நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, மிக கடுமையான அளவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இலங்கையின் வரலாற்றில், இதற்கு முன்னர் இந்தளவுக்கு அதன் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்ததில்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் தேதி, ஆட்சியமைத்த போது, அமெரிக்க டாலர் ஒன்றின் இலங்கைப் பெறுமதி 131 ரூபாய் 25 சதமாக இருந்தது. ஆனால், இன்றைய தினத்தில் (03 ஆம் தேதி) அமெரிக்க டாலர் ஒன்றின் பெறுமதி 170 ரூபாய் 75 சதமாக உள்ளது. இதன் காரணமாக, நாட்டில் எரிபொருளுக்கான விலை சடுதியாக அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் 117 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் தற்போதைய விலை, 149 ரூபாயாகும். இதன் காரணமாக, உள்நாட்டில் பெரும்பாலான பொர…
-
- 1 reply
- 830 views
-
-
உலக மசாலா: குட்டி ஸ்டீவ் இர்வின்! ஆஸ்திரேலியாவில் வசிக்கிறான் 5 வயது சார்லி பார்கர். இவன்தான் உலகின் இளம் முதலை வேட்டைக்காரன். முதலைப் பண்ணையில் தினமும் தன் பெற்றோருடன் வேலை செய்து வருகிறான். 3 வயதில் இருந்தே முதலைக் குட்டிகளைப் பிடித்து விளையாட ஆரம்பித்துவிட்டான். பள்ளிக்குச் செல்லும் நேரம் தவிர்த்து, சீருடையில் முதலைப் பண்ணையில் தன் நேரத்தைச் செலவிடுகிறான். ப் விக்டோரியாவில் உள்ள பல்லரட் விலங்குகள் பூங்காவில் தினமும் ஆமை, முதலை, முயல் போன்ற விலங்குகளுக்குத் தன் கைகளால் உணவு கொடுப்பது சார்லியின் முக்கியமான பணி. பெற்றோர் கண்காணிப்பில் ஒவ்வொரு வேலையையும் செய்து வருகிறான். விலங்குகளைப் பார்ப்பதை விட, சார்லி விலங்குகளைக் கையாள்வதைப் பார்ப்பதற்கு மக்கள் பெரிதும் ஆர்வம…
-
- 1k replies
- 150.2k views
-
-
வடக்கு மாகாண சபை சாதித்தது என்ன? பதிவேற்றிய காலம்: Oct 4, 2018 வடக்கு மாகணா சபையின் ஆயுட்காலம் முடிவடையவுள்ள நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அது சாதித்தவற்றை ஒரு கணம் நினைத்துப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்குமென நம்பலாம். 1987ஆம்ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்பமையில் மாகாண சபைகள் அமைக்கப்பட்டன. அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. இரண்டு மாகாணங்களுக்கும் பொதுவானதொரு மாகாணசபையே அமைக்கப்பட்டது. இதனால் வடபகுதி மக்கள் மாகாண சபையுடன் தொடர்பான தமது விடயங்களைக் கவனிப்பதற்கு திருகோணமலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் க…
-
- 0 replies
- 363 views
-
-
யாழ். திரைப்பட விழா விட்ட பெருந்தவறு புருஜோத்தமன் தங்கமயில் / 2018 ஒக்டோபர் 03 புதன்கிழமை யாழ். சர்வதேசத் திரைப்பட விழா இன்று புதன்கிழமை ஆரம்பிக்கின்றது. நான்காவது ஆண்டாக நடைபெறும், குறித்த திரைப்பட விழாவில் கவனம்பெற்ற உள்நாட்டு - வெளிநாட்டு படங்கள் திரையிடப்படுகின்றன. உள்ளூர் கலைஞர்களின் குறும்படங்களுக்கான வாய்ப்பும் வழங்கப்படுகின்றது. ஆனால், இம்முறை திரைப்பட விழா ஆரம்பிப்பதற்கு முன்னரேயே, திரைப்பட விழாக்குழு கருத்துச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது, சர்ச்சைக்குரிய ‘Demons in Paradise’ என்கிற படத்தின் இயக்குநரான ஜூட் ரட்ணம். இம…
