Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண உறவுகளுக்கான அவசர உதவி வேண்டுகோள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணம் எங்கும் பெய்துவரும் அடை மழை காரணமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் எந்தவித உதவிகளும் இன்றி, அவலப்படுகின்றார்கள். தொடர்ந்து 7 நாட்களாகப் பெய்து வரும் இந்த மக்கள் மரங்களிலும், உயர் திடல்களிலும் பாரிய அவலங்கங்களில் உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். வழக்கம் போலவே, பாதிக்கப்பட்ட சிறிய தொகையான சிங்கள மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அவசர உதவிகளை வழங்கி வருகின்றது. இஸ்லாமிய மக்களுக்கு இல்லாமிய அமைப்புக்கள் உதவி வருகின்றன. தமிழ் மக்கள் மட்டும் அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் கண்ணீருடன் காத்திருக்கின்றார்கள் என ஜெருசலேம் கிறிஸ்தவ சபையின் போதகர் ஜொனத்தன் தெரிவித்துள்ளார்.

மட்டகிளப்பு மாவட்டத்தில் 112,039 குடுபங்களும் அம்பாறை மாவட்டத்தில் 80,410 குடும்பங்களும் திருகோணமலை மாவட்டத்தில் 5346 குடும்பங்களும் எல்லாவற்றையும் இழந்து

பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவை தற்காலியமாக எமக்கு கிடைத்த தரவுகளே .

அன்பான உறவுகளே!

அவலங்களே வாழ்வாகிப்போன ஈழத் தமிழர்களை இயற்கையும் சேர்ந்தே வதைத்து எடுக்கின்றது. தமது சொந்த உறவுகளுக்குக் கைகொடுக்க வேண்டிய வட தமிழீழ மக்கள் உதவ முடியாத கையறு நிலையில் உள்ளனர்.

உங்களில் யாராவது மனமுவந்து உதவிகள் செய்ய முன்வந்தால், அந்த மக்களது உடனடித் தேவைகளை நிறைவேற்றி, அவர்களது உயிர் வாழ்தலை உறுதிப்படுத்த முடியும். நீங்கள் உதவுவதற்கு முன்வரும் பட்சத்தில் எம்மோடு தொடர்பு கொண்டு உதவிகள் வழங்கலாம். உங்களது உதவிகளுக்கான பற்றுச்சீட்டும், பணம் அனுப்பியதற்கான ஆதாரங்களும் உங்களுக்கு வழங்கப்படும்.

உங்கள் பங்களிப்புகளை நேரடியாக அனுப்ப விரும்பினால், கீழ்க்கண்ட வங்கிக்கு மூலமாகவும் அனுப்பி வைக்கலாம்.

தாய் மண்ணில் தொடர்புகளுக்கு : 0094756622840 (Pasteur Jonathan)

நீங்கள் உங்கள் பகுதிகளில் உள்ள மக்கள் பேரவை உறுப்பினர்களை தொடர்பு கொண்டு சகல உதவிகளையும் செய்து கொல்லாம்

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு நாடு கடந்த தமிழீழ அரசு

தொலைபேசி : 06 15 88 42 21 தொலைபேசி : 06 99 92 92 96

Edited by ந.சுபேஸ்

உங்களில் யாராவது மனமுவந்து உதவிகள் செய்ய முன்வந்தால், அந்த மக்களது உடனடித் தேவைகளை நிறைவேற்றி, அவர்களது உயிர் வாழ்தலை உறுதிப்படுத்த முடியும். நீங்கள் உதவுவதற்கு முன்வரும் பட்சத்தில் எம்மோடு தொடர்பு கொண்டு உதவிகள் வழங்கலாம். உங்களது உதவிகளுக்கான பற்றுச்சீட்டும், பணம் அனுப்பியதற்கான ஆதாரங்களும் உங்களுக்கு வழங்கப்படும்.

உங்கள் பங்களிப்புகளை நேரடியாக அனுப்ப விரும்பினால், கீழ்க்கண்ட வங்கிக்கு மூலமாகவும் அனுப்பி வைக்கலாம்.

Mr Sivasubramaniam Kaneshamoorthy

Bank Account Number: 8105039090, Commercial Bank, Batticalo

தாய் மண்ணில் தொடர்புகளுக்கு : 0094756622840 (Pasteur Jonathan)

சற்று முன் தொடர்பு கொண்டபோது, தனிப்பட்ட நபர்களுக்கு பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என உதவி செய்யவிரும்பும் அனைவரிடமும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விட்டுள்ளனர். நிவாரணப் பணிகளில் பல பொது அமைப்புக்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

மட்டக்களப்பு தொண்டர் அமைப்புக்கள் மற்றும் இந்து இளைஞர் மன்றம் ஊடாக அகில இலங்கை இந்து மாமன்றமும், அதுபோல மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிசனும் நேரடியாக நிவாரணப் பணிகளில் இறங்கியுள்ளதாகவும் அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்கள் கூறினர்.

குறிப்பாக வருடாந்த கணக்குகளை பிரசுரிக்கும் "அகில இலங்கை இந்து மாமன்றம்", "ராமகிருஷ்ண மிசன்" போன்ற அமைப்புக்கள் பணத்த நேர்மையாக கையாளுபவர்கள். இதில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் கணக்கிலக்கம் கீழே தரப்பட்டுள்ளது. ராமகிருஷ்ண மிசன் கணக்கிலக்கம் தெரியவில்லை.

“All Ceylon Hindu Congress”

Account Number: 0003268614

Bank of Ceylon - Lake House Branch, Branch Code: 636,

Swift Code: BCEYL KLX

Mr. Kandiah Neelakandan

General Secretary / All Ceylon Hindu Congress

Off: +94 11 2371100 Res: +94 11 2580807

Fax: +94 11 2371111, 2371122

கிழக்கு மாகாணத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொண்டர்களின் தகவல்களின்படி, குறிப்பாக மட்டக்களப்பு - படுவான்கரைப் பகுதி, மட்டு வாவியைச் சூழவுள்ள பகுதிகள், வாழைச்சேனை, அம்பாறை - திரவந்தியமேடு, காரைதீவு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உறுகாமம் மிக மோசமாக 98% பாதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில், ஆனந்தபுரி, நித்தியபுரி, பள்ளத்தோட்டம் மற்றும் தம்பலகாமம் - கோவிலடி, பத்தினிபுரம், கள்ளிமேடு, சிப்பித்திடல் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.