாசம் பின்னர் அரசியல் தஞ்சம் கோரி பிரித்தானியா வந்தார். ஈழத் தமிழ் பெண்ணான இவர், பின்னர் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பொப் இசைப் பாடகியாக இருக்கிறார். மாதங்கி என்ற பெயரைச் சுருக்கி எம்.ஐ.ஏ என்று மாற்றிக்கொண்டார். மடோனா போன்ற உலகப் புகழ்மிக்க பாடகிகளுடன் இவர் இணைந்து பல இசை நிகழ்வுகளை நடத்தி இருக்கிறார். சமீபத்தில் இவர் மனம் திறந்து பேசியிருக்கிறார். தான் ஒரு பாடகியா இல்லை அரசியல் வாதியா என்று யாரும் முடிவெடுக்க முடியாது. பாடகி அரசியல் பேசக்கூடாது என்று விதிகள் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடப்பது ஒரு இனப்படுகொலையே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை குறித்து…
-
- 19 replies
- 1.3k views
-
-
ஜெய்ப்பூர்: தமது பாட்டி இந்திரா மற்றும் அப்பா ராஜிவைப் போல நானும் கொலை செய்யப்படலாம்.. அதற்காக அச்சப்படவில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உருக்கமாக பேசியுள்ளார்.ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி 2வது கட்டமாக இன்று பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி பேசியதாவது: நான் என் உள்ளத்தில் இருப்பதையே பேசி வருகிறேன். இதுவரை நான் சொல்லாத விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இதைப்பற்றியெல்லாம் பேசத்தேவையில்லை.. இருப்பினும் சொல்கிறேன்..எங்களுக்காக என் அப்பா ராஜிவ் காந்தி போட்ட கட்டுப்பாடுகளை உடைத்து எங்களைக் காப்பாற்றியவர் பாட்டி இந்திராதான். என்னுடைய பாட்டியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கு முன்பாக அவர் மீது கையெறி குண்டுகளை வீச…
-
- 2 replies
- 676 views
-