-
- 0 replies
- 435 views
-
-
தமிழரின் உணர்வுகளை உணரத் தவறினால்... காரை துர்க்கா / 2018 ஒக்டோபர் 02 செவ்வாய்க்கிழமை உலகத் தமிழ் இனத்தின் இதயத்தால் என்றும் பூஜிக்கப்படும் உயர்ந்த நாமம், ‘முள்ளிவாய்க்கால்’ ஆகும். இந்தப் பூமிப்பந்தில், தமிழ் இனத்தின் இறுதி மூச்சு உள்ள வரை, இப்பெயர் பெரும் வீச்சுடன் என்றும் உயிர் வாழும். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான, ஆயுதப் போராட்டம், அமைதி கொண்ட புனித பூமி முள்ளிவாய்க்கால். அவ்வாறாக, என்றுமே விலத்தி வைக்க முடியாத, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை, மனதில் இருத்தி, நினைவு கொள்ளல் நியாயமானது, நீதியானது, நிராகரிக்க முடியாதது. இவ்வாறாக, இவ்வருட நினைவேந்தலை (மே 18) தனியார் வங்கி ஒன்றின் கிளிநொச்சிக் கிளையில் நடத்தியமை, விவகாரத்தை ஏற்படுத்த…
-
- 0 replies
- 333 views
-
-
குருந்தூர் மலை விவகாரம் – பணம் இல்லாததினால் பிக்குகளை அழைத்தோம் – தொல்லியல் திணைக்களத்திற்கு நீதிமன்று எச்சரிக்கை : October 1, 2018 முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை தண்ணிமுறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் புத்தர் சிலைஒன்றினை நிறுவும் நோக்கில் புத்தர் சிலை வைப்பதற்காக பௌத்த மதகுருமார்கள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்தவர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 04.09.18 அன்று புத்தர் சிலை உள்ளிட்ட கட்டுமான பொருட்களுடன் குருந்தூர் மலை பிரதேசத்துக்கு சென்றிருந்த வேளை பிரதேச இளைஞர்களினதும் கிராம மக்களினதும் எதிர்பினால் புத்தர் சிலை அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளதுடன் ஒட்டுசுட்டான் பொலீசாரின் தலையீட்டுடன் ஏற்பட்ட முறுகல் நிலை சுமூகமாக்கப்பட்டது.…
-
- 0 replies
- 303 views
-
-
சிறுவர்களின் உரிமையை மறுக்கும் நாடுகளை உலகம் மயிலிறகால் தடவுகிறது – கடந்துபோகாத சிறுவர் தினம்! October 1, 2018 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஈழ நிலத்தில் குழந்தைகள் கைது செய்யப்படுகிறார்கள். குழந்தைகள் பதாகைகளை ஏந்தியவாறு போராடுகிறார்கள். குழந்தைகள் தங்கள் வாழ் நிலத்திற்காக போராடுகிறார்கள். உரிமை மறுக்கப்பட்ட அடக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட இனத்தின் குழந்தைகள் எதையெல்லாம் சந்திக்கவேண்டுமோ அதை எங்கள் குழந்தைகள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால்தான் மாபெரும் இழப்பும் மாபெரும் அபாயங்களும் நின்று மி…
-
- 0 replies
- 304 views
-
-
தனது நாட்டை மீண்டும் பேண்தகு வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா தயாராகியுள்ளது. அடுத்துவரும் பத்தாண்டில் வளர்ந்து வரும் சந்தைகளில் தமக்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காகத் தம்மை நன்றாகத் தயார்ப்படுத்தும் சில நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் உள்ளடங்குவதாக அண்மையில் மக்கின்சி பூகோள நிறுவகத்தால் – McKinsey Global Institute – மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிறிலங்காவின் இந்த வளர்ச்சிக்கு சீனா தடையாக இருக்கும். சிறிலங்காவின் மனித மூலதனமே அதன் பலமாக உள்ளது. 2015ல் சிறிலங்காவின் மனித மேம்பாட்டுச் சுட்டியானது 0.766 ஆகக் காணப்பட்டது. இதனால் சிறிலங்காவானது உயர் மனித மேம்பாட்டு வகைக்குள் உள்ளடக்கப்பட்டது. உலக வங்கியால் மேற்கொள்ளப்பட்…
-
- 0 replies
- 773 views
-
-
இலங்கை போரில் காணாமல் போனோர் பற்றி அறிய ஆர்.டி.ஐ. உதவுமா? அருணா ராய் பதில் Aruna Roy ''நாட்டின் எந்தவொரு குடிமகனும் கேள்வி எழுப்பலாம். நெருக்கடி, சிக்கல்கள் நிறைந்த சூழ்நிலைகளில் கூட தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மிகவும் உதவுகிறது. ஜனநாயகம் எவ்வளவு முக்கியமோ (ஆர்டிஐ) அவ்வளவு முக்கியமானது. கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும்.'' என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து உறுதியாக பேசினார் இந்திய அரசியல் சமூக செயற்பாட்டாளர் அருணா ராய். சர்வதேச தகவல் அறியும் உரிமை தினம் அக்டோபர் 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அரச சேவை என்பது மக்களின் சேவையாக அறுதியிடப்படுகிறது. யார் வேண்டுமானாலும் கேள்வியை எழுப்பலாம். ஒட்டு மொத்த அரசாங்கமும் மக்களுக்கு பதில…
-
- 0 replies
- 250 views
-
-
நினைவுகூர்தல் என்பது வெறும் நிகழ்வு மட்டுமா? தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது. ஏகப்பட்ட இடர்பாடுகளையும் தாண்டி தாயகத்திலும், புலத்திலும் நினைவுகூர்தல்கள் இடம்பெறுகின்றன. தாயக தேசத்தில் போருக்கு முடிவுரை எழுதப்பட்ட பின்னர் நினைவுகூர்தலை நடத்துவது இன்னொரு போரை நடத்துவதற்குச் சமமானதாக இருந்தது. மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் மிக மிக இரகசியமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நினைவுகூரல்கள் இடம்பெற்றன. ஆட்சி மாற்றத்தின் பின்னர் நினைவுகூர்தல்கள் வெளிப்படையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய நினைவுகூர்தல்கள…
-
- 0 replies
- 432 views
-
-
தமிழர்கள் ஒன்றுபடாத வரை -விமோசனம் கிடைக்காது!! தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படாதிருந்தால் தனி ஈழம் என்ற சிந்தனை அவர்கள் மத்தியில் எழுந்திருக்கமாட்டாதென நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறியுள்ளமை ஆட்சியாளர்களின் கவனத்துக்குரியது. தற்போதும் தமிழர்களுக்குப் பல வகையிலும் அரசியல் நகர்வுகளால் அநீதிகள் இழைக்கப்பட்ட வண்ணம்தான் இருக்கின்றன. தமிழர்கள் எதிலும் முன்னிலை வகிக்கக்கூடாது என்பதை வேதவாக்காகக் கொண்டு பெரும்பான்மை இனவாதிகள் செயற்பட்டு வருகின்றனர். அரச நிர்வாக சேவையில் ஆட்களை இணைப்பதற்கான போட்டிப் பரீட்சையில் தமிழர்கள் அதிகம் சி…
-
- 0 replies
- 496 views
-
-
கருணாவை புனிதராக்கிவிட்டு பிரபாகரனை பாசிஸ்டாக்கும் லொஜிக்கை இன்னும் புரிந்துக்கொள்ள முடியவில்லை!.... கவிஞர் மாலதி மைத்ரி கவிஞர் மாலதி மைத்ரி – நேர்காணல்: குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் மாபலி விருந்து அழைப்பு! ஆன்றோரே சான்றோரே பேரரறிஞர்களே மூதறிஞர்களே கவிஞர்களே கலைஞர்களே அரசு ஊழியர்களே என் உயிரினும் உயிரான தமிழர்களே நாம் சுவாசித்தது ஒரே காற்று நாம் பேசியது ஒரே மொழி நாம் நடத்தியது ஒரே பேரம் நாம் விதித்தது ஒரே விலை நாம் விற்றது ஒரே இனம் காட்டிக்கொடுக்க நீண்டதும் நம் ஒரே விரல் நாம் செய்ததும் ஒரே துரோகம் இம்மாபெரும் வரலாற்றை நாம் சாதித்த…
-
- 0 replies
- 956 views
-
-
சிங்களவர் செய்தால் சதி- தமிழர்கள் செய்தால் பயங்கரவாதமா? அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச அகியோரைக் கொலை செய்யவதற்கான முயற்சி ஒன்றினை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதில் பொலிஸ் மா அதிபருக்குத் தொடர்பிருக்கக்கூடும் என்கிற கோணத்திலும் விசாரணைகள் நடக்கின்றன. பொலிஸ் திணைக்களத்திற்குச் சொந்தமான துப்பாக்கிகள் இரண்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் அவை அரசியல் தலைவர்களின் கொலைக்குப் பயன்படுத்தப்பட இருந்தனவா என்கிற கோணத்திலும் விசாரணை முன்னெ…
-
- 0 replies
- 524 views
-
-
நம்பிக்கை இழந்துவரும் தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளதுடன் ஐ.நா. பொதுச் செயலாளர் மற்றும் ஐ.நா.மனிதவுரிமை ஆணையாளர் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார். ஜனாதிபதியின் இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது. தனது உரை எந்தவகையான விமர்சனத்துக்குள்ளான போதும் அது தொடர்பில் தான் கவலை கொள்ளப்போவதில்லை எனவும் ஜனாதிபதி ஏலவே தெரிவித்துள்ளார். குறிப்பாக இலங்கைப் படையினருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களை நீக்கும் யோசனைகளை ஜனாதிபதி முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில் ஏலவே ஜெனீவா மனித …
-
- 0 replies
- 548 views
-
-
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் இன்றைய நிலை என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI / GETY IMAGES Image captionகோப்புப்படம் இலங்கையின் மத்திய மலையகத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கோரி தலவாக்கலை நகரில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. மலையக அரசியல் கட்சிகளின் கூட்டணியான …
-
- 0 replies
- 2.6k views
-
-
ஈழம் திரும்பும் அகதிகள்- எதிர் நோக்கும் பிரச்சினைகள்!! இந்தியாவில் இருந்து இலங்கைக்குத் திரும்புகின்ற ஈழ அகதிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பற்றிய பேச்சாடல்கள் எழுந்துள்ளன. ஈழத்துக்குத் திரும்புகின்ற இந்த அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வை ஏற்படுத்து வதன் மூலமே இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கின்ற ஈழ அகதிகள் அனைவர் மத்தியிலும் தாயகத்துக்குத் திரும்பும் மனோநிலையை உருவாக்கிக் கொள்ள முடியும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இலங்கையில் இடம்பெற்ற போரின் காரணமாக வடக்குக் கிழக்கில் இருந்துவெளியேறிய கிட்டத்தட்ட 3இலட்சம் மக்கள் இந்தியாவில் தஞ்ச…
-
- 0 replies
- 372 views
-
-
நினைவேந்தல்களுக்கு உள்ளூராட்சிமன்றங்கள் உவப்பானவையல்ல! தியாக தீபம் திலீபன் நினைவின் இறுதி நாள் நிகழ்வுகளை யாழ்ப்பாணம் மாநகர சபையே பொறுப்பேற்று நடத்தும் என்று நகர பிதா ஆர்னோல்ட் அறிவித்திருக்கிறார். இந்த நினைவேந்தலின் தொடக்கத்தில் இரண்டு கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து, நிகழ்வுகளை மாநகர சபையே நடத்தும் என்கிற அறிவிப்பு வந்திருக்கிறது. இது தூர நோக்கற்ற, தற்காலிகத் தீர்வைக் காணும் முறைமையைக் கொண்ட ஒரு நகர்வு. ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. உடனடியாக நிறுத்தப்படவேண்டும். தியாகி திலீபன் 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர் …
-
- 0 replies
- 236 views
-
-
நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு மிக சிறியதொரு நாடு. இந்தியாவின் பரப்பளவை ஒப்பிடுகையில் இஸ்ரேலின் பரப்பளவை விட நூறு மடங்கு பெரியது இந்தியா. இஸ்ரேல் நாட்டின் பரப்பில் பாதிக்கும் மேல் நெகவ் பாலைவனம். ஒன்றரைக் கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட ஒரு சிறிய நாடு. இஸ்ரேல் மீது பல்வேறுபட்ட எதிர்மறை கருத்துகள் இருந்த போதிலும் தன்னம்பிக்கைக்கு இந்த நாட்டை விட உலகில் வேறு எந்த நாட்டையும் உதாரணமாக கூற முடியாது. உண்மையில் யூதர்களுக்கு உடல் முழுக்க மூளை எனும் வார்த்தை நன்கு பொருந்தும். 1948 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி தான் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டின் அதிகாரபூர்வ மொழிகள் ஹீப்ரூ மற்றும் அராபி. இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ். இஸ்ரேல் நாட்டின் மக்கள் தொகையில்…
-
- 1 reply
- 1.3k views
-
-
அரசுக்குத் தொடர்ந்தும் – ஆதரவை வழங்க வேண்டுமா கூட்டமைப்பு? கூட்டரசுக்குத் தொடர்ந்தும் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண் டுமா? என்ற கேள்வி தமிழ் மக் கள் மத்தியில் தற்போது தோன்றியுள்ளது. தாம் பல வகைகளிலும் இந்த அரசால் ஏமாற்றப்பட்டு, நடுத்தெருவில் நிற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருந்தார். அது அரசின் மீதான கூட்டமைப்பின் வெறுப்பைத் துலாம்பாரமாகவே எடுத்துக்காட்டிவிட்டது. மாவை சேனாதிராஜாவின் கருத்தில் நியாயம் இல்லாமலில்லை. இறுதியாக இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்ததில் கூட்டமை…
-
- 0 replies
- 272 views
-
-
புலிகளின் போராட்டத்தை விடவும் பெரியதொரு போராட்டத்தை நடத்த யாரும் தயாரா? கரவெட்டி பிரதேச சபை பொது மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவுநிகழ்வில் சுமந்திரன் எம்.பி. ஆற்றிய உரை தியாக தீபம் திலீபனின் 31 ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. எமது இன விடுதலைப் பயணத்தில் பல விதமான தியாகங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் அதிக தியாகம் செய்தவர்களில் திலீபன் முக்கியமானவர். அகிம்சை வழியில் எமது கட்சி பல ஆண்டுகள் போராடியது. இடையில் ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. அப் போராட்டத்தில் பலர் தமது உயிர்களை அர்ப்பணித்தனர். பலர் பல்வேறு தியாகங்களைப் புரிந்தனர். ஆயுதப் போராட்டத்தி…
-
- 1 reply
- 657 views
-
-
மன்னார்ப் புதைகுழி மீதான -பன்னாட்டுக் கவனம்!! மன்னார் சதோச நிறுவன வளாகத்தில் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள், எச்சங்கள் அவற்றின் மீதான அதிக கவனத்தையும் அக்கறையையும் கோரி நிற்கின்ற போதும் அது அரசியல் அரங்கிலும் பன்னாட்டு அரங்கிலும் ,பேசுபொருளாகாது மறைபொருளாக விளங்குவது கவலை தரும் விடயம். மன்னார் நகரின் மத்தியில் உள்ள பகுதியில் சதோச வளாகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது தற்செயலாகக் கண்டறியப்பட்டதே இந்த மனிதப் புதைகுழி. கட்டடம் அமைப்பதற்காக மண்ணை அகழ்ந்தெடுத்த நிறுவனம் அதைப் பள்ளக் காணிகளை நிரவுவதற்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
பொறுப்புக்கூறும் விடயத்தில் ஜனாதிபதியின் புதிய யோசனை இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நீதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று ஐ.நா. மனித உரிமை பேரவை வலியுறுத்தி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் இலங்கை அரசாங்கம் காலம் தாழ்த்தி வருகின்றது. சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய உள்ளக விசாரணைப் பொறிமுறையின் கீழ் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நல்லாட்சி அரசாங்கம் இணங்கியிருந்தபோதிலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சர்வதேச சமூகம் நம்…
-
- 0 replies
- 515 views
-
-
இன்றைக்கும் தொடரும் கண்ணிவெடி ஆபத்து! கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரை இரைக்காக காத்துக் கிடக்கின்றன வெடிப்பொருட்கள் பெண் தலைமைத்துவக் குடும்பமாகிய எனக்கு ஒரு தொழல் வாய்ப்பும் அதற்கான சம்பபளமும் மாதாந்தம் கிடைக்கின்றது. ஆனால் இதுஒரு ஆபத்தான தொழில். நான் சுயகௌரவத்தோடு வாழவேண்டும் என்பதால்தான் இந்த கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றேன். எனினும் தினமும் அதிகாலையில் வேலைக்குச்செல்வதும் என்னுடைய உழைப…
-
- 0 replies
- 410 views
-
-
மட்டக்களப்பில் மண் மாபியாக்களால் அழியும் ஒரு விவசாய பூமி! September 16, 2018 ©தமிழ்பக்கம் மண் வியாபாரிகளால் இந்த பூமி சுரண்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது போலுள்ளது. திரும்பும் திசையெல்லாம் மண் மாபியாக்களால் பூமியின் துண்டுகள் பணமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் வாழ்வில் பேரிடியாக விழுந்து கொண்டிருக்கும் மண் வியாபாரத்திற்கு எதிராக அவர்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அது பெரும் திருவிழாவில் தொலைந்து சிறு குழந்தையின் அழுகுரலைப் போல, அதிகார அமைப்புக்களின் காதில் விழாமலேயே போய் விடுகிறது. அப்படியொரு கதைதான் இந்த கதையும். மட்டக்களப்பில் பாலமடு வடக்கு கண்ட விவசாயிகள், தமது விவசாய நிலங…
-
- 0 replies
- 874 views
-
-
யாழ்ப்பாணத்து -திருமண மண்டபங்களும்- உணவுகளும்!! இந்தக் கட்டுரையை வாசிப்பதற்கு முன்பதாக நீங்கள் ‘றற் ராட்ரூய்லி’ என்கிற கர்ட்டூன் திரைப்படத் தைப் பார்த்திருக்கவேண்டும். அந்தப் படத்தைப் பார்த்திருந்தால் இந்த விடயத்தைப் புரிந்து கொள்வது மிகவும் சுலபமாக இருக்கும். ‘பிரட் பேர்ட்’ இயக்கி, 2007 ஆம் ஆண்டில் வெளியான இந்தத் திரைப் படத்துக்குச் சிறந்த அசைவூட்டத் திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருது கிடைத்திருந்தது. குப்பை கூளங்களைக் கிளறியும், களவு செய்தும், மனிதர்கள் கழித்துவிட்ட உணவுகளை உண்கின்ற எலிகளுக்கு மத்தியில் அதற்கெல்லாம் அப்பாற்பட்டுச் ச…
-
- 0 replies
- 613 views
-